Monday, 19 February 2018

ஹிந்தி கற்று கொள்ளுங்கள்


தமிழ் நாட்டில் பெருகி வரும் வடஇந்தியர்கள் .

திருப்பூர் , கோயம்பத்தூர் , சேலம் , சென்னை , கன்னியாகுமாரி என்று பெருகி வரும் வடஇந்திய மக்கள் 
ஊரையே நாசம் செய்து வருகிறார்கள் .

பலரும் கேட்கிறார்கள் , தமிழர் மட்டும் பிறமாநிலங்களில் வேலை பார்க்கலாம் .
தமிழநாட்டில் மட்டும் வேலை பார்க்க கூடாதா என்று ?

வெளியில் போன தமிழன் , எங்கும் தன மொழியை பிறர் கற்று கொள்ள கட்டாயப்படுத்தவில்லை. எந்த ஊரையும் எச்சில் துப்பி அசிங்கம் செய்ய வில்லை. மாறாக , பல ஊர்கள் பசுமையாக , வளமாக, மாற மட்டும் தான் வேலை பார்க்கிறான். ஆனால் இங்கு வருபவர்கள் அப்படி செய்வதே இல்லை.

இந்த கோட்பாடுதான் கடந்த 40 , 50 ஆண்டுகளாக இங்கு நடக்கிறது.

அதே போல் , இது சாதாரண விஷயம் இல்லை . இந்த மண்ணை அழிக்க பல காலம் திட்டமிடப்பட்ட வழிகளில் இதுவும் ஒன்று. இந்த மண்ணை பற்றி தெரியாத ஒருவனால் , இந்த மண் அழிவதை தடுக்க முடியாது. 
அவனுக்கு தான் இந்த மண்ணை பற்றி எதுவுமே தெரியாதே ! 


எனில் நாம் மிகப்பெரிய சூழ்ச்சி வலையில் இருக்கிறோம் .


நம்மளும் ஹிந்தி படிப்போம். இது திருப்பூரின் நிலை அல்ல. 

நாளைய ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலை. 
மாவட்ட ஆட்சியர்கள் பலர் தமிழர் இல்லை. 
காவல் துறை தலைமையில் 
தமிழர் இல்லை. 
நீதிமன்றத்தில் தமிழர் இல்லை. 
அரசு அலுவலர்கள்கள் பலர் தமிழர் இல்லை . 
போதாதா குறைக்கு , VAO தேர்வில் கூட பிற மாநிலத்தவர் தேர்வு எழுதுகிறான் என்றால் , அவன் கண்டிப்பாக வேலைக்கு வர போகிறான் என்றே அர்த்தம் . 
அப்போ கிராம புற மக்களும் ஹிந்தி அறிந்து கொள்ள வேண்டும் . அதற்க்கு தான் கிராம்தோறும் நவோதயா பள்ளிகள் வர இருக்கின்றன .
நம்மை சுற்றி பல விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன . சூழ்ச்சி வலைக்குள் நிற்கிறோம் . 
அதனால் ஹிந்தி மொழியை கற்று கொள்ளுங்கள் .
மொழியை கற்று கொள்வதில் தவறில்லை. ஆனால் அங்கு நம் மொழியை அடிமை ஆகிவிடக்கூடாது . 

அதே போன்றதொரு  சூழ்ச்சி  வலைக்கு தமிழகமும் தயாராக வேண்டும் . அது வரை புத்திசாலித்தனமாக வாழ முயற்சிக்க வேண்டும் . அதற்க்கு அவன் மொழி நமக்கு புரிய வேண்டும் .

ஹிந்தி கற்று கொள்ளுங்கள் !



ஹிந்தி மொழியை கற்று கொள்ளுங்கள் .
மொழியை கற்று கொள்வதில் தவறில்லை. ஆனால் அங்கு நம் மொழியை அடிமை ஆகிவிடக்கூடாது . 

வி.எச் .குரூப் - V.H.GROUP



வி.எச் .குரூப்

1971 ம் ஆண்டு , புனே யில் பி. வி. ராவ் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் வி.எச் .குரூப் .
வெங்கடேஸ்வரா குரூப் என்றும் venky குரூப் என்றும் வழங்கப்படுகிறது .
இவர் இந்தியாவின் , கோழி பண்ணைகளின் தந்தை என்று வழங்கப்படுகிறார்.
அந்த அளவிற்கு கோழிகள் சார்ந்த எல்லா பொருள்களும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது .



கோழிக்கு தேவையான உணவு பொருள்கள்
கோழி முட்டை பவுடர்
கோழி முட்டை , மஞ்சள் கரு பவுடர்
முட்டை வெள்ளை கரு பவுடர்,
கோழிகளுக்கான தடுப்பூசிகள்
கோழிகளுக்கு தேவையான மருந்துகள் ,



வீட்டுவிலங்குகளுக்கு தேவையான பொருள்கள்
மற்றும் தடுப்பூசிகள் , மருந்துகள்
நாய்களுக்கான உணவு முதல் எல்லாம்
தயாரிக்கப்படுகிறது.
கோழி , வான்கோழி , ஆடு , முயல் என எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசி இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது .
இவர்கள் தான் தடுப்பூசிக்கான அட்டவணையும் வழங்குகிறார்கள் .
குழந்தைகளுக்கு அல்ல. வீட்டு விலங்குகளுக்கு !

2010 ம் ஆண்டு லண்டன் Blackburn Rovers  என்ற கால்பந்து குழுவை வாங்கியது
மும்பை நடைபெறும் பாக்ஸிங் மற்றும் டென்னிஸ் போட்டிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்குகிறது .

தற்போது இதன் நிறுவனர் காலமாகிவிட்டதால் , அவர் வாரிசுகள் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் .


Thursday, 15 February 2018

நாம் மறந்து விட்ட மரங்கள்

நாம் மறந்து விட்ட மரங்கள்

உசில் , வேங்கை , மருதம் , தடசு, இலுப்பை , தோதகத்தி , வன்னி , குமில், கடுக்காய் , தாண்டி என்று ஆயிரக்கணக்கான மரங்கள் இந்த மண்ணுக்கு சொந்தம் .
தமிழர்களை இந்த மரங்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் எனபதை நம் ஊரின் பெயர்கள் சொல்லும் .
உசில் மரங்கள் இருந்தால் அந்த ஊர் பெயர் உசிலம் பட்டி
இலுப்பை மரங்கள் அதிகம் இருந்தால் அந்த ஊர் பெயர் இலுப்பையூர்
விளாமரங்கள் இருந்தால் அந்த ஊர் பெயர் விளாத்தி குளம்
வேப்ப மரங்கள் அதிகம் இருந்தால் அந்த ஊர் வேப்பங்குளம்
தாழைமரங்கள் இருந்தால் அது தாழையூத்து
வாகை மரங்கள் இருந்தால் அது வாகை குளம்
ஆலமரங்கள் இருந்தால் அது ஆலங்குளம்
அத்திமரங்கள் இருந்தால் அது அத்தியூர்
அரசமரங்கள் இருந்தால் அது அரசம்பட்டி
தாண்டி மரங்கள் இருந்த ஊர் பெயர் தாண்டி குடி

இன்னும் எல்லா ஊருக்கு பின்னும் ஒரு மரம் இருக்கும் . அதே போல்
குறுஞ்செடிகள் மட்டும் 4000 த்துக்கும் மேற்பட்டவை தமிழகத்தில் இருந்துள்ளன . இருக்கின்றன .
மக்களுக்குத்தான் அடையாளம் காண தெரியவில்லை .

