Thursday, 21 January 2016

தமிழ் மதம்

தமிழ் நாட்டில் வாழும் மக்கள் தான் தமிழர்கள் !
இவர்கள் உலகின் பல பகுதிகளிலும் வாழ்கிறார்கள் !
ஆனால் இவர்களுக்கு தான் தமிழன் என்பது தெரியாது !
அப்படிதான் பள்ளிகளில் பாடம் நடத்துகிறார்கள் .

நாமெல்லாம் திராவிடர்கள் என்று சொல்லி தருகிறார்கள் 
ஆனால் திராவிட மொழிகள் என்று கூறப்படும் வேறு எவரும் தன்னை திராவிடன் என்று கூறி கொள்வதில்லை .

இன்னும் சொல்லபோனால் ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ , கேரளாவிலோ இப்படி ஒரு வார்த்தையை கூறி விட்டால் போதும் உடனே அவர்கள் கூறும் மறுபதில் இதுதான் .

" இந்த தமிழர்களுக்கு வேறு வேலையே இல்லை . தமிழ் என்றாலே பிரச்சனைதான் '' 

ஆக தமிழன் திராவிடன் அல்ல .
திராவிடன் எனப்படுபவன் தமிழையும் , ஆரியத்தையும் கலந்து உருவான ஒரு இனம் .

இன்று நேற்று அல்ல . கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ணனின் குரு என்று கூறப்படும் அங்கிரா காலத்தில் இருந்து உருவானதுதான் இந்த கலப்பு  . இதை தடுக்கத்தான் சில பல வேதங்கள் உருவாகின என்ற கருத்தும் உள்ளது . எனில் யார் அந்த கலப்பு இனத்தவர்கள் .

கன்னடம் :

இவர்கள் திராவிடர்கள் .

இம்மொழி தான் தமிழில் இருந்து பிரிந்த பழைய மொழி . 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது .

கன்னடத்திலும் தமிழ் வார்த்தைகள் பல உள்ளன.
இன்னும் ஒரு படி மேலே போ ய் தமிழின் மரபு வார்த்தைகள் இன்றும் பயன்படுத்தபடுகிறன. ஆனால் சமஸ்கிருதம் கலந்து சில இடங்களில் தற்சார்பை இழக்கின்றது .

தெலுங்கு :

இவர்கள் திராவிடர்கள் . தமிழின் நிறைய வார்த்தைகள் இன்னும் தெலுங்கில் உள்ளது . ஆனால் லக்ஷ்மி நாராயண வழிபாடு என்பன போன்ற செய்முறைகள் ஆரியத்தை ஒத்தவை .

வடக்கில் தமிழ் கலந்து பேசப்பட்ட ஆரியம் வடுகதமிழ் ஆகி பின்னர் தெளிவடுகு என்று மாறி இன்று தெலுங்கு  என்றானது .
இம்மொழி உருவாகி 1600 ஆண்டுகள் ஆகின்றன . அதற்க்கு முன்பு இதுவும் தமிழே !

ஆனால் தெலுங்கு மொழி இலக்கணம்  கூறுகிறது அங்கு மூன்று லிங்கங்கள் இருக்கின்றன . இதை திரிலிங்க என்று சமஸ்க்ருதத்தில் சொல்ல முற்ப்பட்டு தெலுங்கு என்று மாறியது என்று .

மலையாளம் :
இம்மொழி உருவாகி 1000 ஆண்டுகள்தான் ஆகிகின்றன .
இது பிராமண தமிழ் . அவவையும் , இளங்கோவடிகளும் பிறந்த காலத்தில் இது தமிழின் மேன்மை பொருந்திய நாடு . ஏன் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் கூட இங்கு தமிழ் தான் இருந்திருக்கிறது . கேரளாவின் வீதிகளின் பெயர்கள் இதை சொல்கின்றன . கி.பி.1000 பிறகு அங்கு பிராமணர்களின் ஆதிக்கம் அதிகரித்தது . அதில் இருந்து விடுபட பலர் மதம் மாறினார் . அதன் விளைவு மலையாளம் என்ற தனி மொழி ஆரிய பழக்கவழக்கங்களோடு நம்மோடு பேசுகிறது .

ஆக இவைதான் திராவிடம் .

தமிழ் திராவிடம் அல்ல .

தமிழனும் இந்து அல்ல .

ஆரியர்களும் , திராவிடர்களும் சேர்ந்ததுதான் இந்து மதம் .

இந்த திராவிடர்கள் எல்லாம் ஆரிய விழாக்களை கொண்டாட , தமிழனோ இயற்கையை வழிபட்டான் .

இதனால் இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் , இஸ்லாமியர்கள் தவிர அனைவரும் இந்துக்கள் என்று 1830 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அறிவித்தது .


ஆனால் பௌத்தர்கள் இதை ஏற்கவில்லை . சமணர்கள் ஏற்கவில்லை .
ஆனால் தமிழன் மட்டும் தன்னையும் இந்து என்று ஒப்புகொண்டான் .
இப்படி கூறுவதை விட அவனுக்கே தெரியாமல் , அவன் பெயரோடு அது இணைக்க பட்டது .

அதனால்தான் இன்று வரை அவனுக்கு இம்மதத்தின் எந்த அடிபடையும் புரியவில்லை . எதற்கும் விளக்கம் தெரியவில்லை . 

தன் அடையாளங்களை தொலைத்தவன் யாரிடமாவது , பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருப்பான். 

அறிவுக்காக , பணத்திற்காக என்று . 

இதன் காரணமாகத்தான் இன்று ஜல்லிக்கட்டு கோவில் சார்ந்த விஷயம் இல்லை என்று கூறும்பொழுது யாரும் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை .

நம்மை நாம் தொலைத்ததால் தான் , ஆரிய பூஜைகள் எப்படி செய்வது என்று அன்றாடம் யாரோ ஒரு சாமியாரிடம் கேட்டு கொண்டு இருக்கிறோம் .

ஊரெல்லாம் சில்லறை தட்டுபாடு .மீதி காசுக்குபதில் எல்லாரும் சக்லட்  கொடுக்கிறான் . என்னவென்று பார்த்தல் நம்ம வீர தமிழச்சிங்கலெல்லாம் மகாலட்சுமி பூஜை செய்வதும் , வரலக்ஷ்மி நோன்பு இருக்கவும் கற்றுகொண்டார்களாம் . மகாலட்சுமி படத்தை வைத்து அல்லது சிலையை வைத்து எல்லா சில்லறை காசையும் போட்டு பூஜை செய்கிறார்கள் .
இவர்கள் கணவர்கள் எல்லாம் வேலை வெட்டி பார்க்காமலேயே பணக்காரர்கள் ஆவதற்கு மகாலக்ஷ்மியிடம்  வரம் கேட்கிறார்கள் .
இதிலே பெருமை வேறு .

