Tuesday, 16 February 2016

ஆங்கிலேயனுக்கு அண்ணனும் , தம்பியும் !

தமிழனுக்கு தெரியாத  மேலாண்மையா ?
இது ஆங்கில ஆட்சிக்கு முன்பு வரை !
அதனால்தான் ஆங்கிலயர்கள் எங்கெல்லாம் காலனி ஆதிக்கம் செழுத்தினார்களோ அங்கெல்லாம் தமிழனை குடி அமர்த்தினார். அதிகபடியாக எங்கெல்லாம் மலைகளின் மீதும் , ஆறுகளின் மீதும் தடுபனைகளும் , பாலங்களும் கட்ட வேண்டி வந்ததோ அங்கெல்லாம் தமிழர்களை குடி அமர்த்தினர் .

ஆனால் இன்று அப்படி அல்ல .

மேலாண்மை மறந்து போனது .
திறமைகளை வளர்க்கும்  கல்வியை  தமிழனுக்கு போதிக்க அரசு தயார்
இல்லை .

நாயக்கர்கள் ஆட்சி காலத்திலேயே நாம் நம்முடைய பூர்விக அறிவை இழக்க ஆரம்பித்து விட்டோம் .
எதற்குமே தேவர்கள் , அசுரர்கள் , என்று கூறுகின்ற கதைகளை தவிர்த்து , உண்மையான விளக்கம் தெரியாத பிராமணர்களை ஆசிரியர் பதவியிலும் , மந்திரி பதவியிலும் அமர வைத்ததின் விளைவு எப்பொழுதும் போல் அவர்கள் அறிவாளிகள் என்று விளம்பரம் படுத்தி கொண்டார்களே தவிர , எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை .

பிறகு மராட்டியர்கள் காலத்திலும் இது தொடர்ந்துள்ளது .

வீட்டிற்குள்ளேயே பருப்பு கீரைகளை விதைத்து பசுமையாக உண்ணும் நம் வழக்கத்தை மாற்றி , பருப்பு இறக்குமதி செய்து நம்மை பயன்படுத்த வைக்க
சாம்பாஜி கண்டறிந்த அறிய பொக்கிஷம் தான் சாம்பார் .




நம்மிடம் பசுமையாக இருந்த பருப்பை விட்டுவிட்டு , பதபடுத்தபட்ட பருப்பை பயன்படுத்த ஆரம்பித்தோம் .

அவன் மாரட்டிய மாநில பொருளாதரத்தை உயர்த்த , நம்மிடம் உலர்ந்த பருப்பை விற்றான் .
பதபடுத்தபட்ட  வெந்தயம்
பதபடுத்தபட்ட சீரகம்
பதபடுத்தபட்ட  சோம்பு
பதபடுத்தபட்ட பட்டை
பதபடுத்தபட்ட அன்னாசி பூ
பதபடுத்தபட்ட  லவங்கம்
பதபடுத்தபட்ட ஏலக்காய்

இவற்றையெல்லாம் விற்றான் .
உண்மையில் நம் வீட்டின் கொள்ளை புறத்தில் வெந்தயகீரை , சோம்பின்
கீரையாகிய சோலிய கீரை , சீரக கீரை இவையெல்லாம் விளைந்த பொழுதும் மராட்டியர்கள் விற்ற பதபடுத்தபட்ட பொருட்களையே வாங்க நிர்பந்திக்கப்பட்டு காலபோக்கில் நமக்கு இவையெல்லாம் பசுமையாக எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் போனது காலகொடுமை .

பசுமையாக ஏலக்காய் , பட்டை , லவங்கம் , மிளகு இவையெல்லாம் இன்று பலருக்கும் தெரியாமல் போனதின் விளைவு தான் கலப்படம் உருவாக காரணமாக இருந்தது .


இவர்கள் காட்டிய வழியில் தான் ஆங்கிலேயர்களும் பயணித்தார்கள் .


நம்மிடமே பஞ்சை வாங்கி , ஆடைகளாக மாற்றி நம்மிடமே அதிக விலைக்கு விற்றார்கள் .

நம்மிடமே மிளகை எடுத்து , நமக்கே அதிக விலைக்கு விற்றார்கள் .

நம்மை வைத்தே நம் மக்களையே அழித்தார்கள் .

இப்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது , ஆங்கிலயர்களுக்கு முன்பு நம்மை ஆண்ட அந்த ஆண்டிகளுக்கும் !

உடனே சுதந்திரபோர் !

இதற்கு முன்பு ஆண்ட இந்த அரசர்கள் செய்ததையே அப்படியே , ஒரு படி அதிகமாய் செய்தான் ஆங்கிலேயன் .

போராட்ட விளைவு என்று சொல்லமுடியாவிட்டாலும் நமக்கு சுதந்திரம் கிடைத்தது .

அதே வேலையை மக்காளாட்சி என்ற பெயரில் தொடர்ந்து செய்கிறார்கள் .

நம் வீட்டின் பின்னால் வாய்கால் ஓட, தெருவின் நடுவில் கிணறு இருக்க , கிராமத்தின் மத்தில் குளமும் , குட்டையும் இருக்க , ஊருக்கு வெளியில் எரிகள்  இருக்க

எதற்காக வீட்டிற்கு வீடு குழாய் நீர் !

அதன் விளைவு தான் வாய்க்கால்கள் மூடப்பட்டன .
கிணறுகள் தூர்ந்து போயின
குளங்களும் , குட்டைகளும் அசுத்தமாயின
எரிகள்  கல்லூரிகள் ஆகின .


கழிவுகளை வெளியேற்ற காடுகள் இருக்க கழிவறைக்கு பழகினோம் .

விளைவு காடுகள் அழிக்கும் போது நமக்கு கேள்வி தோன்ற வில்லை .

130 கோடி மக்கள் வாழும் நாட்டில் உரங்கள் இறக்குமதி செய்வது குறித்து நமக்கு தெரியவும் இல்லை .



நம்மிடமே போக்குவரத்திற்கு மாட்டு வண்டிகளும் , குதிரை வண்டிகளும் இருக்க

எதற்காக

அதிகம் தேவைபடாத ஊர்களுக்கு கூட போக்குவரத்து வசதி என்ற பெயரில் இயந்திர வாகனங்கள் !

போக்குவரத்து வசதிகள் என்ற பெயரில் மண் சாலைகள் , கற்களால் மூடப்பட்டது
மரங்கள் அழிக்கப்பட்டது .
நீர் மண்ணிற்குள் செல்ல வழிதெரியாமல் கடலுக்கு போனது .

மலை ஏறும் மக்களுக்கும் பஸ் வசதி .

மலைகள் உடைந்து போயின .

நீர் போக்குவரத்து உள்ள ஊரில்  பஸ் வசதி .

ஆறுகளும் ,ஏரிகள் தூர்வாராமல் மூடி போய் தண்ணீர பிரச்சனை வந்தன !

இதெல்லாம் கடந்து உழவிற்கும் டிராக்டர் என்ற அரக்கன் வந்ததால் இனி எதற்காக  இந்த காளைகள் என்ற கேள்வி வந்து பசுக்களின் கரு உருவாக்கத்திற்கு என்று வந்த அந்த பதில் தான் சினை ஊசியின் அடித்தளம் .

இதனையும் கடந்து இந்த காளைகள் இருக்க காரணமாக இருந்த ஏறுதழுவுதலும் தடை செய்ய மூல காரணம் , விலங்கினங்களின் அழிவு என்பதை  கடந்து பயனற்ற உயிரின் ஆயிட்காலம் குறைவு என்பதுதான் !

இதிலே மிக முக்கியமான சாதனை என்னவென்றால் உலகத்தின் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த இந்தியாவின் இயற்கை மருத்துவம்  மற்றும் சித்த மருத்துவம் பெரிய அளவில்  இல்லை .

மூன்றாம்  இடம் பெற்ற சாமுவேல் ஹானிமன் என்பவரால் கண்டறியப்பட்ட சீனா மருத்துவம் அக்குபஞ்சர் மருத்துவம் கூட சொல்லி கொள்ளும் அளவிற்கு  இல்லை

நான்காம் இடத்தில் ஹிப்போகிரடிஸ் கண்டறிந்த ஆங்கில மருத்துவம் நம்மிடமிருந்து  காசை வாரி கொட்டி கொண்டிருக்க  காரணம் என்ன  ?

இந்த ஆங்கில மருத்துவத்தால் , மூலிகைகள் நமக்கு தெரியவில்லை .
நாமே அவற்றில் பல மரங்களை அழித்திருக்கிறோம் .
காரணம் புரியாமல் !


நாயக்கர்களை தொடர்ந்து மராட்டியர்கள் பாதையை ஆங்கிலேயர்கள் பின்பற்றினர் .
பிறகு  ஆங்கிலேயன் பின்பற்றிய பாதையை அரசு பின்பற்றியது .
ஆனால் தற்போது எல்லாம் நாமே முடிவெடுக்கிறோம் .
நிறைய படித்து விட்டோம் இல்லையா ?


எங்கோ நீர் கிடைக்காத ஊரில் பாட்டில் நீர் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றை பயன்படுத்துவது  !

எங்கோ உணவு கிடைக்காத இடத்தில் டப்பாவில் அடைத்த உணவை உண்டால் நாமும் அப்படியே செய்ய நினைப்பது  .

நம்மிடம் போதுமான நெசவாளர்களும் , தேவையான அளவு ஆடைகளும் இருக்க , எதற்காக இன்று திருப்பூர் போன்ற நூற்பாலை நகரங்கள்  நொந்து நூலாகி கொண்டு இருக்க வேண்டும் .

நம்மூரில் நல்ல மீன்கள் கிடைக்க அடுத்த ஊர் மீனுக்கு ஆசைப்பட்டதன் விளைவு தான் நமக்கு தெரிகிறதா ?

நம் ஊரில் மீன் விவசாயம் குறைந்து போனது . இது கூட பரவா இல்லை . வேற ஊர் மீன்களும் நல்ல நிலையில் யாருக்கும் கிடைப்பதில்லை .

இந்த மீன்கள் விஷயத்தில் நம் மக்கள் ஒரு படி மேல போய் சால்மான் மீன்கள் தான் நாங்கெல்லாம் சாப்பிடுவோம் என்று கூறும்போது சிரிப்புதான் வருகிறது சால்மான் மீன்கள் கரடிகளின் உணவு .  பனி கரடிகள் ஆறு மாத காலங்கள் வரை இந்த மீன்களை  உண்டு விட்டு , அடுத்த ஆறு மாதத்திற்கு குகையை விட்டு வெளியே வராது . அந்த அளவிற்கு கொழுப்பு சத்தை கொடுக்க வல்லது சல்மான் மீன்கள் .
salmon fish க்கான பட முடிவு






இவற்றை மனிதன் உண்ணக்கூடாது . அந்த அளவிற்கு செரிமானம் ஆகாது .
அதன் கொழுப்பு மனிதனுக்கு கேடு தரும் .

இந்த கோழி உணவுகள் இப்போது சரியான முறையில் இல்லை என்பதால் பலரும் காடை உணவிற்கு மாறி இருக்கிறார்கள் .

தயவு செய்து கடின உழைப்பு இல்லாதவர்கள் காடை கோழியோ , காடை முட்டையோ அதிகம் சேர்க்காதீர்கள் .
இது மலை ஏறும் மக்கள் உண்ணும் உணவு . 5 காடை முட்டைகளை உண்டு விட்டு மலை ஏறி திரும்பும் வரை பசி எடுக்காது என்று கூறுகிறார்கள் மலை ஏறும் மக்கள் .

ஒன்று மட்டும் உண்மை . நம்மிடம் உள்ளவற்றை பயன்படுத்தவேண்டும் .

நம்மிடம் ஒரு பொருள் இருக்க , அடுத்தவர் கூறுகிறார் என்பதற்காக , அடுத்தவர் செய்கிறார் என்பற்காக செய்தால் , அதன் விளை வு நம்மிடம் இருக்கும் பொக்கிஷத்தை நாம் இழக்க நேரிடும் .

