Thursday, 22 September 2016

கருப்பு இட்லி சாப்டீங்களா ?

இட்லி நம் நாட்டின் பூர்வீக உணவு. நாம் இப்படி கூற இது இந்தோனேசியா உணவு என்று கூறுவோரும் உண்டு.  ஆனால் இந்தோனேசியா என்பது புராண காலங்களில் தமிழர்கள் வாழ்ந்த இடம் என்று கூறுபவர்களும் உள்ளனர்.

சரி விடுங்க !


இந்த உலகம் ஒப்பு கொண்ட உண்மை என்னவெனில் , குழந்தைகள் கூட உண்ண கூடிய உணவு எது எனில் அது இட்லி மட்டுமே !
 எத்தனை வகையான இட்லி சாப்புடுவீங்க ?

அரிசி மாவு இட்லி

காஞ்சிபுரம் இட்லி

ரவா இட்லி

ஓட்ஸ் இட்லி

மசாலா இட்லி

பட்டன் இட்லி

ரவாவும் உளுந்தும் கலந்து செய்தா அது ரவா இட்லி

idli க்கான பட முடிவு


ஓட்ஸை ஊற வைத்து அதில கொஞ்சம் மசாலா கலந்து செய்தா ஓட்ஸ் இட்லி .

idli க்கான பட முடிவு




அதே அரிசி மாவுல குட்டி குட்டி ஊற்றி சாம்பார்ல ஊற வச்சி சாப்பிட்ட அது பட்டன் இட்லி .

idli க்கான பட முடிவு


idli க்கான பட முடிவு

பட்டன் மசாலா இட்லி

ஓட்ஸ் அல்லது அரிசி , உளுந்து மாவில் பாலக் கீரையை சுத்தம் செய்து நரம்பு எடுத்து விட்டு அரைத்து சாறு கலந்து ஊற்றி எடுத்தா அது பாலக் இட்லி .

idli க்கான பட முடிவு

பாலக் ஒட்ஸ் இட்லி


அரிசி மற்றும் உளுந்து மாவில் கடுகு ,மிளகாய் தாளித்து அல்லது கேரட் துருவல் சேர்த்து கலந்த மாவை அதை இட்லி பானை வைத்து ஊற்றி எடுக்காமல் ,இதற்கென்று உள்ள குழாய் போன்ற ஒரு பாத்திரத்தில் ஊற்றி எடுத்து அதன் பிறகு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து எடுத்தால் அது தாங்க காஞ்சிபுரம் இட்லி .
kanchipuram idli க்கான பட முடிவு



kanchipuram idli க்கான பட முடிவு

காஞ்சிபுரம் இட்லி


இதுல மல்லிகைப்பூ மாதிரி இட்லி என்பது என்ன ?

மல்லிகை பூ மாதிரி வெள்ளையா இருக்கணுமா ?

மல்லிகைப்பூ எப்போ ரொம்ப வெள்ளையா இருந்திச்சி ?

யாராவது பார்த்த சொல்லுங்க . ஏன்னா மல்லிகை பூ வெளிர் மஞ்சள் நிறமாக தான் இருக்கும் .

அப்புறம் இட்லி வெள்ளையா இருக்க கூடாதுங்க !

ஏன்னா

மல்லிகை பூ இட்லி என்பது கூட , வெள்ளை கிடையாது . தூய மல்லி அரிசி என்ற ஒரு பாரம்பரிய அரிசி இருக்கு . அந்த அரிசியில் உளுந்து கலந்து செய்த இட்லிக்கு பெயர்தான்  மல்லி இட்லி .

பெயர் மருவி போய் மல்லிகை பூ இட்லி என்றாகி நம் வெள்ளை மோகத்தில் வந்து விழுந்ததுதான் விதவிதமான இட்லி வகைகள் .

டாக்டர் சிவராமன் கூறுகிறார் .

இட்லின்னா கொஞ்சம் கருப்பா இருக்கும்.

இட்லின்னா கொஞ்சம் சிவப்பா இருக்கும்

இட்லின்னா கொஞ்சம் காபி நிறமா இருக்கும் .

அப்புடின்னு !

ஆக

இட்லி என்பது வெள்ளையாகவே இருக்காது என்று கூறுகிறார்.

அதெப்புடி கருப்பா இருக்கும் ?

ஆமாங்க ! கொஞ்சம் கறுப்பரிசி போட்டு செய்யுங்க ! இந்த கருப்பு அரிசி என்பது கருப்பு கவுனி அரிசிங்க !

1 பங்கு  அரிசிக்கு 4 : 1 என்ற விகிதத்தில் உளுந்து , ஒரு ஸ்பூன் வெந்தயம் கலந்து ஊற வைச்சி அரைத்து இட்லி ஊற்றி எடுங்க . கருப்பு இட்லி தயார் .

அதே மாதிரி மூங்கில் அரிசி பயன்படுத்துங்க !

அதே அளவில் பூங்கார் அரிசி , மாப்பிளை சாம்பா , இலுப்ப பூ சம்பா  சிகப்பு கவுனி இதெல்லாம் பயன்படுத்துங்க !

குழந்தைங்க இதெல்லாம் சாப்பிட மாட்டாங்க !

அப்புடின்னு தோணும் !

இதில உங்க விருப்ப படி கேரட் சாறு , பீட்ரூட் சாறு , பாலக் சாறு , கொத்தமல்லி சாறு இதெல்லாம் கலந்து வண்ண வண்ணமா எடுங்க ! கண்டிப்பா குழந்தைகளுக்கு பிடிக்கும்.

இது நிஜமாகவே ரொம்ப சுவையாக இருக்கும் !

செய்முறை :

மறந்துறாதீங்க ! இது போன்ற அரிசி வகைகள் ஊறுவதற்கு ரொம்ப நேரம் எடுக்கும். அதனால் முதல் நாள் மாலை ஊறவைத்து மறுநாள் காலையில் அரைங்க !  வெள்ளை உளுந்தாக இருந்தால் 1 கிலோஅரிசிக்கு கால் கிலோ உளுந்து போடுங்க ! அதையும் 40 முதல் 50 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கணும் !

கருப்பு உளுந்தாக இருந்தால் , கால் கிலோ தேவை இல்லை 150 கிராம் முதல் 200 கிராம் போதுமானது .




இது பூங்கார் அரிசி இட்லி


இது ஆரோக்கியமான இட்லி . உடலுக்கும் , மனசுக்கும் புத்துணர்ச்சி தரும் .

பூங்கார் அரிசியில் இட்லி  கர்ப்பிணி பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும்  அவசியம் .

மாப்பிள்ளை சம்பா இட்லி , புது மாப்பிள்ளைக்கு அவசியம் .

மல்லி அரிசி இட்லி எல்லோருக்கும் அவசியம் .