ஒவ்வொரு மரத்திற்கும் தனி பண்பு உண்டு .
வறட்சியில் கூட வளரும் , உசிலமரம் . ஆனால் பரந்து விரிந்து நிழல் தரும் .
வேங்கை மரத்தில் குவளை போல் செய்து அதில் நீர் நிரப்பினால் சில நேரம் கழித்து செந்நிறமாகும் . அதை குடித்தால் , சர்க்கரை நோய் தீரும், .
மருத மரத்தின் பட்டை புற்றுநோய்க்கு  சிறந்த மருந்து .
இலுப்பை மரத்தின் இருந்து எண்ணெய் எடுத்து தான் முன்பு விளக்கேற்ற பயன்படுத்துவாங்க .
அதில் கண் எரிச்சல் ஏற்படாது .
தோதகத்தி மரத்தில் எது செய்தாலும் , அது காலத்திற்கும் அழியாது .
துவாரகாவில் கண்டெக்கப்பட்ட பொருள்களில் ஒன்று , தோதகத்தி மரத்தில் செய்தது . 4000 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இருக்கிறது .
அது போல் துத்தி செடி போட்டால் , பார்த்தீனியம் வளராது .

உசில் மரத்தின் இலையை பொடி செய்து தலைக்கு தேய்த்தால் அதுதான் ஷாம்பு
வழுக்கை மரம் என்று வழங்கப்படும் தடசு மரம் பட்டை சுடுநீரில் போட்டால் ஷாம்பூ ரெடி .
மருத மரத்தின் பட்டையை காய வைத்து , கஷாயம் பண்ணி குடித்தால் கொழுப்பு குறையும் .
தாண்டி மரத்தின் தாண்டி பழம் மூல நோய்க்கு சிறந்த மருந்து .மேலும் , சளி , வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் .


பேராசிரியர் . கண்ணன்
பழனி மலை பாதுகாப்பு குழு
தமிழக மரங்களை காக்கும் தன்னார்வ அமைப்பு .


படத்தில் இருப்பது மருத மரம் .



Wednesday, 14 February 2018

தமிழக பெண்களுக்கான மரியாதை உண்டா ?


இந்த உலகமே ஒரு பெண்ணின் குழு அமைப்பில் தான் ஆரம்பித்தது என்று மனித வரலாறுகள் கூறுகிறது . இப்பவும் , எத்தனை பேரு, ஒரு பிரச்னையின்னா அப்பா கிட்ட ஓடி போய் சொல்றோம் . ?
அம்மா தான் முதலில் , பிறகுதான் , அப்பாவிற்கு அந்த விஷயம் போகும் .

தமிழ்நாட்டின் பெண்கள் கை ஒங்க பல  காரணங்கள் இருக்கு . தமிழ்நாட்டில்தான் ஒரு கேரளா பிள்ளையை பார்த்தாலும் ,
தமிழ்நாடு பெண்களையெல்லாம் அசிங்கமாக பார்க்குறாங்க !
அப்போ தன சுய மரியாதைக்காக அவள் அடுத்த கட்டம் நோக்கி செல்கிறாள்

ஏன்னென்றால் , அவளும் வேறு ஒரு கேரளா ஆணை பார்க்க கூடாது என , எழுத படாதா சட்டம் , அவளே அவளுக்கு எழுதி கொண்டாள்.

அப்புறம் ,
திருமணம் ஆன பிறகும் பல பேர் மதிப்பதே இல்லை . அவள் கையில் காசு இருக்கும் பட்சத்தில் தான் ஒரு சிலருக்கு , சிறிதாக பயம் வருகிறது . அந்த இடம் தான் அவளுக்கு பிடிச்சிருக்கு .
நிறைய தவறுகள் , ஆண் பெண்ணுக்கு இழைத்து விட்டான் , அப்புறம் அவள் , மேல வரும் போது  தான் குடும்ப பிரச்சனைகள் உருவாகின்றன .

 முகநூலில் எத்தனை பேரு தன தங்கை , அக்கா , மனைவியை தன நட்பில் வைத்து இருக்கிறார்கள் ?
பாதி பேரு , தங்கைக்கும் , அக்காவிற்கும் கட்டளை போடுறான் , முகநூல் பயன்படுத்த கூடாது என்று !
மனைவிக்கு , 7000 ரூபாய்க்கு செல்போன் வாங்கி தர மாட்டேங்குறாங்க !
அதை சுய உதவி குழுக்கள் செய்யுது . தனக்காக மரியாதையை , தன கணவன் மற்றும் , சகோதர வடிவில் ஆண்கள் தட்டி பறிக்கும் போதும் , டாஸ்மாக் வாசலில் அடகு வைக்கும் போதும் ,
அதிகாரத்தை அவளே கையில் எடுக்கிறாள் .




உரிமைகளை கொடுக்க ஆண்கள் முன்வர வேண்டும் . அத விட்டுட்டு , ஒரு ஆண் காதல் செய்யலாம் , ஒரு பெண் செய்ய கூடாது , தேடி தேடி வெட்டுவேன் என்றால் , அவள் என்ன செய்வாள் ?

ஒரு பிராமண பெண்ணும் , ஒரு கேரளா பெண்ணையும் மனதிற்குள் வைத்து கொண்டு அதே போல் தன மனைவியும் இருக்கணும் , இல்லையின்னா , அந்த சமூகத்து பெண்ணையே மணந்து கொள்வேன் என்றால் , தமிழ் நாடு வாழ் பெண்களின் நிலை என்ன ? எப்பப்பார்த்தாலும் பிராமண பெண்கள் அழகு , அறிவு , என்று பேசுவது . கேரளா பெண்ணை போல் நளினம் வருமா என்று கேட்பது , தெலுங்கு பெண்ணை போல் பணக்காரியா வேண்டும் என்று கேட்பது , இதெல்லாம் ஆண்கள் திருத்தி கொள்ளாது போனால் , சொல்ல கூடாத தவறுகள் நடக்கும் .

தமிழ்  பெண்கள் தைரியமாக ஒரு குடும்பத்தை வழி நடத்துவாள் .
அவள் சிறந்த தொலைநோக்கு சிந்தனை உள்ளவள் .
சொல்ல  முடியாத ஒரு ரணத்தை அவளுக்கு இந்த சமூகம் செய்து கொண்டே இருக்கிறது .

என்ன செய்வாள் அவள் ?

தமிழக பெண்கள் சிறந்த போராளிகள் .
ஆனால் அவள் கையில் இருக்கும் ஆயுதம் யாருக்காக வீச பட வேண்டும் என்பதை , தமிழக ஆண்கள் தான் சிந்திக்க  வேண்டும் .

மரியாதை எனப்படுவது ,
லஞ்சம் வாங்கி நகை வாங்கி தருவதில் இல்லை .
தனிக்குடுத்தனம் செல்வதில் இல்லை .
மாமியார் வீட்டுக்கும் காசு பணம் கொடுப்பதில் இல்லை .
அடுக்கடுக்காய் புடவை வாங்கி தருவதில் இல்லை .
பெரிய வீடுகளை அவள் விரும்புவதே இல்லை .

அன்போடும் , அழகோடும் பார்க்கும் பார்வையில் இருக்கிறது .
அவளை புகழும் சின்ன சின்ன பொய்களில் இருக்கிறது .

இந்த ஒன்றை ஈடு செய்ய முடியாமல் தான் ,
அது வேண்டும் , இது வேண்டும் என்று பெண்கள்
தேவைக்கு மிஞ்சிய எதோ ஒன்றை தேடுகிறாள் .
தேவைக்கு மிஞ்சிய இந்த தேடலை தான் யார் யாரோ பயன்படுத்தி கொள்கிறார்கள் .
வியாபாரிகள் உட்பட !
இதன் விளைவு , மிக பெரியதாக வளர்கிறது .

இந்த இயற்கையும் , சமூகமும் வாழ , உங்கள் வீட்டு
பெண்ணையும் கொஞ்சம் மரியாதை செய்யுங்கள் !