ரொம்ப கேவலமாக இருக்கிறது . உழைப்பிற்கும் , இயற்கைக்கும், நம்மை சுற்றியுள்ள விலங்குகளையும் ,மதித்து அவற்றுடன் இணைந்து வாழ்வதுதான் தமிழ் மதம் .

அதை தமிழன் உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில் வரும்.

எனில் தமிழுக்கு கடவுள் யார் ?
இம்மதத்தின் அடிப்படைதான் என்ன ?
எப்படி இத்தனை குழப்பத்தை சுமக்கிறது ?
விடை தேட வேண்டியது தமிழர்களின் பொறுப்பு .


காமெடியன்கள் தான் மக்களின் வில்லன்கள்



காமெடியன்கள் தான் மக்களின் வில்லன்கள் . இவர்கள் புகழ்ந்து புகழ்ந்து, ஒரு நடிகனை , மக்களுக்கு தலைவன் ஆக்குகிறார்கள் .

தன் எல்லையை மிஞ்சி புகழ்ந்ததில் மனோரமாவுக்கும் , நாகேஷுக்கும் தனி இடம் உண்டு . இது எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி காலத்தில் !







ஜனகராஜ் மற்றும் ஒய் .ஜி .மகேந்திரன் இருவரும் ரஜினிக்கும்,கமலுக்கும் ஏகப்பட்ட விளம்பரம் கொடுத்தவர்கள் .

இதை தொடர்ந்து பல நகைசுவை நடிகர்கள் இந்த சேவையை செய்திருக்கிறார்கள் .

இன்று இருக்கும் ஒரு சிலர் அதை செய்யமாட்டேன் என மறுப்பு தெரிவித்து அதன் விளைவாக வடிவேலும் விஜய்காந்தும் சண்டையிட்டு கொண்டது அனைவரும் அறிந்ததே !

இந்த நகைசுவை நடிகர்களை விட மோசமானவர்கள் பாடல் எழுதும் கவிங்கர்கள் . 

வாலி முதல் அனைவரும் நடிகர்களை உயர்த்தி விட்டவர்கள் .




நான் ஆணையிட்டால் பாடல் கொடுத்த பின்விளைவும் நமக்கு தெரியும் .
நான் கைவைச்ச அது நடக்கும் இது நடக்கும் என இன்று இருக்கும் இளைய நடிகர்கள் எல்லாரும் ஒரு பில்ட் அப்பு கொடுப்பதற்கு காரணமும் இந்த பாடல் எழுதுபவர்கள்தான் .

இன்றும் கன்னடம் , தெலுங்கு ,மலையாளம் , போன்ற மொழிகளில் ஹீரோ பாடும் பாடல் தற்பெருமை பாடல் அல்ல . ஒன்று மொழி பெருமை பேசும் பாடலாக இருக்கும் . அல்லது ஊர் பெருமையாகத்தான் இருக்கும் .
இதில் தமிழ் மக்கள் தான் மிகவும் மோசம் .

தற்பெருமை பேசக்கூடாது என்று சொல்லி தரும் ஒரே மொழி .

ஆனால் வருபர்கள்,போவோர்கள் எல்லாம் தற்பெருமையுடந்தான் பேசவே ஆரம்பிக்கிறார்கள் . இதையும் காதில் போட்டு கொண்டு , மூளையில் சுமந்து கொண்டு அரசியலிலும் , அவர்களுக்கு ஒட்டு போடும் ஒரே ஏமாளி கூட்டம் இந்த தமிழுக்கு சொந்தக்காரர்கள் என்று அலட்டிகொள்ளும்  தமிழர்கள்தான் .!

மேற்படி பத்திரிகைகள் கொடுக்கும் அக்கபோரு பெரிய அக்கபோரு !

2008 மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்ற போது இந்த
பட ம் எடுக்க பட்டுள்ளது .


கோவிலுக்குள் செருப்பு இல்லாமல் போவது அத்தனை பெரிய விஷயமா?
இதை பெரிய விஷயமென செருப்பில்லாமல் நடக்கும் ஐஸ்வர்யா ராய் என விளம்பரம் கொடுக்கிறது ஊடகம்.

டிசம்பர் 2015 சென்னை வெள்ளத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செருப்பில்லாமல் நடந்து சென்று விட்டாராம் ஹன்சிகா .
என்ன கொடுமை இது !இதெல்லாம் ஒரு செய்தியா ?
ஆயிரகணக்கான மக்கள் இறந்து போ ய் இருக்க செருப்பில்லாமல் நடந்து போனதை ஒரு செய்தி என்று வெளியிடுவதில் எந்த பத்திரிக்கையும் வெட்க படவே இல்லை .


நம் கண்ணையும் , கருத்தையும் மறைத்து கலாசாரத்தை அழிக்கும் சினிமா தேவையா ?


Thursday, 3 December 2015

கனல் கொண்ட சென்னைவாசி

தன்னலமற்ற சென்னைவாசி

ஊழிகால சென்னைவாசி

இதுவல்ல இப்போது உன்பெயர்

கனல்  கொண்ட சென்னைவாசியாக நீ பேர் எடுத்திருந்தால் அதுதான் நீ சென்னைக்கு செய்யும் கடமை

சென்னை தானே உன்னை வாழவைத்தது
சென்னைதானே உன்னை பெருமை அடித்து கொள்ள செய்ததது
சென்னை தானே உனக்கு ஷாப்பிங் மாலையெல்லாம் அறிமுகம்  செய்ததது
சென்னைதானே உனக்கு பெப்சிக்கும், கோலாவுக்கும் பழக்கபடுத்தியது சென்னை தானே உனக்கு KFC யும், MCDONALD யும் சொல்லி தந்தது
                                     இதைத்தானே பெருமை என்று ஊருக்கெல்லாம் சொல்லி                                            கொடுத்தாய்


ஆனால் நீ செய்தது என்ன
குப்பை அடித்தாய் - இறக்கபடுகிறேன் பேர்வழி என்று குப்பை எடுப்பவர்களையும் வேலை செய்ய விடாமல் தடுத்தாய்

எவன் தப்பு செய்தாலும் சென்னை என்றால் இப்படிதான் என்று
சென்னைக்கு புதிய விளக்கம் கொடுத்தாய்

நடந்தவை கடந்து போகட்டும்.

இனி நீ உனக்கு வாழ்வழித்த சென்னையை மீட்டேக்க முயற்சிக்கலாமே !

