Tuesday, 14 June 2016

உப்புள்ள காய்கறிகள்

நாம் மருந்து சாப்பிடும் பொழுது , தேன் கலந்து உண்ணலாம் .

சீனி , போன்ற இனிப்பு கலந்து உண்ண கூடாது என்று ஒரு வழக்கம் பின்பற்ற பட்டது.

ஆனால் இன்று நடைமுறையில் சிலர் குளிர் பானங்களுடன் , மருந்து பொருளை எடுத்து கொண்டு , மருந்து வேலை செய்ய வில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மருந்தே தவறுதான், அதிலும் குளிர்பானம் கலந்த மருந்து முற்றிலும் தவறு .

அனால் தேன் மட்டும் கலந்து உண்ணலாமா ? என்று கேட்டால் உண்ணலாம் .



ஏன்னெனில் , எந்த ஒரு மருந்தையும் , இனிப்பு கலந்து உண்ணக்கூடாது . தேன் இனிப்பு அல்ல. கசப்பு சுவை நிறைந்தது .

வெளியில் பார்க்கும் எல்லாம் உண்மை அல்ல என்பதற்கு இதுவே சாட்சி!

தேன் , நாவிற்கு இனிக்கும் , உள்ளே சென்றால் கசப்பு சுவையாக மாறி விடும் .

 நெல்லி காய் நாவிற்கு புளிக்கும் , உள்ளே துவர்க்கும் .

அதே போல் எல்லா காய்கறிகளும் தன்னகத்தே சில சுவைகளை கொண்டுள்ளது.


அவற்றில் சில உப்புசுவை கொண்டவை .

ஆதலால் தான் , சில சமயங்களில் சரியான அளவு உப்பிட்டு சமைத்த பொழுதும் , உப்பு கரிப்பது போல் உணர நேரிடுகிறது .

அவ்வாறு உப்பு சுவை உள்ள சில காய்கறிகள் கீழ்கான்பவை :







முள்ளங்கி

தனியா

பூசணிக்காய்

வாழை தண்டு

கீரை தண்டு

பீர்க்கங்காய்

சுரைக்காய்

முள்ளங்கி கீரை

தண்டு கீரை எனப்படும் முளை கீரை

முருங்கை கீரை

நெல்லிக்காய்

புடலங்காய்

பாகற்காய்

பரங்கி காய்

கோவை காய்

இன்னும் பல உள்ளூர் காய் கறிகள் ......

இவை எல்லாம் , தன்னுள்ளே சிறிது உப்பு சுவையை கொண்டுள்ளன்ன .

இது போன்ற கொடி காய்கறிகளை பயன்படுத்தும் பொது உப்பின் அளவை குறைத்து சமைக்க வேண்டும் .

அதே போல் இறைச்சி வகைகள் எதுவாக இருந்தாலும் , உப்பு அதில் ஏற்கனவே இருக்கும் என்பதை நினைவிற் கொள்க

முட்டையில் கூட உப்பிட்டு சமைக்க கூடாது .


நம் உடலிலும் போதுமான அளவு உப்பு உள்ளது என்பதை நினைவிற் கொண்டு  உப்பின் அளவை குறைத்தாலே , போதும் ரத்த அழுத்தம் ஏற்ற ,இறக்கத்திற்கு செல்லாது .


( கடல் உப்பை விட மலை உப்பையே அதிகமாக் பயன்படுத்தினோம் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் வெள்ளையர் ஆட்சிக்கு பிறகு , அவர்கள் நமக்கு காட்டிய வழி தான் கடல் உப்பு.  மலை உப்பில் தான் அதிகபடியான கனிம சத்துக்கள் உள்ளன. அதை அறிந்து கொண்ட பிரிட்டன் , நமக்கு கடல் உப்பை அறிமுகம் செய்தது . இன்று உலகிலேயே கடல் உப்பை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா  . ஹிமாலய உப்பு இந்தியாவை தவிர உலகம் முழுவதும் பயன்படுத்தபடுகிறது .)

LUX என்றால் LUXURY





இந்த டோயலேட் சோப்பு விளம்பரங்களில் , முதன் முறையாக நடித்த பெண் , வட இந்திய நடிகை லீலா சிட்னிஸ் .

L U X  சோப்பு லேவர் ப்ரோதேர்ஸ் என்பவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.


இது இந்திய வரலாற்றின் முக்கிய கட்டம் . ஆனால் வரலாறுகள் ஏனோ , வணிகம் , விளம்பரம் இவற்றிற்கும்  இந்திய வரலாறுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நமக்கு காட்டுகின்றன .

இந்திய தலை எழுத்தை ஒவ்வொரு முறையும் மாற்றுவது யார் ?

வணிக நிறுவனங்கள்

இந்திய மக்களின் வாழ்க்கை பாதைகளை மாற்றுவது யார்?

வணிக நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரங்கள் .

1888 ல் சன் லைட் சோப்பு என்று ஆரம்பிக்க பட்டு , lifebuoy ,விம் , pears , hudson போன்ற சோப் க்களையும் அறிமுகம் செய்து ,

பிறகு 1930 களில் dutch  நிறுவனமான மார்கரின் uni யுடன் இணைத்து unilever எனும் பிரிட்டிஷ் நிறுவனமாக மாறியது .

ஆனால் இந்நிறுவனம் தன்னை ஹிந்துஸ்தான் உனிலெவெர் என்று கூறி கொள்கிறது .





இந்நிறுவனத்தின் கீழ் எல்லா முக்கிய நடிகைகளும் , தங்கள் அழகிற்கு இது தான் காரணம் கூறி மக்கள் மனதில் இதை பதிய வைக்க பாடு பட்டுள்ளனர் .


LBIL ( Lever Brothers India Ltd ) வனஸ்பதி தயாரிக்க ஆரம்பித்தது .

அதன் பெயர் ஹிந்துஸ்தான் வனஸ்பதி .

இவை இனைந்து ஹிந்துஸ்தான் உனிலெவெர் ltd எனும் பிரிட்டன் நிறுவனமாக மாறியது .கொள்ளை லாபம் கொட்டியது.

1959 surf அறிமுகம் செய்தது

1969 களில் Rin சோப்பு அறிமுகம் செய்தது .

1985 ல் LIPTON ஐ அறிமுகம் செய்தது .

1991 ல் பற்கள் சார்ந்த நிறுவனங்களுடன் இணைவு செய்து

1992 ல் pepsodent அறிமுகம் செய்தது .

1993 ல் TATA OIL MILLS ஐ இணைத்து .

1994 ல் Brook Band ஐ இணைத்து Lipton brook band Ltd ஆக மாறியது .

1996 அமெரிக்க நிறுவனமான johnson & sons நிறுவனத்துடன் 50:50 என்ற
முறையில் இணைந்தது .

1998 fuel lubricant supplaiyil ஈடுபட்டது .

ஒருபுறம் ஆயில் supply செய்து கொண்டே Kwality icecream supply யும் செய்தது .

2000 வது ஆண்டு Fair & Lovely Fairness Cream கொடுக்க ஆரம்பித்தது .

மேலும்

Ponds Talcum Powder , Rexona , Godrej , Lakme sunlight Cream ஆகியனவும் கொடுத்தது .

2001 முதல் parax Agri Seeds LTd உடன் இணைந்து விதைகளை விற்க ஆரம்பித்தது .

2002 ல் அன்னபுர்ண உப்பை அறிமுகம் செய்தது .

இதே ஆண்டு sunsilk shampoo மற்றும் அதன் உற்பத்தி பொருட்களை தன நிறுவனத்துடன் இணைத்து கொண்டது .

மேலும் மத்யப்ரதேஷ அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு , விந்தய வல்லே , umbrella brand உணவு பொருட்களை அறிமுகம் செய்தது .

கிரீன் லபெல் டி deluxe Green Label ஆக மாறியது .

திடீரென

மக்கள் ஆயுர்வேத பொருகள் மேல் கவனம் செலுத்தியதால்
ஆயுர்வேதிக் அறிவியல் நிலையம் ஆரம்பித்து ayus ஆயுர்வேதிக் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது .




2004 ஆம் ஆண்டு Mr .Fruit என்ற பெயரில் மங்கோ ஜூஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று சந்தையில் கிடைக்கும் எல்லா மங்கோ ஜூஸ் க்கும் சொந்தகாரர்கள் இந்த unilever நிறுவனத்தார்.

powerful surf excel , Vim power , surf பவுடர் என்று அதன் முந்தைய எல்லா பொருட்களிலும் அதிக சக்தி கொண்டது கூறி கூடுதல் ரசயனதுடன் அறிமுகம் செய்தது .

2005 ம் ஆண்டு ஐஸ் டீ , பாட்டில் களில் கிடைக்க ஆரம்பித்தது .

தொடர்ந்து , சோப்பு கள் , அழகு சாதனா பொருட்கள் , பற்பொடிகள் , ஆயில் , உணவு பொருட்கள், சிக்கன் பொருட்கள் , விதைகள் , juice பாட்டில்கள் , தண்ணீர் பாட்டில்கள் ,பெப்சி , ஆயுர்வேத பொருட்கள், உப்பு ,  ஆகிய அனைத்தும் இந்நிறுவனத்தால் மட்டுமே இந்தியாவிற்குள் supply செய்யபடுகிறது .

2015 ல் swachh Aadad , மற்றும் Swachch barath திட்டத்தை கொடுத்ததும் இந்நிறுவனமே !

1885 ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் , இன்று வரை இந்தியாவில் , தான் மட்டுமே ஆளுவேன் என்ற நிலையில் உள்ளது .

சோப்புகள் , ஆறுகள் , குளங்களில் பயன்படுத்த கூடாது என்ற நிலை மாற்ற ,ஆறு குளங்களே அழிக்கப்பட்டுள்ளது.

