Monday, 30 December 2019

இன்றைய தேதிக்கு முருங்கை காயின் விலை கிலோ ரூபாய் 460 விற்கிறது.
இது கடந்த 2 மாதங்களாக நடக்கிறது.
ஒரு முருங்கை காயின்
விலை 25 முதல் 35 ரூபாய்
விற்பனை ஆகிறது.
ஏனெனில் இது குளிர்காலம். அதனால் உற்பத்தி அதிகம் இல்லை.
எனவே எந்த செய்தி துறையும் இது குறித்து பேசவே இல்லை.
இதே நிலைதான் கோவைக்காய், மாங்காய், பரங்கி, பூசணி எல்லாவற்றிற்கும் !

இந்த நிலை வெங்காயத்திற்கும் பொருந்தும்.
ஆனால் இது மட்டும் பேசப்படுகிறது.

நாம் கூறலாம்,
முருங்கையின் தேவை அதிகம் இல்லை.
அல்லது முருங்கை பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் இருக்கிறது என்று !

ஆனால் வெங்காயம் தினமும் தேவை. அதனால் இறக்குமதி செய்யப்பட்டது என்று.

மற்றொரு காரணமும் உண்டு.
முருங்கை இந்தியாவில் மட்டும் தான் விளையும். இதை சில ஆப்பிரிக்கா நாடுகளில் குறைந்த அளவு விளைகிறது.
எனில் இதை எந்த நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்ய இயலாது.

அதே சமயம் எப்போதும் போல இந்தியாவில் இருந்து
அமெரிக்கா, லண்டன், குவைத், துபாய்
போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எனில் இறக்குமதி எனப்படுவது நம்முடைய பற்றாக்குறை மட்டுமல்ல.
வேறு ஒரு நாட்டின் அதீத விளைச்சலும் தான் !



சில ஆண்டுகளாக தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்ற கொள்கை எல்லோர் மனதிலும் பரவி இருக்க,
தன் மதம் எது என்ற தேடலின் முடிவு
ஆசிவகத்தில் முடிந்துள்ளது.

இன்று தேடிய நம் மக்கள்
ஏன்
பல நூறு ஆண்டுகளாக தேட வில்லை என்றால், அதன் வரலாறு ஒரு கசப்பு நிறைந்தது.
அது இப்போ வேண்டாம்.

ஆனால் இப்போ இந்த ஆசிவகம் யார் ஆய்வு செய்து சொல்றாங்க.
யார் இந்த நூல்,
வழிபாட்டு முறை சொல்றாங்க பாருங்க.

திராவிட முன்னேற்ற கழக சார்பில்
பேராசிரியர் நெடுஞ்செழியன் எழுத
ஸ்டாலின் அவர்கள் அதை
வெளியிட்டுள்ளார்.

இதற்கு பிறகு இது பாட புத்தகங்கள் வழியாக குழந்தைகளிடம் சேர்க்கப்பட்டு
அடுத்த தலைமுறைக்கு கடத்த படும்.

எப்படி உடை அணிய தமிழர்களுக்கு சொல்லி கொடுத்தார்களோ
அதேபோல்
தமிழா இது தான்
உன் மதம் என்றும் சொல்லி கொடுப்பார்கள்.

இது மதம் சார்ந்தது என்றால்
ஐயனார் வழிபாடு இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதை நமக்கே சொல்லி தர போகிறார்கள்.

இதற்கு பின்னாலும் வாழ்வியல் உள்ளது. முன்னேற்றம் உள்ளது.
ஆனால் யாருடைய முன்னேற்றம்??





விளம்பரங்கள் II


தற்சார்பும் நான்கு தூண்களும் :

மதம்
பணக்காரன்
சமூகம்
செய்தி தாள்கள்
இந்த நான்கு தூண்கள் தான் முதல் நிலை விளம்பரத்தார்கள்.

இவர்கள் பங்கு தற்சார்பு பொருளாதாரத்தில் உள்ளதா?

நான்கு சக்கர வாகனங்கள் ஓடும் இடத்தில் இரண்டு சக்கர வாகனம் சற்று வேகம் குறைவாக தான் செல்லும்.

அப்படித்தான் தற்சார்பு ஓடி கொண்டு இருக்கிறது.
ஏனென்றால்,
இங்கு தற்சார்பு, இயற்கை விவசாயம், கட்டுமான மாற்றங்கள் கொண்டு வர போராடியது
சமூக ஆர்வலர்களும், சமூக வலைதளங்களும்தான்.

இந்த இரண்டு சக்கரமும் தொடர்ந்து சுழலும் வரை தற்சார்பு நடைபெறும்.
ஆனால்
இதுவும் நாளை நான்கு தூண்களுக்குள் சிக்கி கொள்ளலாம்.
( ஏற்கெனவே 50%அங்கு தான் இருக்கிறது. )

அப்படி சிக்கி கொண்டால், இதுவும் ஐரோப்பிய வணிகர்களாலே ஆளப்படும்.
அப்பவும் ஏற்றுமதி மட்டுமே ஊக்குவிக்கபடும்.




விளம்பரங்கள் ( முதல் நிலை ) - I



விளம்பரங்கள் இரண்டு வகைப்படும்.

முதல் நிலை
நமக்கே தெரியாமல் நம் தலைக்குள் ஏற்றுவது.
இது தான் அடிப்படை.

இரண்டாம் நிலை
நாம் அன்றாடம் பார்க்கும் பட, ஓவிய மற்றும் அசைவு தொழில் நுட்ப விளம்பரங்கள்
----------------------------------------
முதல் நிலை விளம்பரம் :

கீழே உள்ள படத்தில் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரம் உள்ளது.

இது தான் விளம்பரம்.

விளம்பரம் என்ற பெயரில் போட்டால் அது மக்களை சென்றடையாது. அதையே செய்தியாக போட்டால்
மிக எளிதில் சென்றடையும்.

