Wednesday, 23 March 2016

முருகனும் வள்ளியும்

முருகனும் வள்ளியும் -1





 அழகான காட்டாறுகள் .
 நீரை தடுத்து ஓசை எழுப்பும் பாறைகள் .
சலசலக்க வைக்கிறது . 
அது ஓசை என்று கூறி விட்டால் நமக்கு இசையை ரசிக்கும் அருகதை இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தம் .

குரங்குகள் போடும் கும்மாள  சத்தம் கொஞ்சம் நெஞ்சை சலசலக்க வைக்கிறது . அப்பப்பா எத்தனை சத்தம் .

மயில்களின் அகவல் சத்தம் கண்களை கொஞ்சம் அகல வைக்கிறது !

எங்கிருந்தோ வரும் பறவைகளின் ரீங்காரம் 
மனதை கொஞ்சம் வருடி செல்கிறது .

அசைந்து அசைந்து உடலை தொட்டு செல்லும் காற்று 
சில சமயம் தென்றலாய் 
சில சமயம் வாடையாய் வந்து வாசனையும் தூவி செல்கிறது 

இத்தனை மலர்களும் இத்தனை வாசனையா ?
என கேட்க கூடாது . 
வாசமில்லாத மலர்களையும் சுவை இல்லாத கனிகளையும் பார்க்க அது என்ன 21 ம்   நூற்றாண்டா ?

அது முருகனும் வள்ளி அம்மையும் வாழ்ந்த காலம் !
அதி அற்புத காலம் .
அழகான காலம் 
நாம் அப்போது பிறக்க வில்லையே என ஏங்க வைக்கும் காலம் 
உண்மையின்  உரை கல்  வாழ்ந்த காலம் 
உன்னதமான காலம் 
முருகன் 
நண்பனாய் 
நாட்டின் முதல்வனாய் 
நல்ல மகனாய் 
வள்ளியின் கணவனாய் 
எல்லோருக்கும் அழகனாய் 
அறிவியலை மக்களுக்கு விளக்கும் விஞ்ஞானியாய் 
வாழ்ந்த காலம் !

இன்றிலிருந்து சுமார் 8500 ஆண்டுகளுக்கு முன்பு ,

அன்பே உருவான கண்களாய் 
அழகே உருவான அம்சமாய் 
நீரில் கால் நனைத்து 
விளையாடிய வண்ணம் 
தனைமறந்து எதையோ மனதில் சுமந்த வண்ணம் 
பாறையின் மீது அமர்ந்திருப்பது 
வேறு யாரும் அல்ல 
நம் வள்ளி அம்மை தான் !


வள்ளி வள்ளி.... என அழைக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டவளாய் 
எழுந்தாள் .

யாரது என கேட்கும் முன்னே அந்த ஓசை அருகில் கேட்டது .
வேறு யாரும் அல்ல 
வள்ளியின் தந்தை கோடங்கிதான் !

என்னம்மா வள்ளி என்ன செய்து கொண்டிருக்கிறாய் இங்கு தனியாக ?
உன் தோழிகள் யாரும் உன் உடன் இல்லை !

வாருங்கள் அப்பா ! என அழைத்தாள் !

என்னம்மா ஏதேனும் பிரச்சனயா ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய் ?
எங்கே என் மருமகன் ?

ஆமாம் மருமகன் . உங்க மருமகன் தான் பிரச்சனையே என இழுத்தாள் !

ஏனம்மா என்னவாயிற்று என் மருமகனுக்கு !

பொழுது சாய்ந்தும் வீடு திரும்பவில்லை ! அது பிரச்சனை இல்லையா ?

இப்போது தானம்மா புரிகிறது . 

என்ன புரிகிறது அப்பா !

உன்தாயிடம் உன்னை பார்த்து வரலாம் என கூறினேன் . வரவில்லை என கூறிவிட்டாள் .

ஏன் அம்மா வரமாட்டார்களாம் !

கேட்டேனே நீ எப்போதும் உன் கணவன் பற்றி மட்டுமே எண்ணி கொண்டு இருகிறாய் என்றும் , வீட்டிற்கு  யார் வந்தாலும் கவனிக்க மாட்டாய் என்றும் கூறினாள் .  நான் கூட நீ மாறி இருப்பாய் என நினைத்தேன் . 
இல்லை 
நீ உன் அம்மா கூறியது போலத்தான் நடத்து கொள்கிறாய் !

இல்லை அப்பா . அப்படி ஒன்றும் வந்தவர்களை உபசரிக்க கூட தெரியாமல் என் தாய் என்னை வளர்க்க வில்லை . என் கணவனும் என்னை அப்படியெல்லாம் அனுமதிப்பதில்லை என கடிந்து கொண்டவளாய் 

காட்டாற்று ஓரமாக இருந்த அழகான அந்த மனைக்குள் சென்று 
 உள்ளே வாருங்கள் அப்பா 
என கூறி நாணல் பாய் விரித்து போட்டாள் !

தந்தையாரும் அமர்ந்த உடன் 
வேகமாக உள்ளே சென்று நீரும் கிழங்கும் கொணர்ந்தாள் .

உண்ணுங்கள் அப்பா என அன்புடன் பரிமாறினாள் .

எத்தனை பேர் அவளுக்கு பணிவிடை செய்ய காத்திருந்தாலும் ,
வீட்டிற்கு  யார் வந்தாலும் தன கையால் பரிமாறுவதே வள்ளிக்கு  மிக பிடிக்கும் .

வள்ளி நீ இப்படி உபசரிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிரதம்மா !
எனக்கு மட்டுமல்ல உன் வீட்டிற்கு யார் வந்தாலும் நீ இப்படிதான் உபசரிக்கிறாய் என பிறரும் கூறும் போது எனை விடவும் உன் அம்மா மிக்க மகிழ்ச்சி கொள்வாள் தெரியுமா ?

இது நம் பண்பாடுதானே அப்பா நான் மட்டுமல்ல நம் பெண்கள் எல்லோருமே செய்வதுதானே ! நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?

இருந்தாலும் நீ மருகனை மணப்பதற்கு முன்பு எப்படி இருந்தாய் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியுமே !

அப்போது கொஞ்சம் விளையாட்டு தனமாக இருந்தேன் . அதற்காக இப்போதும் அப்படி இருந்தால் என் கணவனுக்கு இழுக்கு என்பது எனக்கும் தெரியும் அப்பா!

அப்படியாயின் உன் கணவனின் பெருமைக்காகத்தான் உபசரிகிறாய் . அப்படியா வள்ளி ?

இல்லை அப்பா ! நான் அப்படி சொல்ல வில்லை. வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை உபசரிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை . இருந்தாலும் கணவன் வீட்டில் அதன் தன்மை சற்று அதிக மேற்பார்வைக்கு வருகிறது . அதைதான் அப்படி சொன்னேன் . என்றாள் .

என்னோவாம்மா நீ வந்தவர்களை எப்படியெல்லாம் உபசரிக்கிறாய் என்பதை வைத்தே நீ எப்படி கணவன் வீட்டில் வாழ்கிறாய் என்பதை நாங்களும் புரிந்து கொள்கிறோம் இல்லையா ?

என்னப்பா அப்படி சொல்லி விட்டீர்கள் ! இருந்தாலும்,இல்லாவிட்டாலும் வந்தவர்களை வரவேற்க வேண்டும் என்பது நமது பண்பாடு அல்லவா அதுவும் இல்லாமல் எனக்கு என்னப்பா இங்கு குறைச்சல் . நம் வீட்டை விட வசதியாகதானே வாழ்கிறேன் .

எனக்கு தெரியாதா என்ன இதோ ஒரு காதை தூரத்தில் உள்ளது நம் மனை . முருகன் உன்னை எப்படி வாழ வைக்கிறான் என்பதை பார்த்துகொண்டு
தானே இருக்கிறோம் . ஆனால் சில நாட்களாக ஏதோ  கூட்டம் நடப்பதாக கேள்வியுற்றேன் . அதை தெரிந்து போகவே வந்தேனம்மா !

எனக்கும் அது குறித்து ஏதும் தெரியவில்லை அப்பா ! நேரம் வரும் பொது கூறுகிறேன் என்று கூறி விட்டார் . இதோ காளைகள் வரும் சத்தம் கேட்கிறது அவர் வந்துவிட்டார் என்று நினைக்கிறன் . இருங்கள் வாசல் வரை சென்று வருகிறேன் என்று கூறி விட்டு வேகமாக ஓடினாள் .


