Monday, 16 November 2015

சென்னையில் கடும்மழை 2015 நவம்பர் 16

                           சென்னையை அடித்து நொறுக்கும் கனமழை -

                            மழை நீரில் புதைந்தது சிங்கார சென்னை

இது தாங்க பத்திரிகைகளின் தலையங்கம் . எப்புடி நல்லா இருக்குதுள்ள !

                            ஐப்பசியில் அடைமழை 

                            கார்த்திகையில் கனமழை 

 
நம் பாட்டனும் , பூட்டனும் நமக்கு விட்டு போன அறிவியல் .
 
கற்க மறந்தது நாம்.
 
கற்பிக்க கூடாது என மறைத்தது நமது அரசு .
 
பாவம் என்ன செய்வர் நம் தலைவர்கள் 
 
அவர்களுக்கு தெரியாது இப்படி ஒரு அறிவியலை தமிழன் வளர்த்து வந்தானென்று .
 
ஏனெனில் அவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை. அவர்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை எப்படி அவர்கள் கல்விசாலையில் கொடுக்க முயல்வர்.
 
இது அவர்கள் தவறு இல்லை. தமிழனின் தவறு.
 
ஆனால் இன்றும் தமிழன் வள்ளுவரை மட்டும் மறப்பதே இல்லை.
 
 

ஆம்.வெள்ளக்காடாய் உள்ளது சென்னை . " இடுக்கண் வருங்கால் நகுக '' என்னும் திருக்குறளுக்கு  ஏற்ப அனைத்தையும் இன்பமாய் பார்கிறான். உடலில் ஊறிய தமிழ் ரத்தம் அனைத்தையும் நகைசுவை போல் பார்க்க சொல்கிறது.

 
 
 
 
இது போன்று படங்கள் வெளி இட்டு சந்தோஷ படுகிறார்கள்.
 
 
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் படகு போக்குவரத்து .
அங்கும் நகைசுவை வசனங்கள் 
 

                                ஓடமும் ஒருநாள் சாலையில் செல்லும்.

                                 சாலையில், நிறைந்த நீரில் பேருந்தும் படகு போல் செல்லும்.

 

 
பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை . ஒரு சில அலுவலகங்களும் விடுமுறையில் உள்ளன.
 
ஆனால் இந்த நிலையிலும் பணியாற்றி கொண்டிருக்கும் காவல்துறை, போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவரும் பாராட்டுதலுக்கும், அனைவரின் வேண்டுதல்களுக்கும் உட்பட்டு உள்ளனர். 
 
  
இதோ இந்த ஆட்டோகாரர்களும் பாராட்டுபெரும் இடத்திற்கு வந்து விடுகிறனர் .அவசர தேவைகளுக்கு இவர்களின் சேவையும் முக்கிய இடம் பிடிக்கிறது .
 
சாலை பணியாளர்கள் , துப்புரவு பணியாளர்கள் , மின்சார ஊழியர்கள் , தொலைபேசி ஊழியர்கள் ஆகிய இவர்களின் சேவையும் அதிக தேவையாய் உள்ளது.
 
 
இது போன்று அபாய குறிப்புடன் உள்ள பள்ளங்களும் உள்ளன. கண்டுபிடிக்கமுடியாமல் பேருந்துகளை கவிழ்க்க முயலும் பள்ளங்களும் உள்ளன .  ஒரு பேருந்து தி.நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மூழ்கியது . ஒரு நாள் முழுவதும் போராடி மூழ்கிய பேருந்து மீட்கப்பட்டது
 
 
இந்நிலையில் இவ்வளவு மழைநீரையும் சேமிக்காமல் விட்டுவிட்டு பிற மாநிலங்களில் தண்ணீர் பிச்சை கேட்கும் அவல நிலையில் இருந்து விடுபட முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகராய் பணியாற்றிய பொன்ராஜ் அவர்கள் சிங்கப்பூரில் மழைநீர் சேமிக்கும் முறை பற்றி குறிபிடுகிறார் .
 

வீட்டிலிருந்து மழைநீர் சேகரிக்கப்பட்டு, அது தெருவில் இருக்கும் கால்வாயில் கலக்கிறது. அதற்காக சாக்கடை கலக்காத மழைநீர் சேகரிப்புக்கு என்றே தனி வாய்க்கால் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சாலைகளையொட்டி பிரமாண்டமான வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகளில் சேரும் மழை நீர் கால்வாயில் சேகரிக்கப்பட்டு, முறையாக குளங்கள், ஏரிகளில் சென்று சேர்கிறது. என்று கூறுகிறார் .

