Monday, 14 March 2016

தஞ்சாவூர் - நாயக்கர்கள் ஆட்சி


கிருஷ்ணா தேவ ராயர்


அச்யுத தேவ ராயரும் , கிருஷ்ணா தேவ ராயரும் சகோதரர்கள் .

விஜயநகர அரசின் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர்கள்  திம்மப்பா நாயக்கரும் அவரது சகோதர் நாகம்ம நாயக்கரும் .

கிருஷ்ணதேவ ராயரும் , அச்சுத தேவ ராயரும் துளுவ வம்சத்து மன்னர் துளுவ நரச நாயக்க ரின் மகன்கள் .
இவர்களின் தளபதி கள் இருவர் . ஒருவர் திம்மப்பா நாயக்கர் , மற்றொருவர் நாகம்ம  நாயக்கர் .

இந்த திம்மப்பா நாயக்கரின் மகன் தான் செவப்ப நாயக்கர் .
இவர்தான் தஞ்சையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தவர் .


நாகம்ம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயகர்.
இவர்  தான் மதுரையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தவர் .








அச்யுத தேவ ராயர் மற்றும் அவரது மனைவி  திருமலம்பா

திம்மப்பா நாயக்கருக்கு 4 மகன்கள் . அவர்களில் இரண்டாவது மகன்தான் செவப்ப நாயக்கர் . இவர் அச்யுத நாயக்கரின் மனைவியாகிய திருமலம்பாவின் தங்கை மூர்திம்பவாய் திருமணம் செய்த கொள்கிறார் .
அப்போது தனக்கு சீதனமாக தஞ்சாவூரை தர வேண்டுமென அச்யுத நாயக்கரிடம் கேட்டு பெற்று கொண்டு , தஞ்சையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தார் .1509 முதல் 1530 வரை கிருஷ்ணா தேவ ராயர் ஆட்சியின் கீழ் மட்டமே தஞ்சை இருந்தது .

1530 ல் கிருஷ்ணதேவ ராயர் தனது சகோதரர் ஆட்சிக்கு வரட்டும் என்று கூறி விட்டு இறந்து விடுகிறார் .
தன்னுடைய சகளையாகிய அச்சுத தேவாரயருக்கு கப்பம் கட்ட மறுத்து தானே இனி தஞ்சையின் மன்னன் என கூறி தனக்கென தனி அரசை உருவாக்குகிறான் செவப்ப நாயக்கன் .

பிறகு 1532 முதல் 1580 வரை ஆட்சி செய்துள்ளார் செவப்ப நாயக்கர் .

அச்யுத தேவ ராயரின் நினைவாக தனது மகனுக்கு அச்யுத நாயக்கர் என்று பெயர் இட்டார்


நிறைய அக்ரஹரன்களை தஞ்சையில் எழுப்பி உள்ளார் .
நீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்து கொண்டார்.
திருமலா கோவிலுக்கும் , ஸ்ரீசைல கோவிலுக்கும் நிறைய நன்கொடைகள் அளித்துள்ளார் .

தஞ்சையில் இருந்து செய்யப்பட்ட வரிவசூலானது திருபதிக்கும் , ஸ்ரீசைலதிர்க்கும் , பிராமணர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது .

தஞ்சை பெரிய கோவில் சுற்று சுவர் பராமரிப்பு பணியை செய்துள்ளார் .


செவப்ப நாயக்கன் வாழும்போதே 1560 களில் இவரது மகன் அச்சுத நாயக்கனும் ஆட்சிக்கு வருகிறான். இருவரும் இணைந்து 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர் .

1614 வரை ஆட்சியில் இருந்த அச்சுத நாயக்கரும் கோவில் திருப்பணிகள் பல செய்துள்ளார் .

ஸ்ரீரங்கம் சுற்று சுவர்


இவர் காலத்திலேயே 1600 களில் இவரது மகன் ரகுநாத நாயக்கன் ஆட்சிக்கு வருகிறான் . தஞ்சாவூர் வரலாற்றிலேயே மிக முக்கிய ஆட்சியாக அமைந்தது ரகுநாத நாயக்கனின் ஆட்சிதான்.

தஞ்சையின் வரலாற்றில் , மாற்றங்களை கொண்டு வந்தவர் ரகுநாத நாயக்கர் .நாயக்க வம்ச முடிவிற்கும் , ஐரோப்பிய வணிகர்களின் வருகைக்கும் அஸ்திவாரம் போட்டவரம்   ரகுநாத நாயக்கர்தான்  .

--------------------------------

தஞ்சாவூர் - ரகுநாத நாயக்கர்



ரகுநாத நாயக்கர் , அச்சுத நாயக்கரின் வாரிசு ஆவார் .


இவர்  திருவாரூர் கோவிந்தா தீட்சிதரின் சீடர் . இவர் காலத்தில் சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக நூல்களும் , பாடல்களும் எழுதப்பட்டன. எனவே இவரது ஆட்சியானது அப்போது தஞ்சையில் வாழ்ந்த பிராமண , தெலுங்கு , கன்னட மக்களுக்கு பொற்காலம் ஆகும் .




தஞ்சை அக்ரஹார வீதிகள் .



தஞ்சை வாழ் பிராமணர்களுக்கு புத்தி அக்ரஹாரங்களை கட்டினார் . தஞ்சையின் வடிவமைப்பை மாற்றினார் .

வர் இசை க்கும் கலைக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுக்க காரணமாய் இருந்தவர் அவரது மனைவியருள் ஒருவராகிய ராமபத்ரம்பா ஆவார் . இவர் தெலுங்கு மொழிகளில் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார் .

இந்த ரகுநாத நாயக்கர் காலத்தில் தான் மும்மூர்த்திகள் என்று வழங்கப்படும் சியமா சாஸ்திரி,தியாகராயர் , கோவிந்தா தீட்சிதர் ஆகியோர் தெலுங்கு மொழியை  தஞ்சையில் வளர்த்து நீர் விட்டு மரம் ஆக்கினார்கள் .

இவரது காலத்தில் தான் தஞ்சையின் இசை , கர்நாடக சங்கீதம் ஆனது . நாயக்க வம்சமானது கர்நாடக மாநிலம் ஹம்பி யில் இருந்து ஆரம்பித்தாலும் , புரந்தர தாசருக்கு மரியாதை செய்யும் வகையிலும் , தஞ்சை இசை கர்நாடக சங்கீதம் என்று பெயர் மாற்றப்பட்டது .





ஏழிசை என்று வழங்கப்பட்ட இசை கருவியானது நாதஸ்வரமாகி போனது .



சதிர் ஆட்டம் 







இவரை தொடர்ந்து வந்தவர்களும் அவர்கள் பங்கிற்காக தஞ்சையின் போர் முறைகளை கற்று தர உதவும் சதுர் என்ற நடனத்தை பாரத நாட்டியம் என்று பெயர் மாற்றினர் . ஆனாலும் இதே உத்திகளோடு விளையாடப்பட்ட , சதுரங்கம் இன்றும் அதே பெயரில் உள்ளது .

தஞ்சையை ஆண்ட நாயக்கர்களிலேயே மிகவும் நல்லவர் இந்த ரகுநாத நாயக்கர்தான் .

அவருக்கு எதெல்லாம் பெருமைக்கு உரிய விஷயமாக இருந்ததோ அதயெல்லாம் தெலுங்கிற்கு ம் , கன்னடத்திற்கும் மாற்றி தன மொழி பற்றை நிரூபித்தவர் .

அதோடு தெலுங்கு புத்தகங்களை பாதுகாக்க கருதி இன்று தஞ்சையில் இருக்கும் சரஸ்வதி  மகாலை  உருவாக்கியவர் .
அப்போது அவர் இட்ட பெயர் சரஸ்வதி பண்டு .
இதையே பிற்காலத்தில் சரபோஜி I I  சரஸ்வதி மகாலாக மாற்றினார் .



இவர் தான் முதன் முதலில் டச்சுகாரர்களோடு ஒப்பந்தம் போட்டவர்.
இதனை அடிப்படையாக கொண்டுதான் பிற்காலத்தில் போர்துகீசியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்.கும் தஞ்சையை வணிக மையமாக மாற்றலாம் என்ற யோசனைக்கு வழிகாட்டியாக அமைந்தது .

இந்த ரகுநாத நாயக்கரும் கோவில் திருப்பணிகள் பல செய்துள்ளார் .

இதற்கிடையில் விஜயநகர பேரரசில் மிக பெரிய சிக்கல் உருவாகியது .
அது என்னவெனில் அப்போது ஆட்சியில் இருந்த இரண்டாம் வெங்கட ராயருக்கும் அவரது அன்பு மனைவி ஒபயம்மாவிர்க்கும் திருமணத்திற்கு முன்பு பிறந்தவர் ஆட்சிக்கு வரவேண்டுமா ? திருமணத்திற்கு பின்பு பிறந்தவர் ஆட்சிக்கு வர வேண்டுமா ? என்பதே அந்த பிரச்னை .

