Friday, 7 April 2017

ரமணா படம் பாத்தீங்களா ?

ரமணா படம் பாத்தீங்களா ?


ரமணா திரைப்படம் 2002 ம் ஆண்டு AR .முருகதாஸ் இயக்கத்தில் , ஆஸ்க்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளி வந்த படம் .

முருகதாஸ் இதுவரையில் எடுத்துள்ள திரைப்படங்கள் , தீணா , ரமணா ,  7 ம் அறிவு , கஜினி , துப்பாக்கி அப்புறம் கத்தி இவ்வளவுதாங்க !

இதில் தீணா தவிர மற்ற படங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்ப எதுக்கு இந்த தகவல் ?

காரணம் இருக்கு!

ரமணா திரைப்படத்தில் , ஹீரோவின் பின்னால் பல பேர் வேலை பார்க்கிறார்கள் என்பதை கண்டறிந்த ஒரு போலீஸ் மட்டும், அவர்கள் யார் யார் என்று தேட ஆரம்பிக்கும். முதலில் அவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்று கண்டறிந்து , அவர்களுக்குள் என்ன ஒற்றுமை உள்ளது என்று தேடும் போது , ஒரு ஒற்றுமையும் இருக்காது.

மீண்டும் தேடுவார் அந்த போலீஸ் காரர். அப்போது இரண்டாம் நிலை தகவலில் ஒன்றை கண்டறிவார். அது என்னவெனில் , அவர்கள் அனைவரும் ஒரே கல்லூரியில் ஒரே பேராசிரியரிடம் பயின்றவர்கள் . இந்த தகவல் தான் அவர்கள் யார் யார் என்று  கண்டு பிடிக்க உதவும் .

அதே கதை மீண்டும் துப்பாக்கி படத்தில் ஹீரோவின் துணை ஆள் என்பதில் இருந்து வில்லனின் ஆள்கள் என்று மாறி இருக்கும். இப்போது முருகதாஸ் அவர்களுக்கு பெயர் சூட்டுகிறார். அவர்கள் ஸ்லீப்பர் செல்கள் என்று கூறுவார். அதற்க்கு விளக்கமும் கொடுப்பர். தெரிந்தோ , தெரியாமலோ , நம்மை சுற்றி பலரும் அந்த வில்லன்களுக்காக வேலை பார்க்கிறார்கள் என்று கூறுவார்.

இந்த கதையை இப்படியே நினைவில் கொள்ளுங்கள்!

ஏனெனில் , இலுமினாட்டிகள் யார் யார் என்று எண்ணுகிறீர்களா , அல்லது சந்தேகம் கொள்கிறீர்களோ அவர்கள் யார் என்று கண்டறிவது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களது வெளிப்புற முகவரி வேறு வேறாக இருக்கும். ஆனால் , இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும் .

இப்படியாக 13 நிலையில் வெவ்வேறு தரப்பு மக்கள் இதில் உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் உள்ளவர்கள் ,வெவேறு ஊர்களில் வேவேறு மொழிகளில் பிறந்தவர்கள் . ஆனால் அங்கு ஒரு ஒற்றுமை இருக்கும்.


அப்படி ஒரு நிலைதான் உள்ளவர்கள்:


அம்பானி

அதானி

டாடா

பிர்லா

வல்லபாய் படேல்

P  .B .கோத்ரேஜ்

இவர்கள் எல்லோரும் , தொழில் துறை மற்றும் அரசியல் துறையில் இருப்பவர்கள். அனால் இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது.

அது தாங்க இவங்க எல்லோரும் பார்சி இனம்.

இதில் முக்கியமாக இருவரை  விட்டுவிட்டு தான் கூறுகிறேன்.

ஒருவர்  முகம்மது அலி ஜின்னா .
மற்றொரு குடும்பம் வாடிய குடும்பம்.

நீங்கள் ஜின்னா வை நினைத்தாலே கோபம் கொள்பவரா ? எனில் இன்று முதல் பிரித்தானியா தயாரிப்புகளை உண்ணாதீர்கள்.

ஏன் எனில் ஜின்னாவின் பேரன் தான் பிரித்தானிய நிறுவன முதலாளி . டைகர் பிஸ்கட் உட்பட!


ஜின்னா தனது ஒரு தலைமுறைக்கு முன்பு தான் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறியவர். முதல் தகவல் படி அவர் இஸ்லாமியர். இரண்டாம் தகவலின் படி அவர் பார்சி இனத்தவர்.

ஆனால் ஜின்னா , தன தலைமுறையில் தனக்கு திருமணம் ஆன பிறகு , ஒரு பார்சி பெண்ணை விரும்பி மணம் புரிந்து கொள்கிறார். காந்தி நல்லவரா , ஜின்னா நல்லவரா என்று யாரேனும் கேட்டால் , நான் ஜின்னாவை தான் குறிப்பிடுவேன் என்று கூறுகிறார் காந்தி மற்றும் ராஜாஜியின் பேரன்.
 ( காந்தியின் மகனும் , ராஜாஜியின் மகளும் காதல் திருமணம் செய்தவர்கள் . அந்த வகையில் இருவரும் சம்பந்தி )

அப்படி வாழ்ந்த ஜின்னாவிற்கு தெரியாமலேயே , அவரது மனைவி வழி உறவுகள் கொல்கத்தாவில் இந்து முஸ்லீம் பிரச்சனைக்கு வழிவகுத்தன. இதனை தொடர்ந்து பீகாரில் , முஸ்லீம்கள் கொல்லப்பட , அதை தொடர்ந்து மும்பையில் இந்துக்கள் கொல்லப்பட இவ்வாறு மாறி மாறி பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தது. இதன் விளைவு தான் பாகிஸ்தான் என்று வெளி தகவல் கூறுகிறது.

ஆனால் இந்த இடங்களில் ஜின்னா சரியான முறையில் பயன்படுத்தப்பட்டார். பிரிஷாரின் பிரித்தாளும் கொள்கை. இந்தியா வில் இருந்து , பஞ்சாப் , பலுசிஸ்தான், வங்கம் தனித்தனி நாடுகளாக மாறும் என்று வாக்கு கொடுத்தனர். இதை போன்றே , திராவிட நாடும் கிடைக்கும் என்று நம்பிய, அல்லது மக்களுக்கு நம்பிக்கை கொடுத்த திராவிடர்கள் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்தனர்.

இதே போன்றே இலங்கையில் , சிங்கள , தமிழ்நாடுகள் பிரியும் என்றும் ,

மலேசியாவில் மலாய் , தமிழ் , சீனா மக்களுக்கென நாடுகள் பிரித்து தரப்படும் என்று வாக்கு கொடுத்திருந்த ஆங்கிலேயர்கள் ,

ஜின்னாவை கொண்டு காய் நகர்த்தி , பாஞ்சாபையும் பலுசிஸ்தானையும் , பாகிஸ்தான் என்று பெயர் மாற்றினர் .

இலங்கை பிரியவில்லை. காரணம் , இந்து முஸ்லீம் போல் சிங்கள தமிழ் பிரச்னை இருக்காது என்று கூறினார்.

மலேசியாவிலும் வாக்கு பொய்யானது.

ப்போது தமிழர்கள் மற்றும் பஞ்சாப் இனம் பிரிக்க பட்டாகி விட்டது. இவர்கள் பிரிந்து தான் இருக்க வேண்டும் என  முடிவு செய்து தீர்மானம் நிறை வேற்றி இருந்தார்கள் போலும் !

பிறகு என்ன ? வேலை முடிந்து விட்டது .  ஜின்னா மகளின் பிறந்த தினத்திலேயே சுதந்திரம் வழங்கப்பட்டது .

ஆனால் ஜின்னாவும் நாட்டை ஆள வில்லை . அடுத்த 6 மாதங்களில் இறந்து போனார். அவருக்கு காசநோய் என்று கூறப்படுகிறது. உண்மையா என்பது அவருக்கு மட்டுமே தெரியும் !

இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கிய மௌண்ட்பேட்டன் பிரபுவின் , மகன்தான் பிலிப் . அவர் மனைவி தான் ,

இங்கிலாந்து ராணி  எலிசபெத் !

அடுத்தது ஜின்னா வின் மருமகன் அந்த வாடியாவை பற்றி பாப்போம் !
இவரும் ஒரு பார்சி தான்.


இந்தியாவை பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் மாபெரும் குடும்பம்.இந்திய மருத்துவம்,தொழில்நுட்ப்பம் எல்லாம் இவர்களின் கைகளில்தான் உள்ளது.

போக்குவரத்து துறையும் இவர்கள்தான், காப்பீடு துறையும் இவர்கள் தான் !


நம் வரலாறு புத்தகம் நம்மிடம் ஏன் இதையெல்லாம் சொல்வதில்லை ?






(சோராப்ஜி, மோடி, காமா, வாடியா, ஜீஜீப்ஹோய், ரெடிமனி, டாடிசெத், பெட்டிட், பட்டேல், மேத்தா, ஆல்ப்லெஸ், டாட்டா மற்றும் பலர் பார்சி இன பிரிவினர் )


-------------------------------

ரஜினி காந்த்  - இலுமினாட்டியா ?

சமீப காலமாக , ஹீலர் பாஸ்கர் , சீமான் இவர்கள் உரை, கார்த்திக் ஸ்ரீனிவாச போன்ற எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள்  மற்றும் you tube கூறும் சில கருத்துக்களின் அடிப்படையில் மக்களுக்கு ஓரளவுக்கு இலுமினாட்டிகள் யார் என்பதும், அவர்களின் நோக்கம் என்ன என்பதும் எல்லோருக்கும் தெரிகிறது.

இந்நிலையில் இந்தியாவில் யார் யார் இந்த குரூப்பில் இருக்கிறார்கள் என்றும் ஒரு சிலர் கருத்து கூறுகிறார்கள் .

அதே சமயம் , தமிழகத்தில் உள்ளவர்கள் யார் என்று கூறும்போதும் அதில் ரஜினி முதல் இடம் பெறுகிறார். ஒரு வேளை ரஜினி தான் தமிழகத்தில் இருந்த முதல் இலுமினாட்டியா என்றால் மிக மிக தவறு .அவருக்கு முன்பே 100 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இன்னும் சொல்ல போனால் மிக பெரிய  வரலாறே உள்ளது.

சரி , அதை பற்றி கொஞ்சம் கொஞ்சமா பார்க்கலாம்.

அதுக்கு முன்னாடி , ரஜினி பற்றி பேசுவோம்.

ரஜினி காந்த ஒரு இலுமினேட்டி என்று வடஇந்திய எழுத்தாளர் ஒருவர் 4 ஆண்டுகளாக எழுதி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டிலோ , தென் இந்தியா விலோ இலுமினேட்டி என்றாலே என்ன வென்று யாருக்கும் தெரியாது .

அந்நிலை இன்று இல்லை என்று நிச்சயமாக கூறலாம். முழு விவரம் தெரியாவிட்டாலும் ,ஓரளவிற்கு இலுமினேட்டி என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரிவது என்பது ஹீலர் பாஸ்கர் என்ற மாமனிதனால் தான் என்றால் அது மிகை ஆகாது .

முதலில் இலுமினாட்டிகளின் சின்னங்கள் என்னென்ன என்று பாப்போம். பிறகு நீங்களே புரிந்து கொள்வீர்கள் ரஜினி ஒரு இலுமினேட்டி என்று !

ஒற்றை கண்

பிரமிடு

ஐந்து முக நட்சத்திரம்

 ஆறு முக நட்சத்திரம்

காபாலா எனும் ரகசிய மதம்

பெண் கடவுளுக்கு தரும் நரபலி

சாத்தானின் கொம்பு

V எனும் வெற்றி குறியீடு

கருமை வெண்மை கொண்ட சதுரங்கம்

சிகப்பு நிற சூரியன்

இரட்டை தலை கழுகு

நாய்

666 என்ற எண்

இதை எல்லாம் கடந்த , சாத்தானின் மீது உள்ள நம்பிக்கை.பேய்களை நல்லவர்கள் என்று நம்புவது.

மாயா ஜாலங்கள் நிறைந்தது தான் இந்த இலுமினாட்டிகளின் வாழ்க்கை .


இப்போ ரஜினிக்கும் இதற்கும் என்ன தொடர்பு என பாப்போம்.

ரஜினி யின் முழு பெயர் சிவாஜி ராவ் காய்க்வாட் . இந்த காய்க்வாட் என்பது குடும்ப பெயர். இவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்திருந்தாலும் , குஜராத் தான் இவரது பூர்வீகம். ( மகாராஷ்டிரம் பிரிக்கப்படும் இருந்த ஒருங்கிணைக்க பட்ட மாநிலம் )இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் . குஜராத் மாநிலம்  , இந்தியா வரலாற்றில் முக்கிய இடம் .


ரஜினி , சிவாஜி ராவ் என்ற பெயரில் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றும் போது , குஜராத் மக்களின் ரகசிய குழு என்ற பெயரில் மும்பையில் ஒரு குழு இயங்கி வருவதை அறிந்து , நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது முதல் மாத சம்பளத்தில் 666 ரூபாய் செலுத்தி இலுமினேட்டி குழுவில் உறுப்பினர் ஆகி உள்ளார். அப்போது பெற்ற அந்த சான்றிதழ் ரஜினியின்  வீட்டில் இப்போதும் இருப்பதாக அந்த வடஇந்திய எழுத்தாளர் கூறுகிறார். மேலும் அங்கு தான் இவருக்கு ரஜினி காந்த என்று பெயர் மாற்றப்படுகிறது.