இட்லியின் நிறம் வெள்ளை இல்லங்க !
அது நம் தமிழர்களின் நிறம் !


Thursday, 15 September 2016

தகப்பன் இல்லா பிள்ளை போலும் தமிழ்நாடு !






இன்று 16  - 9 - 2016 ( வெள்ளி கிழமை )  தமிழகம் முழுவதும் பந்த் !

கர்நாடகத்தில் தமிழ் பதிவெண் இட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கும் , தமிழர்கள் தாக்கப்பட்டதற்கும் எதிரிப்பு தெரிவித்து !

ஆனால் யாரை எதிர்த்து என்பதை குறித்து யாரும் விளக்கம் கொடுக்க வில்லை .

கர்நாடக அரசை எதிப்பதாயின் , கர்நாடாவில் போராட வேண்டும் .

மத்திய அரசை எதிர்ப்பதாயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்க வேண்டும் .

தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்ட போது தி மு க அரசு சென்னையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தியது .

இதனால் தமிழ்மக்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
காப்பாற்றப்பட்டார்களா ?

இப்போதும் அப்படிதான் நடக்கிறது !

அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளன .

ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன

தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன

தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன


யாருக்கு நஷ்டம் ?

கர்நாடக அரசுக்கா ?
மத்திய அரசுக்கா ?
பெரும் பணக்கார்களுக்கா ?
அரசியல் வாதிகளுக்கா ?

சாமான்ய தமிழன் இன்று ஒருநாள் ஊதியத்தை இழக்கிறான் !

இப்போராட்டத்தை நடத்தும் கட்சிகள் பெயர் வாங்குகின்றன.

பத்திரிகைகளும் , தொலைக்காட்சிகளும் காட்சி படுத்தி காசு பார்க்கின்றன  .

அஹிம்சா வழி போராட்டம் என்ற பெயரில் காந்தி அடிகள் இது போன்ற போராட்டங்களை சுதந்திரத்திற்கு முன் நடத்தினார் . அப்படி நடத்தியதால் பிரிட்டிஷாரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது .

இப்போது நடக்கும் போராட்டத்தால் எந்த பொருளாதாரம் பாதிக்க போகிறது .

இன்று மட்டும் குறைந்த பட்சம் 15000 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறுகிறார் வணிகர் சங்க தலைவர். இந்த நஷ்டத்தை யாருக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும் ?

கர்நாடகாவுக்கு !

மத்திய அரசுக்கு !

செய்தோமா ? இல்லை . இப்போதும் அறிவிலி தனமாக , எவனோ பெயர் வாங்க நம்மை நாமே நஷ்டப்படுத்தி கொண்டிருக்கிறோம் .

போராட விரும்பினால் , பொருளாதார போராட்டம் நடத்து !

இது ஒன்றும் மன்னராட்சி அல்ல !

நம் வீரத்தை காட்ட !

இது மக்களாட்சி !

ஓங்கி அடி ! பொருளாதாரத்தில் இடி போலும் அடி !

கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல !

ஒட்டு மொத்த இந்தியாவுக்கே கூறு !

இந்தியா ஒரு கூட்டு குடும்ப நாடு . இங்கு ஒருவரை ஒருவர் அடித்தால் வேடிக்கை பார்க்கும் மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து பாடம் நடத்து !

கர்நாடகத்தில் இருந்து வரும் பொருளை எல்லாம் நிறுத்து !

கர்நாடகத்திற்கு செல்லும் பொருளை எல்லாம் நிறுத்து !

மணல் லாரிகளே , நம் மண்ணை சுரண்டிதானே கர்நாடகத்தை வளமை படுத்தினாய் ! நிறுத்து ! மணல் கொடுப்பதை நிறுத்து !

மின்சாரம் வழங்குவதை நிறுத்து !

போக்குவரத்து சேவைகளை நிறுத்து !

துறைமுக சேவைகளை நிறுத்து !

தேனும் , மீனும் , காயும் , பழமும் வராது என்று கூறு !

கன்னட திரைப்படங்களை நிறுத்து !

கன்னட நடிகர்களை தமிழில் நடிக்க வைப்பதை நிறுத்து !
(அவன் யார் நமக்கு கருத்து சொல்ல ?)

இப்படி எல்லாம் செய்து விட்டால் , கர்நாடகம் ஒன்றும் இடிந்து விடாது .

வேறு ஒரு மாநிலத்தில் இருந்து இவற்றை எல்லாம் பெரும் . என்று எண்ணலாம் .!

ஆனால் அப்படி செய்ய இயலாது

தமிழகம் தான் மிக அருகில் உள்ளது . மற்றும் விலை குறைவாக பொருள் வழங்கும் மாநிலம் .

மற்ற மாநிலங்களில் வாங்கினால் விலை வாசி உயரும் !

அன்று ஏற்படும் பொருளாதார தடை ! அந்த நாளை உருவாக்கு !

ஏற்கனவே கர்நாடகம் , 75 % வறட்சி பூமிதான் !

சமீப காலமாக கணினி தொழில் நிறுவனங்கள் வந்து தான் கர்நாடகம் பெயர் பெற்றது .
அதையும்  மாற்றி காட்டு !

ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறையும் ,ஆட்சி மாற வேண்டும் என்ற நோக்கில் கர்னாடக அரசியல் வாதிகள் , காவிரி பிரச்சனையை கையில் எடுப்பதும், இதற்காக தமிழர்களை வதைப்பதும் சரியாகாது !

இதை சொன்னால் கன்னட மக்கள் காதிலும் விழாது !

ஏன் ?

இன்றைய நிலைக்கு இங்கு வாழும் பூர்வ குடி தமிழர்கள் கூட ஏற்பதில்லை .
அவர்களும் சேர்ந்து அடிக்க தயாராக உள்ளனர் .

நாம் புரிந்து கொள்ள வேண்டும் !

யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழன் போராடுகிறான் , இந்திய தூதரகத்தின் முன்!



பிரிட்டன் தமிழன் போராடுகிறான் இந்திய தூதரகத்தின் முன் !

மலேசியாவில் பேசுகிறான் தமிழன் , எப்படி போராட்டம் இருக்க வேண்டுமென்று !

இவர்களுக்கெல்லாம் தெரிகிறது , எங்கு பேச வேண்டும் , எங்கு போராட வேண்டும் என்று !

தமிழகத்தில் மட்டும் ஏன் இன்னும் பயனில்லா போராட்டங்கள் நடக்கின்றன ?

இதுதான் இன்னும் புரியவில்லை .
நமக்கு தேவை பாதிப்பில்லா போராட்டங்கள் !
அவை பயனில்லாமல் தான் முடியும் !