Tuesday, 13 February 2018

அசுரன்

அசுரன் என்ற புத்தகத்தில் , 

ராவணன் தானே பேசுவது போல் பதிவு கொண்ட  புத்தகம் அது .
அதிலே கூறுவான் ராவணன் , 
அசுரருக்கும் , தேவருக்கும் சண்டை நடக்கும் போதெல்லாம் , 
முழுவதுமாக எல்லோரும் சண்டை இட வேண்டாம் , என்று கூறி 
இரு தலைவர்களும் சண்டை இட்டு கொள்வார்களாம் . 
அப்படி நடக்கும் சண்டையில் , அசுரர் படையும் , தேவர் படையும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்குமாம்.
அதிலே தேவர் படை தலைவன் , வெற்றி பெற போகிறான் என்றால் , முதலில் கைதட்டி , சிறந்த வீரன் என்று பாராட்டுவது அசுரர் படைகல் தானாம் .
அங்கே அசுரர் தலைவன் இறந்து கிடப்பானாம் .
அதுவே அசுரர் தலைவன் வெற்றி பெற போகிறான் என்றால் ,
தேவ படையில் இருந்து எல்லோரும் தீடிரென தாக்கி , அவர்கள் தலைவனை காப்பாற்றி விடுவார்களாம் .
எப்படி பார்த்தாலும் , தேவர்கள் வெற்றியாளர்கள் !

பத்மாவதி திரைப்படத்தின் கடைசி காட்சி இது தான் !
நாமெல்லாம் அசுரர்கள் !
நமக்காக போராடிய எவரையும் காப்பாற்ற மாட்டோம் . 
குறைந்த பட்சம் எதிரியை கொண்டாடாமல் ஆவது இருக்க வேண்டும் .
அதுவும் செய்ய மாட்டோம் .
அங்கு தான் நாம் அடிமை ஆகிறோம் .

ராவணன் விஷயத்தில் தமிழகம் ஒன்றே ஒன்று தான் இன்னும் செய்யவில்லை .
தசரா அன்று , ராவணன் சிலை செய்து தீ வைக்க வில்லை .
அதையும் விரைவில் செய்வோம் .


13.2.2018




Thursday, 8 February 2018

கோழிகளுக்கான தடுப்பூசி முகாம்


பெப்ருவரி 1 முதல் 15 வரை கோழிகளுக்கான தடுப்பூசி முகாம் .தமிழக கால்நடை துறை அறிவிப்பு .
------------------------------------------------

கோழி வளர்பவர்களே உங்கள் கோழிக்கு தடுப்பூசி போட்டுடீங்களா ? இல்லையென்றால் உடனே உங்கள் அருகாமையில் கால்நடை மருத்துவமனையை அணுகவும் .
இப்படி சொல்ல விருப்பம் இல்லங்க !

இந்த தடுப்பூசி , ப்ராய்லர் கோழிக்கு தான் , நாட்டு கோழி எல்லாம் நல்லாத்தான் வளருது , அப்புடின்னு தான் நினைச்சோம் . ஆனால் நாட்டு மாடு முதல் கோழி , வாத்து வரை எல்லாவற்றிற்கும் தடுப்பூசி என்றால் என்ன நியாயம் ?

விவசாய மக்களுக்கு தெரியும் , உரம் விஷம் என்று , பூச்சி கொல்லி மருந்து விஷம் என்று !
ஆனா இன்று வரை அதை போட்டு தான் விவசாயம் பண்றங்க !
இதுல , விவசாயிகளிடம் அரிசி வாங்கி உண்ட மக்கள் இருக்கும் முன் விவசாயி இருந்து போகிறார்.
அவ்வளவும் பூச்சி கொல்லி மருந்து செய்யும் வேலை .
தெரிந்தும் , தானும் செத்து , மண்ணையும் அழித்து , அதை உணவாக கொண்ட மக்களையும் அழித்து ,
வாழும் இந்த வாழ்க்கை கேள்வி குறியாக இல்லையா ?
ஒவ்வொரு விவசாயியும் , உணவு வழங்கும் கடவுளுக்கு சமம் , எனில் கடவுள் விஷத்தை கொடுப்பாரா ?

நேற்று வரை யார் யாரோ போதித்தார்கள் , ஏமாந்து போனோம் .
என்பது கூட பரவா இல்லை . ஆனால் இன்றும் பூச்சி கொல்லி மருந்தும் , உரமும் போட்டு தான் , விவசாயம் செய்வேன் என்பது நியாயமா ?>


நெல்லுக்கு விஷம் போட்டு விஷம் போட்டு , மண்ணை முழுவதுமாக அழிச்சிட்டோம் .
அப்புறம்  கோழிக்கும் . மாட்டுக்கும் தடுப்பூசி போட்டு தான் வளர்ப்பேன் என்பது ,
நெல்லின் பூச்சி மருந்துக்கு சமம் இல்லையா ?

கிட்டத்தட்ட 50 புற்றுநோய் மருத்துவமனைகள் தமிழகத்தில் இயங்குகின்றன .
யாருக்காக ?
விவசாயிகளுக்காக !

வேண்டாம் உரம்
வேண்டாம் பூச்சி கொல்லி மருந்து
வேண்டாம் தடுப்பூசி .

2 லட்சம் பருத்தி விவசாயிகள் இறந்ததற்கு மூல காரணம் மருந்து என்பதை நினைவிற் கொள்ளுங்கள் !


Tuesday, 6 February 2018

எல்லாம் அவன் செயல் !.

ஏழையும் பணக்காரனும் !

ஏழைகள் என்றால் மிகவும் கஷ்டத்தில் இருப்பவர்கள் .
பணக்காரர்கள் என்றால் மிகவும் சந்தோஷத்தில் இருப்பவர்கள் .

ஏழைகள் என்றால் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் 
பணக்காரர்கள் என்றால் எல்லா போராட்டத்தியும் வேடிக்கை பார்ப்பவர்கள் .

ஏழைகள் என்றால் அடிவாங்கி துன்பப்பட்டு , துயரப்பட்டு , மிதிபட்டு வாழ்வார்கள் 
பணக்காரர்கள் என்போர் வேடிக்கை பார்ப்பவர்கள் .

உண்மை என்ன தெரியுமா ?

ஏழை என்பவன் தான் சம்பாதித்தை அன்றே செலவு செய்து , ஒவ்வொரு நாளையும் ஆனந்தமாக கழிப்பவன் .
பணக்காரன் என்பவன் , அன்றாடம் தன் தேவைகளை சுருக்கி கொண்டு , சேமித்து வைப்பவன்.



ஏழைகள் இருப்பதால் தான் டாஸ்மாக் இயங்குகிறது.
இந்த வருமானத்தை சேமிக்க எந்த ஏழையும் யோசிப்பதே இல்லையே !
மனக்கவலை மறக்க , உடல் வலி குறைய என்று காரணங்கள் பல இருக்க ,
ஒரு நாள் வருமானம் மட்டும் 70 கோடி ரூபாய் . மதத்திற்கு 2100 கோடி ரூபாய் . ஆண்டுக்கு 25200 கோடி ரூபாய் .
இவை எல்லாம் , எதிரில் நின்று சிந்தியுங்கள் , அது ஏழைகளின் சேமிப்பு பணம் . மற்றொருவரின் வருமானமாக மாறுகிறது.
யாரேனும் கட்டாயப்படுத்தினார்களா , நீயே டாஸ்மாக் போய் தான் ஆகவேண்டும் என்று !

நான் ஏழையாக இருக்கிறேன் என்று நாமே , நம் கையிருப்பை எவரிடமோ ஒப்படைத்தால் அதன் பெயர் விதியா ?