1975 ல் அபூர்வ ராகங்கள் என்ற கலாசார சீர்கேடு சார்ந்த தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆகிறார்.

பிறகு சில படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் , தானே திரைப்படங்களுக்கு பெயர் வைப்பேன் என்ற ஒப்பந்தத்தின் பெயரில் தான் திரைப்படங்களில் நடிக்கிறார்.

1978ம் ஆண்டு ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரை படத்தில் , ( இது ஒரு பேய் படம் ) இருந்து தன்னுடைய குழுமத்திற்கு விசுவாசியாக மாறுகிறார்.

ஆனால் மக்களிடம் எம்ஜிஆர் பெற்ற பேரை பெற வேண்டும் என்ற  எண்ணத்தில் ,

அதே ஆண்டு வெளியான பைரவி என்ற திரைப்படத்திற்கு , தாணுவை வைத்து தனக்கு தானே சூப்பர் ஸ்டார் என்று பெயர் சூட்டி கொள்கிறார். அதே படத்திற்கு அண்ணா சாலையில் 80 அடி உயர கட்டவுட் வைக்கிறார். இது தான் கட் அவுட் கலாச்சாரத்தின் சாதனைகள் வளர காரணமாக அமைந்தது.

இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும், இலுமினாட்டிகளின் சின்னமே.
பைரவி என்பது நாய் என்று பொருள் படும்.

மீண்டும் வெண்மையும் கருமையும் கொண்ட சதுரங்கம் கொண்ட போஸ்டரோடு வெளியாகிறது சதுரங்கம் திரைப்படம் .  இதுவும் 1978 ல் தான் வெளியாகிறது. ( இன்றும் விசுவநாதன் ஆனந்த பயன்படுத்தும் சதுரங்கமும் இது தான் என்பது வியப்பாய் உள்ளது . )

பிறகு அல்லாவுதீனும் அற்புத விளக்கும் என்ற திரைப்படத்தில் மாயாஜாலங்களோடு நடித்தார் .

காளி என்னும் திரைப்படம் , இலுமினாட்டிகளின் பெண் தெய்வத்தை குறிக்கவும், டைகர் திரைப்படம் மீண்டும் நாயை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.

1980 ல் இவர் நடித்த திரைப்படத்தின் பெயர் நட்சத்திரம். இதுவும் இலுமினேட்டி சின்னம்




நாம் நினைப்பது போல் முரட்டு காளை திரைப்படம் , ஜல்லிக்கட்டில் பெருமை பேசுவது அல்ல. 1980 ல் தான் இந்த திரைப்படம் வெளிவந்தது . அதில் ரஜினி இரண்டு கொம்புகளோடுதான் நிற்பார். இலுமினேட்டி களின் முக்கிய சின்னம் இது.

1981 ல் கழுகு என்ற திரைப்படம் வெளிவந்தது . கழுகும் இவர்களது சின்னம்தான். அதே சமயம் இந்த திரைப்படத்தில் முழுவதுமாக நரபலி கொடுப்பது குறித்தும், யார் யாரை நரபலி கொடுக்கிறார்கள் என்பது குறித்தும் கூறியுள்ளார்.

1981 சுதந்திர தினத்திற்கு வெளிவந்த திரைப்படம்தான் நெற்றிக்கண் . ஒற்றை கண் அல்லது நெற்றி கண் இதுவும் முக்கிய சின்னம் தான்.

1982 ல் கெட்டவர்களை எல்லாம் நல்லவனாக காட்ட வேண்டிய சூழ்நிலையில் , வடஇந்திய ரௌடிகள், துடி துடிக்க காவல்துறை அதிகாரியின் குழந்தைகளை நடு ரோட்டில் கொன்ற ரங்கா வின் பெயரை ஹீரோ என்ற அந்தஸ்திற்கு கொண்டு வந்தார்.

பின்னர் , தன்னை குறித்து மூன்று முகம் , நான் மகான் அல்ல , நான் சிவப்பு மனிதன் என்று பெயர் கொடுத்தார் ரஜினி.

சிவப்பு சூரியன் திரைப்படமும் , மாவீரன் திரைப்படமும் கூட இலுமினேட்டி சின்னங்கள். இந்த ஊர்காவலன்  என்றால் knight templers என்று பொருள்.

அதே போல் இவரது எல்லா படங்களிலும் சம்பந்தமே இல்லாமல் மாய ஜால காட்சிகள் சில இருக்கும். குருசிஷ்யன் படத்திற்கும் , அதன் இறுதி காட்சிக்கும் என்ன சம்பந்தம்?

அதிசய பிறவி , இறப்பிற்கு பின் என்ற நோக்கோடு எடுக்கப்பட்டது.

பாபா படம் சொல்லவே வேண்டாம்.

சந்திரமுகி படமும் பேய் கதைதான்.

இதில் கடைசியில் சேர்ந்தது தான் கபாலி . இதுவும் அவர்களது கடவுளின் பெயர் ஆகும்.

நீங்களே ஒப்பிட்டு பாருங்கள் , ரஜினி தன ரகசிய குழு சார்ந்த பெயர்களை மட்டுமே தனது திரைப்படத்திற்கு வைப்பார் .

அது மட்டும் இல்லாமல் சம்பந்தம் இல்லாத மாயாஜால காட்சிகளும், இரட்டை மனைவி ஆதரவும்  இவரது திரைப்படங்களில் காணலாம்.

கபாலி திரைப்படம் முடிந்ததும் , ரஜினியும் அவரது மகளும் அமெரிக்காவில் ஓய்வெடுக்க சென்றனர். யாரவது தனது மகளோடு ஒய்வு நாட்களை கழிப்பார்களா ? மனைவியுடன் அல்லவா செல்ல வேண்டும். அப்படி சென்றதால் தான் , இரண்டு மாதங்கள் கழித்து தமிழ்நாடு திரும்பும் போது ஐஸ்வர்யா ரஜினி ஐ .நா வில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு செயலர் ஆனார். 

இதற்க்கு முன்பு சென்ற பயணத்தில் தான் சௌந்தர்யா விலங்குகள் பாதுகாப்பு நல செயலர் ஆனார்.

ஆனால்  இன்றும் தமிழ்நாட்டில் சிலர் , ரஜினி ஒன்றுமே தெரியாத அப்பாவி என்பது போல் பேசி வருகின்றனர்.

அது தான் வேடிக்கையாக உள்ளது.

யோசித்து பாருங்கள் ஐ.நா வில் நுழைவது சுலபமா ?
ஒருவர் தனது பாஸ்போர்ட்டை மறந்து விட்டால் அந்த விமானம் காத்திருக்குமா ?

ரஜினி அந்த அளவிற்கு முக்கியமானவர் . இலுமினாட்டிகளின் கை எங்கேல்லாம் ஓங்கி உள்ளதோ அங்கெல்லாம் இவர் எதையும் பெறுவார். இதன் அடிப்படையில் தான், மலேசியா மன்னர் இவருக்கு விருந்து வைத்தார்.

ஒபாமா வும் கபாலி படம் பார்த்தார்.

ஜப்பானில் ரஜினி கொடிகட்டி பறக்கிறார்.

அமெரிக்காவில் இவரது திரைப்படம் வெளியாகிறது.

இதோடு இல்லாமல் இவர் , இவரது குழுவில் இல்லாதவர்களுக்காக பேசுவதும் கிடையாது .பார்ப்பதும் கிடையாது.

ஷாருக் கானும் சந்திக்கிறார். தோனியும் சந்திக்கிறார்.

இவர் எமன் படத்தையும் பாராட்டினார்.

மொட்டை சிவா கெட்ட சிவனையும் பாராட்டினார்.

குற்றம் 23 யம் பாராட்டினார்.

அது மட்டும் அல்ல , சமீபமாக , பல நடிகர்கள் ரஜினி நடித்த அதே பெயரில் நடிப்பதும், அவரது பாடல்களை ரீமிக்ஸ் செய்வதும் ஏன் தெரியுமா ?

இப்போது சேர்ந்திருக்கும் நடிகர்கள் எல்லாம் , டாப் மோசட் சீனியரின் படத்தை, பட பெயர்களை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று சட்டம் உள்ளது போலும்.

லாரன்ஸின் படங்கள் எல்லாம் பேய் படங்கள் என்பதையும் நினைவிற்கொள்க !

G.v பிரகாஷ் , சூர்யா , தமன்னா , பிரபு தேவா , விஜய் சேதுபதி , என்று பேய் படத்தில் நடிப்பவர்கள்  லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம் !


radhamania.blogspot.com/.../superstar-rajnikant-is-illuminati





Wednesday, 15 March 2017

சுற்றுலா போக ஏற்ற இடம் -3



முருடேஸ்வர கோவில்



இது முருடேஸ்வர கோவில். 20 அடுக்கு கொண்ட இந்த கோவில் 123 அடி  உயரம் கொண்டது  .கர்நாடக மாநிலத்தில் ,உத்தர கர்நாடகத்தில் உள்ளது. ஒரு முறை போய் பாருங்க.சுத்தியும் கடல்.உயர்ந்த சிவன் சிலை .கமெரசியலா கூட கோவில்,கடல் ,போட்டிங்கன்னு சூப்பரா இருக்கும். இந்த 20 அடுக்கு கோபுரத்தின் உள்ளே செல்ல லிப்ட் வசதி உள்ளது.மேல போய் நின்னு ஊரை சுத்தி பார்க்கலாம் . கோடை விடுமுறைக்கு நல்ல இடம். மங்களூர் , மஞ்சுநாதர் கோவில் இதெல்லாம் வரலாறுகளை கடந்த இடங்கள் .இந்த இடமெல்லாம் பூர்வீக தமிழர் வாழ்ந்த இடங்கள். இந்த கோவிலில் வற்றாத நீர் ஊற்று ஒன்று உள்ளது. அதில் வருவது கங்கை நீர் என்றும், முன்னொரு காலத்தில் வாழ்ந்த எதோ ஒரு மன்னன் கங்கை நதியோடு இந்த நீர் ஊற்றை இணைத்துள்ளான் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள் .


குக்கி சுப்பிரமணியம் கோவில்

குக்கி சுப்பிரமணியர் கோவில் இருக்கும் மலையின் பெயர் கடம்ப மலை. இது கடம்ப வம்சாவழியினர் ஆண்ட இடம் .

குக்கி சுப்பிரமணியர் கோவில் , நாக தோஷம் உள்ளவங்களுக்கு ,தோஷம் நீங்க ஏற்ற இடம் . ரெண்டு கோவில் இருக்கு. மறக்காம பழைய சுப்பிரமணியர் கோவிலுக்கும் போங்க. கோவில் வாசலில் கடம்ப ஆறு ஓடுகிறது. அழகு அந்த இடம். கடம்ப மலை ஏற உதவி செய்யும் ஆட்களும் அங்கு உள்ளனர்.




இது கோவா .கடற்கரை ஓரம் விடுமுறையை கடக்க விரும்பினால் கோவா ஏற்ற இடம். ஒன்றா இரண்டா ,பார்க்கும் இடம் எல்லாமே பீச் தான்.30 க்கும் மேற்பட்ட பீச் இங்கு உள்ளது. பெய்ஜிங் போனவுடன் ஒரு இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கங்க .( ஒரு நாள் வாடகை 300 ரூபாய் தான் ) 3 நாள் வாடகை 5 நாள் வாடகைக்கு தர்றாங்க. நீங்க ஊருக்கு திரும்பும் போது போன் பண்ணினா அவங்களே வந்து எடுத்துப்பாங்க. அது வரையிலும் நீங்க பயன்படுத்திக்கலாம்.

தென்னை மரங்கள் நிறைந்து நிற்க , அந்த கடலில் கால் நனைப்பது சுகம். ரம்யமா இருக்கும். குட்டி குட்டி மலை பாறைகள். அதில் விளையாடும் நண்டுகளும் ,மீன்களும் கையில் பிடிக்க ஆசையாய் இருக்கும்.ஆனால் முடியாது.

பீச் க்கு மட்டும் சுத்தாதீங்க .அருகாமையில் வரலாற்று கால கோட்டைகள் உள்ளன. டால்பின் பார்க்க , அதுங்க விளையாட்டை பார்க்க கடலுக்கு உள்ள கொஞ்ச தூரம் அழைச்சிட்டு போறாங்க . அழகு .

அப்புறம் போண்டாவில் ஒரு மூலிகை பண்ணை இருக்கு .அங்க போய் பாருங்க .எல்லா மூலிகை மரங்கள் குறித்தும் விளக்கம் தருவாங்க. அங்க விற்கும் எல்லா பொருள்களும் கலப்படம் இல்லாத பொருள்கள்.அங்க முந்திரி சாராயம் விக்கிறாங்க. குடிப்பதற்கும் இலவசமா கொஞ்சம் தர்றாங்க. ஒரு தனி நபர் 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் வாங்கி கொள்ளலாம். அவ்வளவுதான் அங்கிருந்து எடுத்து வர முடியும். ஊரை தாண்டி எடுத்து வர கூடாதுன்னு அந்த ஊர் சட்டம் சொல்லுது.

சனி கிழமை சாயங்காலம் , சந்தை போடுறாங்க .அங்க போங்க ! ஆனா எதுவும் வாங்காதீங்க .எல்லாம் கூடுதல் விலை. பேரம் பேசும் திறம் இருந்தால் பிரச்னை இல்லை.

இங்குள்ள சர்ச்சை எல்லாம் பாருங்க ! கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கும்.