செய்தித்துறைகள் இதை தான் செய்கின்றன.

பிரெஞ்சு புரட்சி ஏற்பட்ட காலந்தொட்டு
பத்திரிகைகளின் ஒரே வேலை ஒரு விஷயத்தை விளம்பர படுத்துவது தான்.

ஆனால் அதை படிக்க சொல்லவும் விளம்பரம் தேவை பட்டது.
அதை கல்வி நிலையங்கள் செய்தன.
தினந்தோறும் செய்தி தாள் படிக்க வேண்டும் என்று கூறின.

இதுவும் பள்ளிக்கூடம் போனால் தானே நடக்கும்.
எனில் பள்ளிக்கூடத்திற்கு விளம்பரம் தேவை பட்டது.
அதை இங்கு வாழ்ந்த மத குருமார்கள் செய்தனர்.
பள்ளிக்கூடம் சென்றால் தான் அறிவு வளரும் என்று !

எனில் மதகுருமார்கள் ஏன் செய்தனர்.
அவர்கள் ஏன் செய்ய வேண்டும்.
ஏனினில் விளம்பரம் தரும் பணக்காரன் இந்த சாமியாரின் பக்தர். இதில் எல்லா மத குமாருக்கும் பங்குண்டு.

இவைதான் நமக்கு முதல் நிலை விளம்பரம் தரும் நான்கு தூண்கள்.

மதம்
பணக்காரன்
சமூகம் எனப்படும் பள்ளிகள்,மருத்துவ மனைகள்
செய்தி தாள்கள்



இந்துக்களின் காலக்கணக்கு,
உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்..

கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்
கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்
கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்
கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்
கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு
கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!

குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!
இந்து என்று சொல்லுங்கள்..
தலை நிமிர்ந்து நில்லுங்கள்..
பதிவு செய்தவர்.... ராமன் ஐயங்கார் அவர்கள்!!



விஜய் சேதுபதியும் , விக்ரமராஜாவும் !



விஜய் சேதுபதி நடித்துள்ள விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்துகிறார் விக்கிரமராஜா .
என்ன விளம்பரம் அது ?

ஒரு ஆப்  , அது தான் மாண்டீ ஆப்

ஒரு போன் கால் செய்தால் , வீட்டிற்கு தேவையான எல்லா வகையான உணவு பொருளும் கிடைக்கும் .
ஏற்கெனவே பல்வேறு , ஆப் கள் உள்ளன.
டூர் டெலிவரி வந்து விட்ட நிலையில் , இதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் ?

ஏனெனில் ,
அண்ணா எப்போவுமே ,
இது தமிழனின் அடையாளம் என்றே கூறுவார் .
நீ தமிழனா இருந்தால் இத ஷேர் பண்ணு என்று ஒரு வாசகத்தை , தமிழ்நாட்டில் பிறந்த தமிழர் அல்லாத ஒரு கூட்டம் அடிக்கடி பயன்படுத்தும் .
அதே தொழில் நுட்பம் தான் ,
விஜய் சேதுபதியும் செய்வார் .

மினிஸ்டர் வைட் வேஷ்டிகள் விளம்பரத்தில் நடித்த போது ஜல்லிக்கட்டு போராட்டத்தை சரியாக பயன்படுத்தினார் . தமிழனின் அடையாளம் என்றார். ஆம் வேஷ்டி தமிழனின் அடையாளம் தான் . ஆனால் மினிஸ்டர் வைட் கனடா நாட்டு நிறுவனம் .

அணில் சேமியா விளம்பரம். இது தமிழ்நாடு உற்பத்தி என்றாலும் , உண்மையில் இதன் அடையாளம் வடஇந்திய அணில் நிறுவனமோ என்ற ஐயமே உள்ளது .

இப்பவும் , மாண்டீ ஆப் அறிமுகம் செய்யும் போது ,
இது தமிழனின் அடையாளம் என்றே கூறுகிறார் .

கடைசி விவசாயி என்று பெயர் வைத்து திரைப்படத்தில் நடிப்பது . எதிர்மறையான எண்ணங்களை விதைப்பது . அதை தமிழனின் அடையாளம் என்று கூறுவது .
இது தான் விஜய் சேதுபதியின், அடையாளம் .

உண்மையிலேயே அவருக்கு தமிழரின் மீது மதிப்பு இருந்தால்
குறைந்த பட்சம் ,
கடைசி விவசாயி என்ற பெயரையாவது மாற்றட்டுமே !
மாற்றமாட்டார் ,
அதான் மாண்டீ வருகிறதே , இது ஒரு அமெரிக்கா , ஜப்பான் நிறுவனம் .
நமக்கான உணவு பொருள் அமெரிக்கா தர காத்திருக்கும் போது ,
இப்போது விவசாயம் செய்பவன் , விஜய் சேதுபதியை பொறுத்தவரை கடைசி விவசாயியாக இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார் போலும் !

பொருளாதார பயம்


இன்னும் எத்தனை காலத்துக்கு தாண்டா இந்த பயத்தை விதைப்பீங்க ??

எல்லாம் கிட்டத்தட்ட அழித்து விட்டோம் . இன்னும் ஆசை அடங்கவே இல்லையா ?

எறும்பை பாருங்கள் , அந்த தேனியை பாருங்கள்

சேமிப்பு முக்கியம் என்கிறீர்கள் .

இப்போ மக்கள் முன்னேறல.

ஆனால் வங்கி உரிமையாளர்கள் முன்னேறி விட்டான் .

பெண்களும் வேலைக்கு போனால் தான் நாளைக்கு சோறு கிடைக்கும் என்றெல்லாம் பயமுறுத்தி , இன்று சாலைகளில் ட்ராபிக்கும் , சேலைக்கடையும் , அழகுபடுத்தும் கடையும் , பெருகியது தான் மிச்சம் .

