Tuesday, 3 November 2015

மாற்றம்

 தமிழ்நாட்டில் தற்பொழுது ஆளும் கட்சி ஊழல் செய்து விட்டாலோ அல்லது தவறு செய்து விட்டாலோ, அந்த கட்சியை சேர்த்தவர்கள் உடனே, எதிர்கட்சி தலைவர்களை "இவர் மட்டும் என்ன ரொம்ப நல்லவரா? இவர் அடிக்காத கொள்ளையா?" என்று கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். அவ்வாறே, எதிர்கட்சி செய்த தவறுகள் வெளி வரும் போது, அந்த கட்சியை சேர்த்தவர்கள் ஆளும் கட்சி மட்டும் என்ன யோக்கியமா? என்று கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். தான் சார்ந்த கட்சி அல்லது தனக்கு பிடித்த தலைவர் என்ற ஒரு சில காரணத்திற்காக, அந்த கட்சி செய்கின்ற ஊழல் / தவறு அனைத்தையும் ஆதரித்து பேசுவது மற்றும் "அந்த கட்சியினர் இந்த தவறை அவரது ஆட்சியில் செய்துள்ளார், அதனால் நாங்கள் செய்வது எந்த தவறும் அல்ல" என்று கூறுவது எந்த வகையில் நியாயமாகும்?


உங்கள் வீட்டில் யாராவது தவறு செய்து விட்டால், அவர்களை கடிந்து கொள்விர்களா? அல்லது பக்கத்துக்கு ஊரில் இதே தவறை முன்பே ஒருவன் செய்துள்ளான், அதனால் இது தவறு ஆகாது என்று விட்டு விடுவிர்களா? நமது வீட்டில் தீ பற்றி எரியும் போது அதை அணைக்க முற்படுவோமா அல்லது இது எனது வீட்டில் எரிகின்ற தீ, அதை அணைக்க மாட்டேன் என்று சொல்விர்களா?

எந்த கட்சியினர் தவறு செய்தாலும் ஊழல் செய்தாலும் அதனால் பாதிக்கப்பட போவது மக்களாகிய நாம் தான். தான் சார்ந்த கட்சி, மதம், சாதி இவைகளை விடுத்து, எந்த கட்சி தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் / எதிர்க்கும் மனப்பான்மை வளர வேண்டும். இது எனது கட்சி, இங்கு எது நடந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று இருந்தால் , இவர்கள் ஊழல் செய்வதையும் மக்களை சுரண்டுவதையும் யாராலும் தடுக்க முடியாது.

நமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது, நாம் என்ன செய்தாலும் நமக்கு தான் இவர்கள் வாக்கு அளிப்பார்கள் என்ற எண்ணம் எப்பொழுதோ திராவிட கட்சி தலைவர்களுக்கு வந்து விட்டது. அதனால் தான் ஓவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் ஊழல் பன்மடங்கு அதிகமாகிறது. நமக்கு மிக நன்றாகவே தெரியும், இவர்கள் மக்களை சுரண்டுகிறார்கள் என்று. இதை தெரிந்தும் கண்முடி தனமாக ஆதரிப்பது ஏன்? இந்த காரணத்தினால் தான் எந்த கட்சியும் தங்களது தவறுகளை திருத்தி கொள்ளும் எண்ணம் வர வில்லை, மாறாக அதிகரித்து கொண்டே தான் போகிறது. எந்த கட்சி தவறு செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் . குறைந்த பட்சம், அவர்கள் செய்யும் தவறுகளை ஆதரிக்காமல் இருந்தாலே போதும், நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

Monday, 31 August 2015

யுக கதையும் - தமிழ் மொழியும் !

பன்னெடும் காலமாக இந்த பூமி சில யுகங்களை கடந்து வருகிறது என்று ஹிந்து மதம் கூறுகிறது.



யுகம் குறித்து ஹிந்து மதம் என்னதான் சொல்கிறது .

     
     யுகங்கள் மொத்தம் 4.அவை

                                           கிரேத யுகம்
                                           திரத யுகம்
                                           துவாபர யுகம்
                                           கலி யுகம்

 இந்த யுகங்கள் எத்தனை ஆண்டு காலங்கள் இருந்தன. இருக்க போகின்றன என்பதையும் குறிப்பிடுகின்றன . அவற்றில் கிரேத யுகம் அதிக காலத்தையும் , அடுத்தடுத்த யுகங்கள் படிப்படியாக குறைந்துகொண்டும் வருகின்றன. அதன் படி தற்போது கலியுகம் நடைபெறுகிறது.


கிரேத யுக மக்கள் சத்தியமானவர்கள்
த்ரேத யுக மக்கள் கொஞ்சம் தவறு செய்தவர்கள்.
துவாபர யுக மக்கள் கொஞ்சம் அதிக தவறு செய்தவர்கள்
கலி யுக மக்கள் மிக அதிக தவறு செய்பவர்கள்.


மத்ஸ்ய அவதாரம்  ( மீன் )
கூர்ம அவதாரம்  ( ஆமை )
வராக அவதாரம் ( பன்றி )
நரசிம்ஹ அவதாரம் ( சிங்கம் )
வாமன அவதாரம் 
பரசுராம அவதாரம்

     இந்த 6 அவதாரங்களும் கிரேத யுகத்தில் உருவானது .

ராம அவதாரம்

    த்ரேத யுகத்தில் உருவானது.


கிருஷ்ணா அவதாரம்

பலராம அவதாரம் 

     இவை இரண்டும் துவாபர யுகத்தில் உருவானது.


கல்கி அவதாரம்

    கலி யுக கதை இது. இது நடக்கிறதா ? நடக்க போகிறதா என்பதை நம் காலம்

தான் கணிக்க போகிறது.

ஏனெனில் இதற்கு  முன்பு நிகழ்ந்தாக கூறப்படும் எந்த அவதாரத்தையும்

நம்மில் எவரும் கண்டிருக்க  முடியாது .  

ஆனால் கலி அவதாரம் பிறந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். அந்த

அவதாரத்தின் பெயர் பிராம ஸ்ரீ  ஷ்யம சரண்  ( மஹா அவதார் பாபாஜி )

இவர் கலி யுக இறுதியில் தொடங்கி மறு சுழற்சியில் மீண்டும் கிரேத யுக

தொடக்க அவதாரமாகவும் கருதப்படுகிறார் . எனில் நாமெல்லாம் மீண்டும்

தொடங்கப்பட்ட சத்தியயுக தொடக்கத்தில் வாழ்கிறோம்.








கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் யுகங்கள் எனப்படுவது

எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும் என்ற கருத்தும் உண்டு .

அதனால் சுழற்சியின் அடிப்படையில் மீண்டும் கலி யுகம் கடந்து    துவாபர

யுகத்தில்  இருக்கிறோம், என்கின்றனர்.

ஏன்னெனில்  ஒவ்வொரு யுகத்திற்கும் மனிதனின் அறிவு வளர்ச்சியை

கொண்டு சில கணக்கீடுகள் கொடுக்கின்றனர் .

அதன்படி

 கிரேத யுகத்தில் சத்தியத்தை கற்று கொண்டான். ( TRUTH AGE )                    

த்ரேத யுகத்தில்  மன வளர்ச்சியை கற்று கொண்டான் ( MENTALAGE )           

 துவாப யுகத்தில் மின்னியலை கற்று கொண்டான். ( ELECTRICAL AGE )

 கலி யுகம் இருண்ட காலமாகத்தான் இருக்கும் .( DARK AGE )

 என்று கூறுகின்றனர் .





இவையெல்லாம்  யுகங்கள் குறித்து ஹிந்து மதம் குறிப்பிடுவன.

ஆனால் தமிழ் இதனை வேறு வடிவில் கூறுகிறது என்கிறது

 தமிழ் சிந்தனையாளர் பேரவை .

கிரேத யுகம் எனபடுவது கிரி யுகம் .

அதாவது தமிழில் கிரி என்றால் மலை என்று பொருள்.

