Saturday, 12 June 2021

எல்லாமே Just forward msg

 எங்கள் வீட்டிற்கு அருகில் ,ராஜஸ்தானி ,குஜராத்தி குடும்பங்கள் உண்டு .

இவர்கள் பெரும்பாலும் ,தங்கள் குழந்தைகளுக்கு பெரிய அளவில் கல்விக்கென்று செலவு செய்ய மாட்டார்கள் .அரசு பள்ளியில் சேர்ப்பார்கள் .

பிறகு வெகு நேரம் ,அந்த குழந்தைகள் , அவர்கள் தகப்பனார் செய்யும் தொழிலை கற்று கொள்கிறார்கள் .

தேர்வு மட்டும் எழுதுகிறார்கள் .குறைந்த மதிப்பெண் பற்றி அவர்கள் கவலை கொண்டதே இல்லை .10 ம் வகுப்பு முடிந்தவுடன் , நேரடியாக தந்தையின் தொழிலில் ஈடுபடுகிறார்கள் . மேற்படி படிக்க விரும்பினால், தொலை தூர கல்வியில் இணைந்து கொள்கிறார்கள் . பிறகு  எல்லா நேரமும் தொழில் ,அது சார்ந்த அனுபவ அறிவை பெறுகிறார்கள் .மூலப்பொருள்கள் வாங்குவது , வாடிக்கையாளரிடம் பேசுவது ,எந்த மாதிரியான வாடிக்கையாளர்கள் வருகிறார்களோ அவர்கள் மொழியை கற்று கொள்கிறார்கள் .

25 வயதிற்கு முன்னதாக திருமணம் .

வாழ்க்கை அடுத்த கட்ட நகர்வு நிகழ்கிறது .

ஆனால் ,நம்ம ஊர்களில் படித்தான் , படிக்கிறான், படிக்கிறான் , படிக்கிறான் எப்போது முடிப்பான் ,எப்போது வாழ்வாதாரம் தேடுவான் , எப்போது திருமணம் செய்வான் என்றால் , வயது 35 ஐ தொட்டு விடுகிறது .

நம் நாட்டின் கல்வியானது , பெரும்பாலும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக forward Msg களாகவே உள்ளன .ஆங்கிலேயர்கள் காலத்தில் கொடுத்த கருத்துக்கள் அத்தனையும் இன்னும் ஆண்டுதோறும் கடத்தப்படுகிறது. 

6 ம் வகுப்பில் 2 பக்கங்களில் உள்ள விஷயம் , கல்லூரி முடியும் வரை இரண்டு இரண்டு பக்கங்களாக அதிகரிக்கிறதே தவிர , அதில் விஷயங்கள் மாறுவதே இல்லை .

தமிழ் பாடங்கள் கால்டுவெல் கொடுத்ததை Forward செய்கிறது .

வரலாற்று பாடங்கள் நீலகண்ட சாஸ்திரி கொடுத்ததை Forward செய்கிறது .

பொருளியல் பாடங்கள் ஆடம் ஸ்மித்திற்கு விளம்பரம் தருகிறது .

கணக்கியல் பாடங்கள் , லூகா பாசியோலின் பாடங்களை Forward செய்கிறது .

அறிவியல் , நியூட்டன் , ஐன்ஸடீன் , லவாய்சியர் போன்றோரை Forward செய்கிறது .

மருத்துவம் , மேற்கத்தியம் சொன்னதை Forward செய்கிறது .

நாம் என்ன படித்தாலும் , எவ்வளவு படித்தாலும் ஒரு சிறு கடையை கூட , படித்தவுடன் தொடங்க இயலாது . ஏனெனில் இங்கு எல்லாமே Just  forward msg மட்டுமே !


முன்பெல்லாம் ஒரு மாணவனின் வெற்றி , தோல்வி என்பது அந்த ஆசிரியருக்கே சொந்தம் .ஏனெனில் ஆசிரியர் தான் பாட திட்டங்களையே வகுப்பாராம் .அந்ததந்த சமூகத்திற்கு தேவையான கல்வியை ,அந்தந்த மண்ணிற்கு ஏற்ற கல்வியை அவரவரே தயாரித்து இருக்கிறார்கள் . எல்லா சமூகத்திலும் வாத்தியார் என்றொருவர் உண்டு . அவர் அந்த சமூகம் சார்ந்த பாடங்களை நடத்துவார் . அவர் குஸ்தி வாத்தியார் , குத்து வாத்தியார் , வாத்தியார் என்ற பெயரில் இருப்பார்கள் .

இன்று தான் நாம் , யாரோ ஒருவரின் பாட திட்டத்தை துரத்தி கொண்டு இருக்கிறோம் . 

எல்லா சமூகத்திலும் , வைத்தியம் என்ற ஒன்றில் இருந்து தான் கல்வி ஆரம்பம் ஆகிறது .


எந்த கல்வியானது உடலியல் கூறு மற்றும் அது சார்ந்த மருந்தொடு ஆரம்பிக்கவில்லையோ ,அது நமக்கான கல்வியே அல்ல !


மரபு வேளாண் தொழில் செய்து பழகு !

தமிழ் மருத்துவம் செய்து பழகு !

தொழில்நுட்ப அறிவையும் பழகு !  

இவையே நவீன வாழ்வியல் ஆதாரங்கள் !



கல்வி

 வைத்தியம் ,வாதம்,ஓகம் ,ஞானம் இதெல்லாம் இருந்தால் தான் அது கல்வி .

எல்லா கல்வியும் ,முதலில் மனிதனின் அடிப்படை தேவையாகிய உடலியல் மற்றும் அது சார்ந்த நோய்கள் , மருத்துவம் போதிக்க வேண்டும் .

இரண்டாவது , ஒரு கொள்கை இருந்தால் ,அதனை நிரூபிக்கும் திறமை வேண்டும்.

மூன்றாவது , யோகம் என்றால் காலம் கருதி செயலில் இறங்குவது . எப்போது ,எதை செய்ய வேண்டும் என்ற அறிவை பெறுவது .

நான்காவது , தெளிந்த அறிவால் , அடுத்து வரும் நிகழ்வுகளை கணிப்பது .

இதனை வழங்காத 

எப்படி கல்வி ஆகும் ?

உலகமயமாக்கல் - உள்ளூர் மக்களின் பயனுக்கு உதவாத பொருள்கள் .

 தஞ்சாவூர்ல நிறைய தென்னை மரங்கள் இருக்கு .இப்போ கூட மோதி ஜி ONE DISTRICT ONE PRODUCT திட்டம் போட்டு அதில் தஞ்சாவூரை தென்னைக்கு நேந்து விட்டுவிட்டார் .ஆனால் ,தஞ்சாவூரில் இளநீர் மிக குறைந்த இடங்களில் மட்டும் தான் கிடைக்கிறது .அதுவும் கூட கேரளா இறக்குமதி என்று கூறுகிறார்கள் .

இது போலவே , இங்குள்ள வெண்ணாற்றங்கரையில் கரையில் தான் மீன் பிடிக்கிறார்கள் .ஆனால், சந்தையில் விற்பது ஆந்திர மீன்கள் .

சாலைகள் தோறும் உளுந்து அடித்து காய வைக்கிறார்கள் .ஆனால் மளிகை கடைகளில் உளுந்து ,துவரை பற்றி கேட்டால் குஜராத் இறக்குமதி என்றே கூறுகிறார்கள் .

உண்மையில் விற்கப்படும் பல பொருள்கள் ,விளைவிக்கப்படுகின்றன .ஆனால் விற்பனையில் இருப்பது , உள்ளூர் விளைச்சல் இல்லை .


ஏன் ?