அதோட உணவு விற்கும் கடையும் பெருகியது.

அது இப்போ zomato , swiggy யில் போய் நிக்குது .

இப்போவும் விதைக்கப்படும் அதே பொருளாதார பயம் ??




Monday, 23 December 2019

வணிகம் Part 1

வணிகம் என்பது என்ன?

பொருளை வாங்கி விற்பவன் வியாபாரி.
அது வணிகம் அல்ல.
வணிகமும் வியாபாரமும் ஒன்று என்று தவறான புரிதல் விதைக்க பட்டுள்ளது.

வணிகத்தின் ஒரு கடை நிலை பிரிவு தான் வியாபாரம். இன்றளவும் இதை கடை என்றே வழங்குகிறோம்.

இந்த வியாபாரத்தின் அண்ணன் தம்பிகள் தான்
போக்குவரத்து, வங்கிகள், காப்பீடு, நிதி நிறுவனங்கள், மற்றும் குடோன் என்று வழங்கப்படும் பண்டக சாலைகள்.

தமிழர்கள் வாணிகத்தில் சிறந்து விளங்கினார்.
வியாபாரத்தில் அல்ல.

வியாபாரத்தில் அன்றும், இன்றும் சிறந்து விளங்குவது ஐரோப்பியர்கள் மட்டுமே !

எனில் வணிகம் என்பது என்ன?




வானியல் ஆய்வு செய்வது.
வானியல் அறிந்து, எந்த மண்ணில் தற்சமயம் என்ன நடக்கும் என்பதை அறிந்து, அம்மக்களுக்கு என்ன தேவை படும் என்று அறிந்து, அதை அந்த மண்ணிற்கு கொண்டு சேர்ப்பது தான்
வான் இகம். வாணிகம்.
செவ்வாய்யும், வெள்ளியும், நிற்கும் திசை கண்டு மழை சொல்லும் வல்லமை பெற்றவன்
வாணிகன்.
புதன், சனி, நிலை அறிந்து விளைச்சலும், வியாதியும் கண்டு
மருந்து கொடுத்தவன்
வாணிகன்.
( போதி தர்மர் இதை தான் செய்தார் )

தமிழ்நாட்டில் பொய்யான ஒரு சந்தையிடுதல் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்டது.
இவன் அறிவற்றவன்.
பிற இன மக்கள் மட்டுமே அறிவாளி.
அவர்களை பின்பற்றுங்கள் என்று !

ஆனால் இன்றும்
பிற நாடுகளில் வாழும் மக்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.
தமிழர்கள் என்றவுடன்
அவர்கள் வானியலும் மருத்துமும் அறிந்தவர்கள் என்பதை உணர்ந்தே வைத்து இருக்கிறார்கள்.

இந்த வாணிகம் யார் கையில் உள்ளதோ
அவர் தான் ஆள முடியும்.
வாணிகம் பயில்வோம்.

படத்தில்
Symbol இருப்பது எகிப்தியர்கள் செய்த வாணிகம்.
மீன் உள்ளது பாண்டியர்கள் செய்த வாணிகம்.

(சீனா வின் yinyaun சின்னம்
அங்கும் பாண்டியர்கள் இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது. )

( பாண்டியர் என்ற பெயரில் எகிப்து மன்னர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிட தக்கது. )

இப்போ வெங்காயம் எகிப்தில் இருந்து வந்த கதை??

சியாமளா பிரசன்னா
24. 12.2019





நுகர்வை அதிகரிப்பது - I

புள்ளிங்கோவும் ஹோண்டா டியோவும் :
-----------------------------------------------------




இந்தியா பணப்புழக்க பிரச்னை மற்றும் தேவை குறைவு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால் இந்திய வளர்ச்சி பாதிக்க படுகிறது.
இதனை தடுக்க வேண்டும் எனில்
அதற்கு சில வழிகள் உள்ளன என்று assocham எனும் இந்தியா வணிகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு கூறி உள்ளது.

Assocham கூறுகின்ற வழிகள் :
1. G. S. T. உயர்த்த பட வேண்டும்
2. வருமான வரி விகிதம் உயர வேண்டும்
3. கடன் ஓட்டம் அதிகரிக்க வேண்டும்

இதை எல்லாம் விட முக்கியமானது

நுகர்வை உயர்த்த வழி வகை செய்ய வேண்டும்.

மற்றதெல்லாம் கூட பரவா இல்லை.
நுகர்வை எப்படி உயர்த்துவது.
ஒரு குழந்தை இரண்டு இட்லி உண்ணும் இடத்தில் 4இட்லி உண்ண முடியுமா?

முடியாது தானே !!!
ஆனால் முடியும் என்று நிரூபித்தால் அவன் தான் சிறந்த வணிகன்.




57000 ரூபாய் மதிப்புள்ள
ஹோண்டா டியோ வாகனம்
2018 ல் விற்பனை 38484
2019 ல் விற்பனை 42481
கிட்ட தட்ட 10% அதிகரித்து உள்ளது.

காரணம் மூன்று தான்
புள்ளிங்கோ
புள்ளிங்கோ
புள்ளிங்கோ

புள்ளிங்கோ என்றாலே அங்கு ஹோண்டா டியோ கண்டிப்பாக இருக்கும்
என்ற ட்ரெண்டிங்.

அப்படிதான் 4 இட்லி சாப்பிடுற குழந்தை தான் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கிய பால் சாப்பிடும் குழந்தை தான் அறிவாளியாக இருக்கும்.

இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைக்கு தான் உடனே வேலை கிடைக்கும்..

கைராசி, முகராசி போல ஆயிரத்தெட்டு ட்ரெண்டிங் இருக்கும் போது
கிடு கிடுன்னு
இந்தியா பணமதிப்பு உயரும் பாருங்க !!!