குறிப்பு :

இப்பிரச்சனை குறித்து தமிழக அரசியல் வாதிகளின் கருத்துக்கள் :

தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு இழப்பீடு, கர்நாடக அரசே வழங்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் 
பொன்.ராதாகிருஷ்ணன்


முழு அடைப்பு போராட்டத்தால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நிரந்தர தீர்வு தரும் : 
அன்புமணி


காவேரி விவகாரத்தில் ரஜினி தலையிட வேண்டும் - 
தமிழிசை சௌந்தர்ராஜன்  


அணைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மறுக்கிறார் தமிழக முதல்வர் . ஏன் என்பதுதான் புரியவில்லை ?
மு.க.ஸ்டாலின்

1983 ல் எதிர் கட்சி தலைவராக இருந்த போது , இது போன்ற பிரச்சனையில் நானே நேரடியாக தலையிட்டு , தண்ணீர் வழங்க கர்நாடகாவிடம் கேட்டேன் .
கலைஞர் கருணாநிதி

நடிகையாக இருந்த காலத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்தேன் . அதில் என்னை தமிழச்சி என்று குறிப்பிட்டதால் , கன்னட காரர்கள் வந்து மிரட்டினார்கள் . அப்போதும் நான் என்னை தமிழச்சி என்றே கூறி கொண்டேன்.
ஜெயலலிதா சார்பாக விகடன்


எல்லாம் பழைய கதை .
பயனில்லா கதை .
போராடு
என்ன விதைத்தாயோ அது தான் முளைக்கும் !
விதை சொத்தையாக இருக்க கூடாது
வீரிய விதைகளை விதை !
அது
முளைக்கட்டும் !
தமிழன் பெயர் சொல்லி
மரமாகி தழைக்கட்டும் !


தகப்பன் இல்லா பிள்ளை அல்ல தமிழ்நாடு !
தரணிக்கே
தகப்பன் போல்
வழி காட்டு ம் வெள்ளை உள்ளம் கொண்ட
உயர்வோடு
போராடு !

Thursday, 4 August 2016

திராவிடம் விதைத்த விதை





"நம் நாட்டுக்கு,சமுதாயத்துக்கு,இனத் திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல 

என்பதாலும் நமக்கு அது ஒரு பொதுக் குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு 

உணர்ச்சிச்சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர,கர்நாடக, கேரள 

நாட்டு மக்களல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள்.



பின்னவர்கள் என்ன எண்ணங்கொண்டு எதிர்த்தாலும் அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு 

இருந்ததால் அதை வலியுறுத்துவதில்  எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த 

பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவையில்லை என்றாலும்,-

திரா விடன்-என்ற சொல்லை விட்டுவிட்டுத்- தமிழன்-.என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் 

பிரிக்கலாமென்றா ல் அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து (நானும் 

தமிழன்தான்) என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.இந்த சங்கடத்திற்கு,தொல்லைக்கு 

என்ன செய்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்."


விடுதலை 11.10.1955
பெரியார் .




பாவம் பாரதி எனும் பிராமணன் அன்று உயிரோடு இல்லை.

உ.வே.சுவாமிநாத அய்யர் அன்று உயிரோடு இல்லை.

சுப்ரமணிய அய்யர் அன்று உயிரோடு இல்லை.

தமிழ் தமிழ் என்று தமிழுக்காக வாழ்ந்து , தமிழ்நாடு மட்டுமே வாழ்வென்று வாழ்ந்த யாரும் உயிரோடு இருந்த வரை திராவிட காட்சிகள் உருவாக வில்லை.

திராவிடர்களே தமிழர்கள் இல்லை எனும் பட்சத்தில் , பிராமணர்கள் தமிழரா இல்லையா என்ற ஆய்வு செய்து அதை வெளிப்படுத்தி இருக்கிறார் பெரியார்.

பிராமணர்கள் தன்னையும் தமிழன் என்று கூறி கொள்கிறார்கள் என்று கூறிய பெரியார் , திராவிட கட்சிகளின் தாய் கட்சியாகிய தென்னிந்தியா நல  கழகம் , தெலுங்கு பிராமணர்களுடைய கூட்டமைப்பு தான் என்பதை மறந்து போயிருப்பாரோ ?

அல்லது தெலுங்கு பிராமணர்கள் தான் தனி ஆட்சி அமைத்து விட்டார்களே ஆந்திராவில் , இனி தெலுங்கு மக்களே தமிழ்நாட்டையும் ஆள வேண்டும் என்று முடிவெடுத்து அதற்க்கு குறுக்கே இந்த தமிழ் பிராமணர்கள் வருவதை தடுக்க நினைத்தாரா ?

ராஜகோபாலாச்சாரிக்கும் , காமராஜருக்கும் தான் தெரியும் , அன்று இந்த திராவிடம் என்னவெல்லாம் சொல்லி தமிழத்தை ஆட்டுவிக்க நினைத்தது என்று !

ஆனால் காமராஜர் பதவி விலகாமல் இருந்திருக்கலாம் !

காமராஜர் , தன மந்திரி சபையில் எதிர்க்கட்சி காரர்களுக்கும் மந்திரி பதவி தராமல் இருந்திருக்கலாம் .

பக்தவச்சலம் , அண்ணாவோடு நெருங்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் எல்லாம் நடந்து விட்டது.

பிராமணனும் ஆண்டான் !

திராவிடமும் ஆண்டான்!

பலன் என்ன ?

எப்போதும் போல் தமிழ் மக்கள்

பிராமணர்கள் திராவிடர்களை குறை சொன்னாலும் ஏற்று கொண்டார்கள்.

திராவிடர்கள் பிராமணர்களை குறை சொன்னாலும் ஏற்று கொண்டார்கள்.

இறுதியில்

இவருவரும் மட்டுமே ஆளும் கட்சி , எதிர் கட்சி என்றாகி

சட்டசபையிலும்

நீங்கள் 100 க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை வைத்திருக்கிறீர்கள் என்று

ஸ்டாலின் கூறுகிறார்.

நீங்கள் 89 பொம்மைகளை வைத்திருக்கீர்கள் என்று அதிமுக அமைச்சர்

கூறுகிறார்.

இதிலே நாம் தமிழர் என்று கட்சி மக்களை குழப்பி கொண்டு , இருக்கிறது.

இதில் தமிழர்களின் நிலை தான் மிக கொடுமையாக உள்ளது.

திராவிடம் விதைத்த விதை திராவிடம் அறுவடை செய்யுமா ?


செங்கமல நாச்சியம்மன் கோவில் - தஞ்சாவூர்





தஞ்சாவூர் சிறப்புகளில் ஒன்று இந்த செங்கமல நாச்சியம்மன் கோவில் .