எங்கேயோ இருக்கும் மக்களுக்காக ஏற்றுமதி ஆகும் பொருள்கள் ,உள்ளூர் மக்களுக்கு கிடைப்பது இல்லை .

உலகமயமாக்கல் என்பது ,

உள்ளூர் மக்களுக்கு , தரமான பொருள்கள் கிடைக்காது என்றே பொருள் தருகிறது .



Friday, 11 June 2021

படிப்பு முடித்தவுடன் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள் .

 படிப்பு முடித்தவுடன் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள் :


படிப்பு முடித்தவுடன் இந்தியாவில் பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன .

* ஸ்விக்கி ,zomato ,Pizza , Dominos மற்றும் பல உணவு நிலையங்களில் டெலிவரி செய்யும் வேலை .

இதற்கு கொண்டு சேர்க்க பைக் வேண்டும் .சம்பளம் சுற்று வட்டார ஆர்டர்களை பொறுத்து 8000 முதல் 25000 வரை .

Risk Factor : வேகமாக வண்டி ஓட்ட வேண்டும் .


* ரிலையன்ஸ் போன்ற மளிகை கடைகளில் வேலைவாய்ப்பு .

இதற்கும் நல்ல சம்பளம் ,பைக் வேண்டும் .

Risk Factor : மெதுவாகவே பைக் ஓட்டலாம் .கொஞ்சம் குறைவான ரிஸ்க் தான் !


* ஐசிஐசிஐ போன்ற வங்கிகளில் பணம் கடன் கொடுக்க ,பணம் வசூலிக்கும் வேலை .

இதில் வேலை கிடைப்பதே கஷ்டம் .ஏனெனில் பணம் வசூலிக்க குரல் வளம் இருக்க வேண்டும் .


* LIC போன்ற காப்பீடு போன்ற நிறுவனங்களில் முகவர் வேலை .

இதற்கும் குரல் வளம் வேண்டும் .ஆனால் இங்கு பணிவான குரல்  வேண்டும் .வங்கி வேலை போல அதிர்ந்த குரல் வேண்டாம்.


* சுய உதவி குழுக்கள் மூலம் , பணம் கடன் கொடுப்பது ,பிறகு வசூலிப்பது ,பெண்களிடம் பேசும் முறை தெரிந்து இருந்தால் போதுமானது .


* மருத்துவமனை மற்றும் ஹோட்டல்களில் வரவேற்பறையில் பதிவு செய்யும் வேலை .


* மருந்து கடைகளில் கணக்கெழுதும் வேலை .

* அரிசி கடைகளில் , உணவகங்களில் கணக்கெழுதும் வேலை .

* Departmental Store களில் பொருள்களை கணக்கெடுப்பது மற்றும் கணக்கெழுதும் வேலை .

* துணி கடைகளில் வேலை .


இதை கடந்த சுய தொழில்கள் :

* ஆட்டோ ஓட்டுவது ,டாக்ஸி ஓட்டுவது ,

*  கடலை மிட்டாய் , ஊறுகாய் , போன்ற மிகச்சிறிய அளவில் சுய தொழில் செய்வது ,

* உணவகங்கள் நடத்துவது .

பெரிய அளவில் தொழில் நடத்த ,எல்லோருக்கும் அனுமதி கிடையாது .அதற்கான அணுகுமுறைகள் வேறு !


கேள்வி என்னவெனில் , மேற்காணும் தொழில்களில் எந்த தவறும் இல்லை .

உழைப்பு மதிக்க தக்கதே ! ஆனால் அதற்கு ஏன் நிறைய படிக்க வேண்டும் .?

இது போன்ற வேலைவாய்ப்புகள் மட்டுமே  உள்ள நாட்டில் பள்ளிகளும் ,கல்லூரிகளும், கல்வி ஒன்றே உன் தரத்தை உயர்த்தும் என்று கூறி கூறி ஏமாற்றி பிழைப்பு நடத்துவது மிக மிக வருந்த தக்க செயல் !



பில்கேட்ஸ் நடத்தும் பாடம்

 பில் கேட்ஸ் நமக்காக ஒரு பாடம் நடத்துகிறார் .அது என்னவெனில் ,

நிலங்களை உரிமை கொள்ள வேண்டும் !

மருத்துவமனைகளை அல்ல ,மருத்துவத்தை அதற்கு அடித்தளமாக உள்ள மருந்து உற்பத்தியையே கைக்கொள்ள வேண்டும் .

தகவல் தொழில் நுட்பத்தை வசப்படுத்தி கொள்ளவேண்டும் .

இவை மூன்றும் நவீன உலகின் நம்மை யாருக்கும் அஞ்சாமல் வாழச்செய்யும் முப்பெரும் கருவிகள் .

ஆனால் ,நாமோ விவசாய நிலங்களை விற்று , அதை கேவலமான தொழில் என்று பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

தமிழ் மருத்துவத்தில் நாமே மருந்து தயாரிக்கும் முறைகளை படிப்பறிவு , மேற்கத்திய அறிவுக்கு ஒத்து போகவில்லை என்று தவிர்த்து வருகிறோம்.

இன்று நாம் பயன்படுத்தும் தகவல் தொழில் நுட்பம் முழுவதும் பிற நாடுகளின் சார்பு தன்மையில் இருக்கிறது . 








சுய பொருளாதாரம் - கொரோன - கருப்பு பணம் .


தொழிற்சாலை உற்பத்தி எனும் இரண்டாம் நிலை உற்பத்தி மூலம் நாட்டின் இயற்கை வளங்கள் அழிகின்றன . இதை தடுக்க முடியாத சூழலில் இருக்கிறோம் .ஏனெனில் தொழில் வளம் என்பது மிக அவசியம் என்ற நிலைக்கு வந்து விட்டோம் .

சீனாவிலும் இயற்கை வளங்கள் அழிந்து கொண்டு இருக்கிறது .

ஆனால் அதனால் மறுபுறம் இன்னும் எத்தனை கொரோன வந்தாலும் அந்த நாடு தாங்கும் .ஏனெனில் உற்பத்தியும் ,முதலீடும்,உழைப்பும் என்று எல்லாம் அவர்களுக்கே சொந்தம் .

ஆனால் இந்தியாவில் உற்பத்தி நடக்கிறது .இயற்கை வளங்கள் அழிகிறது.உழைப்பு உறிஞ்சப்படுகிறது.கழிவுகள் பெறுகிறது.

ஆனால் ஒரு கொரோனாவிற்கே மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லை. ஏனெனில் எல்லா முதலீடும் அயல்நாட்டவருடையது .அவன் இங்கு முதல் மட்டும் தான் போடுகிறான்.உற்பத்தி செய்கிறான். மூலப்பொருள்களை மிக குறைந்த விலையில் அல்லது இலவசமாக பெறுகிறான்.உழைப்பையும் மிக குறைந்த விலையில் ( தொழிலாளர் சம்பளம் ) பெறுகிறான். மின்சாரம்,இடம்,நீர் என்று எல்லாம் நாடு இலவசமாக தருகிறது.உற்பத்தி பொருளை இங்கேயே அதிக விலைக்கு விற்கிறான் .போட்ட முதலை விட இரண்டு மடங்கு மும்மடங்கு பணத்தோடு நாடு திரும்புகிறான்.

அதனால் இங்கு பணப்புழக்கமும் ,பண மதிப்பும் குறைந்து கொண்டே போகிறது .இதன் விலை கிடுகிடு என்று உயர்கிறது .பண வீக்கம் ஏற்படுகிறது .ஆனால் அரசோ இந்த காரணங்களை மறைத்துவிட்டு பணவீக்கத்திற்கு கருப்பு பணம் தான் காரணம் என்று கதை கட்டும் .