திருமணத்திற்கு முன்பு பிறந்து ஆட்சிக்கு வந்த ஜக்கு ராயரை , மதுரை நாயக்கனும் , செஞ்சி நாயக்கனும் ஆதரவு அளிக்க

திருமணத்திற்கு பின்பு பிறந்த ராம ராயரை , நம் ரகுநாதர் ஆதரவு கொடுத்து

அதனால் ஏற்பட்ட போரில் வெற்றியும் பெற்று ராம ராயரை ஆட்சியில் அமர வைக்கிறார் .

இது தான் இவரது ஆட்சியில் நடைபெற்ற மிகபெரிய போர் .
mannargudi rajagopalaswamy க்கான பட முடிவு
மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில்

1634 லில் விஜய ராகவ நாயக் ஆட்சிக்கு வருகிறார் . இவர்தான் தஞ்சை நாயக்க வம்சத்தின் கடைசி மன்னர் . இவர் 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார் . இவருக்கு மன்னாரு தாசு என்ற பெயரும் உண்டு . கரரணம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் சுற்று சுவர், கோபுரம் என பல திருப்பணிகள் செய்துள்ளார் .



விஜய நகர பேரரசின் வாரிசு உரிமை போரில் ரகுநாதன் , ராம ராயருக்கு ஆதரவு கொடுத்து வெற்றியும் பெற்றான் அல்லவா ! அப்போது தோற்று போனது ஜக்கு ராயர் மட்டுமல்ல மதுரை நாயக்கனும்தான் .

இதனால் ஏற்பட்ட கோவத்தை தணிக்க மதுரை சொக்க நாயக்கன் , விஜய
ராகவ நாயக்கனின் மகளை மனம் முடித்து தர சொல்கிறார் . ஆனால் தஞ்சை நாயக்கனோ மறுக்கிறான் . இதனால் தஞ்சை அரண்மனையை பலபடுத்தி அங்கு தன குடும்பத்தை பாதுகாக்க முற்படுகிறார் .

ஆனால் மதுரை  சொக்க நாயக்கனோ பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி கோட்டை சுவரை உடைத்து விஜய ராகவ நாயக்கனின் மகளை மணக்கிறான் .
மதுரை சொக்க நாயக்கன் தனது தம்பி அழகிரியை தஞ்சைக்கு மன்னனக்கினான்.

விஜய ராகவ நாயக்கனின் மகன் தனது அரசை மீண்டும் மீட்டு தர உதவி கேட்டு பீஜப்பூர் சுல்தான்களிடம் போக , அவர்கள் மராட்டியர்களை கைகாட்ட ,
வெங்கோஜி தஞ்சைக்கு வருகிறான் .

அன்று முதல் நாயக்க அரசு முடிந்து மராட்டி அரசு தஞ்சையில் உதயமாகிறது .

-----------------------------------------




Sunday, 13 March 2016

பாகுபலி - அக்ஷய திருதியை

முன்பொரு காலத்தில் அனேகமாக கி.மு.1000 வது ஆண்டில் வினிதா என்ற நாட்டின் ராணியார் கற்பமாக இருக்கும் பொழுது ஒரு கனவு காண்கிறார் . அந்த கனவில் அவர் வித்யாசமான பொருகளை எல்லாம் காண்கிறார் .மறுநாள் காலையில் தன கணவரிடம் கூறுகிறார் .

அவர் அந்நாட்டின் தலைசிறந்த ஜோதிட சாஸ்திர வல்லுனர்களை அழைத்து இந்த கனவிற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார் . அவர்கள் அனைவரும் அரசியாரின் கனவில் என்னென்னன பொருட்கள் வந்தனவோ அவற்றை ஒன்றாக இணைத்து , நீண்ட நெடிய ஆய்விற்கு பிறகு , பிறக்க போகும் ஆண் மகன் ஒரு புதிய தத்துவத்தை அடிப்படியாக கொண்டு புதிய மதத்தையே உருவாக்க போகிறான் என்று கூறுகிறார்கள் .


ராணியின் கனவில் வந்த பொருட்கள் 

அங்ஙனமே ஒரு ஆண்மகனை பெறுகிறாள் . அவன் சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறக்கிறான். அந்த நாளே பின்னாளில் அச்ய திருதையாக , கொண்டாடடப்படுகிறது . அவன் வளரும் போதே திறமைசாலியாகவும் , வீரனாகவும் வளர்கிறான் .

அவனுடைய இளமை பருவத்தில் இரண்டு பெண்களை மணந்து கொள்கிறான் .
முதல் மனைவி சுனந்தாவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் .அவள் பெயர் பிராமி .
இரண்டாம் மனைவி யசவதி தேவிக்கு 99 மகன்கள் மற்றும் ஒரு மகள் அவள் பெயர் சுந்தரி .

ஆக மொத்தம் 100 மகன்கள் மற்றும் 2 மகள்கள் .

காலபோக்கில் இல்லறம் என்ற நிலையில் இருந்து விலகி , துறவறம் கொள்ளலாம் என என்னும் போது  நாட்டை இரண்டாக பிரித்து முதல் மனைவியின் மகனுக்கு வினிதா நாட்டையும் இரண்டாம் மனைவியின் மகனுக்கு தக்ச ஷீல த்தையும் கொடுக்கிறான் .

பிறகு துறவறம் கொண்டு ஊரை விட்டு வெளியேறுகிறார். அவருக்கு என்ன உணவு தர வேண்டும் என்பதில் அனைவருக்கும் குழப்பம் ஏற்பட 11 மாதங்கள் கழித்து கரும்பு சாறு கொடுக்கிறார்கள் . இதன் அடிப்படையில் தான் அக்ஷ திருதியை அன்று கரும்பு வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது .


ரிஷபானந்தா 

அப்படி வெளியேறி துறவறம் பூண்டவர் தான் பாகுபலியின் தந்தை ரிஷபானந்தா .
இவர்தான் சமண மதத்தை தோற்றுவித்தவர் . 

சமண மதத்தின் முதல் தீர்த்தங்காரர் .

இவரது முதல் மனைவி சுனந்தாவின் மகன்தான் பாகுபலி .


------------ தொடரும் 


இந்த ரிஷபானந்தா வின் பிறந்த நாள் தான் அக்ஷய திருதியை . 
இந்த நாளில் தான் வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுத ஆரம்பித்தார்  என்று மகாபாரதம் கூறுகிறது .
இன்றும் இந்நாளை சமண மத துவக்க நாளாக கொண்டாடுகிறார்கள் சமணர்கள் .
இந்நாளில் அடுத்தவருக்கு உணவு அளித்தால் , தன வீட்டில் அக்சய பாத்திரம் போல் உணவு பொருட்கள் நிறைய பெருகும் என்பதையே , தற்காலத்தில் சுயநலமாக தங்கம் வாங்கினால் பெருகும் என்று மாற்றி விட்டனர் .


--------------------------------------------------

சமண மதத்தை தோற்றுவித்த முதல் தீர்த்தங்கரர் ரிஷபானந்தா வின் முதல் மனைவி  சுனந்தாவின் மகன் பாகுபலி ( தற்போதைய அயோத்தி நகரம் ) வினிதா நாட்டை ஆண்டு வந்தான் .

அவரது இரண்டாம் மனைவி யசவதி தேவி யின் 99 மகன்களில் முதல் மகனாகிய பரதன் தக்ச ஷீல நாட்டை ஆண்டு வந்தான் .

ரிஷபானதாவின் முதல் மனைவின் மகள் பிராமி ஆவாள் . பிற்காலத்தில் இவளது பெயரால் தான் பிராமி எழுத்து தோன்றியது என்ற கருத்தும் உள்ளது .

இரண்டாவது மனைவியின் மகன்கள் 99 பேரை அடிப்படையாக வைத்துதான் மகாபாரதம் எழுதப்பட்டது என்ற கருத்தும் உள்ளது. இதன் அடிப்படையில் தான் பௌத்தமும் , சமணமும் மகாபாரத கதைகளை  ஒப்புக்கொள்ளவில்லை .
மேலும் ரிஷபானந்தவிர்க்கு பிறகு சமண மத துறவிகளாக வந்தவர்கள் தான் கர்ணனும் , கிருஷ்ணனும்  என்பதால் சமண மதத்தை யும் , அதன் தீர்தங்கர்களையும் கொண்டு எழுதப்பட்டதே மகாபாரதம் .

எனவே ரிக், யஜூர் , அதர்வண வேதங்களை மட்டுமே கொண்டுள்ளது பௌத்தம். அதிலிந்து முக்கிய கருத்துகளை மட்டுமே கொண்டுள்ளது சமணம்.

இப்போது பாகுபலி சிறப்புற ஆட்சி செய்வதால் மக்கள் அவனை பற்றி பெருமையாக வினிதா நாட்டை தாண்டி தஷ நாட்டிலும் பேசி கொள்கிறார்கள் . இரண்டு நாடுமே ஒரே மன்னனின் கீழ்தான் இருந்தன என்பதால் , மக்கள் இடம்பெயர ஆரம்பித்தனர் .

இதனால் கோபம் கொண்ட பரதன் , பாகுபளியை எதிரியை போல் பாவிக்க ஆரம்பிக்கிறான்.