இது ஒரு காவல் தெய்வம் என்று தான் கூற வேண்டும் . இது யாருக்கும்

குலதெய்வம் அல்ல .


இந்த கோவிலை சுற்றி வாழும் மக்கள் யாரும் , இந்த மண்ணின்

பூர்வீக மக்கள் அல்ல.

இங்கு கல்வெட்டுக்கள் இல்லை .

பெரிதாக யாரும் இதன் பூர்வீகத்தை எழுதியதும் இல்லை.

உண்மையில் மேற்காணும்  செங்கமல நாச்சியம்மன் கோவில் புதிதாய்

கட்டப்பட்ட கோவில் . இங்கு கல்வெட்டுகள் எப்படி இருக்கும்.?


இந்த கோவில் செங்கலாட்சி அம்மன் என்றே அழைக்கப்படுகிறது  .

இதோடு சேர்த்து சியாமளா தேவி அம்மன் கோவிலும் உண்டு

இவர்கள் இருவரும் அக்கா தங்கை என்றே கூறுவர் .

இந்த இருவரும் காது கேளாதவர்கள் , வாய் பேச முடியா இரட்டையர்கள் 

என்பதை கொண்டே பொன்னியின் செல்வன் கதையிலும் , மந்தாகினி 

என்பவரையும் அவரது சகோதரி கதாபாத்திரத்தையும் 

அமைத்திருப்பார் எழுத்தாளர் கல்கி .

அந்த கதையில் வர்ணிப்பது , மதுராந்தக சோழனை ஒரு ஊமை பெண் 

வளர்கிறாள் . அதே சமயம் ராஜா ராஜா சோழனையும் சிங்கள பெண் 

ஒருத்தி காப்பாற்றுகிறாள்.

இந்த இருவரும் அக்கா தங்கை . அவர்கள்தான் சிங்களாட்சி மற்றும் 

சாமளா தேவி என்று மறைமுகமாக தெரிவிக்கிறது அந்த கதை . 

வேறு சில கதைகளும் இதற்க்கு சொல்கிறார்கள் .

அக்கா தங்கை இருவரும் சிங்கள மன்னன் ஒருவரையே திருமணம்

செய்து கொண்டு வாழ்ந்து வரும் பொழுது  , சோழ மன்னனை காண

சென்ற அவர்களது கணவன் மீண்டு வரவில்லை . ஆகையால் இந்த இரு

பெண்களும் இங்கேயே சமாதி ஆகினர் . என்றும்

தன கணவனுடன் வந்த சிங்கள  பெண்கள் இருவரும் , இந்த மண்ணில் 

வாழ்வதே தங்களுக்கு விருப்பம் என்று கூறி மீண்டும் இந்த மண்ணை 

விட்டு வரமாட்டோம் என்று கூறியதாகவும் , அதன் நிமித்தம் அவர்கள் 

விரும்பிய படியே உரல் சத்தமும் , உலக்கை சத்தமும் கேட்காத இடத்தில் 

அவர்களது கணவனோடு அவர்கள் வாழ்ந்து அங்கேயே சமாதி 

அடைந்தனர் என்றும்  கதைகள் உண்டு .

இந்த கதைகள் எப்படி இருந்தாலும் ,

இந்த கோவில் 20 ஏக்கர் பரப்பளவுள்ள காட்டிற்குள் இருந்ததால் இது காட்டு கோவில் என்றே அழைக்கப்படுகிறது .

தற்போது உள்ள குந்தவை நாச்சியார் கல்லூரி  தான் அந்த இடம் . 1960 களில் இங்கு ஒரு கல்லூரி எழுப்ப வேண்டும் என்று அரசு முடிவு எடுத்ததன் விளைவாக இந்த சாமதி கோவில் ஒரு ஓரமாக ஒதுங்கிவிட்டது . அது வரையிலும் எடுத்து கட்டவேண்டிய அவசியம் இல்லாத சூழலில் , அதன் பின்னர் சிறுசிறு வேலைகள் பார்த்து அங்கு நிறைய வேல்கள் எல்லாம் நட்டு வைக்கப்பட்டுள்ளது  .

அந்த இடத்திலும் , கல்லூரி நிர்வாகம் புதிய கட்டிடம் எழுப்ப தீர்மானித்தால் , அதற்க்கு எதிராக வழக்கு தொடர்ந்து 2000 ம் வது  ஆண்டு தீர்ப்பு கொடுத்தது தஞ்சை நீதி மன்றம். இப்போது இருக்கும் கோவில் இடத்தை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் , மேலும் விஸ்தரிக்கவோ , பெரிது படுத்தவோ கூடாது எனவும்  ஆணை பிறப்பித்தது .

இந்த கோவில்தான் காட்டு கோவில் . இன்றும் இங்கு தான் இரவு பூஜைகள் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதம் 2 ம் செவ்வாய் கிழமை நடக்கிறது .
5 நாள் திருவிழாவாக இந்த கோவில் விழா கொண்டாடப்படுகிறது .

இந்த கோவிலில் வழிபாடு நடத்துபவர்கள் , இன்று வடக்கு பூக்கார தெரு மற்றும் தெற்கு பூக்கார தெரு என்று வழங்கப்படும் இடத்தில் வாழும் அம்பலக்கார்கள் .
இந்த பகுதி முன்பு அம்பலகார தெரு என்றே வழங்கப்பட்டது .

அந்த தெருவிலும் ஒரு கோவில் உள்ளது . அது தான் பிறந்த இடம் என்றும் , இந்த காட்டு கோவில் கணவனோடு வாழ வந்த இடம் என்றும் கூறுவர் .
அந்த கோவிலும் 1960 வரையிலும் மிகவும் பழைய நிலையில் இருந்து அப்போது M .L .A வாக இருந்த திரு பரிசுத்த நாடார் அவர்களால் , மேற்கூரை அமைக்க பட்ட , தற்போது தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதா அவர்களின் உதவியோடு கோவிலாக கட்டப்பட்டு கொண்டு இருக்கிறது. துர்முகி  ஆண்டு ஐப்பசி மாதம் 1 ம் தேதி  அன்று
 குபாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

மேலும் இந்த அம்பலகார்களின் குலதெய்வம் கருப்பு சாமியின் கோவில்தான் அந்த காடு . மிகப்பெரிய ஆலமரத்தின் கீழ் இருந்த கருப்ப சாமி கோவில்தான் , இன்றைய E .B இடம் . இப்போது இங்கு மாலை வேளைகளில் , வாகன ஓட்டும்  பயிற்சிகளும் , கிரிக்கெட் விளையாட்டும் நடக்கிறது . ஆனால் இன்றும் ஆடி மாதம் 3 வது வெள்ளிக்கிழமை இங்கு பூஜை நடைபெறுகிறது.