கரி என்னும் தமிழ் சொல்லானது மருவி கிரி என்றானது .

எனில்  இது மலையும் மலையை சார்ந்த இடமும் ஆகும் .

த்ரேத யுகம் எனப்படுவது தரைத்தள யுகம் .

இது மருவி தரே என்றானது .

அதாவது காடும் காடு சார்ந்த இடமும் .

துவாபர யுகம் என்றால் இரட்டை யுகம் என்று பொருள் .

துவா என்னும் வார்த்தை தமிழின் தோ என்னும் எழுத்தின் மருவிய வடிவம் .

" தோ  " என்னும் எழுத்தில் தொடங்கும் எல்லா வார்த்தைகளும் இரட்டை

செயல்வடிவம்  கொண்டது .

உதாரணம் :  தோல் , தோள் , தோசை, தோகை , தோடு

இதன் அடிப்படையில் தோபர யுகம் , துவாபர யுகமானது .

அந்த இரட்டை செயல்பாடு என்னவெனில் , சமகாலத்தில் செயல்வடிவம்

பெற்றதுதான்

வயலும், வயல் சார்ந்த இடமும் ,

கடலும் , கடல் சார்ந்த இடமும்

எனில் கலி யுகம் மட்டும் ஹிந்து மதத்தில் கூறிய முறைப்படி சரியானது .

இந்த உலகின் எல்லா இடங்களும் அழிக்கபட்டு பாலைவனம் போல்

மாறுவது .

தவறுகள் நடைபெற சாத்திய கூறுகள் இருக்கிறது  என்கிறது

 தமிழ் சிந்தனையாளர் பேரவை .



ஆனால் கலி யுகம் எனப்படுவது கலி அல்ல . வளி யுகம்.

மனிதன் ஆதி காலத்தில் மலைகளை பயன்படுத்தினான்  . இன்னும் முருகன்

ஆலயங்கள் அனைத்தும் மலைகளின் மீது உள்ளது .

பிறகு காடுகளை பயன்படுத்தினான் .

பிறகு காடு திருத்தி வயல்வெளிகளை உருவாகினான்.

கடலை கடந்து கடல் பரப்பையும் பயன்படுத்தினான்

தற்போது நடப்பது கலியுகம்தான் . ஆனால் இது கலியுகம் அல்ல . வளி  யுகம்.

வளி  என்றால் காற்று என்று அர்த்தம் .

இன்று மனிதன் காற்றை பயன்படுத்தி கொண்டிருக்கிறான்  .

ரேடியோ ,தொலைக்காட்சி , தொலைபேசி , மொபைல் , இன்டர்நெட்  எல்லாம்

காற்றை கடந்து நம்மை வந்தடைகிறது .

அதனால் எந்த  நாளிலும் கலி காலத்தில்தான்

தவறுகள் அதிகம் நடக்கும் என்பதை காரணமாக எடுத்துகொள்ள வேண்டிய

அவசியமில்லை.

எல்லா கால கட்டத்திலும் தவறுகள் நடந்தன. ஆனால் தற்போது மட்டும் இது

கலிகாலம் என்பதை காரணம்காட்டி இப்படிதான் நடக்கும் என்றெல்லாம்

கற்பிக்கப்படும் கற்பிதங்களை அறிவில்

எடுத்துகொள்ள வேண்டிய தேவையும்  இல்லை.


எந்த யுகமும் முடிவதும்  இல்லை . எந்த யுகமும் பிறப்பதும் இல்லை .

ரேடியோ , தொலைகாட்சி, அலைபேசி அனைத்தும் தற்காலத்தில் தான்

கண்டுபிடிக்கப் பட்டது. என்று எண்ணினால் அது தவறு.

சங்க காலத்திற்கு முந்தைய காலத்திலும்  காற்றை மனிதன் பயன்படுத்தி 

கொண்டுதான் இருந்தான்.

ஆனால் அது அனைவரும் பயன்படுத்தும் வகையில் இல்லை. இன்று

அனைவர் கைகளிலும் அது பயன்பாட்டில் உள்ளது. 

     மலைகள், காடுகள், வயல்கள், கடல், மற்றும் காற்று இவற்றை மனிதன்

எப்போதும் பயன்படுத்தி கொண்டுதான் இருந்தான்.  பயன்படுத்தும் வரை எந்த

தவறும் நிகழாது.

ஆனால் மனிதன் அவற்றை ஆள நினைக்கிறான்.

அங்குதான் தவறுகள் ஆரம்பமாகின்றன.

தன்னை ஆட்சி செய்ய நினைப்பவர்களை அழிப்பது

இயற்கையின் நோக்கம் அல்ல.

தன்னை சரி செய்து கொள்ள முயற்சிக்கும் போதுதான் அழிவுகள்

நடக்கின்றன. இயற்கையை யாரும் ஆள முடியாது.

இயற்கையை 

   நன்முறையில் பயன்படுத்துவோம் . பேரழிவுகளை தடுப்போம் .



( தமிழ் சிந்தனையாளர் பேரவைக்கு நன்றி . ஐந்திணைக்கு புதிய விளக்கம் தந்தமைக்கு !)


Friday, 31 July 2015

கனவை நனவாக்க வாரீர் !

2015 ம்  ஆண்டு ஜூலை 27 ம் நாள் யாராலும் மறக்க முடியாத  நாள். ஏனெனில் அன்றுதான் ஐயா அப்துல்  கலாம் அவர்கள்  மறைந்த நாள் . அவரது கனவு படி 2020 ல் இந்தியா வல்லரசு ஆக வேண்டுமெனில் , முதலில் கல்வி துறையே மாற்றம் பெற வேண்டும் . அவர் விரும்பியபடி  மாணவர்களே  அந்த மாற்றத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் .


மாற்றம் வரவேண்டுமெனில் சில முடிவுகள் எடுக்க வேண்டும் :

1.   டியூஷன்   முறைகளை ஒழிப்பது . அதற்க்கு நாம் செய்ய வேண்டியது .

இனி தினந்தோறும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது யாரேனும் மற்றொரு மாணவருக்கு பாடம் சொல்லி தருவது.
P .G  படிப்பவர் எனில் U .G  படிப்பவருக்கும் ,
U .G  படிப்பவர் எனில் பனிரெண்டாம் வகுப்பு படிப்பவருக்கும் ,
பனிரெண்டாம் வகுப்பு படிப்பவர் எனில் பத்தாம் வகுப்பு படிப்பவருக்கும் ,
பத்தாம் வகுப்பு படிப்பவர் எனில் எட்டாம் வகுப்பு படிப்பவருக்கும்,
எட்டாம் வகுப்பு படிப்பவர் எனில் ஐந்தாம் வகுப்பு படிப்பவருக்கும் , தனது படிப்பு நேரம் தவிர்த்து , குறைந்த பட்சம்  ஒரு மணி நேரம்
இலவசமாக பாடம் சொல்லி தருவது.

இவ்வாறு செய்தால் டியூஷன் என்ற பெயரால் நடக்கபடும் தவறுகள் தடுக்க படும். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனக்கென தனி மாணவர்களை வைத்து பாடம் நடத்துவது தடுக்க படும் . தகுதியான ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைப்பர் .


lord macaulay க்கான பட முடிவு


2.     Macaulay ன்  இந்த கல்வி முறையில் இருந்து வெளி வருவது. ஆம் இந்த கல்வி திட்டமானது நம்மையெல்லாம் அடிமைகளாக மாற்ற  Macaulay எனும் ஆங்கிலேயன் 1835 -40 களில் தானே தயாரித்த கல்வி திட்டம் . அதற்க்கான காரணத்தை அவருடைய கடிதம் வாயிலாக நாம் அறிவோம். இதோ அக்கடிதம்,
lord macaulay க்கான பட முடிவு
இதிலிருந்து வெளி வர வேண்டும் எனில் தெரியாத விஷயங்களை , தெளிவு படுத்த ஆசிரியரை வலியுறுத்த வேண்டும் . ( a2 + b 2 )  இது எந்தெந்த இடங்களில் பயன்படுத்த படுகிறது என்பன போன்று எல்லா பாடங்களுக்கும் பயன்பாடுகள் அறிந்து கொள்ள வேண்டும்.