பணக்காரன் என்பவன் தான் உண்மையிலேயே ஏழை . அவன் தன வருமானத்தை , தன சுகதிற்காக கூட அனுபவிக்காமல் ,யாரோ முன்னேற , வங்கியில் சேமித்து வைக்கிறான் . தன சுகங்களை கட்டுப்படுத்தி அவன் சேமித்த பணத்திற்கு கூட வரி செலுத்துகிறான் .
அவர்கள் தான் வட்டி வாங்குகிறார்கள் என்று கேட்காதீர்கள் . அது வட்டி அல்ல . இவனை ஏமாற்ற கண்டுபிடிக்க பட்ட திட்டம் \

என்றேனும் , ஏழைகள் தன்னுடைய வருமானத்திற்கு வரி செலுத்தியது உண்டா ? அப்படி என்றால் என்ன என்றே தெரியாது. 

விற்பனை செய்யப்படும் பொருள்களில் மறைமுக வரி எல்லோராலும் செலுத்த படுகிறது. 
 உண்மையில் இங்கு ஏழையும் , பணக்காரனுக்கு ஒன்று தான் .
இவன் ஏழை என்றும் இவன் பணக்காரன் என்றும் , எங்கோ ஒருவரால் தீர்மானிக்கப்படுகிறது.

அந்த ஒருவன் , ஏழை என்பவனிடம் அன்றாடம் எப்படி மகிழ்வாய் வாழ்வது என்று சொல்லி தருகிறான் .
பணக்காரன் என்பவனிடம் , எப்படி சுகத்தை சுருக்கி கொள்வது என்று சொல்லி தருகிறான் .
இருவராலும் அந்த ஒருவனுக்கே ஆதாயம் !

இவன் டாஸ்மாக் கில் கொடுத்தாலும் அவனுக்கு லாபம்தான் !
அவன் வங்கியில் சேமித்தாலும் அவனுக்கு லாபம்தான் !

இந்த ஏழை என்ற வர்க்கம் , எப்போதுமே அந்த ஒருவனுக்கு வேண்டும் .
அப்போது தான் திட்டங்கள் என்ற பெயரில் , சலுகைகள் என்ற பெயரில் ,
இலவசம் என்ற பெயரில் கொள்ளை அடிக்க முடியும் .
எனில் அவன் எப்போதுமே ஏழையாக இருக்க வேண்டும் . அதற்காக தான் , அரசு மதுக்கடைகளை வைத்து , மருத்துவத்தையும் வைத்து , 
தன வாழ்நாளை நீடிக்க வகை செய்து கொள்கிறது.



அதே போல் , பணக்காரன் வரையறை செய்யப்பட்டவன் , வாழ்நாள் முழுக்க ஓடி கொண்டே இருக்கிறான் . சேமிப்பு. இன்சூரன்ஸ் , முதலீடு , பங்குகள் என்று ஓடி ஓடி வாழ்க்கையை தொலைகிறான். 
இவனை இப்படியே வைத்திருந்தால்தான் , அரசுக்கு  மேலும் மேலும் வரி வருமானமும் , இதரப்பிர வகையிலும் வருமானம் கிடைக்கும் .

இந்த அரசு என்பது ஏன் ஏழைகளையும் , பணக்காரனையும் வைத்து விளையாட வேண்டும் ?
ஏழை , பணக்காரன் என்ற இரட்டை மாட்டுவண்டியில் , வண்டி ஓட்டுவது தான் அரசு . பயணிப்பவன் யார் ?

கார்ப்பரேட் எனும் வணிகம் !
இப்போ யோசித்து பாருங்கள் !
ஏழையும் , பணகாரனும் அந்த மாட்டு வண்டியில் சமமாக தானே கட்டப்பட்டு இருக்கிறார்கள் .
இருவரும் ஒன்று தானே !

ஏழைகளை இழிவுபடுத்தும் பணக்காரனும் , 
பணக்காரனை சபிக்கும் ஏழையும் 
ஒன்றுதான் !

இந்த இருவரும் இப்படி இருக்கும் வரைதான் வணிகம் என்னும் பயனாளி 
ஆண்டவனாகவே இருக்க முடியும் !

எல்லாம் அவன் செயல் !.


Monday, 5 February 2018

பக்தி இயற்கையை அழிக்குமா ?


சபரி மலை , பழனி மலை , மேல்மருவத்தூர், வேலூர் அம்மா , வேளாங்கண்ணி ,என்று நம் சுயலாபத்திற்காக , பெரிய பணக்காரன் ஆகணும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு இறைவனை தேடி செல்லும் பக்த கேடிகளே ,
தயவு செய்து , பிளாஸ்டிக் பொருள்களை மலைகளிலோ , கடலிலோ கொட்டாதீர்கள் .
உங்களால் அங்கு வாழும் உயிர்கள் அழிகின்றன .

2004 சுனாமி யில் அதிக நஷ்டம் ஏற்பட மூலகாரணம் , வேளாங்கண்ணி விரிவாக்கப்பட்டதுதான் . சுற்றிலும் பாதுகாப்பிற்காக இருந்த மரங்களை அழித்து தான் , பக்தர்களுக்காக வேளாங்கண்ணி விரிவாக்கப்பட்டது. 

இன்று திருவண்ணாமலை , சுற்றிலும் கிரிவலத்திற்க்காக , பல்வேறு வகையான மரங்கள் அழிக்கப்படுகின்றன .

சமயபுரத்தில் , ஒரு ஆறே மூடப்பட்டு பக்தகோடிகளுக்காக ஏதோதோ வேலை நடக்கிறது.

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் வழி நெடுகிலும் எவ்வளவு புண்ணை மரங்கள் இருக்கும் தெரியுமா ? சமுத்திரக்கரை நிறைய நீரோடும் தெரியுமா ? அத்தனையும் பக்தகோடிகளுக்காக சாலைகள் விரிவாக்கம் என்ற பெயரில் அழிக்கப்படுகிறது.


இயற்கையை அழித்து பக்தகோடிகளுக்காக வேலை நடக்கிறது என்றால் தெரிந்து கொள்ளுங்கள் , 
அங்கு நடப்பது வழிபாடு அல்ல . 
வியாபாரம் !
ஆம் பக்தி என்பது வியாபாரம் .
போக்குவரத்து தொழில் வளர்கிறது . தேவை இல்லாமல் உயோகிக்கப்படும் பெட்ரோல் கூட , இயற்கை அழிவே !
ஹோட்டல்கள் பணம் பார்க்கிறது . அந்த கட்டுமானம் கூட மரங்களை அழித்து தான் !
கோவில்களில் , வழிபாடும் நேரத்தை விட அதிக நேரம் , ஷாப்பிங் நேரம் .
அதன் பெயர் , சொல்லி தெரியவேண்டியதில்லை .

நீங்கள் இறைவனை வணங்கும்  நுகர்வோராக இருக்க ,
இயற்கை அழிக்கப்பட்டால் ,
எந்த இறைவனும் உங்களுக்கு ஆசி வழங்கமாட்டான் . 
சாபம் தான் கொடுப்பான் .

எந்த ரிஷி முனிவராவது இறைவனை தேடி கோவில்களில் தவம் செய்த கதையை எங்காவது நீங்கள் கேட்டது  உண்டா ? 
காடுகளுக்குள் , நீருக்குள் , நெருப்பிற்குள் தான் தவம் செய்வார்கள் .

ஆனால் நவீன கால பக்தர்கள்தான் , காட்டையும் , நீரையும் அழித்து விட்டு இறைவனை தேடுகிறார்கள் .

முதலில் எப்போப்பார்த்தாலும் , கோவிலுக்கு போகணும்னு அவசியம் இல்லை .
அப்படி நீங்க அடிக்கடி கோவிலுக்கு போவது உங்கள் வழக்கம் எனில் , உங்களுக்கு 
கோவில் என்றால் என்ன என்று தெரியவில்லை என்றே பொருள் !

கோவில் பிரசாரம் , 
இயற்கையை அழிக்கும் எனில் அப்படி ஒரு வழக்கம் தேவை இல்லை .