பற்பசை விற்பனைக்காக , நம் பூர்வீக முறைகள் , முட்டாள் தனம் என்று அறிமுகம் செய்யப்பட்டது .

இவர்கள் அழகு பொருட்கள் விற்பனைக்காக , கருப்பு அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மை விதைக்கப்பட்டுள்ளது .

கடல் உப்பு பயன்படுத்திய நம்மை அயோடின் உப்பு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது .

இன்று fuel விலை நிர்ணயம் கூட இவர்களால் தான் செய்யப்படுகிறது.

இந்த நிறுவனங்களுக்காக , மக்கள் தன மீது கொண்ட நம்பிக்கையை விற்பனை செய்தவர்கள் தான் , நம் நாட்டின் அரசியல் வாதிகளும் , நடிகர்களும்.

இதில் மிக கொடுமை என்னவெனில் , இந்நிறுவனத்தின் chemical research centre , தான் மஹா ராஷ்டிர மாநில நீரையெல்லாம் உறிஞ்சுவதும் , அன்னீரையெல்லம் கெடுப்பதுமாக  உள்ளது .

இன்று மஹா ராஷ்டிர மாநிலம் ,வறட்சியின் உச்ச கட்டத்தில் உள்ளது .

இப்போது கூறுங்கள் இந்தியாவிற்கு , பிரிட்டன் அரசு விடுதலை கொடுத்து விட்டதா ?

இன்றும் நம்மை ஆள்வது அவர்களே !


( இந்நிறுவனதிர்க்காக உழைத்த மக்களுக்கு , லண்டன் வாக்ஸ் museum தில் சிலை வைக்கபடுகிறது. இதில் ஐஸ்வர்யா ராய், அமிதாபச்சன்,ஷாரூக் கான், சல்மான் கான், கதிரின கைப்,பிரின்யங்க சோப்ர , மைக்கல் ஜாக்சன், ஏன் காந்தி மற்றும் டெண்டுல்கர் சிலைகளும் இங்கு உள்ளன. தற்போது , மோடி அவர்களுக்கு சிலை வைக்க அளவெடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது. இதில் ரஜினி காந்தின் சிலை ஏன் இன்னும் வைக்க வில்லை என்ற சர்ச்சையும் நடந்து கொண்டிருக்கிறது .)

Thursday, 9 June 2016

ஜாதி என்பது தொழிற் பெயரா ?

தமிழன் கொஞ்சம் ஜாதி வெறி பிடித்தவன் .

கொஞ்சம் என்பது கொஞ்சம் தவறு . ரொம்ப வெறி பிடித்தவன் .

ஆமா

ஜாதி வெறின்னா என்ன ?

ஜாதின்னா என்ன ?

வேறு எந்த நாட்டிலும் , எந்த மொழியிலும் ஜாதி இல்லையா ?

ஏன் தமிழர்கள் மட்டும்  இப்புடி இருக்காங்க ?




உண்மையில்

ஜாதியே தமிழ்நாட்டில் இல்லை. ஜாதி என்பது தமிழனின் அடையாளம் அல்ல என்று ஒரு சாரார் கருத்து கூறுகிறார்கள் . ஜாதி தமிழனின் அடையாளம் . ஜாதிய வேறு பாடுகளோ , அடிதடியோ தமிழனின் அடையாளம் அல்ல .

பிரிட்டிஷார் தான் ஜாதி குறித்து வரைந்து வரைத்து புத்தகங்கள் வெளியிட்டது. ஏனெனில் அவர்களுக்கு புதிது . அதனால் இதெப்படி சாத்தியம் .கூடாது என்று முடிவு எடுத்தனர். அதன் விளைவாக அவர்களே ,உயர்ந்த ஜாதி என்றும் தாழ்ந்த ஜாதி என்றும் பிரிவினையோடு புத்தகங்கள் எழுதினார். அதை நடைமுறை படுத்த இடஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்தனர். ஆங்கலேயர்களிடம் பேச வரும் போது , குறைந்த பட்சம் 2 தாழ்ந்த ஜாதியினர் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் . அன்று ஆரம்பித்தது இடஒதுக்கீடும் , ஜாதிய வேறுபாடும் ! நமக்கு உதவுவது போலவே சிண்டு முடித்து விடுவதில் வல்லவர்கள் ஆங்கிலேயர்கள் .

Castes and Tribes of Southern india - எழுதியவர் Edgar Thurston - ஆண்டு 1909

எங்கே நம் தமிழிலக்கியங்களில் ஜாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இது தாழ்ந்தது என்றோ உயர்ந்தது என்றோ எங்கேனும் குறிப்பு இருக்கிறதா ?தேடுங்கள் !

இதை தேடுவதற்கு முன்னால் ,

இனம் என்றால் என்ன?

ஜாதி என்றால் என்ன ?

பட்டம் என்றால் என்ன ?

வர்ணாசிரமம் என்றால் என்ன ?

குலம் என்றால் என்ன ?

குல தெய்வம் என்றால் என்ன ?

தமிழில் பேசும் அத்தனை பேருக்கும் ஜாதி உண்டா? பட்டம் உண்டா?

குடும்ப பெயர் தமிழருக்கு உண்டா ?

இவ்வளவு கேள்விக்கும் பதில் தெரிஞ்சிட்டா ,


ஜாதி பிரச்னை இருக்காது .

இதற்க்கு பின்னால் இருக்கும் உலக அரசியல் முடிவுக்கு வரும் .

உலக அரசியலில் , தமிழனின் ஜாதி ஒளிந்து கிடக்கிறது .

தேடுங்கள் !

--------------------------------------------------------------------------------------------------------------------


உதாரணமாக ,

பிராமணன் என்பது இன பெயர்

பார்பனன் என்பது அவனது ஜாதி பெயர்

ஐயர் என்பது பட்டபெயர்.

இதில் இனபெயரும் , பட்ட பெயரும் தமிழுக்கு சொந்தமில்லை.

பார்பான் என்பது பிராமணர்களுக்கு தமிழ் நாட்டில் கொடுக்கப்பட்ட தொழிலுக்காகன பெயர்.

பார்பான் என்றால் , கணிகை பார்பான்.
ஆருடம் பார்பான்.
நாள் குறித்தும் , நேரம் குறித்தும் கணிப்பவன் என்று பொருள்.

இந்த இனம் தமிழ்நாட்டை தொடுவதற்கு முன்பே இந்த தொழில் , தமிழ் மக்களால் செய்யப்பட்டது தான்.

இன்றும் வேறு பிற சமூத்தை சேர்ந்தவர்களும் இந்த பணியை செய்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது .


அதே போல் கோவில்களில் , அர்ச்சகர் பணிக்கும் இவர்கள் அமர்த்தப்பட்டனர் .

ஆசிரியர் பணிக்கும் அமர்த்தப்பட்டனர்.

சுருங்க சொன்னால் , அமர்ந்த பார்க்கும் வேலைகள் அனைத்தும்  இந்த இனத்திற்கு ஒதுக்கபட்டது.

காரணம் அக்காலத்தில் , ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்க கூடிய வேலை என்பது மக்களால் வெறுக்கப்பட்டது. அதனால் , அது போன்ற வேலைகள் இழிவான வேலைகள் என்று கருதி , வேற்று இனத்தவர்களுக்கு அவ்வேலைகள் வழங்கப்பட்டன.

இன்று நிலை தலை கீழாக மாறிய தால் எல்லோரும் அவ்வேலையை செய்ய , ஆசை கொண்டு , அல்லாடுகிறார்கள் .

இதே போல் , செட்டியார் என்பதும் , முதலியார் என்பதும் , தேவர் என்பதும் , ஜாதி பெயர்கள் அல்ல . பட்ட பெயர்கள் ஆகும் .


எந்த ஜாதி பெயரை குறிப்பிட்டாலும் , அது சார்ந்த தொழில் நமக்கு விளங்கவில்லையாயின் அது பட்ட பெயர் ஆகும் .

வன்னியர் சமூகம் மட்டும் 500 வகையான பட்டப்பெயர்களை பெற்றுள்ளது .

செட்டியார் இன மக்களும், சேட்டு இன மக்களும் ஒன்று தான் என்ற ஐயப்பாடு கொண்டு , ஒரு சில ஆய்வுகளும் வந்துள்ளன.
இதுவும் பட்ட பெயர்தான்.

முதலியார் எனப்படும் பட்ட பெயர் , கிருஷ்ணா தேவராயர் காலத்தில் , மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் , நாயக்க மக்களுக்காக பணியாற்றிய வெள்ளாள ஜாதி மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்ட பெயர்.
இந்த காலத்திற்கு முன்பு முதலியார் எனும் பட்ட பெயர் தமிழ் மக்கள்
 மத்தியில் கிடையாது .

பட்டப்பெயர்கள் என்பது காலத்திற்கு காலம் ,ஆளும் அரசனை பொறுத்து அவருக்கு வேண்டியவர்களை பொறுத்து , பல்வேறு நபர்கள் பெற்றுள்ளார்கள் . ஆனால் அது ஜாதி அல்ல .

உண்மையில் தமிழ்ச்சமூகத்தில் எந்த ஜாதி மக்களும் அடித்து கொள்ளவில்லை. இந்த பட்ட பெயர் வாங்கிய மக்கள்தான் , தன ஜாதி என்ன என்பதை மறந்து விட்டு , இல்லை தொலைத்து விட்டு , அந்த பட்டப்பெயர் சொல்லி அடுத்தவரை அடிப்பதும் , கொள்வதுமாக இருக்கிறார்கள்!

உண்மையில் தமிழ் சமூகம் அழிக்க வேண்டியது ஜாதியை அல்ல .

பட்ட பெயர்களை !