வள்ளி க்குதான் முருகன் மீது எத்தனை அன்பு . அவள் தந்தைக்கும் இனம்புரியாத மகிழ்ச்சி நெஞ்சில் ஊடுருவியது .

 ஏனெனில் முருகன் வள்ளியின் தந்தைக்கு மருமகன் மட்டுமல்ல ,ஆண் வாரிசு இல்லாத அவருக்கு மகன் போல இருப்பவன் . அதனால் முருகனை காணும் போதெல்லாம் இனம்புரியாத சந்தோசம் கொள்வது வழக்கம் .

காலில் இருந்த மெட்டியின் ஓசை மெல்ல எழும்ப கம்பிரமாக நடந்து வந்தான் முருகன்.

ஓடி வந்த வள்ளி வாருங்கள் என்று அழைத்தாள் !

வள்ளியின் தந்தையும் உடன் வந்தார்.

அவரை கண்டதும் வாருங்கள் மாமா ! முன்பே வந்து விட்டீர்களா என்று கேட்டு கொண்டே , 

ஏன் வள்ளி மாமா வந்திருப்பதை யார் மூலமாவது கூறி இருந்தால் முன்னமே வந்திருப்பனே என்று வள்ளியையும் கேட்டான்.

வள்ளியை கோவித்து கொள்ளதே முருகா ! நான்தான் என் மகளிடம் சற்று பேசி கொண்டு இருந்தேன் !

இருவருமே அமர்ந்து பேசுங்கள் . இதோ தேன் எடுத்து வருகிறேன் என்று கூறியவள் பாயை விரித்து விட்டு உள்ளே சென்றாள் 
.
நீங்கள் அமருங்கள் மாமா என்று கூறிய முருகன் அவர் அமர்ந்தவுடன் தாணும் அமர்ந்தான் .

ஏன் மாமா அத்தை வரவில்லையா ?

இல்லை முருகா ! இதோ நாளை காலையில் குளக்கரையில் பார்த்து கொள்வார்கள் . நாம் தான் பார்த்துகொள்ள வே முடிவதில்லை . அதற்காகத்தான் உன்னை பார்த்து செல்லலாம் என்று வந்தேன் .

கூறுங்கள் மாமா ! ஏதோ சொல்ல வருகிறீர்கள் ! நான் ஏதேனும் தவறிழைத்து விட்டேனாஉங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது .என்னை கோவித்து கொள்ள கூட !

இடைமறித்து இல்லை இல்லை முருக அப்படி எல்லாம் எதுவும் இல்லை . நீ என் மருமகன் மட்டும் அல்ல .இந்த கூட்டத்தின் தலைவன் . உன்னை குறை சொல்ல இங்கு எதுவும் இல்லை .

பிறகு என்ன மாமா ?

ஒரு சில நாட்களாக எதோ கூட்டம் நடப்பதாக கேள்வி பட்டேன் .
அது தான் என்ன கூட்டம் என்று தெரிந்து போகலாம் என்று வந்தேன் . 

அதெல்லாம் ஏதும் இல்லை மாமா !

இல்லை முருகா ! ஏதோ இருக்கிறது . யாரேனும் எதிரிகள் வர இருக்கிறார்களா என்ன ?

இல்லையே மாமா ! என் அப்படி கேட்கிறீர்கள் ?

பிற்கு எதற்கு வேலாயுதம் செய்ய சொல்லி கொல்லர்களுக்கு  உத்தரவு கொடுத்துள்ளாய் ! நான் தெரிந்து கொள்ள கூடாதா முருகா ? 


ஒரு நொடி  அதிர்ந்து போனான் முருகன் !


-------------------------------------------------------------------------------------------------    தொடரும் 

Monday, 21 March 2016

நோய்களின் அறிமுகம் சினிமா


ஆரம்ப காலங்களில் புராண , இதிகாச கதைகளை மையமாக கொண்டு மட்டும்தான் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன . ஆனால் 1960 களுக்கு பிறகு அது நோய்களை அறிமுகம் செய்யம் மையமாக மாறியது . ஒரு நோய் என்ன என்று தெரிந்தால் தான் , அதற்கான மருந்தையே மக்கள் தேடுவர் . நோய் இல்லை என்று எண்ணி விட்டால் , மருந்து எப்படி விற்பனை செய்வது ?
எனவே ஒவ்வொரு மருந்து அறிமுகம் செய்வதற்கு முன்பும் , மருத்துவர்களுக்கு அதிகம் சிரமம் கொடுக்காமல் , அவர்களுக்காக எடுக்கப்பட்ட விளம்பரங்கள் தான் சினிமா !


பாலும் பழமும் - 1961 

இந்த படத்தின் மூலம் தான் tiubarclosis எனும் நோய் அறிமுகம் செய்யப்பட்டு , அதற்க்கு மருந்து வெளி நாட்டில் கண்டு பிடித்து விட்டார்கள் . விரைவில் இந்தியாவிற்கு வருகிறது என்பதும் தெரிவிக்க படுகிறது .

நானும் ஒரு பெண் = 1963= ஏவிஎம் productions

இந்த படம் வெளி வந்த பிறகு தான் லோரியால் பாரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது . இந்த படத்தின் மைய கருத்தே ஒரு பெண்ணின் முகம் கருப்பாக இருப்பதால் வரும் பிரச்சனைகள்தான் . அதற்க்கு கிடைத்த மருந்து தான் லோரியல் பாரிஸ்


அன்பே வா = 1966 = ஏவிஎம் productions




இந்த படம் மூலமாகத்தான் சர்க்கரை வியாதி , என்பது அறிமுகம் செய்யப்பட்டது . பிறகு தான் இதற்க்கான மருந்துகள் நமது சந்தைக்கே வந்தன .

வாழ்வே மாயம் = 1982 = சுரேஷ் ஆர்ட்ஸ்

இந்த படம் வந்த பொழுது தான் புற்று நோய் என்பது அறிமுகம் செய்யப்பட்டது  அதே நேரத்தில் விவசாயச நிலங்களுக்கு உரம் போட பயிற்சியும் அதிகம் கொடுக்கப்பட்டது . அத்தருணத்தில் உரங்களால் புற்று நோய் பரவும் வாய்ப்பு இருப்பதாக பரவலாக கருத்து இருந்தது . இல்லை புற்று நோய் சிகரெட் பிடிப்பதால் மட்டுமே வருகிறது என்று மக்களை நம்ப வைப்பதற்காக எடுக்கப்பட்டது .  உண்மையில் என்டோசல்பான் எனும் உரம் போடுவதால்தான் அதிகமாக் புற்று நோய் பரவுகிறது . இந்த நோயினால் அதிகம் பாதிக்க படுபவர்கள் விவசாயிகள்தான் .

இந்த படத்திற்கு பிறகுதான் இந்த நோய் வெளிப்படையாக அதிக மக்களுக்கு வந்துள்ளது .


பி றகு பல படங்கள் புற்றுநோய் விளம்பரத்தை சுமந்து கொண்டு வந்துள்ளன .

சின்ன தம்பி , பெரிய தம்பி :

இந்த படத்தில் தான் ஹார்ட் அட்டாக் அறிமுகம் செய்யப்பட்டது

அதே போல் எயிட்ஸ் நோய் குறித்து மிருகம் என்ற திரைப்படம் வெளிவந்தது . ஆனால் அது எயிட்ஸ் விழிப்புணர்வாக இருந்தது .

நெஞ்சிருக்கும் வரை - 2006 



nenjirukkum varai images க்கான பட முடிவு


இந்த படத்தில் உயிரோடு இருக்கும் ஒருவரிடம் இருந்து இதயம் அறுவை சிகிச்சை செய்ய படுகிறது . இதுதான் மூளை சாவு என்று கூறி , இதய அறுவை சிகிச்சையாக நடைமுறையில் உள்ளது .





இந்த திரைப்படம் மூலம் மனநோய் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு தானே தற்கொலை செய்து கொள்வார்கள் என்று கூறபடுகிறது  ஆனால் இந்த நோய் பற்றி இந்தியாவில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . இது அமெரிக்க மக்களுக்கான வியாதி . இரவை தொலைத்த மக்கள் , எப்போதும் அதேத வெளிச்சத்தோடு வாழ்வதால் வருவது . தற்போது இந்தியாவும் அந்நிலைக்கு வருவதால் , அந்த மருந்துகள் இந்தியாவில் சப்பலைக்கு வந்துவிட்டன . அதன் அறிமுக திரைப்படம் தான் 3 .