Monday, 29 January 2018

நாட்டு புற வங்கியர் - Indigenous bankers

இன்றைக்கு தான் வங்கிகள் இருக்கின்றனவா ?

இல்லை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வங்கிகள் இருந்து வருகின்றன .
அவர்களுக்கு வழங்கப்படும் பெயர்தான் நாட்டுப்புற வங்கியர்

பொதுவாக இந்தியாவில் நான்கு விதமான சமூத்தை சேர்ந்த மக்கள் , வங்கியராக செயல்பட்டு வந்துள்ளனர் .
அவர்கள்

செட்டியார்கள் - தென்னிந்தியா
சேத்துக்கள் - மேற்கு வங்காளம்
மார்வாரிகள் - அஸ்ஸாம் , ராஜஸ்தான்
ஷ்ரோஆஃ மக்கள் ( shroff caste )


ஷ்ரோஆஃ மக்களை பற்றி குறிப்பிடும் போது , அவர்கள் தெற்கு ஆசியாவிற்க்கே கடன் கொடுத்தவர்கள் . கடல்கடந்து சென்று வணிகம் செய்தவர்கள் .

மார்வாரிகள் இந்தியா முழுவதும் கடன் கொடுத்தவர்கள் .

சேத்து மக்களும் , செட்டி இன மக்களும் ஒன்றோ என்று கூறுபவர்களும் உளர் .ஆனால் , தொழில் அடிப்படையில் , சேத்துக்கள் , செட்டியார்களை விட பலம் பொருந்தியவர்கள் .

செட்டி மக்கள் தென்னிந்தியா மற்றும் கிழக்காசிய பகுதிகளிலே கடன் கொடுத்த வங்கியர்கள் .




 இவர் ஜகத் சேத்
ஊர் : மூர்ஷிதாபாத் , மேற்கு வங்காளம் .
- இந்தியாவின் தலையெழுத்தை மாற்றியவர்.
இந்தியாவின் ரோத்ஸச்சைலட் என்று அழைப்பட்டவர் .


நாட்டுப்புற வங்கியர்கள் பொதுமக்களுக்கும் , வணிகர்களுக்கும் மட்டும் கடன் வழங்கவில்லை. அதையும் தாண்டி மன்னர்களுக்கு கடன் கொடுத்தனர்.
அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் , போர் செய்யும் இரு நாட்டு மன்னர்களுக்கும் கடன் கொடுப்பதும் , அவர்கள்  இருவரில் யார் வெற்றி , தோல்வி கண்டாலும் , தங்கள் தொழிலை பாதிக்க கூடாது என்று ஒப்பந்தம் போடுவதும் இவர்களின் வழக்கம் .

அது போல தான் 1757 ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிளாசி போர் நடந்தது.
இதை சிராஜ் உததௌலா விற்கும் ராபர்ட் கிளைவிற்கும் இடையே நடந்த

போரில் , கடன் கொடுத்தார் ஜகத் சேத.

அந்த போருக்கு பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் கடன் கொடுத்தார் .
பல போர்களில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற அதிக பண உதவியும் செய்துள்ளார்.

இன்றும் , இவர்கள் எந்தவிதமான சொத்து பாத்திரமும் இல்லாமல் கூட , கையொப்பம் பெற்று கொண்டு கடன் வழங்குகிறார்கள் .

இந்த செட்டியார்  மற்றும் மார்வாரிகளிடம் இருந்த வங்கிகள்தான் , இந்திராகாந்தி அம்மையாரால் நாட்டுடையாக்கப்பட்டது.



இந்தியா சுதந்திர போராட்டத்தில் மிகமுக்கிய பங்கு வகித்தது சைமன் கமிசனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் .
இது உண்மையில் நாட்டுப்புற வங்கியருக்கும் , ஆங்கிலேய வங்கியார்க்கும் இடையே  போராட்டம் ஆகும் .
சைமன் குழு , இந்தியாவில் உள்ள வங்கிகளை கையகப்படுத்தும் நோக்கத்தோடு , சில விதிமுறைகளை , சைமன் கமிசனில் கூறி இருந்தது .
அப்போது பஞ்சாப நேஷனல் பேங்க் நிறுவனர் லாலா லஜபதி ராயல் நடத்தப்பட்ட போராட்டம் தான் சைமன்  Go Back எனும் போராட்டம் !

ஆங்கிலேயர்களிடம் நாட்டை ஒப்படைக்க காரணமும் நாட்டுப்புறவங்கியர்தான் .
அவர்களை எதிர்த்து போராடியதும் இவர்களேதான் !

இன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதும் இதே நாட்டுப்புறவாங்கியர்களே !

இன்றும் , எல்லா ஊர்களிலும் , உள்ள அடமான கடைகளை பெரும்பாலும் நடத்துவது நாட்டுப்புறவாங்கியர்களே !

பின்குறிப்பு :

வங்கிகளும் அதனை உருவாக்கிய செட்டியார்களும் !

இந்தியன் பேங்க் - ராமசாமி செட்டியார்
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் - சிதம்பரம் செட்டியார்
முருகப்பா பைனான்ஸ்      - முருகப்பா செட்டியார்
கரூர் வைஷியா பேங்க்  - கிருஷ்ணா செட்டியார் , வெங்கடராம செட்டியார்
லட்சுமி விலாஸ் பேங்க் - இராமலிங்க செட்டியார்

இந்தியாவில் உள்ள ஹைபிரிட் நிறுவனங்கள் ( Hybrid companies in india ) - சுருக்கமாக



Nuziveedu seeds - ஹைதராபாத் 

Hybridவிதைகளை உற்பத்தி செய்யும் பொதுநிறுவனம் தான் Nuziveedu seeds limited . இங்கு 350 விதமான விதைகள் ஹைபிரிட் முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5.5 மில்லியன் விவசாயகளிடம் இந்த நிறுவனம் விதை விற்பனை செய்கிறது. அதிகவிதைகள் ஆந்திராவில் தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
1973 முதல் ஹைபிரிட் விதை உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், இந்தியாவின் Agriculture Leadership விருதை வாங்கி உள்ளது.

No automatic alt text available.






மஹாராஷ்டிரா மாநிலத்தின் உள்ள ஹைபிரிட் நிறுவனம் தான் , மிகப்பெரிய அளவில் ஹைபிரிட் விதைகளை உற்பத்தி செய்வது .

1963 முதல் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்தோ அமெரிக்கன் விதைகள்
நிறுமம் பெங்களூர்  லால்பாக் பூங்காவில் தனது 50 வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறது.
தேதி : 21.1.2018
அவ்வளவும் Hybridவிதைகள்.
இதில் 50 ஆண்டுகளாக மாடி தோட்டம் முதல் வயல்வெளிகள் என எல்லா இடங்களிலும் தன் விதைகளை தூவியுள்ளது
Indo American hybrid seeds (India) pvt ltd
Bangalore











மாடி தோட்டம் , இலைகளே பூக்கள் போல் ஜொலிப்பது எல்லாம் , உருவாக்கி பெருமை கொள்கிறது இந்தோ அமெரிக்கன் ஹைபிரிட் சீட்ஸ் நிறுவனம் 

Wednesday, 24 January 2018

இந்தியாவும் பணக்கார நாடுதான் !

ஜனவரி 2017 ம் ஆண்டு இந்தியா ரூபாய்க்கு இலங்கையின் மதிப்பில் ரூபாய் .1 .28 ஆக இருந்தது .
ஜனவரி 2018 ம் ஆண்டு இந்தியா ரூபாய்க்கு இலங்கையின் மதிப்பில் ரூபாய் 2 .48 ஆக உயர்ந்துள்ளது.
இதன் அர்த்தம் இந்தியா முன்னேறியது அல்ல . அதீத வளர்ச்சி என்ற பெயரில்இலங்கை தன பொருளாதாரத்தை அமெரிக்காவிடம் இழந்து வருகிறது.