இங்கு ஜாதி எல்லாம் இழிவு படுத்த பட்டுவிட்டது. அதன் விளைவாக பல தொழில்கள் தமிழ்நாட்டில் இல்லை .
மீனவ சமூகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500 பிரிவினர் இருந்தாராம். இன்று இல்லை. அவர்களை இழிவு படுத்தி அவர்கள் மதம் மாறி , இனம் மாறி இன்று கப்பல் கட்டும் தொழில் என்பதை நாம் தொலைத்து விட்டோம். இவர்கள் இருந்ததால் தானே அன்று ராஜராஜ சோழன் கப்பல் படை வைத்திருந்தான் .
இன்று கப்பல் எந்த மரத்தில் செய்வது என்பது மீனவ நண்பர்களில் பலபேருக்கு தெரியாது.

பனைமரத்தின் கதை ஊர் அறிந்தது . இன்று பனைமரம் வளர்க்க வேண்டும் என்று கூறியவுடன் எதிர்ப்பது யார் தெரியுமா ? அந்த மக்கள் தான் ! மீண்டும் நம்மை தாழ்த்தி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள் . அதன் நுட்பங்கள் எல்லாம் கிட்டத்தட்ட அழிந்து விட்டது.

மருத்துவர் என்று ஒரு ஜாதி ,ஊரில் யாருக்கு என்ன நேர்ந்தாலும் , நாடி பிடிக்கும் முன் , முகம் பார்த்து கூறி விடுவான். இன்று அந்த ஜாதி இல்லை .

பள்ளர் சமூகம் இன்று தேவேந்திர குல வெள்ளாளராக மாறி விட்டது. விளைவு எந்த ஆற்றிலும் பராமரிப்பு இல்லை . குளங்கள் இல்லை . ஏரிகள் என்பது ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது.

கோனார் சமூகம் யாதவ சமூகம் ஆகி விட்டது. இன்று நாமெல்லாம் நாட்டு மாடு வேண்டும் என்று கூவி கொண்டு இருக்கிறோம். இதில் என்ன சிறப்பு என்றால் செஞ்சி மலையை ஆண்ட ஆனந்த கோனார் எனும் மன்னர் தன பெயரை ஆனந்த கோன் என்று அந்த காலத்திலேயே ஸ்டைலாக வைத்திருந்தாராம் .அந்த சமூகம் தன ஸ்டைலை தொலைத்து விட்டது.

கலைத்துறையில் கோலோச்சி இருந்த சமூகம் விஸ்வகர்மாகி விட்டது. என்ன பயன்? எங்கு பார்த்தாலும்  மலையாளி யும் , ராஜசதானியும் நகைக்கடையும் வைத்திருக்கிறான். அதில் இரும்பும் உண்டு. ஈயமும் உண்டு. வியந்து வியந்து நாம் பார்த்து , பூரித்து நிற்கும் கோவில் சிற்பங்களை செதுக்கிய சமூகத்தில் 10% பேர் கூட இன்று அந்த தொழிலில் இல்லை . கதவுகளில் கூட கலைநயம் காட்டிய ஆசாரிக்கு கதவு எந்த மரத்தில் செய்ய வேண்டும், சாளரம் எதில் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை .

பூசாரி என்று ஒரு சமூகம் இருந்தது . அவர்களுக்கு தெரியும் விபூதியின் பயன்கள் என்னென்ன என்று ! இன்று அந்த பெயரே இல்லை.

இன்று விவசாயம் ஏன் படுபாதாளத்தில் இருக்கிறது தெரியுமா ? உழுவதற்கும், அறுப்பதற்கும் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. அதற்கான செலவுகள் அதிகம். ஏன் என்றால் , அந்த வேலையை செய்து வந்த பறையர் இனம் தான் இன்று துபாய் வளமைக்கும், சிங்கப்பூரின் பெருமைக்கும் காரணம்!

இப்படி கூறி கொண்டே போகலாம் . நம் தொழில் வளமை அப்படி!
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் பொருளாதாரத்தை முதலில் அழிக்க வேண்டும் என்பது வெள்ளையர்களின் கோட்பாடு .

சிறப்பாக நடந்து விட்டது. ஜாதியில் ஏற்ற தாழ்வு கூறி , அதில் இருந்து வெளியேற , அந்த தொழிலையே விட்டு , அந்நிய நாட்டு பொருளுக்காக ஏங்கி நிற்கிறோம்!

இப்போ சொல்லுங்க ! ஜாதி வேண்டுமா ? ஜாதி வெறி வேண்டுமா என்று !
---------------------------------   - - -





சாதிக்கும் , தொழிலுக்கும் என்ன சம்பந்தம் ?


ஒரு மருத்துவ மனைக்குள் செல்கிறோம் என்றால் , அங்கு யாரெல்லாம் இருப்பார்கள் . மருத்துவர்கள்,செவிலியர்கள் ,உதவியாளர்கள் , ரத்த பரிசோதனை செய்பவர்கள் , அறுவை சிகிச்சை உதவியாளர்கள் மற்றும் சுத்தம் செய்பவர்கள் , மருந்து தருபவர் , இப்படி பலர் இருப்பார். அவர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் தான் ஒரு நோயாளி குணமடைய முடியும் . அப்படி வேலை செய்பவர்களுக்கு நாம் ஒவ்வொரு பெயர் கொடுக்கிறோம் அல்லவா ! அந்த பெயர் தான் ஜாதி யின் பெயர் . நம் நாட்டின் பூர்விக தொழில் புரிவோர் அனைவருக்கும் , அவர் இன்ன தொழில் புரிகிறார் என்பதை சுட்டி காட்ட வைக்க பட்ட பெயர் தான் ஜாதி . இது தமிழர் மரபு .


மாறாக ஆரியர்கள் , கொண்டு வந்த வர்ணாசிரமம் என்பது , தமிழ் சமூகத்தில் அரவும் கிடையாது . ஆரிய ஜாதி பிரிவுகள்தான் , நம்மை குழப்பி , நம் தொழில்களை நாம் அழிக்க காரணமாக அமைந்தன . நாடார் இனத்தை இழிவு படுத்தி தான் , பனை மரங்கள் அழிக்க பட்டன .மீனவர்கள் , பள்ளர்கள் , மல்லர்கள் இவர்களை விட்டு கொடுத்துதான் ,  ,நீர் வழி போக்குவரத்தை அழித்து , தரை வழி போக்குவரத்து மட்டுமே வைத்து பெட்ரோல் நம்மை ஆள்கிறது. இன்னும் பல ஜாதிகள் அழிந்து விட்டன . மீதம் உள்ள தொழில்களையாவது காப்பாற்ற வேண்டாமா ?



----------------------------------------------------------

ஹளபேடு

   

துவார சமுத்ரா என்பது ஒரு அழகிய எரி . இதன் அழகில் இளைப்பாற ஆசை கொண்ட ஹோய்சால மன்னர் விஷ்ணுவர்த்தன் , தன வம்சத்தை நிலை நிறுத்த உதவிய இறைவனுக்கு நன்றி சொல்லும் வண்ணம் ஒரு கோவில் எழுப்பினான் . அவ்வாறு எழுப்பட்ட கோவில்தான் ஹோயசாலேஸ்வரர் கோவில் .
இங்கிருக்கும் இறைவனுக்கு ஹோயசாலேஸ்வரர் என்று பெயரிட்டு , அந்த ஊரையே தனது தலைநகராக மாற்றினான். ஆனால் இந்த கோவிலில் மற்றொரு சிவ லிங்கமும் உண்டு . அதன் பெயர் சாந்தலேஸ்வரர் . யார் இவர் என்றால் மன்னனின் அன்பு மனைவி சாந்தலா தேவியின் பெயரால் உருவாக்கப்பட்ட இறைவன் அவர் .

இரண்டு இறைவனுக்கும் தனி தனியே அழகிய நந்தியும் உண்டு . கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலானது , இன்னும் கூட  இடங்களில் முடிக்கப்படாத நிலையில் உள்ளது .




இந்த கோவிலின் உள்புறத்தில் , மேல்மாடத்தில் ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன . அதே போல் தரையில் விளையாட்டுகள் அனைத்தும் செதுக்கப்பட்டுள்ளன .




இந்த கோவிலின் வெளி புறத்தில் 35000 அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முருகன் , இராவணன், அர்ஜுனன் , கிருஷ்ணன் , சிவபெருமானின் நடன சிற்பங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது .






இங்குள்ள் தூண்கள் , கணித வேலைபாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது. அந்த தூண்களின் அருகில் நாம் நின்றால் , நம் உருவம் தலை கீழாக தெரியும் .


டெல்லி சுல்தான்களாலும் , இஸ்லாமிய படையெடுப்பாலும் இந்த ஊர் சிதைக்கபட்டதால் , தலைநகரம் வேறு ஊருக்கு மாற்றப்பட்டதால் , இந்த ஊருக்கு ஹளபேடு என்று பெயர் சூட்டப்பட்டது .

ஹளபேடு என்றால் பழைய நகரம் என்று அர்த்தம் .

Monday, 6 June 2016

சோமாலியா - இறக்குமா ?




தமிழக ஊடகமெல்லாம் ஆந்திராவை சேர்ந்த  விஷாலையும், கர்னாடக வை சேர்ந்த லாரன்ஸையும் எப்படி தலைவர்கள் ஆக்குவது என்று யோசிப்பதிலேயே நேரம் போதாமல் தவித்து கொண்டு இருக்கின்றன . மேலும் ,
இருக்கின்ற அரசும் , தமிழக மக்களை தாங்குகிறது என்று கூறி அதன் பெருமைகளை பறை சாற்றவே அவர்களுக்கு நேரம் இல்லை .இதெல்லாம் யோசிப்பது சாத்தியமில்லை !