இதன் விளைவு இங்கு ஒரு கொரோனாவிற்கே மக்கள் சிரமப் படுகிறார்கள் .

எனில் இங்கு வெளிநாட்டவரின் தொழிற்சாலை உற்பத்தி எனும் இரண்டாம் நிலை உற்பத்திகளை விட மூல பொருள் எனும் விவசாய உற்பத்தி பெறுக வேண்டும் .நம் மக்களோ விவசாயத்தை தொலைத்து கொண்டு வருகிறார்கள் .

இங்கு வேளாண்மையும் போய்விட்டது.

இயற்கை வளங்களும் போய்விட்டது.

வேளாண்சார்ந்த அடிப்படை அறிவும் போய்விட்டது .

தமிழ்நாட்டில் கூட கடந்த காலங்களை விட வேளாண்மை செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது .வெறும் 

21% மக்கள் தான் இப்போது மூலப்பொருள் எனும் விவசாய உற்பத்தியில் இருக்கிறார்கள் .



சுய பொருளாதாரம் என்றால் ,ஆயிரம் கொரோன வந்தாலும் தாங்க வேண்டும் .

சுய பொருளாதாரம் - கொரோன - கருப்பு பணம் .

கல்வி பயன் -- வேலைவாய்ப்பு

கல்வியின் அடுத்த நிலை என்ன என்றால் எல்லோரும் கூறும் ஒரே பதில் வேலைவாய்ப்பு.

வேலை வாய்ப்பிற்காகத்தான் கல்வியா ? அறிவு வளர்ச்சிக்கு இல்லையா ? அறிவு வளர்ச்சிக்கு தான் கல்வி என்றால் ,கல்வியை முடித்தவுடன் ஒரு மாணவனின் அடுத்த முடிவு வேலை தேடி அலைவது அல்ல.முதலில் கல்விக்கான நோக்கத்தை மாற்ற வேண்டும் .காலம் காலமாக வேலை தேடி அலைவது ,அதை அரசு ஏற்படுத்தவில்லை என்று இந்த அரசை அந்த அரசு குறை சொல்வது ,அந்த அரசை இந்த அரசு குறை சொல்வது என்பதெல்லாம் ,ஆய்வாளர்களின் வேலையே அல்ல .அது அறிவார்ந்த சமூகத்தின் வேலை அல்ல. 

எந்த பாடத்திட்டங்களும் , ஒரு மாணவன் ஒரு பொருளை உருவாக்குவது பற்றியோ ,அதை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது பற்றியோ கூறுவதே இல்லை .நியூட்டன் ,ஐன்ஸ்டின் என்று பாடம் நடத்த மட்டுமே உதவுகிறது .கிட்டத்தட்ட இது வாட்ஸாப் forward msg போலத்தான் இங்குள்ள பாடத்திட்டங்கள் உள்ளன .

ஒரு வணிகவியல் ,பொருளாதார பாடத்திட்டத்திலும் ,ஒரு தொழில் தொடங்கினால் என்னென்ன இடர்கள் வரும் ,அதற்கு வங்கியில் கடன் வாங்கலாம்,காப்பீடு செய்யலாம் என்று வங்கிக்கும் ,காப்பீடு நிறுவனங்களுக்கும் விளம்பரங்கள் இருக்கிறதே தவிர ,ஒரு வணிகத்தை எப்படி ஆரம்பிப்பது என்று எந்த பாடமும் இல்லை .வேளாண் பொருளுக்கான நடைமுறைகள் பற்றியெல்லாம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .

அறிவியல் பாடங்களில் மேற்கத்திய விஞஞானிகளின் அறிவு புகழ் பாடப்படுவது போல , வணிகவியல் ,பொருளாதார் பாடங்களில் மேற்கத்திய கணக்கு வழக்குகளை உலகம் முழுவதும் ஒரே மாதிரி கையாளுவது என்ற முறை தான் உள்ளதே தவிர , ஒரு தொழில் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டிய நடைமுறை பாடங்கள் அங்கு இல்லை .

பிறகு எப்படி கல்வி பயன் தரும் ?


 





Thursday, 10 June 2021

உற்பத்தியும் வளர்ச்சியும் !

 உற்பத்தியும் வளர்ச்சியும் 


நம் மண்ணில் ,நவீன அறிவியல் கல்வி என்பது , பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வில்லை.கழிவு இல்லாத ,மாசு இல்லாத அறிவியலாகவும் இல்லை .குறைந்த பட்சம் அதை படித்தவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிலையில் கூட இல்லை .பெரும்பாலும் பொறியியல் வரை படித்து விட்டு பலரும் அரசு தேர்வும் ,வங்கி தேர்வும் எழுதி கொண்டு இருக்கிறார்கள் .இந்த தேர்வுகளை எழுத எதற்கு அவ்வளவு வரை படிக்க வேண்டும் ? பெற்றோரின் உழைப்பை உரிந்து  கல்வி நிறுவனங்களை வளர்த்து விடவா ?

இந்தியாவில் இன்று அதிக அளவில் நடைபெறும் ஒரே ஒரு துறை சேவை துறை .

நாம் விவசாய துறையில் பின்தங்கி சென்று கொண்டு இருக்கிறோம்.

தொழில் துறை வளர வேண்டும் என்று கூறி கூறி தான் வேளாண் துறையை பின்னுக்கு தள்ளினோம் .ஆனால் தொழில் துறையும் ஒரு சில பணக்கார மனிதர்களை உருவாக்கி விட்டு ,மண்ணையும் ,இங்குள்ள வளங்களையும் அழித்துள்ளதே தவிர அதுவும் பெரிய அளவில் கணக்கில் இல்லை .

ஆனால் சேவை துறை வளர்ந்து வருகிறது .

இதற்கு எதற்கு ஆய்வு கல்விகள் ?

இதற்கு எதற்கு அறிவியல் கல்விகள் ?

இதற்கு எதற்கு இவ்வளவு பல்கலைக்கழகங்கள் ?

தொழில் துறை காட்டிய காரணம் போலவே , வேளாண்மைக்கு போனால் மீண்டும் அடிமையாகி விடுவான் .அதற்கு தான் கல்வி என்றெல்லாம் கூறினால் ,நாம் சேவை துறையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் மனநிலையை அடையவில்லை என்றே பொருள் தரும் .


ஒரு நாட்டில் உற்பத்தி பெருகினால் தான் அது வளர்ச்சி !

சேவை துறை பெருகினால் வேறு யாரோ வளர்க்கிறார்கள் என்றே பொருள் !

நம் மண்ணிற்கான கல்வி வராமல் , மேற்கத்திய கல்வியை வைத்து கொண்டு இங்கு என்ன மாற்றம் நிகழ முடியும் 

மாற்றம் கல்வியில் இருந்தே தொடங்க வேண்டும் .




1990 களில் , இந்தியாவின் தனிநபர் வாங்கும் திறன் சீனா வை விட அதிகம் .சீனாவின் தனிநபர் வாங்கும் திறன் 990 டாலர் .இந்தியாவில் தனிநபர் வாங்கும் திறன் 1190 டாலர்.


ஆனால் இன்று ,

சீனாவின் வாங்கும் திறன் 16790 டாலர்

இந்தியாவின் தனிநபர் வாங்கும் திறன் 6920 டாலர்


நமக்கு கீழ் இருந்த சீனா இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக வளர்ந்து விட்டது .ஒரே காரணம் அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள் .நாம் சேவை செய்கிறோம் .

நம் நாட்டில் சீனாவை போல் மூன்று மடங்கு பள்ளிகள் அதிகம் .

ஆனால் கல்வியின் தரம் என்ன ?

உற்பத்திக்கான கல்வியை தான் இங்கு வழங்குகிறார்களா ?