இந்த திரைப்படத்தை எல்லோரையும் பார்க்க வைக்க ஒரு நிறுவனம் எடுத்த அதேத முயற்சிதான் உலகமெங்கும் சென்று சேர்ந்த why this கோல வெறிடி பாடல் !


இன்னும் எத்தனையோ திரைப்படங்கள் , நோய்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றன .  திரைப்பட இயக்குனரை கேட்டால் அவர் கூறுவார் இது ஒரு நோய் விழிப்புணர்வு திரைப்படம் என்று !
ஆனால் தயாரிப்பளுக்குதான் தெரியும் இதன் பின் உள்ள நோய் விற்பனையும் , அதற்கான மருந்து விற்பனையும் !


தஞ்சாவூர் - பள்ளி அக்ரஹாரம்





அக்ரஹாரம் என்றால் எப்படி இருக்கும் ?


நம்முடைய திரைப்படங்கள் சில கருத்துக்களை மக்களிடம் தவறாக கூறி உள்ளது . அப்படியே கூறி கொண்டும் இருக்கிறது . அந்த கருத்தில் சிறிதும் மாறாமல் , அக்ரஹாரம் என்றால் அது பிராமணர் குடியிருப்பு என்று மக்கள் மனதில் பதிய வைக்க பட்டுள்ளது .


ஆனால் உண்மையில் அக்ரஹாரம் எனப்படுவது வடக்கு , தெற்காக வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்று அர்த்தம் .

அது மட்டும் அல்லாது இது பிராமணர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று
கூறுவதும் முற்றிலும் பொய் .

அக்ரஹாரங்கள் உள்ள  மற்ற இடங்களை தொடர்பு படுத்தி பார்க்கும் போது தஞ்சையில் தான் அதிகம் .

தஞ்சாவுரை உருவாக்கிய மன்னன் தனஜெயன் எனும் முத்தரையன் என்று கூறுவதும் உண்டு . ஆனால் தனஜெயன் கூட , ஒழுங்கு முறை படுத்தினானே தவிர , இதற்க்கு முன்பு யார் இந்த ஊரை அறிவியல் பூர்வமாக உருவாக்கியது என்பது யாருக்கும் தெரியாது .

ஆம் வீடுகள் எல்லாம் வடக்கு , தெற்காகத்தான் இன்று வரை அமைக்க படுகிறது . காரணம் மேற்கில்  இருந்து கிழக்கு  நோக்கி தான் நீரோட்டம் இயற்கையில் அமைந்துள்ளது . எந்த இடத்தில் நீர் தங்கினாலும் , அதை கிழக்கு நோக்கி வெட்டி விட்டாலே போதும் , நீர் விரைவில் வடிந்து விடும் . அதே நேரத்தில் , அங்ஙனம் செல்லும்நீரோட்டத்தை இடையில் வீடுகள் கட்டி யாரும் தடுக்காமல் இருப்பது இன்னும் சால சிறந்தது . அப்படி தான் தஞ்சையிலும் கிழக்கு பார்த்த வாசல் , மேற்கு பார்த்த வாசல் வீடுகள் கட்டுவது இல்லை . இன்றளவும் வடக்கு தெரு , தெற்கு தெரு என்று
மட்டு மே பெயர் இடுவது வழக்கில் உள்ளது.

இதை மலையாளத்தில் இன்றும் நீர் வழிய சாலை என்று தான் கூறுகிறார்கள் . 
அக்ரஹார்ம் என்பதற்கு மலையாள பெயர் வழியசால ஆகும் .


இப்படி கட்டப்பட்ட வீடுகளுக்கு அக்ரஹாரம் என்று பெயர் சூட்டியது நாயக்கர்கள் தான் . இவர்களது ஆட்சியில் மேலும் மேலும் பற்பல அக்ரஹாரங்கல் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அவை பிராமனர்களுக்காகவே கட்டப்பட்டது . இவர்கள் காலத்திற்கு முன்பு கட்டப்பட்ட இடங்களுக்கும் அங்கு குடியிருந்த மக்களின்  ஜாதி பெயரோடு சேர்த்து அக்ரஹாரம் என்று பெயர் சூட்டப்பட்டது .


தஞ்சையில் உள்ள ஒரு சில அக்ரஹாரங்கள் :

பள்ளி அக்ரஹாரம்
கணபதி அக்ரஹாரம்
கானூர் அக்ரஹாரம்
அய்யம்பேட்டை அக்ரஹாரம்
அண்ணல் அக்ரஹாரம்
இன்னும் பல


பள்ளி அக்ரஹாரம் .
இன்று வன்னியர்கள் என்று வழங்கப்படும் மக்கள் வாழ்ந்த இடம் . இவர்களின் பழைய பெயர் பள்ளி என்று கூறபடுகிறது .

மற்றொரு கருத்தும் உள்ளது வைஷ்ணவர்கள் அதிகம் வாழ்ந்த இடம் . பள்ளி கொண்ட பெருமாளை வணங்கிய மக்கள் அதிகம் இருந்த இடம் .

மற்றொரு கருத்தும் உள்ளது .  சமணர்கள் , தான் முதன்முதலில் கல்வி சாலைகளை பள்ளி கூடங்கள் என்று கூறியவர்கள் . ஆனால் இந்த பள்ளி கூடங்கள் மலைகளின் மீது மட்டுமே அவர்கள் நடத்துவது வழக்கம் என்பதால் தஞ்சையில் இருப்பது  வன்னியர் குல அக்ரஹாரம் ஆகும் .

அதே போல பாபநாசம் தாலுக்கா பகுதியில் இருப்பது கணபதி அக்ரஹாரம் .
இங்கு பொற்கொல்லர்களும் , முத்தரைய இன மக்களும் அதிகம் என்பதால் பொதுவாக கணபதியின் கோவில் ஒன்று கட்டப்பட்டு , அந்த கணபதின் பெயராலேயே இது வழங்கப்படுகிறது .

கானூர் அக்ரஹாரம் 

திருவாரூர் பகுதியில் உள்ளது கானூர் அக்ரகாரம் . இப்போது மக்கள் கானூர் என்று மட்டுமே அழைக்கின்றனர் . காரணம் இப்பகுதில் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து விட்டனர் .
இது முழுக்க முழுக்க விவசாயிகள் வாழ்கின்ற இடம் .

 அய்யம்பேட்டை அக்ரஹாரம் :

இது தான் முழுவதுமாக பிராமணர்களும் , ஜோதிடம் பார்பவர்களும், சௌராஷ்டிர இன மக்களும்  வாழ்ந்த இடம் . ஆனால் இப்போது இந்த பகுதியும் அய்யம்பேட்டை என்று மட்டுமே வழங்கபடுகிறது . இங்கு இஸ்லாமியர்கள் வருகை அதிகரித்ததாலும், பிராமணர்கள் நகரங்கள் நோக்கி குடி பெயர்ந்தாலும் , இப்போது இங்கு சௌராஷ்டிர மக்களும் , இஸ்லாமியர்களும் மட்டுமே வாழ்கின்றனர். அதனால் அக்ரஹாரம் என்ற பெயரையும் எடுத்து விட்டனர் .

இதே போன்று கும்பகோணம் தாலுக்காவில் அமைந்துள்ளது அண்ணல் அக்ரஹாரம் . இதுவும் பிராமணர்களுக்காக கட்டப்பட்டது . 


அதிக அக்ரகாரங்கள் இருப்பது கர்நாடகாவில் தான்!. காவிரி தன வழி பிறழாமல் வர சோழர்களால் கட்டப்பட்டது. 

ஆகவே அக்ரஹாரம் என்பது பிரமான மக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல . அப்படி ஒரு சிந்தனையை உருவாக்கியது நாயக்கர்களும் , அவர்கள் வழிவந்த சினிமா பைத்தியங்களும் தான் !









இனியாவது வீடுகளை அக்ரகாரம் போல் கட்டி நீர் வழியை பெருக்கலாமே !



--------------------------------

கந்தர்வகோட்டை சிவன் கோவில்




கந்தர்வகோட்டை தஞ்சாவூருக்கும்  , புதுக்கோட்டைக்கும்  இடையில் இருக்கும் ஒரு அழகிய ஊர். இவ்வூரில் கோயில் கொண்டுள்ள ஈசன் ஆபத் சாக ஈஸ்வரர் . இந்த ஊரின் வடக்கு பகுதியில் செங்கிப்பட்டியும் தெற்கு பகுதியில் ஆதன கோட்டையும் உள்ளது .