இந்திய ஊடகங்களுக்கோ , அமிதாப்பச்சனை இந்திய குடியரசு தலைவர் ஆக்க வேண்டிய பொறுப்பு உள்ளது . சல்மான் கான் , சாருக்கான் , ஐஸ்வர்யா ராய் , பிரியங்கா சோப்ர இவர்களின் கருத்துகளை மக்களின் மனதில் பதிய வைப்பதே பெரும் பாடாக உள்ளது. 

உலக ஊடகங்களுக்கோ , இலங்கையின் திருகோண மலை போலும் , இலங்கையே அமெரிக்காவிற்கு கீழ கொண்டு வர வேண்டிய வேலை உள்ளது. உலக அழகிகள் பற்றி எழுத வேண்டி உள்ளது . ஒரு மண்ணுக்கும் பிரயோசனம் இல்லாத ஒருவனை, திடிரென எப்படி உலகம் முழுக்க கொண்டு செல்வது  . அப்படி கொண்டு செல்லப்பட்ட ஒருவனை எப்படி எல்லாம் பயன்படுத்தி கொள்வது என்று யோசிக்கவே நேரம் போதவில்லை.
இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறியே எல்லா தவறுகளையும் , மறைக்க வேண்டிய வேலை உள்ளது .


ஊடமெ ல்லாம் இருக்கட்டும் , நான் தான் உலகம் முழுக்க தலைமை தாங்குவேன் என்று கூறி , எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் அமெரிக்கவிற்கும் இதை பற்றி பேச விருப்பம் இல்லை .

அமெரிக்காவிற்கும் , கட்டளை போடும் பிரிட்டிஷ் அரசாங்கமோ , ஐரோப்போவில் இருந்து பிரிய வேண்டும் என்று , அந்த வேலையில் ஒரே பிசியாக உள்ளது .

ஆனால் இயற்கை என்ன சொல்கிறது தெரியுமா ?

உலகம் முழுக்க நடத்துகின்ற , அணு குண்டு பரிசோதனை , மற்றும் ரசாயன பரிவர்த்தனைகளால் பூமியின் கீழ் உள்ள பிளேட்டுகள் எல்லாம் ஆடி கொண்டு இருக்கிறதாம் .

முதலில் உடைய இருப்பது அமெரிக்க, அதனை தொடர்ந்து பிரிட்டிஷ் உள்ள ஐரோப்பா , பிறகுதான் சோமாலிய எல்லாம் என்று கூறுகிறது .

சில இழப்புகளை சோமாலிய சந்திக்கலாம் .
ஆனால்
இயற்கை மீண்டும் சோமாலியாவிற்கு கைகொடுக்க
பிரார்த்திப்போம் !
நல்ல எண்ணத்தோடு நாம் செய்யும்
எல்லா வேண்டுதலும்
நிச்சயம் நடக்கும் !



அந்த குழந்தைகளை பார்க்க நமக்கே
கொடுமையாக இருக்கும் பொழுது
பூமித்தாய் இன்னும்
கருணை உள்ளவள்
நிச்சயம் துணை புரிவாள் !

சோமாலிய இறக்காது !
மீண்டும்
வரும் !

Tuesday, 31 May 2016

மினிஸ்டர் வைட் - MINSTER WHITE




மினிஸ்டர் வைட் உரிமையாளர் யாருன்னு தேடி பாருங்க !

கலிபோர்னியா , ச்டோக்க்டன் ,

அப்பரெல் & பேஷன் என்ற நிறுவன பெயரும் ,

அதன் உரிமையாளர்

லா. ச்சே என்றும் வரும் .






தம்பி விஜய சேதுபதி , நம்ம சாமி, நம்ம மொழி அப்புடின்னு வசனமெல்லாம் பேசிட்டு , நம்ம ஊரு நெசவாளர்களுக்கெல்லாம் , வேஷ்டியே நெய்ய தெரியாத  காரணத்தால வெள்ளைகார கம்பெனியோட விளம்பரத்துக்கு ,
நம்ம ஊரு , நம்ம ஊரு அப்புடின்னு கூவி , கூவி யாவாரம் பாத்து கொடுக்குது .

இதுல எப்போதும் கருத்து வேறு , இவருக்கு ,

நடிகர்கள் பற்றி பேசி அடிச்சிகதிங்க மக்களே! அப்புடின்னு ! சொல்லிபுட்டு
வெள்ளகாரன நம்முர்காரன் தான் அப்புடின்னு அறிமுகம் செய்றாரு !





ஆனா இவரை விட , தமிழ் தமிழ் அப்புடின்னு உருகி உருகி வித்தவரு ,
நம்ம பாரதிராஜா தான் . ( இவரு தமிழ்நாட்டின் கிராமபுரங்களையும் படம் பிடுச்சி வித்தவர் தானே !முக்கியமாக மதுரை !)

அவரு அளவுக்கு தம்பிக்கு டிரைனிங் இல்லை .

*இவர மாதிரியே , யாரும் இங்கு அன்னியர் இல்லை என்று , 
பாட்டு பாடி , டான்ஸ் ஆடி , நாங்களும் , நீங்களும் ஒண்ணுதான் , அப்புடின்னு சொல்லியே 
வாங்க , சாப்புடுங்க 
டொமினோ பிட்சா என்று அழைக்கிறாங்க இன்னொரு பொண்ணு !

விஜய சேதுபதி எதோ தமிழர் விடுதலைக்காக குரல் கொடுத்தார் .என்பதெல்லாம் கூட அவருக்கு வெளி நாட்டு நிறுவனம் கொடுத்த அழுத்தம் தான். அவர் மக்கள் மனதில் பதிந்தால் தான் , அவர் கொடுத்த விளம்பரம் மக்களை சென்றடையும். என்னே  இவுங்க தமிழ் உணர்வு !

எப்புடி பார்த்தாலும் இவங்களுக்கு , அழகு தமிழில் , ஏமாற்று வார்த்தைகளை கத்துகொடுப்பது 
ஒரு நல்ல 
தமிழச்சி பெற்றெடுத்த 
தமிழன் தானே !

அவனை என்ன பண்ண முடியும் ?

சில வித்தியாசமான செய்திகள்

மே மாதம் 31 - 2016

இன்றைக்கு சில வித்தியாசமான செய்திகள் :

*  மந்தை வெளி காவல் துறை டெம்போ கார் திருடு போனது . அதே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .


இது காவல் துறைக்கு வந்த சோதனையா ?


*  திரைப்பட தயாரிப்பாளர் ஆபாவாணன் , வங்கியை ஏமாற்றி 3 கோடியே 46 லட்சம் பணம் பெற்று , அதனை திரும்ப கொடுக்காத வழக்கில் , அவருக்கு 2 கோடியே 10 லட்சம் அபராதம் மற்றும் , 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது . 


3 கோடி கடனுக்கே 5 ஆண்டு தண்டனையின்னா , 3000 கோடி கடன் வாங்கின நம்ம கர்நாடக ராஜ்ய சபை உறுப்பினர் மல்லையாவிர்க்கு , எத்தன வருஷ தண்டனை கொடுக்கணும் ? கணக்கு கொஞ்சம் இடிக்குதில்ல ?


*  காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் சேரன் கோர்டில் ஆஜரானார். மற்றும் வாயிதாவை  நீடிக்க அவகாசம் பெற்றுள்ளார் .  எத்தனை வாயிதா ?

எப்போதுமே , 
தன்னை நல்லவருன்னு காட்டிக்க சேரன் முயற்சி எடுப்பாரே ? அது என்ன ஆச்சி ?

*  தான் இறந்து விட்டதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார் நடிகர் செந்தில் .

அப்துல் காலம் உயிரோடு இருக்கும் போதே ,  ஒரு மாநிலத்தின் கல்வி துறை அமைச்சர் அவருடைய படத்துக்கு  மாலை போட்டு , இறுதி அஞ்சலி செலுத்தினாங்க . ஆனால் அதையெல்லாம் அவரே பெருசா எடுத்துக்கல !
என்னமோ போங்கையா ? 

கவுண்டமணி பற்றி வராத செய்தியா ?

அடுத்த தேர்தலில் , பாண்டே, அனிதா குப்புசாமி , செந்தில் , சிங்கமுத்து இவங்களுகேல்லாம் கண்டிப்பா சீட்டு  உண்டு . 

அதுவரைக்கும் இப்புடி தான் , தன்னை மக்களுக்கு ஞாபக படுத்திகிட்டே இருப்பாங்க !


* பழங்கால சிலைகள் ஏற்றுமதி செய்யபடும் போது , அது கடத்தல் சிலைகள் என கண்டறிய பட்டு , சிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கைது செய்ய பட்டார். அவரிடத்தில் , போதிய ஆவணங்கள் இல்லை என கூறபடுகிறது.

அப்போ ஆவணங்கள் சரியாய் இருந்தால்  , நம் நாட்டின் பழங்கால சிலைகளை ஏற்றுமதி செய்யலாமா ? என்னப்ப இது நியாயம் ?

Sunday, 10 April 2016

ஜாதி வெறியும் விவசாய நிலங்களும் !





 தமிழ்நாட்டில் 10 ம் வகுப்பு தாண்டி விட்டால் , பணம் உள்ளவர்கள் மட்டும்தான் படிக்க முடியும். இந்த படிப்பு என்ற காரணத்திற்காக மட்டும் பல விவசாய நிலங்கள் விற்க படுகின்றன .

அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளே இங்கு அதிகம் . அதன் கட்டணங்கள் பகல் கொள்ளை . இதுவே நிலங்களை விற்க மூல காரணம் ஆகிறது . ஒரு விவசாயி , தன மகனுக்கு விவசாயம் சொல்லி தருவது என்ன குற்றம் கண்டது இந்த சமூகம் . 