பயன் இல்லாத எந்த ஒரு உயிரினமும் , இந்த பூமியில் நிலைபதில்லை .
பயன்படுத்தாமல் விட்ட மண்ணும் நம்மிடம் இல்லை .
பயன்படுத்தாமல் விட்ட மலையும் நம்மிடம் இல்லை .
பயன்படாமல் போனால் நாம் கூட நாளை இல்லை !

தற்சார்போடு வாழ போதிய அளவிற்கு மட்டும் வீடு கட்டுவோம் !
காய்கள் பயிரிட பழகுவோம் .
நீர் வரத்தை பெருக்க வழிசெய்வோம்
சூரிய ஒளி சக்தியை பயன்படுத்துவோம் !
பிறரை சாராமல் வாழ வழி செய்வோம் !
நம் அடுத்த தலைமுறை பதபடுத்தாத
பசுமையான உணவை உண்ணட்டுமே !


Monday, 15 February 2016

வேளாண்மை அறிவோம் - நம்மாழ்வார்


சமீபகாலமாக ஏகப்பட்ட குளறுபடிகள்.
விவசாயிகளை முன்வைத்து ,
அவர்களின் அறியாமையை பயன்படுத்தி ,
நாட்டை சூறையாடும் திட்டங்கள்.
அரசும் அறியாமையால் செய்கிறது என்று வைத்து கொண்டால் கூட அறிவியலில் நாம் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல .
வேளாண் விஞ்ஞானம் என்பது படிப்பறிவில்லாத பாமரனும் அறிந்ததே !
இருந்தும் துணிந்து தவறுகள் நடகிறது என்றால் , நம் படிப்பறிவு எங்கோ ,தவறு செய்திருக்கிறது என்று அர்த்தம் .!





விவசாயிக்கான அடையாளங்களை , அவமானபடுத்தியது முதல் அவர்களுக்கான அங்கீகாரத்தையும் கொடுக்க தவறியது  வரை !
இதன் விளைவு அவர்களுக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையை பயன்படுத்தி கொண்ட அன்னியர்கள் .அவர்களுக்கு கைகூலியாக வேலை பார்த்த அரசும் , அரசு ஊழியர்களும் கிட்டதட்ட வேளாண்மை என்பது அழிந்தால் பரவாஇல்லை என்று கூறும் இடத்திற்கு வந்து விட்டார்கள் .

இதிலிருந்து விடுபட இன்று பற்பல இயக்கங்கள் உருவாகி , மீண்டும் வேளாண்மை வழிசெல்ல , நமக்கு துணை புரிய தயாராய் இருக்கின்றன .

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக  இருந்து வழிகாட்டிய திரு.நம்மாழ்வார் அவர்கள் வேளாண்மை குறித்து கூறிய கருத்துகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன .

வேளாண்மை செய்யாவிட்டாலும் வேளாண்மை குறித்த அறிவை பெற வேண்டிய அவசியத்திற்கு இன்று வந்துவிட்டோம் .

பயிர்களின் வகைகள் :

பாரம்பரிய வேளாண்மை பிரிவுகள்

குறுவை , சம்பா , மற்றும் தாளடி பயிர்கள் .

தாளடி பயிர்கள் ஒரு ஆள் உயரத்திற்கு வளர கூடியது .

90 நாள் பாரம்பரிய ரகங்கள் கருங்குறுவை , செங்குறுவை

60 நாள் பயிர் அறுபதாம் குறுவை

நீண்ட நாள் பயிர் கிச்சடி சம்பா,, சீரகசம்பா

கடல் நீர் சேரும் கடற்கரை பகுதியில் விளைவன : குழியடிச்சான் , குடைவாழை

நீர் குறைந்த பகுதிக்கு ஏற்றது வாடன்சம்பா , மாப்பிள்ளை சம்பா, புழுதி விரட்டி , ஒசக்குதாளை

நெய்வேலி காட்டாமணக்கை வெட்டி வாழை மட்டையில் போட்டால் எந்த உரமும் இல்லாமல் பயிர் விளையும்.


வேளாண்மையின் முக்கிய தருணங்கள் :


புதுக்கோட்டை மாவட்டம் வீரபட்டியில் சக்திகணபதி என்பவர்  வயிலில் மீன் வளர்கிறார் .  வயலில் மீன் வளர்த்தால் , மீனின் கழிவுகள் , உரமாகவும் , மீன்கள் அங்குள்ள பூச்சிகள் உண்பதால் அது சிறந்த பூச்சி கொல்லியாகவும் பயன்படும் .
அதே நேரம் மீன் விவசாயம் சிறந்த பலன் தரும் .

இந்திய வேளாண்மை மிக சிறந்த வேளாண்மை முறை  என்று  பாராட்டிய ஆங்கிலேயர்
ஜான் அகஸ்டஸ் வோல்கர்
மற்றொருவர் ஆல்பர்ட் ஒவார்ட்

இன்று அந்த சிறந்த வேளாண்மையைதான் தான் தேடி கொண்டிருக்கிறோம் .

---------------தொடர்வோம் 

Thursday, 11 February 2016

டாய்லெட்

டாய்லெட்  - இது பற்றி பேசுறது கொஞ்சம் அசிங்கம்னு நினைக்கலாம் .
ஆனால்
அடிப்படை தேவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவது 
உணவு , உடை , உறையுள் எனப்படும் தங்கும் இடம் .
இது தவிர அடுத்த கட்ட தேவை செல்வசெழிப்பான வாழ்கை . அதாவது கார் , வீடு என்று வசதியாக வாழ்வது . 
மூன்றாம் கட்ட அடிப்படை தேவை ஸ்டேடஸ் எனப்படும் சமுதாய அந்தஸ்து .
இதன் அடிப்படையில் தான் இன்று உலகமே உணவு தேவை முடிந்தவுடன் பணம் பணம் என்று அழைந்து கொண்டு இருக்கிறது .

ஆனால் உண்மையில் அடிப்படை தேவை என இறைவன் நமக்கு தெரிவிக்கும் தேவைகள் வேறு .
1. உணவு 
2.கழிவு வெளியேறுவது . ( சிறுநீர் , மலம் , மாதவிடாய் காலம் )
3.உடல் உறவு 

இவ்வளவு தான் இறைவன் நமக்கு தந்த தேவைகள் .

இதை கடந்து மனிதன் விலங்குகளிடமிருந்தும் , குளிர் மழை இவற்றில் இருந்து பாதுகாக்கவும் ஆடைகளையும் , தங்கும் இடங்களையும் அமைத்து கொண்டான் .

இதனை கடந்து ஒரு மனிதனுக்கு வேறு என்ன வேண்டும் ?

ஆனால் இந்த  உணவு பிரச்னைக்கு பிறகு பேசப்படும் பிரச்சனைகளே வேறு .

உடல் உறவு என்பது ஒழுங்கு கட்டுப்பாடுகளுக்குள் வரவேண்டியது . அது மற்றொரு விதமாதாய் அணுக வேண்டியது .

ஆனால் கழிவு வெளியேற்றுவது குறித்து பேச இந்தியாவில் ஆளே இல்லை என்றுதான் கூற வேண்டும் .







யாரும் இதைஒரு பொருட்டாக கொள்வதில்லை .
ஏன் என்று புரியவில்லை?

அப்படி என்ன பாவம் கண்டது இந்த சமுதாயம் !

எந்த அரசும் , இது குறித்து பெரிதாக எடுத்து கொளவதில்லை .

ஒரு சில இடங்களில் இது எதோ பெண் சம்பந்தப்பட்ட பிரச்சனை போல் பேசபடுகிறது .

சாதாரண பள்ளிகளில் கழிவறை என்பதே இல்லை . இருந்தாலும் யாரும் சுத்தம் செய்வதில்லை 
தனியார் பள்ளிகளில் இருக்கின்ற கழிவறைகள் பற்றி மாணவர்கள் பெரிதாக பேசிகொள்வதில்லை . அது அவமானம் என கருதுகின்றனர் .

ஒரு KG பள்ளிகளில் சிறு குழந்தைகளுக்காக வைக்கப்படும் கழிவறை நன்றாக இருந்தாலும் ,தொடர்ந்து 2 நாட்கள் ஒரு குழந்தை பள்ளி கழிவறையை பயன்படுத்தி விட்டால் அதுத்த நாள் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்குகிறது நிர்வாகம்.
காலையில் எழுந்தவுடன் வெந்நீர் கொடுங்கள் வீட்டிலேயே கழிவு வெளியேற்றும் பழக்கத்தை கொண்டுவாருங்கள் . அது ஒன்றுதான் நல்ல பழக்கம் என்று கூறி பெற்றோரை அவமதிக்கிறது பள்ளிகள் .

வயதுக்கு வந்த பெண்களின் நிலையோ இன்னும் கேவலம் . கதவு இருப்பதில்லை . நீர் வருவதில்லை . கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு இது குறித்து எந்த அக்கறையும் இல்லை . காசுக்காக வேலை பார்பவர்கள் தானே .!
சமூக அக்கறை எங்கிருந்து வரபோகிறது . பெண்கள் ஆண் ஆசிரியரிடம் பேசுவதில்லை . பெண் ஆசிரியர்கள் முற்றிலும் வேஸ்ட் !
பல ஆசிரியர்கள் , அந்த வேலைக்கு தகுதி என்பதே இல்லாதவர்கள் .

ஆண்கள் நிலையும் விதிவிலக்கு அல்ல. கழிவறை இல்லாத நிலையில் சாலையோரங்களை பயன்படுத்தி கெட்டபெயரையும் சேர்த்து எடுக்க வேண்டியுள்ளது .

பள்ளிகள் நிலையோ கேவலம் என்றால் , கண்டிப்பாக கழிவறை இருக்க வேண்டிய மற்றொரு இடம் மருத்துவ மனை .

எல்லா மருத்துவமனைகளிலும் கழிவறை உள்ளது . ஆனால் எங்கு இருக்கிறது என்று பத்து பேரிடமாவது விசாரிக்கும் அளவிற்கு மருத்துவமனையின் எதோ ஒரு மூலையில் உள்ளது . அத்தனை அசிங்கமான விஷயமா என்ன ?

ரத்தபரிசோதனை நிலையங்களில் ஒரு பெண் நோயாளி கழிவறை எங்கு இருக்கிறது என்று கேட்க வெட்க பட வேண்டி உள்ளது . 

மிகபெரிய ஷாப்பிங் மால்களில் கூட 4 மாடிக்கு செல்லுங்கள் .என்று கூறும்போது அங்கு பொய் சேரவே 10நிமிடங்கள் ஆகும் நிலை ! இதற்க்கு முக்கித்துவம் கொடுத்திருந்தால் ஒவ்வொரு மாடிக்கும் ஒரு கழிவறையாவது வைத்திருப்பார்கள் .

கோவில்கள் நிலை சொல்லவே வேண்டாம் . இதற்கு இந்து கிறிஸ்தவன் என்ற வேறுபாடெல்லாம் இல்லை .  எல்லா கோவில்களிலும் , ஒரு குழந்தைக்காகவோ , வயது முதிர்ந்தவர்களுக்காகவோ கழிவறை தேடினால் , அரை மணி நேரம் நடந்தால் , அங்கும் ஒரு மூலையில் எதோ கொலை குற்றங்கள் நடக்கும் இடம் போல்  உள்ளது கழிவறைகள்  .

வெறும் வார்த்தைகளால் சொல்லி விடலாம் , உடல் கழிவையும் , உள்ள கழிவையும் வெளியேற்றி விட்டுதான் கோவிலுக்குள் நுழையவே வேண்டும் என்று .!

அனால் இது எப்படி குழந்தைக்கும், முதியவர்களுக்கும் பொருந்தும் ?.

சிந்திக்க எவருக்கும் நேரம் இல்லை . பக்தியில் திளைத்து , முக்தி  அடைவது ஒன்றே நோக்கம் !.அவ்வளவு பக்திமான்கள் !

சரி , குழந்தைக்கும் , முதியவருக்கும் டையபர் போட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டாலும் , டையபர் உடலுக்கு நல்லதுதானா ?


ஹோட்டல் களில் , பெரிய ஹோட்டல்களில் கூட கை கழுவும் இடம் வரை நீர் வருகிறதா என்று சரிபார்க்கும் நிர்வாகம் கழிவறை பற்றி கவலை கொள்ள வதில்லை . எவரேனும் சத்தம் போடும் போது மீண்டும் வேலை நடக்கிறது .