3.     கணிதமும் , அறிவியலும் வெறும் மனப்பாடம் செய்யும் பாடங்களாக இருப்பதிலிருந்து வெளிவருவது .   அதன் ஒவ்வொரு சூத்திரமும் எங்கு பயன்படுத்த படுகிறது என்பதை அறிவது .  இது ஒன்றே A .P .J .அப்துல் கலாம் அவர்கள் கூறிய அறிவியல் தமிழ் வளர உதவும்.

4.     எந்த பாடத்திற்கும் விளக்கம் அளிக்காத கல்வியை புறக்கணிக்க வேண்டும்..

5.     நல்ல கல்வியாளனாக மாற வேண்டும் , தரமான ஆசிரியர்களை
உருவாக்க வேண்டும் .

6.      ஏதேனும் ஒரு அறிவியலாளரின்  கதையோ , கட்டுரையோ படிப்பதை வழக்கமாக மாற்றி கொள்ள வேண்டும் .

7.     வெறும் மதிப்பெண்களுக்காக படித்து , மதிபெண்ணுக்காகவே வாழும் மடமையில் இருந்து வெளியேற வேண்டும்.

8.      பாஸ் , பெயில் , grade , இது போன்ற மாயையில் இருந்து வெளி வந்து , எந்த ஒரு பாடத்தையும்  கற்று கொள்ள முயற்சிக்க வேண்டும். .

9.     அறிவியலோடு , அரசியலும் , ஆன்மிகம் என்ற பெயரில் நடப்பவைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

10.    விஞ்ஞானத்தோடு , நம் வாழ்வுக்கு தேவையான விவசாயத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் .

அது அதற்கென்று தனிதனி துறைகள் உண்டு . அங்கு சென்றால் மட்டும்தான் அதை படிக்க முடியும் என்பதும், ஒருவர் ஒரு துறையை மட்டும்தான் படிக்க வேண்டும் என்பதும் நமக்காக ஏற்படுத்த பட்ட மாயைகள்.



நம்மையெல்லாம் மார்க் என்ற மோகத்திற்குள் தள்ளி நம்மை எதற்க்காக தயாரிக்கிறார்கள் என்பதை நமக்கே தெரியாமல் , செய்து நம்மை சுற்றிலும் மாய வலை பின்னியதன் விளைவுதான் இன்று நாம் உண்ணும் காய்கறிகள் கூட விஷமாக மாற காரணம் . 


படித்தால்  கேள்வி கேட்டுவிடுவான் என்று எந்தெந்த துறைகளில் தோன்றியதோ அத்துறை சார்ந்த எந்த ஒரு பாடமும் சராசரி மாணவனுக்கு போய் சேர விடாமல் தடுக்கவே , மருத்துவம்,வானியல் , வேளாண்மை, சட்டம்,  விலங்கியல்  , பிரமிடு போன்ற நமது பழைய கட்டட கலை முறைகள், பண மதிப்பு எப்போதிருந்து பிற நாடுகளை  விட குறைந்து போனது
இவை எதுவும் நம் பாட புத்தகங்களில் இணைக்க படவில்லை .

எனில் கடந்த 250 ஆண்டுகளாக இந்த துறைகளில் எல்லாம் எதோ தவறுக்கான அடித்தளம் விதைக்க பட்டிருக்கிறது .

பணக்கார்கள் மட்டும் இதை படிக்கும் போது , பணத்தை சம்பாதிக்க மட்டுமே அவர்களுக்கும் கற்றுத்தர படுகிறது

 ( இதோ இந்திய பண மதிப்பு அமெரிக்கவுடுன் ஒரு ஒப்பிடு பட்டியல் )   ,


இந்தியா சுதந்திரம் அடைந்த போது , நம் நாட்டின் சொத்துகளை வெள்ளையன் சுரண்டி சென்ற போது கூட  இந்தியா எவரிடமும் கடன் பெறவில்லை.
இந்திய ரூபாய்ன் மதிப்பு , அமெரிக்க டாலருக்கு இணையாகவே இருந்தது.பிறகு என்ன நடந்தது?. இந்த வரலாறு அல்லவா நம் வரலாறு பாட புத்தகத்தில் இருக்க வேண்டும்.

என்றாவது ஒரு நாள் , தாவரவியல் ஆசிரியர்கள் மரங்களை நடும் முறை குறித்தோ , ஒவ்வொரு மரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி குறித்தோ சொல்லி கொடுத்ததுண்டா ? இதை விட்டுவிட்டு இதன் ஆங்கில பெயர்கள் நமக்கு எதற்கு ? அதன் குடும்ப பெயர்கள் எதற்கு ? அதை நாம் தெரிந்து கொள்வதால் என்ன பயன் ?

ஆனால் நம் தமிழ் கூறுகிறது ,

     நெல்லுக்கு நெல் நண்டு  ஓட ,
          வாழைக்கு வாழை வண்டி ஓட ,
               தென்னைக்கு தென்னை தேர் ஓட

இடைவெளி விட வேண்டும் என்று.  இதையெல்லாம் நம் தமிழ் புத்தகமும் தரவில்லை , தாவரவியல் புத்தகமும் தரவில்லை. ஏன் ?


வானியல் குறித்து நமக்கு துளியும் சொல்லி தர வில்லை . ஏன் , நாம் வானியல் ஆய்வு குறித்த தகவலுக்காகவும் வேற்று நாட்டவரை நம்பி இருக்க வேண்டுமா ?

மழை எப்போது வரும் என்பதை ரமணன் கூறினால் தான் அறிந்து கொள்ள முடியுமா ? 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை , எல்லோருக்கும் தெரிந்த மழை சார்ந்த அறிவியலும் , வானியல் குறித்த அறிவும் , இன்று எங்கோ ஒன்றிரண்டு வயதானவர்களுக்கு மட்டுமே தெரிவதன் காரணம் என்ன ?

ஆனால் நம்மாழ்வார் நமக்கு கூறுகிறார் இவையெல்லாம் நம் நாட்டின் பழமொழிகளில்  உள்ளது என்று,
அவை :
          " தவளை கத்தினால் , தானே மழை வரும் "

          " அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அறிகுறி "

          " தும்பி பறந்தால் தூரத்தில் மழை "

          " எறும்பு ஏறில் பெரும் புயல் வரும் "
         
          " மார்கழி மழை மண்ணுக்கு உதவாது "

          " தை மழை நெய் மழை "

ஏன் நம் தமிழ் புத்தகங்கள் கூட நம்மை ஏமாற்றின ?

நமக்கு நன்மை செய்ய கூடிய நம்முடைய கட்டிட கலை முறைகள் நமக்கு சொல்லி தர மறுக்க பட்டது ஏனோ ?
       
விலங்குகளுக்காக விழா எடுக்கும் நம்மிடமே விலங்குகள் குறித்தும், அதன் மீது அன்பு காட்டுவது குறித்தும் ப்ளூ கிராஸ்  கூறுகிறதா ? இதன் பின்னணி வரலாறு என்ன ? சொல்லி தர ஆளும் இல்லை. எந்த நூலும் இல்லை .

நாமெல்லாம் குதிரைகள் அல்ல . கடிவாளம் கட்டி கொண்டு ,
ஒரே பாதை யை மட்டும் பார்பதற்கு .  இதை எல்லாம் ஒரு நாளும் அரசாங்கம் மாற்றாது. ஏனெனில்  Macaulay ன்   கல்வி கொள்கையை பயன்படுத்தி கொண்டு
 இருக்கிறார்கள் நமது அரசியல் வாதிகள் .

அப்துல் கலாம் கண்ட வல்லரசு கனவு நனவாக  வேண்டுமாயின் அது மாணவர்கள் கையில் மட்டுமே உள்ளது .