சியாமளா பிரசன்னா
23.12.2019

Saturday, 16 March 2019

பெண்ணுரிமை

பெண்ணுரிமை

பெண்ணின் திருமண வயது 18

1955 ம் ஆண்டு பெண்ணின் திருமண வயது 18, ஆணின் திருமண வயது 21 என்று சட்டம் இயற்றப்பட்டது .
ஏன் இந்த சட்டம்?
யாருக்காக இந்த சட்டம் ?
யாரால் முன்மொழியபட்ட சட்டம் ?
இதனால் பெண்கள் பலன் பெற்றார்களா ?
சமூகத்தின் தவறுகள் முடிவுக்கு வந்து விட்டதா ?

இது போன்று பல கேள்விகளை கொண்டுள்ளது இந்த திருமண வயது உச்ச வரம்பு சட்டம் .

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ,
பெண்களின் நலன் என்ற ஒற்றை வார்த்தையே இதற்கு பதில் தரும் .

பெண்களின் சுதந்திரம் ,
அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை என்ற கோட்பாடு தான் பெண்ணின் திருமண வயதை தீர்மானிக்க வேண்டிய காரணிகளாக அமைந்துள்ளன .
-------------------------------


கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட  பெண்கள் கல்வி கூடம் செல்லவில்லை .
பெரிதாக ஞானம் பெறவில்லை .
ஒரே வேலை தான் அவளுக்கு !
பிள்ளை பெறும் இயந்திரம் போல் அவள் இருந்திருக்கிறாள் .

அதையும் கடந்து ,
ஆணுக்கு சேவகம் செய்ய பிறந்தவள் போலும் வாழ்ந்து இருக்கிறாள் .அதே சமயம் அவள் கணவன் இறந்து விட்டால் , சிறுவயது பெண்ணாக இருந்தால் கூட அவள் விதவை கோலம் கொள்ள வேண்டும் .
அத்தருணம் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறாள் பெண் ,
வடஇந்தியாவில் தென்னிந்தியாவை விட அதிக கொடுமைகள் அரங்கேறி உள்ளன .

கணவன் இறந்தவுடன் , மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்து விட வேண்டும் என்ற வழக்கம் பெரும்பாலும் இருந்துள்ளது .

இவற்றை மாற்ற வேண்டும் என்று எண்ணம் பல நல்ல உள்ளங்களுக்கு வந்துள்ளது . அவற்றில் முதன்மையானவர் ராஜாராம் மோகன்ராய் .
இவர் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் . அந்த போராட்டத்தில் வெற்றியும் பெற்றார் .

-------------------------------

சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க ராஜாராம் மோகன்ராய் போராடியதை போலவே , பெண் கல்வி வளர்ந்தால் பெண்களின் இழிநிலை மாறி விடும் என்று போராடியவர் ஜோதிபாய் பீலே .
இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் .

இவர் 19 ம் நூற்றாண்டின் மாகாத்மா .
20 ம் நூற்றாண்டில் தான் காந்தியடிகள் மஹாத்மா என்று வழங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . ஜோதி பாய் பீலே , தன மனைவியை ஐ படிக்க வைத்தார் .பெண்களுக்கென்று கல்வி கூடம் அமைத்து , பெண் கல்வி உயர போராடினார் .அவர் அமைத்த கல்வி கூட்டமே இந்தியாவில் பெண்களுக்கான முதல் கல்வி கூடம் ஆகும் .

மேலும் ஒருசில முக்கிய நபர்களை விடுத்து பெண்ணியம் , மற்றும் அதன் கண்ணியம் பற்றி பேசுவது சரியாகாது.

அப்படி ஒரு முக்கிய நபர் தான் அன்னிபெசன்ட் அம்மையார் , மற்றும் பாரதியார் .
முதல் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்ற போது ,
இந்தியாவின் போராளிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க பட்டதாம் . அப்போது அந்த கூட்டத்திற்கு பாரதியாருக்கும்  அழைப்பு விடுக்க பட்டதாம் .
அந்த கூட்டத்திற்கு வந்த அனைவரையும் அன்னிபெசன்ட் அம்மையார்  தனித்தனியாக சந்தித்து வரவேற்பு கொடுத்தாராம் .
பாரதியை பார்த்து எங்கே உங்கள் மனைவி என்று கேள்வி கேட்க ,
அவளுக்கு என்ன தெரியும் ? அவள் எதற்கு இந்த கூட்டத்திற்கு ?என்று பதில் சொன்னாராம் .
உடனே அன்னிபெசன்ட் , உமக்கு மட்டும் என்ன தெரியும் ? என்று கேட்டாராம் .
அந்த ஒற்றை கேள்வி பாரதியை அதிர வைத்துவிட்டது . அந்த கேள்வியின் விளைவு தான் பாரதி
பேசிய பெண்ணுரிமை !

------------------------------------

மனித வாழ்கையின் மனநிறைவு :

மனித வாழ்கையின் மனநிறைவு :




வீதிகள் வெறிசோடி கிடக்கின்றன . முன்பு போல் குழந்தைகள் வீதிகளில் விளையாடுவது இல்லை . 
மிதிவண்டி ஒட்டி உரசி கொள்வது இல்லை . 
குழந்தைகளை பார்வையிட சில தாய்மார்கள் வீதிகளில் அமர்ந்து பேசிக்கொள்வதும் இல்லை . 

சிறு குழந்தைக்கு சோறு ஊட்ட நிலவை காட்ட எந்த அம்மாவும் வீதிக்கு வருவதே இல்லை .
இரவில் மீந்து போன உணவை உண்ண , எந்த நாய்கள் கூட்டமும் இல்லை . இரவில் பிட்சை கேட்பவர்கள் இல்லை .
வீதி எங்கும் ஒரே அமைதி .