என்ன தொழில் கல்வி , அடிப்படை கல்வியிலே வழங்கப்படுகிறது என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது .

உற்பத்தியம் ,உற்பத்தி சார்ந்து ,கழிவு தராத அறிவியல் கல்வியும் தான் , ஒரு நாட்டின் அடிப்படை ஆதாரங்களாக இருக்க முடியும் .

எப்போதும் யாரோ ,எந்த நாட்டில் இருந்தோ இங்கு வந்து தொழில் தொடங்குவதும் ,அதில் இங்கு உள்ளவர்கள் வேலை பார்ப்பதும் தான் கல்வி தரும் மாற்றமா ?




காங்கிரஸ் இருந்தால் ,பிஜேபி இருந்தால் என்றெல்லாம் கட்சி சார்ந்து ஒரு நாட்டின் கல்வியும் ,உற்பத்தியும் ,வளர்ச்சியும்,மனித வள ஆரோக்கியமும்  இருக்கும் என்று எண்ணினால் ,நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம் என்றே அர்த்தம் !

அடடே அர்த்தம் என்பது சம்ஸ்கிருத சொல் என்று கூறி கொண்டால் அதன் பெயர் மாற்றம் அல்ல .

கழிவு இல்லாத அறிவியல் , அதனால் வரும் உற்பத்தி ,கழிவு இல்லாத மருத்துவம் இதற்கு வழி தேடினால் தான் மாற்றம் !

https://statisticstimes.com/economy/country/india-gdp-sectorwise.php


https://datacommons.org/place/country/CHN?utm_medium=explore&mprop=amount&popt=EconomicActivity&cpv=activitySource%2CGrossNationalIncome&hl=en



Monday, 7 June 2021

மொழி

 இரெண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை படித்தேன் .அதில் கன்னியாகுமரி ,நாகர்கோவில் ,மக்கள் தவிர பிறருக்கு மீன் குழம்பு வைக்கவே தெரியாது .என்று கூறி இருந்தார்கள்.

பிறகு ஒரு பதிவில் ,தென் மாவட்டங்களில் அகத்தி கீரை என்ற ஒன்றை சமைப்போம் .அது உடலுக்கு மிகவும் நல்லது என்று பதிவு செய்து இருந்தார்கள்.
இது போலவே மதுரை ஆண்கள் தான் வீரமானவர்கள் !
தஞ்சையில் மட்டும் தான் விவசாயம் நடந்தது.நடக்கிறது.

என்பதெல்லாம் என்ன மாதிரியான சிந்தனை என்றே புரிய வில்லை.
இதே போலவே தமிழும் திண்டாடி நிற்கிறது.

தென்  மாவட்டத்தில் தான் தமிழ் தோன்றியது .
என்று அலட்டி கொள்ளும் யாரும் தமிழின் அறிவியல் பற்றி பேசுவதே இல்லை .முற்றிலும் அலோபதி மருத்துவம் தான் சிறந்தது என்று கூறி கொள்கிறார்கள்.


மொழிகள் சமகாலத்தில் இருந்திருக்கலாம்.
இன்று கிருஷ்ணகிரி மக்களின் மொழியும்,திருவண்ணாமலை மக்களின் மொழியும் ,குமரி மாவட்ட மக்களின் மொழியும் ,தஞ்சை மாவட்ட மக்களின்
மொழியும் ஓரளவிற்கு வேறுபடவே செய்கிறது.

இதில் காலப்போக்கில்,அவரவர் வாழும் இடத்திற்க்கு ஏற்ப உச்சரிப்பு மாறி இருக்கலாம் .

எனவே ஒன்றை விட ஒன்று உயர்ந்தது .இங்கு மட்டும்தான் எல்லாம் தோன்றியது என்று எண்ணினால் ,அது மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு பயன்படாது.










நெய்

 நெய் இல்லா உண்டி பாழ்..

இலக்கியமும் உணவுக் குறிப்புகளும்
தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என அமையும் சங்க நூற்களில் உணவு முறை பற்றிய பல்வேறு குறிப்புகள், புலவர்களால் வருணனைகளாகவும், உவமைகளாகவும் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
தொல்காப்பியத்தின் இலக்கண நூற்பாக்களில் தேன், எள், எண்ணெய் ஆகியன பழக்கத்தில் இருந்தன என்பதற்குரிய சான்றுகளைக் கூறு கின்றன.
சங்க இலக்கியமான பத்துப்பாட்டிலும் பல்வேறு உணவுக் குறிப்புகள் கிடைக்கின்றன.
விருந்தோம்பும் பண்பு சங்கத் தமிழரின் உயிர்ப் பண்பாக விளங்கியது.
அல்லில் ஆயினும் விருந்தினரை உவப்போடு வரவேற்கும் பண்பு, செல்விருந்தோம்பி, வருவிருந்தினை நோக்கிக் நிற்கும் மாண்புடைய மக்கள், சங்க கால மக்கள்.
தலைவன்-தலைவியின் வாழ்க்கையை விவரிக்கும் இடமாயினும், பாடல் பெறும் அரசனின் புகழைப் பாடும் இடமாயினும், புலவர்கள் உணவு முறைகளைப் புகுத்தித் தங்கள் பாடலை இயற்றினர்.
பொருநர், பாணர், கூத்தர் என்னும் கலைவாணர்கள் பேரரசர்களையும், சிற்றரசர்களையும், செல்வந்தர்களையும் கண்டு தத்தம் கலைகளை விளக்கிப் பரிசில் பெறச் செல்லுங்கால் மன்னர்கள் அவர்களுக்கு நல்லாடை கொடுத்து நல்ல சுவையான உணவு படைத்துப் பொருளுதவியும் அளித்தனர்.
இவ்வாறு பரிசில் பெற்ற கலைஞர்கள் தாங்கள் பரிசில் பெற்ற இடத்தின் உணவுப்பழக்கங்கள் குறித்து பாடத் தவறவில்லை.
அவர்களின் பாடல்களிலிருந்து கிடைக்கும் விவரப்படி ஐவகை நிலப்பாகுபாடிற்கேற்ற உணவு முறைகளைக் காண்போம்.

குறிஞ்சி நிலத்தார் உணவு:-
சோழ நாட்டுக் குறிஞ்சி நில மக்கள் தேனையும் கிழங்கையும் உண்டனர்.
பிற நிலத்தார்க்கும் இவைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக மீனும், நெய்யும், நறவையும் வாங்கிச் சென்றார்கள்.
நன்னன் என்னும் குறுநில மன்னனின் சவ்வாது மலையின் அடிவாரத்தில் இருந்த சிற்றூர் மக்கள், நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினைச்சோறு உண்டதாகக் குறிப்பு கிடைக்கின்றது.
இவைமட்டுமின்றி, உடும்பின் இறைச்சியையும், பன்றி இறைச்சியையும், மானின் இறைச்சியும் உண்டனர்.
நெல்லால் சமைத்த கள்ளையும் மூங்கில் குழையினுள் முற்றிய கள்ளையும் பருகினர்;
மூங்கில் அரிசிச் சோற்றுடன் பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் கொண்டு தயாரித்த குழம்பு சேர்த்து உண்டதாகவும் அறிகின்றோம்.
மலை நாட்டைக் காவல் புரிந்த வீரர்கள் உட்கொண்ட இறைச்சியும் கிழங்கும், மலைமீது நடந்து சென்ற கூத்தர்கள் தினைப்புனக் காவலனால் கொல்லப்பட்ட காட்டுப் பன்றியின் இறைச்சியை வாட்டித் தின்றமையும் இக்கருத்திற்குச் சான்றாகும்.
பாலை நிலத்தார் உணவு:-
பாலை நிலத்து மக்கள் இனிய புளியங்கறி இடப்பட்ட சோற்றுடன் ஆமாவின் இறைச்சியை உண்டனர்.
தொண்டை நாட்டினைச் சேர்ந்த பாலை மக்கள் புல்லரிசியினை நில உரலிற் குற்றிச் சமைத்து அதனுடன் உப்புக் கண்டம் சேர்த்து உண்டிருக்கின்றனர்.
விருந்தினர்க்குத் தேக்கிலையில் விருந்து படைத்தனர். மேட்டு நிலத்தில் விளையக்கூடிய ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றுடன் உடும்பின் பொரியலையும் அவர்கள் உட் கொண்டனர்.