ஆனால் , கல்வி நிறுவனங்கள் , இப்படிதான் மார்கெட் செய்தது . நீ படிக்காமல் போனால் , உருப்பட மாட்டாய் , நீ வாழ்கையை வீணடித்து கொள்வாய் என்று !

அதனை தொடர்ந்து , எதோ சேவை செய்வது போல் , முதலில் ஆரம்பித்து , பிறகு பணம் பிடுங்கி பணக்காரனாக பார்க்கிறது கல்வி நிறுவனங்கள் .

ஒருவனை ஏமாற்ற வேண்டுமாயின் அதற்கு மூன்று வழிகள் உள்ளன ;

1. அவனை பயமுறுத்த வேண்டும் 

2. அவனுக்கு ஆசை காட்ட வேண்டும் 

3. அவனை , அவன் பார்க்கும் வேலையை நாமே இழிபடுத்தி , நாமே அதற்க்கு ஆறுதல் கொடுத்து ஏமாற்ற வேண்டும் .

இவற்றை தான் சந்தையிடுதல் என்ற பெயரில் , செய்து வருகின்றனர் . 

இதிலே மூன்றாவது பார்முலவைதான் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன .

அதன் விளைவு , விவசாயம் செய்வது , படகு செய்வது , செருப்பு செய்வது , பானை செய்வது , கூரை வேய்வது , கூடை முடைவது , குளம் வெட்டுவது , கிணறு அமைப்பது ,முடி வெட்டுவது  என எல்லா பூர்வீக தொழில்களும் இழிவு படுத்த பட்டு , 

இறைவா இதில் இருந்து , எங்களை காப்பாற்ற மாட்டாயா ?

என்று மனம் நொந்து அழும் பொது , வந்து கைகொடுத்து , தலை எழுத்தை மாற்றுவதாய் கூறி பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்கள் என்ற பெயரில்  நம் நிலங்களை பறித்த அதி புத்திசாலி அமைப்புகள் தான் 

கல்வி நிறுவங்கள் !

மற்றொரு முக்கிய காரணம் வெளிநாடு செல்வோர் :

வெளி நாடு செல்வோர் எண்ணிக்கை பெருகி வருவதால் ,விவசாயம் செய்ய ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு , அதுவும் நிலங்களை விற்க காரணமாகிறது . 

ஏன் வெளி நாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .

ஒரு புறம் அவர்களுக்கு விதைக்கப்பட்ட பணத்தாசை ! 

ஆனால் இதுவல்ல முக்கிய காரணம் . 




நம் மக்கள் அனைவரும் ஜாதி வெறி பிடித்தவர்கள் அல்ல . ஆனால் ஜாதிய வெறிக்கு ஆளானார்கள் . இந்த அரும் பணியை ஒரு கூட்டம் செய்து வருகிறது . அது இப்போது வேண்டாம் .

சாதிக்கும் , நிலங்களை விற்பதற்கும் என்ன சம்பந்தம்?

விவசாய நிலங்களில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்கள் யார் தெரியுமா ?
80% பேர் பறையர் இனத்தை சேர்ந்தவர்கள்.
வா என்றால் வருவார்கள் 
போ என்றால் போவார்கள் 
நில் என்றால் நிற்பதும் 
உட்கார் என்றால் உட்காருவதும்  அவர்களுக்கு வழக்கம் . இதை அடிமை தனம் என்று கூறினாலும் , மிகுந்த விசுவாசிகள் . 

அந்த அளவிற்கு இறங்கி போகும் மக்களை பார்த்து , அவர்களை பேர் சொல்லி அழைக்காமல் , அவர்கள் ஜாதியின் பெயர் சொல்லி இழிவு படுத்துவது . அவர்களை அடிப்பது . என்று ஏகப்பட்ட தொந்தரவுகள் கொடுத்த நம் சமூகம் , இதை எல்லாம் கடந்து 

அவர்களை கொலையும் செய்தது . 

உயிர் பயம் ,எல்லோருக்கும் வருவது தானே இயல்பு !

இதன் விளைவு , இந்த சமயங்களை பயன்படுத்தி கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் , அவர்களுக்கு வேலை வாய்ப்பு நல்கியது . வெளிநாடுகளிலும் , அத்தனை பெரும் நல்ல நிலையில் இல்லை . இருந்த போதிலும் , இங்கு படும் இன்னல்களுக்கு வெளிநாட்டு துன்பம் பரவா இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் .

இதை பார்த்த , தன்னை உயர்ந்த ஜாதி என்று அலட்டி கொள்ளும் மன்குனிகளும் வெளிநாடு செல்ல , விவசாயம் படு தோல்வியில் நிற்கிறது .

உடனே கை கொடுத்தது , விஞ்ஞானம் 

விதைக்கவும் இயந்திரம் 
நாற்று நட இயந்திரம் 
கலை எடுக்க இயந்திரம் 
கதிர அறுக்க இயந்திரம் 

எல்லாவற்றிற்கும் இயந்திரம் . இதில் என்ன வேடிக்கை என்றால் , 50 தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கூலியை ஒரு இயந்திரமே தின்று தீர்கின்றது . அறுவடை செய்தே ஆக வேண்டும் . 
அதற்கு வாடகை கொடுத்து இயந்திரம் வாங்கி , அந்த வாடகை கொடுக்க கடன் வாங்கி , அந்த கடனை அடைக்க நிலத்தையும் விற்கிறார்கள் .

இதே சமயத்தில் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

jewellery shops க்கான பட முடிவு


அதே போல் பெருகி வரும் நகை கடைகளின் எண்ணிக்கை . நிலங்களில்தான் நம்மால் பலன் காண முடியவில்லை என்று என்னும் மக்களின் கவலை தீர்க்க , நகைகளாக மாற்றி வைத்து கொள்ளுங்கள், அப்போதுதான் உங்கள் மகளை நல்ல படித்த மாப்பிளைக்கு கட்டி வைக்கலாம்  என்று ஆசையும் காட்டி , அதற்காக ஏகப்பட்ட நகைக்கடைகள் , விவசாய நிலங்களை விற்க தூண்டுகின்றன .

இவற்றையெல்லாம் தடுக்க அரசு எந்த முயற்சியும் எடுக்காது .

நாமாக முன்னிறங்கி , 
விவசாயத்தை நம் பிள்ளைகளுக்கும் கற்று கொடுப்பது,
ஜாதி வெறியை விட்டோழிப்பது
ஒரு விவசாயிக்கே பெண் கொடுப்பது  
சீதனங்களை தவிர்ப்பது
என்று முடிவெடுத்தால் மட்டுமே விவசாய நிலங்களை காக்க முடியும் .

இயந்திரங்களை நம்புவதற்கு , மனிதனையும் , மாடுகளையும் மதிக்கலாமே !
நம் உணர்வுகளை இயந்திரங்களா உணர போகிறது !
அனால் சக மனிதன் உணருவான் . 
அடுத்தவரை மதித்தால் நாமும் வாழலாம் , 
நம்மால் பிறரும் வாழலாம் .
இந்த நாடும் வாழும் . 
இந்த நாடும் நம்மை வாழ்த்தும் !


கடுக்காய் எனும் தாம்பத்திய காவலன்



கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம் என்று ஒரு பழமொழி உண்டு .

கடுக்காய் சிறந்த மருத்துவ குணம் கொண்டது . 

இதற்க்கு வேறு பெயர்களும் உண்டு . அவை விஜயன் மற்றும் பிருத்துவி  ஆகும் .

கடுக்காய் பல வகைகள் உண்டு . அவை :

கருங்கடுக்காய் 

செங்கடுக்காய் 


வரி கடுக்காய் 


பால் கடுக்காய் 


இவை அனைத்தும் வெவேறு வகைகளில் , நமக்கு பயன் தருவன .

நம் உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் , நம் மன ரீதியான 

பிரச்சனைக்கும் மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா ?

மல சிக்கல் தான் . 

மல சிக்கல் ஏற்பட்டால் , மன உளைச்சல்  ஏற்படும் 

அதனால் ரத்த அழுத்தம் ஏற்படும் 

அதனால் கோபம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் .

மலசிக்கலை விட மிகபெரிய பிரச்னை தம்பதிய குறைபாடு .

இந்த தாம்பத்திய குறைபாடு , விந்தணுக்கள் குறைவதால் ஏற்படுகிறது .

இதனால்  தாம்பத்தியத்தையும் பாதிக்க படுகிறது . 

மல சிக்கல் இன்றி இருந்தாலே , நம் முடிவுகள் பெரும்பாலும் சரியான முடிவுகளாக இருக்கும் . 

தாம்பத்திய குறைபாடு இன்றி இருந்தால் வாழ்வும் நன்முறையில் இருக்கும் .

கடுக்காய் இந்த பணியை சிறப்பாக செய்கிறது .

மல சிக்கல் தீர்க்கவும் , விந்தணுக்கள் பெருகவும் என. பல வகைகளில் இதன் பயன்கள் விரிந்து செல்கின்றன .

இந்த உலகின் இயற்கை கொடுத்த அனைத்தும் பயன்பாடு கொண்டதே !
ஆனால்எப்போது  பயன்படுத்துகிறார்கள் , எப்படி பயன் படுத்துகிறார்கள் என்பது மிக முக்கியம் . இதன் அடிப்படை யிலே தான் ஒரு பொருள் விஷம் ஆவதும் , மருந்தாவதும் உள்ளது .

இதற்க்கு கடுக்காயும் விதி விலக்கல்ல !

எனவே இதை பயன்படுத்தும் விதம் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் .

சுக்குக்கு தோலில் விஷம்

கடுக்காய்க்கு கொட்டையில் விஷம் என்று  கூறுவது உண்டு .