இங்குள்ள கோவில்கள் , பெரிதாக வெளியில் தெரியாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
1. ஜாதி பிரச்னை
2. கல்வி அறிவில்லா மக்கள் ( தற்போது இந்த நிலை மாறி உள்ளது )
3. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள்
4. ஆங்கிலேயர்கள் காலத்தில் , உணவுக்கு வழி இன்றி , இந்த காட்டில் மறைந்து பலரும் , இவ்வழியாக செல்லும் வண்டிகளில் திருடும் வழக்கம் கொண்டிருந்தனர் என்றும் கூறுவர் .
5. இந்த கோவிலில் வழிபடும் மக்கள் , முற்காலத்தில் போர்வீர்களாக இருந்தவர்கள் .
( இவர்களை அடிப்படையாக கொண்டே பூக்கார தெருவிற்கு அருகில் இருப்பது லாயம் என்று பெயர் பெற்றது )
மன்னராட்சி முடிந்து , வெள்ளையர்கள் ஆள தொடங்கிய போது , அவர்கள் ஒடுக்க நினைத்த ஒரு இனம் போர்வீரர்கள் இனம் .
எங்கெல்லாம் , யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களை எல்லாம் குற்றவாளி ஆக்கினார்.
மேலும் மேலும் குற்றவாளி என்று பெயர் சூட்டப்பட்டு ஒரு கட்டத்தில் இந்த கோவில் , மற்றும் இதனை வழிபடும் மக்களும்  ஒதுக்கப்பட்டனர் .
6. இங்கிருந்து மண்ணெடுத்து , புதிதாக ஒரு கோவில் கட்டப்பட்டது. அந்த கோவிலை மட்டும் தான் அனைத்து மக்களும் வழிபடுகின்றனர்.
(இந்த புதிய கோவிலுக்கு வண்டிக்கார தெரு கோவில் என்று பெயர். அங்கிருக்கும் மக்கள் தான் இதனை ஆரம்ப காலங்களில்  சிரத்தையோடு விழா எடுத்து வழிபாடு நடத்தினர் .)
7. இங்கு சிலைகள் கிடையாது.
8. இது சமாதி கோவில்.
9.ஒரு காலத்தில் பாம்புகள் அதிகம் இருந்தது . இன்று இல்லை .
10. இரவு பூஜை பலராலும் பயமுறுத்தப்பட்டது .
11. இங்கு அர்ச்சகர்கள் கிடையாது.
12. கல்லூரி நிர்வாகம் , பெண்கள்  கல்லூரி என்பதால் , கொஞ்சம் நெருக்கடி கொடுக்கிறது .


எது எப்படி இருந்தாலும் , ஒரு கோவிலோ , ஒரு தெய்வமோ அதனை வழிபடும் மக்களின் ஜாதி , பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை நிலை இவற்றை பொறுத்தே , பெருமைக்கு உட்படுகிறது. அதற்க்கு இந்த கோவிலும் விதி விலக்கு அல்ல.

( இப்போது இந்த கோவிலை அதிகம் வழிபடுவது, குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகளே என்பது குறிப்பிடத்தக்கது )

சிங்கள நாட்சி என்பவள் அக்கா .
இவள் சாந்த சொரூபிணி .
இவள்தான் மதுராந்தகனை வளர்ந்தவள் .
புது ஆற்று ஓரம் மிகப்பெரும் பூந்தோட்டம் அமைத்து அங்கு வாழ்ந்து வந்தாள் .
இவள் ஒரு மருத்துவச்சி.
இவள் தான் செங்கலாட்சி என்று அழைக்கப்பட்டு செங்கமல நாட்சி என்று பெயர்பெற்றாள் .

சிங்கள தேவி என்பவள் தங்கை .
மிகுந்த கோவக்காரி .
அனால் யாருக்கும் துன்பம் தராதவள்.
இவள் தான் அருள்மொழி தேவனை காப்பாற்றியவள் .
இவள் தான் சியாமளா தேவி என்று பெயர் பெற்றாள் .

புது ஆற்று கரையோர மக்கள் இன்றும் செங்கலாட்சி அம்மனை மட்டுமே பிரதானமாக கொண்டு வழிபடுகிறார்கள்.

அரண்மனை சுற்றி உள்ள இடங்களில் வாழும் மக்கள் சியாமளா தேவி அம்மனை மட்டுமே பிரதானமாக கொண்டு வழிபடுகிறார்கள்.

இவ்விரு இடங்களிலும் தனி தனியே இவர்களுக்கு கோவில்கள் இருப்பதை தஞ்சையில் காணலாம்.


Monday, 1 August 2016

சரபம் எனும் பறவை



சரபம் என்பது ஒரு வித்தியாசமான பறவை. தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான  உதயண குமார காவியாத்திலும், அதே கதையை கொண்ட பெருங்கதை என்னும் நூலிலும் இந்த பறவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது .

உதயணன் என்பவனின் தாய் கரு உற்றிருக்கும் போது , அவளை தூக்கி கொண்டு சென்றது ஒரு பறவை . அது காட்டிற்குள் சென்று , அவளை கீழே கிடத்தி உண்ண எத்தனிக்கும் போது , அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை அறிந்து ,அவளை அப்படியே போட்டு விட்டு பறந்து விடுகிறது. அங்கு தான் உதயணன் பிறக்கிறான் .

ஒரு பெண்ணை அதுவும் கருவுற்ற பெண்ணை தூக்கும் அளவிற்கு வலிமை கொண்ட இந்த பறவை தான் சரபம் ஆகும் .


இதற்க்கு 2 முகங்கள் , 8 கால்கள், 32 கைகள் 
என்று குறிப்பிடப்படுகிறது . இதிலே 4 கால்கள் பறக்கும் . 4 கால்கள் நடக்கும் வகையில் இருப்பதாகவும் , ஒரு முகம் சிங்கத்தை போலவும் , மற்றொரு முகம் யானை  போலவும் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது . 

மற்றும் சில கதைகளில் யாழி போன்ற உருவம் எனவும், 8 கால்கள் கொண்ட மான் உருவம் எனவும் குறிப்பிடப்படுகிறது .

இது சிங்கத்தையும் , யானையையும் கூட கொல்லும் வலிமை உள்ளது . இதனை தமிழ் இலக்கியங்களில் சிம்புள் என குறிப்பிடுகிறார்கள் . அதாவது 8 கால் பறவை . இதை தமிழக, கர்நாடக  மற்றும் இலங்கை தமிழ் கோவில்களின் சிற்பங்களில் காணலாம் .

சரப புராணம் 

வட மொழி நூல்களில் இதே சரபம் சார்ந்த குறிப்புகளும் , அதற்கென புராணமும் உள்ளது .