அதன் விளைவு , ஒரு சில ஆண்டுகள் கழித்து போர் மூழ்கிறது . பாகுபளிக்கும் , பரதனுக்கும் மிக பெரிய போர் . இருபுறமும் மக்கள் அழிந்து கிடக்கின்றனர்.

இறுதியில் பாகுபலி வெல்கிறான். பரதன் தோல்வி அடைந்த போதிலும் பாகுபலி அவனை வெறுக்க வில்லை . ஆனால் இந்த போருக்கு பிறகு பாகுபலி நாட்டில் இல்லை .

பரதன் தான் பாகுபளியை கொன்றிருப்பான் என்றும் கூட நம்ப ஆரம்பித்தனர் மக்கள் . ஆனால் பாகுபளியை யாரும் கொலை செய்யவில்லை .

போர் நடந்த பின்னர் , அப்போரின் பாதிப்பில் இருந்து மீளாத பாகுபலி , மீண்டும் நாட்டிற்கு வந்து தனது சகோதரனாகிய பரதனிடமே அனைத்து பொறுப்பையும் விட்டுவிட்டு தெற்கு நோக்கி நடக்கிறான் .

கர்நாடக மாநிலத்தின்  ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சரவண பெலகுள  என்னும் இடத்திற்கு வந்து சமணத்தை தழுவி , மன அமைதி அடைகிறான் .
Shravanabelagola

கோமுட்டீஷ்வரர் என்று வழங்கப்படும் பாகுபலி



மக்களுக்கு நல்ல சிந்தனைகளை கூறுகிறான் . வயது முதிர்ந்த காலத்தில் மீண்டும் இமயமலைக்கு சென்று அங்கு முக்தி அடைகிறான்.

பாகுபலி முக்தி அடைந்ததை அறிந்து வினிதா நாட்டின் ( அயோத்தி ) மூலம் 58 அடி சிலை இவருக்காக செய்யப்பட்டு அது சந்திரகிரி , தீர்த்தகிரி மலைகளுக்கு நடுவில் உள்ள சரவணா பெலகுள என்ற இடத்தில் வைக்கபடுகிறது .

இந்தியாவிலேயே மிக உயரமான சிலை இந்த பாகுபலி சிலை தான் . அனால் இவரை கோமுட்டீஸ்வரர் என்றே அழைப்பர் .

இதில் என்ன சிறப்பு எனில் இந்த சரவண பெலகுள என்படுவது சரவணா வெள்ளை குளம் ஆகும் .

இதற்கு முன்பு இங்கு இருந்தது முருகன் கோவில் . இக்கோவிலில் நேரடியாக பார்க்கும்போது நாம் தெரிந்து கொள்ளலாம்  ஏற்கனவே இருந்த சிலையை நகர்த்தி விட்டு பாகுபலி சிலையை வைத்திருக்கிறார்கள் என்பதை! .

இது 647 படிகளை கொண்டது . இங்கு தற்போது பாகுபலி சிலையே இருந்தாலும் , உலகின் எந்த மூலையிலும் மலை மீது கோவில் அமைத்த ஒரே ஒரு இனம் தமிழ் இனம் . 

என்னதான் சிலையை மாற்றி வைத்தாலும் , இங்கு நடக்கும் எந்த ஒரு விசேசமும் மாறவில்லை . முருகனுக்காக என்ன வெல்லாம் கொண்டாடப்படுகிறதோ அது வேறு பெயரில் கொண்டாட படுகிறது .

இன்றும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மக விழாவும் , பங்குனி உத்திர விழாவும் , தை பூச விழாவும் கொண்டாடப்படுகிறது .

மன அமைதி விரும்புவோர் செல்ல வேண்டிய இடம் .

சரவணவெள்ளை குளம் . ( சரவண பெலகுள ) நிச்சயம் இதற்க்கு உத்தரவாதம் உண்டு .

தமிழனை தமிழன் தான் ஆள வேண்டுமா என்ன ?

மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் . திடீரென்று ஒரு இனம் ஆள கூடாது என்று கூறுவது சரியல்ல - ட்ராபிக் ராமசாமி 


மனிதனை மனிதானாக பார்க்கும் திறம் இன்று யாரிடமும் இல்லை . இருந்திருந்தால் கர்நாடகத்தில் தமிழர்கள் பதட்டதோட வாழ்ந்த நிலை உருவாகி இருக்காது. இலங்கை தமிழன் , அகதியாகவும் , ஒரு சில தவறுகளின் அடையாளங்களாகவும் மாறி இருக்க மாட்டான். ராஜ் தாக்கரேவை அடிகடி எல்லோரும் உதாரணத்திற்கு கொண்டு வரவேண்டிய அவசிய இல்லை. தமிழர்கள் அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து விடவில்லை. 
ilangai agathigal க்கான பட முடிவு


மொழி வாரி மாநிலங்கள் பிரித்த போதும் கூட ,  ஜாதியும் , மொழியும் பாராமல் பிறரை அரியணை ஏற்றிய பூமி இது. ஒரு கற்பனையாக எண்ணி பாருங்கள் ஒருவேளை இலங்கையை ஒரு தமிழன் ஆட்சி செய்திருந்தால் எந்த சிங்கலனாவது அகதியாக மாறி இருப்பானா ? 

ஆள வரவில்லை என்றால் , இவன் ஆளுமை என்ற தகுதி இல்லாதவன் என்று கூறுகிறீர்கள். எவனோ ஒருவன் ஆள்கிறேன் என்றால் , இப்படி எல்லாம் பிரித்து பார்க்க கூடாது என்கிறீர்கள். யாருக்கு ஆள தெரியாது . அடிமைபடுத்ததான் தெரியாது . அடிமைபடுத்தி அதன் வழியாக எடுத்த அடுத்தவர் பொருளை தன பெயரில் மாற்றிக்கொள்ள தெரியாது 

விட்டு விடுங்கள் 1400 களில் ஆரம்பித்த அடிமைதனம் கொஞ்சம் வெளியேற முயற்சிக்கலாமே ! இந்தியாவிலேயே நீண்ட நெடிய அடிமை வாழ்க்கை வாழ்வது தமிழர்களாகத்தான் இருக்கும். ஆங்கிலேயனுக்கு முன்னமே நாம் அடிமையாகி விட்டோம் அதனால்தான் ஆகிலேயர்களை எதிர்த்து யாரும் பெரிதாக போராட வில்லை . 

வட இந்திய சுதந்திரமாக இருந்தது , ஒருவன் அடிமை படுத்திய உடன் அவனுக்கு ஏற்பட்ட வித்தியாச உணர்வை விடுதலை போராட்டமாக மாற்றினான். அனால் தமிழ்நாடு அப்படி இல்லை . எந்த ஒரு வித்தியாச உணர்வும் தமிழனுக்கு ஏற்படவில்லை. ஒரு வேலை இதையும் தவறென்று யாரும் கூற விரும்பினால் ஆங்கிலேயனை எதிர்த்ததும் தவறாகும் . 

சரி தவறென்றே வைத்து கொள்வோம் . ஆனால் ஜாதியின் அடிபடியில் தான் எல்லாம் இயங்குகிறது . தமிழர்கள் மட்டும்தான் ஜாதி போடுவதில்லை . மற்ற எல்லோரும் ஜாதியின் பெயரை தன தகப்பன் பெயர் போலத்தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் .

ஏன் தெரியுமா ? தமிழர்கள் மட்டும் ஜாதி போட வேண்டாம் என்ற கூறினார்கள் .அடிமையில் என்ன உயர்ந்த அடிமை , தாழ்ந்த அடிமை . எல்லா அடிமையும் ஒன்றுதானே 

சரி , பெண்கள் தன மார்பை மறைக்க வரி கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்ட அரசு எது ? ஆங்கில அரசா ? தைரியமான ஆட்கள் யாரேனும் இருந்தால் துணித்து உரக்க கூற சொல்ல சொல்லுங்கள் .

துணியை போட்டு எல்லாவற்றையும் மறை என்று கூறி , அதன் பிறகு அதில் ஒரு பாகம் தெரிந்தாலும் அதை கவர்ச்சி என்று கூறி காசு பார்க்க நினைத்தவன் ஆங்கிலேயன். 

ஆனால் இன்ன ஜாதி போடலாம் , இன்ன ஜாதி போட்டால் வரி கட்ட வேண்டும் , இன்ன ஜாதி காரிகலேல்லாம் போடவே கூடாது என்று கூறியது யார் ?

அதெல்லாம் பழைய கதை . ஆமாம் அதெல்லாம் பழைய கதைதான் . ஆனாலும் அப்போது சம்பாதித்த சொத்தை கணக்கில் கொண்டு தான் அம்மக்களேல்லாம் உயர்ந்த ஜாதி அட்டவணையில் இன்றும் இருக்கிறார்கள் .
அப்போது சம்பாதித்த சொத்து சொந்தமெனில் அப்போது சம்பாதித்த பாவம் சொந்தமில்லையா ?