ஆனா ஒன்னு மட்டும் மறந்துடாதீங்க ! ஏற்கனவே வெள்ளைய இருக்குறவங்க கறுப்பாகிடுவாங்க ! கருப்பா இருக்குறவங்க , கவலையே படாதீங்க ! இன்னும் கொஞ்சம் கருப்பு கூடும் .அவ்வளவு வெயில். குளிர் காலத்திலேயே தூக்கும்.வெயில் காலத்துல சொல்லவே வேண்டாம்.

( சின்ன வேண்டுதல் : பீச் க்கு போற ஆண் ,பெண் எல்லோரும் பீர் குடிச்சிட்டு கடலுக்குள்ள தூக்கி போடாதீங்க .பாவம் அங்குள்ள உயிர்கள் .)

கொஞ்சம் காஸ்ட்லீ .யாரும் ரொக்கமில்லா வர்த்தகம் அப்புடின்னு நம்பிக்கிட்டு கார்டு எடுத்துக்கிட்டு போகாதீங்க. எல்லாம் அங்க ரொக்கம்தான். wifi மட்டும் எல்லா இடத்துலயும் free .

போய் வா என்று சொல்லும் ஒரே ஊர் கோவா தாங்க ! போய்வாங்க ஒரு முறை!


Thursday, 9 March 2017

ஆரியர் யார் ?- எழுத்தாளர் பா.பிராபகரன் பார்வையில் !

எப்படி திராவிடம் என்ற சொல் தமிழில் இல்லையோ , அப்படிதான் ஆரியம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் இல்லை .

ஆரியர்கள் என்று தங்களை கூறி கொள்பவர்கள் , ஈரானியர்கள் .

பாரசீக மொழியில் ஆரியன் என்றால் ஈரானியன் என்று பொருள் .
ஈரான் என்றால் பாரசீக தேசம் என்று பொருள்.

இதன் அடிப்படையில் பாரசீகம் ,ஈரான் ,  ஆரியம் எல்லாம் ஒரே பொருள் கொண்டவை .


ஆரியர்கள் கூற்றுப்படி , பிராமணர்கள், க்ஷ்த்ரியர்கள் , வைஷ்யர்கள் ,மற்றும் சூத்திரர்கள் என்ற பிரிவுகள் உள்ளன.

ஆனால் இன்று வரை பிராமணர்கள் மட்டும் தான் சமஸ்க்ரிதத்தில் பழகிவருகின்றனர். பிற ஜாதியினருக்கு சமஸ்க்ரிதம் தெரியவில்லை .

எனில் பிராமணர்கள் மட்டும்தான் ஆரியர் எனப்படும் ஈரானியர்களா என்று சந்தேகம் எழுப்புகிறார் பிராபகரன் அவர்கள் !

பிரிஹ்யூ என்னும் மொழி இன மக்களின் கணக்கெடுப்பை 1871 ல் 125000 பேர். ஆனால் இன்று 250000பேர் . மேலும் இறந்து போன தாக எண்ணப்பட்ட ஹீப்ரு மொழி கூட இன்று வழக்கத்தில் வந்து விட்டது. அப்படி இருக்க , சமஸ்க்ரிதம் எனும் மொழி வளர்ந்திருக்க வேண்டும் அல்லவா ?

ஆனால் எந்த விதத்திலும் முன்னேற்றம் கொள்ளாத சமஸ்க்ரிதம் ஒருவேளை , கணக்கியல் மொழியாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறார். ( அதாவது இப்போதெல்லாம் நாம் பௌதீகம் , ராசாயனம் படிக்கும்போது பயன்படுத்தும் போர்முலா வாக இருக்கலாம் )

சமஸ்க்ரிதம் , எல்லா சடங்குகளுக்கும் , பயன்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு மொழியாக இருந்திருக்கலாம் .


நாகரீக தலைமை வகிப்பது யார் ?

சில பல ஆண்டுகள் அமைதியாக இருந்த உலகம் , 1500 களில் நாடு பிடிக்கும் விளையாட்டை ஆரம்பித்தது . இதனால் வெள்ளை இன மக்கள்தான் பெரிய மனிதர்கள் என்ற எண்ணத்திற்குள் வந்தனர். அந்த சமயம் இத்தாலியும், ஜெர்மனியும் தாமதமாக இந்த விளையாட்டை ஆட ஆரம்பித்தன .

வெள்ளையர்களின் பூர்வீக நாகரிகம் கிரேக்க நாகரீகம்,
கிரேக்கத்தின் பூர்வீகம் எகிப்து .
அங்கு இருப்பவர்களோ , கறுப்பர்கள் .
அவர்கள் வழிவந்த  நாகரீகத்தை ஜெர்மானியர்கள் ஒப்புக்கொள்ள வில்லை.

சரி சீனா நாகரிகம் கைகொடுக்குமா என்று தேடும் பொழுது , சீனர்கள் மற்றும் ஜெர்மானிய மக்களின்   உருவம்  வேறு வேறாக இருந்தது .

மிஞ்சி இருப்பது பாரசீகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த நாகரீகம் .

இப்போது இந்த மூன்றும் இணைந்தது  தான் ஆரிய நாகரீகம்.

ஏற்கெனவே ஈரானியர்கள் தான் பாரசீகர்கள் என்பது உலகம் அறியும் .
அதே பாரசீகர்கள் தான் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள்.
இவர்கள் வெள்ளை நிறம் மற்றும் அறிவு கோட்பாடுகள் பிடித்து போகவே ஜெர்மன் தன்னையும் , ஆரிய இனம் என்று கூறி கொண்டது.

(அன்று முதல் இந்திய ஆரிய இனம்
பெருமிதத்தின் உச்சிக்கே சென்று விட்டது )

இவர்களை தவிர இந்தியாவில் வாழ்ந்த ,பிற மக்கள் திராவிடர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் கூற ஆரம்பித்தனர் ஆரியர்கள் . ஒதுக்கி வைத்தனர்.

இப்போது தான் ஆரம்பிக்கிறது பிரச்னை.

1921ல் மார்ஷல் என்பவர் , ஹரப்பா மொஹஞ்சதாரோ இடங்களை கண்டறிந்து , அதற்க்கு சிந்து வெளி நாகரீகம் என்று பெயர் சூட்டினார். இது ஒப்பில்லா திராவிட நாகரீகம். இங்கு வாழ்ந்த மக்களை , குதிரையில் வந்த ஆரிய இனம் தெற்கு நோக்கி விரட்டி விட்டு , வடஇந்தியாவை ஆக்ரமித்துள்ளனர். அவர்கள் தான் ஆரியர் என்றார் .

இதனை ஒப்பு கொள்ள மனம் இல்லை யாருக்கும்.!

அதே சமயம் ,  ஆரியர்களின் வேதங்களிலும் சிந்து பகுதி மட்டுமே பதிவு செய்ய பட்டுள்ளது.

ஒருவேளை இவர்கள் சுமேரியர்களாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் பிரபாகரன் அவர்கள் .

சுமேரியன் - பாரசீகம் - ஈரானியன் - ஆரியன் - ஜெர்மானியன் - இத்தாலியன் 

 இவை எல்லாம் ஒன்றுதான் !

ஆரியன் என்றால் என்ன பொருள் ?

ஆரியன் என்றால்  நற்பண்பு கொண்டவர்கள்.
எல்லோரையும் விட மேலானவர்கள் !

என்று கூறுவது தவறான பொருள் !

ஆரியம் என்றால் குடிமகன் என்று பாரசீக மொழியும் லைசீய மொழியும் பொருள் தருகிறது.

எதோ ஒரு குலப்பெயர் . அவ்வளவுதான்.

அவர்கள்  கெட்ட குணம் கொண்ட ஒருவரை கூறுவதாக இருந்தால் கூட , ஆரிய என்ற வார்த்தையை சேர்த்தே பயன்படுத்துகிறார்கள்.

ஆரியன் என்றால் தங்கள் கூட்டத்தவன் என்று பொருள் !
அனாரியன் என்றால் வேறு கூட்டத்தை சேர்ந்தவன் என்று பொருள் !

ரிக் , யசூர் வேதங்களில் , குலத்தை குறிப்பிடவே ஆரிய என்று கூறுகிறார்கள்.
புரு வம்ச மன்னன் சுதாஸ் , தங்கள் குலத்திற்கு உதவி செய்த யாதவ மற்றும் இஷுவாகு குலத்து மக்களை அனாரியன் என்றே குறிப்பிடுகிறார்.

ராமன் இஷுவாகு குலத்தில் பிறந்தான்.
கிருஷ்ணன் யாதவ குலத்தில் பிறந்தான்.

இருவரும் ஆரியர்கள் அல்லர்.

பிற்காலத்தில் , சாம , அதர்வண , பௌத்த , சமண நூல்கள் ஆரிய புகழ் பாட ஆரம்பித்தது .

ஆர் என்னும் இந்தோ இரானிய சொல் , சாமர்த்தியமாக ஒன்று சேர்ப்பவர்கள் என்று பொருள் தருகிறது.

கிரேக்கம் மற்றும் லத்தின் மொழியில் ஆர் என்றால் , சுலபமாக இடம்பெயர்பவர்கள் என்று பொருள் தருகிறது .

அர்த்த சாஸ்திரம் என்பதும் கூட , பல்வேறு தகவல்களை ஒன்று திரட்டுவது என்றே பொருள் கொள்ளலாம்.

இதனை எல்லாம் அடிப்படையாக கொண்டு ,

ஆரியர்கள் என்பவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு ஆற்று படுத்தப்பட்டவர்கள் என்று பொருள் கொண்டால்,

ஆற்றியர்கள் என்று வழங்கப்பட்டு பிற்காலத்தில் மருவி 

ஆரியர்கள் என்று மாறி இருக்கிறது.

ஆரியர்கள் என்றால் ,
பிராமணர்கள் என்றால்
ஈரானியர்கள் என்றால்
பாரசீகர்கள் என்றால்
இத்தாலியர்கள் என்றால்
ஜெர்மானியர்கள் என்றால்

மேலானவர்கள் என்று பொருள் இல்லை !
தங்கள் தேவைகளுக்காக ஒன்று சேர்ப்பவர்கள் .

இவர்கள் எல்லோரும் பாபிலோனிய நாகரிகத்தை அடிப்படையாக கொண்டவர்கள் . பாபிலோனிய மற்றும் யூதர்களுக்கு காளைகளை சுத்தமாக பிடிக்காது . அது  தீய சக்தி என்றே கருதுகின்றனர் . காளைகள் யூதர்களுக்கு மிக முக்கிய எதிரி !

இப்போது நமக்கு புரியும் மாடு சார்ந்த பிரச்சனைகள் ஏன் நடக்கின்றன என்று !

samaskirutham க்கான பட முடிவு


Wednesday, 8 March 2017

விவசாயிகள் , தன்னை தானே வாழவைத்து கொள்ள வழிகள் !

பொருளாதார பயனற்ற திட்டம் இது ! - பகுதி 1 


பெப்ருவரி மாதம் 15 ம் தேதி இந்தியா பிரதமர் , ஹைட்ரோகார்பன் எனும் திட்டத்திற்கு கையெழுத்து போட்டார். இதில் 6 மாநிலங்களில் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உட்பட 31 இடங்களில் எடுக்க இருப்பதாக தகவல் தெரிவிக்க படுகிறது .

அவ்வாறு எடுக்க படும் ஹைட்ரோகார்பன் மூலம் இந்தியாவிற்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு 5000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.இதில் தமிழகத்திற்கு 10 % மும் , அதாவது 500 கோடி ரூபாயும் , அதில் ஒரு 10 % ஆகிய 50 கோடி ரூபாய் வருவாய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் போய்சேரும் .

வருமானம் என்ற அடிப்படையில் இதில் தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் இல்லை. அதே சமயம் , இதன் மூலம் இந்தியா பயன் பெரும் என்றால் எந்த கேள்வியும் யாரும் கேட்கபோவதும் இல்லை.

ஆனால் இந்தியாவிற்கும் இந்த திட்டத்தால் பெரிய பலன் இல்லை . காரணம் அடுத்த 15 ஆண்டுகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் தனியார் நிறுவனம் பெற போகும் வருமானம் பன்மடங்கு பெரும் . கிட்டத்தட்ட 30000 கோடியை தாண்டும் .

சில அறிவாளிகள் கூறுகிறார்கள் . இந்திய வருமானம் பெறுக போகிறது. மோடிஜி இந்தியாவை வல்லரசு ஆக்கப்போகிறார் என்று  !

ஆனால் அது உண்மை இல்லை. இந்தியா முதலில் , இந்த திட்டத்தை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும் ? தானே செய்யலாம் .
அதைவிடுத்து, தான் செய்ய போவதாக மக்களிடம் பொய் கூறி நிலங்களை வாங்கி , அதனை தனியாருக்கு தாரை வார்க்கிறது .

சரி தனியார் நிறுவனங்கள் இந்த ஹைட்ரொகார்போனை எடுத்து என்ன செய்யும் ?

இந்தியாவிற்கு விற்கும் . அதனை இந்தியா அதீத விலை கொடுத்து வாங்கும் !

எனில் அரசுக்கு நட்டம் .

ஏற்கெனவே நடைமுறை உள்ள நிலக்கரி  நிறுவனம் பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்று மோடிஜி கருப்பு பண ஒழிப்பு பற்றி பேசுகிறார். அதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்க படும் என்று கூறி சில உதவாத திட்டங்களையும் கொடுத்திருக்கிறார்.  ஆனால் அவருக்கு தெரியும் எங்கெல்லாம் கருப்பு பணம் இருக்கிறது என்று !