அதாவது , இரணியனை கொல்வதற்காக அவதாரம் எடுத்தார் நரசிம்மர். அந்த அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய பிறகும் , பிரகலாதனாலும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் , நரசிம்மர் மேலும் மேலும் எல்லோரையும் கொன்று குவித்து கொண்டிருக்கையில் , அனைவரும் சிவபெருமானிடம் வேண்டி கொண்டதன் பேரில் , சிவன் சரபமாக மாறி , நரசிம்மரை கொல்கிறார் . அப்போது உருவானதுதான் இந்த சரபம் எனும்  பறவை என்று
வட மொழி கதைகள் கூறுகின்றன.


சரபேஸ்வர மூர்த்தி.jpg



சரபேஸ்வரர்


இதே சமயத்தில் , அப்போது உருவான சிவனது உருவமான சரபேஸ்வரரை எப்போது எண்ணி வழிபட்டாலும் , உடல் வியாதிகள் தீரும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது . குழந்தை பேறு பெறுவர் . திருமண தடைகள் அகலும். கடன் தொல்லைகள் முற்றிலும் தீரும் .

காஞ்சிபுரம் அருகில் உள்ள லிங்கபுரத்தில் சரபேஸ்வரர் லிங்க வடிவில் உள்ளார்.

தஞ்சை மாவட்டம் , திருபுவனத்தில் கம்பகேஸ்வரர் ஆலயத்தில் சரபேஸ்வரர் சன்னதியும் உள்ளது . இந்த கோவில் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது . கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளை தொட இருக்கிறது இக்கோவில்.


உத்தர காமிக ஆகமம் , இந்த சரபேஸ்வரரை ஆகாச பைரவர் என்று கூறுகிறது . மேலும் இதன் கால்களில் ஒன்று அனைத்திருப்பது  துர்க்கை அம்மனை என்றும் , இந்த வடிவத்தின் சக்தி தேவி அரிப்ரணாசினி என்றும் கூறுகிறது .

பிரத்யங்கரா தேவி எனும் தெய்வ வடிவினை கூட சரபேஸ்வரர் வடிவம் என்ற கூறுவோரும் உளர் .

கர்நாடக அரசு சின்னம் :




இது கர்நாடக அரசின் சின்னம்.  மஞ்சள் நிறதில் சிங்கத்தின் பிடரியை கொண்ட யானை யாக நிற்பது சரபா .



இதே சின்னத்தையே மைசூர் பல்கலைக்கழகமும் பெற்றுள்ளது .

ஆக 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சரபம் என்னும் பறவை பற்றியும் , சரபேஸ்வரர் பற்றியும் தமிழ் மக்கள்  அதிகம் தெரிந்து வைத்திருந்தனர் .

அதனாலேயே இன்றும் கர்நாடக அரசின் சின்னமாக சரபம் உள்ளது . 

உண்மையில் இப்படி ஒரு பறவை இருந்ததா இல்லையா என்பதை விட , 2000 ஆண்டுகளாக இப்படி ஒரு பறவை குறித்து நம்மிடம் விதைக்கப்பட்டிருக்கிறது என்பது வியப்புக்குரியது.

மேலும் 2 தலை 
8 கால்கள் 
32 கைகள் 
இறக்கைகள் 
என்று எண்ணிப்பார்க்கவே பிரமாண்டமாக உள்ளது . இது குறித்து தமிழனத்தின் அறிவும் , 
( ஆங்கில படங்களில் வரும் கற்பனைக்கும் விஞ்சியது )
பெருமைக்குரியதாகவே உள்ளது .


Monday, 18 July 2016

மலேசியா வரலாறு - I






கிட்டத்தட்ட 40000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது மலேசியா.

மலேசியா வரலாறு , மற்றும் இந்தோனேசியா , சிங்கபோர வரலாறுகள் தெரியாமல் தமிழ் வரலாறு பேச முடியாது.

சிதறிய தமிழனத்தின் ஒரு பகுதி தான் இந்த தெற்காசிய நாடுகள்.

குமரி கண்டம் ,என்பதின் மிச்சம் இந்த நாடுகள் .

ஆனால் இது இஸ்லாமிய நாடு. எப்படி ? தமிழ் இனத்தோடு ஒப்பிட முடியம் ?

கடந்த 500 ஆண்டுகளாகத்தான் இந்நாடு இஸ்லாமிய மதத்தை தழுவ ஆரம்பித்தது .

பல்லவ கால வரலாறுகள் , மலேசியா வரலாற்றையும் சேர்த்து குறிப்பிடுகின்றன.

ஸ்வர்ண தீவு என்று வழங்கப்பட்ட மலேசியா தற்போது கோல்டன் பெனின்சுல என்று வழங்கபடுகிறது. அர்த்தம் ஒன்றுதான் . ஆங்கிலத்தில் கொஞ்சம் ஸ்டைலாக மாறி விட்டது.

2 மற்றும் 3 ம் நூற்றாண்டுகளில் லங்கா சுகா என்பவர் , கம்போடியாவுடன் சேர்த்து கதாவை ஆட்சி புரிந்துள்ளார். அந்த கால கட்டத்தில் 30 அரசுகள் மலேசியாவில் இருந்துள்ளன. அந்த மன்னர் ஆண்ட பகுதிகள் இப்போதும் , லங்காவி என்ற பெயரில் உள்ளன.

இது பௌத்தமும் , சமணமும் தலைதோங்கிய காலம் . தமிழ்நாடு, இலங்கை என்று எல்லா நாடுகளிலும் பௌத்தம் பரவியது.
மலேசியாவும் அதில் விதிவிலக்கு அல்ல .

அப்போது இருந்த முக்கிய மொழி சமஸ்கிருதம் . தமிழுடன் சமஸ்கிருதம் கலந்த ஒரு கலப்பினம் உருவாகிய காலம் அது .

அதன் பிறப்புகள் தான் கன்னடமும் , மலாய் மொழியும் !

மலாய் மொழி கன்னட மொழியின் சாயலை சுமந்து கொண்டு இருக்கிறது .

பேராக் மற்றும் பஹ்ருஸ் கங்கா நெகரா என்ற ராஜ்யத்தின் கீழ் ராஜா கன்ஜி சர்ஜுராவால் உருவாக்கப்பட்டது .

மலாக்கா , ஸ்ரீ விஜயம் என்ற நாட்டோடு இணைந்து இருந்தது .
இந்த மலாக்கா என்ற பெயர் எப்படி வந்தது என்பதை இங்குள்ளவர்கள் இப்போதும் கூறுகிறார்கள் . அமலாக்காயுர் என்ற வழங்கப்பட்டது தான் இந்த ஊர் . அமலாக்காய் என்றால் நெல்லிக்காய் என்று பொருள் . ஊர் முழுக்க நெல்லி மரங்கள் நிறைந்து இருந்ததால் , அமலாக்காயுர் என்று வழங்கப்பட்டு , பின்னர் இப்பெயர்  மலாக்கா என்று மாற்றம் பெற்றதாகவும் கூறுகிறார்கள் .