முல்லை நிலத்தார் உணவு:-
நன்னனது மலைநாட்டு நிலத்தார் அவரை விதைகளையும் மூங்கில் அரிசியையும், நெல்லின் அரிசியையும் கலந்து புளி கரைக்கப்பட்ட உலையிற் பெய்து புளியற்கூழாகக் குழைத்து உட் கொண்டனர்.
அதுவுமின்றிப் “பொன்னை நறுக்கினாற் போன்ற அரிசியுடன் வெள்ளாட்டிறைச்சி கூட்டி ஆக்கிய சோற்றையும் தினைமாவையும் உண்டனர்”.
தொண்டை நாட்டு முல்லை நிலத்தார் பால் கலந்த திணையரிசிச் சோறும் வரகரிசிச் சோற்றுடன் அவரைப் பருப்பு கலந்து பெய்த கும்மாயம் என்று பெயர் பெற்ற உணவையும் உண்டிருந்தனர்.


மருத நிலத்தார் உணவு:-
நீர் வளமும் நில வளமும் நிறைந்த இந்நிலத்து மக்கள் கரும்பையும், அவலையும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து அவர்களிடமிருந்து மான் இறைச்சியையும் கள்ளையும் பெற்றனர்.
ஒய்மாநாட்டு மருத நிலத்தார் வெண் சோற்றையும், நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையையும் உண்டனர்.
தொண்டைநாட்டு மருத நிலச் சிறுவர்கள் பழைய சோறு உண்டனர்.
அவலை இடித்து உண்டனர்.
தொண்டை நாட்டு மருதநில மக்கள் நெற்சோற்றுடன் பெட்டைக் கோழிப் பொரியல் உண்டதுடன் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் உண்டனர்.


நெய்தல் நில மக்களின் உணவு:-
நெய்தல் மக்கள் கடல் இறால், வயல் ஆமை இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டனர். பனங்கள், நெல்லரிசிக் கள் போன்றவற்றை உண்டனர்.
கள் விற்கப்படும் இடங்களில் மீன் இறைச்சி, விலங்கிறைச்சி ஆகியனவும் விற்கப்பட்டன.
ஓய்மாநாட்டு நெய்தல் நிலத்தார் உலர்ந்த குழல் மீனின் சூடான இறைச்சியுடன் கள் உண்டதாகத் தெரிகின்றது.
தொண்டை நாட்டுப் பட்டினத்தில் கொழுக்க வைத்த கருப்பஞ்சாறு பருகினர்...
அரண்மனைகளில் நாவிற்குச் சுவையான உணவுடன், சுவையான கள்ளும் தரப்பட்டது.
உணவில் இனிப்புகள், முல்லையரும்பு ஒத்த அன்னம், பாலைக் காய்ச்சி அதனோடு கூட்டின் பொரிக்கறிகளும், கொழுத்த செம்மறிக் கடாவின் இறைச்சியினைச் சுட்டும் வேகவைத்தும் படைக்கப்பட்டன.
விருந்தின் முடிவில், குங்குமப்பூ மணக்கின்ற தேறல் பருகத் தரப்பட்டது.
தொண்டை நாட்டுத் தலைவன் இளந்திரையன் பலவகையான இறைச்சி உணவைத் தயாரித்து விருந்து படைத்தது மட்டுமின்றிச் செந்நெற்சோறு வடித்துச் சர்க்கரை அடிசில் ஆக்கிச் சிறியவர்கட்குச் சிறிய வெள்ளிக் கலங்களிலும், முதியோர்க்குப் பெரிய வெள்ளிக் கலங்களிலும் அளித்து மகிழ்வித்தான்....


பல்வகை உணவுகள்:-

சங்க காலத்தில் கரிய சட்டியில் பாகுடன் வேண்டுவன கூட்டி நூல் போல அமைத்த வட்டிலும், பாகில் சமைத்த வரிகளையுடைய தேனிறாலைப் போன்ற மெல்லிய அடைகள், பருப்பையும் தேங்காயையும் உள்ளீடாகக் கொண்ட கண்ட சருக்கரை கூட்டிப் பிடித்த மோதகம், இனிப்புடன் மாவு கரைத்துத் தயாரித்த சிற்றுண்டிகள் ஆகியவற்றைத் தயாரித்து உண்டனர்.
தென்பாண்டி நாட்டுப் பரதவர்கள், கொழுத்த இறைச்சியிட்டுச் சமைக்கப்பட்ட சோற்றைப் பெரிதும் விரும்பி உண்டனர்.
பாண்டியர் தலைநகரான மதுரையில் ஏழைகளுக்கென உணவுச்சாலைகள் அமைக்கப் பெற்று, அங்கிருந்த எளியவர்களுக்கு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், முந்திரிப்பழம், பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய், இனிப்புச் சுவையுடைய பண்ணியங்கள் சமைக்கப் பெற்ற கிழங்கு வகைகள், பாற்சோறு ஆகியன படைக்கப்பெற்றன.
தோப்புகளில் வாழ்ந்த உழவர்கள், பலா, வாழை, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழிநடை செல்லும் பாணர்க்கு அளித்து விருந்தோம்பினர்.
எட்டுத் தொகை கூறும் உணவு முறைகள்:-
உளுந்து மாவினை நெய்விட்டுப் பிசைந்து கொடி போன்று கயிறு திரித்து வெய்யிலில் உலர்த்தினர். இக்காலத்து ‘வடாகம்’ போன்று அமைவது இது.
எயினர்கள் முள்ளம்பன்றியின் ஊனை உண்டனர்.
சோறு வேறு, ஊன் வேறு எனப் பிரிக்க இயலாதவாறு, ஊன் குழையச் சமைத்த உணவு பற்றிய குறிப்பினைப் பதிற்றுப்பத்தில் காணலாம்.
செவ்வூணுடன் துவரையைக் கலந்து துவையலாக்கி உண்டனர்.
அவரை முதலானவற்றை உணவில் கூட்டிச் சர்க்கரை கலந்து உண்டனர்.
இறைச்சியைத் துண்டித்து வேக வைத்து நெய்விட்டுத் தாளிதம் செய்தனர்.
கடுகைக் கொண்டு நெய் கலந்தும் தாளிதம் செய்தனர்.
பாலுடன் கலந்த சோற்றில் தேன் கலந்து உண்டனர்.
பழஞ்சோறு, புளிச்சோறு ஆகியவற்றையும் உணவாகக் கொண்டனர்.
மட்பாண்டங்களில் சமையல் செய்தனர். உணவு உண்ணும்போது, சோற்றில் நெய் பெய்து உண்டனர்.
குறமகள் தன் பசி தீரத் தினைமாவினை உண்டாள்.
முற்றிய தயிரைப் பிசைந்தும், ‘புளிப்பாகன்’ எனும் கழம்பைத் தலைவனுக்கு அளித்தும் தலைவி மகிழ்ந்தாள்.
பாலை நிலத்து வழிச் செல்வோர் நீர்வேட்கை தணிய நெல்லிக்காய் உண்டனர். பசி தீர விளாம்பழம் உண்டனர்.
மருதநில உழவன் நிலம் உழுதற்குச் செல்லுமுன் விடியலில் வரால்மீனைச் சோற்றில் பிசைந்து உண்பார்.
கார் காலத்து மழை பெய்தபின் புற்றில் இருக்கும் ஈசலை இனிய ஆட்டு மோருடன் பெய்து அத்துடன் புளிச்சோற்றைக் கலந்து உண்பர்.
மறவர், வெண்சோற்றுடன் பன்றி இறைச்சியைக் கலந்து உண்டனர்.
இறைச்சியுணவு தெவிட்டி வெறுத்தால், பால் கலந்து செய்தனவும் வெல்லப்பாகு கொண்டு செய்தனவுமான பணியாரங்களை உண்டனர்.
இறைச்சி கலந்த சோற்றுணவில் நெய்யை நீரினும் மிகுதியாகப் பெய்து உண்டனர். நெய்யால் வறுக்கப்பட்ட வறுவலையும், சூட்டுக்கோலால் சுடப்பட்ட கறியையும் சுவைத்தனர்.
உழவர்கள் வாளை மீன் பொரியலுடன் பழைய சோற்றை உண்டனர்.
குடிவகை:-
சங்ககால மக்கள் பல்வேறு மூலப்பொருள்களிலிருந்து தயாரித்த மதுவையும் கள்ளையும் பருகி மகிழ்ந்தனர்.
தென்னங்கள், பனங்கள், அரிசிக்கள், தேக்கள், யவன மது தோப்பிகள், நறும்பிழி, குங்குமப்பூ மணம் கமழும் தேறல் போன்ற பல்வகை மதுவையும், கள்ளையம் அவரவர் விருப்பத்திற்கும் வாழ்க்கைத் தரத்திற்குமேற்ப தயாரித்துப் பருகினர்.