நிறைய பணம் கட்டி கிளப்களில் மெம்பெர் என்றாலும் கூட அங்கும் கழிவறை மீது அக்கறை சற்று குறைவுதான் !

இவையெல்லாமே இப்படி என்றால் அரசு அலுவலகங்களில் , அரசு ஊளியர்களுக்கே  அங்கு சரியான கழிவறை இல்லை . இதிலே வந்து செல்லும் பொது மக்கள் குறித்து கவலைப்பட யாரேனும் இருப்பார்களா என்ன ?  முக்கியமாக நகராட்சி அலுவலகம் !

சினிமா தியேட்டர் , exhibition ,zoo , park  , bus stand , railway station என்று எந்த அரசு சார்ந்த , சாராத நிறுவனமும் விதிவிலக்கு அல்ல !

ஏன்  toilet போறது அப்படி ஒன்றும் குற்ற செயல் அல்ல !
எல்லாரும் அரிசிக்காக போராடியது போல் போராட கூட வேண்டாம் !
Toilet போறத கேவலம்னு நினைக்காம இருந்தா போதும் !
Toilet எங்க இருக்குன்னு கேட்ட சிரிக்காம இருந்தா போதும் !
இந்த கழிவறை புரிதல் இல்லாமல் போனதால்தான் 
பல இடங்களில் பெண் கற்பழிப்புகள் நடந்துள்ளன !
இந்த கழிவறைகள் தூய்மை இல்லாமல் போனதால்தான் 
பேய் இருக்கும் இடம் போல் மாறி 
கொலைகள் நடக்கும்  இடம் போல் மாறின !


வீதிக்கு ஒன்று , இரண்டு பள்ளிகள் !
வீதிக்கு எல்லா மதத்திற்கும் கோவில்கள் !
வீதிக்கு மருத்துவமனை !
வீதிக்கு இரண்டு மருந்தகம் !
வீதிக்கு நான்கு ஹோட்டல்கள் !
வீதிக்கு ஒரு தாங்கும் விடுதி !
வீதிக்கு ஒரு மது கடை !

வீதிக்கு ஒரு கழிவறை எங்கே ?


 .தூய்மை இந்தியா எனபடுவது மக்கள் மட்டும் குப்பைகளை , குப்பை தொட்டியில் போடும் விஷயம் அல்ல .!
வீட்டிற்க்குள் எல்லாரும் கழிவறை கட்டுங்கள் 
என்று வரும் விளம்பரங்களில் அல்ல !
வீதிக்கு ஒரு கழிவறையும் 
நான்கு வீட்டிற்கு ஒரு குப்பைதொட்டியும் வைப்பதுதான் !


செய்யுமா அரசு ? 





Tuesday, 9 February 2016

நாகர்கள்






நாகர்கள் எனும் பெயரை அடிகடி நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.அனால் யாரும் இவர்கள் யார் என்று பெரிதாக கூறியதில்லை .

புராணங்களை பொறுத்தவரை

                  ராவணின் இளைய சகோதரன் நாக லோகத்தின் தலைவனாக இருந்தான் என்று ராமாயணம் கூறுகிறது .

                  மகாபாரததிலோ நாகர்கள் இருந்த இடத்தில்தான் , அவர்களை அழித்து விட்டு இந்திரப்ரஸ்தம் எனும் பாண்டவர்களுக்கான நகரம் உருவாகபடுகிறது .

                அதே கதையில்தான் பீமன் சிறுவனாக இருக்கும் பொழுது , துரியோதனன் அவனுக்கு விஷம் கொடுத்து கொன்று நதியில் வீசும் பொழுது , நாகர்களின் தலைவனால் காப்பாற்றபடுகிறான் .

               ஆனால் பிற்காலத்தில் நாகர்களை அழித்து தான் இந்திரபிரஸ்தம் கட்டபடுகிறது . ( இன்றைய டெல்லி ) இது நாகர்கள் வாழ்ந்த இடம். நாகர்களின் தலைநகரம் .

              பிறகு மகாபாரத யுத்தத்தில் , கர்ணனுக்கு நாகஸ்திரம் கொடுக்கிறான் நாகர்களின் தலைவன் .









                 கிருஷ்ணா புராணத்தில் சிறுவயதில் கிருஷ்ணன் காளியா எனும் பாம்பை வெல்கிறான் .



               கிருஷ்ணனின் அண்ணனாக வரும் பலராமன் முற்பிறவியில் ஆதிஷசன் எனும் பாம்பாக இருந்தவர் என்றும் அப்புராணம் கூறுகிறது .
           
               தேவர்களுக்கு தேவாமிர்தம் எடுக்க உதவியது வாசுகி எனும் பாம்பு.

               கார்கோடகன் எனும் பாம்பானது வானிலை அறிந்து கூறக்கூடியது என்றும் புராணங்கள் கூறுகிறது .

             
                 முடிந்தவரை பாம்புகள் வாழும் இடம்தான் பாதாள லோஹம் என்றும் நாக லோகம் என்றும் வழங்கப்பட்டுள்ளது .


இவையெல்லாம் நாகர்கள் குறித்து புராணங்கள் கூறுவன .

நாகர்கள் எனப்படுபவர்கள் புராணங்கள் கூறுவது போல் பாம்பு அல்ல.

அவர்களும் மனித இனம்தான் .

இன்றும் நமக்கே தெரியாமல் நாம் சில ஊர் பெயர்களை நாகர்களின் பெயரால்தான் அழைத்து வருகிறோம் .

நாக்பூர்
nagas க்கான பட முடிவு
நாகலாந்து - நாகர் இன பழங்குடி மக்கள்

நாகர்கோவில்

நாகபட்டினம் ( தமிழில் பட்டினம் என்றால் துறைமுகம் என்று அர்த்தம் . நாகபட்டினம் நாகர்களின் துறைமுகம் .)

நாகர்பாவி

நாகர் கிராமம் - ஹிமாச்சல பிரதேஷ் .

இந்த வூர் பெயர்களின் வழியாக நாகர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது .

அவர்களுகென்று கடலோர நகரம் பட்டினம் என்று அழைக்கப்பட்டுள்ளது .

இன்னும் நாகலாந்து பகுதியில் நாகர் இன மக்கள் வாழ்கிறார்கள் .
nagas க்கான பட முடிவு


இலங்கையின் பலபகுதிகளிலும் , தென் இந்தியாவிலும் நாகர்கள் எனும் இன மக்கள் SC  / ST என்ற பிரிவின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள் .

வட இந்தியாவிலும் , நாகர்களுடன் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஆரிய இனம்  ஒதுக்கப்பட்ட இனமாக மாற்றப்பட்டுள்ளது .
பிராமணராகவோ , ஆரியன் என்று கூறி கொள்ளவோ தடை செய்ய பட்டுள்ளதாக வோல்கவிளிருந்து கங்கை வரை எனும் புத்தகத்தில் ராகுல் ஜி குறிப்பிடுகிறார் .

நாகர்கள் எனும் மக்கள் யார் ?

நாகர்கள் எனப்படுபவர்கள் அதீத உடல் உறுப்பு கொண்டவர்கள் .

நாகர்களுக்கு மூன்று கண்கள் , ஆறு கைகள் , மூக்கிற்கு பதிலாக யானையின் துதிக்கை , பனிரண்டு கைகள் , இரண்டு தலைகள் என இயல்பாக ஒரு மனிதனுக்கு உள்ள உறுப்புகளை விட அதிக உறுப்புகள் இருக்கும் .

இப்படிதான் நாகர்கள் குறித்து விளக்கம் தருகிறார் நாகர்களின் ரகசியம் எனும் புத்தகத்தின் ஆசிரியர் .


ஆ னால் , இந்த நாகர்கலின் தலைவன்தான் 'தக்ஷகன் 'என்பவன் எனும் கருத்தில் எந்த வித மாற்று கருத்தும் எந்த புராணமும் தரவில்லை .

தக்ஷக் என்றால் தெற்கு பகுதி என்பதும் சமஸ்கிருதமே கூறும் பொருள் .

எனில் தெற்கு பகுதியில் வாழ்ந்த மக்களின் தலைவன்தான் நாகர்களுக்கும் தலைவன் .

தெற்கு பகுதியில் யார் வாழ்ந்தார்கள் . தமிழர்கள் .

இரான் , இராக் பகுதியிலும், பாகிஸ்தானின் ஒரு பகுதியிலும் , இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும் அகழ்வாராட்சி செய்த பொழுது அங்கு 100 கணக்கான எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன .

எந்த ஒரு செயலுக்கும் எதிர்பதம் கூற வேண்டுமாயின் 'அ  ' எனும் எழுத்தை இணைத்து கூறும் வழக்கம் கொண்டவர்கள்தான் ஆரியர்கள் .

அப்படிதான் வட மேற்கு பகுதியில் வாழ்ந்தவர்களை அசுரர்கள் என்று கூறி அழித்தனர் .
அசுரர்கள் என்றால் என்ன அர்த்தம் - வீரமற்றவன் .
ஆரியர்கள் , தெய்வ பிறப்பு எனில் வீரம் இல்லாத அசுரர்களை கண்டா பயந்தார்கள் . எனில் யார் வீரம் அற்றவர்கள் ?

ராவணனா அசுரன் .?

வீரமில்லாத அசுரர்களை கொள்வதற்க்கா தெய்வமே , பிறப்பெடுத்து வந்தது .

ஆனால் அங்கு வாழ்ந்த இனம் அசுரர்கள் என கூறி அழிக்கப்பட்டுள்ளனர் .

இதே போல்தான் நாகர்கள் ,இந்தியாவின் எல்லா இடங்களிலும் வாழ்ந்த மற்றொரு தமிழ்  மரபு சார்ந்த இனம் .

இந்த இனமும் பாம்புளோடு ஒப்பீடு செய்யப்பட்டு , கொடூர இனம் போல் அடையாளம் தெரிவிக்க படுகிறது .


navalan theevu க்கான பட முடிவு



இந்தியா முழுவதும் , ஒருகாலத்தில் ,குமரி கண்டம் இருந்த காலத்தில் நாவல் மரங்கள் மட்டுமே அதிகம் . அதை கருத்தில் கொண்டே நாவலந்தீவு எனும் பெயரும் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது . இப்பகுதியில் வாழ்ந்த மக்களைத்தான் நாவலர்கள் என்று அழைக்க ஆரம்பித்து நாகர்கள் என்று உரு மாற்றம் பெற்றுள்ளது .

இந்த நாகர் இனத்திற்கு வேறு குனாதீசியங்கள் கொடுப்பதும் ,
இவர்கள் கொடுமைகார்கள் என்று கூறுவதும்
இவுலகில் இருந்து அழிக்க பட வேண்டியவர்கள் என்பதும் இன்று வரை தொடர்கிறது .

பாவம் ஒரு இனத்தை பகுதி பகுதியாக அழிக்க 4000 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது தேவர் இனத்திற்கு . இவர்கள்தான் உயர்சாதியினரா ?



Monday, 8 February 2016

ஹிந்தி

இன்றைக்கு இருக்கும் ஹிந்தி , கிட்டத்தட்ட உலகின் 4 வது மிக பெரிய மொழி . மாண்டரின் எனப்படும் சீனா மொழி , ஸ்பானிஷ் மொழி , ஆங்கிலம் அந்த வரிசையில் ஹிந்திக்கு  4 வது இடம் . 1967 ல் அறிஞர் அண்ணா தமிழக முதல்வர் ஆகும் வரை தமிழக பள்ளிகளில் பாடமாக இருந்தது  ஹிந்தி. .தமிழகத்தின் மும்முனை மொழிகளாக இருந்தது  தமிழ் , ஆங்கிலம் ,மற்றும்  ஹிந்தி  1967 க்கு பிறகு இருமொழிகளாக மாற்றப்பட்டு ஹிந்தி பள்ளி பாடங்களில் இருந்து நீக்கப்பட்டது .