இன்றும் இதே ஜாதியின் பெயரில் தான் , இதே இனத்தின் பெயரில் தான் முன்னுரிமை கொடுக்க படுகிறது . இந்த இட ஒதுக்கீடு எனபடுவது ஒரு கட்டுக்கதை . இது உண்மை எனில் எல்லா மத்திய , மற்றும் மாநில அரசு அலுவகங்கலிலும்  நாமம் போட்ட ஆண்களும் , பெண்களும் , நாய்டு மற்றும் ரெட்டி மக்களும் மேல் மட்ட  பணியில் இருப்பது எப்படி ? இவர்களுக்கு இடையில் தான் SC மக்களுக்கு இட ஒதுக்கீடு அமைகிறது . பிற ஜாதி மக்களெலாம் கீழ் தட்டு பணிகளில் மட்டுமே இருப்பதன காரணம் என்னவோ ?

எப்போதும் எது செய்தாலும் , ஓடி வந்து ஏதேனும் ஒரு கதை சொல்லி , பயமுறுத்தும் கெட்ட வழக்கத்தை இவர்கள் எம்மக்களிடம் விதைப்பதை நிறுத்த முடியுமா ?


traffic ramaswamy க்கான பட முடிவு

உங்களை போன்ற நாமம் போட்ட மக்களில் எத்தனை பேர் நல்லவர்கள் என்று நீங்கள்தான் கூற வேண்டும் .

இந்தியா விடுதலை பெரும் முன்பு திராவிட கட்சியின் தாயாகிய தென்னிந்தியா சமூக நல இயக்கம்  எதன அடிப்படையில் உருவாக்கபட்டது . இன அடிப்படையில் ! வட இந்தியன் மற்றும் தென்னிந்தியன் .இது சரியா ?

இந்த இயக்கத்தை யாரெல்லாம் சேர்ந்து உருவாக்கினார்கள் ? பிராமணர்கள் , தெலுங்கர்கள் மற்றும் நாயக்கர்களை எப்போதும் ஆதரித்து சொத்து சேர்த்த முதலியார்கள் . 

இந்த இனங்களுக்குள் பிரிவினை வந்த போது  பிராமனகளை பற்றி தவறாக பேசியது தெலுங்கர்கள் . தெலுங்கர்களை பற்றி தவறாக பேசியது பிராமணர்கள் .

இன்று இரண்டுக்கும் நடுவில் இது என் நாடு என்று கேட்க யாரவது ஒருவர் வந்தவுடன் , ஏன் இத்தனை பதட்டம், இத்தனை அறிவுரை . பிரிவினை வேண்டாம் . நாமெல்லாம் ஒன்றுதான் . என்றெல்லாம் !

இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சுந்தர் என்றொரு இழிபிறவி தமிழ் துரோகி திருமணம் செய்து கொண்ட குஷ்பு , தமிழ் பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பே கொண்டுமன் பயன்படுத்தும் முறைகளை கற்று கொடுத்தால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்று கூறிய பொது சத்தமில்லாமல் அதற்க்கு ஆதரவு தெரித்தது தெலுங்கு மக்கள்

எம்மினம் இழந்தது இன உணர்வை மட்டும் அல்ல . சொத்துகளை மட்டுமல்ல .அதெயெல்லாம் கடந்து
அறிவியலை !
பொறியியலை !
மருத்துவத்தை !
இதை எல்லாம் மீட்டெ டுக்காவாவது வழி விடலாமே !

இது சீமானுக்கு ஆதரவானது அல்ல . எம் தமிழ் இனத்திற்கான விழிப்புணர்வு பதிவு !

தீதும் நன்றும் பிறர் தர வாரா ! - புறநானூறு .

Thursday, 10 March 2016

தமிழக அரசியல் குடும்பங்கள்



மன்னராட்சி முடிந்து மக்கள் ஆட்சியில் இருக்கிறோம் என்று வைத்து கொண்டாலும் வாரிசு அரசியல் என்பதும், ஜாதி அரசியல் என்பதும் தவிர்க்க முடியாமல் நம்மோடு ஒட்டி கொண்டே இருக்கிறது . 

தமிழ் நாடும் விதிவிலக்கு அல்ல . 

சுதந்திர போராட்ட காலத்தில் , போராட்ட தலைவர்களாக இருந்தவர்களில் பலரும் பெரும் பணக்காரர்கள். அவர்களே , பின்னாளில் தேர்தலிலும் நின்று வெற்றி பெற்றனர் . ஏனெனில் மக்களாட்சியின் தத்துவம் அவர்களுக்கு மட்டுமே புரிந்தது போலும் !

அதனை தொடர்ந்து அவர்களது வாரிசுகளும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்  

காமராஜர் போன்ற விதிவிலக்கும் உண்டு . அவரின் பாரம்பரியம் , சராசரி மனிதனோடு ஒத்து போனதால் தான் அவர் ஆட்சி தமிழ்நாட்டின் மிக சிறந்த ஆட்சியாக இன்றும் உள்ளது .

அதன் பின்னர் எத்தனை ஆட்சிதனை தமிழகம் கடந்த போதிலும் , அவரோடு ஒப்புமை கொள்ள இன்னும் எந்த அரசியல்வாதியும்  வரவில்லை 

ஒருவேளை தற்காலத்தில் இருக்கும் பல அரசியல் வாதிகள் தன்னிச்சையாக நின்று நற்பெயர் வாங்காது , தாத்தா பெயரை , தகப்பன் பெயரை பயன்படுத்துவதலோ என்னவோ ?

அப்படி வாழ்ந்து வரும் அரசியல் வாரிசு கள் யார்யார் என தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது .

அரசியல் வாரிசுகள் 

பி .சுப்பராயன் குடும்பம் 




பி.சுப்பராயன்  -  மெட்ராஸ் ப்ரெசிடன்யின் முன்னாள்                                                                             முதல்வர் - நீதி கட்சி 

       மோகன் குமாரமங்கலம் - சுப்பராயன் அவர்களின் மகன் .
                                                              இவரது வாரிசுகள் :

                                                                 காளியண்ணன் 

                                                                  ரங்கராஜன் குமாரமங்கலம் 

                                                                  லலிதா குமாரமங்கலம் 

பார்வதி கிருஷ்ணன்  - சுப்பராயன் அவர்களின் மகள் 

P .T. ராஜன் குடும்பம் :


      
Ptrajan.jpg

திரு . பொன்னம்பல தியாகராஜன் 

          

P .T. ராஜன் - 1892 முதல் 1974 வரை - மெட்ராஸ் ப்ரெசிடன்யின் முன்னாள்                                  முதல்வர் - நீதி கட்சி 


                           பழனிவேல் ராஜன்  1932 முதல் 2006 வரை 


பக்தவச்சலம் குடும்பம் 



 பக்தவச்சலம்  - முன்னாள் முதல்வர் 

ஜெயந்தி நடராஜன் - பக்தவச்சலம் அவர்களின் மகள் வழி பேத்தி 


ஈ .வீ .கே . சம்பத் குடும்பம் 



ஈரோடு வெங்கட நாயக்கர் சம்பத் 
கன்னடம் பேசும் தெலுங்கர் 

ஈ.வீ.கே . சம்பத் 

                         ஈ.வீ.கே.எஸ். இளங்கோவன் 

                         ஈ.வீ.கே.எஸ். இனியன் 

ஈ.வீ.கே.எஸ்.ஈ. திருமகன் - ஈ.வீ.கே.எஸ். இளங்கோவன் மகன் 




குமரி அனந்தன் குடும்பம் 




குமரி மாவட்டத்தை சேர்ந்த அனந்த கிருஷ்ணன் - நாடார் சமூகம் 

குமரி அனந்தன் -  காங்கிரஸ் 

                            தமிழிசை சௌந்தரராஜன் - குமரி ஆனந்தனின் மகள் - பா.ஜ.க 

வசந்த் குமார் - குமரி ஆனந்தனின் சகோதரர் 

ராமாசாமி படையாச்சி குடும்பம் 

ராமசாமி படையாச்சி  - வன்னியர் சங்கத்தை அடிப்படையாக கொண்ட தமிழக                                               உழைப்பாளர் கட்சி 

                எஸ்.எஸ்.ஆர் .ராமதாஸ் - ராமசாமி படையாட்சியின் மகன் - பாட்டாளி                                                                       மக்கள் கட்சி 

                                     அன்புமணி ராமதாஸ் - டாக்டர் ராமதாசின் மகன் 


ஜி .கே. மூப்பனார் குடும்பம் 



கோவிந்த சாமி கருப்பையா மூப்பனார் 


ஜி.கே.மூப்பனார் - தமிழ் மாநில காங்கிரஸ் 

                  ஜி.கே.வாசன் 


கருணாநிதி குடும்பம் 

கருணாநிதி - திராவிட முன்னேற்ற கழகம் 
                      வாரிசுகள் 
                      ஸ்டாலின் 
                      அழகிரி 
                      கனிமொழி 

முரசொலி மாறன் - கருணாநிதியின் அத்தை மகன் 
                     தயா நிதி மாறன் - முரசொலி மாறனின் மகன் 


இதில் நன்முறையில் ஆட்சி செய்த காமராஜர் திருமணமே செய்து கொள்ளவில்லை 

அவருக்கு பின் நன்முறையில் ஆட்சி செய்த 
திரு. அண்ணாதுரை அவர்களுக்கும் , திரு .எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கும் வாரிசு இல்லை .