இக்கோவில் தூண்களில் அழகிய சிற்பங்கள் செதுக்க பட்டுள்ளன . இக்கோவில் கட்டி 1000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று இங்குள்ள அர்ச்சகர் தகவல் தெரிவித்தார் .



தற்போது இங்குள்ள புதுக்கோட்டை சமஸ்தானங்கள் இதன் நிர்வாகத்தை கவனிப்பதாகவும் , ஒரு வேலை பூஜை மட்டுமே நடைபெறுவதாகவும் கூறுகிறார். ஆனால் பிரதோஷம் மற்றும் சிவ  ராத்திரி பூஜைகள் சிறப்பாக நடத்தப்படுகிறது . பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினார்.





இந்த கோவிலின் முன்வாயில் தூணில் கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிப்பது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.



ஈசனுக்கும் அம்மன் கோவிலுக்கும் இடையில் உள்ள தூணில் தலைவன் தலைவியின் ஈடுபாடுள்ள சிற்பங்கள் உள்ளது .




கோவிலின் மேற்புறம் முழுவதும் வித்யாசமான மீன் உருவங்கள் செதுக்க பட்டுள்ளன . இது எதோ ஒரு கடல் கடந்த போரில் வெற்றி பெற்ற நினைவாக எழுப்பி இருக்கலாம் என்று ஒரு கருத்தும் இங்கு உள்ளது .





இது முழுவதுமாக பாறைகளால் செதுக்கப்பட்ட கோவில் . இப்பாறைகள் பராமரிப்பு இன்றி சரிபாதி சிற்பங்கள் மற்றும் எழுத்துக்கள் அழிந்து வருவதாக தெரிகிறது.


இந்த பகுதி முத்தரையர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த படியால் இக்கோவில் முத்தரையர்களால் கட்டப்பட்டதாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது .
ஆனால எந்த கல்வெட்டு குறிப்புகளும் இல்லை .


கோவிலை சுற்றிலும் கணபதி கோவில் மற்றும் முருகன் கோவில் அம்மன் கோவில் மற்றும் நவகிரகங்கள் அமைந்துள்ளன. ஆனால் காலத்தால் அவைகள் பின்தங்கியவை .

தஞ்சை பெரியகோவிலை சுற்றி எப்படி கணபதி மற்றும் முருகன் கோவில்கள் உள்ளனவோ அதே போலவே இங்கும் உள்ளது.

மிகவும் அமைதியாக உள்ள கோவில்.

கோவில் அர்ச்சகர் வீடு , கோவிலுக்கு எதிரில் இருப்பதால் , கோவிலுக்கு செல்லும் போது அவரை அழைத்து கொள்ள இங்கு வாய்ப்புள்ளது .
----------------------------------------------------



தஞ்சாவூர் மருத நிலம் ஆகும் . எனவே வேளாண் செய்த நேரம் போக மீதி நேரங்களில் பாடும் , பண்ணும் மிகவும் சிறப்பாக வளர்க்கப்பட்டுள்ளது .

ஜாதி இதற்க்கு இல்லை .
மதம் என்பதே தேவை இல்லை .
நாடு என்ற பேதம் பார்ப்பதும் இல்லை .

யார் இங்கு வந்து இசை கற்கவோ , நடனம் பயிலவோ , இசை கருவிகள் செய்யவோ கற்று கொள்ள விரும்பினாலும் , அதற்க்கு தடை என்று எதுவும் இல்லை .

தஞ்சையின் பூர்வீக இசை கருவிகள் :

நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை நாதஸ்வரம் என்பன ஆகும் .

இந்த நாதஸ்வர இசையில் சிறந்த இசை கலைஞ்கர்கள் இங்கிருந்து தான் உருவாகிறார்கள் . 


 இவர் E .M .சுப்பிரமணியம் . இவர் திருவாரூரை சேர்ந்த இஞ்சிகுடியில் பிறந்தவர் . இதே துறையில் சிறந்து விளங்கும் 20 வது தலை முறை இவர் . இவரது இசை A .R . ரஹ்மான் இசையில் அடிக்கடி ஒலித்து கொண்டு இருக்கிறது . மேலும் நாதஸ்வர பள்ளி ஒன்றை நடத்துகிறார் 



Sheik Chinna Moulana.jpg
மாஸ்ட்ரோ ஷேய்க் சின்ன மௌலான

நாதஸ்வர இசையில் தன குடும்பம் மொத்தத்தையும் இணைத்தவர் 
ஷேய்க் சின்ன மௌலான ஆவார் . இவர் U .N .O  வில் நாதஸ்வரம் வாசித்த பெருமைக்கு உரியவர். குண்டூரை சேர்ந்த இவர் இசை மீது கொண்ட பிரியத்தால் தஞ்சையிலேயே தங்கி விட்டார் .


Kasim-Babu.jpg

காசிம் பாபு பிரதர்ஸ் 

ஷேய்க் சின்ன மௌலானாவின்  பேரன்கள்  காசிம் பிரதர்ஸ் , இசை  சேவையை  தொடர்கின்றனர் 
இவர்கள் இருவரும் திருச்சிராப்பள்ளி செயின்ட்.ஜோசப் கல்லூரில் இயற்பியலில் பட்டம் பெற்றவர்கள் . இருப்பினும் நாதஸ்வரத்தின் மேல் கொண்ட ஈடுபாட்டால் இந்த சேவையை தொடர்கின்றனர் .

தஞ்சை வாழ் இசை கலைஞ்கர்களின் இசை சேவை தொடரட்டும் !
------------------------------------------------------------------------


Sunday, 20 March 2016

ஆட்டி படைக்கும் இட ஒதுக்கீடு பிரச்சனை !

கி.பி.1871 களில் இந்தியாவில் நடைபெற்ற விடுதலை போராட்டத்தின்  ஒரு அங்கமாக அரசியல் உரிமை கோரப்பட்டது . அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் அதை தருவதாக ஒப்பு கொண்டது .அதன் படி மாகாணங்கள் வாரியாக அரசியல் உரிமை கோருவோருக்கென கணக்கெடுப்பு நடத்தப்பட்டது . அதில் பிராமணர்களை தவிர வேறு யாரும் இல்லை .

ஏன் இந்திய சுதந்திர போரில் கூட பிராமண ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி இருந்ததை நாம் அறிய முடிகிறது . காந்தியில் தொடங்கி , இன்று விடுதலை போராட்ட தியாகி என்று பென்ஷன் வாங்கும் கடைசி தொண்டன் வரை பிராமணர்களே !

இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் யார் என்றும் , இந்தியாவில் நடக்கும் ஜாதிய கொடுமைகள் குறித்தும் கணக்கெடுக்க பட்டது . SC என்று கூறப்பட்ட மக்களுக்கு 8% இடஒதுக்கீடு செய்யப்பட்டது . இது நல்ல எண்ணத்தோடு செய்யப்பட்டது அல்ல . தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது , அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பிரமான கூட்டம் விரும்பாது என்பதால் , SC மக்களுக்கு 8% இட ஒதுக்கீடு செய்ய பட்டது .

காலபோக்கில் அதன் விகிதாசாரம் அதிகரிக்கப்பட்டது . காந்தியடிகளின் ஹரிஜன சேவையாலும் , அம்பேத்கர் போன்றோரின் எழுச்சியாலும் , பிராமணர்களால் இதை எதிர்க்க முடியவில்லை .

இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு , வேறு வழிதெரியாமல் இதை தொடரவேண்டிய நிர்பந்தத்தை மௌண்ட்பெட்டன் பிரபு ஏற்படுத்து விட்டு சென்றார் . நேரு விற்கும் , மவுண்ட் பேட்டன் மனைவி எட்வினாவிர்க்கும்  இருந்த ரகசிய உறவு முறைகளால் , சற்று மனம் நொந்த மௌண்ட்பெட்டன் பிரபு , நேரு கூறிய கருத்துகளுக்கு எதிர் கருத்தையே விதைத்தார் .


நேரு மற்றும் எட்வின மவுண்ட் பேட்டன்



விவசாயிகளுக்கு வாக்குரிமை கொடுக்க வேண்டாம் என்பதும் , படித்தவர்கள் மட்டும்மே வாக்குரிமை பெற வேண்டும் என்பதும் நேஹ்ருவின் கருத்து .