சரி , இந்த நிலக்கரி நிறுவனத்தில் என்ன நடக்கிறது ?

இந்த உலகத்திலேயே நிலக்கரி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு நம் இந்தியா .
இந்த உலகத்திலேயே நிலக்கரி அதிகம் இறக்குமதி செய்யும் நாடும் நம் இந்தியா தான் !

வியப்பாக இருக்கிறதா ?

ஆமாம் இந்த உலகமும் அப்படிதான் நம்மை வியந்து பார்க்கிறது ! இது எப்படி சாத்தியம் என்று ?

மேற்கு வங்கத்தில் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது . ஆனால் எங்கும் அது ஏற்றுமதி செய்யப்படுவதில்லை . ஆனால் ஏற்றுமதி செய்யப்பட்டு , வேறு நாட்டிற்கு சென்று , அதற்க்கு இடையில் இடைத்தரகர் இருப்பது போல் பேசி மீண்டும் இந்தியாவிற்கு வருவது போல் காட்டப்படுகிறது.

இதனால் இந்தியாவிற்கு எப்போதும் நட்டம் .ஆனால் இடைத்தரகர்கள் , கலால் வரி துறையினர் இப்படி பலபேருக்கு இதில் வருவாய் வருகிறது. இதன் மூலம் அதிக கருப்பு பணமும் சுற்றி வருகிறது .
இது இந்தியாவில் நடைபெற்ற , நடைபெறுகின்ற மிகப்பெரிய ஊழல் !

இப்படித்தான் , ஹைட்ரோகார்பன் திட்டமும் மாற இருக்கிறது.

அரசு தான் செய்யாமல் , தனியாரை செய்ய வைத்து ,
பிறகு அங்கிருந்து இறக்குமதி செய்து அதே காஸ் அதே நெடுவாசலுக்கு , பன்மடங்கு விலையில் வரும் . இது தான் மத்திய அரசின் திட்டம்.

எனவே இந்த திட்டத்தால் இந்தியா வல்லரசு ஆகும் என்று கூறும் அறிவாளிகளே தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள் . இந்த திட்டத்தால் பொருளாதார ரீதியாக 10 பைசாவுக்கு பிரயோசனம் இல்லை .

ஊழல் தான் பெருகும் . கருப்பு பணம் வளரும் !





பகுதி 2:

இந்த திட்டம் மக்களுக்கு பாதிப்பு தரும் . எவ்வாறு என்று பல விழிப்புணர்வு காணொளிகள் வந்து விட்டன.
பூமிக்கு அடியில் 2500 அடியில் துளை யிட்டு , அதில் 650 க்கும் மேற்பட்ட ரசாயன கலவைகளை கொட்டி , அதில் இருந்து ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்க படும். அப்படி எடுக்கப்படும்போது , அதில் இருந்து வெளிவரும் நஞ்சு , அருகில் உள்ள நீர்நிலைகள் முதல் விவசாய நிலங்களையும் பாதிக்கும். இதனை தொடர்ந்து உட்கொண்டாலோ , சுவாசித்தாலோ காசநோய் வருவது உறுதி .

இது 2010 முதல் நம்மாழ்வார் அய்யாவின் பரப்புரை ஆகும் . இப்படி சொல்வோரெல்லாம் அறிவாளியா ? விஞ்ஞானி யா என்று ஒரு கூட்டம் கேட்கிறது .

இது குறித்து விளக்கம் கொடுத்த நம்மாழ்வார் ஐயா,இயற்கை வேளாண் விஞ்ஞானி தான்  .

ஆகையால் , இந்த திட்டம் கைவிட பட வேண்டும் என்று பெப்ருவரு 17 ம் தேதி முதல் நெடுவாசல் மட்டும் இன்றி உலகின் எல்லா தமிழர்களும் போராடி வருகிறார்கள் .

ஆனால் இன்று வரை அரசு பதில் கூற வில்லை.

மாறாக ,

பாரதீய ஜனதாவை சேர்ந்த தமிழிசையும், பொன்ராதா கிருஷ்ணனும்,
H .ராஜாவும்

சரமாரியாக , தமிழக மக்களை தேச துரோகிகள் என்று கூறி வருகின்றனர்.

தமிழர்கள் தேசத்துரோகி எனில் தமிழிசை யார் ?


பகுதி - 3

இதற்க்கு முடிவு என்ன ?

போராட்டம் தொடங்கி , இதோ நெருங்கி விட்டோம் ஒரு மாதத்தை , ஆனால் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது.

மாநில அரசோ , உண்டு , உறங்கி மகிழ்ந்து வருகிறது .

எனில் , இந்த போராட்டத்தை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

அப்படியாயின் போராடும் முறையில் தவறு உள்ளது.

தண்ணிக்குள் நின்று போராட்டம்!

உண்ணாவிரத போராட்டம்!

பாடை கட்டும் போராட்டம் !

கோலம் போடும் போராட்டம் !

இது போன்ற போராட்டத்தால் யாருக்கு நட்டம் !

இந்த போராட்டத்தால் யாருக்கும் நட்டம் இல்லை விவசாயியை தவிர்த்து !

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது , எல்லா இளைஞர்களும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தனர். அது என்ன முடிவு ?

இனி பெப்சி கோக் போன்ற அந்நிய பானங்களை தொட மாட்டோம்.என்று !

இந்த செய்தி பிபிசி வரை ஒளிபரப்பானது .

எனில் , இந்த போராட்டத்திலும் , 

விவசாயிகள் 5 முடிவுகள் எடுத்தால் ,
மத்திய மாநில அரசுகள் , 
நெடுவாசல்  போராட்டத்தை திரும்பி பார்க்கும் !


முதலில் , விவசாயம் சார்ந்த எல்லா மானியங்களையம் , சலுகைகளையும் வேண்டாம் என்று  முடிவு எடுக்க வேண்டும்.

இரண்டாவது , அரசு விலை நிர்ணயம் செய்ய கூடாது .

மூன்றாவது கரும்பு உற்பத்தியை நிறுத்த வேண்டும். ஏனெனில் , ஒரு ஆண்டிக்கு விவசாயிகளுக்கு , கொடுக்கப்படும் இலவச மின்சாரம் 2851 கோடி ரூபாய் ஆகும். அதே போல் கரும்பு ஒரு டன்னுக்கு அவர்கள் கொடுக்கும் பணம் ரூபாய் 2600 . எனில் தமிழகம் முழுமைக்கும் உற்பத்தி செய்யப்படும் கரும்புக்கு இவர்கள் கொடுக்கும் மொத்த விலை
 208 கோடி ரூபாய் .

ஆக மொத்தம் மின்சார செலவு + உற்பத்தி விலை இரண்டையும் கூட்டினால் கூட 3100 கோடியை தாண்டாது . அனால் கரும்பை வாங்கி கொண்டு , அதன் மூலப்பொருள் களை கொண்டு தயாரிக்க படும் , டாஸ்மாக் வருமானம் 30000 கோடி ரூபாய் .

ஒவ்வொரு விவசாயியும் கரும்பு உற்பத்தியை நிறுத்தி விட்டு , வேறு புன்செய் பயிர்கள் விளைவிக்க முடிவெடுத்தால் , தமிழ்நாட்டின் எல்லா சாராய உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டி வரும் . ஏனெனில் , மூல பொருளுக்கென்று 10 பைசா செலவில்லாமல் இந்த சாராய உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அடுத்த மாநிலத்தில் இருந்து மூலப்பொருள் வாங்கி இந்த சாராய ஆலைகள் இயக்க மாட்டார்கள்.

இந்தியாவிலேயே கரும்பு உற்பத்தியில் 4 வது இடம் தமிழகத்திற்கு .

கரும்பு ஒரு முறை பயிரிட்டால் அடுத்த 3 அல்லது 5  ஆண்டு காலத்திற்கு அடி மரத்தை விட்டு விட்டு அறுவடை செய்தால் , மீண்டும் மீண்டும் விளையும் . அதற்க்கு பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் உரம் போட்டால் போதுமானது .இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் , அரபு நாடுகளில் பணியாற்றி மேலும் மேலும் பணக்காரர் ஆகிவிடலாம் என்று பரப்புரை செய்தே , கரும்பு உற்பத்தியை மத்திய மாநில அரசுகள் ஊக்குவிக்கின்றன. அப்படி செல்லும் விவசாயிகள் தான் அரபு நாடுகளின் கட்டிட கலையிலும் , விவசாயத்திலும் ஈடுபடுத்த படுகின்றனர்.

கரும்பு உற்பத்தி இனி நடக்காது , அரபு நாடுகளில் கூலி வேலை செய்யும் நம் விவசாயிகள் , உள்நாட்டில் மட்டுமே வேலை பார்ப்பார்கள் என்று முடிவு எடுத்தால் ,

மத்திய மாநில அரசுகள் ஓடி வந்து , தமிழக பிரச்சனைகளை தூர்வாரும்.

நான்காவது , இத்தனை நாள் போராட்டம் நடந்தும் , எந்த ஒரு கிராமத்திலும் டாஸ்மாக் விற்பனை குறையவே இல்லை.

நம்மால்  ஒரு டாஸ்மாக்கை கூட விட்டு தர முடியவில்லையாயின் , நம்  பிரச்சனைகள் தீராது .

ஐந்தாவது , யூரியா , பொட்டாஷ் DAP போடுவதை நிறுத்துங்கள் !
இயற்கை வழியில் அரிசி உற்பத்தி செய்யுங்கள் .

விதை நெல் வாங்காதீர்கள் !

IR 8, IR 20 போன்ற இஸ்ரேளுக்கு சொந்தமான இன்டர்நேஷனல் அரிசி ஆய்வு மையத்தின் எந்த ஒரு விதையும் வாங்காதீர்கள்.

பாரம்பரிய நெல் விதை இப்போதும் கிடைக்கிறது.

முடிவு எடுங்கள் ! உங்கள் கையில் தான் இந்த நாளைய சந்ததியே உள்ளது !

மாற்று வழி எல்லாம் அரசு செய்யாது!

அரசு என்ன செய்ய வேண்டும் என்று நாம் முடிவு எடுக்க கூடாது !

நாம் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமே நம் கையில் உள்ளது !

விவசாயிகளே இது உங்கள் வாழ்க்கை மட்டும் அல்ல!

தமிழக மக்களின் வாழ்க்கை !

வாழ வைப்பதும், வாழ்வை அழிப்பதும் உங்கள் கைகளில் !



Thursday, 9 February 2017

வாடிய குரூப் ( WADIA GROUP )

hms minden pictures க்கான பட முடிவு
                                                        HMS MINDEN கப்பல்


1735 ம் ஆண்டு டாக் யார்டு எனப்படும் கப்பல் கட்டும் தளத்தை ஆரம்பித்தது கிழக்கிந்திய கம்பெனி . 800 முதல் 1000 டன் எடைகளை சுமக்கும் திறன் வாய்ந்த கப்பல்கள் அங்கு தயாரிக்கப்பட்டன. அதன் கட்டுமான பணிகளுக்காக சூரத்தில் இருந்து பார்சி இனத்தை சேர்ந்த மர ஆசாரிகள் வரவழைக்கப்பட்டனர். அப்பணியின் தலைமை பொறுப்பை
லவ்ஜி நஸர்வான்ஜி வாடியா ( LOVJI NOSARWANJEE WADIA ) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது . அந்நிறுவனத்தின் கீழ் சில கப்பல்களை  உருவாக்கினார் வாடியா .


Wadia logo.PNG



இதன் அடிப்படையில் 1736 ம் ஆண்டுமுதல் வாடியா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாடியா 35 கப்பல்களை தனது மேற்பார்வையில் வைத்திருந்தார். அதில் 21 கப்பல்களை திறம்பட செய்து முடித்தார்.1750 ம் ஆண்டு வாடியாவும் அவரது சகோதரர் சோரபிஜி வாடியாவும் சேர்ந்து  உருவாக்கிய  பம்பாய் drydock ஆசியாவின் முதல் drydock ஆகும்  . 1774 ம் ஆண்டு அவர் மறைந்தார்.

அவரது மறைவிற்கு பின் அவரது மகன்கள் மனக்ஜி வாடிய மற்றும் போமஞ்சி வாடியா இருவரும் அந்த பொறுப்பை ஏற்றனர்.

ஜாம்செட்ஜி போமான்ஜி வாடியா தான் HMS MINDEN கப்பலை வடிவமைத்தார் .


1801 ம் ஆண்டு HMS MINDEN கப்பல் செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றது டாக் யார்டு நிறுவனம். அதன் அமைப்பை உருவாக்கி முழுமையாக மாற்றிய பெருமை வாடிய குடும்பத்தையே  சேரும். முழுவதுமாக மலபார் தேக்கில் கட்டப்பட்டது  தான் HMS MINDEN கப்பல் .


1811 பிரிட்டிஷ் கப்பல் படை உருவாக்கப்பட்டது, வாடியா குரூப்பின் துணையுடன் . இதன் பிறகு தான் 1814 ல் ஸ்டார் ஸ்பிங்க்லெட் பேனர் ( The Star-Spangled Banner ) எனப்படும் U .S ன் தேசிய கீதம் எழுதப்பட்டது .


இதுவரையில் 355 கப்பல்கள் வாடிய குடும்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது .




பம்பாய் டையின் கம்பெனி 1879 ல் நௌரோஸிஜி வாடியா என்பவரால்  உருவாக்கப்பட்டது.