இத்துடன்  ராக்கெட் செய்ய தெரிந்த நமக்கு இந்நீரை பாதுகாக்க தெரியாதா என்ற கேள்வியையும்  நம்மிடம் கொடுக்கிறார்.
 
 கடந்த ஒரு வாரகாலமாக மழை கொட்டி தீர்த்து , ஒரு வழியாக ஓயபோகும் நிலையில் தமிழ்நாட்டிற்கென்று ஒரு முதல்வர் இருக்கிறார் என்பதை நினைஊட்டும் வகையில், 
 ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்! என்று செய்தி வெளியிடுகிறது பத்திரிகை . நாள் முழுவதும் இந்த செய்தியையே தருகிறது ஜெயா செய்தி ஊடகங்கள் .
 
போட்டிக்கு தி.மு.க. செய்தி ஊடகங்களும் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு ஆறுதல் கூறினார் என்று தொடர்ச்சியாக கூறுகிறது.
 
இது ஒரு புறம் இருக்க மற்றும் ஒரு செய்தியாக 
 
சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்,, என்று செய்தி தருகிறது ஊடகம்.
பாவம் மக்கள் எங்கு செல்வர் .  எல்லா ஏரிகளும் மூடப்பட்டதின் விளைவு. எல்லா குளங்களும் , குட்டைகளும் தரைமட்டமாக்க பட்டத்தின் விளைவு .
 
இப்பிரச்சினை வரும் என்று முன்பே தெரிந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியாது . ஏனெனில் இது கொள்ளை லாபம் தருகிறது .
 
ஊடகங்களுக்கு செய்தி நிறைய கிடைகிறது லாபம் .
 
நிவாரணம் வழங்கும் பேரில் அணைத்து அரசியல் வாதிகளுக்கும் ஏகப்பட்ட லாபம் .
 
அணைத்து அரசு ஊழியர்களுக்கும் லாபம் 
 
மீண்டும் சாலை சீரமைப்பு வேலைகள் நடக்கும் . குத்தகை வழங்கம் அரசியல்வாதிக்கு லாபம் .
 
வெள்ளம் வடிய எப்படியும் ஒரு பத்து நாலாவது ஆகும் . அதற்குள் ஏகப்பட்ட வியாதிகள் வரும்.
அதற்கு ஒரு நிவாரணம் . லாபம்.
 
எல்லாம் லாபம் . இத்தனை பெரிய தொழிலை உருவாக்கி தரும் மழை நீரை தேங்க விடாமல் வடிந்து , அதனை சேமித்து வைத்து வறட்சி நிவாரண லாபத்தையும் இழக்க இங்கு யாரும் முட்டாள் இல்லை.
 
அத்தனை பெரும் அறிவாளிகள் !
 
தமிழன் மட்டும் மாறவே இல்லை !
 
ஏரியை மூடிய போதும் நகைசுவை.
வெள்ளத்தால் மூழ்கும் போதும் நகைசுவை 
குளிரால் நடுங்கும் போதும் நகைசுவை 
குடிசை நீரிலே மிதக்கும் போதும் நகைசுவை !
குடிதண்ணீர் இல்லை என்றாலும் நகைசுவை 
குடும்பமே வெள்ளத்தால் அழிந்தது என்றாலும் நகைசுவை !
 
 
என்னே ! சிரிப்பு ! போதும் சிரித்தது . நிறுத்தி கொள் !
உலகம் நம்மை பார்த்து கைகொட்டி சிரிக்கிறது !
 
மழை பெய்வது ஒரு பிரச்சனையா என்று !
 
வடிகால்கள் அமைப்பது பற்றி நமக்கு யார் கற்றுத்தர வேண்டும் !
 
உனக்கு தெரியும் . எங்கு வெட்டிவிட்டால் எங்கு நீர் சென்று சேரும் என்று !
 
நம் ரத்தத்தில் ஊறியது நகைசுவை மட்டும் அல்ல !
ஆளுமையும் தான் !
நீர் மேலாண்மையை இந்த உலகுக்கு கொடுத்தான் நீ !
மறந்து போனாயோ ?
விழித்து கொள்! விழிப்புணர்வு கொடு !
 
இடுக்கண் வருங்கால் நகுக !
எதிர்பாராமல் வரும் போது !
 
எதிர்பார்த்து வரும் போது 
இடுக்கண் தவிர்த்தும் நகுக !