மறுத்து விட்ட மௌண்ட்பெட்டன் , விவசாயிகளுக்கு வாக்குரிமை அளித்தார் .


இட ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டது மௌண்ட்பெட்டனல்தான் .

சரி 1980 களோடு இட ஒதுக்கீடு முறை கைவிடப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது . ஆனால் அரசியல் லாபங்களுக்காக இன்னும் 5 ஆண்டு , இன்னும்  5 ஆண்டு என இந்திரா காந்தியால் முடிவு நீடிக்கப்பட்டது . பிறகு 2000 திற்கு பிறகு என ஒத்திவைக்க பட்டு அரசியல் ஆதயங்களுக்காகவும் , ஆட்சியார்களின் ஜாதிகார்கள் மட்டுமே அரசு அதிகார்கலாக இருக்க வேண்டும் என்ற சுயநலதிர்க்காகவும் இன்றும் தொடர்கிறது இட ஒதிக்கீடு .

தமிழகத்தில் இட ஒதிக்கீடு :


இந்திய விடுதலைக்கு பின் தொடர்ந்த , இட ஒதிக்கீடு ஒரு கட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 % என்றும் , வன்னியர்களுக்கு என்று 20% சதவிகிதமும் , 3% அருந்ததியர்களுக்கு மட்டும் என்றும் , 1% மலை வாழ் மக்களுக்கு மட்டும் என்றும் பிரிக்கப்பட்டது .


இவ்வாறாக , தமிழ்நாட்டில் 69 % இட ஒதிக்கீடு SC , ST , MBC , BC மக்களுக்காகான இட ஒதிக்கீடு  மீதம் உள்ள 31 % பொது என்றும் 1971 ல் திராவிட முன்னேற கழக அரசால் பிரிக்கப்பட்டது .

இப்போது அதையும் இப்படி பிரிக்கிறார் கருணாநிதி 1989 களில் !
31 % பொது என்பதில் மாற்றம் இல்லை .
30 % BC  மக்களுக்கு !
20 % MBC மக்களுக்கு !
19 % SC / ST மக்களுக்கு !

சரி கணக்கு சரியாக தானே வருகிறது என்று பார்த்தல் , SC பிரிவிலும் ஆதி கன்னடர் மற்றும் ஆதி தெலுங்கர் இணைக்கப்பட்டு 19 சீட்டுகளில் ஒன்று அல்லது இரண்டு மட்டும் ஆதி தமிழனுக்கு வழங்கப்பட்டு மீதம் தெலுங்கு மக்களுக்கே வழங்கப்படுகிறது .

MBC பிரிவிலும் 20 சீட்டுகளில் அதே நிலையில் , தெலுங்கு மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு இசை வெள்ளாளர், முத்து ராஜ நாயிடு , முதிராஜ் நாயிடு என தெலுங்கு மக்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது .

BC பிரிவிலும் தெலுங்கு விஸ்வகர்மா , கோவ்டாஸ் இவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு , ஆசிரிய தொழில் முதல் அனைத்து தொழில்களிலும் மிகவும் சொற்ப சீட்டுகளே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .
karunanidhi க்கான பட முடிவு



இவர்களையெல்லாம் தமிழ் ஜாதி பெயருக்கு மாற்றி இந்த பிரிவுகளின் கீழ கொண்டு வந்தவர் , கலைஞர் கருணாநிதி . சின்ன மேளம் என்ற தெலுங்கு பிரிவை இசை வெள்ளாளர் என்ற மாற்றி கொண்ட உத்தமர் .


இதை நீங்கள் தமிழ் நாட்டின் எல்லா அலுவலகங்களிலும் , 1990 க்கு பிறகு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் என்ற அட்டவனை யின் கீன் காணலாம் .

எப்போதும் போல் 31 % பொதுவிலும் 3 சீட்டுகள் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டு மீதும் உயர்ந்த சாதி மக்களுக்கும் , பிராமணர்களுக்கும் வழங்கப்படுகிறது .

தெலுங்கனும் , பிராமணனும் மட்டும் அரசு அலுவலகங்களில் இருப்பதற்கு எதற்கு நமக்கு சுதந்திரம் .
எதற்கு நமக்கு இட ஒதிக்கீடு .

பாகிஸ்தான் மக்களை நம் நாட்டு அரசு அலுவலகங்களில் உட்கார வைத்தால் என்ன நிகழும் ? அதே தான் தமிழ் நாட்டிலும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது .

75 % அளவிற்கு பிராமன மற்றும் தெலுங்கு இன மக்கள் .
10 % இப்போது தான் அலுவலகங்களுக்குள் முதன்முறையாக அடி வைக்கும் முதல் தலைமுறை பட்டதாரி இனம் .
மீதம் 15 % மக்கள் மட்டும் நன்முறையில் பணியாற்றி என்ன பிரயோசனம் ?

தரக்குறைவான கல்வி !
எங்கு பார்த்தால் லஞ்சம் !
காலந்தாழ்ந்து நடக்கும் வேலைகள் !
ஒரு நாளில் முடிவேண்டிய வேலை , ஏழை மக்களை வாட்டி வதைக்கும் அவலம் .

இதே நிலை தான் இன்று இருக்கும் தெலுங்கான மக்களுக்கும் , அந்த்ராவில் ஏற்பட்டது . அரசு அலுவலகங்களில் நாயிடுவும், ரெட்டியும், எச்சுரியும்  மட்டும் வேலைக்கு சேர்க்க பட்டார்கள். சில உயிர்களை பலி கொடுத்து தனி மாநிலம் வாங்கியது அதே தெலுங்கு இனம்தான் .

தன இனத்திற்கே துரோகம் செய்பவன் , நாம் பிற இனம் . எப்படி நம் அரசு நன் முறையில் இயங்கும் ?

இதை எல்லாம் எதிர்த்து 2008 வரையுளும் உச்ச நீதி மன்றத்தில் பல வழக்குகளும் நடந்துள்ளன .
 ஆனால் தீர்ப்பு நீண்டு கொண்டே போகிறது.

உண்மையிலேயே தமிழ் மக்கள் தான் ஆசிரிய பணியில் இருக்கிறார்கள் என்றால் , திருவள்ளுவர் சிலையை மூடிய போது  எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பார்களா ?அங்கு தமிழ் ஆசிரியர்களா இருப்பது பெரும்பாலும் பிராமணர்கள், சௌராஷ்டிர மக்கள் , தெலுங்கு மக்கள் .  எப்படி தமிழ் வளரும் ?


சிந்திக்க வேண்டிய நேரத்தில் , கீழ ஜாதி காரனெல்லாம் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் என்று எண்ணுவதும் , மேல் ஜாதி மக்கள் நம்மை தள்ளி வைக்கிறார்கள் என்று எண்ணுவதும் மடமை தனம் .

உண்மையில் இங்கு தமிழனமே ஏமாந்து கொண்டு இருக்கிறது


Wednesday, 16 March 2016

காதல் எல்லாம் செய்யும் ! - love stories


காதல் வாழ்வில் எல்லாம் தரும் !
இன்பம்
துன்பம்
வீரம்
கோபம்
லட்சியம்
இலக்கு
இரக்கம்
என
காதல் விட்டு வைத்தது என
சொல்ல எந்த உணர்வும்
மீதம் இல்லை !

அலெக்ஷாண்டார் கிரகாம் பெல் :


அலெக்ஷாண்டர் க்ரஹாம் பெல் அவரது மனைவி மபெல் ஹப்பர்ட் , அவர்களது மகள்கள் எல்சியா மற்றும் மரியன்



பெல் தன்னிடம் படிக்கச் வந்த காது கேளாத மபேளை விரும்பி திருமணம் செய்து கொண்டவர்!
இப்படி சொல்லவதை விட மாபெல் எனும் பெண் தன்னைவிட 10 வயது மூத்தவரை விரும்பி
அவரையே மணந்தார் !

மாபெலின் காதல் பிரதிபலிப்புதான் 
காது கருவியும் 
தொலைபேசி கருவியும் !
பெல் 1922 ஆகஸ்ட் 2 ம் நாள் இறந்தார் !
மாபெல் 1923 ஜனவரி 3 ம் நாள் இறந்தார் !
இந்த இடைப்பட்ட 5 மாதங்கள் 
அவள் , அவளது கணவனை 
காண காத்திருந்த மாதங்கள் !
அவன் இல்லாமல் அவள் 
ரணப்பட்ட மாதங்கள் !