ரொம்ப காலமாக நாம் , இந்தியாவை விட பணக்கார நாடுகளையே பார்த்து கொண்டு இருக்கிறோம்.

கொஞ்சம் நம்மை பணக்காரர்களாக பார்க்கும் நாடுகளை பாப்போம்.

ஏமன் , = 3.93 ரியல்
டிஜிபோட்டி  = 2.79 பிரான்க்
உஸ்பேகிஸ்தான்  = 127.53 som
சிலி                = 6.58 பெசோ
ஜப்பான்      = 1.73 yen
ஐஸ்லாந்து = 1.60 Krona
ஹங்கேரி  = 3.94 Forint
கோஸ்டரீகா  = 8.89
மங்கோலியா  = 38.39 Tugrik
கம்போடியா  = 63. 11  ரியல்
பராகுவே  = 87.84 Guarani
இந்தோனேசியா  = 209.32 பைசா
வியட்நாம்   =  356.78 dong
அல்கெரிய   = 1.79 பைசா
ஸ்ரீலங்கா  = 2.42 பைசா


ரொமப் சீக்கிரம் பணக்காரராக்கும் bitcoin மதிப்பு தெறிச்சிக்குவோம்.




தேதி  : 24.1.2012

இந்தியாவும் பணக்கார நாடுதான் !

Tuesday, 23 January 2018

வேலூர் பொற்கோவில்

100 ஏக்கர் நிலத்தில் 1500 கிலோ தங்கத்தை இளைத்து கட்டப்பட்ட கோவில் வேலூரில் உள்ள மலைக்கொடி என்ற ஊரில் அமைந்திருக்கும் அம்மா கோவில் .


இதை ஸ்ரீ நாராயணி அம்மா என்றும் லட்சுமி அம்மா என்றும் அழைக்கிறார்கள் .
இந்த கோவிலின் விமானம் மட்டுஎம் 750 கிலோ தங்கத்தை சுமந்து கொண்டு இருக்கிறது.



கீழே உள்ள படத்தில் உள்ளர்வர் தான் பங்காரு அடிகளாருக்கு போட்டியாக 2007 ல் இந்த கோவிலின் அம்மாவாக மாறியவர் . 



முக்கிய குறிப்பு மற்றொரு படத்தில் அந்த அம்மா வுடன் இருப்பவர் நம்ம குடியரசு தலைவர் , ராம் நாத் கோவிந்த் அவர்கள் ! பீஹார் ஆளுநராக இருந்தப்பவே வந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போனாராம் !



நட்சத்திர வடிவில் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .




Monday, 22 January 2018

வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா

மக்களின் வாழ்வாதாரம் , அடிப்படை கட்டமைப்பு , சுற்று சூழல் , ஆரோக்கியம் இவற்றை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்
வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில்

இந்தியா 62 வது இடம் பிடித்து சாதனை .

நேபாளம் 22-வது இடத்திலும்,
அமெரிக்கா 23 வது இடத்திலும்
ஜப்பான் 24 வது இடத்திலும் ,
சீனா 26-வது இடத்திலும்,
 வங்காள தேசம் 34-வது இடத்திலும்,
இலங்கை 40-வது இடத்திலும்,
பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன.

இந்தப்பட்டியலில் லித்துவேனியா முதல் இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் 60-வது இடத்தில் இருந்தது.
தற்போது முன்னேறி 62 வது இடத்தை அடைந்தது .

நான் பெரிய இவன் , நாங்கள் இதில் வல்லவர்கள் என்று அலட்டி கொள்ளும் நாடெல்லாம் முதல் தர வரிசையில் இல்லை .என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு நல்லது செய்யாமல் , அமெரிக்காவும் , ஜப்பானும் , சீனாவும் முன்னேறி என்ன செய்ய போறாங்க ?

இதில் இந்தியா 100 வது செயற்கை கோள் வேற விட்டாச்சு !
மக்களின் வாழ்க்கை தர பட்டியல் பின்தங்கி உள்ளது.
ரொக்கெட் விடுறதை விட ,
தண்ணிக்கும் , கழிவறைக்கும் தட்டுப்பாடு இல்லாமல் செய்வதே
மிக பெரிய சாதனை !




வடக்கு ஐரோப்பாவில் , ஒரு மூலையில் இருக்கும் லிதுவேனியா தன நாட்டிற்கு முழு வசதியும் செய்து தந்துள்ளது.

அந்த நாடு இதுவரையிலும் எதற்கும் அலட்டி கொண்டதாக தெரியவில்லை .

1990 ,ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாடு இது .
62300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் மொத்த மக்கள்தொகை 36 லட்சம் .


வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா 

Friday, 19 January 2018

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட் SETC TN LTD

Ltd  என்பது லிமிடெட் என்பதன் சுருக்கம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட் என்ற வரிசையில் தான் வருகிறது.
லிமிடெட் என்ற வார்த்தை எங்கு சேர்க்கப்படுகிறது என்றால் , பங்குகள் வெளியிடப்பட்ட ஒரு நிறுவனத்தில் தான் சேர்க்கப்படும் . அதாவது அது ஒரு கம்பெனி .

தனியாக 20 பேர் முதல் அதிகபட்சம் 50 பேர் இணைந்து பங்கு முதல் போட்டு ஆரம்பித்தால் அதன் பெயருக்கு பின்னால் ( P ) Ltd என்று இணைத்திருப்பார்கள் . அதாவது இது தனியார் நிறுவனம் என்று பொருள் . பிரைவேட் லிமிடெட் .
அதுவே பொதுதுறை என்று வரும் போது, பொதுமக்களின் பங்கு முதல் பெற்று ஒரு கம்பெனி ஆரம்பிக்கும் போது அதில் வெறும் லிமிடெட் மட்டுமே இணைக்க வேண்டும் .
இதன் பங்குகளை , பங்கு சந்தையில் யார் வேண்டுமானாலும் வாங்கலாம் , விற்கலாம் என்றும் பொருள் கொள்ளலாம் .

லிமிடெட் என்பது என்ன வென்றால் , ஒரு நிறுவனத்தின் முதலில் நாம் 1000 ரூபாய் மதிப்புள்ள 10 பங்குகளை வாங்கினால் , 10000 ரூபாய் செலுத்தி இருப்போம் . அவ்வாறு பணம் செலுத்தி நாம் பங்கு வாங்கிய அந்த நிறுவனம் திடீரென நட்டத்திற்கு வந்தால் , நமக்கு அந்த 10000 மட்டுமே நட்டம் ஆகும் . மேற்படி அந்த நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் , அதோடு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் நம்மிடம் எந்த தொகையும் கேட்க கூடாது என்று பொருள் . அது தான் அந்த லிமிடெட் என்பதன் பொருள் .

இப்போ நம் தமிழ்நாட்டின் போக்குவரத்து கழக பேருந்தை நன்றாக பாருங்கள் .
அதில் Tamilnadu Govt undertaking என்று மட்டுமே இருக்கும் .
SETC TN Ltd என்றும் இருக்கும் .
இதன் பொருள் அரசு போக்குவரத்து கழகத்தின் முடிவுகள் , அரசை சார்ந்தது மட்டும் அல்ல . பங்குதாரர்களை சார்ந்தது .




1984 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் , ரூபாய் .77.21 கோடி ரூபாய்க்கு தமிழக போக்குவரத்த்து துறையின்  பங்குகள் விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் முகமதிப்பு ரூபாய் .10  ஆகும்.
அதன்  பங்குதாரர்கள்  தற்போது இந்தியாவில் இல்லை .

 பேருந்து கட்டண உயர்வு என்பதும் , இங்கு நடக்கும் பிரச்சனைக்கும் தீர்வு அவர்கள்  தான் சொல்ல வேண்டும் .