காஸ் லைட் , தையல் இயந்திரம் மற்றும் ஸ்டீம் என்ஜின் உற்பத்தி பம்பாயில் அறிமுகம்   செய்தது வாடியா குடும்பம் .  இந்த பெருமைக்கு உரியவர் கர்செட்ஜீ வாடியா ஆவார்.


bombay realty க்கான பட முடிவு


பாம்பை ரியாலிட்டி ( ரியல் எஸ்டேட் )

பாம்பே ரியாலிட்டி எனும் நில மேலாண்மை நிறுவனத்தை நடத்துவதும் வாடியா குடும்பம் தான் . icc ( island city center ) என்ற பெயரில் பணக்கார மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன.



wadia bsn india ltd க்கான பட முடிவு







டைகர் பிஸ்கட் மற்றும் பிரிட்டானியா பிஸ்கட் இந்த நிறுவனத்தை சேர்ந்தது

.






கோ ஏர் எனப்படும் விமான சேவையும் செய்கிறது .




ஹைட்ரஜன் பேரொக்ஸிடே தயாரிப்பதும் இந்நிறுவனம் .


fashion magazine gladrags க்கான பட முடிவு


 பேஷன் magazine  க்ளாட்ராக்ஸ் எனும் பத்திரிகையும் நடத்துகிறது 





bbtc எனப்படும் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி நடத்துவதும் வாடியா குடும்பமே ! 1863 ல் பர்மா தேயிலைக்கு இருந்த மதிப்பின் காரணமாக வாலஸ் சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது வாடிய குடும்பத்திடம் உள்ளது .





DPI எனப்படும் டென்டல் products ஆப் இந்தியா என்ற நிறுவனத்தை , bbti நிறுவனத்தின் கீழ் நடத்துவதும் வாடியா குடும்பமே !


medical microtechnology ltd க்கான பட முடிவு





Medical Microtechnology Ltd என்ற பெயரில் மருத்துவ துறையின் அணைத்து பொருள்களும் உற்பத்தி செய்வது வாடிய குடும்பம் .

dina jinnah க்கான பட முடிவு
தீணாவும் ஜின்னாவும் !

 தற்போது வாடிய குரூப்பை நடத்துவது , நுஸ்லி வாடியா ஆவார்.

இவர் பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னா அவர்களுக்கும் பேரன் ஆவார்.

ஜின்னா விற்கு ஒரே ஒரு பெண் குழந்தை . அதுவும் இங்கிலாந்தில் பிறந்தது. அவர் பெயர் தினா . இவரது தாயார் ஒரு பார்சி பெண் .ரத்தன்பாய் பெட்டிட் .
இந்த தினா , வாடியா குடும்பத்தை சேர்ந்த நெவெள்ளி வாடியாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.



இந்த நெவெள்ளியே வாடியார்விக்கும் தினா ஜின்னாவிற்கும் பிறந்தவர்தான் நுஸ்லி வாடியா . இவர்கள் மும்பையில் வாழ்ந்தாலும் பிரிட்டிஷ் பாஸ்போர்டையே பயன்படுத்துகின்றனர்.

இவருக்கு துணையாக இவரது மகன்கள் நெஸ் வாடியாவும் ஜகாங்கீர் வாடியாவும் உள்ளனர்.


வணிக ரீதியாக மட்டும் அல்ல . பற்பல விஷயங்களில் சுவாரஸ்யங்கள் நிறைந்தது தான் வாடியா குடும்பம் .

-------------தொடர்வோம் .....

-----------------------------------------







வாடிய குடும்பம் என்று தான் இதை வழங்க முடியும். ஏனெனில் குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் ஆங்கிலேயர்களுக்கும் அதன் பிறகு சுதந்திர இந்தியாவின் வணிகத்திற்கும் முழுமையாக உழைத்துள்ளனர் . இதற்க்கு மற்றொரு காரணமும் உள்ளது . அர்தஷீர் கர்செட்ஜீ பற்றி படிக்கும் போதே நமக்கு புரியும்.


இவர் 1808 ம ஆண்டும் பிறந்தார் . இவரது தகப்பனார் கர்செட்ஜீ ரோஸ்டோம்ஜி வாடியா ஆவார்.


இவர்தான் முதன் முதலில் , மும்பையில் தையில் இயந்திரம், ஸ்டீம் என்ஜின் மற்றும் காஸ் லைட் ஆகியவற்றை அறிமுகம் செய்தவர்.

இவரது 14 ம் வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து கப்பல் கட்டும் துறையில் ஈடுபட்டார். அதன் விளைவு , பிரிட்டிஷாரிடம் இவருக்கு செல்வாக்கு அதிகரித்தது .


இந்த அர்தஷீர் இந்திய வணிக வரலாற்றின் முக்கிய புள்ளி ஆவார். பிரிட்டிஷாரிடம் இருந்த நல்லுறவு காரணமாக அடிக்கடி லண்டன் செல்ல நேரிட்டது. அதனால் இவர் லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி இட்டார். இவரை பல பிரிட்டிஷார் ஆதரித்தனர்.


ஒரு இந்தியர் என்ற முறையில் ,
முதன் முதலில் 1831 ல் இங்கிலாந்தின் பாராளுமன்றமான ராயல் சொசைட்டியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1837 ல் ராயல் asiatic சொசைட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதில் உள்ள உறுப்பினர்கள் ஆசியாவில் உள்ள அந்தந்த நாட்டு கலாசார , மொழி உரிமை மற்றும் கருத்துக்களை கூறலாம். இவர் இந்திய பிரதிநிதியாக 1837 ல் தேர்ந்தெடுக்க பட்டார்.

1841 ல் இங்கிலாந்து முழுவதும் சுற்றி வந்தார்.

1849 ல் அர்தஷீர் கர்செட்ஜீ (Ardaseer Cursetjee ) வாடிய இவர்தான் முதன்முதலில் அமெரிக்கா சென்றவர்.  

1855 ல் ஜஸ்டிஸ் ஆப் பீஸ் ( justice of peace ) சின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இங்கு அமைதிக்கான வழிகள் குறித்து பேசியுள்ளார்.

இவ்வாறு பல்வேறு தருணங்களில் முதல் இடத்தை பிடித்த அர்தஷீரின் வாரிசுகள்  , உறவு கலப்பு என்ற முறையில் முதலிடத்தை பிடித்தனர். இதனாலும் உறவு வழி கூற இயலாமல் வாடிய குடும்பம் என்று மொத்தமாக கூற வேண்டிய நிலை வந்தது .

இவருக்கு இந்தியாவில் திருமணம் நடந்தது . அந்த மனைவியின் பெயர் ஆவாபாய் .

இவர் இங்கிலாந்தில் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு பெண்ணுடன் வாழ்ந்தார். அவர் மெரினா பார்பர். இவருக்கு இரண்டு குழந்தைகள் .லௌஜீ அன்னி , மற்றும் குஸ்தாபி அர்த்தசீர் . இவர்கள் மும்பையில் பிறந்திருந்தாலும் இங்கிலாந்தில் வாழ்ந்தார்கள் .

ஆவா பாய் குழந்தைகளும் , மெரினா பார்பர் குழந்தைகளும் உறவாகவே இருந்தனர். அவர்களுக்குள் திருமணமும் செய்து கொண்டனர்.

ஆவாபாய் அர்தஷீர் இருவரின் பேரன் கர்செட்ஜீ  ரோஸ்டோம்ஜி வாடியா ,
இந்தியன் சிவில் சேவை தேர்வு எழுதுவதற்காக இங்கிலாந்து சென்றான். ஆனால் அங்கு , அவனுக்கு அம்மா  முறை கொண்ட மெரினா பார்பரின் மகள் லவ்ஜி அன்னியியை சந்தித்தான் . லவ்ஜி அன்னயே இவருக்கு அத்தை முறை . ஆனால் காதல் ஏற்பட்டது.

பின்னர் 1877 ல் அர்தஷீர் கார்செட்ஜீ காலமானார்.

அதன் பிறகு  1880 ல் கார்செட்ஜீ ரோசடோம்ஜி வாடியாவும் அவனது அத்தையும்  திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் குழந்தைகள் இந்தியாவில் பிறந்தனர்.

அவர்கள் வம்சாவழியினரும் , இந்த உறவு கலப்பை தொடர நேரிட்டது.

அந்த வம்சம் தான் இன்று மும்பை பங்கு சந்தையை ஆட்டுவிக்கிறது .

இந்திய பொருளாதார ஏற்ற தாழ்வுகளுக்கு காரணம் கொடுக்கிறது.

தொடர்வோம் இக்குடும்ப சுவாரஸ்யங்களோடு !-------------


---------------------------------------------------




Friday, 3 February 2017

ஆமைகளும் தமிழர்களும் !

1. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே , விலங்குகள் மட்டும்  இல்லாமல் மனிதன் வாழ்ந்த தடையங்கள் தமிழகத்தில் உள்ளன.


2.திருவான்மியூர் என்ற பெயர் ஆமையூர் என்றே வழங்கப்பட்டு பின் பெசன்ட் நகராக மாறியுள்ளது. இங்கு இப்போதும் ஆமைகள் வந்து செல்கின்றன .


3. ஆமைகள் சென்ற வழியை பின்பற்றி , நீரோட்டத்தில் சென்று தமிழர்கள் உலகம் முழுவதும் நிறைந்து வாழ்ந்துள்ளார்கள் .


4. நீர், நிலம் , காற்று , வான் , மண் என்ற ஐந்தையும் ஒரு பொருளாகவும் , அண்டவெளியை மற்றொரு பொருளாகவும் பார்த்தான் தமிழன்.


5. ஐந்து திணைகள் இல்லை. நீர், மலை , காடு இவை மட்டுமே தமிழர்களின் பூர்வீகம். மனிதனால் உருவாக்கப்பட்டது மருதம் எனும் வயல் வெளி . இயற்கை உருவாக்கியது பாலை நிலம்.



6. தமிழர்கள் உலகம் முழுவதும் பரவியதால் , உலகம் முழுவதும் இப்போதும் 18720 தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் உள்ளன .


7. ஒரு தொழிலாளரால் ஒரு மொழியை வளர்க்க முடியாது. முதலாளியாக இருந்தால் தான் அவனுக்காக , அவனது தொழிலாளர்கள் அம்மொழியை கற்கமுடியும் .

8. ஆமைகள் கடலின் பாதுகாவலன். மீன்களை பாதுகாக்கும் . குப்பைகளை களைந்து கடலை தூய்மை செய்யும்.


9. ஆமைகள் ஒரு இடத்தை தேடி பிடித்து அங்கு முட்டை இட்டால் அந்த இடத்தில சுனாமி பாதிப்பு இருக்காது.


10.ஆ மைகளுக்கும் ஆலா பறவைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ..
கடலில் பயணிக்கும் ஆமைகளுக்கு இந்த பறவைகள் தான் உணவு தருகின்றன.


11. ஆமைகள் வந்து போகும் வரை , சுனாமி பாதிப்புகள் இருக்காது.


12. இந்த தமிழ் மண் எலெக்ட்ரோ magnattaal சூழ பட்டுள்ளது. இங்குள்ள விலங்குகள் முதல் அனைவரும் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள்.


13. பறவைகள் வானில் , ஆமைகள் கடலில், சுறாக்கள் கடலின் அடியில் ஒரே அமைப்பில் செல்லும் திறன் படைத்தவை .


14. இந்த உலகம் விலங்குகளுக்கானது .


15. ஆதி கால மனிதர்கள் விலங்குகளை மதித்தனர். இன்று வெறும் இறைச்சியாக மட்டுமே பார்க்கிறோம் .


விலங்குகள் காக்கப்படவேண்டியவை !




---------------- ஒரிசா பாலு

--------------------------------------------------------


உலகின் ஆச்சரியங்களில் ஒன்று ஆமைகள் !

நம் முன்னோருக்கும் முன்னோர் இந்த ஆமைகள் !

இந்த  பகவத் கீதையெல்லாம் எடுத்து பார்த்தல் , ஆமைகள் பற்றி என்ன கூறி இருக்கிறார்கள் தெரியுமா ? 

ஏன் ஆமைகள் சிலை எல்லா இடங்களிலும் இருக்கிறது என்று கேட்டாலும் ஒரு பதில் தருகிறான் ஆரியன்.  

அந்த பதில் இதோ :

ஆமைகள் எப்போதும் , அதன் உடலைசுருக்கி ஓடுகளுக்குள் வைத்து கொள்ளும். அது போல நாமும்  புலன்களை அடக்க வேண்டும். அதை நமக்கு நினைவூட்டவே கிருஷ்ணா பெருமான் பகத் கீதையில் ஆமையை பற்றி பேசுகிறார் . 

இது முற்றிலும் பொய்.!

ஒரிசா பாலு அவர்கள் , கடல்சார் ஆய்வாளர். 
அவரது பேச்சு தூண்டிய ஆவலால் , ஆமைகள் பற்றியம் , தமிழர்களின் வாழ்வியல் பற்றியும் தேடினேன். 

அவர்  கடலுக்குள் உள்ள விந்தைகள் பற்றி பெருமிதமாக பேசுவார். அதில் தமிழனின் பங்களிப்பு பற்றியும் , எல்லோரையும் தமிழன் என்ற உணர்விற்குள் கொண்டு வந்து விடுவார் . அத்தனை கருத்துக்கள் தமிழர்கள் குறித்து அவருக்கு தெரியும். அதன் அடிப்படையில் கோவில்களில் இதனை குறித்து என்ன கூறி இருக்கிறார்கள் என்று தேடியதை பதிவிட்டு இருக்கிறேன்.


நானும் சிறு வயது முதல் கேட்டு இருக்கிறேன்.

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று !