விளைவு ஹிந்தி ஒன்றும் தமிழ்நாட்டில் இருந்து ஒழிந்து விடவில்லை .மாறாக தாரளமாக தனியார் பள்ளிகள் தாங்கள் நடத்த தயார் என விளம்பரபடுத்தி கொள்ளை லாபம் தேடி கொள்கின்றன . சரி பாதி தமிழர்கள் தங்கள் குழந்தைகளை அங்குதான் கல்வி பயில அனுப்புகின்றனர் .ஆக தமிழ்நாட்டில் யாரும் ஹிந்தியை வெறுக்க வில்லை . எல்லா சமுதாயத்தினருக்கும் அம்மொழி சென்று சேராமல் தடுக்கப்பட்டுள்ளது .

மொழி பிரச்சாரம் சாதித்தது ஒன்றுதான் எந்த அரசு பள்ளியிலும் , தமிழை தவிர வேறு மொழி சொல்லிதரவில்லை . அரசு பள்ளிகளில் என்ன பணக்காரர்களா படிக்கிறார்கள் ?. ஏழைகளை வேறு மொழி தெரியாதவன் என்றும் , மூடன் , முட்டாள் என்றும் கூறுவதற்கு உதவியதுதான் மொழி மோகம் .

இது ஒரு புறம் இருக்கட்டும் , மற்றொரு புறம் ஹிந்தி படித்த பலரும் எதோ தான் சாதித்து விட்ட மமதைக்கு ஆளாவது இன்னும் கொடுமை .

ஹிந்தியின் எழுத்து வடிவம் தமிழ் !
ஹிந்தியின் பல்வேறு வார்த்தைகள் தமிழ் !
ஹிந்தி , சம்ஸ்கிருத வழிவந்தது என்றாலும் எல்லாம் தேவநாகிரி எழுத்தை அடிப்படையாக கொண்டது .

hindi and sanskrit க்கான பட முடிவு

தேவநாகிரியும் , கிரந்தம் , பிராமி  எழுத்தும் சம காலத்தை சார்ந்தவை . இன்னும் சொல்ல போனால் தமிழ் என்று பெயரிடபடாத காலகட்டத்தில் இருந்த எழுத்து வடிவங்கள்தான் ஹிந்தியும் , ஏன் ஆங்கிலமும் கூட !

உண்மையில் தமிழும் , தமிழை மூல மொழியாக கொண்டு வாழும் தமிழர்களும்  அறிவாளிகள் !  இல்லை அனுபவசாலிகள் !


இந்தியாவின் எந்த மூலைக்கு சென்று யாரை கேட்டாலும் , 200 ஆண்டுகள் பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமையாக இருந்தது என்றுதான் கூறுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆங்கிலயனிடம் அடிமையாக இருந்தோம் என்று கூறுவார்.

இன்று இருக்கும் பிரிட்டிஷ் மக்கள் ஒரு காலத்தில் அங்கிலன் எனும் நாட்டில் இருந்து இங்கிலாந்திற்கு குடி புகுந்தவர்கள் . அவர்கள் பேசும் மொழியின் 70 % தமிழ்தான் என நிருபிக்கப்பட்டுள்ளது . எத்தனை ஆண்டுகாலம் தமிழன் இந்த உலக மக்களோடு தொடர்பு வைத்திருந்தால் ஒருவன் , தற்போது வாழும் இடத்தை விட அவனது பூர்விகத்தையே சொல்வான் . எந்த அளவிற்கு தமிழனுக்கு பிற நாட்டு மக்களை பற்றிய அறிவு இருந்திருக்கிறது . இன்றும் ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் , நமது பேச்சு வழக்கின் மூலமாகவும் , பழக்க வழக்கத்தாலும் நம்மிடையே விதைக்கபட்டுதான் கொண்டு இருக்கின்றன .

நாம் நேரடியாகவே , அவற்றின் உண்மை விளக்கங்களை விரைவில் அறிவோம்.

அதற்கு முன்னதாக வேறு மொழிகள் என்றாலே அது நமக்கு புரியாது என்றும் , அதை நம்மால் பேசவோ , எழுதவோ முடியாது என்று நமக்குள் விதைக்கப்பட்டுள்ளது . உண்மை அதுவல்ல எல்லா மொழிக்கும் தமிழ்தான் அடிப்படை எனில் , நம்மா ல் மிக சுலபமாக பிற மொழிகளை படிக்கவும் , பேசவும் முடியும் .

கர்நாடாகாவில் பேசும் கன்னடமும் , ஆந்திராவில் பேசும் தெலுங்கும் , கேரளத்தின் மலையாளமும் மிகசுலபமாக நமக்கு புரியும் . ஆனால் தெலுங்கில் பாரசீக மொழியும் , கன்னடத்திலும் , மலையாளத்திலும் சமஸ்கிருதமும் கலந்து இருப்பதால் நமக்கு புரியாதது போல் தோன்றும் .

உண்மையில் சமஸ்கிருதம் , தமிழின் மற்றொரு வடிவம்தான் . இதோ எண் வடிவங்கள் பார்ப்போம் . சமஸ்கிருதம் , ஹிந்தி , ஆங்கிலம் மூன்றுக்கும் மூலம் தமிழ்தான் .

ஒன்று
          பிரதமை 
          ஏக் (  க் + ஏ  = கா ) இது தான் தமிழின் ஒன்று எனும் எண் வடிவம்.
          ஒன்
           
          ----------------  ஒன்று
இரண்டு
          துவிதி
          தோ
           டூ
            --------------- தோ -  தோடு ,தோள்கள் , தோல் , தோது , தோகை -இரட்டை செயல் . இரட்டை பொருள் ஒன்றாக இணைதல்

மூன்று
          திரிதி
          தீன்
          த்ரீ   
          ----------------- திரி . திரி கடுகம் , திரிதல் , திரிபு , மூன்று பொருள் இணைத்துள்ளது என்று பொருள் .
நான்கு
          சதுர்த்தி
          சார்
          போர்
           ------------------ சதுர் ஆட்டம் ( இந்த ஆட்டம் தான் தற்போது பாரத நாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .இது தமிழர்களின் ஆட்டம்.) , சதுரம் , சதுரங்கம் , .நான்கு பக்க இணைப்பு என்று பொருள்
       
ஐந்து
          பஞ்சமி
          பாஞ்ச்
          பைவ்
          -------------------- நேரடியாகவே தமிழின் ஐந்து என்பது அஞ்சு என்று மாறி பாஞ்சு என்றும் அது ஆங்கிலத்தில் பைவ் ஆகா திறந்துள்ளது .
ஆறு
          சஷ்டி
         சே
          சிக்ஸ்
           ---------------------  6 ம் தலைமுறை தாத்தாவை சேயோன் என்று அழைப்பர். அதுமட்டுமல்ல ஏதேனும் 6 செயலின் இணைப்பு நிகழும் இடங்களில் சே எனும் எழுத்தை இணைத்தே வழங்குவது வழக்கம் .
உதாரணமாக சேவல் ,- ஆறு காலத்தையும் நமக்கு தெரிவிக்கும் அறிவு கொண்டது .
ஏழு
           சப்தமி
          சாத்
          செவென்
          --------------------- செவ்வானம் எனப்படுவது வானவில் வரக்கூடிய ஏழு வண்ண நிலையில் உள்ள வானம் . ஆனால் இப்பொழுது சிகப்பான வானம் என்று மட்டுமே நடைமுறையில் உள்ளது .
எட்டு
          அஷ்டமி
          ஆட்
           எய்ட்
            ------------------- எட்டு என்னும் வார்த்தை நேரடியாக அஷ்ட் என்றும் எய்ட் என்றும் திரிபு நிலை கொண்டது .
ஒன்பது
          நவமி
          நவ்
          நயன்
          ------------------ நாவாய் எனப்படும் கப்பல் .ஒன்பது வகையான மரங்களின் ஒட்டுமொத்த இணைப்புதான் நாவாய் .
நாவல் எனப்படும் தொப்புள் நம் மரபுப்படி நம் உடலின் ஒன்பதாவது ஓட்டை .
பத்து
           தசமி
          தஸ்
         டென்
          ----------------  தை மாதம் தமிழ் மாதங்களில் பத்தாவது மாதம் .
பத்து மாதங்கள் முடிந்து குழந்தை பிறந்தவுடன் ஒரு பெண் தாய் எனும் நிலைக்கு வருகிறாள் . தை என்பதே தஸ் என்றாகி தன் என்று மாறி டென் ஆகியுள்ளது .

தமிழில் எண் வரிசை எனப்படுவது வேறு.
அந்த எண்களின் இணைப்பில் உருவாகும் பொருளுக்கு , செயலுக்கு , விளைவுக்கு கொடுக்கப்பட்ட பெயர் வேறு.
இதனால் ஒரு விளைவின் பெயரை கேட்கும் பொழுதே அது , எத்தனை காலம் எடுக்கும் என்பதையோ அல்லது எத்தனை குணம் கொண்டது என்பதையோ அறிந்து கொள்ளலாம் .

ஆனால் சமஸ்கிருதம் , ஹிந்தி இவையெல்லாம் தனக்கென தனி எண்கள் இல்லாதவை . ஒரு கூட்டு பொருளின் விளைவிற்கான பெயரையே , எண் களின் பெயராக கொண்டவை .
       

மேலும் ஹிந்தி தமிழன் reverse என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் மறுமுனையில் இருந்து திரும்பிய வார்த்தைகளையே சுமந்துள்ளது .


ஹிந்தி அறிவோம் தமிழ் வழியாக !

ஹிந்தி                                    தமிழ்                   பொருள்

ஆவ்  =  ஆ + வ்       =      வ் + ஆ = வா       =    வாருங்கள்

ஆம்  =   ஆ + ம்      =       ம் + ஆ =  மா        =      மாம்பழம்

தேரு = தே + ரு    =        ர + த  =  ரத           =      தேர்

சாறு =  சா + ரு     =       ர + ச  = ரச               =       சாறு

ரக்த  = ர + க +த     =     கு  + ரு+தி= குருதி =       ரத்தம்

ஏக்  = ஏ  + க்          =  க்  + ஏ   = கா


நேரடி தமிழ் வார்த்தைகள் :

குணம்  = குணம்

உருவம்  =  ரூப

உலகம்  =  லோக

பூமி  = பூமி


இது போன்று பற்பல சொற்கள் சமஸ்கிருதத்திலும் , அதன் பின்புலம் கொண்ட மொழிகளிலும் , ஆங்கிலத்திலும் உள்ளது .

மீண்டும் தொடர்வோம் ........


Wednesday, 3 February 2016

நவீன ஆசிரியர்களும், corporate பள்ளிகளும் !

முன்னொரு காலத்தில் , இப்படித்தான் தொடங்க வேண்டும் .

ஆசிரியர்களை குரு என்று அழைத்தோம். காரணம் , அவர்  மாணவர்களுக்கு என்ன போதித்தாரோ அப்படிதான் வாழ்ந்தார் . அது ஒரு அழகிய நிலா காலம் என்றும் சொல்ல முடியாது . அப்போது ஜாதிய வேறுபாடுகள் கல்வியை அனைவருக்கும் கொடுக்க தடை விதித்தது .
ஆனால் கல்வி தரம் வாய்ந்தது .

இடைக்காலத்தில் , ஆசிரியர்கள் நடத்துவது போல் வாழ முடியா விட்டாலும் , இது நல்லது , இது கெட்டது என்பதை மட்டும் சொல்லி தந்தார்கள் . பிறகு புத்தகத்தில் உள்ளவற்றிற்கு விளக்கம் மட்டும் கொடுப்பதே ஆசிரியரின் வேலை யாகி போனது . இது மாணவர்களுக்கு ரெண்டும் கெட்டான் நிலை .


ஆனால் இன்று ஆசிரியர்கள் என்றால் ,

வாய் நிறைய லிப்ஸ்டிக் .

ப்லோடிங் புடவை 

புரிந்து கொள்ள  முடியாத இங்கிலீஷ் , அவர்களுக்கும் பாதி நேரம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரிவதில்லை .


கொஞ்சம் நேரம் டைரி எழுதனும் . இது பெத்தவங்களுக்கு அவங்க குடுக்கிற evidence 

வாரத்திற்கு ஒரு நாள் ஒரு விழா நடத்தனும் . ஆடனும்,பாடனும் .