வாரிசுகளும் தகப்பனை போலவே ஆட்சி செய்வர் என்று எதிர்பார்க்க கூடிய யாருக்கும் வாரிசு இல்லை . மீதம் சொல்ல முடிய வில்லை !

( ஆட்சி என்று குறிப்பிடபடுவது முதல்வர் பதவி மட்டும் அல்ல. ஒவ்வொரு சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் தான் )

Tuesday, 8 March 2016

ழ கரம் எனும் சிறப்பு - என்ன பண்ணலாம் இவங்கள

தமிழின் சிறப்புகளில் ஒன்று கர எழுத்து .


அழகு

புகழ்

இகழ்

மகிழ்

என்று அடிக்கி கொண்டே சொல்லலாம் தமிழில் வரும் ழ எனும் எழுத்து கொண்ட அழகு வார்த்தைகளை .

இது தமிழில் மட்டுமே உள்ளது .

மற்ற மொழிகளில் எல்லாம் ல , அல்லது ள என இரண்டு எழுத்துகள் மட்டுமே உள்ளது .

அப்படி இருக்க சில கிறுக்கர்கள் தமிழில் உள்ள ழ எனும் எழுத்தை பயன்படுத்தி வரும் எந்த ஒரு தொழிலும் நட்டத்தை அடையும் .

எனவே இந்த எழுத்தை பயன்படுத்தாதீர் என்று எச்சரிக்கை கொடுகிறார்கள்




இதோ பழமுதிர் சோலைகள் எனும் பெயரில் வைக்கும் கடைகள் எல்லாம்
சீக்கிரத்தில் இழுத்து மூடி விடுவார்களாம் . என்ன செய்யலாம் இது போல் தமிழை இழிவு படுத்தி பேசியும் , எழுதியும் வரும்  கிறுக்கர்களை !

இதில் பொதுநலம் வேறு ! இது போன்ற எழுத்துகளே வேண்டாம் என்று !

எங்கே இருந்துய்ய வர்றீங்க ?

இன்னுமா , உங்களை போன்ற நரிகளின் கதைகளுக்கு தமிழினம் செவி சாய்க்கும் என்று எதிர்பார்கிறீர்கள் .

உங்கள் கூட்டம் தமிழ் நாட்டை விட்டு வெளி ஏற வேண்டாம் !
தமிழை புகழ  கூட வேண்டாம்
பயமுறுத்தி பயமுறுத்தி தமிழனத்தை அழித்து விடலாம் என்ற கெ ட்ட எண்ணத்தை விட்டு விடுங்கள்

இதுவும் எச்சரிக்கைதான் !

Monday, 7 March 2016

தஞ்சாவூர் -ஆப்ரஹாம் பண்டிதர்

மும்மூர்த்திகள் என்று வழங்கப்படும் ஷ்யாமா சாஸ்த்ரி , தியாகராயர் , முத்துசாமி தீட்சிதர் மூவரும் சமகாலத்தை சேர்ந்தவர்கள் .

ஷ்யாமா சாஸ்திரி 1762 ல் பிறந்தவர்

தியாகராயர் 1767 ல் பிறந்தவர்

முத்துசாமி தீட்சிதர் 1775 ல் பிறந்தவர்

இவர்கள் மூவரும் எழுதிய தெலுங்கு , சம்ஸ்கிருத மற்றும் மணிபிரவாள நடை பாடல்கள் தான் இப்பொழுதும் பாடபடுகின்றன .

அனால் இப்பாடல்களின் அடிப்படை தஞ்சாவூர் இசை .

தஞ்சாவூர் இசை என்று வழங்கபடாது இப்பாடல்கள் கர்நாடக இசை என்ற பெயரால் வழங்கபடுகின்றன .

இப்பாடல்கள் அனைத்தும் தமிழ் இசைதான் என்றும் , அதன் பூர்வீகம் தஞ்சை தான் என்றும் நிரூபித்தவர் திரு. ஆப்ரஹாம் பண்டிதர் அவர்கள் .






திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பின்னர் சித்த மருத்துவம் பயின்று , தஞ்சையில் குடியேறி , இங்கு வாழும் மக்களின் கலையே இன்று கர்நாடக சங்கீதமாக ஒலிகிறது என்பதை நிருபிபதற்க்காக தானும் சங்கீதம் பயின்று , தன பிள்ளைகளுக்கும் வீணை பயிற்சி அளித்து , 1910 ம் ஆண்டு முதல் 1914 ம் ஆண்டு வரை 6 இசை மாநாடுகளை தஞ்சையில் நடத்தி காட்டினார் ஆபிரகாம் பண்டிதர் .

இவர் நடத்திய இசை மாநாடுகள் அனைத்தும் இவரது சொந்த செலவில் நடைபெற்றவை .

பிறகு வயது முதுமை காரணமாக , தொடர்ந்து நடத்த முடியாமல் 1919 ல் இயற்கை எய் தினார் .

இவர் சங்கீத கர்நாமிர்தம் என்ற நூலை எழுதி உள்ளார் . 1395 பக்கங்களை இந்த புத்தகம் 95 வகையான ராகங்கள் தமிழ் இசை தான் என்று நிறுவி உள்ளது  .

நாயக்கர்களும் , பிராமணர்களும் சொந்தம் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்று நிறுவி உள்ளார் .

ஆனால் இன்றும் தியாகறார் பிறந்த திருவையாறில் , அவர் பிறந்த பிப்ருவரி மாதத்தில் திருவையாறு உற்சவம் நடத்துவதை பிராமணர்களும் , தெலுங்கு மக்களும் பெருமையாக கருதுகின்றனர்.

ஆனால் இவர்கள் போன்றவர்களின் பின்னால் சென்ற பாவத்திற்காக தமிழ் இசை மாநாடு பண்டிதர் காலத்திற்கு பிறகு யாராலும் நடத்த படாமல் உள்ளது .

மீண்டும் நம் இசை மலர வேண்டும் . தமிழ் இசை மாநாடுகள் நடை பெற வேண்டும் . நம் இசை தான் பெயர்மாற்றி கர்நாடக இசை என்று உலா வருகிறது என்று உலகிற்கு உணர்த்த வேண்டும் .

அந்நாள் விரைவில் மலரும் .!

லிங்கம் - சிவ ராத்திரி

இன்று மகா  சிவராத்திரி - 7 - 3- 2016







லிங்கம் எனப்படுவது ஆணும் பெண்ணும் இணைந்த நிலை என்று கூறப்படுகிறது .

லிங்க் எனும் ஆங்கில சொல்லானது இணைப்பு என்று பொருள் தருகிறது .
ஆங்கில வார்த்தைகள் பல சமஸ்கிருதத்தை மையமாக கொண்டவை . அதன் அடிப்படையில் இந்த லிங்க் எனும் சொல் சம்ஸ்கிருத வழியாக வந்தது . இந்த சொல்லை அடிப்படையாக கொண்டே லிங்கம் என்பது ஆணும் , பெண்ணும் இணைந்த நிலை தான் கூறப்படுகிறது.

அனால் சம்ஸ்கிருத வார்த்தைகள் , தமிழை அடிப்படையாக கொண்டவை .

ஒழுக்கம் எனும் சொல் 

ஒ வை விடுத்து ழுக்கம் என்று மாறி அது பிறகு 

லிக்கம் ஆகி லிங்கம் ஆகியுள்ளது .

ஒருவனின் ஒழுக்கமான வாழ்வு எனப்படுவது அவனது இல்வாழ்க்கையை அடிப்படியாக கொண்டது.

அந்த இல்வாழ்க்கையே , அவனின் மற்ற எல்லா செயல்களுக்கும் அடிப்படியாக கொண்டது .

வள்ளுவரும் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தின் கீழ் 10 குறட்பாக்கள் எழுதியுள்ளார்.

இல்வாழ்க்கையை அடிப்படையாக கொண்டே , மற்ற எல்லா இடங்களிலும் ஒருவன் ஒழுக்கமாக  வாழ வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகிறார் .

அதே சமயம் கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்தின் கீழும் 10 குறட்பாட்கள் எழுதியுள்ளார் .

இந்த கூடா  ஒழுக்கத்திற்கு வழங்கப்பட்ட தண்டனையையும் இதில் குறிப்பிடுகிறார் .

நீட்டலும் மழித்தலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின் 

என்று கூறுகிறார் .

இதையே தான் நடைமுறையில் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுகின்றனர் .

இந்த ஆண் பெண் இணைவு எனும் அந்தரங்கத்தை , கூற வேண்டிய அவசியம் என்ன உள்ளது . என்று தோன்றும் .

கடந்த 200 முதல் 300 ஆண்டுகளாகத்தான் தமிழில் இது போன்று கருத்துகள் கூறுவது , அந்தரங்கம் என்ற கோட்பாட்டுக்குள் வருகிறது .

தமிழில் எழுதப்பட்ட எல்லா பாடல்களும் , களவு மற்றும் கற்பு நிலை காதலை அடிப்படையாக கொண்டவை .