கல்வியில் மாற்றம் மட்டுமே அக்கனவை நனவாக்கும்.

அம்மாற்றம் மட்டுமே வல்லரசு நாடு எனும் விதையை விதைக்கும்.


மாற்றம் கொணர்வோம் ! வல்லரசாக மாறுவோம் !

அப்துல் கலாம் அவர்களின் வழி நடப்போம் !

Wednesday, 29 July 2015

அய்யா A .P .J .அப்துல் கலாம் அவர்களே !

அய்யா A .P .J .அப்துல் கலாம் அவர்களே !



இன்று அழுது கொண்டிருக்கும் எவருக்கும் நீர்  உறவில்லை!
ஆனால் எவராலும் அழுகையை நிறுத்த முடியவில்லை !
நீர் திருமணம் செய்திருந்து , பிள்ளை பெற்று இருந்தால் கூட
இத்தனை பிள்ளைகள் உனக்காக அழுதிருக்க மாட்டார்கள் !


சம்பாத்தியம் என்றால் என்ன வென்று இந்த உலதிற்கு காட்டியவர் நீர் !
இத்தனை பேர் விடும் கண்ணீரும் எந்த எதிர்பார்பிற்க்கும் உட்பட்டது இல்லை !
இத்தனை பேர் விடும் கண்ணீரிலும் எந்த பொய்யும் இல்லை !
இத்தனை பேர் விடும் கண்ணீரிலும் எந்த வஞ்சமும் இல்லை !
இது தான் சம்பாத்தியம் !


இதில் அரசியலும் இல்லை !
ஆன்மீகமும் இல்லை !
ஜாதியும் இல்லை !
இனமும் இல்லை !
மொழியும் இல்லை !
நாடுகள் என்ற வேறுபாடு  கூட இல்லை !

அத்தனை பேரையும் ஈன்றெடுத்த பெற்றோர்
வேறுவேறாக இருக்கலாம் !
ஆனால் அத்தனை பேருக்கும் அறிவு வழி
தகப்பன் ஆனீர் !

நீர் பிறந்த மண்ணில் இன்று
ஏதேதோ வேலைகள் நிகழ்கிறது  - உமக்காக !
பல்லாயிரம் மக்கள் காத்திருக்கிறார்கள் - உமக்காக!
அதையும் கடந்து படிக்க வேண்டிய நேரத்தில்
பல்லாயிரம் மாணவர்கள் நீர்
மீண்டு வருவீர் !
மீண்டும் வருவீர் !
என்று கண்ணீர் மல்க ஆவலுடன் நிற்கின்றனர் !

நீர் மீண்டும் இங்கு வரும்போது
உமது கனவை நினைவாக்கி
இந்தியாவை வல்லரசு ஆக்கி இருப்போம் !
என்று ஓர் இளைஞர் கூட்டம்
சூளுரைத்து காத்து இருக்கிறது !

நீர் கண் மூடி கனவிலே இதையெல்லாம்
கண்டு கொண்டு இருக்கிறீர் !
நீர் கண் திறந்து எங்கேனும் பிறந்திருப் பீர் !
என்ற நம்பிக்கையில்
இந்த சூளுரைகள் நாளை - நீர் காண
உன் கண் முன்னே நிறைவேறும் !

பயோ டீசெளில் புகைவண்டிகள் இயங்கும்
தடையில்லா மின்சாரம் எல்லா இடங்களிலும் கிடைக்கும்
தரமான ஆசிரியர்கள்
மாணவர்களின் கேள்விக்கெல்லாம் பதில் தருவர்
உழவும் வளரும்
அணு ஆய்வும் வளரும்
உண்மையும் , நேர்மையும்
தன்னம்பிக்கையும், தன்னடக்கமும்
வளரும் !

இது நீர் விதைத்த விதை !
மரமாகும் !
இதன் குளுமையை காண
இதன் பசுமையை காண
இதன் பழங்கள் ருசிக்க
மாணவர்கள் வேண்டுகோளை ஏற்று
மீண்டு வருவீர் !
மீண்டும் இந்த பூமிக்கு வருவீர் !




Wednesday, 8 April 2015

தமிழன் மட்டும் திராவிடனா?



தமிழ், தெலுங்கு , கன்னடம் , கோண்டு ,கோட்டா , குடகு , துருவம், துளு, ஓரவொன் இவை  அனைத்து மொழிகளு ம் , அவை சார்ந்த  இடங்களும் திராவிட மொழி குடும்பம் என்றும் , அங்கு வாழும் மக்கள் திராவிடர்கள் என்றும் கால்டுவேல் தன்னுடைய மொழி ஒப்பிலக்கணம் என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நடைமுறையில் தமிழன் மட்டுமே திராவிடன் என்று ஆகிவிட்டது . காரணம் தமிழனை ஆள்வதற்கு திராவிடர்கள் கையில் எடுத்த ஆயுதம் இது. தமிழனை நீ திராவிடன் என்று கற்ப்பித படுத்தி , அவனிடம் உள்ள சுய உணர்வை எரித்து விட்டு வேடிக்கை பார்கின்றனர். தமிழனை மட்டும் திராவிடன் என்று கூறி கூறி கொண்டாடி , கொண்டாடி ஆட்டம் போட்டு சுக  வாழ் கை   வாழ்வது, இரண்டு கூட்டங்கள் . ஒன்று சினமா கூட்டம் , மற்றொன்று அரசியல் கூட்டம்.   இன்னும் ஒருபடி மேலே போய் ,சினிமா கூட்டமும், கிரிகெட் கூட்டமும் நீ இந்தியன் என்ற பெயரையும் பயன்படுத்தி கொண்டு கோடி கோடியை சம்பாதித்து கொண்டாட்டம் போடுகிறது .

இவனை எழுந்திருக்க விடாமல் அரசியல்வாதிகள் சாராயம் ஊற்றி தருகின்றனர். சினிமா காரர்கள் உடம்பை காட்டுகின்றனர் . இளையராஜா எதனையோ பாடல்களுக்கு இசை அமைத்தார் . அனால் எத்தனை தமிழர்களுக்கு வாழ்வு கொடுத்தார் .? பிற மாநிலத்தவர்களை கொண்டடி தான் புகழ் சேர்த்து கொண்டார். அவரும் திராவிடத்தை பயன்படுத்தி கொண்டார் .அவரை அப்படியே பிற இசை அமைப்பாளர்களும் பின்பற்றுகின்றனர் .
ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் தமிழ் படம் என்று வேறு மாநிலத்தில் கூறி விடாதீர்கள். காரி உமிழ்வான் . அது ரஜினி  எனும் கன்னட க்காரனின் படம்.
விஜய் படம் தமிழ் படம் அல்ல. அது ஒரு மலையாளியின் திரைப்படம்.
அஜித் படம் தமிழ்படம் அல்ல . அவரும் மலையாளி .
விக்ரம் படம் தமிழ் படம் என்று கூறாதீர்கள் . பிரபுதேவா படம் தமிழ் படம் என்று கூறாதிர்கள் . அது கன்னட ரத்தம் . இன்னும் எம்.ஜி .ஆர் , ஜெயலலிதா என யாரும் தமிழன் இல்லை . பாடகர்களில் பலர் தமிழர் இல்லை . நடிகைகளில் தமிழச்சியே இல்லை . இவர்களெல்லாம் திராவிடத்தை சாதகமாக்கி காசு சம்பாதிப்பவர்கள் .

அரசியல் வாதிகள் கட்சி அனைத்தும் திராவிட கட்சிகள் ,. எங்கே கேரளாவிலோ, கர்நாடகத்திலோ,ஆந்திராவிலோ ஒரு திராவிட கட்சிஏனும்
தன் னை , நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறி தன் கட்சியை நிருபித்து விட முடியுமா?