ஏரியை மூடி உனக்கு ஒருவன் விலைக்கு விற்றான்

அவனை தேடி துவைத்து எடு.
      அப்போதுதான் மீண்டும் எவரிடமும் ஏரிக்கு விலை பேச மாட்டான்

கட்டிடம் கட்டி கொடுத்த engineer க்கு பாடம் புகட்டு
       அப்போதுதான் இது போன்ற இடங்களில் வீடு கட்டுவதை தவிர்ப்பான்

பில்டர் என்ற பெயரில் ரௌடிசம் செய்த ரௌடிகளைஎல்லாம் தேடு

குப்பை அள்ளாத மாநகராட்சியை அடிகடி நீ சென்று தூர்வாரு

எல்லாவற்றையும் அராசங்கமே செய்யாது நாமே செய்து கொள்ள வேண்டியதுதான் என்று யாரோ ஒருவர் இருவர் செய்யும் வேலைகளால் தான் மாநகராட்சி மெத்தனமாக யாரோ செய்து கொள்ளட்டும் என்று எல்லா இடங்களையும் குப்பையாக்கி அதிலே உன்னை மிதக்க வைத்துள்ளது

யார் எந்த வேலை செய்ய வேண்டுமோ அவரிடமிருந்து அந்த வேலையை வாங்க வேண்டும் . உனக்கு எந்த நிறுவனமும் சும்மா சம்பளம் கொடுக்க வில்லை

இக்கட்டான சூழ்நிலையிலும் அதிக விலைக்கு விற்கும் கடை வியாபாரிகளை குப்பைகளோடு குப்பையாக்கு

இப்போதும் வரி கேட்டு நிற்கும் சுங்க சாவடிகளை கடலோடு இணைத்து விடு

அதிக லாபம் பார்க்க போராடும் விடுதிகளையும் , பேருந்துகளையும் எறிகளுக்குள் எறிந்துவிடு

இதையெல்லாம் விடுத்து வடஇந்திய சானல்கள் நம்மை காட்டவில்லை என்று வருந்துவது
சினிமா நடிகர்களிடம் பிச்சை எடுப்பது
ஈழத்தமிழர்கள் நமக்கு ஒரூ பைசா கூட அனுப்பவில்லை என்று கூறுவது

இதெல்லாம் உன்னை நீயே ஏமாற்றிகொள்ளும் வழிவகை

இதுவல்ல உன் பிரச்சன்னைக்கு முடிவு

நீ முடிவெடு . சென்னைக்கு செய்யவேண்டிய கடமையை தீர்மானம் செய்.!

Wednesday, 2 December 2015

நில வேம்பு எனும் சிரியா நங்கை








நிலவேம்பு குறித்து வாஸ்து கூறும் படம் இது. மிக கொடுமை அல்லவா இது ?


எந்த ஒரு தாவரமும் வீட்டை அடகு வைக்க சொல்லாது.

கணவனை இறந்து போக சொல்லாது .

இது அடிப்படையில் நம்மை பயமுறுத்துவதர்க்காக கூறபட்டிருக்கலாம் .

ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள் .

இது உண்மை அல்ல .

ஆமை நீரோட்டத்தை கண்டறியும் சக்தி கொண்டது . அது எந்த வழியாக போகிறதோ அந்த பாதையில் நம் முன்னோர்கள் வீடு கட்ட மாட்டார்கள்.

அப்படி கண்டுபிடித்து கட்டபட்டதால்தான் இன்றளவும் திருசெந்தூர் , ராமேஸ்வரம், ராமநாதபுரம் திருக்கோவில், தஞ்சை பெரிய கோவில், மதுரை கோவில்களெல்லாம் தாங்கி கொண்டு நிற்கின்றன.

இதனை அறிந்த ஒரு சில கூட்டம் ,நமக்கு ஆசிரியர் வேலை பார்கிறேன் என்று கூறி , மன்னர்களுக்கும் கூஜா தூக்கிய அந்த கூட்டம் சொன்னதுதான் ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது. அன்று முதல் ஆமை வளர்ப்பை விட்டுவிட்டோம். அதன் விளைவு நீரோட்டம் தெரியாமல் வீடுகள் கட்டி கட்டி , உதாரனமாய் இன்று மாறியுள்ளது சென்னை.

எதை எல்லாம் நமக்கு நம்பிக்கை ஆக்கி விட்டார்களோ அது இன்று மூட நம்பிக்கை வரிசையில் நிற்கிறது.

இதன் பின்னணியில் நம் கணிதமும், அறிவியல் அறிவும் மறைந்து நிற்கிறது.

இதே போல் உருவாக்கப்பட்டதுதான் வீடின் முன்னால் முள் செடி வளர்க்க கூடாது என்பது.

ஆமாங்க நம் முன்னோர்கள் எப்போதும் வீட்டின் முன்னால் கற்றாளை எனப்படும் முள்செடி வளர்த்தனர்.
அது மிகுந்த மருத்துவ குணம் கொண்டது.

அந்த கூட்டத்தில் சிலர் மருத்துவர்களாக ஆனார்கள் . அதன் விளைவு முல்செடிகள் வீட்டின் முன்னாள் இருந்து நீக்கப்பட்டது.

ஆனால் எல்லா தோல் வியாதி மருத்துவர்களும் இதையே தான் aloevera ஜெல் என்ற பெயரில் எழுதி கொடுக்கிறார்கள் . எல்லா அழகு சாதன கிரிம்களும் இதைதான் சுமந்து வருகிறது . நமக்கு கட்டளை இட்ட அந்த கூட்டத்தின் பெண்கள் மட்டும் இந்த கற்றாலையை எப்போதும் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றனர்,

அந்த வரிசையில் சேர்த்ததுதான் இந்த நிலவேம்புவை வீட்டில் வளர்க்க கூடாது என்பது. நீங்களே யோசித்து பாருங்கள் ,இதனை வளர்த்தால் மண் கெட்டுபோகும் என்றால் கூட பரவாயில்லை . கணவன் இறந்து போவான் என்பதும் மனைவி இறந்துபோவால் என்பதும்  எத்தனை பெரிய பயமுறுத்தல் . இன்னுமா நாம் நம்ப வேண்டும் ? முடியல! இன்னும் எத்தனை தவறுகள் நம்மிடத்தில் விதைக்கப்பட்டுள்ளனவோ ?


Sunday, 29 November 2015

miss world - விளம்பரங்களும் !









1994 ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனார். அந்த ஆண்டு முதல் அதிகபடியாக அழகு சாதன பொருட்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது .








இந்த அம்மா பாட்டுக்கு இருந்தாங்க!. இவங்கள இந்த நாட்டில் , இந்த உலகத்தில், விளம்பர உலகத்தில் மிகவும் பிரபல மாக்கி , சாதாரண விலையில் இருந்த உடைகள் , நகைகள், அழகு சாதன பொருட்கள் எல்லாவற்றையும் விலை வுயர்ந்த பொருளாக மாற்றிய பெருமை தமிழர்களையே சாரும். ஆமாங்க இவங்க உலக அழகி ஆன பிறகு அவங்கள அழைச்சிட்டு வந்து இருவர் என்ற ஒரு படத்தில்  அறிமுகபடுத்தி, பற்றாக்குறைக்கு ஜீன்ஸ் படம் மூலம் அவங்கள பிரபலமாக்கி தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டவர்கள் வேற யாரும் கிடையாது. இந்த மாதிரி விஷயத்தில் வேறு யாரும் தமிழனை மிஞ்ச இன்னும் பிறக்க வில்லை . இதில பெருமை வேறு .