மாலை ஆறு மணிக்கு விளக்கு ஏற்றி வைத்தால்தான் , மஹாலட்சுமி வருவாள் , செல்வம் பெருகும் என்று கூறி கொண்டு , 
மாலை வேளையில் , வாசல் தெளித்து சுத்தம் செய்வோர் இல்லை .

மாறாக வீட்டில் உள்ள எல்லோரும் வேலை பார்த்தால் தான் செல்வம் பெருகும் என்று உழைப்பிற்கு முக்கியத்தும் கொடுத்து , 
எல்லோருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பதால் , 
வீட்டில் விளக்கு ஏற்றவோ , வாசலில் லைட் போடவோ ஆளே இல்லை .

ஒரே உழைப்பு ! 
விளக்கு போடவே ஆள் இல்லாத வீட்டில் , வெளியில் விளையாட குழந்தைகள் எப்படி வரும் ? அம்மா எங்கே நின்று யாருடன் பேசுவாள் ?

இதையெல்லாம் எதிர்பார்த்தால் ,
அது முட்டாள்தனம் தானே !
இன்றைய சூழலில் ,
பணம் சம்பாதிப்பது கூட பேராசை இல்லை .
ஆனால் 
இரவை ரசிப்போம் வாங்க ! என்று அழைப்பு விடுக்க நினைப்பது பேராசையின் உச்ச கட்டம் .!

பேராசை பெரு நஷ்டம் ஆகும் .
யாரிடமாவது இது குறித்து பேசினால் ,
நம்மை மிக கேவலமாக பேசுவார்கள் .
அதோடு நம்மிடம் எப்போதாவது ஒருமுறை பேசுவது கூட நின்று விடும் .

சத்தம் இல்லாமல் ,
தனியாக ரசித்து விட்டு கடந்து விட வேண்டும் .
ஆனால் ,
இந்த இயற்கைக்கோ ஒரு கெட்டபழக்கம் ,
தனியாக ரசிப்பதை விட , கூட்டமாக ரசிக்கும்போது தான் இன்பம் அதிகம் கிடைக்கும் .

தனிமரம் எப்படி சுகமான காற்றை தருவதற்கு கடினப்படுமோ ?
அப்படிதான் , தனியாக அந்த காற்றின் ஆனந்தத்தை அனுபவிப்பதும் மிகவும் கடினம் .

ஆனால் என்ன செய்வது ?

எல்லோரும் சமம் என்ற கோட்பாடு ,
இயற்கையின் முன்னால் ,
என்பது எல்லோருக்கும் மறந்தே விட்டது.
பகுத்தறிவின் உச்சத்தில் நிற்பதால் , பணரீதியாக சமம் என்று எல்லோருக்கும் கற்பித்தபடுத்தப்பட்டுள்ளது .
---------------------


Friday, 28 September 2018

ஆன்லைன் வர்த்தகம்

இந்தியாவில் பண மதிப்பு தொடர்ந்து குறைந்து வர முக்கிய காரணம்
ஆன்லைன் வர்த்தகம் .
இந்தியாவின் பிரபலமான ஆன்லைன் வர்த்தகம் எல்லாம் ,
வெளிநாடுகளை சேர்ந்தது .
அமேசான் , ஈபே , அமெரிக்கன் ஸ்வான் போன்ற அமைப்புகள் நேரடியாக நம் பணத்தை வெளிநாட்டிற்க்கே எடுத்து செல்கின்றன .
ஏனைய ஆன்லைன் வர்த்தக அமைப்புகள் , 
வெளிநாட்டு அமைப்போடு தொடர்புடையவை தான் .




இவ்வாறாக இந்தியாவில் மட்டும் 35 க்கும் மேற்பட்ட ஆன்லைன் வர்த்தக அமைப்புகள் இயங்கி வருகின்றன .
உள்ளூர் வணிகம் வளர்ந்தால் ,நம் பணம் இங்கேயே சுழலும் .
நம் பண மதிப்பு மாறாது .
அயலாரின் வணிகம் வளர்ந்தால் ,

ஒரு நாள் இங்கு எந்த மதிப்பும் இருக்காது .



மருந்து நிறுவனங்கள்

தனியார் மருந்து நிறுவனங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் .
ஏன்னா ,
ஆன்லைன் விற்பனை பெருகுவதால் , மக்கள் நேரடியாக மருந்து வாங்கி உண்கிறார்களாம் , அவர்கள் உடல் நிலை கெட்டுவிடுமாம் .
அதனாலதான் வேலை நிறுத்தம் ..
மக்கள் மீது அவ்வளவு அக்கறை .

நம்புறமாதிரி இல்லையே என்றால் கடைசியில் சொல்கிறார்கள் , 8 லட்சம் மருந்து ஊழியர்களும் , அதன் பின்னால் 40 லட்சம் பேரும் அவர் தம் குடும்பம் என்ற முறையில் மொத்தம்  ஒரு கோடி மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்க படுகிறார்களாம் .
தமிழ்நாட்டில் , மொத்தம் 7 கோடி மக்கள் .
இதில் பத்து பேரில் ஒருவர் சர்க்கரை நோயாளி .
மொத்தம் 7  லட்சம் பேர் ,
புற்றுநோய் 3 லட்சம் பேருக்கு
இன்னும் தைராய்டு , எயிட்ஸ் என்றும்
அதில் மருத்துவமனை பிரசவம் ( இதும் இப்போது நோய் வரிசையில் உள்ளது )
இப்படி தொடர் மருந்து உண்ணும் மக்களை உருவாக்கி
அதில் வாழும் 1 கோடி மக்களுக்காக
தமிழகத்தின்  7 கோடி மக்கள் தியாகம் செய்கிறார்கள் .
இதில் குறுக்க ஆன்லைன் மருந்து வந்தால்

என்னவாகும் ?
அதான் வேலை நிறுத்தம் .