எல்லோருமே திராவிடன் என்றால்  ஏதோ தமிழன் மட்டும் கன்னடம், மலையாளம், தெலுங்கு என் அனைவரிடமும் ஒற்றுமை பாராட்ட வேண்டும் என்று கூறுவது சரியல்ல. பெரியார் பல புரட்சிகள் செய்தவர் . ஆனால் தமிழனிடம் மட்டும்தான் நீ திராவிடன் என்பதை விதைத்து இருக்கிறார். வைக்கத்தில் கூட யாரும் தன்னை யாரும் திராவிடன் என்று சொல்வதில்லை . ஏன் சற்று ஒரு படி மேலே போய் மூனாறு பகுதி வாழ் தமிழர்களுக்கு இரவை சந்திக்க சாலை ஓர விளக்குகள் கூட இல்லை. கர்நாடக அரச பற்றியோ, கன்னட மக்கள் பற்றியோ சொல்ல தேவையே இல்லை.ஆந்திராவின் எந்த ஒரு மனிதனும் தன்னை திராவிடன் என்று ஒப்பு கொள்வதில்லை. சமஸ்கிருதமும், லக்ஷ்மி வழிபாடும் , பெருமாள் பெருமையும் பேசும் போது தான் தெரிகிறது தமிழன் மட்டும்தான் திராவிடன் என்று . திராவிடத்தை  ஏற்று கொண்ட காரணத்தால் தமிழன் மட்டும் பிற திராவிட இனத்தவரிடம் தோல்வி அடைவது சரிதானா  ?

தமிழ்நாட்டில் இருந்துதான் பெங்களுருக்கு மின்சாரம் அளிக்க படுகிறது. ஆனால் அவர்கள் தண்ணிர் தர மாட்டார்கள் .
தமிழ்நாட்டில் இருந்துதான் கேரளாவிற்கு காய்கறிகள், அசைவ உணவு பொருளென கொண்டாடும் மாடுகள் அனுப்பபடுகின்றன. ஆனால் அவர்கள் கூல்ட்ரிங்க்ஸ் நிறுவனத்தின் கைக்கூலியாக வேலை பார்க்க முல்லை பெரியாறு பிரச்சனையை இடைவிடாமல் எழுப்புகின்றனர் .
இன்னும் சற்று முன்னேறி ,
ஆந்த்ராவும் தன் பங்கிற்கு ,தமிழனை சுட்டு தள்ளி கொண்டு இருக்கிறது .

தமிழ்நாடுதான் இந்தியாவில் இருக்கிறது . அதனால் இதன் இயற்கை வளங்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சொந்தம் . ஆனால் தமிழன் இந்தியன்தானே . ஏன் இவனுக்கு மட்டும் பிற மாநிலங்கள் எதையும் தர மறுக்கிறது .

 தமிழர்களே இனி வரும் காலங்களில் தமிழன்  நம்மை ஆள வழி செய்வோம் . தமிழ் வுணர்வுகளையும் , தமிழனின் தன்மானத்தையும் நிலை நிறுத்துவோம் . ( ipl கிரிகெட் இந்திய சார்பாக விளையாடுவது கூட இல்லை . எவனோ கம்பெனி காரன் , எவனையோ விலைக்கு வாங்கி நம்மை எம்மாற்றி விட்டு , விளையாட்டு திடலிலும் சம்பாதிக்கிறான் .அவன் விற்பனை செய்யும் பொருளிலும் சம்பாதிக்கிறான் . 
ஒவ்வொரு முறை தமிழன் தன்னை வுணர முற்படும் போதும் கிரிகெட்டும் நம்மை மதிமயங்க செய்கிறது . என்ன செய்வது எப்போதும் மயக்கதில்லேயே தமிழன் வாழ்ந்து பழகிவிட்டான் .)


Tuesday, 7 April 2015

மார்க்கெட்டிங் எனும் பேய்



கழுதைகளை குதிரைகளாய் காட்டும்
குதிரைகளை கோட்டன்களாக்கும்
கோட்டான்களை குருவிகாளாய் காட்டும்
குருவிகளை குரங்குகளாக்கும்
குரங்குகளை கோபுரமாக்கும்
கோபுரத்தை குப்பை மேடாய்  காட்டும்
குப்பை மேட்டை குளம் போல் காட்டும்
குளங்களை எல்லாம் கானல் நீராய் காட்டும்
கானல் நீரை கடல் போல் காட்டும்
கடலை கூட கட்டாந்தரை யாக்கும்
கட்டாந்தரை எல்லாம் செழிப்பாய் தெரியும்







செழிப்பான இடமெல்லாம் சுவர்களாக மாற்றும்
சுவர்களையும் நாளை சுவடு இல்லாமல் மாற்றும்

அனைத்தும் கண்முன்னே நடக்கிறது - நம்
கண்களும் நம்மை ஏமாற்றுகிறது

அறிவை மங்க செய்யும் ஆசான் அவன்
அழகு உணர்விற்கு அடிமையாக்கும் ஆசிரியன் அவன்
ஒழுக்கமெல்லாம் தவறென்று போதிப்பவன் அவன்
தாய்மொழியில் பேசினால்கூட தவறென கூறும் குரு அவன்
ஏன் என்று கேட்க நாவிற்கு திறனில்லை






ஏனெனில் போதிக்கும் இடத்தில் அவன்
கேட்கும் இடத்தில் நாம்
மாற்றவே முடியாது
மாறவும் முடியாது
மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறியே
நம்மையெல்லாம் மாற்றியவன் அவன்
அவன்தான்
மார்க்கெட்டிங் எனும் பேய் !


Tuesday, 24 March 2015

இங்கிலீஷ் மோகம்

" தமிழன் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவான் "
"தமிழன் தன்னை பற்றியே தற்பெருமை பேசுவான் "
" தமிழனுக்கு வேறு மொழிகள் தெரியாது "
"தமிழனுக்கு தலைமை பண்பு கிடையாது"
"தமிழ் என்று கூறி விட்டால் தமிழனை எளிதில் ஏமாற்றி விடலாம் "
"தமிழன் தமிழ் புராணம் பாடுவான் "

இப்படி எல்லாம் பேசுபவர்கள் ஒரு புறம் இருக்க மற்றொருபுறம்

தமிழர்கள் குறிப்பாக தமிழ் பெண்கள் கூறுவதாவது ,

" நான் தான் ஹிந்தி படிக்க வில்லை , என் பிள்ளையாவது படிக்கட்டும்"
"நான் தான் இங்கிலிஷ்ல சரியாய் பேச முடியல , என் பிள்ளையாவது நல்ல இங்கிலீஷ் ஸ்கூல் ல படிச்சு , 5 வசுலையே டாக்டர் ஆகட்டும் என்று சிலர் கூறுகின்றனர் . 

இதையெல்லாம் தாண்டி , சிலர்

பிள்ளைகளை பிரெஞ்சு , ரஷ்ய மொழி , சீனா மொழி, சமஸ்கிருதம் என்றெல்லாம் படிக்க வைக்க முயற்சி எடுத்து சில பல லட்சங்களை செலவிடுகின்றனர்.

இன்னும் சிலர் வீட்டில் பிள்ளைகள் தமிழில் பேச கூடாது , தமிழ் புத்தகங்கள் படிக்க கூடாது , டிவி யில் தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்க கூடாது என்று கண்டிப்பதுடன் ,
"நீ தமிழ் படிச்சா உருபடவே மட்ட " என்று சாபத்தையும் சேர்த்து பரிசாக கொடுக்கிறார்கள் .

தமிழா ,

நம்மை போல் சாபம் பெற்றவன் இவ்வுலகில் இருக்கவே மாட்டான் 
\
நம்மை போல் தாழ்வு மனப்பான்மையால் , பிறரின் கற்பிதங்களை உடனே ஏற்பவன் இவ்வுலகில் பிறந்திருக்க மாட்டான் .