ஆம்லா என்று நெல்லிக்காய்க்கு ஹிந்தியிலும் , ஆங்கிலத்திலும் பெயர் வழங்கப்படுவது இதனால்தான் !

சுமத்ரா தீவின் கிழக்கு பகுதியாகிய மலாக்கா , ஸ்ரீ விஜய அரசின் வணிக மையமாக விளங்கியது . கி.பி.7 ம் நூற்றாண்டிற்கும் 13 ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இப்பகுதி மிகுந்த செல்வாக்கோடு ,வணிக நிலையமாகவும் , பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் இடமாகவும்  விளங்கி உள்ளது .

கி.பி.2 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் , மலேசியா மற்றும் தமிழகத்திற்கு இருந்த வணிக உறவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன .அதில் காழகம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது கடாரம் தான் என்று கூறுகிறது வரலாறு .

11 ம் நூற்றாண்டில் ராஜா ராஜா சோழன் I , மலேசியாவுடன் நட்புறவு கொண்டிருந்தார் .ஆனால் ஸ்ரீ விஜய மன்னருடன் ஏற்பட்ட மாணவருத்தத்தால்  பின்னர் ராஜேந்திர சோழன் I , கடாரத்தை கைப்பற்றினார் . இதன் பின்னர் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆண்ட சோழர்கள் மலேசியா முழுமையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர் .

ஆனால் சோழர்கள் இங்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை . மொழியையும் பரப்பவில்லை .


பின்னர் 14 ம் நூற்றாண்டில் நிலை மாறியது .
தமிழகத்தில் சோழர்களின் ஆட்சி மாறி , நாயக்க ஆட்சி வளர ஆரம்பித்தது .
அதன் தொடர்ச்சியாக ,( இன்றைய சிங்கப்பூர் ) தெமாசிக் யில் ஆட்சியில் இருந்த பரமேஸ்வரன் , மலாக்கா மற்றும் அதன் கீழ் இருந்த எல்லா பகுதிகளையும் தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தான் .

இவர் தான் விரும்பிய பெண்ணை மணக்க வேண்டி இஸ்லாமிய மதத்திற்கு மாறியதால் , இங்குள்ள மக்களும் பிற்காலத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் .

15 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் , மீண்டும் தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் இருந்த செட்டியார் சமூக மக்கள் , மலேசியா சென்று வணிகம் செய்ய ஆரம்பித்தனர் . அதன் விளைவாக அங்குள்ள பெண்களை மணந்து கொண்டு மலேசிய செட்டி என்று ஒரு இனம் உருவாக வழிவகுத்தனர்.

இன்றும் ஒரு சில இடங்களில் விநாயகரின் பெயர் செட்டி பிள்ளையார் என்ற பெயரில் மலேசியாவில் உள்ளது .

15 ம் நூற்றாண்டில் ஜோஹோர் உருவானது . போர்த்துகீசிய மக்களும் வணிகம் கருதி மலேசியா வில் நுழைய ஆரம்பித்தனர் .

மிக விரைவில் 16 ம் நூற்றாண்டின் மத்தியில் , ஜோஹோர் , மலாக்கா , மற்றும் புருனே ஆகியவை போர்த்துகீசியர்கள் ஆளுகைக்குள் வந்தது .
மலாக்கா கடற்கரை கோட்டைகள் இதனை பறைசாற்றுகின்றன .



இந்த காலகட்டத்தில் ஜோஹோர் மிகுந்த செல்வாக்கோடு , சக்தி வாய்ந்த இடமாக இருந்தது .

அப்போது அங்கிருந்த சுல்தான் மஹுட் கொல்லப்பட்டார் .

இதன் விளைவாக ( தற்போதைய இந்தோனேசியா ) சுலவாசி மக்கள் புர்கிஸ் கிளர்த்தெழுந்தனர் . இதன் விளைவாக , போர்த்துகீசிய மக்களிடமிருந்து மீண்ட ஜோஹோர் வார்சுஉரிமை போருக்குள் சிக்கி கொண்டது .

சுல்த்தான் மஹுட் மகன்கள் அப்துல் கேஸில் மற்றும் அப்துல் ஜலீல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால்
அப்துல் ஜலீல் கொலை செய்யப்பட்டார் .

மீண்டும் மக்கள் போராட ஆரம்பித்து அப்துல் ஜாலிலின் மகன் அப்துல் சுலைமான் ஆட்சிக்கு வந்தார் . இவரது ஆட்சி வரலாறுகளில் மிகவும் குறிப்பிட தக்க தாக உள்ளது .

17ம் நூற்றாண்டு தொடக்கத்தில் கால் பதித்த பிரிட்டிஷ் , 1786 ல் பினாங்கு பகுதியை கைப்பற்றியது .

1819 ல் சிங்கப்பூரை கைப்பற்றினர் .

1840 , 1841 ல் புருனே , சரவாக் ஆகின பிரிட்டிஷ் ஆளுகைக்குள் வந்தது .

1860 களில் மீண்டும் தமிழர்களை , தோட்ட வேலை பார்க்கும் பொருட்டும் , வணிகம் செய்யவும் , அரசு வேலை பார்க்கவும் , செங்கல் சூளைகளில் வேலை செய்யவும் , செம்பனை மரங்கள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் , காப்பி தோட்டங்கள் வளர்க்கவும் , பாலங்கள் கட்டவும் என பல்வேறு காரணங்களுக்காக பிரிட்டிஷ் அரசு மலேசிவிற்கு அழைத்து சென்றது .

1941 ல் ஜப்பான் மலேசியா மற்றும் சிங்கப்பூரை கைப்பற்றியது .
அதன் விளைவாக ஜப்பான் ஆட்சி வந்தது . சுதந்திர போராட்டம் வலுக்க ஆரம்பித்தது .

1957 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் நாள் மலேசிய சுதந்திரம் பெற்றது .

இதற்கு இடையில் சீனர்களின் வசம் சில ஆண்டுகள் மலேசியா இருந்தது .

அதனால்தான் மலேசியா மலாய் மக்கள் தவிர்த்து , சீனர்கள் , ஜப்பானியர்கள் மற்றும் இந்தியர்கள் என்று வழங்கப்படும் தமிழர்களோடு வாழ்கிறது .

Tuesday, 28 June 2016

பெண்ணியம்

பெண்ணியம்  எனும் கருத்தியல் வற்றாத ஜீவ நதி போல் எல்லா

காலங்களிலும் பேசிய , பேசுகின்ற , பேச போகிற ஒரு கருத்தாக்கம் .