2000 ஆண்டுகளாக பௌத்தர்களும், சமணர்களும் கொடுத்த சில பல தவறான கருத்துகளை நாம் பின்பற்றியுள்ளோம் .
மேலும்
ஆங்கிலேயர்களுக்கு  , அதற்கு முன்பு ஆட்சி செய்த நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள் இது குறித்து அறிவில்லாத நிலையில் , ஆணும் பெண்ணும் இணைந்த நிலைதான் லிங்கம் என்பதே அறியாத அறிவிலிகள் . எல்லா சிவாலயங்களிலும் தனியாக அம்பிகைக்கு என்று கோவில் எழுப்பி உள்ளனர் .

நம் தமிழ் மக்களின் அறிவு உலகலாவ விரிந்த அறிவு .  இன்று புணர்ச்சி என்பது குறித்து ஆயிரம் கேள்விகள் எழும்பினாலும் , அதற்க்கு விடைகள் சிவாலயங்களில் உள்ளது .


இது தஞ்சாவூர் மாவட்டத்தில் , பாபநாசம் என்ற ஊரில் உள்ள 108 சிவாலயம் .
இங்கு 108 வகையான லிங்க வடிவங்கள் உள்ளன.

இதை கடந்து சுயம்பு எனப்படுவது பெண்ணுடன் இணையாத லிங்கம் ஆகும் .




இது போன்ற அமைப்பு கொண்ட ஆண் வடிவானது எந்த ஒரு பெண்ணுடனும் இணைய இயலாது என்ற அறிவியலும் சேர்த்து தான் நமக்கு பாடமாகியுள்ளது . இதன் வடிவமைப்பை நேரில் பார்க்கும் போது நாம் தெரிந்து கொள்ள முடியும் .
சற்றே தவறான கருத்து என்று நம் மனம் கூட கூறலாம் . அப்படிதான் நம்மை அறிவிலிகளாக மாற்றி உள்ளனர் . இதன் காரணமாகவே வள்ளுவத்தின் காமத்துப்பால் முதல் பதினென் மேல் கணக்கில் உள்ள 18 வகையான இலக்கியங்கள் வரை நமக்கு பாடப்புத்தகங்களில் இடம் பெற இயல வில்லை .

எப்பொழுதும் இராமாயணம் , மகா பரதம் , மற்றும் வியாசர் எழுதிய கட்டுகதைகள் , இதையே வெவ்வேறு வடிவங்களில் நமக்கு பாடமாக தருகின்றனர். இதை கடந்து பௌத்த  மற்றும் சமண காபியங்களாகிய ஐம்பெரும்காப்பியங்களும் , ஐஞ்சிறுகாபபியங்களும் நமக்கு பாடமாகியுள்ளன .

இளமையில் கல் என்று ஒவ்வையார் கூறியது 

இளமையை பற்றியும் தான் .

ஆனால் நம்மால் , நம் இலக்கியங்களை படிக்க முடியாத நிலைக்க தள்ள பட்டுள்ளோம் .

இவர்களே நம் பூர்வீக அறிவை நம்மிடமிருந்து அழித்து விட்டு , பள்ளிகளில் செக்ஸ் கல்வி பற்றி வைக்கலாமா , வேண்டாமா என்று ஆய்வும் நடத்துகிறார்கள் . தேவையே இல்லை . எம் தமிழ் இனத்தின் இலக்கியங்கள் கிடைத்தாலே போதும் . வள்ளி கதைகள் , குறவஞ்சி , நற்றிணை ,குறுந்தொகை, இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .

வாழ்கை என்றால் என்ன என்றும் , உடலியல் கூறுகள் குறித்தும் அறிவியல் பூர்வமாக கூறுகிறது  நம் இலக்கியங்கள் .


இந்த சிவ லிங்க கதைகளை விட மிக மோசமாக உள்ளது சிவராத்திரி கதைகள் .

இயல்பாக ஒவ்வொரு அமாவாசைக்கும் , முந்தைய நாள் , நேர கணக்காக பார்த்தால் சரியாக இருக்கும் . சிவராத்திரி வரும்  . அந்நாள் பொழுதில் ஆண் , பெண் இணைவு உடலுக்கு கேடு தரும் . அதிலும் மாசி மாதத்தில் ஏற்படும் அமாவசைக்கு முந்தைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது . ஏனெனில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியின் அடிபடையில் சூரிய கிரகணம் மாசி மாத அமாவாசை அன்று வருகிறது .

177 நாட்களுக்கு ஒரு முறை சூரிய கிரகணம் எழும் . இந்த சூரிய கிரகனமானது அமாவாசை நாள் பொழுதில் தான் வரும் என்பது அனைவரும் அறிந்ததே . 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் ஆரம்பித்து 177 நாட்கலுக்கு ஒருமுறை சூரிய கிரகனமாக வருகிறது . அதே மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் ஏற்படுகிறது . அதுவும் 177 நாட்களுக்கு ஒருமுறை வந்து மீண்டும் மாசி மாதத்திலேயே முடிகிறது .

அமாவாசையே இணைவிற்கு இசையாத நாள் எனில் , சூரிய கிரகணம் , வரும் பொது சொல்லவும் வேண்டுமா என்ன ? நிச்சயம் உடலுக்கு தீங்கு . எனவே சூரிய கிரகனதிர்க்கு முன்பு உள்ள சிவராத்திரி முதல் இணைவு இல்லாமல் இருப்பதே நலம் தரும் . எனவே தான் அன்று இரவு முழுவதும் அனைவரும் ஒன்றாக இணைந்து இறைவனை எண்ணி வணங்க வேண்டும் என்று கூறுகிறது தமிழ் மரபு .

இந்த இறை எனப்படுவதும் ஒழுக்க நெறியே ஆகும் .

மார்ச் 9 அன்று சூரிய கிரகணம் .

Monday, 29 February 2016

தஞ்சாவூர்



தஞ்சாவூர் அப்புடின்னு சொன்ன உடனே எல்லோருக்கு என்ன தோணும்.





தஞ்சாவூர் பெரிய கோவில்

தஞ்சாவூர் விவசாய பூமி

தஞ்சாவூர் வேளாங்கண்ணி

தஞ்சாவூர் சோழர் ஆட்சி

இவையே நினைவுக்கு வரும் .

இதனை கடந்து

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

தஞ்சாவூர் ஓவியம்

தஞ்சாவூர் தட்டு

தஞ்சாவூர் சாம்பார்

நினைவுக்கு வரும் . ஆனால் இவை தஞ்சவுரின் பூர்விகங்கள் அல்ல .


தஞ்சாவூர் பற்றி நிறைய விஷயங்கள் யாரும் பேசுறதே இல்லை

ஏனோ தெரிய வில்லை . சோழர்கள் ஆட்சியுளும் ராஜா ராஜா சோழன் மட்டும்தான் இடம் பெறுகிறான். மற்ற எல்லா அடையாளங்களும் நாயக்கர்களும், மராட்டியர்களும் உருவாக்கியது .

ஒரு காலத்தில் பல்லவர்கள் ஆட்சியின் கீழ் சோழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பார்த்திபன் கனவில் கல்கி அவர்கள் குறிப்பிடுகிறார் . அதுவும் கூட உறையூர் பற்றியே சுற்றி வருகிறது .

சங்க  கால இலக்கியங்களில் தஞ்சாவூர் என்ற பெயர் இல்லை . ஆனால் தஞ்சையை சுற்றி உள்ள ஊர் பெயர்கள் அமைந்துள்ளன .

அந்த கால கட்டத்தில் தஞ்சாவூர் என்ற பெயர் சூட்டப்படவில்லை .

தஞ்சாவூர் தனித்துவம் வாய்ந்தது .

சோழர் ஆட்சிக்கு முன்பு இங்கு முத்தரையர் ஆட்சி இருந்தது .

தனஞ்சயன் எனும் மன்னரின் காலத்தில்தான் தஞ்சாவூர் , ஒரு ஊர் வடிவம் பெற்றது .

முக்கால்வாசி விவசாய பூமி . ஒருபுறம் முந்திரி காடுகள் .

பாம்புக்கும் , பூச்சிக்கும் சற்றும் குறைவில்லாத ஊர்.

image of the old city map

தஞ்சாவூர் வரைபடம்




நீர் இருக்கின்ற காலங்களில் , அதற்கு தகுந்த நஞ்சை பயிர்கள் விளையும்.

நீர் இல்லாத காலங்களில் , நீர் அதிகம் தேவைபடாத புஞ்சை பயிர்கள் விளையும் .

கிடைக்கின்ற நீருக்கு ஏற்ப விளைவை தரும் பூமி .

அங்கு எப்போது , என்ன விளையும் என்பது அங்குள்ள மக்களும் நன்கு அறிவர்.

தஞ்சை மண் பொன் விளையும் பூமி.

வேளாண் அறிவியலை விதைத்த பூமி தஞ்சாவூர் .


வணிகத்தில் சிறிதும் சளைக்காத ஊர்.

நாகபட்டினமும், அதிராம்பட்டினமும் துறைமுக நகரங்களாக விளங்கி வணிகத்தை வளர்த்துள்ளன .

இன்று எந்த வியாதி என்பதை கண்டறியவே சில பல லட்சங்களை செலவழிக்க வேண்டிய நிலையில்
மருத்துவ அறிவியலில் , அடிபடை கொடுத்த ஊர் தஞ்சாவூர் .


கலைகளிலும் சற்றும் குறைவில்லாதது .