 
 

Tuesday, 3 November 2015

மாற்றம்

 தமிழ்நாட்டில் தற்பொழுது ஆளும் கட்சி ஊழல் செய்து விட்டாலோ அல்லது தவறு செய்து விட்டாலோ, அந்த கட்சியை சேர்த்தவர்கள் உடனே, எதிர்கட்சி தலைவர்களை "இவர் மட்டும் என்ன ரொம்ப நல்லவரா? இவர் அடிக்காத கொள்ளையா?" என்று கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். அவ்வாறே, எதிர்கட்சி செய்த தவறுகள் வெளி வரும் போது, அந்த கட்சியை சேர்த்தவர்கள் ஆளும் கட்சி மட்டும் என்ன யோக்கியமா? என்று கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். தான் சார்ந்த கட்சி அல்லது தனக்கு பிடித்த தலைவர் என்ற ஒரு சில காரணத்திற்காக, அந்த கட்சி செய்கின்ற ஊழல் / தவறு அனைத்தையும் ஆதரித்து பேசுவது மற்றும் "அந்த கட்சியினர் இந்த தவறை அவரது ஆட்சியில் செய்துள்ளார், அதனால் நாங்கள் செய்வது எந்த தவறும் அல்ல" என்று கூறுவது எந்த வகையில் நியாயமாகும்?


உங்கள் வீட்டில் யாராவது தவறு செய்து விட்டால், அவர்களை கடிந்து கொள்விர்களா? அல்லது பக்கத்துக்கு ஊரில் இதே தவறை முன்பே ஒருவன் செய்துள்ளான், அதனால் இது தவறு ஆகாது என்று விட்டு விடுவிர்களா? நமது வீட்டில் தீ பற்றி எரியும் போது அதை அணைக்க முற்படுவோமா அல்லது இது எனது வீட்டில் எரிகின்ற தீ, அதை அணைக்க மாட்டேன் என்று சொல்விர்களா?

எந்த கட்சியினர் தவறு செய்தாலும் ஊழல் செய்தாலும் அதனால் பாதிக்கப்பட போவது மக்களாகிய நாம் தான். தான் சார்ந்த கட்சி, மதம், சாதி இவைகளை விடுத்து, எந்த கட்சி தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் / எதிர்க்கும் மனப்பான்மை வளர வேண்டும். இது எனது கட்சி, இங்கு எது நடந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று இருந்தால் , இவர்கள் ஊழல் செய்வதையும் மக்களை சுரண்டுவதையும் யாராலும் தடுக்க முடியாது.

நமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது, நாம் என்ன செய்தாலும் நமக்கு தான் இவர்கள் வாக்கு அளிப்பார்கள் என்ற எண்ணம் எப்பொழுதோ திராவிட கட்சி தலைவர்களுக்கு வந்து விட்டது. அதனால் தான் ஓவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் ஊழல் பன்மடங்கு அதிகமாகிறது. நமக்கு மிக நன்றாகவே தெரியும், இவர்கள் மக்களை சுரண்டுகிறார்கள் என்று. இதை தெரிந்தும் கண்முடி தனமாக ஆதரிப்பது ஏன்? இந்த காரணத்தினால் தான் எந்த கட்சியும் தங்களது தவறுகளை திருத்தி கொள்ளும் எண்ணம் வர வில்லை, மாறாக அதிகரித்து கொண்டே தான் போகிறது. எந்த கட்சி தவறு செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் . குறைந்த பட்சம், அவர்கள் செய்யும் தவறுகளை ஆதரிக்காமல் இருந்தாலே போதும், நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

Monday, 31 August 2015

யுக கதையும் - தமிழ் மொழியும் !

பன்னெடும் காலமாக இந்த பூமி சில யுகங்களை கடந்து வருகிறது என்று ஹிந்து மதம் கூறுகிறது.



யுகம் குறித்து ஹிந்து மதம் என்னதான் சொல்கிறது .

     
     யுகங்கள் மொத்தம் 4.அவை

                                           கிரேத யுகம்
                                           திரத யுகம்
                                           துவாபர யுகம்
                                           கலி யுகம்

 இந்த யுகங்கள் எத்தனை ஆண்டு காலங்கள் இருந்தன. இருக்க போகின்றன என்பதையும் குறிப்பிடுகின்றன . அவற்றில் கிரேத யுகம் அதிக காலத்தையும் , அடுத்தடுத்த யுகங்கள் படிப்படியாக குறைந்துகொண்டும் வருகின்றன. அதன் படி தற்போது கலியுகம் நடைபெறுகிறது.


கிரேத யுக மக்கள் சத்தியமானவர்கள்
த்ரேத யுக மக்கள் கொஞ்சம் தவறு செய்தவர்கள்.
துவாபர யுக மக்கள் கொஞ்சம் அதிக தவறு செய்தவர்கள்
கலி யுக மக்கள் மிக அதிக தவறு செய்பவர்கள்.