ஆழி விரல் - மோதிர விரல்

வலம் புரி ஜான் வைத்த போட்டி இது . 2001 - 2002     ல் சன்டிவியில் ,காலை நேரங்கள் இவர் கூறும் காய்கறி மருத்துவத்தில் தான் தொடங்கியது . அப்போது இவர் வைத்த மருத்துவம் சார்ந்த குறிப்பு தான் இந்த விரல் அசைக்க முடியாத நிலை .

அணைத்து விரலையும் , ஒன்றாக வைத்து இந்த ஒரு விரலை மட்டும் தூக்கி அசைக்க முயற்சித்தால் , அது அசைக்க முடியாது .









அந்த நரம்பு தான் நம் இதயத்தோடு தொடர்புடையது .இதய துடிப்பு , அதோடு தொடர்புடையது . அதனால் தான் கிறிஸ்தவ மதத்தில் மோதிரம் மாற்றும் வழக்கம் வந்தது . திருமணத்தில் இதயத்தையே மாற்றி கொள்கிறார்களாம் .
இப்போதும் விபூதி இட்டாலும் , குங்குமம் இட்டாலும் இந்த மோதிர விரலால் செய்வதே வழக்கம் . தமிழக திருமணங்களில் , மோதிர விரலால் , மணமகன் மணமகளுக்கு குங்குமம் சூட்டும் வழக்கம் உள்ளது .
மோதிர விரல் அல்ல அது .
ஆழி விரல்
ஆழி என்றால் சுழற்சி என்று பொருள் . இதயத்தில் தான் எல்லா சுழற்சியம்  நடக்கிறது . இந்த உடலின் சுழற்சி நிகழ்கிறது .

அழகான தமிழ்
அறிவியலால் நிறைந்த தமிழ் .






சட்ட பிரிவு 497

இந்திய சட்ட பிரிவு 497 நீக்கப்பட்டுள்ளது .
உடனே எல்லோரும் எதோ , திருமணமான பெண்களால் இந்த கலாசாரமே சீர் கெட போகிறது , அதற்க்கு சட்டம் வழி செய்து விட்டது என்றெல்லாம் பதிவிட்டு , உணர்வுகளை அள்ளி இறைப்பதற்கு முன்பு ,

இந்த சட்டம் 1860 போடப்பட்டது . அப்போது இந்திய என்ற நாடும் இல்லை . இது எவர் போட்ட சட்டம் , இதெப்படி , சுதந்திர இந்தியா சட்டத்தில் வந்தது என்பதும் தெரியவில்லை . இது உண்மை எனில் , அம்பேத்கார் எழுதியது எல்லாம் பிரிட்டிஷார் எழுதிய சட்டமே என்றாகும் .

இரண்டாவது , ஒரு பெண் கணவனின் சொத்து என்று அந்த சட்டத்தில் உள்ளது . இங்கு விவாகரத்து வழக்குகளே லட்ச கணக்கில் இருக்கிறது . அது பெண் உரிமை . அதே சமயம் , சமீபமாக , வடஇந்தியாவில் , ஒரு குடிகாரன் தன மனைவியை வைத்து சீட்டாடி தோற்று விட்டான் . அதற்காக தன மனைவியின் சம்மதம் இன்றி  அவளை , வெற்றி பெற்றவனோடு செல்ல கட்டாயப்படுத்திய கொடுமையும் நிகழ்ந்துள்ளது .

மூன்றாவது , இந்த தவறில் , ஆண் மட்டுமே தண்டனைக்கு உட்பட்டவனாக இருந்தான் . அந்த தண்டனை சட்டம் நீக்கப்பட்டுள்ளது .

இதில் இருவரும் உடன்பட்டு நடக்கும் தவறில் , அல்லது பெண் செய்யும் தவறில் ஆண் மட்டும் தண்டனைக்கு உரியவன் என்பதால் , பல பெரிய நிறுவனங்களில் பெண்கள் செய்யும் தவறை ஆண்கள் சுமக்கிறார்கள் .


ஆகையால் , இந்தியாவின் சட்டங்கள் , தமிழகத்திற்கு அல்ல .
புகைந்தது போதும் , எரிவதை பிடுங்கி விடுங்கள் .
மனம் தூய்மையாகவும் , குடும்பம் என்ற அமைப்பின் மீது நம்பிகை கொண்டும்
இனிய இல்லறம் எல்லோருக்கும் அமையட்டும் .



Thursday, 27 September 2018

இந்திய பணமதிப்பு குறைவு

இன்று (  sep  27 , 2018 )
இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட ரூபாய் 73 நெருங்க உள்ளது .
இந்த ஆண்டு மட்டும் ரூபாய் 12 என்ற அளவில் இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது .




இதனால் , வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருள்கள் இறக்குமதி செய்து உற்பத்தி செய்ய கூடிய தொழில்கள் பெரும் அளவில் பாதிப்பு அடைந்துள்ளது . பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வருகிறது .
இதற்காக இந்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .
அந்த வகையில்
ஏற்கெனவே ,

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ,இந்தியாவிற்கு பணம் அனுப்பும் பொழுது , டாலராக அனுப்புங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளது .
மீண்டும் , இறக்குமதியின் அளவை முற்றிலும் குறைத்தால் தான் , இந்திய மதிப்பு உயரும் என்ற அடிப்படியில் ,
19 ஆடம்பர  பொருள்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு செய்துள்ளது .
கார்கள் , டயர்கள் , குளிர்சாதன பெட்டிகள் , என்று 19 பொருள்களின் வரி விகிதம் உயர்ந்துள்ளது .