கரகாட்டம் , நாதஸ்வரம் என கலைகளில் கொடி கட்டி பறந்த ஊர் .




இன்றைய பரதநாட்டியத்தின் தாய் சதுர் என்னும் நடனத்தின் சொந்த ஊர் .
மதுரையை சேர்ந்த ருக்மிணி தேவி அம்மையார்தான் , சதுர நடனத்தை பாரத நாட்டியமாக மாற்றியவர் .

உலகளாவிய ஒரு கலையின் தாயகம் தஞ்சாவூர் !



எல்லோரும் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் கால் வைத்தது

பிளாசி போர் , பக்சார் போர் வழியாக 1757 ல் கல்கத்தாவில் தான் என்று கூறுவார்கள் .

அனால் முதன்முதலில் அவர்கள் கால் வைத்தது தஞ்சையில் தான்.
இது இந்தியாவில் ஆங்கிலயர்கள் தடம் பதிக்க அஸ்திவாரம் .
வரலாற்று மாற்றத்தின் அடிப்படை தஞ்சாவூர் .


தமிழ்நாட்டின் அசைக்க முடியா நிலையில் இருந்த காங்கிரசை வீழ்த்த எண்ணி கருணாநிதியின் வெற்றி நிர்ணமானது இங்குதான்.
1962 ல் பரிசுத்த நாடாரை தோற்கடித்து வெற்றி கொண்டார் கருணாநிதி .
தமிழக அரசியல் மாற்றத்தின் அடிபடையும் தஞ்சாவூர்


நாளைய உலக அரசியல் மாற்றத்தின் அடிப்படையாய் அமைய போவதும் தஞ்சாவூர் தான் !


-----------------------------------------


தஞ்சவுரின் மிக பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று தஞ்சை வாழ்
ஆனந்த வள்ளி உடன் உரை தஞ்சபுரீஸ்வரர் .

தஞ்சபுரீஸ்வரருக்கு மற்றொரு பெயர் உண்டு.
குபேரபுரீஸ்வரர் .







இது குறித்து புராண கதைகள் கூறுவன :

ராவணனிடம் , தன சொத்துகள் அனைத்தையும் இழந்த அவனது மூத்த சகோதரன் குபேரன் இங்கு வந்து சிவனை வழிபட்டு , இழந்த தன சொத்துகளை மீண்டும் பெற்றான்.

எனவே இங்கு வந்து  குங்கிளியத்தில் தீபம் வைத்து வழிப ட்டால் இழந்த சொத்துக்களை மீண்டும் பெறுர் என்றும் சொத்து இல்லாதவர்கள் கூட சொத்து பெரும் வாய்ப்பை பெறுவர் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டுத்தான் குபேரனே சொத்துகளை பெற்றான் என்பதால் இந்த கோவிலின் மூலவர் குபேரபுரீஸ்வரர் என்று வழங்கபடுகிறார்.

தஞ்சம் அடைந்த வர்களை காப்பவன் என்பதால் தஞ்சபுரீஸ்வரர் என்றும் வழங்கபடுகிறார் .

இவர் பெயரால் தான் தஞ்சாவூர் என்ற பெயரும் வழங்கபடுகிறது என்றொரு கருத்தும் உள்ளது.

இக்கோவில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 4 கி.மீ தொலைவில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது.

இது 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்.

பிற்காலத்தில் நாயக்க ஆட்சின் கீழ் தஞ்சை வந்தபொழுது இக்கோவிலின் நேரெதிரில் பெருமாள் கோவிலும் எழுப்பப்பட்டுள்ளது .

இதே நாயக்கர்கள் ஆட்சியில் தான் இங்குள்ள ஆனந்தவல்லி அம்மன் ஆலயம் எழுப்ப பட்டுள்ளது.

இது தற்பொழுது கோடியம்மன் என்ற பெயரில் , தனி ஆலயமாக கோவிலின் இடது புறத்தில் கட்டப்பட்டுள்ளது.

கோடியம்மன் , தஞ்சபுரீஸ்வறரை பார்த்த வண்ணம் இருப்பாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

தஞ்சவூருக்குள் வருபவர்கள் தஞ்சபுரீஸ்வறரை வழிபட்ட பிறகுதான் , ஊருக்குள் வந்திருக்கிறார்கள் . ஆனால் இன்று இவ்வழக்கம் இல்லை.

ஆனால்  கோவிலின் பராமரிப்புகள் சற்றே சிறிய சேதங்களோடு இருந்த போதும்  ,எப்பொழுதும் போல் தஞ்சைக்குள் வருவோர் அனைவருக்கும் தஞ்சம் அளித்து கொண்டுதான் இருக்கிறார் தஞ்சபுரீஸ்வரர்.

----------------------------------------------


கர்நாடக இசையின் தந்தை என்று போற்றபடுபவர் புரந்தர தாசர்.
இவர் 1484 ல் கர்நாடகா மாநிலத்தின் சிமோக மாவட்டத்தில் பிறந்தவர்.
1564 ல் மறைந்தார் . இவர் 4 லட்சத்து 75 ஆயிரம் கீர்த்தனைகள் பாடினார் என்றும் , ஆனால் இப்போது 700 மட்டுமே உள்ளது என்றும் கூறுவார்.
கிருஷ்ணா தேவராயர் ஆட்சி காலத்தில் தான் இவரது இசை பணி நடந்துள்ளது.


இன்றும் கர்நாடக மாநிலத்தின் எந்த ஒரு கோவிலிலும் புரந்தர தாசர் மற்றம் அவரது சீடர் , (கனகபுரியின் அரசராக இருந்து பின் பக்தி மார்க்கத்திற்கு வந்த) கனக தாசரின் பாடல்களே கல்வெட்டுகளாக செதுக்கப்பட்டுள்ளன .




சங்கீத மும்மூர்த்திகள்



தியாகராஜர் - இவரும் இசை பணி  ஆற்றியவர் .1767 ல் தஞ்சையில் பிறந்த தெலுகு பிராமணர் . நாயக்கர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில் , தஞ்சைக்கு வந்த தெலுங்கு மக்கள் பலர் இங்கேயே தங்கி விட்டனர். அப்படி இங்கேயே வாழ்ந்த மக்களில் தியாகராயரின் பெற்றோரும் உண்டு. 

காவேரி, குடமுருட்டி ஆறு  ,வெண்ணாறு, வெட்டாறு , அரசிலாறு  என்று 5 ஆறுகளை கொண்ட தஞ்சையில் , இந்த ஐந்து ஆறுகளும் கூடும் திருவையாற்றில் பிறந்தவர்தான் தியாகராயர்.

இவர் 1000 மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள போதும் , இவரது பஞ்ச இரத்தின கீர்த்தனைகளே பிரபலமானவை. அனைத்தும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது. இன்றும் பெப்ருவரி மாதங்களில் தியாகராஜ ஆராதனை திருவையாற்றில் நடைபெறுகிறது.

ஷ்யாமா சாஸ்திரி 

1762 - 1827 வரை வாழ்ந்தவர். இவர் திருவாரூரில் பிறந்தவர்.
இவர் தமிழ் பேசும் பிராமணர். வேங்கட சுப்ரமனியனாக இருந்து பின் பெயர் மாற்றம் பெற்றவர்.

இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் காமாட்சி அம்மனை பற்றி பல பாடல்கள் எழுதி உள்ளார். இவர் ஸ்வர ஜதிகளை கொடுத்தவர்.

இவரை பின்பற்றி அவர் மகன் சுப்ப ராய சாஸ்திரி , மற்றும் பேரன் அன்னமைய சாஸ்திரி ஆகியோரும் இசை பணியாற்றி உள்ளனர்.

முத்துச்வாமி தீட்சதர் 

1775 - 1835 வரை வாழ்ந்த திவாரூர குருகுகர் . இவரும் தமிழ் பிராமணர். இவர் தனது பாடல்களை மணிபிரவாள நடையில் எழுதிஉள்ளார். 

மணி பிராவாள நடை எனப்படுவது தமிழும் சமஸ்க்ரிதமும் இணைந்தது .
நாயக்கர்கள் ஆட்சி காலத்தில்தான் தமிழில் அதிக சம்ஸ்கிருத வார்த்தைகள் கலந்தன . அதன் வெளிபாடே மணி பிராவள நடை தமிழ்.

இவர் எழுதிய மஹா கணபதி என்ற பாடலே தற்போதும் திரு . ஜேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்க நாம் கேட்டு கொண்டு இருக்கிறோம்.

சங்கீதம் என்றால் இந்த மும்மூர்த்திகள் மற்றும் புரந்தரதாசர் இவர்களோடு முடிவது போல் உள்ளது .


சங்கீத உலகம் 1400 களுக்கு முன்பு இல்லாதது போலும் , நயாக்கர்கள் ஆட்சியில் தான் சங்கீதம் வளர்ச்சி பெற்றது போலும் சித்தரிக்கின்றன வரலாறுகள்.

நாயக்கர்கலால்தான் சங்கீதம் வாழ்ந்தது எனில் தஞ்சையை தவிர , வேறு எங்கும் சங்கீதம் வளர்ச்சி பெற வில்லையே .
அவர்கள் சொந்த மண்ணில் கூட சங்கீதம் வளரவில்லையே , ஏன் ?