மத்ஸ்ய அவதாரம்  ( மீன் )
கூர்ம அவதாரம்  ( ஆமை )
வராக அவதாரம் ( பன்றி )
நரசிம்ஹ அவதாரம் ( சிங்கம் )
வாமன அவதாரம் 
பரசுராம அவதாரம்

     இந்த 6 அவதாரங்களும் கிரேத யுகத்தில் உருவானது .

ராம அவதாரம்

    த்ரேத யுகத்தில் உருவானது.


கிருஷ்ணா அவதாரம்

பலராம அவதாரம் 

     இவை இரண்டும் துவாபர யுகத்தில் உருவானது.


கல்கி அவதாரம்

    கலி யுக கதை இது. இது நடக்கிறதா ? நடக்க போகிறதா என்பதை நம் காலம்

தான் கணிக்க போகிறது.

ஏனெனில் இதற்கு  முன்பு நிகழ்ந்தாக கூறப்படும் எந்த அவதாரத்தையும்

நம்மில் எவரும் கண்டிருக்க  முடியாது .  

ஆனால் கலி அவதாரம் பிறந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். அந்த

அவதாரத்தின் பெயர் பிராம ஸ்ரீ  ஷ்யம சரண்  ( மஹா அவதார் பாபாஜி )

இவர் கலி யுக இறுதியில் தொடங்கி மறு சுழற்சியில் மீண்டும் கிரேத யுக

தொடக்க அவதாரமாகவும் கருதப்படுகிறார் . எனில் நாமெல்லாம் மீண்டும்

தொடங்கப்பட்ட சத்தியயுக தொடக்கத்தில் வாழ்கிறோம்.








கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் யுகங்கள் எனப்படுவது

எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும் என்ற கருத்தும் உண்டு .

அதனால் சுழற்சியின் அடிப்படையில் மீண்டும் கலி யுகம் கடந்து    துவாபர

யுகத்தில்  இருக்கிறோம், என்கின்றனர்.

ஏன்னெனில்  ஒவ்வொரு யுகத்திற்கும் மனிதனின் அறிவு வளர்ச்சியை

கொண்டு சில கணக்கீடுகள் கொடுக்கின்றனர் .

அதன்படி

 கிரேத யுகத்தில் சத்தியத்தை கற்று கொண்டான். ( TRUTH AGE )                    

த்ரேத யுகத்தில்  மன வளர்ச்சியை கற்று கொண்டான் ( MENTALAGE )           

 துவாப யுகத்தில் மின்னியலை கற்று கொண்டான். ( ELECTRICAL AGE )

 கலி யுகம் இருண்ட காலமாகத்தான் இருக்கும் .( DARK AGE )

 என்று கூறுகின்றனர் .





இவையெல்லாம்  யுகங்கள் குறித்து ஹிந்து மதம் குறிப்பிடுவன.

ஆனால் தமிழ் இதனை வேறு வடிவில் கூறுகிறது என்கிறது

 தமிழ் சிந்தனையாளர் பேரவை .

கிரேத யுகம் எனபடுவது கிரி யுகம் .

அதாவது தமிழில் கிரி என்றால் மலை என்று பொருள்.

கரி என்னும் தமிழ் சொல்லானது மருவி கிரி என்றானது .

எனில்  இது மலையும் மலையை சார்ந்த இடமும் ஆகும் .

த்ரேத யுகம் எனப்படுவது தரைத்தள யுகம் .

இது மருவி தரே என்றானது .

அதாவது காடும் காடு சார்ந்த இடமும் .

துவாபர யுகம் என்றால் இரட்டை யுகம் என்று பொருள் .

துவா என்னும் வார்த்தை தமிழின் தோ என்னும் எழுத்தின் மருவிய வடிவம் .

" தோ  " என்னும் எழுத்தில் தொடங்கும் எல்லா வார்த்தைகளும் இரட்டை

செயல்வடிவம்  கொண்டது .

உதாரணம் :  தோல் , தோள் , தோசை, தோகை , தோடு

இதன் அடிப்படையில் தோபர யுகம் , துவாபர யுகமானது .

அந்த இரட்டை செயல்பாடு என்னவெனில் , சமகாலத்தில் செயல்வடிவம்

பெற்றதுதான்

வயலும், வயல் சார்ந்த இடமும் ,

கடலும் , கடல் சார்ந்த இடமும்

எனில் கலி யுகம் மட்டும் ஹிந்து மதத்தில் கூறிய முறைப்படி சரியானது .

இந்த உலகின் எல்லா இடங்களும் அழிக்கபட்டு பாலைவனம் போல்

மாறுவது .

தவறுகள் நடைபெற சாத்திய கூறுகள் இருக்கிறது  என்கிறது

 தமிழ் சிந்தனையாளர் பேரவை .