அவன் அவள் காது கேளாமை குறை தீர
வழி தேடினான் .
அவளோ அவன் வாழ்வோடு இணைவது
ஒன்றே
வாழ்வென மாறினாள் !

வாலெண்டினா தெரஸ்கோவா :

valentina tereshkova க்கான பட முடிவு

வாலண்டினா தெரஸ்கோவா

இவர் தான் விண்வெளிக்கு சென்ற முதல் பெண்.
1959 ல் சோவியத் ரஷ்யா வில் இருந்து விண்வெளியில் நடந்த முதல் ஆண் யூரிகாகரின் 
அதன் பிறகு பெண் யாரேனும் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்க பட்டது
500 விண்ணப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தகுதியானவர் தான்
வாலண்டினா தெரஸ்கோவா !

அப்போது அவர் ஒருவரை காதலித்து கொண்டிருந்தார் .
அவர் வேறு யாரும் இல்லை !
முதன் முதலாக விண்வெளியில் இருந்து தொலைக்காட்சி நிகழ்சிகளை 
ஒலிபரப்பியவர் அண்டெரியன் நிகோலயாவ் 
வோஸ்டாக் 3 மற்றும் சொயச 9 எனும் இரண்டு space flights ஐ உருவாக்கியவர் .
1962 ல் வெற்றிகரமாக இவரது லட்சியங்கள் நிறைவேறின .

உடனே தெரசகொவாவிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார் .
அவரோ உங்கள் பெயர் வரலாற்றில் இடம் பெற்றதுபோல் என் பெயரும் இடம்பெற்ற பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி விட்டு

அதற்காக இடையறாது உழைத்தார் . கடுமையான பயிற்சிக்கு பின்னரே விண்வெளி செல்லும் வாய்ப்பு 1963 ஜூன் 13 ல் அவருக்கு கிடைத்தது .

வெற்றிகரமாக 2 நாட்கள் 23 மணிநேரம் 12 நிமிடங்கள் விண்வெளியில் இருந்து விட்டு , தன லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் தான்
தன காதலனை கை பிடிக்கிறார் .
அதே ஆண்டு 1963 ல் நவம்பர் மாதம் தன காதலனை , மணந்து கொண்டார் வாலண்டினா தெரஸ்கோவா !


தன கணவருடன் வாலண்டினா

காதல் கண்டுபிடிப்பை கொடுக்கும் !
காதல் விண்வெளி ஆய்வை வளர்க்கும் !
உணர்ச்சி பிழம்பாய் மாற வைக்கும் !

வென்ற காதல் கொடுத்தது !
தோற்ற காதல்
இல்லை இல்லை
தோற்கடிக்க பட்ட காதல்
கொஞ்சம்
பழிவாங்கியது !
அதுதான் ஔரங்கசீப் காதல் !


aurangzeb க்கான பட முடிவு

1637 ம் ஆண்டு ஔரங்கசீப் , டில்ராஸ் பானு பேகம் என்ற பெண்ணை மணக்கிறார் . அத்திருமணம் அவர் மனத்தால் ஒப்பிய திருமணம் அல்ல .



அவர் ஹிரா பாய் என்ற தக்கான தேசத்து பெண்ணை விரும்புகிறார் .
எப்போதும் ஔரங்கசீப், இங்குதான் இருக்கிறார் .

அவளை ஆட சொல்லி ரசிக்கிறார் !
அவள் அழகில் மயங்கி , சிந்தனையற்று வாழ்கிறார் !

அவருக்கு அவள் மீது கொள்ளை ஆசை !
அவளோ அடிமை பெண் !

எப்படி சமுதாயம் ஒப்பு கொள்ளும் !
இருப்பினும் அவன் இளவரசன் அல்லவா ?

எனவே ராஜபுடின அரசுகள் அவரை எதிர்த்து கேட்கவில்லை !
இருப்பினும் மேல் இடத்து உத்தரவு

நடனம் ஆடிகொண்டிருந்த ஹீரபாய்
அவன் கண் முன்னே சரிந்து இறந்து போகிறாள் !

தாளாத துக்கம் 
வெளிவர விரும்பவில்லை அவன் 
அவள் , அவன் முன்னே இனி ஆட மாட்டாள் 
அவனால் அவளை இனி ரசிக்க முடியாது 

அவன் பார்த்து பார்த்து ரசித்த
கண்கள்
இனி அவனோடு பேசாது !

அவள் பாடல் இனி ஒலிக்காது
இவனும் இனி மயக்கத்தில் இருக்க மாட்டன் .

அப்போதுதான்
ஷாஜஹான் , தன மனைவிக்கு தாஜ்மஹால் எனும்
அற்புதத்தை எழுப்புகிறான்.

கோபம் கொண்ட ஔரங்கசீப்
டெல்லிக்கு விரைகிறான்
ஷாஜஹானை சிறை பிடிக்கிறான் !

மூத்த சகோதரர்களை அழிக்கிறான் !
நான் தான் மன்னன் என 
தானே அறிவித்து கொள்கிறான் !

சமாதனம் பேச வந்த 
குருனாக்கிடமும் 
கொடூரமாய் நடந்து கொள்கிறான் !

ராஜபுடின அரசுகளை எல்லாம் ஆட்டி படைக்கிறான்
ராஜபுதின அரசுகளின் கீழ் இருந்த இந்து மக்களுக்கு
வரி மேல் வரி விதித்து
கொடுமைகாரன் என்று பெயரும்  எடுக்கிறான் !

அவன் நெஞ்சில் ஈவு இல்லை
இரக்கமும் இல்லை
கோபத்திற்கு மட்டும்
அவனிடத்தில்
பஞ்சமில்லை !

பழிவாங்கும் உணர்விற்கு
ஒரு துளியும்
குறைவில்லை !


அவன் பானு பேகத்திற்கு பிறகு
யாரையும் மணக்க வில்லை !

அவன் முதுமை காலத்திலும்
அவன் நினைவுகளோடு வாழ்ந்தது
ஹீரா பாய் மட்டும்தான் !

அவன் செய்த எல்லா தவறுக்கும்
அடித்தளம் போட்டது
ஹீரா பாயின் மரணம் மட்டும் தான் !

அன்று அழிந்தது ராஜபுதின அரசுகள் மட்டுமல்ல !
முஹல் வம்சத்தின் அழிவும் தான் ஆரம்பமானது !

காதல் எல்லாம் செய்யும் !

இந்த மனித சமுதாயத்தின் ஆரம்பம் முதல் 
எல்லா தொடக்கமும் , முடிவும் 
உருவானது 
காதாலால் மட்டுமே !

காதலை வாழவைத்தால்
 அது
ஆக்க வேலைகள் செய்யும் !

காதலை
அழிக்க நினைத்தால்
அழிவு வேலைகள் செய்யும் !

லவ் பண்ணுங்க - நல்லா பண்ணுங்க !

லவ் பண்ணுங்க அப்புடி சொல்லித்தான்
லவ் பண்ணனும்னு அவசியமில்ல !

இளைய தலைமுறைக்கு எல்லாம் தெரியும்!
இணையங்கள் சொல்லி தருகின்றன !

எல்லாம் இணையத்தால் சொல்லி தர முடியும்
அனால் அன்பை சொல்லி தராது இணையம் !

காதல் சுவாரஸ்யமானது என்று சொல்லி தராது !

love images க்கான பட முடிவு



தூரத்தில் இருந்து பார்த்து ,
அவளும் பார்ப்பாள் என்ற ஏக்கத்தை
அந்த நிமிடத்தின் இதய படபடப்பை ,
வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத
அந்த உணர்வை சொல்லி தராது !

அவன் அறிவாளியானவன்
இவன் நம்மை நினைக்க மாட்டானா ?
எவன் எவனோ நம் பின்னால் வரும் போது
இவன் மட்டும் வரவில்லையே
ஏன் ?
என்ற வினா எழுப்பும் உள்ள குமுறலை
அள்ளி தராது !

கல்லூரிகள் , இணையங்களை விட
வேகமாக
தன சுயநலத்திற்க்காக
ஆண் , பெண் என்ற உணர்வை
அழித்து கொண்டு இருக்கின்றன !
எல்லா வகையிலும் !

நம் சமுதாயம் ஒரு போதும்
காதலை எதிர்த்ததில்லை !