எனவே இதன் கொட்டைகளை நீக்கி விட்டு தோல்  பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .

எப்போது பயன்படுத்த வேண்டும் ?

காலையில் இஞ்சி தண்ணியும்

நன் பகலில் சுக்கு தண்ணியும்

மாலையில் கடுக்காய் தண்ணியும் குடிக்க , நம் வாழ்நாள் அதிகரிக்குமாம் .

( தேயிலை தீ நீருக்கு பதில் இதை அருந்துவதே சால சிறந்தது )

( கடுக்காய் பொடி எல்லா நாட்டு மருந்து கடைகள் மற்றும் இயற்கை பொருள் விற்பனை கடைகளில் கிடைகிறது )


Saturday, 9 April 2016

நடிகர் சங்க கிரிகெட்










ஏப்ரல் 17 ம் தேதி 2016 அன்று சேப்பாக்கம் விளையாட்டு அரங்கத்தில் , தென்னிந்திய நடிகர் சங்கம் கிரிகெட் போட்டி நடத்தி அதன் மூலம் கிடைக்கும்  பணத்தை கொண்டு , நடிகர் சங்க கட்டிடத்தை 26 கோடி ரூபாய் செலவில் கட்ட உள்ளது .

இது குறித்து சினிமா விமர்சர்களும் , சினிமா விநியோகஸ்தர்களும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் விஷால் ரசிகர்களும் இன்னும் சில மானம் கெட்டவர்களும் , இதில் என்ன தவறு இருக்கிறது . இது உனக்கு பிடித்திருந்தால் போய் பாரு .
அடுத்தவரை பார்க்காதே என்று கூற உனக்கு உரிமை இல்லை என்று கூப்பாடு போடுகிறார்கள் .

இந்த கூப்பாடு போடுபவர்கள்தான் ,

எவர் எக்குடி கெட்டாலும் , தான் வாழ்ந்தால் போதும் என்று என்னும் சுயநலவாதிகள் .

இந்த மக்கள் தான் மதுவும் , புகையும் அவரவர் விருப்பம் , அதை தவறென்று கூற எவருக்கும் உரிமை இல்லை என்றும் முட்டாள்கள் !

மீதேன் எடுப்பதும் , தமிழ்நாட்டை சுரண்டுவதும் அவரவர் விருப்பம் என்று கூறும் அறிவு கெட்ட அடிமைகள்


மணல் கொள்ளை அடிப்பதும் , லஞ்சம் வாங்குவதும் அவரவர் விருப்பம் என்று கூறும் அடி முட்டாள்கள்

மலைகளை இடித்தால் எனக்கென்ன , மானத்தை இழந்தாலும் எனக்கென்ன என்று வாழும் நாதாரிகள் !


விவசாயி செத்தால் எனக்கென்ன , விவசாயம் அழிந்தால் எனக்கென்ன என்று வாழும் நம்பிக்கை துரோகிகள் !

சாலையில் விபத்து நடந்தால் என்ன , விபசாரமே நடந்தால் எனக்கென்ன  என்று வாழும் கூறு கெட்ட குப்பைகள் !



தமிழ்நாட்டின்  எந்த பிரச்சனைக்கும் தோள் கொடுக்க மாட்டேன் என்று கூறிய நடிகன் எனும் போர்வையில் வாழும் ,
எதிரிகளை கூட தோற்கடித்து விடலாம் .

ஆனால் நல்லவன் வேஷத்தில் திரியும் சில பல நாட்டமைகளை , முதலில் நண்பனாக இல்லை, பிச்சைகாரன் என்ற நிலையில் கூட ஏற்க கூடாது .


மேலும் எல்லா நடிகர்களும் பல கோடிகளோடுதான் வாழ்கிறார்கள் . இதை பற்றி கேட்கவும் கணக்கு பண்ணவும்  தமிழனுக்கு உரிமை உண்டு .

ஏன் என்று கேட்க இங்கு எவனுக்கு தகுதி இல்லை .

ஏன் தெரியுமா ?

தென்னிய நடிகர் சங்கத்திற்கு , தமிழ்நாட்டை 8 பாகமாக பிரித்து விளையாட எந்த உரிமையும் இல்லை .  

எல்லாம் அவங்க அவங்க விரும்பனு தான் தமிழ்நாடு முழுக்க மது கடை இருக்கு . இப்போ மது விலக்கு கேட்டு போராடும்  அவளவு பேரும் முட்டாளா ? மீதேன் என்ற ஒரு பிரச்னை இருக்கு ! இதுவும் அவரவர் விருப்பம் என்று எடுத்து கொண்டால் , நாளை தமிழ்நாடு என்ற ஒன்று இருக்காது என்று கூறும் தன்னார்வலர்களை கேலி செய்கிறீர்களா ?

உன் வீட்டுக்குள் இருக்கும் வரை தான் , அது உன்னுடைய விருப்பம். அடுத்தவரை மறைமுகமாக ஏமாற்ற முயலும் போது  அது பொது பிரச்னை .

தனிப்பட்ட லாப கணக்கிற்காக  தமிழ்நாட்டை விற்க , தமிழானாய் இருந்தால் கூட உரிமை இல்லை !


Wednesday, 6 April 2016

ரிலையன்ஸ்






இந்தியாவின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்று தான் ரிலையன்ஸ் .
1940 களில் திருபாய் அம்பானி யால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் , கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து , டெக்ஸ்டைல்ஸ் துறை,தொலைதொடர்பு துறை  , பெட்ரோலிய துறை ,  என்று பல துறைகளில் கால் பதித்து , இந்தியாவின் 20% ஏற்றுமதி இந்நிறுவனத்தால் தான் என்ற நிலையை அடைந்துள்ளது .


ஆனால் இந்நிறுவனதால் இந்திய அடைந்த பலன்களின் , மற்றொரு பக்கம் உண்டு . 


இந்தியாவின் பூர்விக தொழிலில் ஒன்னு தான் கப்பல் கட்டும் தொழில் ! அதை முடக்கிவிட்டு , ஒரு கப்பல் 700 கோடி ரூபாய்க்கு இந்தியாவிற்கே விற்கும் அதி புத்திசாலி நிறுவனம்தான் ரிலையன்ஸ் !

இவங்க பெட்ரோல் விற்பனைக்காக , கொஞ்ச கொஞ்சம் இருந்த நீர்வழி பாதைகளையும் அழித்து , சில பல தொழிலாளர்கள் வயிற்றில் அடித்ததும் ரிலையன்ஸ்தான் .

தேவை இல்லாதவன் கையில் கூட செல்போன்  என்பது , அனாவசியமாக எல்லோர் கையிலும் துப்பாக்கி இருப்பதற்கு சமம் . அந்த சாதனையை செய்து , அனாவசிய மன உளைச்சலால் மக்களை படுத்தி கொண்டு இருப்பதும் இந்த ரிலையன்ஸ்தான்.

கதர் ஆடையில் , இயங்கிய இந்தியாவில் மாற்று முறை புகுத்தி , தேவைக்கு மீறி ஆடைகள் எல்லோர் வீடுகளிலும் ஒரு துணி கடை இருப்பது போல் செய்தும் , இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட  விவசாயிகளில் 75% பேர் பருத்தி விவசாயிகள் . அந்த சாதனையை புகுத்தியதும் ரிலையன்ஸ்தான் !

இன்றைய நெசவாளர்களின் வாழ்வாதாரம் பறி போனதற்கு முக்கிய காரணமும் ரிலையன்ஸ்தான் !

இந்தியாவிலேயே அதிக கடன் வைத்திருப்பதும் ரிலையன்ஸ் தான் !

ஒரு தொழில் சார்ந்த பிரச்சனைக்கு , ஒரு பாக பிரிவினைக்கு இந்திய பிரதமரே வந்தார் என்றால்  , எந்த அளவிற்கு அரசியல் வாதிகளுக்கு துணை நின்று இருக்கும் இந்த அம்பானி குரூப் !

1 லட்சம் கடன் இருந்தாலே , தன குடும்பத்தை பிரிந்து 
எதோ ஒரு நாட்டில் , 
டாயலேட் கழுவும் வேலை எல்லாம் பார்க்கும் இந்தியர்கள் வாழும் நாட்டில் தான் 106000 கோடி கடன் இருந்தும் , பல அடுக்கு மாடி கட்டி ஆனந்தமாய் வாழ்கிறது அம்பானி குரூப் !

இவங்களுக்கு பத்ம பூசன் , பத்ம விபூசன் இதெல்லாம் கொடுக்க வேண்டியது தான் இந்திய விற்கே கௌரவம் !

அப்போ சொற்ப கடனுக்காக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி  , தொழிலாளி இவங்க நிலைமை எல்லாம் ,
எந்த கௌரவ கணக்கில் சேர்ப்பது !

சொல்ல இந்தியாவில் ஆளும் இல்லை

அதை காது கொடுத்து கேட்க எந்த ஆட்சியும் இல்லை !

வாங்க எல்லோரும் சொல்லுவோம் !
பாரத் மாத கி ஜெய் !


Tuesday, 5 April 2016

நாதரிகளின் நட்சத்திர கிரிகெட்

தென்னிந்திய நடிகர் சங்கம் கிரிகெட்

2016 ஏப்ரல் 17 ம் தேதி சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கிரிகெட் விளையாட்டு போட்டி நடத்த இருக்கிறது . ஒரு அணியில் 6 பேர் என 8 அணிகள் பிரிக்க பட்டுள்ளன .

இதனை நடத்துவதற்கு முக்கிய காரணம் , நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட வேண்டும் . என்பதே ! எனவே அனைவரும் இந்த கிரிகெட் போட்டிக்கு வந்து நிதி தருவீர் என்று அழைப்பு விடுக்கிறார்  நடிகர் விஷால் .