ஒரு கதை உண்டு

ஒருவன் அதிகாலையில் எழுந்து , குளித்து முடித்து அலுவலகம் கிளம்பினானாம் . அவன் வீட்டிலிருந்து வெளியில் வரும் போது அவன் பாட்டி  அவனிடம் கேட்கிறார் . " என்னப்பா உடம்புக்கு முடியலையா " முகம் சுணக்கமா இருக்குதே என்று " நான் நல்லதனே பாட்டி இருக்கேன் என்று கூறியவன் ,  பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கிறான் , அங்கு வரும் அவன் நண்பன் கேட்கிறான் " என்னடா டல்லா  இருக்கே ? உடம்புக்கு முடியலையா ?
இப்போது அவனுக்கு சிறிது சந்தேகம் வருகிறது. நம் முகம் வாடி இருக்கிறதோ என்று . இருந்தபோதிலும் , எனக்கென்னட நான் நல்லாத்தான் இருக்கேன் என்று பதில் கூறுகிறான்
பேருந்தில் ஏறியவன் அதே சிந்தனையில் இருக்கிறான் , அலுவலகம் சென்றதும் மேலும் இருவர் அப்படியே கேட்கிறார்கள் , மாலை வீடு திரும்புவதற்குள்ளாக 5 பேர் அவனிடம் கேட்டு விட்டனர். இரவு முழுவதும் அவன் தூங்க வில்லை . மறு நாள் காலையில் எழுந்த போது , அவனால் எழுந்திருக்க முடிய வில்லை , அவன் சோர்ந்து விட்டான் . அவன் உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது .


இந்த கதை போலதான் ஆகிவிட்டது தமிழனின் நிலையும் .
தமிழனுக்கு வேறு மொழிகள் தெரியாது, இது தெரியாது , அது தெரியாது என்று ஏகப்பட்ட கருத்து மழையில் நனைந்து , நனைந்து இன்று தமிழனின் அறிவில் எதுவும் நிரூபிக்க வழி தெரியாமல் போன நிலை வுருவாகி விட்டது .

அதிலும் பெண்கள் சொல்லவே வேண்டாம் . எதோ எல்லோரும் லண்டனில் இருப்பது போலவும் , சொந்த தாய் மொழியே வராமல் அவதி படுவது போலவும் , அந்த ஸ்கூல் நல்ல இங்கிலீஷ் சொல்லி தர்றாங்களா இந்த ஸ்கூல் நல்ல இங்கிலீஷ் சொல்லி தர்றாங்களா என்று ஆய்வு செய்து , விடியற் காலை , கோழிகூவும் முன்பு ஸ்கூல் வாசலில் நின்று , ஸ்கூல் தனி பட்ட முறையில் விளம்பரம் எதும் செய்ய வேண்டியதே இல்லை . இங்கு வரிசையில் நின்று சேர்க்கை form வாங்கி இது தாங்க இந்த உலகத்திலேயே சிறந்த ஸ்கூல் என்று வுரெல்லாம் சொல்லி , அப்பப்ப இவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவில்லாமல் போய்விட்டது . தட்டி கேட்க ஆளே இல்லை தமிழ் நாட்டில் . இத்தனைக்கும் இன்றைய பெற்றோர் எல்லாம் படித்தவர்கள்.
முழுமையாக படிப்பறிவு இல்லாத இவர்கள் பெற்றோர், இவர்களையெல்லாம்
முன்னேற்றி விட்டது எதற்காக என்றால் , இலவசமாக சில பல பள்ளிகளுக்கு விளம்பரம் கொடுக்கத்தான் . இதேலே பெருமை வேறு .

எதோ வாஸ்கோட காம , இந்தியாவிற்கு வழிதேடிய போது , இந்தியாவின் எல்லா மொழிகளையும் கற்றுக்கொண்டு ,வந்தது போல ஒரு நினைப்பு . அப்படி அவன் கற்று கொண்டுதான் இந்தியாவிற்கு வழி தேடுவேன் என்று நினைத்திருந்தால் , இந்தியவிற்கு வழியே கண்டு  பிடித்துருக்க மாட்டான்.

முதலில் இவர்களெல்லாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் . தாய் மொழி அறியாதவன் , எம்மொழியிலும் முழுமை பெற முடியாது . எந்த கருத்தையும் ஆய்வு செய்ய இயலாது.


இதை விட முக்கிய செய்தி என்னவென்றால் ,  வருங்காலத்தில் அவர்கள் தலையாட்டி பொம்மைகளாய் மாறி போவார்கள் . ஏனெனில் அவனுக்கு தான் நல்லது கேட்டது எதுவும் தெரியாதே . பிற மொழி பேசுவான் . அவ்வளவு தான் . ஆனால் அது  அறிவு அல்ல .


இன்றைய பள்ளிகள் மொழியை கொடுக்கின்றன , அறிவை கொடுக்க வில்லை .
புதிதாக ஒரு ஊருக்குள் நுழையும் பொது அந்த நீர் நம் வுடலில் சேர என்ன செய்ய வேண்டும்
நீரிலே முழுகும் நிலையில் உள்ள ஒருவனை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்
திடீரென தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும்
விலங்குகளிடமிருந்து காப்பாற்றி கொள்ள என்ன செய்ய வேண்டும்
மற்றவர்களிடம் எப்படி உரையாட வேண்டும்
இரவு நேரங்களில் நம்மை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும்
குளிர் தருணங்களில் என்னென்ன வுட்கொள்ள வேண்டும்
வெயில் நேரத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும்
சிறு சிறு சட்ட பிரச்சனைகளை எப்படி அணுகுவது
தோட்டம் அமைப்பது எப்படி
நீர் தேங்காமல் காப்பது எப்படி
எந்தெந்த கனிகள் நம் வுடல் நலனுக்கு ஏற்றது
படித்து முடித்ததும் என்னென்ன வேலைகள் செய்யலாம்
எப்படி விற்பனை செய்யலாம்
அரசியல் என்றால் என்ன
வரதட்சினை என்றால் என்ன
சீதனம் என்றால் என்ன
இதையல்லாம் கடந்து ஒரு ஆண் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
ஒரு பெண் , ஒரு ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
இருவரும் அறிவு ரீதியாக சமம் ஆயினும், ( என்னதான் நாமெல்லாம் இங்கிலீஷ் இங்கிலீஷ் என்று கூவினாலும் , லண்டன் பெண்களை போல் நம் வீட்டு பெண்ணை ஒப்பு கொள்ள மாட்டோம். நம் வீட்டு ஆணை விட்டுவிட மாட்டோம் . இங்கு மட்டும் நாம் தமிழ் நாட்டில் வாழ்கிறோம் என்று நினைவுக்கு வந்து விடுவோம் .  வரதட்சினை பிரச்னை வரும்போது நாம் தமிழர்கள் ஆகி விடுவோம் . என்னே தமிழன்)

இவை போன்று இன்னும் எத்தனையோ வாழ்வியல் விசயங்கள் சொல்லிதர நம் பள்ளிகள் தயார் இல்லை. அதை ஒப்பு கொள்ள பெற்றோர் தயாரில்லை . குறிப்பாக தாய்மார்கள் . இன்று இவர்கள் தாய் மொழியை விட்டுகொடுக்க கூறுகிறார்கள் , நாளை அவன் தாயையும் சேர்த்து  தான் விடுவான் . மறந்து விடாதீர் . அவன் ஒன்றும் பொம்மை அல்ல . ஆட்டுவிக்க .

பாவம் குழந்தைகள் , அவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் வேலைக்கு சென்று காசு சம்பாதிக்க , குழந்தைகளையும் , அவர்கள் கல்வியையும் ஒரு காரணம் ஆக்காதீர்கள் .
 உங்களின் இது போன்ற , ஆசைகள் தான் , இன்று பல தவறுகளுக்கு காரணம் . வீட்டிற்குள் நுழையும் குழந்தைக்கு பேச கூட ஆள் இல்லை. அநாதை போல் அலைகிறான் . பெரிய பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று கூறி தாயும் வேலைக்கு சென்று , அவனை அநாதை ஆக்குவதை விட , சிறிய பள்ளியில் படிக்க வைத்து , குறைந்த பட்சம் தாயின் அன்பையவது கொடுங்களேன் .