எதிர்த்திருந்தால்
வள்ளுவன் காமத்து பால்
எழுதி இருக்க மாட்டன் !







குறுந்தொகையும் , நற்றிணையும்
வந்திருக்காது !

தமிழில்
காதல் மற்றும் வாழ்வியல் சார்ந்த நூல்களுக்கு தான்
பதினென் மேல் கணக்கு என்று பெயர் .

துறவு மற்றும் அறிவுரைகள்
கூட
பதினென் கீழ் கணக்கு என்று பெயர் பெற்றுள்ளன !

ஆகவே
காதலை தமிழியம்
எதிர்த்ததில்லை !
மறுத்ததில்லை !
வெறுத்ததில்லை !

ஆனால்
காதல் செய்யும் வழிகள்
திருமணதிற்கு முன்பே
எல்லாம் முடித்து
அநாதை ஆசிரமங்கள்
பெருக்கும்
தவறான உணர்ச்சி பெருக்கை தான்
தவறென கருதுகிறது !

இதை தவிர்த்து வாழ்வில்
வெற்றி பெற்ற மனிதனின்
காதல்
தோற்றதே இல்லை !

ஆதலால் இளைங்கர்களே

நீங்கள் பார்க்காமல்
காதல் கொள்ள வேண்டாம் !

தொலைபேசி காதலில்
தொலைந்து போக வேண்டாம் !

ஈமெயில் காதலிலும்
பேஸ் புக் காதலிலும்
உறைந்து போக வேண்டாம் !

கண்ணோடு கண் பார்த்து பேசுங்கள் !

கை கோர்த்து நடக்காமல்
காதலித்து பாருங்கள் !

கடற்கரையில்கால் நனைக்காமல்
காதலித்து பாருங்கள் !

பேருந்தில் உரசாமல்
காதலித்து பாருங்கள் !

உணவு விடுதிகளை
நிறைக்காமல்
காதலித்து பாருங்கள் !

சினிமா தியேட்டரில்
எல்லாம் செய்யலாம் என்ற நப்பாசை விட்டு
காதலித்து பாருங்கள் !

அதுதான் சுவாரஸ்யம் !
அதுதான் அழகு !
அத்தனையும்  இன்பம் !
வாழ்நாள் முழுக்க தொடரும்
அதீத இன்பம் !


தூர நின்ற காதல்
லட்சிய காதலாக வரலாறுகளில்
வாழும் !

மற்றவையெல்லாம்
திருமணம் வரை கூட செல்லாமல்
காசை கரைத்தே சாகும் !


மாப்ள சிங்கம் - விமர்சனம்




கூபுடாத பஞ்சயாத்துக்கு , நாட்டமை பண்ண வந்த அவந்தாண்டா தெலுங்கனும், பிரமணனும் .!

இந்த படத்துக்கும் , இந்த வார்த்தைக்கும் என்ன சம்பந்தம் .

இந்த படத்தோட மைய கருத்து என்ன வேனில் திடீர்னு தமிழ் , தெலுங்கு அப்புடின்னு பிரிச்சு பேசாதீங்க ! வாங்க எல்லோரும் ஒத்துமையா இருப்போம்.

அட நல்லதா தானே சொல்லறான் !

ஒத்துமையா இருப்போம்னு சொல்றதுள்ள என்ன தப்பு.!

டேய் , இதை நீங்க முன்னாடியே யோசிச்சி சொல்லி இருக்கணும் .

யார் கிட்ட தமிழ் நாடு முழுக்க இருக்கானே தெலுங்கு காரன் அவன்கிட்ட !

இப்போ தமிழ் மக்கள் எல்லாம் உரிமை கேட்குறாங்க அப்புடினதும் , எப்புடிடா அது , அடிச்சிகாதிங்க , எங்கள பிரிச்சி பேசாதேங்க அப்புடின்னு டயலாக் பேசுறீங்க !

இத்தனை நாள்ல பிரிவினையை ஏற்படுத்தி அதுல குளிர் காஞ்சியே பழகிட்ட உங்களுக்க நல்ல என்னம்மேல்லாம் வருது .

எப்போதும் போல , இவங்க தான் நம்மள பயமுறுதிக்கிடே இருப்பனுன்களே !
அதே மாதிரியே இந்த படத்துலயும் , நம்ம மட்டும் ஒத்துமையா இல்லையின்ன மறுபடியும் வெள்ளக்காரன் உள்ள வந்துருவான் .
அப்புடின்னு முடிக்கிரானுங்க !

விமல் நாயிடு , அஞ்சலி நாயிடு , ராதாரவி நாயிடு , ஜெயப்ரகாஷ் நாயிடு , குயிலி நாயிடு மதுபால என்ற ஸ்ரீலங்கா கேரளா நாயிடு  இப்புடி படைத்தல நடிச்சவன் , படத்த எடுத்தவன் , தயாரிப்பு செய்தவன் எல்லாருமா சேர்ந்து தமிழ் மக்கள் நல்லா இருக்கணும் அப்புடின்னு , தமிழ் மக்களுக்கு கருத்து சொல்லி இருக்காங்க !

அவங்க பயம் , தமிழனத்தின் எழுச்சியை வெளிபடுத்துகிறது .

Tuesday, 15 March 2016

ஜாதியின் பெயரால் அழியும் பூர்வீகம் !


Chinnappa of the Paraiyar Caste, Aged 21, 1827-35 Giclee Print
இவர் சின்னப்பா என்பவர் . பறையர் இனத்தை சேர்ந்தவர் .1827 ல் வாழ்ந்தவர் . நாரயனனுக்காகவே வாழ்ந்தவர் . ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இல்லாத இன வெறி தற்போதுதான் நடக்கிறது . ஏன் தெரியுமா ?  தொழில் நுட்ப வளர்ச்சி !
இதை வளர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வான் தொழில் முனைவோனும் , அதற்க்கு உதவும் அரசியல் வாதியும் .




 தன ஜாதியை தானே இழிவென்றும் , உயர்வென்றும் எண்ணுவதும் ,
அதற்காக மாற்று சிந்தனைகளை கையில் எடுப்பதும் , குல தொழிலை சுத்தமாக வெறுப்பதும் இன்று வழக்கமாகி விட்டது .

அடுத்த ஜாதி காரனுக்கு மரியாதை கிடைகிறது என்றால் , அவன் செய்யும் தொழிலை தானும் செய்வது , அவன் படிக்கும் படிப்பை தானும் படிப்பது என்று யாரோ ஒருவரை துரத்தி கொண்டே இருக்கிறோம் .

நம் மீது நமக்கு பல நேரங்களில் நம்பிக்கை இல்லை 
நாம் செய்யும் தொழில் மீதும் மரியாதை இல்லை 

உன்னால் மரியாதை கொடுக்க படாத எந்த ஒரு தொழிலும் உன்னை உயர்த்தாது .

எந்த தொழிலும் !

தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் !
தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் !

இன்று அனேக வேலை வாய்ப்பு இல்லாத நிலை உருவாக காரணமே இது தான் !




பால் கறப்பதும் ,
வேளாண் செய்வதும்
செருப்பு செய்வதும்
மரம் இளைப்பதும்
கட்டிடங்கள் கட்டுவதும்
குப்பை அள்ளுவதும்
பறை அடிப்பதும்
முடி திருத்துவதும்
படகு செய்வதும்
பாதுகாப்பு பணியில் இருப்பதும்
வாய்கால் வெட்டுவதும்
கிணறு வெட்டுவதும்
இசை கருவிகள் வாசிப்பதும்
நகை செய்வதும்
பானை செய்வதும்
கூரை வேய்தலும்
கூடை முடைவதும்





இழிவென்று என்று முதல் நினைக்க ஆரம்பித்தோமோ , அன்று முதல் ஆரம்பித்தது நம்மை ஆட்டுவிக்கும் உயர்ஜாதி வழக்கம் .



ஒருவன் உன் தொழிலை இழிவாக பேசினால் , 
நீ நிருபித்து காட்டு இதுதான் உன்னை விட சிறந்த தொழில் என்று !

அதை விடுத்து அவனது ஜாதிக்கு மாறி விடலாம் என்று நினைப்பது 
உன் மேல் உனக்கே மரியாதை இல்லை என்பதையே காட்டும் .


நன்றாக யோசித்து பார்த்தால் நாம் எந்த தொழிலை எல்லாம் அசிங்கம் , கேவலம் என்று ஒதுக்கி வைத்தோமோ அவற்றின் காலி இடங்களைத்தான் தொழில் நுட்பம் எனும் பேய் நிரப்பி கொண்டு இருக்கிறது .