ஆனால் கலி யுகம் எனப்படுவது கலி அல்ல . வளி யுகம்.

மனிதன் ஆதி காலத்தில் மலைகளை பயன்படுத்தினான்  . இன்னும் முருகன்

ஆலயங்கள் அனைத்தும் மலைகளின் மீது உள்ளது .

பிறகு காடுகளை பயன்படுத்தினான் .

பிறகு காடு திருத்தி வயல்வெளிகளை உருவாகினான்.

கடலை கடந்து கடல் பரப்பையும் பயன்படுத்தினான்

தற்போது நடப்பது கலியுகம்தான் . ஆனால் இது கலியுகம் அல்ல . வளி  யுகம்.

வளி  என்றால் காற்று என்று அர்த்தம் .

இன்று மனிதன் காற்றை பயன்படுத்தி கொண்டிருக்கிறான்  .

ரேடியோ ,தொலைக்காட்சி , தொலைபேசி , மொபைல் , இன்டர்நெட்  எல்லாம்

காற்றை கடந்து நம்மை வந்தடைகிறது .

அதனால் எந்த  நாளிலும் கலி காலத்தில்தான்

தவறுகள் அதிகம் நடக்கும் என்பதை காரணமாக எடுத்துகொள்ள வேண்டிய

அவசியமில்லை.

எல்லா கால கட்டத்திலும் தவறுகள் நடந்தன. ஆனால் தற்போது மட்டும் இது

கலிகாலம் என்பதை காரணம்காட்டி இப்படிதான் நடக்கும் என்றெல்லாம்

கற்பிக்கப்படும் கற்பிதங்களை அறிவில்

எடுத்துகொள்ள வேண்டிய தேவையும்  இல்லை.


எந்த யுகமும் முடிவதும்  இல்லை . எந்த யுகமும் பிறப்பதும் இல்லை .

ரேடியோ , தொலைகாட்சி, அலைபேசி அனைத்தும் தற்காலத்தில் தான்

கண்டுபிடிக்கப் பட்டது. என்று எண்ணினால் அது தவறு.

சங்க காலத்திற்கு முந்தைய காலத்திலும்  காற்றை மனிதன் பயன்படுத்தி 

கொண்டுதான் இருந்தான்.

ஆனால் அது அனைவரும் பயன்படுத்தும் வகையில் இல்லை. இன்று

அனைவர் கைகளிலும் அது பயன்பாட்டில் உள்ளது. 

     மலைகள், காடுகள், வயல்கள், கடல், மற்றும் காற்று இவற்றை மனிதன்

எப்போதும் பயன்படுத்தி கொண்டுதான் இருந்தான்.  பயன்படுத்தும் வரை எந்த

தவறும் நிகழாது.

ஆனால் மனிதன் அவற்றை ஆள நினைக்கிறான்.

அங்குதான் தவறுகள் ஆரம்பமாகின்றன.

தன்னை ஆட்சி செய்ய நினைப்பவர்களை அழிப்பது

இயற்கையின் நோக்கம் அல்ல.

தன்னை சரி செய்து கொள்ள முயற்சிக்கும் போதுதான் அழிவுகள்

நடக்கின்றன. இயற்கையை யாரும் ஆள முடியாது.

இயற்கையை 

   நன்முறையில் பயன்படுத்துவோம் . பேரழிவுகளை தடுப்போம் .



( தமிழ் சிந்தனையாளர் பேரவைக்கு நன்றி . ஐந்திணைக்கு புதிய விளக்கம் தந்தமைக்கு !)


Friday, 31 July 2015

கனவை நனவாக்க வாரீர் !

2015 ம்  ஆண்டு ஜூலை 27 ம் நாள் யாராலும் மறக்க முடியாத  நாள். ஏனெனில் அன்றுதான் ஐயா அப்துல்  கலாம் அவர்கள்  மறைந்த நாள் . அவரது கனவு படி 2020 ல் இந்தியா வல்லரசு ஆக வேண்டுமெனில் , முதலில் கல்வி துறையே மாற்றம் பெற வேண்டும் . அவர் விரும்பியபடி  மாணவர்களே  அந்த மாற்றத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் .


மாற்றம் வரவேண்டுமெனில் சில முடிவுகள் எடுக்க வேண்டும் :

1.   டியூஷன்   முறைகளை ஒழிப்பது . அதற்க்கு நாம் செய்ய வேண்டியது .