மேடத்தோட மொத்த வருமானம் $35 மில்லியன் இந்த ஆண்டு.

ஐஸ்வர்யா ராய்க்கு கல்யாண் jewellers  மூலம் ஓராண்டு வருமானம் $1,610,000  . இது 2011 ல் போடப்பட்ட ஒப்பந்தம்.



2013 ல் இது $ 3 மில்லியனாக மாறியுள்ளது .

இப்போ கல்யாண் jewellers யாருக்கிட்டே இருந்து இந்த காச வாங்குது.

பாவம் யாரோ அந்த இளித்த வார்கள் ! தமிழன்தான் !




லோரியால் பாரிஸ் வட இந்திய வில் மிக பிரபலம் .
தெனிந்திய வில் தான் பாயர்&லோவேலி ( Fair & Lovely ) பிரபலம் .
இந்த L O real அழகு சாதன பொருட்களின் ambassador இந்த அம்மணிதான்.
அபுடின்ன லாபத்தில் பங்கு.
இப்படி தாங்க யாரோ ஒருவருடைய சொத்தை அதிகரிப்பதற்க்காக நாமெல்லாம் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டி உள்ளது.

இங்கே குறிப்பிட்டுள்ளது ஒருவரை பற்றித்தான்.
ஆனால் எல்லா அழகிகளும்,ஏன் எல்லா நடிகர் , நடிகைகளும் இப்படித்தான்.

யார் மீதும் இவர்களுக்கு அக்கறை கிடையாது.
எந்த விலை வாசி உயர்வு குறித்தும் கவலை கிடையாது.
எந்த பொருளின் தரம் குறித்தும் இவர்களுக்கு தெரியாது.

இவர்களுக்கு தெரிந்தெல்லாம் பணம்,பணம் பணம் .

இவர்களை வைத்து பணம் பண்ண நிறுவங்களுக்கும் தெரியும்.

பணம் சேர்க்க தன அழகை காட்டும் இவர்களால் நமக்கு பெருமையா ?

இவர்கள் நமக்கு தேவையா ?



இப்போதெல்லாம் ஆண்அழகன் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுகிறது .ஏன் தெரியுமா ?

ஆண்கள்தான் தற்போது அதிகமாக fairness cream பயன்படுத்துகிறார்கள் என்று பாயர் &லோவேலி யின் கணக்கெடுப்பு கூறுகிறது .


Saturday, 28 November 2015

miss world - இந்தியாவும்



இவங்க தாங்க முதல் மிஸ் வேர்ல்ட் .
இவரோட பேரு கிகி ஹகன்ச்சொன் . இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் .
இது 1951 ல் நடந்தது. அப்போ இதுக்கு பேரு மிஸ் வேர்ல்ட் போட்டி  கிடையாது.  இந்த போட்டியின் பெயர் பிகினி போட்டி . இந்த போட்டியை  ஆரம்பித்தவர்
எரிக் மோர்லி
( Eric Morley )

Eric Morley in 1967

இதோ பெண்கள் சூழ்ந்திருக்க அமர்ந்திருகிறாரே அவர்தான் எரிக் மோர்லி
 1952 ல் பிகினி போட்டிக்கு பதில் மிஸ் வேர்ல்ட் என்று வணிக உரிமை ( Trade  Mark ) பெற்றார் .

அதன் பிறகு 1951 முதல் 1959 வரை சாதரணமாக நடந்து வந்த மிஸ் வேர்ல்ட் 1959 முதல் BBC  தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது . 1960 முதல் மக்கள் அதிகம்  விரும்பி பார்த்த நிகழ்ச்சியும் அதுதான்.

1951 முதல் 2000 வரை லண்டன் மட்டுமே நடத்திவந்தது.
இதிலிருந்து கிடைக்கும் வருமானம் $200 மில்லியன் குழந்தைகள் நலனுக்காக செலவிடப்படுகிறது . ஆனால் இது ஒரு தனியார் நிறுவனம் ஆகையால் இதன் கணக்கு வழக்குகள் வெளியிடப்படுவதில்லை . இந்த வருமானம் யார்யாருக்கு எங்கு செலவிடப்படுகிறது என்பது வெளியில் தெரியாது.

2000 ல் மோர்லி தனது 82 வது வயதில் இறந்து போனார் . அதன் பிறகு அவரது மனைவி ஜூலியா நடத்தி வந்தார்.

இன்றைய நிலையில் 100 நாடுகள் இந்நிறுவனத்திடமிருந்து franchise பெற்று இப்போட்டியை நடத்தி வருகின்றன. மிஸ் உனிவெர்ஸ் , மிஸ் எர்த், மிஸ் டாலேன்ட் , மிஸ் பீச் பியுட்டி , மிஸ் ஸ்போர்ட்ஸ் , வேர்ல்ட் டாப் மாடல் எல்லாம் இந்நிறுவனத்திடமிருந்து francise யாகவும், நேரடி போட்டியாகவும் இவுலகிற்க்கு வந்தவை.


இந்திய உலக அழகிகள் 

1966 ல் ரெய்ட பாரிய ( Reita Fariya ) என்பவர் இந்திய வின் சார்பாக போட்டியிட்டு வெற்றியும் பெற்ற முதல் ஆசியா பெண். இந்தியாவை  சேர்ந்த உலக அழகி .






இவர் மருத்துவம் படித்தவர். இவர் உலக அழகி ஆன பின்னர் , இவர் எந்த ஒரு விளம்பரத்திற்க்கும் ஒப்புக்கொள்ளவில்லை. மேற்படி சினிமாவில் நடிக்கவும் விரும்பவில்லை. மருத்துவ துறையிலேயே தொடர்ந்து பணியாற்றினார்.



பிறகு 1994 ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனார் .
1997 ம்  டயானா ஹைடன் உலக அழகி ஆனார்.
யுக்தா முகி 1999 லும் , பிரியங்கா சோப்ர 2000 லும் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.





Add caption



இது தாங்க உலக  அழகிக்கான வரலாறு. நாம் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு.

ஆமா 1966 ல் ரெய்ட பட்டம் வென்ற போதும் அவர் எந்த விளம்பரத்திலும் வரவில்லை.

1991 ம் ஆண்டு திரு . பி. வி. நரசிம்ம ராவ் பிரதமாராக இருந்தபோது , நிதி அமைச்சராக இருந்த
திரு. மன்மோகன் சிங்க் அவர்கள் L .P .G எனும் ஒப்பந்தத்தில் கையெலுத்திட்டார் . அதன் பிறகு இந்திய வில் தனது பொருள்களை விற்பனை செய்ய தயாராய் இருந்த நிறுவனங்கள் உலக அழகிகளுடன் விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன் விளைவு தான் இந்திய பெண்கள் தொடர்ச்சியாக அழகி பட்டம் வென்றனர்.