இந்நிலையில் தங்கத்தின் மீதான வரி , 10 % உயர்த்த முடிவு செய்துள்ளது .
gst உடன் சேர்த்து 15 % உயரும் வாய்ப்புள்ளது .
ஒரு புறம் இறக்குமதியை குறைக்கும் முயற்சி என்றாலும் ,
மற்றொரு புறம் ஏற்றுமதி பாதிப்படையும் .
ஏற்றுமதியும் பாதிக்க படுமேயானால் , மீண்டும் பணமதிப்பு வீழ வும் வாய்ப்புள்ளது .

ஆக மொத்தம் , தங்கத்தின் விலை உயரும் போதே ,
அணைத்து பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது .

இது ஒரு தற்காலிக சிக்கல் தான் , பண மதிப்பு  சீக்கிரம் கட்டுக்குள் வந்து விடும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது .



நம்மகிட்ட கலர் கலராக நகை இருந்தாலும் , அது மதிப்பில்லாத கவரிங் நகையாக இருந்தால் என்ன பயன் ?

சரி

உண்மையில் , இறக்குமதி , ஏற்றுமதி மட்டும் தான் இந்திய பணமதிப்பை பாதிக்கிறதா ?

ஆன்லைன் வர்த்தகம் வருவதற்கு முன்பு இது தான் உண்மை .
ஆனால் இன்று இந்தியாவில் 35 க்கும் மேற்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றன .
இங்கு உள்ள  ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டை சேர்ந்தவை . அல்லது இந்திய நிறுவனங்களோடு இணைப்பில் உள்ளவை .




அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தகத்தை பற்றியம் , அதன் வழியாக , அயல் நாட்டிற்கு செல்லும் பணமதிப்பு அதிகமாகி வருவது பற்றியும் அரசு  மற்றும் பொருளாதார வல்லுநர்கள் பேசுவதே இல்லை .



பெட்ரோல் , இறக்குமதி தான் காரணம் என்பது போன்ற மாயை காரணங்கள் இருந்த போதிலும் ,
ஆன்லைன் வர்த்தகத்தை பற்றி யாருமே பேசாமல் இருப்பது ,
ஆச்சரியம் தான் .

Thursday, 6 September 2018

விவசாய கடன் - கார்போரேட்டுகள்

2004 ம் ஆண்டு முதல் இந்தியாவில் விவசாய கடனை திருப்பி தர இயலாமல் அல்லது விவசாயத்தில் லாபம் பெற இயலாமல் என்று கிட்டத்தட்ட 18241 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் . கடன் கிடைக்காமலும் , தொடர்ந்து விவசாயம் செய்ய இயலாமலும் கூட தற்கொலைகள் தொடர்கின்றன .

இந்த ஆண்டு 2018 ஜனவரி தொடங்கி ஜூன் வரை மட்டும் 1607 பேர் மஹாராஷ்டிராவில் தற்கொலை செய்து இருக்கிறார்கள் .
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராடி , தள்ளுபடியும் பெற்றனர் .கிட்டத்தட்ட 35 லட்சம் விவசாயிகளுக்கு 13,782 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .
மகிழ்ச்சியான செய்தி இது .

ஆனால் இந்த தள்ளுபடி , விவசாயிகளுக்கா தான் நடந்ததா ? அவர்கள் போராட்டம் தான் வெற்றி பெற்றதா ? தெரியவில்லை .
காரணம் , தகவல் அறியும் சட்டத்தின் வழியாக ரிசெர்வே வங்கி  தந்துள்ள தகவல் ஒரு குறிப்பிட்ட தகவலை  கூறுகிறது .

அதாவது 2016 ம் ஆண்டு மட்டும் வங்கிகள் 615 பேருக்கு 58 ஆயிரத்து 561 கோடி ரூபாய் விவசாய கடனாக வழங்கி உள்ளது அதாவது ஒரு வங்கி கணக்கிற்கு  95 கோடி வீதம் விவசாய கடன் வழங்கியுள்ளது ஸ்டேட் வங்கி .
அந்த 615 பேர் யார் ?


இதில் 4 % பேர் கூட விவசாயிகள் இல்லை . எல்லோரும் கார்போரேட்டுகள் . பெரிய நிறுவனங்கள் . அம்பானியும் , அதானியும் , தாங்கள் விவசாய துறையில் ஈடுபடுவதாக கூறி கடன் பெற்று உள்ளார்கள் .
இந்தியாவில் 127 விதமான பழசாறு வகைகளை உற்பத்தி செய்கிறது ரிலையன்ஸ்  நிறுவனம் . இதற்காக மஹாராஷ்ட்ரா விவசாயிகளிடம் பெருவாரியாக நிலங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன . அந்த குத்தகை நில உரிமையாளர்கள் 200 பேர் கொண்டு தான் கடனும் பெறப்படுகிறது .

இப்போது விவசாய கடன் தள்ளுபடி எல்லாம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது . பெரிய நிறுவனங்களுக்கு தான் .


இது போன்ற கடன்களை மோடி அரசு மட்டுமல்ல ,அதற்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி யம் வழங்கி இருக்கிறது .

ஆக  மொத்தம் விவசாயிகள் எப்போதும் போல , எல்லா அரசுகளாலும்  ஏமாற்றப்படுகிறார்கள் . அவர்கள் பெயர் சொல்லி பெரிய நிறுவனங்களே நாட்டை சுரண்டுகின்றன .
விவசாயிகள் , குத்தகை என்று  பெரிய நிறுவனங்களிடமோ  , அரசே பார்த்து கொள்ளட்டும் என்றோ எண்ணி யாரிடமும் நிலங்களை கொடுக்க கூடாது . இறுதியில் , யாரோ பணக்காரன் ஆக , விவசாயிகள் பலிஆகுவர் .



Friday, 31 August 2018

பெருந்திணை எனும் பொருந்தா திருமணம் .

பெண்ணின் திருமண வயதை 18 என்றும் , ஆணின் வயதை 21 என்றும் மாற்றி விட்டதால் மட்டுமே குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது என்று கூறும் அரசும் , பெண்ணிய வாதிகளும் , ஆண், பெண் இருவருக்குமான வயது வித்யாசத்தை மட்டும் குறிப்பிடுவதே இல்லை .