உண்மையில் எந்த தொழிலும் கேவலம் இல்லை . ஒருவன் ஒரு புதிய தொழில் நிட்பத்தை கண்டறிந்து விட்டால் . ஏற்கனவே அதை சிறப்பாக செய்பவனை பார்த்து , உன்னுடைய தொழில் கேவலமானது என சிலருக்கு சம்பளம் கொடுத்து  பேச சொல்லி , அதந்த தொழிலுக்கான இடத்தை காலியாக்கி அதை நிரம்ப்புவதே மார்க்கெட்டிங் செய்யும் வேலை 


உன்னிடம் எப்படி உன் தொழில் கேவலம் என்று கூறப்பட்டதோ , அப்படிதான் இதை பயன்படுத்துவோர் எல்லாம் ஏழைகள் என்றும் , பொருளாதரத்தில் பின் தங்கியவர்கள் என்றும் ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது .

இந்த வேலையை சரியாக செய்து பலரையும் பயன்படுத்த விடாமல் தடுத்ததும் , வேலை வாய்ப்பின்மையை உருவாக்கியதும் அரசியலும் , அதை விட முக்கிய பங்கு கொண்ட சினிமா எனும் அரக்கன் .

இதை எல்லாம் யோசிக்காமல் ,

 ஜாதி மாறி விட்டால் வாழ்வாதாரம் உயர்ந்து விடும் என்று
நினைப்பது ம் , பூணூல் போட்டு கொண்டால் என்னையும் எல்லோரும் மதிப்பார்கள் என்று நினைப்பதும்,
கோனார் எனும் பெயரை யாதவர்கள் என்று மாற்றுவதும்
பொற்கொல்லர் எனும் பெயரை விஸ்வகர்மா என்று மாற்றுவதும்
பள்ளர் என்பதை தேவேந்திர குல வெள்ளாளர் என்று கூறுவதும்
தன ஜாதி பெயரில் தேவர் எனும் பட்டதை இணைப்பதும்
இவ்வாறு சம்ஸ்கிருத பெயராக தன ஜாதி பெயரை மாற்றி விட்டால் நம்மை எல்லோரும் மதிப்பார் கல் என்று நினைப்பதும்
நம்மை நாமே இழிவு படுத்துவதற்கு சமம் .

என் தாயும் , தகப்பனும் ,
என் பாட்டனும் , பூட்டனும்
என்ன ஜாதியால் இழிவுபடுத்தபட்டார்களோ
அதே பெயரால் ,
எவன் எம்மை வீழ்த்தி னானோ
அவனை வீழ்த்தி காட்டுவேன் என்று கூறினால்
அது தான் வெற்றியின் முதல் அடி !

சூரியனை நிலவென்று பெயர் மாற்ற வேண்டாம் !
சுட்டெரிக்கும் சூரியனாய்
தன்னை தான் உணர வேண்டும் !

நினைவிற் கொள்க !
போற்றுவார் போற்றலும் ,
தூற்றுவார் தோற்றாலும்
இந்த உலகின் இயற்கை !


Monday, 14 March 2016

FORWARD CASTE எனும் பன்னாடைகள்

13- 3- 2016 அன்று திருப்பூர் அருகே உடுமலைபேட்டை யில் , 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட கீழ்ஜாதி ஆணும் , மேல் ஜாதி பெண்ணும் சாலையில் , பகல் நேரத்தில் வெட்டி சாய்க்க பட , அந்த ஆண் சில நிமிடங்களிலேயே இறந்து விட்டான். அந்த பெண் மோசமான நிலையில் மருத்துவ மனையில் உள்ளார் .

இதில் முக்கிய விஷயம் என்னவெனில் விஜயகாந்த் தவிர்த்து வேறு எந்த அரசியல் கட்சிகளும் இதற்காக பேசவில்லை . தேர்தல் நேரத்தில் எதையாவது பேசி வாக்குகளை இழக்க யாரும் தயார் இல்லை .

அந்த மேல் ஜாதி பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிவிட்டார் . அவருக்கு நன்றாக தெரியம் . வெளியில் வந்து விடலாம் என்று .!



ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலம் 
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்  என்றான் பாரதி 

ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை ?

எவண்டா இங்க உயர்ந்த ஜாதி ?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல , இந்தியாவின் எந்த கடைகோடியிலும் தன்னை உயர்ந்த ஜாதி என்று கூறிக்கொள்ள எவனுக்கும் தகுதி இல்லை .

வெட்க பட வேண்டும் நீயெல்லாம் .!

பொருளாதாரத்தால் நீ உயர்ந்த ஜாதியா ?

அந்த சொத்து அனைத்தும் உன் பாட்டனும் , பூட்டனும் எதோ ஒரு மன்னனின் காலத்தில் மன்னனுக்கு ஜால்ரா அடித்து  சேர்த்த சொத்து !

வெட்க படு ஏதேதோ தவறுகள் , அல்லது காட்டி கொடுப்பது , ஏழைகளை ஏமாற்றுவது எதோ ஒரு தவறுகாளால் உருவான சொத்து .!

ஒ !  நான் வீரன் ! அதனால் நான் உயர்ந்த ஜாதி என்று கூறுகிறாயா ?

அதற்கும் கூட இந்தியாவில் எவனுக்கும் தகுதி இல்லை !

200 ஆண்டுகள் ஆங்கிலேயனிடம் அடிமை பட்டு கிடந்த பொது வாளும் , வேலும் எடுத்து கொண்டு போய்  நாட்டை காப்பாற்றி விட்டாயா ?

உனக்கு பின்னால் பத்து பேர் வருகிறான் என்பதால் நீயெல்லாம் உயர்ந்த ஜாதியா ?

ஜெயலலிதாவின் காலில் விழுந்து கும்பிட்ட பன்னீர்செல்வம் 1000 கோடி க்கு சொந்த காரராம் . உன் பின்னால் வருபவன் மட்டும் அல்ல , உன் காலில் விழுபவன் கூட உன் பணத்தை சுரண்ட வரும் துரோகிதான் .

உன் பட்டன் , பூட்டன் இவர்களெல்லாம் சேர்த்த துரோக சொத்து , உன் பின்னால் வரும் துரோகிக்கும் சொந்தம் !

பார்பனர்களை பின் பற்றி , அவர்களுக்கு பெண் கொடுத்து , பெண் எடுத்ததால் நீ உயர்ந்த ஜாதியா ?

பார்பானுக்கு கொள்கையெல்லாம் கிடையாது .

கல்யாண வீடுன்ன மாப்பிள்ளை அவன்தான் .
சாவு வீடுன்ன பிணமும் அவன்தான் .

எல்லா இடத்திலும் தனக்கு முன்னுரிமை வேண்டும் என்பது மட்டும்தான் அவனது லட்சியம் .

ஹிந்து அரசன் ஆட்சியில் இருந்தாலும் பிராமணன் தான் அமைச்சன்.
இஸ்லாமியன் இருந்தாலும் அவன்தான் அமைச்சன் .
கிறிஸ்தவன் இருந்தாலும் அவன்தான் அமைச்சன் .

கோழைகளாய் வாழ்ந்து , நாட்டை எவன் எவனுக்கோ விற்று விட்டு எங்கள் குளம் க்ஷத்ரிய குலம் , நாங்க உயர்ந்த ஜாதி என்று கூறுவது வெட்கம் .
வெட்க படவேண்டிய உனக்கெல்லாம் என்ன ஜாதி பித்து

கொலை செய்வதே பாவம் .
அதற்க்கு ஒரு சப்பகட்டு ஜாதி

நெஞ்சில் வீரம் இருந்தால் , உனக்கு இணையானவன் என்று கூறி கொள்ளும் அதே உயர்ந்த ஜாதி காரனோடு போட்டி போடு .

ஒரு விபசாரம் செய்யும் பெண்ணை கொள்வது கூட வீரம் இல்லை .

ஒரு பெண் பிள்ளையை கொள்வதும்  , கையில் ஆயுதம் இன்றி நிற்பவனையும் கொள்வதும் இழிபிறவியிலும் , இழி பிறவி என்பதை காட்டும் அத்தாட்சி ! மானகெட்ட உயர்ந்த ஜாதி !

போங்கடா நீங்களும் உங்க ஜாதியும் !


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...