இனி தினந்தோறும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது யாரேனும் மற்றொரு மாணவருக்கு பாடம் சொல்லி தருவது.
P .G  படிப்பவர் எனில் U .G  படிப்பவருக்கும் ,
U .G  படிப்பவர் எனில் பனிரெண்டாம் வகுப்பு படிப்பவருக்கும் ,
பனிரெண்டாம் வகுப்பு படிப்பவர் எனில் பத்தாம் வகுப்பு படிப்பவருக்கும் ,
பத்தாம் வகுப்பு படிப்பவர் எனில் எட்டாம் வகுப்பு படிப்பவருக்கும்,
எட்டாம் வகுப்பு படிப்பவர் எனில் ஐந்தாம் வகுப்பு படிப்பவருக்கும் , தனது படிப்பு நேரம் தவிர்த்து , குறைந்த பட்சம்  ஒரு மணி நேரம்
இலவசமாக பாடம் சொல்லி தருவது.

இவ்வாறு செய்தால் டியூஷன் என்ற பெயரால் நடக்கபடும் தவறுகள் தடுக்க படும். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனக்கென தனி மாணவர்களை வைத்து பாடம் நடத்துவது தடுக்க படும் . தகுதியான ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைப்பர் .


lord macaulay க்கான பட முடிவு


2.     Macaulay ன்  இந்த கல்வி முறையில் இருந்து வெளி வருவது. ஆம் இந்த கல்வி திட்டமானது நம்மையெல்லாம் அடிமைகளாக மாற்ற  Macaulay எனும் ஆங்கிலேயன் 1835 -40 களில் தானே தயாரித்த கல்வி திட்டம் . அதற்க்கான காரணத்தை அவருடைய கடிதம் வாயிலாக நாம் அறிவோம். இதோ அக்கடிதம்,
lord macaulay க்கான பட முடிவு
இதிலிருந்து வெளி வர வேண்டும் எனில் தெரியாத விஷயங்களை , தெளிவு படுத்த ஆசிரியரை வலியுறுத்த வேண்டும் . ( a2 + b 2 )  இது எந்தெந்த இடங்களில் பயன்படுத்த படுகிறது என்பன போன்று எல்லா பாடங்களுக்கும் பயன்பாடுகள் அறிந்து கொள்ள வேண்டும்.

3.     கணிதமும் , அறிவியலும் வெறும் மனப்பாடம் செய்யும் பாடங்களாக இருப்பதிலிருந்து வெளிவருவது .   அதன் ஒவ்வொரு சூத்திரமும் எங்கு பயன்படுத்த படுகிறது என்பதை அறிவது .  இது ஒன்றே A .P .J .அப்துல் கலாம் அவர்கள் கூறிய அறிவியல் தமிழ் வளர உதவும்.

4.     எந்த பாடத்திற்கும் விளக்கம் அளிக்காத கல்வியை புறக்கணிக்க வேண்டும்..

5.     நல்ல கல்வியாளனாக மாற வேண்டும் , தரமான ஆசிரியர்களை
உருவாக்க வேண்டும் .

6.      ஏதேனும் ஒரு அறிவியலாளரின்  கதையோ , கட்டுரையோ படிப்பதை வழக்கமாக மாற்றி கொள்ள வேண்டும் .

7.     வெறும் மதிப்பெண்களுக்காக படித்து , மதிபெண்ணுக்காகவே வாழும் மடமையில் இருந்து வெளியேற வேண்டும்.

8.      பாஸ் , பெயில் , grade , இது போன்ற மாயையில் இருந்து வெளி வந்து , எந்த ஒரு பாடத்தையும்  கற்று கொள்ள முயற்சிக்க வேண்டும். .

9.     அறிவியலோடு , அரசியலும் , ஆன்மிகம் என்ற பெயரில் நடப்பவைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

10.    விஞ்ஞானத்தோடு , நம் வாழ்வுக்கு தேவையான விவசாயத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் .

அது அதற்கென்று தனிதனி துறைகள் உண்டு . அங்கு சென்றால் மட்டும்தான் அதை படிக்க முடியும் என்பதும், ஒருவர் ஒரு துறையை மட்டும்தான் படிக்க வேண்டும் என்பதும் நமக்காக ஏற்படுத்த பட்ட மாயைகள்.



நம்மையெல்லாம் மார்க் என்ற மோகத்திற்குள் தள்ளி நம்மை எதற்க்காக தயாரிக்கிறார்கள் என்பதை நமக்கே தெரியாமல் , செய்து நம்மை சுற்றிலும் மாய வலை பின்னியதன் விளைவுதான் இன்று நாம் உண்ணும் காய்கறிகள் கூட விஷமாக மாற காரணம் . 