பல நிறுவனங்கள் தங்கள் பொருள்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தனர்.
ஆனால் 1994 முதல் 2000 வரை எந்த கஸ்டமர்ஸ் இருந்தார்களோ அந்த எண்ணிகையில் சிறிதும் மாற்ற முடியவில்லை 2000 பிறகு.

இன்று வரை எல். ஐ . சி இன் வாடிக்கையாளர்களே 25 கோடியை தாண்ட வில்லை.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 127 கோடி .

அழகு சாதனை பொருள்களின் வாடிக்கையாளர்கள் அதிக படியாக 3 கோடியை தாண்டமுடியவில்லை .

இந்த 3 கோடி பேரிலும் 1 கோடி மக்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதி 2 கோடி வாடிக்கையாளர்கள் இந்திய  முழுதும் உள்ளனர் .

அதன் விளைவு 2000 த்திற்கு பிறகு அழகிகள் யாரும் உருவாகவில்லை. இது நிருவனகளை பொருத்தவரை.!

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அழகி போட்டியில் தேர்ந்தெடுக்க பட்ட பெண்களை விடவும் அதிக அழகிகள் உலவி கொண்டே இருக்கின்றனர்.

இங்கு எல்லோரும் அழகிகள்தான் !



Thursday, 26 November 2015

நடிகனும், தலைவனும் !



சினிமா நமக்கு சொல்லி தரும் கற்பிதங்கள் :

வியாபாரத்தில் ஈடுபடுபவன் பாவ, புண்ணியம் பார்க்க கூடாது. லாப, நஷ்டம் மட்டுமே பார்க்க வேண்டும் .


கம்பும் , கேழ்வரகும் உண்பவன் ஏழை  அரிசி சாதம் உண்பவன் பணக்காரன் . இந்த காட்சி பழைய திரைப்படங்கள் எல்லா வற்றிலும் வருகிறது. அதன் விளைவுதான் இன்று நம் நாட்டின் பாரம்பரிய தானியங்களை  இழந்தோம் .

படித்தவன் தவறுகளை தவறு இல்லாமல் செய்யலாம் .

சிகரெட் பிடிக்கலாம் . அதையும் ஸ்டைலாக செய்ய கற்று கொடுத்து இன்று நாடு முழுக்க கான்செர் நோயாளிககளை உருவாக்கி விட்ட பெருமை சினிமாவையே சேரும்.



ஆப்பிள் உண்பவன் உயர்தவன் . இதை ஒரு சிறுவனோ , சிறுமியோ பார்த்தவுடன்  background மியூசிக் மிக சோகமாக இழைந்தோடும். இதே சூழ்நிலையில் இருப்பவர்கள் தன்னை தானே , தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுத்தி கொள்வர் .

ஆப்பிள் அப்படி ஒன்றும் உயர்வான பழம் இல்லை.


கதாநாயகன்  திருடலாம், ஒரு பெண்ணை வம்பிலுக்கலாம் , அதை நாம் பார்த்து ரசித்து , சிரித்து கொண்டே  நகைசுவையாக எடுத்து கொள்ள வேண்டும் .




வில்லன் என்று காட்டப்படுபவர்   தவறு  செய்தவுடன்  பொங்கி எழுந்து அவரை அடிக்கிறார் ஹீரோ .

முதல் காட்சி வரை தவறு செய்த ஹீரோ , அடுத்தவனை தட்டி கேட்க்கும் அளவுக்கு யோக்கியனா ?


நானும் பாக்குறேன் எல்லா படத்துலேயும் இந்த ஹீரோயினி எல்லாம் மேல துப்பட்டான்னு ஒன்னு போடாமத்தான் வர்றாங்க. ஒரு சீன் ல துப்பட்ட போடுறதும் , அதை வில்லன் இழுக்குறதும் ,அன்னைக்குத்தான் அந்த பொண்ணுக்கு கற்பு பறிபோன மாதிரி ஹீரோ காப்பாதுறதும் ,முடியல போங்க.





அப்புறம் பாவம் இந்த காமெடியன்கள் . இவர்களுக்கு ஒரே ஒரு வேலைதான் .படம் முழுக்க ஹீரோ பற்றி புகழ்ந்து பேச வேண்டும் . மிக கொடுமை இது . நடைமுறை வாழ்கையில் கொஞ்சம் கூட பொருந்தாத இந்த புகழ்ச்சியை எப்படித்தான் செய்கிறார்களோ .? ஆனால் இந்த காமெடியன்கள் தான் மக்களின் வில்லன்கள் . இவர்கள் புகழ்ந்து புகழ்ந்து, ஒரு நடிகனை , மக்களுக்கு தலைவன் ஆக்குகிறார்கள் . இது இவர்கள் வேலையா ?


Wednesday, 25 November 2015

விஜயும் , அஜித்தும் !



புலி படத்தில் விஜய் வேதாள இனத்தை சேர்ந்தவர் .

அடுத்த அஜித்தின் பட பெயர் வேதாளம் 


வேதாள படத்தின் டயலாக் தெறிக்க விடலாமா ?

அடுத்த விஜய் படத்தின் பெயர்   தெறி .

இதுல வேதாள கூட்டமா மாறவேண்டியது மக்கள்

தெறிக்க வேண்டியது நடிகர்கள் .

போதுமட சாமி உங்க நூலு அறுந்து போச்சி .





நண்பர்களாகவே காட்டி கொள்ளும் விஜய்க்கும் , அஜித்திற்கும் ,
 வெளியில் ரசிகர்கள் தங்கள் பெயர்களால் சண்டை இட்டு கொள்வது தெரியாதா என்ன ?

ஆனால் இருவருமே பலே கில்லாடிகள் !

ஊரு இரண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே !

Friday, 20 November 2015

சென்னையில் வெள்ளபெருக்கு !

கடந்த 8 ம் தேதி தொடங்கி ( 20.11.2015 )
இப்போது தான் சற்று ஓய்வெடுக்கிறது மழை !

அதற்குள்ளாக லக்ஷத்தீவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் . அடுத்த 20 நாட்களுக்கு மழை பெய்யும் என்று கூறுகிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.

ஊரை சுற்றிலும் நீர் !
ஆனால்
 குடிக்க நீர் இல்லை !
குளிக்க நீர் இல்லை !

குப்பைகாளால் நிறைந்திருக்கிறது !
குமட்டும் வாசனைகலோடு !
குடிசளும் மிதக்கின்றன !
கும்மாளம் மிட்ட கார்களும் மிதக்கின்றன !

மனிதனுக்குத்தான் வேறுபாடுகள் !
மனிதனுக்குள் வேறுபாடுகள் பார்க்க  தெரியாது எனக்கு !
என்று சொல்லாமல் சொல்லும் வெள்ளம் !

இத்தனைக்கும் இடையில் நடிகர் சங்கம் ஒரு நாடகம் போடுகிறது.