ஆனால் மக்களின் கேள்வி இதுதான்:

ஒரு சங்க கட்டிடத்தை கட்ட அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் தான் பணம் தருவர் . ஏன் இதை தமிழக மக்களிடம் வசூல் செய்ய வேண்டும்.

இரண்டாவது , நடிகர்கள்  யாரும் ஏழைகள் அல்ல.


மூன்றாவது , தென்னிந்தியா நடிகர் சங்கம் என்றால் , தென்னிதியாவில் உள்ள கன்னட , தெலுங்கு , மலையாள நதிகளும் இதில் உள்ளடக்கம். எனில் ஏன் இதை தமிழ் நாட்டில் நடத்தி , தமிழ் மக்களிடம் நிதி திரட்ட வேண்டும் .

நான்காவது , தமிழ் நாட்டில் , தேர்தல் நடைபெறும் கால கட்டத்தில் தான் இதை நடத்த வேண்டுமா ?

ஐந்தாவது , நடிகர் சங்கம் எப்போதும் , வெளிநாடுகளில் தான் நிதி திரட்டும் . இம்முறை ஏன் இங்கேயே பிச்சை எடுக்கிறது . சாரி நிதி வசூல் செய்கிறது .

ரஜினிகாந்த் மட்டுமே கூட சில கோடிகள் கொடுக்கலாம் எனில் , 13 கோடி ரூபாய் வசூல்  என்ற இலக்கோடு நடிகர் சங்கம் கிரிகெட் நடத்த வேண்டிய அவசியம் என்ன ?

இது தான் காரணம் :


இந்த போட்டியை ஹைதராபாத்தில் வைக்கலாம்

இத போட்டியை பெங்களூரில் வைக்கலாம்

ஆனால் அப்படி செய்ய கூடாது . அங்கு போட்டி வைத்தால் அதனால் யாருக்கு என்ன பயன் ?

கேவலம் 13 கோடி என்பது நடிகர் சங்கத்தின் இலக்கு அல்ல .

தமிழக மக்களை குழப்பி , அரசியல் கருத்துகளை பகிர விடாமல் தடுப்பதே !

சென்னை வெள்ள பெருக்கின் பொது நடிகர் சிம்பு கைகொடுத்தார் .

அவரது பீப் பாடலை பேசி பேசியே தமிழகம் , சென்னை வெள்ளத்தையும் , அதனால் ஏற்பட்ட இழப்பையும் , அதன் பிறகு மத்திய அரசால் கொடுக்க பட்ட நிவாரண நிதி கணக்கையும் மறந்து போனது .


அதே போல தான் இப்போதும் , ஏப்ரல் 20 ம் தேதிக்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் அரசியல் சார் முடிவுகளும்  , அது சார்ந்த விவாதங்களும் காரசாரமாக நடக்க , அதை தடுக்க ஒரே வழி நடிகர்கள் கையில் தான் உள்ளது .

எப்போதுமே நடிகர்கள் தான் நம் அரசை காப்பாற்றி வருகிறார்கள் .

மக்கள் சேப்பாக்கம் சென்று பார்க்கா விட்டாலும் , தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் . நாம் எதோ , புத்திசாலி தனமாய் , நாம் தான் நேரில் சென்று பார்க்க வில்லையே என்று எண்ணி கொண்டு இருப்போம் .
ஆனால் தொலைக்கட்சிகள் , விளம்பர தாரர் மூலம் வசூல் செய்யும் . அதற்கான உரிமைக்காக நடிகர் சங்கத்திற்கு நிதி கொடுக்கும் .
தமிழனம் மறைமுகமாக ஏமாந்து போகும் .

இப்போதும் தமிழனம் எப்போதும் போல் நடிகர்கள் விளையாடியதை பற்றியும் , அவர்கள் வீர தீர செயல்கள் பற்றியும் அங்கு நடந்த பிரச்சனைகள் பற்றியும்  மட்டுமே பேசி கொண்டு , இப்போது எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளை சரி வர எடுக்க மாட்டோம் .

இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தஞ்சாவூர் டீம் , திருச்சி டீம் , கோயம்புத்தூர் டீம் , சென்னை டீம் என்றும் 8 பிரிவுகளாக தமிழகம் பிரிக்க பட இருக்கிறது .

எல்லோரும்க்கு ம் உள்ள ஊர் பாசம் , தமிழக முடிவு என்ற முடிவில் இருந்து பிரிக்க பட இருக்கிறது .  அனால் இதில் இருக்கும் எந்த நடிகனும்  அந்த ஊர் காரனாக இருக்க மாட்டான் . இவனுக்கு பின்னால் ரசிகர் மன்றங்களும் , அதன் உறுப்பினர்களும் என்று தமிழக இளைஞர்கள் பிரிக்க பட இருக்கிறார்கள் . இந்த இளைஞர் கூட்டம் , அரசியல் பேசுவதை விடுத்து என் தலைவன் அணிதான் வெற்றி பெரும் என்றும் , என் ஊர் தான் வெற்றி பெரும் என்றும் , அதை மட்டுமே பேசி பேசி , அழிய இருக்கிறது .

இதனால்

கடைசி நேர முடிவுகள் தவறுதலாக முடியும்


எப்படி பார்த்தாலும் தமிழனத்தை ஏமாற்ற தென்னிந்தியா முயற்சித்து கொண்டே இருக்கிறது !


ஒரு நடிப்பு துறை சார்ந்த முதல்வர் இருக்கும் வரைதான் நடிகளுக்கு மதிப்பு !

ஆகவே அவர்களை காப்பாற்ற நடிகர்கள் போராடுகிறார்கள் .
அப்போதுதான் நாளை அவர்களும் அந்த இடத்திற்கு வர முடியும் !

எனவே தமிழனை சிந்திக்க விடாமல் செய்வதே நடிகர்களின் நோக்கம்.

நடிகர்களிடமிருந்து தமிழனம் மீள வேண்டும் !



அட போங்கடா !


கேடு கேட்ட நடிகர் இனமே ,
நாடக தமிழை அழித்த நடிகர்களே
எம்மக்களை உனக்கு கீழே அடிமையாக்கி உள்ள நடிகர் கூட்டமே

உனக்கும் அழிவு வருகிறது
அதை தர போவது வேறு யாரும் அல்ல
உனது ரசிகர் கூட்டமே !

காத்திரு !
இந்த கூட்டம் உனக்கு அடிமை அல்ல
உன்னையும் , உன்னை ஆட்டி வைப்போரையும்
அடக்க போகும் கூட்டம் !
அழிக்க போகும் கூட்டம் !

Saturday, 2 April 2016

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளணுமா ?

2016 தேர்தலை எதிர்நோக்கும் இந்நேரத்தில் , ஒரு முக்கிய கருத்து மையபடுத்த படுகிறது .

அது தாங்க

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளணுமா ?

இந்த கேள்விக்கு ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் .

இந்த கேள்வி மிகவும் தவறானது . இன வெறியை தூண்ட கூடியது என்பது தொடங்கி , இதனால் வரும் பின்விளைவுகள் வரை பேசி , இறுதியில் பயமுறுத்தலோடு முடிகிறது . பால் தாகரே போல் ஆகபோகிறது என்று .

 ஏன தமிழ்நாட்டில் ஒரு தமிழனின் ஆட்சி வர கூடாது . அதில் என்ன தவறு இருக்கிறது .

இது குறித்து எதிப்பு தெரிவிப்போர் , மற்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆரூடம் கூறுவோர் அனைவருமே தெலுங்கர்கள்  மற்றும் கன்னடர்கள் .

தமிழ் நாட்டில் நாங்கள் வந்து குடியேறி 500 ஆண்டுகள் ஆகிவிட்டது . என் மொழி தமிழால் தொலைந்து விட்டது . என் உறவுகள் , என் பூர்வீக விவரங்கள் அனைத்தும் , இந்த தமிழ்நாட்டால் இழந்து விட்டோம் . அப்படி எனில் எனக்கு இங்கு ஆட்சி புரிய எல்லா அதிகாரமும் உண்டு  . இதுதான் இவர்களின் வாதம் .

சரிதான் . 

ஏன் நீங்கள் உங்கள் மொழியை இழந்தீர்கள் . 
தமிழ் மீது கொண்ட காதலா ?

ஏன் உங்கள் உறவுகளை இழந்தீர்கள் ?. 
தமிழ்நாட்டில் வாழ்வது தான் எனக்கு பிடித்திருக்கிறது 
என்று அன்போடும் , ஆசையோடும் வந்ததாலா ?

நாயக்கர்கள் ஆட்சியில் மிகுந்த செல்வா செழிப்போடும் , மரியோதையோடும் நீங்கள் வாழ்வதற்காக , இங்கு வந்தீர்கள் .

அதே போல் தமிழர்களும் தான் பிற நாடுகளில் வாழ்கிறார்கள் என்று கூறாதீர்கள்

எந்த தமிழனும் ,
எந்த நாட்டிலும் ,
இது எங்கள் அரசனின் ஆட்சி ,
இதில் எங்களுக்கு மரியாதை உண்டு
என்று போகவில்லை .

ஆங்கிலேயன் அவனுக்கு வேலை பார்க்க வேண்டி  அழைத்து சென்றான் . பல உயிர்களை பலி கொடுத்து வாழ்ந்து வருகிறான் .

நீங்கள் தமிழ்நாட்டிற்குள் வந்த நோக்கத்தையும் , தமிழர்கள் இங்கிருந்து சென்று வேறு நாடுகளில் வாழ்கின்ற காரணத்தையும் ஒப்பிடாதீர்கள் .

உங்கள் வாழ்க்கை பட்டு விரிப்பில் நிகழ்ந்தது .
தமிழர்கள் வாழ்க்கை முள் மீது நிகழ்ந்தது .