ஒரு நாளில் ,இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுக்க 33000 பெண்கள் அதிலும் 15 வயதிற்குட்பட்ட பெண்கள் திருமணம் நடக்கிறதாம் . ஆனால் அந்த பெண்களின் கணவன் என்ற வரிசையில் வரும் , ஆண்களில் யாருக்கும் 18 வயது கிடையாது . ஐம்பது வயதை தாண்டியவ ர்களுடனும் திருமணம் நடக்கிறது .

இந்தியாவில் அதிகம் குழந்தை திருமணம் நடப்பதில் கேரளாவும் உண்டு . தமிழ்நாடும் உண்டு . தமிழ்நாட்டில் 2017 கணக்கின் படி 1600 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது . ஆனால் அவர்களில் பலர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை .இங்கு வந்து வாழும் வடஇந்திய மக்கள் .


அரசு திருமண வயதை நிர்ணயிப்பதை விட முக்கியம் , ஆண் பெண் இருவருக்கும் உண்டான வயது வித்யாசத்தை நிர்ணயிப்பது  .
பெண்ணியவாதிகள் இதையெல்லாம் பேசமாட்டார்களே!





Thursday, 30 August 2018

அறக்கட்டளையும் வணிகமும் - 1






வணிக நிறுவனங்களின் , சினமா நடிகர்களின் அறக்கட்டளை என்பது மக்களை பொறுத்தவரை நன்மை தருவதாக இருந்தாலும் அது ஒரு ஏமாற்று வேலை .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகேஷ் அம்பானி மனைவி நீத்துஅம்பானி , கேரளாவிற்கு 71 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் . அதில் 21 கோடி ரூபாயை அரசிடம் நன்கொடையாக வழங்கி விட்டு , மீதம் 50 கோடி ரூபாயை , வீடு கட்ட , பள்ளி , மருத்துமனைகளுக்கு தேவையான பொருள்களாக தருவது என்று ஒதுக்கி உள்ளார்கள் .

வணிகம் என்பது இது தான் .
ஏற்கெனவே paytm  முதலாளி , தான் சிறந்த வணிகன் என்பதை நிரூபித்தது போலவே , அம்பானி தன்னை நல்ல நிர்வாகி என்பதை நிரூபித்து கொள்கிறார் .

ஒரு நாளைக்கு முகேஷ் அம்பானியின் வருமானம் 18 கோடி ரூபாய் .
அவர் அரசுக்கு ஆண்டுக்கு செலுத்தும் வரி வருமானம் 7827 கோடி ரூபாய் .
இந்த தொகையானது , அவர் செலுத்திய நன்கொடைக்கான 80c வரிவிலக்கிற்கு பிறகு செலுத்துவது .
அந்த நன்கொடையை அவர் எங்கு வழங்குகிறார் என்றால் ,
அவரது மனைவி நடத்தும் அறக்கட்டளைக்கு தான் . ஆண்டுக்கு 603 கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறார்.
இதில் ,
அவர் மனைவி நேரடியாக மக்களுக்கு உதவுவது போல ,
அம்பானியின் உற்பத்தி பொருள்களுக்கு விளம்பரமும் தருவார் , உதவி என்ற பெயரில் , மண்ணை சுரண்டும் போதும் எழும் போராட்டங்களை தடுக்கவும் செய்வார் .
ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் , மேட்டூரில் , சேலத்தில் செய்தது போலத்தான் இதுவும் .
ஸ்டெர்லைட் நிறுவனமும் , கேரளாவிற்கு  5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது .
ஆனால் ,
அம்பானி நிறுவனம் உதவுவது போல மக்களின் கண்களுக்கு தெரிந்தாலும் ,
இனி திருபாய் அம்பானி பள்ளியும் ,
ரிலையன்ஸ் பாவுண்டஷன்  மருத்துவமனையும் கேரளாவிற்கு வரவிருக்கிறது என்பது மட்டும் உறுதி .






சும்மா கிடைக்கவும் , கொடுக்கவும் இங்கு எதுவும் இல்லை .

Thursday, 9 August 2018

தற்சார்பு தேடுவோம் .

தற்சார்பு தேடுவோம் .

இயற்கை வழங்கிய நீரையும் , நெற்றி வேர்வை சிந்தி உழவன் திருத்திய நிலத்தையும் ,
கம்பெனியிடம் கொடுத்து விட்டு , மக்களுக்கு சத்துணவு தந்த மாடுகளை கறிக்கடைக்கு அனுப்பி விட்டு , ஆலைகளின் சாக்கடையை வயலுக்குள் பாய்ச்சி விளைந்த பொருளுக்கு விலை ஏறி விடாதபடி கட்டுப்பாடு விதித்து விட்டு உழவர்களை நிலத்தை விட்டு வெளியேற்றி , ஏற்றுமதி இறக்குமதிக்கு சாலை போட்டு ,

பசியை ஆற்றவும் மாற்றவும் போகிறோமா ? அல்லது
ஆலை தொழிற்சந்தையில் மனித எந்திரங்களை மலிவாக வழங்க போகிறோமா ?

குமரி முனையில் நிற்கும் 133 அடி வள்ளுவர் சிலையை இந்துமா கடலுக்குள் வீசுவோமா ? ஏனெனில்
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
திருக்குறள் - 739
( யாரையும் நாடாமல் வளம் மிக வாழ்வதே நாடு . )

என்று கூறிய வள்ளுவரின் வாக்கை பின்பற்றாமல் , வெறும் சிலையை வைத்து என்ன செய்ய போகிறோம் ?

ஐயா .நம்மாழ்வார்
உழவுக்கும் உண்டு வரலாறு .



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...