பொம்மை தலைவர் நாசர் தலைமையில் உண்மை தலைவர் விஷால் கூறுகிறார் நடிகர் சங்கம் தமிழ்நாட்டின் பிரச்சனைகளில் ஈடுபடாது என்று !
பிறகு எந்த நாட்டின் பிரச்சனைகளில் ஈடுபடும் .

ஓ ! அவர்களுக்கெல்லாம் வேறு வேறு நாடுகள் உள்ளன என்று அவர்களும் சொல்லாமல் சொல்லுகின்றனர்.

அதற்க்கு பதிலும் தருகிறார் விஷால் , எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை பார்த்து கொள்ள அரசு இருக்கிறது என்று .

உண்மை என்று ஒரு கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது .

ஒப்பு கொள்கிறோம். இது உங்கள் வேலை இல்லை தான் .

ஆனால் தமிழ்நாட்டின் அரசு பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் ஒரு நாள் ஊதியத்தை வெள்ள நிவாரணத்திற்காக கொடுத்தனர் .
அவர்களுக்கு தெரியாதா இது அரசின் வேலை என்று.

சி.ஐ.டி .யு ஊழி யர்கலெல்லாம் ஒரு நாள் ஊதியத்தை நிவாரணமாக கொடுத்தனர் .
அவர்களுக்கு தெரியாத இது அரசின் வேலை என்று 

ஆட்டோ காரர்களும், இன்னும் எத்தனை எத்தனையோ தமிழ் நெஞ்சங்கள் உழைத்து கொண்டு இருக்கின்றனர் .
அவர்கள் யாருக்கும் தெரியாது இது அரசின் வேலை என்று.

எங்கே அந்த த்ரிஷா , ஒ ! நாய்களுக்காகத்தான் அவர் பேசுவாரோ ?

எங்கே அந்த குஷ்பூ . ஒ !அடுத்த முதல்வர் என்று கனவில் இருக்கிறாரா ?

கோவை சரளாவும், கருணாசும் தமிழ் நாட்டவர்கள் தானே!
ஒ ! விஷால் பின்னால் ஒளிந்து இருக்கிறார்களா?

எங்கே நம்ம சூரியாவும் , கார்த்திக்கும் , அவர்கள் ஆந்திராவிற்கு மட்டும்தான் உதவி செய்வார்களா ?
அங்கெல்லாம் அரசு எந்த வேலையும் பார்ப்பது இல்லையோ ?

உங்களை எல்லாம் எவர்கேட்டார் உதவி . 

 ஒவ்வொரு படம் வெளி வரும் போதும் , ஆண்டவன் சொன்னால் நான் முதல்வராவேன் என்று கூறிக்கொண்டு இருப்பது உங்கள் வேலையா ?

புலி படத்தின் கதாநாயகனின் கடைசி வசனம் இது :
நான் உங்களுக்காக தலைவன் ஆவேன் ! என்று . இது உங்கள் வேலையா ?

வரலாறுகளை புரட்டினால்  நடிகர் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார் 
நடிகை ஜெயலலிதா முதல்வர் ஆனார் 
திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆனார் 

இன்னும் இப்போட்டியில் விஜயகாந்த் நிற்கிறார் .
ஏன் நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள்  கட்சி தொடங்கினார்.
நடிகர் கார்த்திக் அகில இந்திய நாடாளும் கட்சி தலைவரானார் 
நடிகர் சீமான் நாம் தமிழர் கட்சி மூலம் கத்தி கதறுகிறார் .
நடிகர் டி ..ராஜேந்தர் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் கட்சி தொடங்கினார் 
இன்னுமும் நடிகர் விஜய் நான் அம்பானி ஆவேன் நான் அம்பானி ஆவேன் என்று கூறி கொண்டே இருக்கிறார் .
நடிகர் விஷாலும், நடிகர் சிம்பும் கூட இந்த ஓட்டபந்தயத்தில் ஓடி வரலாம் .
தவறில்லை . 

இதெல்லாம் உங்கள் வேலையா ?
எதை பயன்படுத்தி கட்சி தொடங்குகிறீர்கள் .
நீங்களெல்லாம் மக்களுக்கு எப்படி அறிமுகமாகிறீர்கள் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் .

எதோ நாட்டிற்கு சேவை செய்து மக்களிடம் நற்பெயர் எடுக்க வில்லை .
ஸ்டைல் செய்யவது எப்படி என்று செய்து காட்டுவது சேவையா ?
திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக வாழ்வது எப்படி என்று வாழ்ந்து காட்டுவது சேவையா ?
உங்கள் திரைப்படங்களில் எல்லாம் எதோ நடப்பதை எல்லாம் அப்படியே செய்து காட்டுகிறோம் என்ற பெயரில் ஊரில் ஒரு மூலையில் உள்ள குப்பையை அள்ளி ஊரெல்லாம் கொட்டுவது போல் எங்கோ நடந்த ஒரு கொலையை கூட எப்படி செய்வது என்று விலாவரியாக காட்டுவது சேவையா?
போலியான வாழ்கையை கற்று கொடுத்தது சேவையா?
பெண்களுக்கு தவறான வாழ்கை முறைகளை கற்று கொடுக்கிக்ரீர்களே !அது சேவையா? 

உங்களை சொல்லி குற்றமில்லை . உங்கள் மூஞ்சி எல்லாம் காட்டி காட்டி தமிழ் மக்களை ஏமாற்றியது ஊடகங்கள்.

ஊடகமெல்லாம் நம்மை காட்டுகிறதே என்று ஏரியை எல்லாம் மூடி எவனோ ஒருவன் போட்ட மனைகெல்லாம் விளம்பரம் செய்து காசு பார்த்தீர்களே அதுவும் செவைதானோ ?

இத்தனை மழை வெள்ளத்திலும் வடிவுக்கரசி கொடுக்கும் மனை விளம்பரமும், நிழல்கள் ரவியின் விளம்பரமும் விடாமல் வந்து மனிமங்கலத்தை வாங்கிகங்க என்று கூறும்போது தான் தெரிகிறது . மழையிலும் , புயலிலும் உங்கள் சேவை தொடர்கிறது என்று.!

நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள் !

எல்லா நடிகர்களும்தான் மக்களை பார்த்து எங்களை வாழவைக்கும் தெய்வங்களே ! என்று பேசுகிறீர்கள் .

உங்களுக்கு மக்கள்தான் தெய்வம் 
மக்களுக்கு ஒருபோதும் நீங்கள் தெய்வமாக முடியாது !

கேவலம்!
 நாவடக்கம் இல்லாமல் போனதால் சரத்குமார் நடிகர்சங்க தேர்தலில் தோற்று போனார் .
நாவடக்கம் இல்லாமல் , எதோ தமிழ்நாடு உங்கள் காலடியில் இருப்பது போல் , உங்களை கெஞ்சி கொண்டு இருப்பது போல் எண்ணி நீங்கள் கூறிய வார்த்தைகள் உங்கள் சினிமா துறையையே அழிக்கும் .