தமிழ்நாட்டில் உள்ள எந்த கோவிலிலாவது உங்கள் கை விரல்கள்கள் பதிந்துருக்குமா ? உங்கள் மீது சேறு விழுந்திருக்குமா ?

ஆனால் மலேசியாவிர்க்கும் , ஆஸ்திறேலியாவிர்க்கும் அழைத்து செல்ல பட்ட மக்கள் , பாலங்கள் கட்டுவதற்காக அழைத்து செல்ல பட்டனர். அதில் எத்தனையோ உயிர்கள் பறிபோய் இருக்கின்றன .

அங்கிருக்கும் பாலங்கள் தமிழரை புதைத்த மண் மீது நிற்கிறது .
அதில் குழந்தைகள் , பெண்கள் என்ற வேறுபாடெல்லாம் இல்லை .

நீங்கள் தமிழ்நாட்டில் வந்து வாழ்வதற்கும் , தமிழர்கள் பிற நாடுகளில் வாழ்வதற்கும் ஆயிரம் வித்யாசம் உள்ளது .

பிறகு நாங்கள் எங்கள் மொழியை இழந்து விட்டோம் . என்பது . அப்பட்டமான பொய். 
ஒன்று நீங்கள் , உங்களை தமிழன் போலவே காட்டி கொள்ள முயற்சி எடுத்தீர்கள் .
இரண்டு , வீட்டிற்குள் இப்போதும் தெலுங்கு ஒலித்து கொண்டுதான் இருக்கிறது .
மூன்று  தமிழ் பெண்களை மணந்து கொண்டு தமிழனாய் வாழ்வது போல் நடித்து கொண்டு இருக்கிறீர்கள் .

பல நேரங்களில் ஜாதி பிரிவினைக்கும் வழிவகுத்து கொண்டு இருக்கிறீர்கள் .

ஒருநாளும் , உங்களில் ஒருவருக்கும் தமிழ் மீது அன்போ , அக்கறையோ இருந்ததே இல்லை .

அதெல்லாம் போகட்டும் ,

ஏன்

 தமிழர்களுக்கு ஆளும் திறன் இல்லை என்றும்
அப்படியே ஆண்டாலும் ஜாதியால் அடித்து கொள்வார்கள் என்றும்
மத பிரச்னை வரும் என்றும் அவதூறு பேசவும் ,
நாம் அனைவரும் இந்து என்றும் 
நாம் அனைவரும் இந்தியர்கள் என்றும்  ஒரு போர்வைக்குள் ஒழிந்து கொள்ளவும் முயற்சிக்கிறீர்கள் .


நீங்கள் கேட்கும் இதே கேள்வியைத்தான் ஆங்கிலேயனும் கேட்டான்.
இந்தியர்களுக்கு ஆளத் தெரியுமா என்று !

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேணுமா என்று எவரும் கேட்காதீர்கள் .
உங்களுக்கு பின்னால் 
இந்தியாவை இந்தியன் தான் ஆள வேண்டுமா என்று கேட்க பலர் வரிசையில் நிற்கிறார்கள் .

அவர்களுக்கு ஒரு இந்தியனாய் என்ன பதில் சொல்ல்வீர்களோ அதே பதில் தான் தமிழர்கள் , திராவிடர்களுக்கு கூறுவது . 


மேலும் 

நீங்கள் எடுக்கும் இழிவான  முயற்சிதான் , ஏன் ஒரு தமிழன்  என் பூமியை ஆளக்கூடாது  கேள்வியையே கேட்க வைக்கிறது .

தமிழ்நாடு தமிழனின் ஆட்சியின் கீழ் என்பது குற்றமா ?
குற்றம் என்று நீங்கள் கூற கூற , இதன் வீரியம் அதிகரிக்கத்தான் செய்யும் .!

Friday, 1 April 2016

அட ! நம்மூரு காய்கறிகளா !

கரிகாய் பொறித்தாள்
கன்னிக்காய் தீய்த்தாள்
பரிக்காய் பச்சடி செய்தாள்
உருக்கமுள்ள அப்பைக்காய் நெய் துவட்டல் ஆக்கினாள் !

                        --------------  காள மேக  புலவர்


அத்திக்காயில் பொறி யல் செய்து

வாழைக்காயில் தீயல் செய்து

 மாங்காயில் பச்சடி செய்து

கத்திரிக்காயில் நெய் துவட்டல் செய்து  , என வகைவகையாய்

உண்டிருக்கிறார் காளமேக புலவர் .

 இது  போன்ற காய்கறிகள் தான் உள்ளூர் காய்கறிகள் !

கத்தரிக்காயில் மட்டும் 500 வட்டார வகைகள் இருந்துள்ளது .

பொய்யூர் கத்தரி

 கண்ணாடி கத்தரி

வரி கத்தரி

பச்சை கத்தரி ,,,,, இப்படி இந்த கத்தரி வகைகளே மிக நீளம் !

இதே போல் வெண்டைக்காயும் வகைகளில் சளைத்தது இல்லை .

கண்ணாடி வெண்டை

பச்சை வெண்டை

சிகப்பு வெண்டை

கஸ்தூரி வெண்டை ........ இப்படி இதன் வகையும் மிக நீளம் .

நீர் காய்கறிகள் கூட்டு செய்ய ஏற்றது .

அதென்ன நீர் காய்கறிகள் :

அதாங்க பூசணிக்காய் , வெள்ளரிக்காய் , சுரைக்காய் , பீர்கங்காய் , கோவைக்காய், அத்திக்காய் ஆகியன .

இவை எல்லாம் ரொம்ப விலை குறைவு . ஆனா பெண்களின் உடல் சார்ந்த நோய்களுக்கும், சிறுநீர் பிரச்சனைக்கும் இந்த காய்கறிகள் கொடுக்கும் மருத்துவ சத்துக்கள் மிக  அதி கம் .



இதுல வெண் பூசணி காய் வெள்ளை படுதலை  நீக்கும் .
சுரைக்காய் உப்பு நீரை வெளியேற்றும் . சிறுநீர கல்லை கரைக்கும்.
பீர்கங்காய்  உப்பு கனிம சத்தை கொடுக்கும் 
கோவைக்காய் சர்க்கரையை கட்டுபடுத்தும் 
அவரைக்காய் கொழுப்பை குறைக்கும் 


இந்த உள்ளூர் காய்கறிகள் , கேரட் , முள்ளங்கி , காலிபிளவர்,முட்டைகோஸ் , நூல்கோல், ப்ரக்கொலி இவற்றையெல்லாம் விட பன்மடங்கு அதிக சத்து நிறைந்தது .

வண்ண காய்கறிகளில் மட்டும்தான் சத்துகள் உள்ளது என்று கூறியே ,மருத்துவ உலகம் நம் நாட்டின் இறக்குமதி காய்கறிகளை பெருக்கி அந்நிய செலாவணிக்கும் கேடு விளைவிக்கிறது .

 இதை விட முக்கியமானது நம் நாட்டு கீரைகள் .




"தாளி முருங்கை தளை தூதுணம் பசலை வாளி வறூ கீரை
நெய்வார்த்துண்ணில் ஆளிஎனவிஞ்சுவார் போகத்தில் "

கீரைகள் விந்தணுவை அதிகரிக்க செய்யும் . இவை பக்க விளைவுகள் இல்லாத வயாகரா !

"பொன்னாங்கன்னிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் உழக்கு "

என்று கூறிய வரிகளில் பெண்ணுக்கு , பொன்னாகன்னி கீரை எந்த அளவுக்கு முக்கியம் என்று கூறுகிறது தமிழ் மருத்துவம் .

"போன கண்ணும் திரும்புமாம் , பொன்னாங்கன்னியிலே " என்று கூறும் 

போது 

பொன்னாங்கன்னி கீரை கண்ணுக்கு மிகவும் நல்லது என்பது தெரிகிறது .

நாம் காய்கள் என்று எண்ணி உண்ணும் சில கனிகள்  :

நெல்லிக்காய் கூட்டு : பாசிபருப்புடன் சேர்த்து , கொட்டைகளை நீக்கி நெல்லிக்காய் சமைத்தால் நெல்லி கூட்டு அருமையாக இருக்கும்.

அத்திக்காய் கூட்டு :  அத்திக்காய் பொரியல்  செய்தால் அதுவும் அருமை

தேங்காய் : இது சமைக்காமலே உண்பது சால சிறந்தது .

 எப்புடி எல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா ?

புளியில் ஊறாத காய்
ஏலக்காய் இல்லாத இனிப்பு
பட்டை போடாத பிரியாணி
மல்லி தழை இல்லாத ரசம்
கறிவேப்பிலை இல்லாத சட்னி

இப்புடி சாப்பிட கூடாதாம் !


நம்மில் ஊடுருவி நிற்கும் உள்ளூர் காய்கறி போன்று வெளிநாட்டு காய்கறிகள்

ஐரோப்பாவில் இருந்து வந்த டீ , காபி , மற்றும் தக்காளி
சிலியில் இருந்து வந்த மிளகு போன்ற காய் , மிளகாய்
சீனாவில் இருந்து வந்த முள்ளங்கி
பெர்சியாவில் இருந்து வந்த பெரிய வெங்காயம்
ஜப்பானில் இருந்து வந்த சேனை கிழங்கு
.......................................................இன்னும் நீள்கிறது இந்த பட்டியல்

நம் நாட்டின் கொடியில் விளையும் காய்கறிகளுக்கும் 
மரத்தில் விளையும் முருங்கை கீரைக்கும் 

இணையான உணவு இந்த உலகில் இல்லை 
இனி வரபோவதும் இல்லை !

( இது டாக்டர் . சிவராமன் அவர்களின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது )



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...