சங்கீதத்தின் பிறப்பிடம் தஞ்சை மண்.

நாயக்கர்கள் காலத்திலும் தெலுங்கு  மொழியில் எழுதப்பட்ட பாடல்கள் மட்டும் பிரபலபடுத்த பட்டுள்ளன.

ஒருவர் கூட வா தமிழில் பாடல் எழுதவில்லை.


கி. பி 2 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  சிலப்பதிகாரம் , சங்கீதம் காவிபூம்பட்டினத்தில் விழாவாக வாழ்ந்துள்ளது என்பதற்கு சாட்சி.

இன்றுள்ள சங்கீதத்தில்  முதல் எழுத்தாக உள்ளது.

ஆனால் கண்ணகி காலத்தில் முதல் எழுத்து ம 

இவை தான் வித்தியாசம் .

சோழர்கள் காலத்திலும் கண்ணகி கால வரலாறுகள் பாடல்களாகத்தான் கற்று தரப்பட்டுள்ளன.

நாயக்கர்கள் , தெலுங்கு மற்றும் பிராமணர்களின் இசையை மட்டுமே புகழ்ந்து அவற்றை மட்டுமே வளர்த்துள்ளனர்.

ஆனால் எல்லா சங்கீத கீர்தனைகளுக்கும் அடிப்படை தஞ்சை வாழ் மக்களின் கிராமப்புற பாடல்களே !


இன்றும் எல்லா விதமான இசை கருவிகளும்  இங்கு தயாரிக்கபடுகின்றன . இதனை தயாரிப்பவர் யாரும் பிராமணரோ , தெளுங்கரோ கிடையாது .

இது இம்மண்ணுக்கே சொந்தமான கலை !

----------------------------------------------------





ஒண்ணுமே புரியலையே


காட்டில் மனிதன்  உணவிற்காக  வேட்டையாடி உண்ட போது கூட எல்லா விலங்குகளும் அதிக எண்ணிகையில் இருந்தன .
இன்னைக்கு  விலங்கு பாதுகாப்பு சட்டமெல்லாம் இருக்கு , ஆனா விலங்குகள் எண்ணிக்கை குறையுதே ?
 ஒண்ணுமே புரியலையே
வீடு நிறைய சொந்தகாரங்க இருந்தப்ப தோட்டத்துக்கு நடுவில சின்னதா வீடு கட்டி வாழந்த மக்கள் ,
இன்னைக்கு எந்த சொந்தகாரனையும் வீட்டுக்கு வரவிடுறதே இல்ல !
இப்போ போ ய் 2400 சதுர அடியிலயும் வீட்டை கட்டி அடுத்த வீட்டு காம்பௌண்டை யும் சேர்த்து கட்டி வைக்கிறன்களே !
யாரக்க இருக்கும் ? 
ஒண்ணுமே புரியலையே !




எங்க போனாலும் தமிழ் மக்கள் மொழி வெறியர்கள்னு சொல்றாங்க !
ஆனா உலகம் முழுக்க எந்த நாட்லயும் அந்த நாட்டு மொழியை கத்துக்க மாட்டேன்னு  தமிழர்கள் சொன்னதே இல்லையே !

உதாரணமாக கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு , தமிழ் , தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 5 மொழிகள் சரளமாக வரும். இங்குள்ள பாட புத்தகத்தில் கன்னடம் தான் உள்ளது .யாரும் எதிர்த்ததே இல்லை.
மலேசியாவில் உள்ள தமிழர்கள் , தமிழ், மலாய் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திறன் படைத்தவர்கள் .

தமிழ் நாட்டுக்குள்ளேயும் சரிபாதி பேருக்கு ஹிந்தியும் , ஆங்கிலமும் தெரியும்.

 தாய் மொழி பள்ளிகள் தேடி அலையும் வடுகர்களை  விடுத்து , எங்க போனாலும் அந்த ஊரின் உள்ளூர் மொழியை கற்று கொள்ளாமல் , ஹிந்தி மே ராஷ்டிர பாஷா , இது தெரியாம இந்த ஊர் மக்கள் இருக்குறாங்களே என்று அலட்டி கொண்டு , எல்லா ஊர் மக்களையும் திட்டும் இந்த உத்திர பிரதேசம் , மற்றும் உத்தர்காண்ட் மக்கள் , இவங்களையெல்லாம் விட்டுட்டு 
தமிழ் மக்களை மொழி வெறியன்னு சொல்றாங்களே ! 
 ஒண்ணுமே புரியலையே

இந்தியாவில் கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தவிர்த்து எல்லோருமே, ஹிந்துக்கள்தான் ன்னு சொன்ன , ஏன் தமிழ்நாட்டை தாண்டி யாருமே ஆடிபெருக்கும், தை பூசமும் கொண்டாடுவதே இல்லை ?


 ஒண்ணுமே புரியலையே 

அர்த்தசாஸ்திரத்தில் , ஒரு சில தவறுகளுக்கு 14 ஆண்டுகள் காட்டில் சென்று வாழ வேண்டும் என்ற சட்டம் இருந்துள்ளது .
அதே 14 ஆண்டு கால கணக்கை ராமாயணம் சொன்னது . சரி 
அதே 14 ஆண்டு கால தண்டனையை மகாபாரதமும் சொன்னது . அதுவும் சரி .
இப்பவும் ஆயுள் தண்டனை அதே 14 ஆண்டு கால தண்டனை தான ? அப்போ அம்பேதகர் சொன்ன சட்டத்தின் நிலை தான் என்ன ?
 ஒண்ணுமே புரியலையே

முதல் 10 சட்ட திருத்தங்களில் குடியரசு தலைவரின் உரிமைகள் அனைத்தும் பிரதமருக்கு மாற்றி பாராளுமன்றத்தில் வாக்குரிமை பெற்று , அனைத்து முடிவுகளும் பிரதமருக்குதான் என்று மாற்றி விட்டுள்ளார் நேரு .
அதன் பிறகு ஏகப்பட்ட சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
அப்புறம் எதுக்கு அம்பேத்கரை விட்டு சட்டம் எழுத சொன்னாங்க !
இவங்களே எழுதி இருக்கலாமே ?

 ஒண்ணுமே புரியலையே 

ஒவ்வொரு கட்சியும் , வேறொரு கட்சியில் இருந்து பிரிந்து வரும் போது கொள்கை பிடிக்கலைன்னு சொல்லித்தான் வெளியில வருது.
அப்புறம் போய் திரும்பவும் கூட்டணி வச்சிகுதே .


 ஒண்ணுமே புரியலையே


திராவிடர்கள் கட்சிதானே , மது பழக்கம் கெட்ட பழக்கம்ன்னு சொல்லி பனை மரங்களை எல்லாம் அழிசுது . அதுல பெரியார் கூட தன சொந்த பனை மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார் .
இப்போ மட்டும் எந்த டாஸ்மாக் கடையையும்
இடிக்க மாட்டேங்கிறாங்களே ?

 ஒண்ணுமே புரியலையே 


புராண கதைகளில் கூட பேய் பிசாசு கதைகளே கிடையாது . பூதம் என்று கூறுவார்கள் . அவர்கள் கொஞ்சம் மந்திரம் தெரிந்தவர்கள் என்று கூறினால் கூட நம்ப மறுக்கும் இந்த நவீன காலத்தில் தான் ,

வரிசை வரிசையா , பேய் படங்கள் வருது, அதையும் மக்கள் நம்பி பாக்குறாங்க ! அப்போ இவங்க படிச்சது பொய்யோ ? இல்ல அறிவியலே பொய்யா ?

 ஒண்ணுமே புரியலையே 

அகரம் என்ற அமைப்பின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பேன்னு சொல்ர நடிகர் சூர்யா  பேய் படத்தில் நடித்ததின்  மூலம் பள்ளி மாணவர்களுக்கு மூட நம்பிக்கையை ஒழிக்க முயற்சி எடுத்தாரோ ?

ஒண்ணுமே புரியலையே 



தமிழ்நாட்டில் தான் ஜாதி வெறி பிடித்தவர்கள் இருந்து , கொடுமை எல்லாம் நடந்துருக்குன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா இப்பவும் தமிழ் நாட்டின் பூர்விக ஜாதி எல்லாமே தாழ்ந்த ஜாதி அட்டவணையிலேயே இருக்குதே !
அப்போ யார் நம்மை கொடுமைபடுத்தினான்களோ , அவங்கதான் இப்பவும் உயர்ந்த ஜாதி அட்டவணையில இருக்கங்களா ?

அப்புறம் இந்த மக்களாட்சி என்னதான் கிழிக்கிது ?



ஒண்ணுமே புரியலையே !


தமிழ்நாட்டின் ஜாதி கொடுமை தாங்க முடியாமதான் ஒரு சிலர் கிருஸ்தவ மதத்திற்கே மாறிட்டு வர்றாங்க லாம் . 
ஆனா உலகத்திலேயே அதிகபடியான ஜாதிகளை கொண்ட ஒரே மதம் கிறிஸ்தவம் தானாம் .!


 ஒண்ணுமே புரியலையே 

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...