1757 ம் ஆண்டு முதன்முதலில் வெள்ளையனிடம் அடிமை ஆகியது .
1857 ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திர போர் ஏற்பட்டது .
இது தான் இந்திய சுதந்திரத்தின் அடிப்படை .

1916 ம் ஆண்டு கீசகவதம் என்ற திரைபடத்தின் மூலம் நடிகர்கள் ஆள தொடங்கினர் .
2016 ம் ஆண்டு முதல் இந்நிலை முடிவுக்கு வர போகிறது .
ஒரு வகையில் விஷாலுக்கு நன்றி . சினிமா உலகை எதிர்க்க அஸ்திவாரம் போட்டதற்கு !


ஊடகங்களே .! இது உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கிறோம் .
எவனிடமாவது தமிழகதிற்கு அதை செய்வீர்களா இதை செய்வீர்களா என்று பிச்சை கேட்டு உங்கள் பக்கத்தையும் , வயிற்றையும் நிரப்ப மக்களை அவமான படுத்தாதீர் .!

இங்கு எவனும் பிச்சைகாரன் அல்ல .
வந்தாரை வாழ வைத்த தமிழகத்திற்கு வாழவும் தெரியும் .

Monday, 16 November 2015

சென்னையில் கடும்மழை 2015 நவம்பர் 16

                           சென்னையை அடித்து நொறுக்கும் கனமழை -

                            மழை நீரில் புதைந்தது சிங்கார சென்னை

இது தாங்க பத்திரிகைகளின் தலையங்கம் . எப்புடி நல்லா இருக்குதுள்ள !

                            ஐப்பசியில் அடைமழை 

                            கார்த்திகையில் கனமழை 

 
நம் பாட்டனும் , பூட்டனும் நமக்கு விட்டு போன அறிவியல் .
 
கற்க மறந்தது நாம்.
 
கற்பிக்க கூடாது என மறைத்தது நமது அரசு .
 
பாவம் என்ன செய்வர் நம் தலைவர்கள் 
 
அவர்களுக்கு தெரியாது இப்படி ஒரு அறிவியலை தமிழன் வளர்த்து வந்தானென்று .
 
ஏனெனில் அவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை. அவர்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை எப்படி அவர்கள் கல்விசாலையில் கொடுக்க முயல்வர்.
 
இது அவர்கள் தவறு இல்லை. தமிழனின் தவறு.
 
ஆனால் இன்றும் தமிழன் வள்ளுவரை மட்டும் மறப்பதே இல்லை.
 
 

ஆம்.வெள்ளக்காடாய் உள்ளது சென்னை . " இடுக்கண் வருங்கால் நகுக '' என்னும் திருக்குறளுக்கு  ஏற்ப அனைத்தையும் இன்பமாய் பார்கிறான். உடலில் ஊறிய தமிழ் ரத்தம் அனைத்தையும் நகைசுவை போல் பார்க்க சொல்கிறது.

 
 
 
 
இது போன்று படங்கள் வெளி இட்டு சந்தோஷ படுகிறார்கள்.
 
 
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் படகு போக்குவரத்து .
அங்கும் நகைசுவை வசனங்கள் 
 

                                ஓடமும் ஒருநாள் சாலையில் செல்லும்.

                                 சாலையில், நிறைந்த நீரில் பேருந்தும் படகு போல் செல்லும்.

 

 
பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை . ஒரு சில அலுவலகங்களும் விடுமுறையில் உள்ளன.
 
ஆனால் இந்த நிலையிலும் பணியாற்றி கொண்டிருக்கும் காவல்துறை, போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவரும் பாராட்டுதலுக்கும், அனைவரின் வேண்டுதல்களுக்கும் உட்பட்டு உள்ளனர். 
 
  
இதோ இந்த ஆட்டோகாரர்களும் பாராட்டுபெரும் இடத்திற்கு வந்து விடுகிறனர் .அவசர தேவைகளுக்கு இவர்களின் சேவையும் முக்கிய இடம் பிடிக்கிறது .
 
சாலை பணியாளர்கள் , துப்புரவு பணியாளர்கள் , மின்சார ஊழியர்கள் , தொலைபேசி ஊழியர்கள் ஆகிய இவர்களின் சேவையும் அதிக தேவையாய் உள்ளது.
 
 
இது போன்று அபாய குறிப்புடன் உள்ள பள்ளங்களும் உள்ளன. கண்டுபிடிக்கமுடியாமல் பேருந்துகளை கவிழ்க்க முயலும் பள்ளங்களும் உள்ளன .  ஒரு பேருந்து தி.நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மூழ்கியது . ஒரு நாள் முழுவதும் போராடி மூழ்கிய பேருந்து மீட்கப்பட்டது
 
 
இந்நிலையில் இவ்வளவு மழைநீரையும் சேமிக்காமல் விட்டுவிட்டு பிற மாநிலங்களில் தண்ணீர் பிச்சை கேட்கும் அவல நிலையில் இருந்து விடுபட முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகராய் பணியாற்றிய பொன்ராஜ் அவர்கள் சிங்கப்பூரில் மழைநீர் சேமிக்கும் முறை பற்றி குறிபிடுகிறார் .
 

வீட்டிலிருந்து மழைநீர் சேகரிக்கப்பட்டு, அது தெருவில் இருக்கும் கால்வாயில் கலக்கிறது. அதற்காக சாக்கடை கலக்காத மழைநீர் சேகரிப்புக்கு என்றே தனி வாய்க்கால் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சாலைகளையொட்டி பிரமாண்டமான வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகளில் சேரும் மழை நீர் கால்வாயில் சேகரிக்கப்பட்டு, முறையாக குளங்கள், ஏரிகளில் சென்று சேர்கிறது. என்று கூறுகிறார் .

இத்துடன்  ராக்கெட் செய்ய தெரிந்த நமக்கு இந்நீரை பாதுகாக்க தெரியாதா என்ற கேள்வியையும்  நம்மிடம் கொடுக்கிறார்.
 
 கடந்த ஒரு வாரகாலமாக மழை கொட்டி தீர்த்து , ஒரு வழியாக ஓயபோகும் நிலையில் தமிழ்நாட்டிற்கென்று ஒரு முதல்வர் இருக்கிறார் என்பதை நினைஊட்டும் வகையில், 
 ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்! என்று செய்தி வெளியிடுகிறது பத்திரிகை . நாள் முழுவதும் இந்த செய்தியையே தருகிறது ஜெயா செய்தி ஊடகங்கள் .
 
போட்டிக்கு தி.மு.க. செய்தி ஊடகங்களும் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு ஆறுதல் கூறினார் என்று தொடர்ச்சியாக கூறுகிறது.
 