இதன் அறிவியல் என்ன என்று அறியாத , நமக்கு பாடம் சொல்லி தரும் இடத்தில இருந்த வேறு இன மக்கள் , பல்வேரு வகையான தவறான கருத்துக்களையும், கதைகளையும் கூறி நம் அறிவை மழுங்கடித்து விட்டனர்.

உண்மையில் , ஒருவர வீடு காட்டும் முன் முதலில் ஆமையைத்தான் உள்ளே விடுவார்களாம். கட்டிய பிறகு தான் மாடு . இன்று நாம் ஆமையை மறந்து விட்டோம்.

ஆமை நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர் .அறிவின் உச்சம். அது நீரோட்டம் நோக்கி மட்டுமே போகும். எதிர் திசையில் பயணிக்காது. அந்த வகையில் , ஒரு வீடு  கட்டுவதற்கு முன்னதாக ஆமையை விட்டால் அந்த பகுதியில் உள்ள நீரோட்ட பகுதியில் மட்டுமே பயணிக்கும். மக்கள் அந்த பகுதில் வீடு  வாசல் வைத்து கட்ட மாட்டார்கள். 

நீரோட்டத்தை தடுத்து வீடு காட்டினால் வெள்ளம் வரும் போது , வீட்டிற்குள் நுழையும். நம் வீடு அழிந்து விடும். 

இதனை தான் ஆமை புகுந்த வீடு விளங்காது என்று கூறி உள்ளார்கள் .

சென்னையின பெரு வெள்ளத்திற்கு இதுவே பிரதான காரணம். நம் அறிவை குழப்பம் அடைய செய்யும் சில வாஸ்து சாஸ்திரத்தை தவறாக படித்த வித்தகர்கள் , கிழக்கு மேற்காக வீடு கட்டு என்று பரப்புரை செய்து, உலகிற்கே அறிவியல் சொல்லி தந்த தமிழ் இனம் , அழிவில் அடிக்கடி சிக்கி கொள்கிறது .

மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி தான் நீர் பாயும். எனவே கிழக்கு மேற்காக வீடு கட்ட கூடாது. வடக்கு தெற்காகத்தான வீடு கட்ட வேண்டும்.

தஞ்சையின் எல்லா வீதிகளும் வடக்கு தெற்காக மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அங்கு வராத வெள்ளத்தையா சென்னை பார்த்து விட்டது? சென்னைக்கு வந்தது வெள்ளம் அல்ல. தேங்கிய நீர்.

சென்னையில் உள்ள வீடுகள் எல்லாம் , 

"ஆமை புகும் வீடுகள் தான் "

சரி ,

இதை தான் முன்னோர்கள் விளக்க வேண்டி எல்லா கோவில்களிலும் ஆமை சிலை வைத்து அதன் பின்னர் நந்தி சிலையை வைத்துள்ளார்கள். ஆனால் நாம் தமிழ்நாட்டில் இதை பார்க்க முடியாது. ஏனெனில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே எதோ காரணத்தால் , நம் முன்னோர்களே சில விஷயங்களை மறைத்து வைத்து விட்டனர்.

எல்லா கோவில்களிலும் நீங்கள் பார்க்கலாம், நந்திக்கு முன்பு ஒரு சிறு கல்  எந்த வித சிலையும் இன்றி இருக்கும். அது குறித்து யாரும் விளக்கம் தருவது இல்லை. அதையும் தாண்டி கேட்டால் , ஒரு சிறு நந்தி செய்து விட்டு தான் இந்த பெரிய நந்தி செய்வார்கள். அந்த சிறு நந்தி இருந்த இடம்தான் இது என்று கூறுவர் . அனால் அது உண்மை இல்லை. எனக்கு இது குறித்து தெரியாது என்று கூறுவதில் பிராமணர்களுக்கு எப்போதும் விருப்பம் இல்லை. எல்லாம் தெரியும் என்று காட்டி கொள்ளும் முயற்சியில் பல தவறான தகவல்களை கொடுத்துள்ளனர்.

இதோ தமிழ் நாடு தாண்டி , ஆமையும் , நந்தியும் உள்ள சிவாலயங்கள்



இது ஜெஜூரி கோவில் , பூனே, மஹாராஷ்டிரா மாநிலம்.இந்தியா


nandi statue with tortoise க்கான பட முடிவு

சோமநாத குடி , லட்சுமீஸ்வரர்.- கர்நாடகா .
சோமேஸ்வரர் குடி அல்லது சோமா லிங்கேஸ்வரர் குடி.



nandi statue with tortoise க்கான பட முடிவு
அகப்புரா  - அகப்பூர் கர்நாடகா


கேரளத்தில் எல்லா கோவில்களிலும் நாம் பார்க்க  முடியும் கோவில் கொடி கம்பம் முதல் விளக்கு கள் வரை எல்லாம் ஆமையின் மீது தான் அமைந்திருக்கும்.




செம்ம நாத  மகேஸ்வர கோவில் - கேரளம் .



காலபகவதி கோவில் - கொடுங்கோலுர்  - கேரளம்.





அது மட்டும் அல்லாமல் , நாம் கடல் கடந்து பயணித்தோம். அதற்க்கு அடிப்படையாக அமைந்தது மற்றும் வழிகாட்டியாக அமைந்தது இந்த ஆமைகள் தான். எங்கு சென்றாலும் , தனக்கு வழிகாட்டிய ஆமை சிலையை அங்கு அமைப்பதை வழக்கமாக கொண்ட தமிழர்கள், காரணம் கூறாமல் விட்டு விட்டார்கள் போலும்.

அதுதான் இன்று சீனாவில் ட்ராகனாக மாறி உள்ளது.







பார்பீடன் நகரம் . பீஜிங். சீனா .




சிங்கப்பூர் விலங்கியல் பூங்கா


nandi statue with tortoise க்கான பட முடிவு

நான்கு கைகளுடன் யமுனா தேவி நாகர்கள் அருகில் இருக்க ஆமையின் மீது பயணம் செய்கிறாள் .




ஜெர்மனி . பெர்லின் .டௌன்ஸ்கேப்



ஆமை வடிவ செயற்கை நீர்வீழ்ச்சி . ரோமாபுரி .



காளிபகவதி கோவில் - கொடுங்கல்லூர் - கேரளம்


இலக்கிய கோவில், வான் மிஐ - ஹனோய் - வியட்நாம்




பெலிஸி - சென்ட்ரல் அமெரிக்கா


இது அமை வடிவில் உள்ள மலை அல்லது ஆமைகள் வாழ்ந்த மலை-
தாய்லாந்து.

உலகம் முழுக்க ஆமைகள்  குறித்து எதுவும் சொல்லாமலேயே அதன் புகழ் பரப்பிய தமிழன்,

அதன் நுடபங்களை எல்லோரிடமும் மறைத்திருக்கிறான் எனில் ,  அமைகளுக்கு எதோ அழிவு நேர இருந்திருக்கிறது.  அவற்றை காப்பாற்ற அவன் எடுத்த முயற்சிகளை நாம் வீணாக்காமல் ,

நம் பெருமைகள் அறிந்து ஆமைகளை அழிவில் இருந்து காப்போமாக !

காளைகள் மட்டுமே நம் குலம் காத்தவை அல்ல.

ஆமைகளும்தான் !



4-2-2017 அன்று காலை 4 மணிக்கு சென்னை காமராஜர் துறைமுகத்தில் , இரண்டு கப்பல்கள் மோதி கொண்டன .

எந்த உயிர் சேதமும் இல்லை .என்று கூறுகிறார் காமராஜர் துறைமுக தலைவர்.

எனில் அங்கு செத்து கிடைக்கும் ஆமைகள் உயிர்கள் இல்லையா ?

கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி 2017 அன்று முதல் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தின் அடிப்படையில் , ஜல்லிக்கட்டு சட்டமாக்க பட்டது .

இதில் குடியரசு தலைவர் 27.1.2017 அன்று கையொப்பம் இட்டார் .

ஆனால் அதன் விளைவுகளை தமிழகம் மறுநாள் காலை எண்ணூர் துறைமுகத்தில் சந்தித்தது .

ஆம் ,


காளைகளை காப்பாற்றி விட்டு , ஆமைகளை இழந்து விட்டது தமிழகம்!


இடித்த கப்பல் பிரிட்டிஷ் ராணிக்கு சொந்தமானது. MT B .W .MAPLE . இதன் கொடி இங்கிலாந்து நாட்டு கொடி 
மற்றொரு கப்பலின்  பெயர் MT .dawn காஞ்சிபுரம் . இதன் கொடி இந்தியா கொடி .ஆனால் இது LPG கொள்கையின் கீழ் வேறொரு நாட்டுடன் பதிய பட்டுள்ளது 
நடந்தது விபத்து இல்லை . விபத்து நடந்ததாக ஈரானில் பதியப்படவில்லை என ஒரு தகவல் கூறுகிறது . எனில் என்ன நடந்தது காமராஜர் துறைமுகம் மட்டுமே அறியும் ! கப்பல்களுக்கு எந்த சேதமும் இல்லை . ஆனால் கழிவால் நிறைந்தது வங்காள விரிகுடா ! 







செத்து மிதந்தன ஆமைகள் !
காளைகள் பற்றி மட்டும்தான் காப்பாற்றினோம் 
ஆனால் ஆமைகளை இழந்து விட்டோம் !

இந்த இரண்டும் தமிழரின் இவ்விரு கண்கள் !
எவனுக்கோ தெரிகிறது !
எதற்கு பதில் எதை அழிக்க வேண்டும் என்று !

ஆனால் நமக்கு ? 


ஆமைகள் நம்மை பார்த்து கேட்ப்பது போல் உள்ளது !

தமிழா எனை காக்க மாட்டாயா ?




Thursday, 26 January 2017

அரிசியும் மருந்தும்

சில சமயங்களில் விஷம் மருந்தாகிறது
பல சமயங்ககளில் மருந்துதான் விஷமாகிறது.

இவை நமக்கு வேண்டாம்.
உணவையே மருந்தாக்குவோம் என்கிறது தமிழ் மரபு .

நாம் உண்ணும் அரிசியே எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.
ஆனால் நாம் உண்ண வேண்டிய அரிசி எதுவென இன்று நமக்கு தெரியாமல் போனதுதான் வருத்தம்.

இப்போது தெரிந்து கொள்வோம் .

இந்தியாவில் மட்டும் லக்ஷக்கணக்கான நெல் ரகங்கள் ஒரு காலத்தில் இருந்துள்ளன.

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் வேலையை அடி முதல் முடி வரை காட்டியதாலும் , சுதந்திரத்திற்கு பிறகு அவன் வேலையை தொடர்ச்சியாக நம்மால் தேர்தெடுக்கப்பட்ட இந்தியர்களே பசுமை புரட்சி என்ற பெயரில் செய்ததாலும் ஏறக்குறைய எல்லா நெல் ரகங்களையும் இழந்து விட்டோம் 

மீண்டும் திரு .நம்மாழ்வார் அவர்களின் முயற்சியாலும் திரு.ஜெயராமன் மற்றும் திருமதி .உஷா அவர்களாலும் கிட்டத்தட்ட 600 நெல் ரகங்கள் மீட்கப்பட்டுள்ளன .

அத்தைகைய நெல் ராகங்கள் அனைத்தும் மருந்தே.!

அவற்றில் ஒரு சில:rice pic க்கான பட முடிவு


மாப்பிளை சம்பா :
     உடலை பலபடுத்தும் மாமருந்து .
திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

கவுணி அரிசி :
     புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி .
இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .

சிவப்பு கவுணி அரிசி :
     புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி .
இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது .

குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .

சேலம் சன்னா :

     கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய அரிசி .
குழந்தை பேரு நன்முறையில் நடக்கும் .
களைப்பில்லாமல் வேலை செய்ய உதவும் .
இது நாய் கடி விஷத்தை முறிக்கும் .

பூங்காற் அரிசி :

     மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி .
தாய்பால் சுரக்கும் .

கட்ட சம்பா அரிசி :

    நோய் எதிர்ப்பு சக்தி தரும் .


சிங்கினி கார் அரிசி :
     எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி .
உடல் நலம் பெற உதவும் .

இலுப்பைபூ சம்பா அரிசி :

     சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து .
நரம்பு பிரச்சனையின் மருந்து .

காட்டுயானம் அரிசி :

     இந்த அரிசியில் காஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .

சூரகுருவை அரிசி :

     நோய் எதிர்ப்பு சக்தி தரும் .

பனங்காட்டு குடவாழை அரிசி :

     தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி .
அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் .

கருடன் சம்பா :

     நோய் எதிர்ப்பு சக்தி தரும்.
சாப்பாடு மற்றும் பலகார அரிசி .

கருங்குறுவை அரிசி :

இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம் 
    
 இது ஒரு மாமருந்து.
இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து .

குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து.

உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது .

இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு 'அன்ன காடி 'என்று பெயர் .இது காலராவிர்க்கான
மருந்து .

இது கிரியா ஊ க்கியாக உள்ளது .


கார் அரிசி :
 
     சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் களுக்கும் மருந்தாகும்.

தங்க சம்பா :

     இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.

தூயமல்லி அரிசி :

     மேல குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி . கட்ட சம்பா தவிர்த்து .
தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது .
மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி .
தெவிட்டாத , நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி .

இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது.

மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது .

பாரம்பரிய அரிசி உண்போம் . உடலை வளர்ப்போம் . உயிரை காப்போம் .