படித்தால்  கேள்வி கேட்டுவிடுவான் என்று எந்தெந்த துறைகளில் தோன்றியதோ அத்துறை சார்ந்த எந்த ஒரு பாடமும் சராசரி மாணவனுக்கு போய் சேர விடாமல் தடுக்கவே , மருத்துவம்,வானியல் , வேளாண்மை, சட்டம்,  விலங்கியல்  , பிரமிடு போன்ற நமது பழைய கட்டட கலை முறைகள், பண மதிப்பு எப்போதிருந்து பிற நாடுகளை  விட குறைந்து போனது
இவை எதுவும் நம் பாட புத்தகங்களில் இணைக்க படவில்லை .

எனில் கடந்த 250 ஆண்டுகளாக இந்த துறைகளில் எல்லாம் எதோ தவறுக்கான அடித்தளம் விதைக்க பட்டிருக்கிறது .

பணக்கார்கள் மட்டும் இதை படிக்கும் போது , பணத்தை சம்பாதிக்க மட்டுமே அவர்களுக்கும் கற்றுத்தர படுகிறது

 ( இதோ இந்திய பண மதிப்பு அமெரிக்கவுடுன் ஒரு ஒப்பிடு பட்டியல் )   ,


இந்தியா சுதந்திரம் அடைந்த போது , நம் நாட்டின் சொத்துகளை வெள்ளையன் சுரண்டி சென்ற போது கூட  இந்தியா எவரிடமும் கடன் பெறவில்லை.
இந்திய ரூபாய்ன் மதிப்பு , அமெரிக்க டாலருக்கு இணையாகவே இருந்தது.பிறகு என்ன நடந்தது?. இந்த வரலாறு அல்லவா நம் வரலாறு பாட புத்தகத்தில் இருக்க வேண்டும்.

என்றாவது ஒரு நாள் , தாவரவியல் ஆசிரியர்கள் மரங்களை நடும் முறை குறித்தோ , ஒவ்வொரு மரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி குறித்தோ சொல்லி கொடுத்ததுண்டா ? இதை விட்டுவிட்டு இதன் ஆங்கில பெயர்கள் நமக்கு எதற்கு ? அதன் குடும்ப பெயர்கள் எதற்கு ? அதை நாம் தெரிந்து கொள்வதால் என்ன பயன் ?

ஆனால் நம் தமிழ் கூறுகிறது ,

     நெல்லுக்கு நெல் நண்டு  ஓட ,
          வாழைக்கு வாழை வண்டி ஓட ,
               தென்னைக்கு தென்னை தேர் ஓட

இடைவெளி விட வேண்டும் என்று.  இதையெல்லாம் நம் தமிழ் புத்தகமும் தரவில்லை , தாவரவியல் புத்தகமும் தரவில்லை. ஏன் ?


வானியல் குறித்து நமக்கு துளியும் சொல்லி தர வில்லை . ஏன் , நாம் வானியல் ஆய்வு குறித்த தகவலுக்காகவும் வேற்று நாட்டவரை நம்பி இருக்க வேண்டுமா ?

மழை எப்போது வரும் என்பதை ரமணன் கூறினால் தான் அறிந்து கொள்ள முடியுமா ? 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை , எல்லோருக்கும் தெரிந்த மழை சார்ந்த அறிவியலும் , வானியல் குறித்த அறிவும் , இன்று எங்கோ ஒன்றிரண்டு வயதானவர்களுக்கு மட்டுமே தெரிவதன் காரணம் என்ன ?

ஆனால் நம்மாழ்வார் நமக்கு கூறுகிறார் இவையெல்லாம் நம் நாட்டின் பழமொழிகளில்  உள்ளது என்று,
அவை :
          " தவளை கத்தினால் , தானே மழை வரும் "

          " அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அறிகுறி "

          " தும்பி பறந்தால் தூரத்தில் மழை "

          " எறும்பு ஏறில் பெரும் புயல் வரும் "
         
          " மார்கழி மழை மண்ணுக்கு உதவாது "

          " தை மழை நெய் மழை "

ஏன் நம் தமிழ் புத்தகங்கள் கூட நம்மை ஏமாற்றின ?

நமக்கு நன்மை செய்ய கூடிய நம்முடைய கட்டிட கலை முறைகள் நமக்கு சொல்லி தர மறுக்க பட்டது ஏனோ ?
       
விலங்குகளுக்காக விழா எடுக்கும் நம்மிடமே விலங்குகள் குறித்தும், அதன் மீது அன்பு காட்டுவது குறித்தும் ப்ளூ கிராஸ்  கூறுகிறதா ? இதன் பின்னணி வரலாறு என்ன ? சொல்லி தர ஆளும் இல்லை. எந்த நூலும் இல்லை .