இது ஒரு புறம் இருக்க மற்றும் ஒரு செய்தியாக 
 
சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்,, என்று செய்தி தருகிறது ஊடகம்.
பாவம் மக்கள் எங்கு செல்வர் .  எல்லா ஏரிகளும் மூடப்பட்டதின் விளைவு. எல்லா குளங்களும் , குட்டைகளும் தரைமட்டமாக்க பட்டத்தின் விளைவு .
 
இப்பிரச்சினை வரும் என்று முன்பே தெரிந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியாது . ஏனெனில் இது கொள்ளை லாபம் தருகிறது .
 
ஊடகங்களுக்கு செய்தி நிறைய கிடைகிறது லாபம் .
 
நிவாரணம் வழங்கும் பேரில் அணைத்து அரசியல் வாதிகளுக்கும் ஏகப்பட்ட லாபம் .
 
அணைத்து அரசு ஊழியர்களுக்கும் லாபம் 
 
மீண்டும் சாலை சீரமைப்பு வேலைகள் நடக்கும் . குத்தகை வழங்கம் அரசியல்வாதிக்கு லாபம் .
 
வெள்ளம் வடிய எப்படியும் ஒரு பத்து நாலாவது ஆகும் . அதற்குள் ஏகப்பட்ட வியாதிகள் வரும்.
அதற்கு ஒரு நிவாரணம் . லாபம்.
 
எல்லாம் லாபம் . இத்தனை பெரிய தொழிலை உருவாக்கி தரும் மழை நீரை தேங்க விடாமல் வடிந்து , அதனை சேமித்து வைத்து வறட்சி நிவாரண லாபத்தையும் இழக்க இங்கு யாரும் முட்டாள் இல்லை.
 
அத்தனை பெரும் அறிவாளிகள் !
 
தமிழன் மட்டும் மாறவே இல்லை !
 
ஏரியை மூடிய போதும் நகைசுவை.
வெள்ளத்தால் மூழ்கும் போதும் நகைசுவை 
குளிரால் நடுங்கும் போதும் நகைசுவை 
குடிசை நீரிலே மிதக்கும் போதும் நகைசுவை !
குடிதண்ணீர் இல்லை என்றாலும் நகைசுவை 
குடும்பமே வெள்ளத்தால் அழிந்தது என்றாலும் நகைசுவை !
 
 
என்னே ! சிரிப்பு ! போதும் சிரித்தது . நிறுத்தி கொள் !
உலகம் நம்மை பார்த்து கைகொட்டி சிரிக்கிறது !
 
மழை பெய்வது ஒரு பிரச்சனையா என்று !
 
வடிகால்கள் அமைப்பது பற்றி நமக்கு யார் கற்றுத்தர வேண்டும் !
 
உனக்கு தெரியும் . எங்கு வெட்டிவிட்டால் எங்கு நீர் சென்று சேரும் என்று !
 
நம் ரத்தத்தில் ஊறியது நகைசுவை மட்டும் அல்ல !
ஆளுமையும் தான் !
நீர் மேலாண்மையை இந்த உலகுக்கு கொடுத்தான் நீ !
மறந்து போனாயோ ?
விழித்து கொள்! விழிப்புணர்வு கொடு !
 
இடுக்கண் வருங்கால் நகுக !
எதிர்பாராமல் வரும் போது !
 
எதிர்பார்த்து வரும் போது 
இடுக்கண் தவிர்த்தும் நகுக !

 
 

Tuesday, 3 November 2015

மாற்றம்

 தமிழ்நாட்டில் தற்பொழுது ஆளும் கட்சி ஊழல் செய்து விட்டாலோ அல்லது தவறு செய்து விட்டாலோ, அந்த கட்சியை சேர்த்தவர்கள் உடனே, எதிர்கட்சி தலைவர்களை "இவர் மட்டும் என்ன ரொம்ப நல்லவரா? இவர் அடிக்காத கொள்ளையா?" என்று கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். அவ்வாறே, எதிர்கட்சி செய்த தவறுகள் வெளி வரும் போது, அந்த கட்சியை சேர்த்தவர்கள் ஆளும் கட்சி மட்டும் என்ன யோக்கியமா? என்று கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். தான் சார்ந்த கட்சி அல்லது தனக்கு பிடித்த தலைவர் என்ற ஒரு சில காரணத்திற்காக, அந்த கட்சி செய்கின்ற ஊழல் / தவறு அனைத்தையும் ஆதரித்து பேசுவது மற்றும் "அந்த கட்சியினர் இந்த தவறை அவரது ஆட்சியில் செய்துள்ளார், அதனால் நாங்கள் செய்வது எந்த தவறும் அல்ல" என்று கூறுவது எந்த வகையில் நியாயமாகும்?


உங்கள் வீட்டில் யாராவது தவறு செய்து விட்டால், அவர்களை கடிந்து கொள்விர்களா? அல்லது பக்கத்துக்கு ஊரில் இதே தவறை முன்பே ஒருவன் செய்துள்ளான், அதனால் இது தவறு ஆகாது என்று விட்டு விடுவிர்களா? நமது வீட்டில் தீ பற்றி எரியும் போது அதை அணைக்க முற்படுவோமா அல்லது இது எனது வீட்டில் எரிகின்ற தீ, அதை அணைக்க மாட்டேன் என்று சொல்விர்களா?

எந்த கட்சியினர் தவறு செய்தாலும் ஊழல் செய்தாலும் அதனால் பாதிக்கப்பட போவது மக்களாகிய நாம் தான். தான் சார்ந்த கட்சி, மதம், சாதி இவைகளை விடுத்து, எந்த கட்சி தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் / எதிர்க்கும் மனப்பான்மை வளர வேண்டும். இது எனது கட்சி, இங்கு எது நடந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று இருந்தால் , இவர்கள் ஊழல் செய்வதையும் மக்களை சுரண்டுவதையும் யாராலும் தடுக்க முடியாது.

நமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது, நாம் என்ன செய்தாலும் நமக்கு தான் இவர்கள் வாக்கு அளிப்பார்கள் என்ற எண்ணம் எப்பொழுதோ திராவிட கட்சி தலைவர்களுக்கு வந்து விட்டது. அதனால் தான் ஓவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் ஊழல் பன்மடங்கு அதிகமாகிறது. நமக்கு மிக நன்றாகவே தெரியும், இவர்கள் மக்களை சுரண்டுகிறார்கள் என்று. இதை தெரிந்தும் கண்முடி தனமாக ஆதரிப்பது ஏன்? இந்த காரணத்தினால் தான் எந்த கட்சியும் தங்களது தவறுகளை திருத்தி கொள்ளும் எண்ணம் வர வில்லை, மாறாக அதிகரித்து கொண்டே தான் போகிறது. எந்த கட்சி தவறு செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் . குறைந்த பட்சம், அவர்கள் செய்யும் தவறுகளை ஆதரிக்காமல் இருந்தாலே போதும், நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...