பத்திய உணவு:
பிணியுற்றபோது உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்தனர். கடும் பிணிகள் உற்றபோது பிணியாளன் விரும்பிய உணவு வகைகளைக் கொடுக்காமல் மருந்தின் தன்மைக்கேற்ப உணவை ஆய்ந்து கொடுத்தனர். இக்காலப் பத்திய உணவுக்கு இணையாக இதனைக் கருதலாம்.
குழந்தை உணவு:
குழந்தைகட்கு நெய்ச் சோறு ஊட்டினர்.
விரத உணவு:
பார்ப்பனர் எனும் பிரிவினர் எப்போதும் விரத உணவு கொள்வர்.
இதனைப் படிவ உண்டி என்று குறுந்தொகை குறிப்பிடும். காமத்தின் இயல்பைக் கட்டுப்படுத்தும் தன்மை இப்படிவ உண்டிக்கு இருந்தது என்பதை உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.
அறிவர் உணவு:
அறிவர் எனும் முக்காலமும் உணரும் துறவியர் நெல்லால் சமைத்த சோற்றுடன் வெண்ணெயைக் கலந்து உண்டனர். அதன்பின் ‘வெப்பத் தண்ணீர்’ அருந்துவர். இதற்கெனச் சேமச் செப்பினையும் உடன் வைத்திருந்தனர்.
கைம்மை மகளிர் உணவு:
கணவனை இழந்த பெண்டிரை ‘உயவர் பெண்டிர்’ ‘கழிகல மகளிர்’ என்று அக்காலத்தில் அழைப்பர்.
இவர்கள் உணவில் நெய் போன்றவை சேர்க்கப்படவில்லை. கைகளில் இலையை இட்டு அதில் வெறும் நீர்விட்டுப் பிழிந்த சோற்றுடன் எள்ளுத் துவையலையையும், புளி கொண்டு வேக வைத்த வேளைக் கீரையையும் உண்பர். சிலர் அல்லி அரிசியை உண்பர்.
அந்தணர் உணவு:
பாற்சோறு, பருப்புச்சோறு, நெற்சோறு, மிளகு கலந்த நெய்யுடன் கூடிய கொம்மட்டி மாதுளங்காய், மாவடு ஊறுகாய் போன்றவற்றை உண்டனர். அத்துடன் பலாப்பழம், வாழை, இளநீர், நுங்கு ஆகியவற்றையும் உண்டிருக்கின்றனர்.
உணவைச் சமைக்கும் முறை:
இக்காலத்தில் சமையற்கலையைக் கற்பிக்கும் நூல்கள் பல இருப்பதைக் காணலாம்.
சங்க காலத்தும் ‘மடை நூல்’ என்னும் பெயரில் சமையற் கலை நூல் இருந்தது என்பதையும் அந்நூலினை வீமசேனன் எழுதினான் என்பதையும் அந்நூலில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ள உணவு களையெல்லாம் அக்காலத்தவர் சமைத்து உண்டனர் எனும் செய்திகளைச் சிறுபாணாற்றுப் படைப் பாடல் மூலம் அறியலாம்.
சங்க கால மக்கள் மண்பாண்டத்தில் சமைத்துப் பானையில் சோறு உண்டனர்.
உலக்கைக் கொண்டு நெல்லைக் குற்றி அதனை உலையில் பெய்து சமைத்தனர். அரிசியை அரிக்கும் பழக்கத்தால் அதில் உள்ள பல சத்துக்கள் கழிநீரில் வீணாகி விடுகின்றனர். எனவே, அரிசியை அரிக்காமல் அப்படியே உலை பெய்து சமைத்தலே நல்லது. சங்க கால மக்கள் இயல்பாகவே அரிசியை அரிக்காமல் உலையில் இட்டுச் சமைத்தனர்.
பழந்தமிழரின் சமைக்கும் முறைகள் இயல்பாகவே இக்கால அறிவியல் நெறிக்கேற்ப அமைந்திருப்பது எண்ணி மகிழத்தக்கது.
உண்ணும் முறை:
சங்க காலத்து மக்கள் உணவை வாழை இலையிலும் தேக்கிலையிலும் இட்டு உண்டனர்.
வெள்ளி, பொன் போன்ற கலங்களிலும் உண்டனர்.
சமைத்த உணவைச் சுடச்சுட உண்டு வயிர்த்தனர். உணவை நாவினால் புரட்டிக் கொடுத்து மென்று விழுங்கினர். இதனை “நாத்திறம் பெயர்ப்ப உண்டு” என்று புறநானூறு அழகுற விளக்கும்.
நன்றி: மூலிகை மணி



Sunday, 6 June 2021

சூப்பர் நெல்

 இஸ்ரேல் இப்போ புதிய வகை நெல்லை கண்டுபிடித்து விட்டது .அதனால்,நெல் உற்பத்தியின் மீது மிகப்பெரும் குற்றச்சாட்டு வந்துள்ளது.அரிசி உற்பத்தியினால் தான் உலகம் வெப்பம்அடைகிறதாம்.




தொழிற்சாலைகளோ ,சுரங்கம் அமைப்பதோ ,மீத்தேன் ,பெட்ரோல் எடுப்பதோ காரணம் இல்லை போல !நெல் உற்பத்தி செய்வது தான் காரணமாம்.அதிக படியான நீரை நெல்லுதான் உறிந்து இந்த மண்ணின் நீர் வளத்தை கெடுகிறதாம்.

ஏற்கெனவே,எங்கெல்லாம் தொழிற்சாலைகள் அதிகமோ அங்கெல்லாம்,மக்கள் நீர் பிரச்னைச்சை எழுப்ப கூடாது என்பதற்காக ,சொட்டு நீர் பாசனம் அறிமுகப்படுத்தி அம்மக்களிடம் இருந்து வர வேண்டிய கேள்விகளை தடுத்தாகி விட்டது.