நாமெல்லாம் குதிரைகள் அல்ல . கடிவாளம் கட்டி கொண்டு ,
ஒரே பாதை யை மட்டும் பார்பதற்கு .  இதை எல்லாம் ஒரு நாளும் அரசாங்கம் மாற்றாது. ஏனெனில்  Macaulay ன்   கல்வி கொள்கையை பயன்படுத்தி கொண்டு
 இருக்கிறார்கள் நமது அரசியல் வாதிகள் .

அப்துல் கலாம் கண்ட வல்லரசு கனவு நனவாக  வேண்டுமாயின் அது மாணவர்கள் கையில் மட்டுமே உள்ளது .

கல்வியில் மாற்றம் மட்டுமே அக்கனவை நனவாக்கும்.

அம்மாற்றம் மட்டுமே வல்லரசு நாடு எனும் விதையை விதைக்கும்.


மாற்றம் கொணர்வோம் ! வல்லரசாக மாறுவோம் !

அப்துல் கலாம் அவர்களின் வழி நடப்போம் !

Wednesday, 29 July 2015

அய்யா A .P .J .அப்துல் கலாம் அவர்களே !

அய்யா A .P .J .அப்துல் கலாம் அவர்களே !



இன்று அழுது கொண்டிருக்கும் எவருக்கும் நீர்  உறவில்லை!
ஆனால் எவராலும் அழுகையை நிறுத்த முடியவில்லை !
நீர் திருமணம் செய்திருந்து , பிள்ளை பெற்று இருந்தால் கூட
இத்தனை பிள்ளைகள் உனக்காக அழுதிருக்க மாட்டார்கள் !


சம்பாத்தியம் என்றால் என்ன வென்று இந்த உலதிற்கு காட்டியவர் நீர் !
இத்தனை பேர் விடும் கண்ணீரும் எந்த எதிர்பார்பிற்க்கும் உட்பட்டது இல்லை !
இத்தனை பேர் விடும் கண்ணீரிலும் எந்த பொய்யும் இல்லை !
இத்தனை பேர் விடும் கண்ணீரிலும் எந்த வஞ்சமும் இல்லை !
இது தான் சம்பாத்தியம் !


இதில் அரசியலும் இல்லை !
ஆன்மீகமும் இல்லை !
ஜாதியும் இல்லை !
இனமும் இல்லை !
மொழியும் இல்லை !
நாடுகள் என்ற வேறுபாடு  கூட இல்லை !

அத்தனை பேரையும் ஈன்றெடுத்த பெற்றோர்
வேறுவேறாக இருக்கலாம் !
ஆனால் அத்தனை பேருக்கும் அறிவு வழி
தகப்பன் ஆனீர் !

நீர் பிறந்த மண்ணில் இன்று
ஏதேதோ வேலைகள் நிகழ்கிறது  - உமக்காக !
பல்லாயிரம் மக்கள் காத்திருக்கிறார்கள் - உமக்காக!
அதையும் கடந்து படிக்க வேண்டிய நேரத்தில்
பல்லாயிரம் மாணவர்கள் நீர்
மீண்டு வருவீர் !
மீண்டும் வருவீர் !
என்று கண்ணீர் மல்க ஆவலுடன் நிற்கின்றனர் !

நீர் மீண்டும் இங்கு வரும்போது
உமது கனவை நினைவாக்கி
இந்தியாவை வல்லரசு ஆக்கி இருப்போம் !
என்று ஓர் இளைஞர் கூட்டம்
சூளுரைத்து காத்து இருக்கிறது !

நீர் கண் மூடி கனவிலே இதையெல்லாம்
கண்டு கொண்டு இருக்கிறீர் !
நீர் கண் திறந்து எங்கேனும் பிறந்திருப் பீர் !
என்ற நம்பிக்கையில்
இந்த சூளுரைகள் நாளை - நீர் காண
உன் கண் முன்னே நிறைவேறும் !

பயோ டீசெளில் புகைவண்டிகள் இயங்கும்
தடையில்லா மின்சாரம் எல்லா இடங்களிலும் கிடைக்கும்
தரமான ஆசிரியர்கள்
மாணவர்களின் கேள்விக்கெல்லாம் பதில் தருவர்
உழவும் வளரும்
அணு ஆய்வும் வளரும்
உண்மையும் , நேர்மையும்
தன்னம்பிக்கையும், தன்னடக்கமும்
வளரும் !

இது நீர் விதைத்த விதை !
மரமாகும் !
இதன் குளுமையை காண
இதன் பசுமையை காண
இதன் பழங்கள் ருசிக்க
மாணவர்கள் வேண்டுகோளை ஏற்று
மீண்டு வருவீர் !
மீண்டும் இந்த பூமிக்கு வருவீர் !




வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...