பாடம் நடத்துறோமா , இல்லையா , இதெல்லாம் பிரச்சனையே இல்லை

எந்த பெற்றோரும் சந்தேக பட கூடாது .  இது ஒன்னு தான் அவர்களுக்கு.
 வேலை .

குருக்கள் பணத்தை விட கெளரவம் முக்கியம்னு நினைச்சாங்க !

அப்புறம் கொஞ்சம் பணத்திற்கும்,கொஞ்சம் கௌரவத்திற்கும் இடையில் போராடினாங்க !

இப்பவெல்லாம் நேரடியாவே சொல்றாங்க , இதுவும் ஒரு corporate தான் என்று !

teachers pictures க்கான பட முடிவு



சரி விட்டுவிடலாம்னு பார்த்த , இவங்க நடத்துற இங்கிலீஷ் , ரொம்ப புதுமையாதான் இருக்கு

நம்மெல்லாம் A for Apple ன்னு படிச்சோம் .

அப்போ நடத்துன இந்த அகர வரிசையானது பெயர்ச்சொல் சார்ந்தது .
அது பொருட்பெயராகவும் இருக்கும்.

அங்கு வினைபெயராகவோ  , அல்லது சினைபெயரகவோ, தொழில் பெயராகவோ  இருக்காது .

ஆனா இப்போ எந்த இலக்கணமும் இல்லை , புதுமையா நடத்துறோம் என்ற பெயரில் , A for Arm என்றும் , F for fin ,S for sap என்றும் நடத்துறாங்க !
இந்த Sap அப்புடின்ன என்ன அப்புடின்னு பார்த்த ஒரு இலையை செடியில் இருந்து பிடுங்கும் பொது சொட்டும் ஒரு சொட்டு பால் போன்ற திரவம் .
இது 4 வயது 5 வயது குழந்தை புரிந்து கொள்கிறதா என்பது போன்ற கவலையெல்லாம் corporat க்கு கிடியாதாம் .

இது கூட பரவாஇல்லை , குழந்தைகளை Ward என்று அழைக்கிறார்கள் .

காரணம் கேட்டால் வார்ட் என்றால் குழந்தை என்று அர்த்தம் . மேல் நாடுகளில் இப்படிதான் குழந்தைகளை அழைக்கும் வழக்கம் உள்ளது என்று கூறுகிறார் nursery பள்ளியின் ஆசிரியர் .

உண்மையில் வார்ட் என்றால் , ஒரு குறிப்பிட்ட இடம் என்று பொருள் . அந்த இடம் சார்ந்து அந்த பெயரை ,

வார்டு கவுன்சிலர் என்றும்

வார்ட் நோயாளி என்றும் ,

வார்ட் கைதி என்றும் அழைக்கலாம் .

மேலை நாடுகளில் , ஒரு குழந்தையை , அதன் பெற்றோர் வளர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் , சட்ட ரீதியாக , நீதி துறையின் வாயிலாக ஒருவரை நியமித்து , அவர் வழியாக கண்காணிக்க படும் குழந்தையை வார்டு என்று அழைப்பர் .

அப்படி ஒரு குழந்தை அழைக்கபடுமாயின் அக்குழந்தை , சட்டத்தின் பாதுகாப்பில் உள்ளது என்று  பொருள் . ரொம்ப கொடுமை , இப்படி ஆசிரியர்கள் அழைப்பதை பெற்றோரும் ஒப்புகொள்வது .

இதுதான் புதுமையா ?

குழந்தையை பார்த்து , நீ நன்றாக சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பாய் என்று கூறுவதை , முன்பெல்லாம் healthy ஆக இருக்கணும் என்று சொல்லி கொடுத்தார்கள் . இப்போ சொல்லி தருவது hu nk ஆக இருக்கணும் .

இந்த hunk என்பதன் பொருள் கட்டுமஸ்தான , கவர்ச்சியான ஆண் என்பது .

ஆரோக்கியமான உடலை பற்றி இப்போது பிரச்னை இல்லை
ஆசிரியர்களுக்கு .

கவர்ச்சியான ஆணாக வளர கூறுவதும் ,
சிறு சிறு விஷயங்களில் கூட சிறப்பு என்பதற்கு Exclusive என்பன போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதும் , கொஞ்சம் தவறான கல்விக்கு அடிப்படை தருகிறது .

இந்த புதுமை என்ற பெயரில் , மாற்று வார்த்தைகள் பயன்படுத்துவதை தடுக்க வழி தேடினாலும் , இது போன்ற பள்ளிகளில் படிக்க வைக்காமல் இருப்பதே நலம் என்று தோன்றுகிறது .

ஆனால் இதை பெற்றோர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும், இது பெற்றோர்களில் கௌரவத்திற்கு இழுக்கு என்றும், corporate பள்ளிகள் உறுதியாக நம்புகின்றன.

இன்றைய கல்வியானது , பெற்றோர்களின் கௌரவத்திற்கும்,

பள்ளிகளின் லாபத்திற்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகிறது .

யாருக்கும் குழந்தைகளின் கல்வி மீது அக்கறை இல்லை .

படிக்காத பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகள் டியூஷன் அனுப்புவது கிடையாது .

ஆனால் படித்த தாய்மார்கள் அத்தனைபேரும் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவதே இல்லை .

வெறும் சைக்கிள் மட்டுமே வைத்திருக்கும் அப்பாக்கள் கூட , தன குழந்தையை ஸ்கூல் வேனில் அனுப்பதில்லை . ஆனால் பைக் வைத்திருக்கும் எல்லா அப்பாக்களும் , ஸ்கூல் வேனில் தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் .காரணம் ஸ்கூல் 10 km தள்ளி இருக்கிறது . பைக்கில் சென்று வருவது அப்பாவிற்கே பிடிக்க வில்லை . அதை எப்படி குழந்தையின் உடலும், மனமும் ஏற்கும் என்பதை பற்றி பெற்ற தகப்பனுக்கே அக்கறை இல்லை .

7 அல்லது 8 km தள்ளி போய் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் , உண்பதை எல்லாம் விட்டுவிட்டாலும்  சரியாக , கழிவு வெளியேற்ற முடியாத அவசரத்திற்கு தள்ள படுகிறது .

எவ்வளவு உனக்கு கஷ்டம் வந்தாலும் , அது குறித்து கவலை இல்லை , எனக்கு என்னுடைய கௌரவம்தான் முக்கியம் என்று என்னும் தாயும் , தகப்பனும் இருக்கும் வரை , corporate பள்ளிகள் லாபத்திற்காக இன்னும் பல புதுமையான பாடங்களை நடத்தி கொண்டுதான் இருக்கும் .

Thursday, 21 January 2016

தமிழ் மதம்

தமிழ் நாட்டில் வாழும் மக்கள் தான் தமிழர்கள் !
இவர்கள் உலகின் பல பகுதிகளிலும் வாழ்கிறார்கள் !
ஆனால் இவர்களுக்கு தான் தமிழன் என்பது தெரியாது !
அப்படிதான் பள்ளிகளில் பாடம் நடத்துகிறார்கள் .

நாமெல்லாம் திராவிடர்கள் என்று சொல்லி தருகிறார்கள் 
ஆனால் திராவிட மொழிகள் என்று கூறப்படும் வேறு எவரும் தன்னை திராவிடன் என்று கூறி கொள்வதில்லை .

இன்னும் சொல்லபோனால் ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ , கேரளாவிலோ இப்படி ஒரு வார்த்தையை கூறி விட்டால் போதும் உடனே அவர்கள் கூறும் மறுபதில் இதுதான் .

" இந்த தமிழர்களுக்கு வேறு வேலையே இல்லை . தமிழ் என்றாலே பிரச்சனைதான் '' 

ஆக தமிழன் திராவிடன் அல்ல .
திராவிடன் எனப்படுபவன் தமிழையும் , ஆரியத்தையும் கலந்து உருவான ஒரு இனம் .

இன்று நேற்று அல்ல . கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ணனின் குரு என்று கூறப்படும் அங்கிரா காலத்தில் இருந்து உருவானதுதான் இந்த கலப்பு  . இதை தடுக்கத்தான் சில பல வேதங்கள் உருவாகின என்ற கருத்தும் உள்ளது . எனில் யார் அந்த கலப்பு இனத்தவர்கள் .

கன்னடம் :

இவர்கள் திராவிடர்கள் .

இம்மொழி தான் தமிழில் இருந்து பிரிந்த பழைய மொழி . 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது .

கன்னடத்திலும் தமிழ் வார்த்தைகள் பல உள்ளன.
இன்னும் ஒரு படி மேலே போ ய் தமிழின் மரபு வார்த்தைகள் இன்றும் பயன்படுத்தபடுகிறன. ஆனால் சமஸ்கிருதம் கலந்து சில இடங்களில் தற்சார்பை இழக்கின்றது .

தெலுங்கு :

இவர்கள் திராவிடர்கள் . தமிழின் நிறைய வார்த்தைகள் இன்னும் தெலுங்கில் உள்ளது . ஆனால் லக்ஷ்மி நாராயண வழிபாடு என்பன போன்ற செய்முறைகள் ஆரியத்தை ஒத்தவை .

வடக்கில் தமிழ் கலந்து பேசப்பட்ட ஆரியம் வடுகதமிழ் ஆகி பின்னர் தெளிவடுகு என்று மாறி இன்று தெலுங்கு  என்றானது .
இம்மொழி உருவாகி 1600 ஆண்டுகள் ஆகின்றன . அதற்க்கு முன்பு இதுவும் தமிழே !

ஆனால் தெலுங்கு மொழி இலக்கணம்  கூறுகிறது அங்கு மூன்று லிங்கங்கள் இருக்கின்றன . இதை திரிலிங்க என்று சமஸ்க்ருதத்தில் சொல்ல முற்ப்பட்டு தெலுங்கு என்று மாறியது என்று .

மலையாளம் :
இம்மொழி உருவாகி 1000 ஆண்டுகள்தான் ஆகிகின்றன .
இது பிராமண தமிழ் . அவவையும் , இளங்கோவடிகளும் பிறந்த காலத்தில் இது தமிழின் மேன்மை பொருந்திய நாடு . ஏன் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் கூட இங்கு தமிழ் தான் இருந்திருக்கிறது . கேரளாவின் வீதிகளின் பெயர்கள் இதை சொல்கின்றன . கி.பி.1000 பிறகு அங்கு பிராமணர்களின் ஆதிக்கம் அதிகரித்தது . அதில் இருந்து விடுபட பலர் மதம் மாறினார் . அதன் விளைவு மலையாளம் என்ற தனி மொழி ஆரிய பழக்கவழக்கங்களோடு நம்மோடு பேசுகிறது .

ஆக இவைதான் திராவிடம் .

தமிழ் திராவிடம் அல்ல .

தமிழனும் இந்து அல்ல .

ஆரியர்களும் , திராவிடர்களும் சேர்ந்ததுதான் இந்து மதம் .

இந்த திராவிடர்கள் எல்லாம் ஆரிய விழாக்களை கொண்டாட , தமிழனோ இயற்கையை வழிபட்டான் .

இதனால் இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் , இஸ்லாமியர்கள் தவிர அனைவரும் இந்துக்கள் என்று 1830 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அறிவித்தது .


ஆனால் பௌத்தர்கள் இதை ஏற்கவில்லை . சமணர்கள் ஏற்கவில்லை .
ஆனால் தமிழன் மட்டும் தன்னையும் இந்து என்று ஒப்புகொண்டான் .
இப்படி கூறுவதை விட அவனுக்கே தெரியாமல் , அவன் பெயரோடு அது இணைக்க பட்டது .

அதனால்தான் இன்று வரை அவனுக்கு இம்மதத்தின் எந்த அடிபடையும் புரியவில்லை . எதற்கும் விளக்கம் தெரியவில்லை . 

தன் அடையாளங்களை தொலைத்தவன் யாரிடமாவது , பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருப்பான். 

அறிவுக்காக , பணத்திற்காக என்று . 

இதன் காரணமாகத்தான் இன்று ஜல்லிக்கட்டு கோவில் சார்ந்த விஷயம் இல்லை என்று கூறும்பொழுது யாரும் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை .

நம்மை நாம் தொலைத்ததால் தான் , ஆரிய பூஜைகள் எப்படி செய்வது என்று அன்றாடம் யாரோ ஒரு சாமியாரிடம் கேட்டு கொண்டு இருக்கிறோம் .

ஊரெல்லாம் சில்லறை தட்டுபாடு .மீதி காசுக்குபதில் எல்லாரும் சக்லட்  கொடுக்கிறான் . என்னவென்று பார்த்தல் நம்ம வீர தமிழச்சிங்கலெல்லாம் மகாலட்சுமி பூஜை செய்வதும் , வரலக்ஷ்மி நோன்பு இருக்கவும் கற்றுகொண்டார்களாம் . மகாலட்சுமி படத்தை வைத்து அல்லது சிலையை வைத்து எல்லா சில்லறை காசையும் போட்டு பூஜை செய்கிறார்கள் .
இவர்கள் கணவர்கள் எல்லாம் வேலை வெட்டி பார்க்காமலேயே பணக்காரர்கள் ஆவதற்கு மகாலக்ஷ்மியிடம்  வரம் கேட்கிறார்கள் .
இதிலே பெருமை வேறு .

ரொம்ப கேவலமாக இருக்கிறது . உழைப்பிற்கும் , இயற்கைக்கும், நம்மை சுற்றியுள்ள விலங்குகளையும் ,மதித்து அவற்றுடன் இணைந்து வாழ்வதுதான் தமிழ் மதம் .

அதை தமிழன் உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில் வரும்.

எனில் தமிழுக்கு கடவுள் யார் ?
இம்மதத்தின் அடிப்படைதான் என்ன ?
எப்படி இத்தனை குழப்பத்தை சுமக்கிறது ?
விடை தேட வேண்டியது தமிழர்களின் பொறுப்பு .


காமெடியன்கள் தான் மக்களின் வில்லன்கள்



காமெடியன்கள் தான் மக்களின் வில்லன்கள் . இவர்கள் புகழ்ந்து புகழ்ந்து, ஒரு நடிகனை , மக்களுக்கு தலைவன் ஆக்குகிறார்கள் .

தன் எல்லையை மிஞ்சி புகழ்ந்ததில் மனோரமாவுக்கும் , நாகேஷுக்கும் தனி இடம் உண்டு . இது எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி காலத்தில் !







ஜனகராஜ் மற்றும் ஒய் .ஜி .மகேந்திரன் இருவரும் ரஜினிக்கும்,கமலுக்கும் ஏகப்பட்ட விளம்பரம் கொடுத்தவர்கள் .

இதை தொடர்ந்து பல நகைசுவை நடிகர்கள் இந்த சேவையை செய்திருக்கிறார்கள் .

இன்று இருக்கும் ஒரு சிலர் அதை செய்யமாட்டேன் என மறுப்பு தெரிவித்து அதன் விளைவாக வடிவேலும் விஜய்காந்தும் சண்டையிட்டு கொண்டது அனைவரும் அறிந்ததே !

இந்த நகைசுவை நடிகர்களை விட மோசமானவர்கள் பாடல் எழுதும் கவிங்கர்கள் . 

வாலி முதல் அனைவரும் நடிகர்களை உயர்த்தி விட்டவர்கள் .




நான் ஆணையிட்டால் பாடல் கொடுத்த பின்விளைவும் நமக்கு தெரியும் .
நான் கைவைச்ச அது நடக்கும் இது நடக்கும் என இன்று இருக்கும் இளைய நடிகர்கள் எல்லாரும் ஒரு பில்ட் அப்பு கொடுப்பதற்கு காரணமும் இந்த பாடல் எழுதுபவர்கள்தான் .

இன்றும் கன்னடம் , தெலுங்கு ,மலையாளம் , போன்ற மொழிகளில் ஹீரோ பாடும் பாடல் தற்பெருமை பாடல் அல்ல . ஒன்று மொழி பெருமை பேசும் பாடலாக இருக்கும் . அல்லது ஊர் பெருமையாகத்தான் இருக்கும் .
இதில் தமிழ் மக்கள் தான் மிகவும் மோசம் .

தற்பெருமை பேசக்கூடாது என்று சொல்லி தரும் ஒரே மொழி .

ஆனால் வருபர்கள்,போவோர்கள் எல்லாம் தற்பெருமையுடந்தான் பேசவே ஆரம்பிக்கிறார்கள் . இதையும் காதில் போட்டு கொண்டு , மூளையில் சுமந்து கொண்டு அரசியலிலும் , அவர்களுக்கு ஒட்டு போடும் ஒரே ஏமாளி கூட்டம் இந்த தமிழுக்கு சொந்தக்காரர்கள் என்று அலட்டிகொள்ளும்  தமிழர்கள்தான் .!

மேற்படி பத்திரிகைகள் கொடுக்கும் அக்கபோரு பெரிய அக்கபோரு !

2008 மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்ற போது இந்த
பட ம் எடுக்க பட்டுள்ளது .


கோவிலுக்குள் செருப்பு இல்லாமல் போவது அத்தனை பெரிய விஷயமா?
இதை பெரிய விஷயமென செருப்பில்லாமல் நடக்கும் ஐஸ்வர்யா ராய் என விளம்பரம் கொடுக்கிறது ஊடகம்.

டிசம்பர் 2015 சென்னை வெள்ளத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செருப்பில்லாமல் நடந்து சென்று விட்டாராம் ஹன்சிகா .
என்ன கொடுமை இது !இதெல்லாம் ஒரு செய்தியா ?
ஆயிரகணக்கான மக்கள் இறந்து போ ய் இருக்க செருப்பில்லாமல் நடந்து போனதை ஒரு செய்தி என்று வெளியிடுவதில் எந்த பத்திரிக்கையும் வெட்க படவே இல்லை .


நம் கண்ணையும் , கருத்தையும் மறைத்து கலாசாரத்தை அழிக்கும் சினிமா தேவையா ?


Thursday, 3 December 2015

கனல் கொண்ட சென்னைவாசி

தன்னலமற்ற சென்னைவாசி

ஊழிகால சென்னைவாசி

இதுவல்ல இப்போது உன்பெயர்

கனல்  கொண்ட சென்னைவாசியாக நீ பேர் எடுத்திருந்தால் அதுதான் நீ சென்னைக்கு செய்யும் கடமை

சென்னை தானே உன்னை வாழவைத்தது
சென்னைதானே உன்னை பெருமை அடித்து கொள்ள செய்ததது
சென்னை தானே உனக்கு ஷாப்பிங் மாலையெல்லாம் அறிமுகம்  செய்ததது
சென்னைதானே உனக்கு பெப்சிக்கும், கோலாவுக்கும் பழக்கபடுத்தியது சென்னை தானே உனக்கு KFC யும், MCDONALD யும் சொல்லி தந்தது
                                     இதைத்தானே பெருமை என்று ஊருக்கெல்லாம் சொல்லி                                            கொடுத்தாய்


ஆனால் நீ செய்தது என்ன
குப்பை அடித்தாய் - இறக்கபடுகிறேன் பேர்வழி என்று குப்பை எடுப்பவர்களையும் வேலை செய்ய விடாமல் தடுத்தாய்

எவன் தப்பு செய்தாலும் சென்னை என்றால் இப்படிதான் என்று
சென்னைக்கு புதிய விளக்கம் கொடுத்தாய்

நடந்தவை கடந்து போகட்டும்.

இனி நீ உனக்கு வாழ்வழித்த சென்னையை மீட்டேக்க முயற்சிக்கலாமே !

ஏரியை மூடி உனக்கு ஒருவன் விலைக்கு விற்றான்

அவனை தேடி துவைத்து எடு.
      அப்போதுதான் மீண்டும் எவரிடமும் ஏரிக்கு விலை பேச மாட்டான்

கட்டிடம் கட்டி கொடுத்த engineer க்கு பாடம் புகட்டு
       அப்போதுதான் இது போன்ற இடங்களில் வீடு கட்டுவதை தவிர்ப்பான்

பில்டர் என்ற பெயரில் ரௌடிசம் செய்த ரௌடிகளைஎல்லாம் தேடு

குப்பை அள்ளாத மாநகராட்சியை அடிகடி நீ சென்று தூர்வாரு

எல்லாவற்றையும் அராசங்கமே செய்யாது நாமே செய்து கொள்ள வேண்டியதுதான் என்று யாரோ ஒருவர் இருவர் செய்யும் வேலைகளால் தான் மாநகராட்சி மெத்தனமாக யாரோ செய்து கொள்ளட்டும் என்று எல்லா இடங்களையும் குப்பையாக்கி அதிலே உன்னை மிதக்க வைத்துள்ளது

யார் எந்த வேலை செய்ய வேண்டுமோ அவரிடமிருந்து அந்த வேலையை வாங்க வேண்டும் . உனக்கு எந்த நிறுவனமும் சும்மா சம்பளம் கொடுக்க வில்லை

இக்கட்டான சூழ்நிலையிலும் அதிக விலைக்கு விற்கும் கடை வியாபாரிகளை குப்பைகளோடு குப்பையாக்கு

இப்போதும் வரி கேட்டு நிற்கும் சுங்க சாவடிகளை கடலோடு இணைத்து விடு

அதிக லாபம் பார்க்க போராடும் விடுதிகளையும் , பேருந்துகளையும் எறிகளுக்குள் எறிந்துவிடு

இதையெல்லாம் விடுத்து வடஇந்திய சானல்கள் நம்மை காட்டவில்லை என்று வருந்துவது
சினிமா நடிகர்களிடம் பிச்சை எடுப்பது
ஈழத்தமிழர்கள் நமக்கு ஒரூ பைசா கூட அனுப்பவில்லை என்று கூறுவது

இதெல்லாம் உன்னை நீயே ஏமாற்றிகொள்ளும் வழிவகை

இதுவல்ல உன் பிரச்சன்னைக்கு முடிவு

நீ முடிவெடு . சென்னைக்கு செய்யவேண்டிய கடமையை தீர்மானம் செய்.!

Wednesday, 2 December 2015

நில வேம்பு எனும் சிரியா நங்கை








நிலவேம்பு குறித்து வாஸ்து கூறும் படம் இது. மிக கொடுமை அல்லவா இது ?


எந்த ஒரு தாவரமும் வீட்டை அடகு வைக்க சொல்லாது.

கணவனை இறந்து போக சொல்லாது .

இது அடிப்படையில் நம்மை பயமுறுத்துவதர்க்காக கூறபட்டிருக்கலாம் .

ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள் .

இது உண்மை அல்ல .

ஆமை நீரோட்டத்தை கண்டறியும் சக்தி கொண்டது . அது எந்த வழியாக போகிறதோ அந்த பாதையில் நம் முன்னோர்கள் வீடு கட்ட மாட்டார்கள்.

அப்படி கண்டுபிடித்து கட்டபட்டதால்தான் இன்றளவும் திருசெந்தூர் , ராமேஸ்வரம், ராமநாதபுரம் திருக்கோவில், தஞ்சை பெரிய கோவில், மதுரை கோவில்களெல்லாம் தாங்கி கொண்டு நிற்கின்றன.

இதனை அறிந்த ஒரு சில கூட்டம் ,நமக்கு ஆசிரியர் வேலை பார்கிறேன் என்று கூறி , மன்னர்களுக்கும் கூஜா தூக்கிய அந்த கூட்டம் சொன்னதுதான் ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது. அன்று முதல் ஆமை வளர்ப்பை விட்டுவிட்டோம். அதன் விளைவு நீரோட்டம் தெரியாமல் வீடுகள் கட்டி கட்டி , உதாரனமாய் இன்று மாறியுள்ளது சென்னை.

எதை எல்லாம் நமக்கு நம்பிக்கை ஆக்கி விட்டார்களோ அது இன்று மூட நம்பிக்கை வரிசையில் நிற்கிறது.

இதன் பின்னணியில் நம் கணிதமும், அறிவியல் அறிவும் மறைந்து நிற்கிறது.

இதே போல் உருவாக்கப்பட்டதுதான் வீடின் முன்னால் முள் செடி வளர்க்க கூடாது என்பது.