பள்ளியிலும் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி தரப்போவது இல்லை
வீட்டில் தாயும் இல்லை . நாளை அவனுக்கு பெண்ணிடம் பேசும் முறைகள் கூட தெரியால் போகலாம்
 உங்கள் இங்கிலீஷ் மோகம் , ஒரு குழந்தையை கயவனாக மாற்றும்  ஒரு குழந்தையை முட்டாளாக மாற்றும்
உங்களை லஞ்சம் வாங்கவும் தூண்டும் .

வேண்டாம் , நாளைய தவறுகளை இன்றே சரி செய்வோம் .
அவன் நம் குழந்தை
இது நம்  மொழி
இது நம்  நாடு








Monday, 9 March 2015

பெண்மையை மதிப்போம்

தீட்டு எனும் வழக்கம்  

ஒரு பெண் பூபெய்தும் போதும் , மாதந்தோறும் விளக்காகும் போதும் அது தீட்டு . 

இங்கு தவறான புரிதல்கள் கற்பிக்க பட்டுள்ளது. ஒரு பெண்ணின் உடல் நிலையானது மாதந்தோறும் சில ஓய்வு நிலைக்கு வரும் பொழுது , அவளை பிறர் துன்புறுத்தவோ , அவளுக்கு தொந்தரவுகள் கொடுக்கவோ கூடாது என்பதற்காக உருவாக்க பட்டது. இதில் பலன் அடைய வேண்டிய பெண் இக்காரணத்தாலேயே அவமானத்திற்கு ஆட்படுவது எப்படி.? எவரோ கொடுத்த கற்பிதங்கள் . இந்த அவமானத்தில் இருந்து வெளி வருதாய்  எண்ணி பெண்கள் அத்தருணங்களில் ஒய்வு எடுக்காமல் , எல்லா வேலைகளையும் செய்வது உடலுக்கு ஏற்படுத்தும் கேடு ஆகும். ஒய்வு நாளை ஓய்வாகவே அணுகலாமே. சமுதாயமும் இதை அனுமதிக்கலாமே !


ஒரு பெண் குழந்தை பெறும்போது அது தீட்டு .16 நாட்கள் அவள் வீட்டின்  கொல்லைபுறத்திலோ , அல்லது தனி அறையிலோ இருக்க வேண்டும் . 

இங்கும் பெண் ஏதோ தவறிளைதவள் போல அணுகப்பட்டு இந்நிலையும் மாறி விட்டதனால் , குழந்தை பிறந்த 7 தினங்களுக்குள் அவள் ஒய்வு நிலை மறுக்க படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் , பெண்ணுக்கு ரத்தபோக்கு அதிக அளவில் இருக்கும். அதோடு மட்டுமல்லாது பிறந்த குழந்தைக்கும் , பால் அருந்த ஏற்றவாறு பெண் தன் உடல் நிலையை தயார் செய்ய வேண்டும்.
பிள்ளை பிறந்ததால் ஏற்பட்ட உடல் மாற்றத்தை அந்த 16 நாட்களுக்குள் அவள் குறைக்க முயற்சிக்க வேண்டும் .
தாயின் வயிற்றில் இருந்து வெளியில் வந்த வுடன் , அந்த குழந்தை அவள் வுடல் அசைவுகளை தேடி கொண்டே இருக்கும் . அதில் இருந்து அக்குழந்தை வெளி வர 16 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்.
குழந்தையின் தொப்புள் கொடி கீழே விழுவதற்கு குறைந்த பட்சம் 7 நாட்கள் முதல் அதிக பட்சம் 16 நாட்கள் ஆகும்.
16 நாட்களுக்குள் குழந்தை வெளி வுலகிற்கு பழகி விடும் . இந்த வெப்பத்தை, இந்த காற்றை, இந்த குளிர்ச்சியை தன் வுடளுக்குள் ஒப்பு கொள்ளும். அதற்க்கு முன்னதாக பலரும் குழந்தையை தூக்கவோ , எடுக்கவோ செய்தால் அது குழந்தையின் வுடல் நலத்திற்கு நல்லது அல்ல .
மேற்காணும் காரணங்கள் பெண்ணின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டவை. இது தீட்டு அல்ல . மருத்துவமனையில் வெளியில் செருப்பை கழற்றி போடுவதால் உள்ளே இருப்பவர்களெல்லாம் தீட்டனவர்கள் அல்ல

மரணம் நிகழ்ந்த வீடு. தீட்டு , அங்கு தண்ணீர் குடிக்கவோ , 16 நாட்கள் வரை வுனவருன்தவோ கூடாது. இது சம்மந்தி புறத்தாருக்கு மட்டும். பங்காளி உறவுகளுக்கு அல்ல.

இது கொஞ்சம் சரிங்க . ஒருவர் இறந்த வீட்டில் , இறந்தவரின் உடலில் இருந்து வெளியேறும் துர்நீரானது , அவ்விடத்தில் சுழன்று கொண்டே இருக்கும் . அதிலும் இறந்தவர் தொற்று நோய்க்கு ஆளாகி இறந்திருந்தால் கண்டிப்பாக இதை அனுசரிக்க வேண்டும் . இறந்தவறின் , நெருங்கிய வுறவுகளாகிய மனைவி, குழந்தைகள் ஆகியோர் அடுத்த 16 நாட்கள் வரை வீட்டை சுத்தம் செய்து , அன்றாடம் தலை குளித்து நோய் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லை என் தந்தையோ , தாயோ  எந்தவித தொற்று நோயினாலும் இறக்க வில்லை என்று நிரூபிக்க விரும்புபவர்கள் மொட்டை அடித்து தலை முதல் பாதம் வரை நான் சுத்தமாகவே இருக்கிறேன் என்று வெளி உலகிற்கு காட்டுகின்றனர் . அதற்கக்காக இறந்தவருக்காக மரியாதை செய்வதை தவிர்க்க கூடாது. வருபவர் எவரும் எவ்வித பாதிப்புக்கும் ஆளாக கூடாது என்பதற்காகத்தான் குழந்தைகள் கைகளில் நெய் பந்தம் கொடுக்கிறார்கள். அது தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கும். அதையும் கடந்து வந்தவர்கள் அனைவரும் வீட்டிற்க்கு  வந்தததும் குளித்து திருநீறு இட வேண்டும்.

ஆனால் எல்லா இடங்களிலும் பெண்ணை தண்டிப்பது நியாயம் அல்ல. காரணங்கள் அறிந்து கொள்வோம் . பெண்ணிற்கு தேவையான நேரங்களில் ஒய்வு கொடுப்போம். இதிலிருந்து விடுதலை அளிப்பதாய் எண்ணி கொண்டு நீ இத்தருணங்களில் கூட வேலை செய்யலாம் என்று அறிவாளிதனமாய் கூறி, அவளது ஓய்வை தட்டி பறிக்க வேண்டாம் . அவளை தனியே ஒதுக்கவும் வேண்டாம் .