( தொகுப்பாளர் ரா. பொன்னம்பலம் அவர்களின் 'நெல் அதிகாரம் 'என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது )

மேற்காணும் அரிசி வகைகள் அனைத்தும் , எல்லா இயற்கை உணவு அங்காடிகளில் கிடைக்கிறது . விலை சற்று அதிகம் . மருத்துவரிடம் கொடுப்பதில் பாதியை விவசாயிக்கும் கொடுக்கலாமே !


Wednesday, 18 January 2017

பத்திரிகைகள் vs சமூக வலைத்தளங்கள் !

FOURTH எஸ்டேட் VS FIFTH எஸ்டேட்



கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் மட்டும் அல்ல , உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு வேண்டும் , என்றும் அதன் வழியாக காளை மாடுகளும் அதன் மூலம் அடுத்த தலைமுறையும் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு , போராடி கொண்டு இருக்கிறார்கள் .

இந்த தருணத்தில் இந்த  FOURTH எஸ்டேட் பற்றி தெரிந்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன்.

இந்தியாவை பொறுத்த வரை FOURTH எஸ்டேட் எனப்படுவது பீரொக்ரசி
 ( BEAUROCRACY ) அப்போ மீதி 3 எஸ்டேட் என்னனு கேட்காதீங்க ? அது இந்தியாவின் ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இப்படி மறைத்து வைக்க பட்ட விஷயங்களைத்தான் , சிலர் கையில் வைத்து கொண்டு இந்தியாவில் தவறான ராஜ்ஜியம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அதை விடுங்க ! நாம் இது குறித்து பின்பு பேசுவோம்!

இப்போ உலக அளவில் FOURTH எஸ்டேட் என்றால் அது பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் தாங்க !

இது எப்போது அறிவிக்கப்பட்டது என்று கேட்டால் நாம பிரெஞ்சு புரட்சி பற்றி பேச வேண்டும் .

பிரெஞ்சு புரட்சி நடைபெற்றது மே 5 1789 முதல் நவம்பர் 9 1799 வரை தாங்க !

அது என்ன பிரெஞ்சு புரட்சி என்றால் மக்களாட்சி கோரிக்கையின் அடிப்படை போர் இது. இதை நடத்தியவர்கள் jews இன மக்கள். அவர்கள்தான் இன்று அனைவரையும் ஆள துடித்து கொண்டு இருக்கிறார்கள் .





இதில் முதல் எஸ்டேட் என்று வழங்கப்பட்டது கில்லர்ஜி ( CLERGY) எனப்படும் மதகுருமார்கள் பேசும் சர்ச்சுகள் .போராட்டம் என்ற உணர்வை தூண்டிவிட்டது இந்த சர்ச்சுகள்தான் . ஆனால் நேரடியாக இல்லை. ஞாயிறு தோறும் சர்ச்சுக்கு வர வேண்டும் என்ற எழுதப்படாத கட்டளை , அன்றுதான் உருவாகியது . அங்கு பாதிரிமார்கள் அவர்களுக்கு கொன்செல்லிங்
( COUNSELING ) என்று சொல்லப்படும்  மூளை சலவை செய்வார்கள். இதை நன்மை என்றோ , தீமை என்றோ எடுத்து கொள்ளலாம். இந்த உலகை வெகு காலம் வரை ஆட்டி படைத்தது இந்த மதகுருமார்கள்  தான் .



2 வது  எஸ்டேட் என்றால் நொபிலிட்டி . ( NOBILITY )இதில் கூட்டம் போட்டு மக்களுக்கு அறிவுரை மற்றும் கட்டளைகள் பிறப்பித்தது பணக்கார வர்க்கம்.
பணக்கார வர்க்கம் தனக்கு தேவையான போது எப்படி எல்லாம் மக்களிடம் பேசும் என்பது நாம் சொல்ல தேவை இல்லை .

3 வது எஸ்டேட் காமன்மேன்(  COMMON MAN )எனப்படும் நம்மோடு கலந்து விட்ட மக்கள் கூறும் கருத்துக்கள் . இவைதான் மக்களை ஆட்டிப்படைத்தவை .பிரெஞ்சு புரட்சி வரை .

4 வது எஸ்டேட் எனப்படும் பத்திரிக்கைகள் , பிரெஞ்சு புரட்சியில் சாதனை புரிந்தன .

இந்த 4 ஆவது எஸ்டேட் தான் நேற்று வரை , நமக்கு தகவல்கள் கொடுத்தன.

மேற்காணும் நான்கு எஸ்டேட்டுகளும் நம் நாட்டின் சுதந்திர போராட்ட காலத்திலும் நல்லவையாகவும், கெட்டவையாகவும் செயல்பட்டன.

ஆனால் 


இன்று 5 வது எஸ்டேட் உருவாகிவிட்டது.

அது தான் சமூக வலைத்தளங்கள் .ப்லோகுகள் 






இதோ ஜல்லிக்கட்டு போராட்டம் !
உலகெங்கும் உள்ளவர்களை , தமிழ்நாட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

இந்த 5 வது எஸ்டேட்டை முறியடிக்க ,மற்ற 4 எஸ்டேட்டுகளும்
தனது எதிர் ப்பை தெரிவித்து வருகின்றன.

முக்கியமாக, சர்ச்சுகள் , காளை த்திருவிழா கிறிஸ்தவ மதத்திற்கு ஆபத்து என்று போராடுகிறது.

பணக்காரர்களோ தனது லாபம் பாதிக்க படும் என்று சட்டத்தை வளைத்து போராடுகிறார்கள்.

இதில் அரசியல் பேசுபவர்களும்,

இவர்களுக்காகவே வாழ்ந்த பத்திரிகைகளும் ,

சமூக வலைத்தளங்கள் மீது எங்கேனும் குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று போராடுவதும் , அதற்காக தவறான செய்திகளை தருவதும் என்று வழக்கமாக கொண்டுள்ளன.

இது வெல்லும் !

வென்றால் 

தொழிற்புரட்சி தோற்கும்  

புசுமை புரட்சி தோற்கும் 

அரசியல் தவறுகள் தோற்கும் 

தோற்கட்டும் இதுவரை ஆண்ட நான்கு எஸ்டேட்டுகளும் !

வெல்லட்டும் 5 ம எஸ்டேட் !

வெற்றுக்கான போராட்டம் அல்ல இது 

வெற்றிக்கான  போராட்டம் 

வாழ்க 5 ம் எஸ்டேட்! 

வளர்க தமிழும், தமிழனும் !


Tuesday, 17 January 2017

சினிமாவை விரட்டிய ஜல்லிக்கட்டு !

Peta வை எதிர்த்தும், ஜல்லிக்கட்டு நடத்த கோரியும் மதுரை அலங்காநல்லூரிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் நேற்று காலை ( 16 . 1.2017 ) முதல் நடைபெறுகிறது.

இது காளைகளுக்காக 
இளங்காளையர் நடத்தும் போராட்டம்!
சமூக வலைத்தளங்கள் 
சாதித்த போராட்டம்!
தமிழ்நாடு குறித்து 
அரசியல்வாதிகள் எல்லோர் மனதிலும் 
சலனத்தை ஏற்படுத்திய போராட்டம்!
இந்த சலனம் தான் சுப்ரமணிய சாமி போன்றோரை 
தமிழ் மக்கள் குறித்து 
கேவலமாக பேச தூண்டியது!
அந்த கேவலமானவர்கள் இப்போ நமக்கு 
வேண்டாம் !











இந்த போராட்டத்திற்காக ,
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பேரவையினர் 
அழைப்பு விடுத்து இருந்தனர். அதன் அடிப்படையில் 
தமிழ்நாடு முழுக்க இளைஞர்கள் குழுமி 
மிகுந்த அமைதியுடனும் 
நீருமின்றி , சோறுமின்றி 
வாடிவாசலில் கூடி 
போராடும் போது , இதை சிறு சலனமென நினைத்து 
காவல துறையை ஏவிவிட்டு 
வேடிக்கை பார்த்த தமிழக அரசு , மத்திய அரசு 
காவல்துறையும் கூட 
மக்களின் மனதில் இருந்து தூக்கியெறிய பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க !

நேற்று வரை ,
இது குறித்து பேசாத நடிகர் கூட்டம்,
அரசியல் கூட்டம் திடீரென ,
எதோ கோமாவில் இருந்து எழுந்ததுபோல் 
வாடிவாசல் நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது.

கருணாஸ்  என்றும் நடிகன் 
தற்போது, ஜெயலலிதாவால் சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்கப்பட்ட 
இந்த கருணாஸ் 
இரவு 11.50 மணிக்கு , 
கடுங்குளிரில் போராட்டத்தில் இருந்த மாணவர்ககளை 
சந்தித்து பேசுகிறார்.








பிறகு விடியற்காலை அங்கிருந்த மாணவர்கள் 
காவல்துறையால் கைது செய்யப்பட 
இத்தோடு இந்த போராட்டம் முடியப்போகிறது 
என்று எண்ணிய நடிக கூட்டம் , அரசியல் கூட்டம் 
அதிர்ந்து போக ,
கைது செய்தவர்களை ,விடுவிக்க கோரியும் 
பீட்டாவை தடை செய்ய கோரியும் 
மீண்டும் மாணவர்கள் 
தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் 
சென்னையின் மெரினாவிலும்
போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக 
சுடாலின் போராட்ட காலத்திற்கு வருகிறார்!
வாடிவாசலுக்கு 
இசை அமைப்பாளர் பிரகாஷ் குமார் 
வருகிறார்!
சரத்குமார் 
வருகிறார்!
சூர்யா ஆதரவு தருகிறார்!
ஆர்யா மன்னிப்பு கேட்கிறார்!
திரிஷா , நான் தவறாக எதுவும் பேசவே இல்லை என்று மழுப்புகிறார்!
சீமான் , அமீர், கவுதமன் 
இவர்களெல்லாம் ஏற்கெனவே களத்தில் இருந்த போதும் 
வாடிவாசலிலேயே தங்குகிறார்!

இன்னும் பலர் 
வாடிவாசல் நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறார்!

சொல்ல முடியாது!
ரஜினிகூட 
நாளை களத்தில் 
இருக்கலாம்!

சினிமா மோகத்தில் ,
மிதந்த அந்த பழைய தலைமுறை இல்லை இது!

அவர்கள்கூட ,
சினிமாக்காரன் ஒரு துரோகி என்று தெரியாமல்தான் 
ரசித்தான் !

இனி அதுவும் நடக்காது !
சினிமா உலகமே 
உன் நடிப்பை எல்லாம் 
திரையோடு நிறுத்தி விடு !
இல்லையேல் 
திரைக்கு பின்னால் கூட 
நீ நிற்க 
இடமில்லாமல் செய்வோம் !
இது ரஜினி பார்த்த கூட்டம் இல்லை!
எம்ஜிஆரை ரசித்த கூட்டம் இல்லை !
ஜெயலலிதாவை அரியணையில் 
அமரவைத்து கூட்டம் இல்லை!

தனித்தமிழ் கூட்டம்!
தன்மான கூட்டம்!
தன்னம்பிக்கை கூட்டம் !
தமிழையும் வாழவைத்து 
தமிழோடு சேர்ந்து 
தன தலைமுறையை 
வாழவைக்க போராடும் கூட்டம்!

காளைகளும் ,
எம் இனம்!
அதை வாழவைக்க போராடும் 
இந்த போராட்டத்தில் 
சினிமாவே 
மிதிபட்டு நசுங்கிவிடாதே !

சினிமாவே !
மறந்து விடு தமிழர்களை!
ஓடிவிடு 
தமிழகத்தை விட்டு  !



Monday, 16 January 2017

இந்தியாவின் பூர்வீக நடனங்கள்

wangala laho க்கான பட முடிவு


இந்த நடனம் வங்காள  லஹோ எனப்படும் மேகாலயா மக்களின் பூர்விக நடனம் .


tippani dance க்கான பட முடிவு

இது திப்பாணி நடனம் . குஜராத்தி மக்களின் பூர்விக நடனம் .




Koodiyattam


இது கூடிஆட்டம் அல்லது கூத்து ஆட்டம்.கேரளா மக்களின் பூர்வீக நடனம் .
அதாவது தமிழ் கலாசாரம் . கூத்து என்றால் நாடகம் என்று பொருள். ஆட்டம் என்றால் ஆடுதல் என்று பொருள் . இதன் கட்டமைப்புபிற்காலத்தில் மாற்றப்பட்டது.


sadir dasi attam க்கான பட முடிவு

இதோ  இது தான் சதிர் ஆட்டம். இது எந்த ஊர் நடனம்  தெரியுமா ? தமிழ்நாட்டின் பூர்வீக நடனம். அனால் இன்று இதன் பெயர் மாறி விட்டது . அதன் பெயர் பரதநாட்டியம். மாற்றியவர் ருக்மிணி தேவி  அருந்தலே . 1935ம் ஆண்டு வரை இதன் பெயர் சதிர் ஆட்டம் தான். அம்மையார் இதன் பெயரை பாரத நாட்டியம் பெயர் மாற்றி , இந்தியாவிற்கு சொந்தமாக்கினார் . அருந்தலே எனும் பிரிட்டிஷாரை மணந்தார். இவர் 1935ல் விலங்குகள் நல அமைப்பின் உறுப்பினர். ருக்மிணி தேவியும் விலங்குகள் மீது    அன்பு கொண்டவர். த்ரிஷா போல் !



 பாவ்ரி ஆட்டம் . மகாராஷ்டிரா மக்களின் நடனம். இவர்கள் பாம்பாட்டிகள் .