இப்போ அதையும் தாண்டி புதிய வகை நெல்லை இஸ்ரேல் கண்டுபிடித்து விட்டது.




இங்கு விவசாயத்தில் நடந்த எல்லா மாற்றங்களும் இஸ்ரேல் அவங்க நாட்டின் பற்றாக்குறை நீர் ஆதாரத்துக்காக கண்டுபிடித்தது.

ஆனால் அங்கு பலன் தர'வில்லை.

அதனால் இஸ்ரேலுக்கு ஏற்ற சிறந்த சந்தையாக இந்தியா விளங்குகிறது .

இப்போ இஸ்ரேல் புதிய நெல் வகையை கண்டுபிடித்துள்ளது.நீர் அதிகம் தேவையில்லாத விதை அது .அந்த 

சூப்பர் நெல் தான் உலகம் வெப்பமயமாதலை தவிர்க்குமாம்.

எனவே 

புதியவகை நெல்லுக்கு அறிமுகமாக ,நெல் உற்பத்திதான் அதிக மீத்தேனை வெளியிடுகிறது என்று கூறப்படுகிறது .

எனில் இங்கு தண்ணீர் பிரச்சனையே இருக்காதாம் !இது அப்பட்டமான பொய் அல்லவா?

கார் உற்பத்தி,பேப்பர் உற்பத்தி ,ஆடை உற்பத்தி என்று ஏகப்பட்ட நிறுவனங்கள் இருக்க நெல்லின் மீது பழி போடுவது ஏன்?

ஏனெனில் புதிய  நெல் வருவது மட்டும் காரணம் அல்ல.

அதிகஅளவில் மின்சார கார்களும் உற்பத்தி ஆகப்போகிறது. எனவே விவசாயத்திற்கு போக வேண்டிய நீர், நீர்மின்சக்திக்கு பயன்படப்போகிறது.

மின்சார கார் மாசை கட்டுப்படுத்தும் என்று எண்ணினாலும்,அதன் உற்பத்தி பயன்தரும் என்றாலும் ,

புதிய வகை நெல்லில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பது விளைச்சலுக்கு பிறகே வெளியில் வரும்.


https://www.bbc.com/tamil/science-57365399





தண்ணி இல்லாமல் ,மண்ணு இல்லாமல் விவசாயம் செய்வது என்று எதுவெல்லாம் இயற்க்கைக்கு எதிரானதோ அதையெல்லாம் ,மக்களிடம் விற்பனை செய்ய இப்போ கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் போல,
இந்த உலகம் வெப்ப மயமாதல் !




Wednesday, 2 June 2021

அற்புத மருத்துவ அறிவியல்

 தமிழில் உடல் உறுப்புகளுக்கு மண்ணீரல் ,கல்லீரல்.நுரைஈரல் என்றே பெயர் வைத்துள்ளார்கள்.இவை அத்தனைக்கும் மிகச் சரியான அறிவியல் விளக்கங்கள் அந்த பெயர்களிலேயே உள்ளது.

உடலில் 4448வியாதிகள் உள்ளதா என்ற

கேள்விகளுடன் தமிழ் மருத்துவம் பற்றி வரும் எல்லா தகவல்களும் பொய்யானது என்ற மனப்போக்கில் கடந்து செல்கிறார்கள் .

தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடு இது.

படித்து பாருங்கள்.

தற்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமானஅறிவு  நம் உடல் சார்ந்த அறிவு மட்டுமே !

https://bit.ly/2RFF9Xy


https://bit.ly/2RFF9Xy





உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்தேனே !

இது எதோ தமிழின் பெருமைகள் என்று மட்டும் கருதி நாம் கடந்து சென்றால்,அதுதான் நாம் தமிழுக்கு செய்யும் துரோகம் ஆகும்!

உடல் என்றால் என்ன என்று தேடினால் 

இயற்கை உருவாக்கிய அற்புத மருந்து தொழிற்சாலை தான் இந்த உடல்

என்ற புரிதல் ஏற்பட்டால் அது தான் 

தமிழுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும் !





தமிழ் என்பது தொல்காப்பியம் படிப்பதும்,சங்க இலக்கியங்கள் படிப்பதும் மட்டும் அல்ல .

தமிழ் என்பது இந்த உலகின் அற்புத மருத்துவ அறிவியல் ஆகும்.

Thursday, 27 May 2021

மேற்கத்திய சந்திரமுகி

 மருத்துவமனை செவிலியர்கள் பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் , இஞ்சி இவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து , வடிகட்டி குடியுங்க என்று கூறி விட்டார்களாம் . இவையெல்லாம் வாட்சப் forward msg கள் . இவற்றையெல்லாம் செவிலியர்கள் கூறுகிறார்கள் என்று பலரும்  கோபத்துடன் பதிவு செய்கிறார்கள் முகநூலில்! .

போற போக்கை பார்த்தால் , இனி மருத்துவர்கள் , செவிலியர்கள் மனம் மாறி உள்ளூர் காய்கறிகள் ,கீரைகள் உண்ணுங்கள் என்று கூறி விட்டால் கூட , அதையும் குற்றம் கூறுவார்களோ ! 

முற்றுலும் மேற்கத்திய சந்திரமுகியாக மாறி வருகிறது போல இந்த சமூகம் !




கொரோனா ஆய்வு தகவல்கள் வரவில்லையே ஏன் ?

 கொரோனா ஆய்வு தகவல்கள் வரவில்லையே ஏன் ?


2019 இறுதி முதல் கொரோன இந்த  உலகையே ஆட்டி படைக்கிறதாம் . இருந்தும் என்ன பயன் ?

இது யாரையெல்லாம் பாதிக்கிறது ?

இது வரை இறந்தவர்கள் ஏற்கெனவே நுரையீரல் நோயாளிகளா ?இல்லை திடீரென பாதிக்கிறதா ?

இது வரை இறந்தவர்களுக்கு ஏதேனும் பொதுவாக ஒத்து போக கூட பழக்கங்கள் உள்ளதா ?

இது வரை நோய் தொற்றுக்கு ஆளானவர்களில் ஆண்கள் அதிகமா ? பெண்கள் அதிகமா ? வயது என்ன ?

அவர்களின் உணவு பழக்கங்கள் ஏனெனென்ன ?

மது பழக்கம் கொண்டோர் எத்தனை பேர் ? புகை பழக்கம் உள்ளோர் எத்தனை பேர் ?

இவர்களையெல்லாம் பாதிக்கிறதா ? அல்லது எந்த குடிப்பழக்கமும் இல்லாதவர்களை அதிகம் பாதிக்கிறதா ?

இதுவரை எந்த மாதிரியான காலநிலையில் 

இந்த பாதிப்புகள் அதிகம் உள்ளன ?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கிறதா ? 

இது நாள் வரை ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் , உடலில் நோய் எதிர்ப்பு திறன் இருக்காது என்று கூறி வந்த இந்த அறிவியல் உலகம் திடீரென வயது முதிர்ந்தோருக்கு தடுப்பூசி பரிந்துரைக்கிறதே ? இப்போது மட்டும் எதிர்ப்பு திறன் வளர்ந்து விடுமா ?


ஏன் எந்த தகவல் தொகுப்பும் இந்த உலகம் இது வரை தொகுக்கவே இல்லை .இரெண்டு ஆண்டுகள் ஆக போகிறது .கொரோன சண்டை ஆரம்பித்து !

இனிமேலாவது தொகுப்பார்களா ?


காவேரி வாழ்க !

இப்படி ஒரு வழி காட்டிய  , வருங்கால தலைமுறையை எண்ணி கவலை கொண்டு உருவாக்கிய அரசு, மற்றும் அதிகாரிகள் அத்தனை பேரையும் வாழ்த்தியே ஆகணும் ! இந்த வாழ்த்தில் நிகழ்கால அரசு,கடந்த கால அரசு என்றெல்லாம் இல்லை . அனைவருக்கும் பங்குண்டு என்பதால் , அனைவருக்குமே வாழ்த்துக்கள் போய் சேரட்டும் !