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்.
அவன் எங்கோ இருந்து கொண்டு இயக்குகின்றான் . 

Thursday, 18 January 2018

கல்வியின் தண்டனை மரணம்






நேற்று ( 18.1.2018 ) சென்னை Don Bosco பள்ளியில் நரேந்திரன் என்ற 10 ம் வகுப்பு மாணவர் , இறந்து இருக்கிறார்.
காரணம் என்ன என்று பள்ளி தலைமை கூறுகையில் , திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டான் என்று கூறி இருக்கிறார்கள் . பிறகு பள்ளியின் CCTV கொடுத்த தகவலின் படி , மாணவர் பள்ளிக்கு காலதாமதமாக வந்ததற்காக  உடற்பயிற்சி ஆசிரியர் ,  dock walk எனும் தண்டனை வழங்கி உள்ளார் . அப்போது தான் மாணவர் மயங்கி விழுந்து இறந்து போய் இருக்கிறார். நான் இன்று பணியில் இல்லை என்றாலும் ஒரு ஆசிரியராக என் மனம் ஏற்க இயலாத சம்பவம் இது.!




இதில் காவல் துறை எடுத்த நடவடிக்கை ,
அந்த உடற்பயிற்சி ஆசிரியரை கைது செய்து இருக்கிறது.
முடிந்து விட்டது பிரச்னை !
எப்போதும் போல் அந்த பள்ளி இயங்கும். அதில் எப்போதும் போல் பிற மாணவர்கள் படிப்பார்கள் .
நாளை நம் மகனுக்கும் இப்படி தண்டனை வழங்க வாய்ப்புள்ளது என்ற எண்ணம் எந்த பெற்றோருக்கும் வர போவது இல்லை .

உண்மையிலேயே தவறு பெற்றோர் பக்கம் தான் !

தன குழந்தையை அடிமையாக்கும்  அவலத்தை தன கையில் செய்பவர்கள் பெற்றோர்கள் தான் !
காலையில் 6 மணிக்கே , அவன் காலை கடன்களை கூட முடிக்க முடியாமல் அவனை வேனில் தள்ளி விட்டு , என்ன சாதிக்கிறார்கள் பெற்றோர்கள் !

பள்ளியின் வாசலிலே , குழந்தையின் டைரியில் கூட your Ward என்று பள்ளி துணிந்து கூறுகிறது . நம் குழந்தை , பள்ளிக்கு மாணவனாக இருக்கலாம் எப்படி வார்டு என்று அழைக்கலாம் என்று எந்த பெற்றோரும் பள்ளியிடம் சண்டை போடுவதே இல்லை .
( வார்டு என்றால் , சட்டத்தின் கீழ் , நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் வளர்க்கப்படும் குழந்தை என்று அர்த்தம் )

அவன் கழிவறை செல்ல  அனுமதி வழங்கப்படுமா ? கழிவறை இருக்கிறதா ? விளையாட அனுமதிப்பீர்களா ? விளையாட்டு திடல் உண்டா ? என்று எத்தனை பெற்றோர்கள் , பள்ளியில் சேர்க்கும் போது கேள்வி எழுப்புகிறார்கள் ?

பெற்றோர்களே அடிமை போலும் , பூம் பூம் மாடு போலும் , கேட்ட பணத்தை கொடுத்து விட்டு ஒரு வார்த்தை பேசாமல் வரும் போது குழந்தை மட்டும் , எப்படி அறிவாளியாக , தைரியம் உள்ளவனாக , கேள்வி கேட்கும் திறன் உள்ளவனாக வளர்வான் !

தனக்கு பின்னால் தன பெற்றோர் வருவார்கள் என்ற தைரியம் உள்ள குழந்தை , ஆசிரியரின் அதட்டலுக்கு மயங்குமா ? சரிந்து விழுமா ?
நாம் கொடுக்காத தைரியத்தை எங்கிருந்து பெறுவான் ?

தன குழந்தையை அடிமையாக்கும் கேவலமான பெற்றோர் உள்ளவரை ,
அவன் உணர்விற்கு மதிப்பளிக்காமல் , ஆசிரியரை பார்த்து அஞ்சும் பெற்றோர் உள்ளவரை
பல நரேந்திரங்கள் சரிந்து விழத்தான் செய்வான் .



ஒரு பள்ளியில் ,  மாணவன் ஒருவன் விடுமுறை எடுத்ததற்காக , பெறப்பட்ட பைன் ரசீது இது !


கேள்வி கேளுங்கள் !
நீங்கள் அரசியல் வாதிகளை எந்த கேள்வியும் கேட்பதே இல்லை !
மருத்துவரிடத்தில் எந்த கேள்வியும் கேட்பதே இல்லை!
சட்டம் சார்ந்த விஷயத்தில் கேள்வி கேட்பதே இல்லை !
அரசு அதிகாரிகளை கேட்பதே இல்லை !

குறைந்த பட்சம் குழந்தைகளின் தைரியத்திற்காக
ஆசிரியரையும் ,
பள்ளிகளையுமாவது
கேள்வி கேளுங்கள் !

நீங்கள் கேள்வி எழுப்பினால் உங்கள் குழந்தை பாதிப்புக்கு ஆளாகும் எனில் ,
அந்த பள்ளியையே தூக்கி எறியுங்கள் !

அந்த பள்ளி சிறந்தது , இந்த பள்ளி சிறந்தது என்று மனதிற்குள் இருக்கும் கோட்டையை
உடைத்து எறியுங்கள் !
படிப்பறிவு இல்லாத கடந்த தலைமுறை பெற்றோரே நம்மை எல்லாம் நன்றாக படிக்க வைத்து இருக்கிறார்கள் என்றால் ,
நாம் இன்னும் அதிகப்படியாகவே படிக்க வைக்க முடியும்!

அதை பள்ளிகள் தான் செய்யும் எனில் ,
நாம் ஏன் படித்திருக்க வேண்டும் ?

ஓட்டையான பள்ளியில் படித்த நாமெல்லாம் , திறமையானவர்கள் தான் எனில் ,
அதே பள்ளி நம் பள்ளிக்கு மட்டும் நல்ல கல்வியை கொடுக்காதா ?


Sunday, 7 January 2018

இலுமினேட்டி - மதங்கள்

இலுமினேட்டி , கார்பொரேட் அட்டூழியம்னு பேச ஆரம்பித்ததும் ,
பைபிள் படித்தால் தெரியும் என்கிறது கிறிஸ்தவம்.
குரான் ஒன்றுதான் இதற்க்கு தீர்வு என்கிறார் இஸ்லாமியர்.
இதெல்லாம் தாண்டி ,
1 மணி நேரத்திற்கு மேல் பேசி எங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் பலர்.
கார்பொரேட் அதை பண்ணுது , இதை பண்ணுது என்று கூறி
அதில் இருந்து விடுபட பைபிள் வேண்டாம் .
யேகோவா பிறக்க போகிறார். 
எங்களோடு இணைந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள் .
புத்தர் பிறக்க போகிறார்.
இங்கு இருந்து இறைவன் அருள் பெற்று , கார்போரேட்டை விரட்டுவோம்
என்கின்றனர்.

ரவிசங்கர் குழுவிடம் இணைய சொல்லி பேசுகிறார்கள்.

சாய்பாபா வும் , ஹரே ராமா , ஹரே கிருஷ்ணாவும் சோறு போட்டு
கார்போரேட்டை அழிக்க
அழைப்புவிடுக்கிறார்கள்.

அன்னை அரவிந்தரும் , சாரதா தேவியும்
இன்னும் பல அம்மாக்கள் 

குறுக்கும் , நெடுக்கும் வருகிறார்கள்.
புதிதுபுதிதாக
ஏகப்பட்ட சாமியார்கள் ,
தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் .