ஆமாங்க நம் முன்னோர்கள் எப்போதும் வீட்டின் முன்னால் கற்றாளை எனப்படும் முள்செடி வளர்த்தனர்.
அது மிகுந்த மருத்துவ குணம் கொண்டது.

அந்த கூட்டத்தில் சிலர் மருத்துவர்களாக ஆனார்கள் . அதன் விளைவு முல்செடிகள் வீட்டின் முன்னாள் இருந்து நீக்கப்பட்டது.

ஆனால் எல்லா தோல் வியாதி மருத்துவர்களும் இதையே தான் aloevera ஜெல் என்ற பெயரில் எழுதி கொடுக்கிறார்கள் . எல்லா அழகு சாதன கிரிம்களும் இதைதான் சுமந்து வருகிறது . நமக்கு கட்டளை இட்ட அந்த கூட்டத்தின் பெண்கள் மட்டும் இந்த கற்றாலையை எப்போதும் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றனர்,

அந்த வரிசையில் சேர்த்ததுதான் இந்த நிலவேம்புவை வீட்டில் வளர்க்க கூடாது என்பது. நீங்களே யோசித்து பாருங்கள் ,இதனை வளர்த்தால் மண் கெட்டுபோகும் என்றால் கூட பரவாயில்லை . கணவன் இறந்து போவான் என்பதும் மனைவி இறந்துபோவால் என்பதும்  எத்தனை பெரிய பயமுறுத்தல் . இன்னுமா நாம் நம்ப வேண்டும் ? முடியல! இன்னும் எத்தனை தவறுகள் நம்மிடத்தில் விதைக்கப்பட்டுள்ளனவோ ?


Sunday, 29 November 2015

miss world - விளம்பரங்களும் !









1994 ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனார். அந்த ஆண்டு முதல் அதிகபடியாக அழகு சாதன பொருட்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது .








இந்த அம்மா பாட்டுக்கு இருந்தாங்க!. இவங்கள இந்த நாட்டில் , இந்த உலகத்தில், விளம்பர உலகத்தில் மிகவும் பிரபல மாக்கி , சாதாரண விலையில் இருந்த உடைகள் , நகைகள், அழகு சாதன பொருட்கள் எல்லாவற்றையும் விலை வுயர்ந்த பொருளாக மாற்றிய பெருமை தமிழர்களையே சாரும். ஆமாங்க இவங்க உலக அழகி ஆன பிறகு அவங்கள அழைச்சிட்டு வந்து இருவர் என்ற ஒரு படத்தில்  அறிமுகபடுத்தி, பற்றாக்குறைக்கு ஜீன்ஸ் படம் மூலம் அவங்கள பிரபலமாக்கி தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டவர்கள் வேற யாரும் கிடையாது. இந்த மாதிரி விஷயத்தில் வேறு யாரும் தமிழனை மிஞ்ச இன்னும் பிறக்க வில்லை . இதில பெருமை வேறு .


மேடத்தோட மொத்த வருமானம் $35 மில்லியன் இந்த ஆண்டு.

ஐஸ்வர்யா ராய்க்கு கல்யாண் jewellers  மூலம் ஓராண்டு வருமானம் $1,610,000  . இது 2011 ல் போடப்பட்ட ஒப்பந்தம்.



2013 ல் இது $ 3 மில்லியனாக மாறியுள்ளது .

இப்போ கல்யாண் jewellers யாருக்கிட்டே இருந்து இந்த காச வாங்குது.

பாவம் யாரோ அந்த இளித்த வார்கள் ! தமிழன்தான் !




லோரியால் பாரிஸ் வட இந்திய வில் மிக பிரபலம் .
தெனிந்திய வில் தான் பாயர்&லோவேலி ( Fair & Lovely ) பிரபலம் .
இந்த L O real அழகு சாதன பொருட்களின் ambassador இந்த அம்மணிதான்.
அபுடின்ன லாபத்தில் பங்கு.
இப்படி தாங்க யாரோ ஒருவருடைய சொத்தை அதிகரிப்பதற்க்காக நாமெல்லாம் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டி உள்ளது.

இங்கே குறிப்பிட்டுள்ளது ஒருவரை பற்றித்தான்.
ஆனால் எல்லா அழகிகளும்,ஏன் எல்லா நடிகர் , நடிகைகளும் இப்படித்தான்.

யார் மீதும் இவர்களுக்கு அக்கறை கிடையாது.
எந்த விலை வாசி உயர்வு குறித்தும் கவலை கிடையாது.
எந்த பொருளின் தரம் குறித்தும் இவர்களுக்கு தெரியாது.

இவர்களுக்கு தெரிந்தெல்லாம் பணம்,பணம் பணம் .

இவர்களை வைத்து பணம் பண்ண நிறுவங்களுக்கும் தெரியும்.

பணம் சேர்க்க தன அழகை காட்டும் இவர்களால் நமக்கு பெருமையா ?

இவர்கள் நமக்கு தேவையா ?



இப்போதெல்லாம் ஆண்அழகன் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுகிறது .ஏன் தெரியுமா ?

ஆண்கள்தான் தற்போது அதிகமாக fairness cream பயன்படுத்துகிறார்கள் என்று பாயர் &லோவேலி யின் கணக்கெடுப்பு கூறுகிறது .


Saturday, 28 November 2015

miss world - இந்தியாவும்



இவங்க தாங்க முதல் மிஸ் வேர்ல்ட் .
இவரோட பேரு கிகி ஹகன்ச்சொன் . இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் .
இது 1951 ல் நடந்தது. அப்போ இதுக்கு பேரு மிஸ் வேர்ல்ட் போட்டி  கிடையாது.  இந்த போட்டியின் பெயர் பிகினி போட்டி . இந்த போட்டியை  ஆரம்பித்தவர்
எரிக் மோர்லி
( Eric Morley )

Eric Morley in 1967

இதோ பெண்கள் சூழ்ந்திருக்க அமர்ந்திருகிறாரே அவர்தான் எரிக் மோர்லி
 1952 ல் பிகினி போட்டிக்கு பதில் மிஸ் வேர்ல்ட் என்று வணிக உரிமை ( Trade  Mark ) பெற்றார் .

அதன் பிறகு 1951 முதல் 1959 வரை சாதரணமாக நடந்து வந்த மிஸ் வேர்ல்ட் 1959 முதல் BBC  தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது . 1960 முதல் மக்கள் அதிகம்  விரும்பி பார்த்த நிகழ்ச்சியும் அதுதான்.

1951 முதல் 2000 வரை லண்டன் மட்டுமே நடத்திவந்தது.
இதிலிருந்து கிடைக்கும் வருமானம் $200 மில்லியன் குழந்தைகள் நலனுக்காக செலவிடப்படுகிறது . ஆனால் இது ஒரு தனியார் நிறுவனம் ஆகையால் இதன் கணக்கு வழக்குகள் வெளியிடப்படுவதில்லை . இந்த வருமானம் யார்யாருக்கு எங்கு செலவிடப்படுகிறது என்பது வெளியில் தெரியாது.

2000 ல் மோர்லி தனது 82 வது வயதில் இறந்து போனார் . அதன் பிறகு அவரது மனைவி ஜூலியா நடத்தி வந்தார்.

இன்றைய நிலையில் 100 நாடுகள் இந்நிறுவனத்திடமிருந்து franchise பெற்று இப்போட்டியை நடத்தி வருகின்றன. மிஸ் உனிவெர்ஸ் , மிஸ் எர்த், மிஸ் டாலேன்ட் , மிஸ் பீச் பியுட்டி , மிஸ் ஸ்போர்ட்ஸ் , வேர்ல்ட் டாப் மாடல் எல்லாம் இந்நிறுவனத்திடமிருந்து francise யாகவும், நேரடி போட்டியாகவும் இவுலகிற்க்கு வந்தவை.


இந்திய உலக அழகிகள் 

1966 ல் ரெய்ட பாரிய ( Reita Fariya ) என்பவர் இந்திய வின் சார்பாக போட்டியிட்டு வெற்றியும் பெற்ற முதல் ஆசியா பெண். இந்தியாவை  சேர்ந்த உலக அழகி .






இவர் மருத்துவம் படித்தவர். இவர் உலக அழகி ஆன பின்னர் , இவர் எந்த ஒரு விளம்பரத்திற்க்கும் ஒப்புக்கொள்ளவில்லை. மேற்படி சினிமாவில் நடிக்கவும் விரும்பவில்லை. மருத்துவ துறையிலேயே தொடர்ந்து பணியாற்றினார்.



பிறகு 1994 ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனார் .
1997 ம்  டயானா ஹைடன் உலக அழகி ஆனார்.
யுக்தா முகி 1999 லும் , பிரியங்கா சோப்ர 2000 லும் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.





Add caption



இது தாங்க உலக  அழகிக்கான வரலாறு. நாம் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு.

ஆமா 1966 ல் ரெய்ட பட்டம் வென்ற போதும் அவர் எந்த விளம்பரத்திலும் வரவில்லை.

1991 ம் ஆண்டு திரு . பி. வி. நரசிம்ம ராவ் பிரதமாராக இருந்தபோது , நிதி அமைச்சராக இருந்த
திரு. மன்மோகன் சிங்க் அவர்கள் L .P .G எனும் ஒப்பந்தத்தில் கையெலுத்திட்டார் . அதன் பிறகு இந்திய வில் தனது பொருள்களை விற்பனை செய்ய தயாராய் இருந்த நிறுவனங்கள் உலக அழகிகளுடன் விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன் விளைவு தான் இந்திய பெண்கள் தொடர்ச்சியாக அழகி பட்டம் வென்றனர்.

பல நிறுவனங்கள் தங்கள் பொருள்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தனர்.
ஆனால் 1994 முதல் 2000 வரை எந்த கஸ்டமர்ஸ் இருந்தார்களோ அந்த எண்ணிகையில் சிறிதும் மாற்ற முடியவில்லை 2000 பிறகு.

இன்று வரை எல். ஐ . சி இன் வாடிக்கையாளர்களே 25 கோடியை தாண்ட வில்லை.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 127 கோடி .

அழகு சாதனை பொருள்களின் வாடிக்கையாளர்கள் அதிக படியாக 3 கோடியை தாண்டமுடியவில்லை .

இந்த 3 கோடி பேரிலும் 1 கோடி மக்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதி 2 கோடி வாடிக்கையாளர்கள் இந்திய  முழுதும் உள்ளனர் .

அதன் விளைவு 2000 த்திற்கு பிறகு அழகிகள் யாரும் உருவாகவில்லை. இது நிருவனகளை பொருத்தவரை.!

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அழகி போட்டியில் தேர்ந்தெடுக்க பட்ட பெண்களை விடவும் அதிக அழகிகள் உலவி கொண்டே இருக்கின்றனர்.

இங்கு எல்லோரும் அழகிகள்தான் !



Thursday, 26 November 2015

நடிகனும், தலைவனும் !



சினிமா நமக்கு சொல்லி தரும் கற்பிதங்கள் :

வியாபாரத்தில் ஈடுபடுபவன் பாவ, புண்ணியம் பார்க்க கூடாது. லாப, நஷ்டம் மட்டுமே பார்க்க வேண்டும் .


கம்பும் , கேழ்வரகும் உண்பவன் ஏழை  அரிசி சாதம் உண்பவன் பணக்காரன் . இந்த காட்சி பழைய திரைப்படங்கள் எல்லா வற்றிலும் வருகிறது. அதன் விளைவுதான் இன்று நம் நாட்டின் பாரம்பரிய தானியங்களை  இழந்தோம் .

படித்தவன் தவறுகளை தவறு இல்லாமல் செய்யலாம் .

சிகரெட் பிடிக்கலாம் . அதையும் ஸ்டைலாக செய்ய கற்று கொடுத்து இன்று நாடு முழுக்க கான்செர் நோயாளிககளை உருவாக்கி விட்ட பெருமை சினிமாவையே சேரும்.



ஆப்பிள் உண்பவன் உயர்தவன் . இதை ஒரு சிறுவனோ , சிறுமியோ பார்த்தவுடன்  background மியூசிக் மிக சோகமாக இழைந்தோடும். இதே சூழ்நிலையில் இருப்பவர்கள் தன்னை தானே , தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுத்தி கொள்வர் .