Thursday, 5 March 2015

ராமாயணம் - கொஞ்சம் யோசிப்போம்


  • இராவணன் எனும் தமிழன் பிறன்மனை நோக்கிய பாவியா?
  • ராவணனின் தந்தை குறித்த கருத்துக்கள் :
  • பெயர் : விஷ்ரவா ( வேசமுனி ) பிராமண தந்தை
  • மனைவிகள் : மூவர்
  • முதல் மனைவி : பிராமண பெண்
  • பிள்ளைகள் : குபேரன்
  • இரண்டாவது மனைவி : தைத்யா ( ராக்ஷசி )
  • பிள்ளைகள் : ராவணன். சூர்ப நகை , கும்ப கர்ணன், அதிரவன்
  • மூன்றாம் மனைவி : பிராமண பெண்
  • பிள்ளைகள் : விபீஷணா , காரா, துஷானா , கும்பினி
  • ராவணன் குறித்த கருத்துக்கள் :


  • முதல் மனைவி : மண்டோதரி
  • இரண்டாவது மனைவி : மாயா 
  •   
  • மூன்றாம் மனைவி : தன்ய மாலினி 
  • மகன்கள்
  • மேஹநாத் , அதிகயா , அக்ஷய குமாரா , தேவந்தகா , நரந்தகா, திரிசிரா, பிரகஸ்தா  
  • வால்மீகி எந்த ஊரை வர்ணித்தாரோ அந்த ஊரின் பெயர் சாகேதம்
  • இவை எல்லாம் வால்மீகி தன்னுடைய ராமாயணத்தில் கூறியவை.
  • ஆனால் வேத காலத்தில் இது போன்ற பெயர்கள் புழக்கத்தில் இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  •   
  • வால்மீகி எந்த ஊரை வர்ணித்தாரோ அந்த ஊரின் பெயர் சாகேதம் 
  • ராமாயணம் எழுதப்படும் வரை அயோத்திய என்ற ஊர் பெயரே கிடையாது. 
  • அது மன்னன் புஷயமித்ரனின் தலை நகரம் . வால்மீகி அவனது அவைக்கள புலவர் . எனவே தலைநகரதிற்கு பெயர் மாற்றி வர்ணித்து இருக்கிறார். 
  • தசரதன் என்ற மன்னன் வாழ்ந்தது உண்மை. ஆனால் அவன் ஜாதக வம்சத்தை சேர்த்தவன் என்றும் , அவன் ஆண்டது காசியை என்றும் வரலாறு கூறுகிறது. 
  • ராவணன் எனும் மன்னன் வாழ்ந்தது உண்மை . அதை இலங்கையின் மலை குகை கள் கூறுகின்றன. 
  • இராவணன் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியன் . அவனிடத்தில் புஷ்பக விமானம் இருந்துள்ளது.
  • இசையிலும், கல்வியிலும், சிறந்தவன்,
  • அதற்கு காரணம் கூறுகிறார் வால்மீகி. ராவணனின் தந்தை பிராமணன் . அதனால் அவன் கல்வியிலும், இசையிலும் சிறந்து விளங்கினான்.
  • ஆனால் அவன் தாய் ஒரு ராக்ஷசி . அதனால் அவனிடத்தில் கெட்ட குணங்கள் வந்தது என்று 
  • சில கேள்விகள் :

  • 16000 திருமணம் செய்து கொண்ட தசரதன் நல்லவனா? எப்படி அவ்வளவு பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும்.
  •  இதற்க்கான விடையை இன்று வரை நம் திருமணங்களில் வேதம் ஓதும் புரோகிதர்கள் கூறி கொண்டு இருக்கிறார்கள். அதாவது நம் திருமணங்களில் ஓதப்படும் மந்திரத்தின் அர்த்தம் இதுதான். இந்த பெண்ணானவள் அக்னிக்கு மனைவி ஆகிறாள் . இரண்டாவதாக மன்னனுக்கு மனைவி ஆகிறாள். மூன்றாவதாக வேதம் ஓதும் பிராமணனுக்கு மனைவி ஆகிறாள். பிறகு எனக்கு மனைவி ஆகிறாள். இதைதான் திருமணத்தின் போது மணமகன் கூற வேண்டிய மந்திரமாக புரோகிதர் சொல்லி தருகிறார். இந்த மந்திரத்தின் படி மணமகள் மன்னனுக்கு மனைவி . அந்த அடிப்படையில் தான் தசரதனுக்கு ஏகப்பட்ட மனைவிகள். ராமனின் தந்தை ஊரில் உள்ள அடித்தட்டு மனிதனின் மனைவியையும்  தன் மனைவியாக மாற்றுகிறான் எனில் தசரதன் செய்தது சரியாய் தெரிந்ததா  ராமனுக்கு ?
  •          
  •  ராவணன் ஆட்சி செய்த இடம் , அந்த எல்லையானது வடஇந்தியா வரை பரவி இருந்ததாக வால்மீகியே எழுதுகிறார். அப்படி இருக்க சீதையை, தவறான எண்ணத்தோடு கடத்துவதற்கு கானகம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • ராவணன் என்றால் அழுமூஞ்சி என்று சமஸ்கிருதம் பொருள் கூறுகிறது . ஒரு பிராமண தந்தை அழுமூஞ்சி என்றா  பெயர் வைக்கிறார்.
     ராவணன் என்றால் இறால் வண்ணன் என்றும் வீரம் பொருந்தியவன் என்றும் தமிழ் அல்லவா     பொருள் கூறுகிறது. எனில் ராவணின் தந்தை பிராமணன்  அல்ல. நாட்டில் எவர் திறமைசாலியாக இருந்தாலும் சரி அவனுக்கு தந்தை பிராமணன் தான் என்று கூறும் வழக்கம் ஆரியர்களுக்கு ஒன்றும் புதிது அல்ல.

     ஹனுமான் என்னும் திறமைசாலி .இவன் பிறந்தது தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனுமன் மலை.

     அவன் தந்தையும் வாயு என்னும் பிராமணன் தான் என்கிறார் வால்மீகி.

     பிராமணர்களால் பிறக்கும் குழந்தைதான் அறிவாளி , திறமைசாலி, பலசாலி 
     உலகின் எந்த மூலையில் ஒரு திறமையானவன் பிறந்தாலும் அவன் தாய் களங்கம் கற்பிக்க படுகிறாள் . என்ன நியாயம் இது.? { தொல்காப்பியரின் தந்தைகூட பிராமணன் தானாம் .} { பல்லவ சாம்ராச்சியத்தின் தலைசிறந்த மன்னன் மகேந்திரவர்ம பல்லவன் கூட பிராமணன் தானாம் . குறிப்பாக மகாபாரதத்தில் இறந்து போகாமல் தப்பிய அஸ்வத்தாமன் வழிவந்தவனாம் . இந்த கதையலேயே காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவர்களை தமிழ்தான் என்று சொல்ல சிறு தயக்கம் ஏற்படுகிறதாம். }






     புஷ்யமித்திரன் ஆட்சி வந்த காலத்தில் மக்கள் எல்லோரும் ராவணன் என்பவன் மீது கொண்டிருந்த அதித நம்பிக்கையை அழிக்க வேண்டி அவன் அவைக்கள புலவரால் இக்கதை எழுத பட்டிருக்கலாம்,
   
     அவன் மிகவும் நல்லவனயிற்றே என்று கேள்வி எழும்பியதால் அவன் தந்தை கதையும் எழுதுகிறார் வால்மீகி. { அவன் கெட்டவனாயின் இன்று வரை மகாராஷ்டிர மாநிலத்தில் கன்யா குப்ஜா பிராமணர்கள் ராவணனுக்கு தினமும் பூஜை செய்ய மாட்டார்கள். கன்யா குப்ஜா பிராமணர்கள் எனப்படுபவர்கள்  தசரத மன்னன் காசியை ஆண்ட காலத்தில் காசியில் வாழ்ந்த மக்கள் . தங்கள் பெருமை எங்கு போனாலும் தெரிய வேண்டும் என்பதற்க்காகவே தங்கள் பெயருக்கு பின்னால் கன்யா குப்ஜா என்று இணைத்து கொண்டவர்கள். }
     
     ராமாயண இடங்கள் எல்லாம் கி.பி.12 ம் நூற்றாண்டிற்கு முன்பு வுருவான இடங்கள் அல்ல . 
  • எந்த கருத்தையும் காலத்தை வைத்து குறிப்பிடுங்கள்.
  • ராமேஸ்வரம் பாலம் கட்டியது ராவணன் என்னும் தமிழ் மன்னன் என்றால் ஒப்புகொள்ள கூடாதா?
  • சோழர் காலத்திற்கு முன்பு ராம வரலாறு தமிழ்நாட்டிற்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை 
  • பல்லவர்களால் மகாபாரதம் மட்டுமே பரவி இருந்தது
  • கம்பரின் ராமாயணம் வந்த பிறகுதான் ராம வரலாறு , சோழர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் பரவி இருக்க வேண்டும் . 
    

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...