கார்ப்பரேட் அழிவதாக தெரியவில்லை.
மாறாக அதன் பெயரில்
கார்பொரேட் அனுப்பிய மதங்கள்
வளர்கிறது.
எந்த மதமும் தீர்வு இல்லை!
தற்சார்பும் , இயற்கை சார்ந்த வாழ்வும்
போதும் .
எல்லா மதமும் பிறந்த இடம் ஒன்றே !
மெசபடோமியா !

பங்காளிகள் தத்தமது வணிகத்தை வளர்க்க
தனித்தனி குழுவாக அமைத்து
ஒரே தாய் தகப்பனின் கதையை
வேறு வேறு பெயர்களில் சொல்லி
ஊரெல்லாம் சண்டை மூட்டி விட்டு அதில் குளிர் காய்ந்து
வணிகம் வளர்க்கிறார்கள் !
அவனே
அவன் வணிகத்தை அழிக்க போகிறானாம் !
அதற்க்கு தன்னார்வலர்கள் என்ற பெயரில்
MNC யில் பணியாற்றும் ஊழியர்கள்
பெங்களூரில் வீதி வீதியாக பேசுவது
கால கொடுமை!
மக்களுக்கு ஒரு நம்பிக்கை இப்போதெல்லாம்
சாப்ட்வேர் என்ஜினீர்ஸ் கொஞ்சம் அறிவாளிகள் என்று !
அவர்கள் சொன்னால் மக்கள் நம்புகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு ,
அதையும் பயன்படுத்தி கொள்கிறார்கள்
மத நிறுவனர்கள் !

இவர்கள் கல்வி மற்றும் வேலைக்கு மரியாதையும் கொடுத்து
அவர்களை கடப்பது என்பது
சாமானியரால் நிச்சயம் முடியாது!

விழித்து கொண்டெரெல்லாம்
பிழைத்து கொண்டார் !




Thursday, 4 January 2018

ஆந்திராவில் shopping mall ஆக மாறும் ரேஷன் கடைகள்

ஆந்திராவில் shopping mall ஆக மாறும் ரேஷன் கடைகள்






டிசம்பர் 31 அன்று , ஆந்திரா முதல்வர் சந்திர பாபு நாய்டு , குண்டூர் மற்றும் விஜயவாடாவில் , 4 இடங்களில் இருந்த ரேஷன் கடைகளை , ஷாப்பிங் மால் களாக மாற்றி , திறப்பு விழா நடத்தினார்.

நல்ல விஷயம் . இதன் மூலமாக , கிடைக்க போகும் பயன்கள் :

1. ஆந்திராவில் உள்ள கிராமங்களுக்கும், நகர்ப்புற பொருள்கள் சென்றடையும். கிராமங்களில் இனி எல்லா பொருள்களும் கிடைக்கும்.

 2. ரேஷன் கார்டிலேயே எல்லா பொருளும் கிடைப்பது இன்னும் சந்தோசம் .

3. ஆந்திரா முழுவதும் 6500 கடைகள் ஆரம்பிக்க பட இருக்கின்றன.

4. இதன் மூலம் 25000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

5. கிரிஜான் கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் , பொருள்கள் வாங்கி விற்க படஇருப்பதால் , மலைவாழ் மக்களுக்கு லாபம். GCC ( Girijan Cooperative Corporation ) என்பது, 1932 ம் ஆண்டு மலைவாழ் மக்கள் தங்கள் உற்பத்தி பொருளாகிய தேன் , மஞ்சள் , தினை , கிராம்பு ,போன்ற பொருள்களை விற்பதற்காக உ ருவாக்கப்பட்டது . 1956 ம் ஆண்டு முறையாக நிறுவனம் வடிவம் பெற்றுள்ளது. சுமார் 100000 ரூபாய் மதிப்பீட்டில் , 1000 பங்குகள் பங்குக்கு 100 ரூபாய் என்ற மதிப்பில் , 1000 பங்குதாரர்களோடு உருவாக்கப்பட்டுள்ளது.

6. 500 வகையான பொருள்கள் விற்கப்பட இருக்கின்றன.

7. 3 % முதல் 40 % வரை டிஸ்கோவுண்ட் பெற வாய்ப்புள்ளது.

8.தரமான பொருள்கள் மற்றும் பேக்கிங் பொருள்கள் பெற முடியும்.

இத்தனை நன்மைகள் நிறைந்த திட்டம் இந்த ஷாப்பிங் மால் திட்டம் .




இதன் உண்மை நிலை என்ன தெரியுமா ?

1. Village Mall என்ற பெயருடன் , உருவாக்கப்பட்டுள்ள  ரேஷன் கடைகள் 

Walmart , Reliance மற்றும் Future Group ஆகிய மூன்று தனியார் அமைப்புகளோடு சேர்ந்து ஆந்திர அரசு அமைத்துள்ளது.

2.வால்மார்ட் எனப்படுவது, அமெரிக்காவின் retailar நிறுவனம் . இது ஏற்கெனவே ஆந்திராவில் 15 கடைகளை வைத்துள்ளது. இந்தியா முழுக்க 8 மாநிலங்களில் தனது கடைகளை திறந்துள்ள , வால்மார்ட் , தனது அமெரிக்கா நிறுவன பொருள்களை விற்பனை செய்யும் சந்தையாகவே இந்தியாவை பார்க்கிறது.

3. இந்த இடங்களில் விற்கபடும் பொருள்கள் மீது , 3% முதல் 40% வரை மட்டுமே , ஒரு ரேஷன் கார்ட் வைத்திருப்பவர் தள்ளுபடி பெற முடியும்.

4. அந்த 40 % தள்ளுபடிக்கு உண்டான தொகையில் 25 % ஆந்திர அரசும் , 25 % மத்திய அரசின் முத்ரா திட்டமும் வழங்கும்.

5. 500 வகையான பொருள்கள் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது .
GCC எனும் ஆந்திரா கூட்டுறவு அமைப்பிடம்  இருந்து 30 பொருள்கள் மட்டும் , தான் இந்த கடைகள் கொள்முதல் செய்ய இருக்கின்றன . மீதம் 470 பொருள்களை அமெரிக்காவில் இருந்து பெற இருக்கிறது Village Mall .

6. உள்ளூர் கொள்முதல் என்பது , கண்ணுக்கெட்டாத தூரத்தில் நகர, ஆந்திராவில் உற்பத்தி ஆகும் மரபு மாற்றப்பட்ட உணவு பொருள்கள் தமிழகம் மற்றும் கர்நாடகம் போய் சேரும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே அதைத்தான் செய்து வருகிறார்கள் .

7. நேற்று வரை 1 ரூபாய் க்கு ரேஷன் கடையில் வாங்கப்பட்ட அரிசி , இன்று 25 ரூபாய் க்கு வாங்க வேண்டும்.

8. எல்லா பொருள்களும் ரேஷன் விலையில் இல்லை . மாறாக , நிறுவன விலையில்  40 % வரை தள்ளுபடி மட்டுமே ! 

9. அமெரிக்கா வின் நல்ல சந்தையாக மட்டுமே  , ஆந்திரா தன்னை முழுமையாக மாற்றியுள்ளது. 

10 . ஏழைகளின் வாழ்வாதாரம் , சில்லறை வணிகர்களின் வாழ்வு இதெல்லாம் வால்மார்ட் , ரிலையன்ஸிடம் ,விற்கப்பட்டு விட்டது.

11. ஏற்கெனவே அனந்தபூர் மக்கள் வாழ்வாதாரம் தேடி பெங்களூர் வீதிகளில் , குடிசை போட்டும் , வாட்ச்மன் வேலை பார்த்தும், கட்டிட வேலை பார்த்தும் வாழ்ந்து வருகிறார்கள் . 

12. அந்த வரிசையில் விரைவில் , குண்டூர்  , விஜயவாடா இணையும் .

பின்குறிப்பு :







வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...