ஆப்பிள் அப்படி ஒன்றும் உயர்வான பழம் இல்லை.


கதாநாயகன்  திருடலாம், ஒரு பெண்ணை வம்பிலுக்கலாம் , அதை நாம் பார்த்து ரசித்து , சிரித்து கொண்டே  நகைசுவையாக எடுத்து கொள்ள வேண்டும் .




வில்லன் என்று காட்டப்படுபவர்   தவறு  செய்தவுடன்  பொங்கி எழுந்து அவரை அடிக்கிறார் ஹீரோ .

முதல் காட்சி வரை தவறு செய்த ஹீரோ , அடுத்தவனை தட்டி கேட்க்கும் அளவுக்கு யோக்கியனா ?


நானும் பாக்குறேன் எல்லா படத்துலேயும் இந்த ஹீரோயினி எல்லாம் மேல துப்பட்டான்னு ஒன்னு போடாமத்தான் வர்றாங்க. ஒரு சீன் ல துப்பட்ட போடுறதும் , அதை வில்லன் இழுக்குறதும் ,அன்னைக்குத்தான் அந்த பொண்ணுக்கு கற்பு பறிபோன மாதிரி ஹீரோ காப்பாதுறதும் ,முடியல போங்க.





அப்புறம் பாவம் இந்த காமெடியன்கள் . இவர்களுக்கு ஒரே ஒரு வேலைதான் .படம் முழுக்க ஹீரோ பற்றி புகழ்ந்து பேச வேண்டும் . மிக கொடுமை இது . நடைமுறை வாழ்கையில் கொஞ்சம் கூட பொருந்தாத இந்த புகழ்ச்சியை எப்படித்தான் செய்கிறார்களோ .? ஆனால் இந்த காமெடியன்கள் தான் மக்களின் வில்லன்கள் . இவர்கள் புகழ்ந்து புகழ்ந்து, ஒரு நடிகனை , மக்களுக்கு தலைவன் ஆக்குகிறார்கள் . இது இவர்கள் வேலையா ?


Wednesday, 25 November 2015

விஜயும் , அஜித்தும் !



புலி படத்தில் விஜய் வேதாள இனத்தை சேர்ந்தவர் .

அடுத்த அஜித்தின் பட பெயர் வேதாளம் 


வேதாள படத்தின் டயலாக் தெறிக்க விடலாமா ?

அடுத்த விஜய் படத்தின் பெயர்   தெறி .

இதுல வேதாள கூட்டமா மாறவேண்டியது மக்கள்

தெறிக்க வேண்டியது நடிகர்கள் .

போதுமட சாமி உங்க நூலு அறுந்து போச்சி .





நண்பர்களாகவே காட்டி கொள்ளும் விஜய்க்கும் , அஜித்திற்கும் ,
 வெளியில் ரசிகர்கள் தங்கள் பெயர்களால் சண்டை இட்டு கொள்வது தெரியாதா என்ன ?

ஆனால் இருவருமே பலே கில்லாடிகள் !

ஊரு இரண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே !

Friday, 20 November 2015

சென்னையில் வெள்ளபெருக்கு !

கடந்த 8 ம் தேதி தொடங்கி ( 20.11.2015 )
இப்போது தான் சற்று ஓய்வெடுக்கிறது மழை !

அதற்குள்ளாக லக்ஷத்தீவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் . அடுத்த 20 நாட்களுக்கு மழை பெய்யும் என்று கூறுகிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.

ஊரை சுற்றிலும் நீர் !
ஆனால்
 குடிக்க நீர் இல்லை !
குளிக்க நீர் இல்லை !

குப்பைகாளால் நிறைந்திருக்கிறது !
குமட்டும் வாசனைகலோடு !
குடிசளும் மிதக்கின்றன !
கும்மாளம் மிட்ட கார்களும் மிதக்கின்றன !

மனிதனுக்குத்தான் வேறுபாடுகள் !
மனிதனுக்குள் வேறுபாடுகள் பார்க்க  தெரியாது எனக்கு !
என்று சொல்லாமல் சொல்லும் வெள்ளம் !

இத்தனைக்கும் இடையில் நடிகர் சங்கம் ஒரு நாடகம் போடுகிறது.

பொம்மை தலைவர் நாசர் தலைமையில் உண்மை தலைவர் விஷால் கூறுகிறார் நடிகர் சங்கம் தமிழ்நாட்டின் பிரச்சனைகளில் ஈடுபடாது என்று !
பிறகு எந்த நாட்டின் பிரச்சனைகளில் ஈடுபடும் .

ஓ ! அவர்களுக்கெல்லாம் வேறு வேறு நாடுகள் உள்ளன என்று அவர்களும் சொல்லாமல் சொல்லுகின்றனர்.

அதற்க்கு பதிலும் தருகிறார் விஷால் , எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை பார்த்து கொள்ள அரசு இருக்கிறது என்று .

உண்மை என்று ஒரு கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது .

ஒப்பு கொள்கிறோம். இது உங்கள் வேலை இல்லை தான் .

ஆனால் தமிழ்நாட்டின் அரசு பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் ஒரு நாள் ஊதியத்தை வெள்ள நிவாரணத்திற்காக கொடுத்தனர் .
அவர்களுக்கு தெரியாதா இது அரசின் வேலை என்று.

சி.ஐ.டி .யு ஊழி யர்கலெல்லாம் ஒரு நாள் ஊதியத்தை நிவாரணமாக கொடுத்தனர் .
அவர்களுக்கு தெரியாத இது அரசின் வேலை என்று 

ஆட்டோ காரர்களும், இன்னும் எத்தனை எத்தனையோ தமிழ் நெஞ்சங்கள் உழைத்து கொண்டு இருக்கின்றனர் .
அவர்கள் யாருக்கும் தெரியாது இது அரசின் வேலை என்று.

எங்கே அந்த த்ரிஷா , ஒ ! நாய்களுக்காகத்தான் அவர் பேசுவாரோ ?

எங்கே அந்த குஷ்பூ . ஒ !அடுத்த முதல்வர் என்று கனவில் இருக்கிறாரா ?

கோவை சரளாவும், கருணாசும் தமிழ் நாட்டவர்கள் தானே!
ஒ ! விஷால் பின்னால் ஒளிந்து இருக்கிறார்களா?

எங்கே நம்ம சூரியாவும் , கார்த்திக்கும் , அவர்கள் ஆந்திராவிற்கு மட்டும்தான் உதவி செய்வார்களா ?
அங்கெல்லாம் அரசு எந்த வேலையும் பார்ப்பது இல்லையோ ?

உங்களை எல்லாம் எவர்கேட்டார் உதவி . 

 ஒவ்வொரு படம் வெளி வரும் போதும் , ஆண்டவன் சொன்னால் நான் முதல்வராவேன் என்று கூறிக்கொண்டு இருப்பது உங்கள் வேலையா ?

புலி படத்தின் கதாநாயகனின் கடைசி வசனம் இது :
நான் உங்களுக்காக தலைவன் ஆவேன் ! என்று . இது உங்கள் வேலையா ?

வரலாறுகளை புரட்டினால்  நடிகர் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார் 
நடிகை ஜெயலலிதா முதல்வர் ஆனார் 
திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆனார் 

இன்னும் இப்போட்டியில் விஜயகாந்த் நிற்கிறார் .
ஏன் நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள்  கட்சி தொடங்கினார்.
நடிகர் கார்த்திக் அகில இந்திய நாடாளும் கட்சி தலைவரானார் 
நடிகர் சீமான் நாம் தமிழர் கட்சி மூலம் கத்தி கதறுகிறார் .
நடிகர் டி ..ராஜேந்தர் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் கட்சி தொடங்கினார் 
இன்னுமும் நடிகர் விஜய் நான் அம்பானி ஆவேன் நான் அம்பானி ஆவேன் என்று கூறி கொண்டே இருக்கிறார் .
நடிகர் விஷாலும், நடிகர் சிம்பும் கூட இந்த ஓட்டபந்தயத்தில் ஓடி வரலாம் .
தவறில்லை . 

இதெல்லாம் உங்கள் வேலையா ?
எதை பயன்படுத்தி கட்சி தொடங்குகிறீர்கள் .
நீங்களெல்லாம் மக்களுக்கு எப்படி அறிமுகமாகிறீர்கள் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் .

எதோ நாட்டிற்கு சேவை செய்து மக்களிடம் நற்பெயர் எடுக்க வில்லை .
ஸ்டைல் செய்யவது எப்படி என்று செய்து காட்டுவது சேவையா ?
திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக வாழ்வது எப்படி என்று வாழ்ந்து காட்டுவது சேவையா ?
உங்கள் திரைப்படங்களில் எல்லாம் எதோ நடப்பதை எல்லாம் அப்படியே செய்து காட்டுகிறோம் என்ற பெயரில் ஊரில் ஒரு மூலையில் உள்ள குப்பையை அள்ளி ஊரெல்லாம் கொட்டுவது போல் எங்கோ நடந்த ஒரு கொலையை கூட எப்படி செய்வது என்று விலாவரியாக காட்டுவது சேவையா?
போலியான வாழ்கையை கற்று கொடுத்தது சேவையா?
பெண்களுக்கு தவறான வாழ்கை முறைகளை கற்று கொடுக்கிக்ரீர்களே !அது சேவையா? 

உங்களை சொல்லி குற்றமில்லை . உங்கள் மூஞ்சி எல்லாம் காட்டி காட்டி தமிழ் மக்களை ஏமாற்றியது ஊடகங்கள்.

ஊடகமெல்லாம் நம்மை காட்டுகிறதே என்று ஏரியை எல்லாம் மூடி எவனோ ஒருவன் போட்ட மனைகெல்லாம் விளம்பரம் செய்து காசு பார்த்தீர்களே அதுவும் செவைதானோ ?

இத்தனை மழை வெள்ளத்திலும் வடிவுக்கரசி கொடுக்கும் மனை விளம்பரமும், நிழல்கள் ரவியின் விளம்பரமும் விடாமல் வந்து மனிமங்கலத்தை வாங்கிகங்க என்று கூறும்போது தான் தெரிகிறது . மழையிலும் , புயலிலும் உங்கள் சேவை தொடர்கிறது என்று.!

நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள் !

எல்லா நடிகர்களும்தான் மக்களை பார்த்து எங்களை வாழவைக்கும் தெய்வங்களே ! என்று பேசுகிறீர்கள் .

உங்களுக்கு மக்கள்தான் தெய்வம் 
மக்களுக்கு ஒருபோதும் நீங்கள் தெய்வமாக முடியாது !

கேவலம்!
 நாவடக்கம் இல்லாமல் போனதால் சரத்குமார் நடிகர்சங்க தேர்தலில் தோற்று போனார் .
நாவடக்கம் இல்லாமல் , எதோ தமிழ்நாடு உங்கள் காலடியில் இருப்பது போல் , உங்களை கெஞ்சி கொண்டு இருப்பது போல் எண்ணி நீங்கள் கூறிய வார்த்தைகள் உங்கள் சினிமா துறையையே அழிக்கும் .

1757 ம் ஆண்டு முதன்முதலில் வெள்ளையனிடம் அடிமை ஆகியது .
1857 ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திர போர் ஏற்பட்டது .
இது தான் இந்திய சுதந்திரத்தின் அடிப்படை .

1916 ம் ஆண்டு கீசகவதம் என்ற திரைபடத்தின் மூலம் நடிகர்கள் ஆள தொடங்கினர் .
2016 ம் ஆண்டு முதல் இந்நிலை முடிவுக்கு வர போகிறது .
ஒரு வகையில் விஷாலுக்கு நன்றி . சினிமா உலகை எதிர்க்க அஸ்திவாரம் போட்டதற்கு !


ஊடகங்களே .! இது உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கிறோம் .
எவனிடமாவது தமிழகதிற்கு அதை செய்வீர்களா இதை செய்வீர்களா என்று பிச்சை கேட்டு உங்கள் பக்கத்தையும் , வயிற்றையும் நிரப்ப மக்களை அவமான படுத்தாதீர் .!

இங்கு எவனும் பிச்சைகாரன் அல்ல .
வந்தாரை வாழ வைத்த தமிழகத்திற்கு வாழவும் தெரியும் .

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...