காவேரி வாழ்க !

நிலத்தடி நீர் சேமிப்பு மீது  அக்கறை கொண்டவர்கள் அரசும் ! அதிகாரிகளும் !



Wednesday, 26 May 2021

மதுவந்தி - ஒரு மாநிலத்தில் ஆளுநராக !

 

ஆரியம் vs திராவிடம் 


நாள்: 27.5.20021 - வியாழக்கிழமை 

இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் முழுக்க ஒரு பள்ளியும் அதன் உரிமையாளரும் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உட்பட்டு எழுதப்படுகிறார்கள் .
அந்த பள்ளியின் ,வணிகவியல் ஆசிரியர் இணைய வழி வகுப்பில் ஒரு மாணவியிடம் தவறாக ,புலன வழியில் குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார் . அதை அடிப்படையாக கொண்டு தான் பிரச்னை!
அந்த ஆசிரியர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விட்டது.

அந்த பள்ளியின் பெயர் பத்மா சேஷாத்ரி பள்ளி ,சென்னை
அதன் உரிமையாளர்கள் : நடிகர்: ஒய் .ஜி .மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தி . 
              
இந்த சமூகம் விழித்து கொண்டது.எல்லாவற்றிக்கும் போராட ஆரம்பித்து விட்டது .எனவே உடனுக்குடன் நீதி கிடைத்து விடும் என்றெல்லாம் எண்ணி விட்டால் , நம் அறிவிற்கு சில விஷயங்கள் இன்றும் புரிய வில்லை என்றே அர்த்தம் !



நம் அன்றாட வாழ்வில் நாம் செய்து வரும் மிக முக்கிய விஷயம் .
எப்போதும் தொலைக்காட்சிகளில் அல்லது நேரிலோ கூட மானை புலி துரத்தினால் ,மானுக்காகவே பரிந்து பேசுவோம் . புலியை திட்டி தீர்த்துவிடுவோம்.
மான் தப்பித்து விட்டால் , மனம் திருப்தி அடைந்து விடும் . பிறகு நாம் கோழியோ,ஆட்டையோ அடித்து உண்போம் .இது தான் உலக வழக்கும் கூட !

இது என்ன மனநிலை ? நம்மிடம் இரக்க குணம் உண்டு என்றெல்லாம் நாம் அலட்டி கொள்ள கூடாது .
வனவிலங்கு சட்டம் 1972 க்கு முன்பு வரை 
எல்லோரும் மான் கறி உண்டவர்கள் தான் !மானின் எண்ணிக்கை குறைந்து விட்டது ,பிறகு மான் பாவம் என்ற போதனைக்கு ஆட்பட்டது .

இப்போ கதைக்கு வருவோம். இதை உளவியல் எப்படி கூறுகிறது என்றால் , இந்த சட்டம் வரவில்லை என்றாலும் நாம் மானுக்காகதான்  பேசி இருப்போம் . ஏனெனில் நமக்கு எதிரி , உணவு எதிரி தான் புலி  !
அதனால் நாம் புலியை விரட்டுவதில் எந்த தவறும் இல்லை . என்றே கூறுகிறது .


அப்படித்தான் , இந்த பள்ளிக்கூட விஷயத்திலும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது .இங்கு யாரும் அந்த பெண்ணிற்காக பேசவே இல்லை . மாறாக அதன் உரிமையாளரை எப்படியெல்லாம் பேச வேண்டுமோ ,அப்படியெல்லாம் பேசுகிறார்கள் .

பிறகு தான் அடிப்படை புரிந்தது . பள்ளியின் உரிமையாளர்கள் பிராமண சமூகம் . திட்டுபவர்கள் எல்லாம் திராவிடம் !
எனில் இந்த சண்டை நியாயம் தானே !

இங்கு நல்லது செய்து பெயர் வாங்குவது கடினம் .ஆனால் அல்லது செய்து விளம்பரமாவது மிகச் சுலபம்!
திட்டி திட்டியே ஒருவருக்கொருவர் விளம்பரம் கொடுப்பதில் வல்லவர்கள் ஆரியம் மற்றும் திராவிடர்கள் ! 

பொள்ளாச்சி பிரச்னை நடந்தது ,அதில் சம்மந்தப்பட்டவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள் !
நிர்மலா தேவி என்ற பெண் பேராசிரியர் , பெரும் புள்ளிகளுக்காக கல்லூரி மாணவிகளை அனுப்பி வைக்கும் தரகர் வேலை பார்த்தார் . என்ன நீதி கிடைத்து விட்டது . இங்கு யார் தண்டிக்கப்பட்டார்கள் .எதுவும் இல்லை.
காசி என்ற கயவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சனையின் தீர்வு என்ன ?

எதுவும் இல்லை !
மாறாக இவர்களெல்லாம் பிரபலமானார்கள் என்பது மட்டுமே உண்மை !நாளையே காசி தேர்தலில் நின்றால்  கூட வெற்றி பெற்று விடுவான் .

ஏனெனில் மக்களுக்கு நல்லது , அல்லது இரண்டிற்கும் இடையில் நினைவில் இருக்கும் பெயருக்கு மட்டும் தான் வாக்களிப்பார்கள் .

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ,மதுவந்தி என்பவரை யாருக்கும் தெரியாது .
தமிழிசை சௌந்தர்ராஜன் , தெலுங்கானா ஆளுநர் ஆவதற்கு முன்பு வரை மதுவந்தி வெளியில் பெரிதாக பேசப்பட்டதே இல்லை . ஆனால் , தவறாக பேசுவது , அதற்கான விமர்சனங்கள் என்று எதிர்மறை விளம்பரங்கள் மூலம் , மிக விரைவில் விளம்பரமாகி விட்டார் .

எதிர்பார்ப்போம் விரைவில் , மதுவந்தி ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆளுநராக !
அது வரையில் ஆரிய , திராவிட சண்டை என்ற பெயரில் விளம்பரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் !

அப்போ நாம் என்ன செய்வது ?
எப்போதும் போலத்தான் வேடிக்கை பாப்போம் !





Monday, 24 May 2021

அறிவாளிகள்

 தமிழ் மருத்துவத்தில் 3நாள் பத்தியம் என்ற உடன் ,வேண்டாம் என்று கூறிய இந்த அறிவு தான்,வாழும் காலம் வரை சர்க்கரை,உப்பு சேர்க்காதே என்று கூறியவுடன் ஏற்றுக்கொள்கிறது!    முரண்!


வடஇந்தியாவை எப்போதும் எதிர்க்கிறோம் !ஏன்?

அவர்கள் வோல்காவில் இருந்து வந்தவர்கள் !அவர்களை நாம் மதிக்க கூடாது.

சரி தான் !ஆனால்,

நாம் மட்டும் என்னவாம் ,

நாம் அந்த பக்கம் போகாமல் ,இந்த பக்கமாக அதே வோல்கோ நதிக்கரை மேற்கத்தியதை பின்பற்றுவோம்!

நாம் உண்மையிலேயே அறிவாளிகள் தான் !எப்படியெல்லாம் நாம் ஆரியத்தை எதிர்க்கிறோம்!பெருமை!


தமிழ் வானியல் வேண்டாம் !

தமிழ் மருத்துவம் வேண்டாம்!

தமிழ் அறிவியல் வேண்டாம் !

தமிழ் மக்களும் வேண்டாம் !

ஆனாலும் தமிழ் வாழ்க!

யாருக்காக ?



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...