இது தெறடாளி நடனம். ராஜஸ்தானின் நடனம் .


Tuesday, 10 January 2017

ப்ளூ சிப் கம்பெனிகள்

 ப்ளூ சிப்  என்றால் , தரமானது . நீண்ட வாழ்வு கொண்டது என்று பொருள்.

அப்போ ப்ளூ சிப் நிறுவனங்கள் என்றால் , நமக்கு புரிந்திருக்கும்  நல்ல நிறுவனம். தரமானது என்று !

இதை பொருளாதார அடிப்படையில் இப்படி கூறுகிறார்கள் . ப்ளூ சிப் என்ற அடிப்படையில் ஒரு நிறுவனம் வருகிறது என்றால் அதன் லாபம் அதிகமாக உள்ளது . அந்நிறுவனத்தில்  நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் எந்தவித பொறுப்பும் ( கடனும் ) இல்லை என்று அர்த்தம்.

இந்த பொருளியல் கோட்பாடுகளின் அடிப்படையில் , ப்ளூ சிப் நிறுவனங்களில் தைரியமாக நாம் பங்குகளை ( shares )  வாங்கலாம் . அதன் டிவிடெண்ட் ( லாபம் ) குறையாது . மற்றும் பங்குகளின் விலையும் வீழ்ச்சி அடையாது .

இந்தியாவில் உள்ள தலை சிறந்த 10 ப்ளூ சிப்  நிறுவனங்களின் பெயர்கள் இதோ : ( இது 30.4.2015 அன்று இருந்த நிலவரப்படி )

1. T C S ( டாடா கன்சுலேட்டன்சி சர்விஸ் )

டாடா நிறுவனம் சுதந்திரம் போராட்டம் நடந்த காலத்திலும் , சுதந்திர இந்தியாவிலும் கோலோச்சி இருப்பது இந்நிறுவனம். இந்தியாயாவின் பல்வேறு மலை பிரதேசங்கள் இதற்க்கு சொந்தம் . எப்படி ? இயற்கை ஒரு தனிப்பட்ட நபருக்கு சொந்தமாகும் . அருவி எல்லாம் சொந்தமாகுமா என்ன ? கட்டிட மூலப்பொருள்கள் அனைத்தும் உற்பத்தி செய்கிறது .
தேயிலை உற்பத்தி பல மலைகளை சூழ்ந்து நிற்கிறது . நம்மாழ்வார் கூறுகிறார் , என்று தேயிலைக்காக மலைகளின் மீது இருந்த காடுகள் அழிக்கப்பட்டனவோ , அன்றுதான் நாடு மழை என்ற வளத்தை இழக்க ஆரம்பித்தது என்று . தங்க முதலீடும் மக்களை தவிப்பில் ஆழ்த்தி கொண்டு இருக்கிறது .

                லாபம்     3.1 டாலர் பில்லியன்


                முதல்      482, 571 .81 கோடி ரூபாய் .


2.  ரிலையன்ஸ் நிறுவனங்கள்

      இதன் முக்கிய தொழில்களில் ஒன்று ஹைட்ரோகார்பன் ஆய்வு , பெட்ரோகெமிக்கல்ஸ் . பெட்ரோலிய சுத்திகரிப்பு , தொலைத்தொடர்ப்பு   கப்பல் கட்டுதல் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைப்பது . ( இந்நிறுவனம் கடன் வாங்கி இருப்பதாக வங்கிகள் கூற , கொடுக்க வேண்டிய அளவிற்கு கடன் ஏதும் இல்லை என இந்நிறுவன பைனான்சியல் ஸ்டேட்மென்ட் கூறுகிறது )


லாபம்  : 28731 கோடி ரூபாய்

முதல்  : 279, 064 கோடி ரூபாய்


3.  O N G C  ( ஆயில் அண்ட் நச்சுரல் கேஸ் கார்பொரேஷன் )

உலகிலேயே நச்சுரல் எனர்ஜி யை வெளிக்கொணரும் 250  நிறுவனங்களில் இது 21 வது இடத்தை பெற்று உள்ளது. ( மண்ணில் உள்ள பொருள்கள் மக்கள் அனைவருக்கும் சொந்தம் . ஆனால் இதை அதிகம் சுரண்டியது யார் என்பதில் இந்நிறுவனத்திற்கு முன்னுரிமை . இருந்தும் இந்தியா ஆயிலை இறக்குமதி தான் செய்கிறது )

11.2.2014 அன்று மஹா ரத்னா , நவ ரத்னா என்ற விருதினை பெற்று உள்ளது .

அதென்ன ரத்னா விருது ?  ( 2010 முதல் அரசு அறிவித்தது )


தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் லாபம் ஈட்டும் நிறுவனத்திற்கு மினி ரத்னா I விருது வழங்கப்படும் . இந்த விருது பெற்றவர்கள் , அரசின் அனுமதி பெறாமலேயே 300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் 30  கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்திற்கு மினி ரத்னா II விருது வழங்கப்படும் . இவர்கள் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யலாம் .

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் 5000 கோடி ரூபாய் லாபம் ஈட்டினால் மஹா ரத்னம் விருது வழங்கப்படும் .

இவ்விருது பெற்றவர்கள் 1000 கோடி முதல் தனது மொத்த மூல தனத்தில் 15% வரை முதலீடு செய்யலாம் .

ரவரத்ன விருது என்பது இந்நிறுவனம் தனது  முதலில் 60% லாபமாக காட்டுகிறதோ ( வரிக்கு முன்பு ) அந்நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

இந்த வகையில் O N G C  நவரத்ன விருதை பெற்றுள்ளது .

முதல் : 2 60 086 கோடி ரூபாய் .






4. I T C ( இம்பீரியல் டொபாக்கோ கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் )

உணவு பொருள் உற்பத்தி மற்றும் இன்போர்மஷன் டெக்னாலஜி , அழகு சாதனா பொருள் உற்பத்தி இதன் பிரதான தொழில் ஆகும் .

( புகை பிடிப்பது கேடு தரும் என்று விளம்பரம் செய்யும் அரசு , இந்நிறுவனத்தை தடை செய்திருக்கலாமே )

முதல் : 258, 380 கோடி ரூபாய்

5. H D F C ( ஹௌசிங் டெவெலப்மென்ட் அண்ட் பைனான்ஸ் கார்பொரேஷன் )

இந்தியா முழுவதும் 3659 கிளை களையும் , 2287 ATM மையங்களையும் பெற்றுள்ளது . பைனான்ஸ் ஆசியா பூல் நடத்திய ஆய்வின் படி ( பெஸ்ட் மேனஜ்டு பப்ளிக் லிமிடெட் இன் இந்தியா ) என்ற விருதை பெற்றது .

ஹௌசிங் கடன் பெற்றால் வரி விலக்கு வழங்குகிறது இந்தியா . இந்நிறுவனம் வளர்ச்சி பெறுகிறது .

முதல் : 247, 842 கோடி ரூபாய் .






6. COAL INDIA 

உலகம் முழுவதும் பயன்படுத்தும் நிலக்கரியில் 81%  நிலக்கரி இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது . கல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய மாநில அரசு சார்ந்த  நிறுவனம் இது . பங்காளதேஷோடு , மேற்கு வங்கத்தை இப்போதும் இணைப்பது இந்நிறுவனம். ( இருந்தும் இந்தியா நிலக்கரி இறக்குமதி செய்கிறது )

இந்திரா காந்தி ராஜ் பாஷா விருதை பெற்றுள்ளது .

மொத்த தொழிலாளர்கள் : 337 900 பணியாளர்கள்

முதல் : 229, 126 கோடி ரூபாய்






7. SUN PHARMA 

150 சந்தைகளை உலகம் முழுவதும் பெற்றுள்ளது . 45 இடங்களில் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது . 30000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் .
3000 வகையான உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
( மருந்து வணிகம் நோயை பெருக்குகிறது )

இதன் நிறுவனர் திலிப் சங்கவி சிறந்த நிறுவனர் என்ற விருதை 2014 ம் ஆண்டு பெற்றார் .

முதல் : 225, 898 கோடி

8 . INFOSYS 

இது உலகம் முழுவதும் 50 நாடுகளில் இயங்கி வருகிறது .
இதன்  மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 176 000 துக்கும் மேல் !
லாபம் : 8.7.பில்லியன் டாலர்
முதல் : 223, 062 கோடி ரூபாய்

9. SBI ( ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா )

உலகின் 73 வது மிகப்பெரிய வங்கி இது .
முதல் : 204, 098 கோடி ரூபாய்

10.  ICICI  ( இண்டஸ்ட்ரியல் கிரிடிட் இன்வெஸ்ட்மென்ட் கார்பொரேஷன் ஆப் இந்தியா )  
தனியார் வங்கிகளில் மிகப்பெரிய வங்கி இது .
இதன் கிளைகள் :4050
ATM மையங்கள் : 12589

முதல் : 192,063 கோடி ரூபாய்


         இவை மட்டும் அல்ல , இன்னும் சில பல நிறுவனங்கள் ப்ளூ சிப் என்ற தர சான்றிதழோடு , இந்தியாவில் , இந்தியா என்ற பெயரையும் இணைத்து கொண்டு , இந்தியா வின் சொந்த நிறுவனம் என்று மக்கள் நம்பும் வண்ணம் , இந்தியாவில் இயங்கி வருகின்றன .



Monday, 2 January 2017

காந்திக்கு முன் இந்திய மஹாத்மா !

சுதந்திர இந்தியாயாவில் , மட்டும் அல்ல உலகம் முழுக்க மஹாத்மா என்றால் அது காந்தியடிகளையே கூறுவார்.

ஆனால் அவருக்கு முன்னாலேயே , இந்தியா ஒரு மஹாத்மா வை பெற்றிருந்தது .

அவர் தான் ஜோதி  பாய் பூலே  ஆவார் . ( 1827 - 1890 )


                          ஜோதி பாயும் அவரது மனைவி சாவித்திரி பாயும் .



1827 ஆம் ஆண்டு காணவாடி ( தற்போது மஹாராஷ்ட்ரா ) என்ற இடத்தில பிறந்த ஜோதி பாய் , தனது 12 வது வயதில் , 9  வயது பெண்ணாகிய சாவித்திரி பாயை மணந்து கொண்டார். 

ஆனால் அவர் தனது மனைவிக்கு , எழுத , படிக்க கற்று கொடுத்தார்.

அக்கால கட்டத்தில் , வயது வரும் முன்னே விதவை கோலம் என்பது சர்வ சாதாரணமாக இருந்தது மஹாராஸ்ராவில் .
ஜாதி கொடுமைகள் 

உயர் ஜாதி பெண் என்றாலும் , விதவை கோலம் , கொடூரத்தையே கொடுத்தது .

தனது 21 வது வயதில் , 1848 ம் ஆண்டு அவர் படித்த ஒரு புத்தகம் , மாபெரும் மாற்றத்திற்கு வழிவகுத்தது . அந்த புத்தகம் தாமஸ் எழுதிய " ரைட்ஸ் ஆப் மேன் "

அதே ஆண்டு இவரும் ,இவர் மனைவி  சாவித்திரி பாயும் சேர்ந்து , ஒரு பள்ளி ஆரம்பித்தனர் .அது பெண்களுக்கான பள்ளி . இது இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி .

அங்கு ஜாதி கொடுமைகளை எதிர்க்கவும் ,

விதவை மறுமணம் குறித்தும் போதிக்கப்பட்டது. 

அது தாழ்ந்த ஜாதி , உயர்ந்த ஜாதி வேறுபாடுகளை கலைந்தது .

சத்யசோதக் சமாஜ் மதம் 


மத மற்றும் ஜாதியின் அடிப்படியில் நடக்கும் , தீண்டாமை , விதவை கொடுமைகளை தீர்க்க , வேண்டி தானே ஒரு புதிய மதத்தையும் உருவாக்கினார். அந்த மதம் தான் சத்யசோதக் மதம் .

தலித் 


தலித் என்றால் மராத்தி மொழியில் உடைத்து விடு , நசுக்கி விடு என்று பொருள் . இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் ஜோதி பாய் தான் . தீண்டாமை என்னும் கொடுமை நிகழும் போதெல்லாம் அதை உடைத்து விடு என்று குரல் எழுப்பினார்.


பல்வேறு புத்தகங்களை படைத்த இவருக்கு மஹாத்மா என்ற பட்டத்தை
 1888 ம் ஆண்டு v .k .வந்தேங்கர் என்பவர் வழங்கினார்.

தன வாழ்நாளின் இறுதி வரை பெண்ணுக்கு மரியாதை கொடுத்து , பெண் கல்வி பேசி , விதவை திருமணங்கள் நிகழ்த்தி , ஜாதியில் இருந்து வெளியே வா என்று அழைத்த ஜோதி பாய் , அவரது எண்ணத்திற்கு ஏற்றார் போல் , தனது மனைவிக்கு முழு சுதந்திரம் கொடுத்து , அவரையும் தனது பயணத்தில் பங்கெடுக்க வைத்தார்.







இன்று மஹாராஷ்டிரா மாநிலம் , இவர்கள் இருவருக்கும் முழு மரியாதையும் செலுத்தி கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் பின்னாளில் நடைபெற்ற , அத்தனை புரட்சிக்கும் அடிப்படையாக வாழ்ந்தர்கள்தான் 

ஜோதி பாயும் , சாவித்திரி பாயும் !

3.1.2017 சாவித்திரி பாயின் பிறந்த நாள். 

நாமும் அந்த மகாத்மாக்களை வணங்க கடமைப்பட்டுள்ளோம்.!





 ! 

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...