காலத்திற்கு காலம் , இது மாறுபடும்.

ஆனால்

எத்தனை காலம் ஆனாலும்

ஒரு மட்டும்

மாற்றுவதே இல்லை !

அதாங்க

இந்த சட்டங்களை இயன்றுவது மட்டும்

ஆண்கள்தான்!

ஒவ்வொரு விலங்கினமும் கூட தான் என்ன செய்கிறோம் , என்ன செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு எடுக்கிறது .

ஆனால் பெண்ணுக்கு மட்டும் அப்படி ஒன்று வழங்கப்படவே இல்லை .

ஒரு ஆண் ஒரு பெண்ணை என்னவாக பார்கிறானோ அதை பொறுத்து அவளுக்கான பெண்ணிய கருத்துக்கள் வரையப்பட்டது .

வேத காலங்களில் , பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி பிரச்சனை இல்லை .

ஆனால் விச்வாமித்ரரும் , வசிஷ்டரும் , பெண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்றும் , எப்படி வாழ்தல் அவளை பத்தினி என்று உலகம் போற்றும் எனவும் கதை எழுதி இருக்கிறார்கள் .

நல்ல தெங்கால் கதை , நளாயினி கதை என பல கதைகள்  வட இந்தியாயாவில் எழுதப்பட்டன .

ஒரு படி மேலே போய் அகழிகை  கல்லாய் போன கதையும் , பரசுராமரின் தாய் தன் கணவனை தவிர்த்து வேறு ஒரு ஆணை பார்த்தாள்  என்ற ஒரே காரணத்திற்க்காக , பெற்ற மகனே அவளது தலையை வெட்டினான் என்பதும் , பெண் மீது திணிக்க பட்ட பய உணர்வுகள் .

இதுவும் பெண்ணுக்காக ஆண்கள் எழுதிய பெண்ணியம் .

ஆனால் , இக்காலம் முடிந்த பிறகு ,

இதே பெண்ணுக்கான கருத்தாக்கம் மாறுகிறது.
மகா பாரத கதையில் ,

கங்கை எனும் பெண் தன் 7 குழந்தைகளை  ஆற்றில் விடுகிறாள் .

மீனவ பெண் மாத்ரி  தன் கணவன் சாந்தனு வை மணம் புரிவதற்கு முன்பே , வேறு ஒரு முனிவர் மூலம் வியாசரை பெறுகிறாள் .

திருதுராஷ்டிரன் , மாற்றும் பாண்டுவின் தாய்மார்கள் இருவரும் , தன் கணவன் அல்லாத , கணவனின் அண்ணன் முறையில் உள்ள வியாசர்  மூலம் குழந்தை பெறுகிறாள் .

பாண்டுவின் மனைவி குந்தி , திருமணத்திற்கு முன்பே , சூரியனோடு உறவாடி கர்ணனை பெறுகிறாள்.

பாண்டுவின் மனைவிகள்  குந்தி மற்றும் மாதவி இருவரும் தன் கணவன் அல்லாத வேறு ஆண்கள் மூலம் குழந்தை பெறுகிறார்கள் . இது பாண்டுவுக்கு தெரிந்தே நடக்கிறது .

பாண்டுவின் 5 மகன்களையும் ஒரு பெண் மணக்கிறாள். அதனால் பாஞ்சாலி எனவும் பெயர் பெறுகிறாள் .

கம்சனின் தாய் , தன் கணவன் அல்லாத ஒரு ஆண் மூலம் கம்சனை பெறுகிறாள் .

தங்கள் கணவனாகிய நரகாசுரனை அழித்த , அவனது தகப்பன் முறையில் இருக்கும் கிருஷ்ணனையே 16000 பெண்களும் மணக்கிறார் . மாமனாரையே மருமகள் மணப்பது .

நரகாசுரனின் தாய் பூமாதேவி . தகப்பன் வேறு ஒருவர் . ஆனால் பூமா தேவியின் கணவன் கிருஷ்ணன் .

இதுவும் பெண்ணுக்காக ஆண்கள் எழுதிய பெண்ணிய கதைகள் .

வேத காலத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது 
மஹாபாரத காலத்தில் ஒரு பெண் , பல ஆண்கள் அங்கீகரிக்க பட்டது .

இவை எல்லாம் ஆரிய பெண்களுக்காக , ஆரிய ஆண்கள் எழுதியது .

இவை 2000 ஆண்டுகளுக்கு முன்பு , பௌத்தம் மற்றும் சமணத்தோடு சேர்ந்து தமிழகத்திற்குள் நுழைந்தது .

பெண் சுதந்திரம் இருந்த தமிழ் மண்ணில் , பெண்ணியங்கள் சற்றே தலை தூக்க ஆரம்பித்தது .

இருந்த போதிலும் , ஒரு போதும் தமிழ் பெண்கள் தன் சுதந்திரத்தை இழந்ததில்லை .

பதினெண் கீழ் கணக்கிலும் , பதினெண் மேல்கணக்கிலும் பெண்கள் எழுதிய பாடல்கள் உள்ளன .

நாயன்மார்களாக , ஆழ்வார்களாக பாடம் படித்தும் , பாடல்கள் எழுதியும் தற்சார்பு இழக்காமல் வாழ்ந்து வந்தனர் .


பாண்டியர் வம்சத்தில் மங்கையர்கரசியாரும் ,பல்லவர் குலத்தில் குந்தவியாரும் ,சோழர் வம்சத்தில் குந்தவை அம்மையாரும் , சிறப்புடன் வாழ்ந்தது வரலாறுகள் கூறுகின்றன .

எந்த நாளும் , பெண்கள் இப்படி வாழ வேண்டும் கட்டுக்கதைகள் எதுவும் எழுதப்படவில்லை . அதற்கு அவசியமும் ஏற்படவில்லை .

15 ம் நூற்றாண்டு வரை இதே நிலை இருக்க ,

நாயக்க வம்சம்

மராட்டி வம்சம்

முகலாய வம்சம்

இஸ்லாமிய படையெடுப்பு

பிரெஞ்சு படைகள்

டச்சு படைகள்

ஆங்கில அதிகாரிகள்

இப்படி ஒரு சில , வஞ்சகர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற எண்ணி , பெண்கள் வீட்டிற்குள் முடக்க பட்டு ,

பின் பெண்ணிற்கான பெண்ணியம் தமிழகத்திலும் வந்து விட்டது .

புரியாத சில விஷயங்கள் இன்னும் நம்மோடு இருந்து கொண்டுதான் இருக்கின்றன .

இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல் .

நாம் அதை கடந்து கொண்டு தான் இருக்கிறோம் .

ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது 35 வைது வயதில் 5 வயது சிறுமியாகிய சாரதா வை திருமணம்  புரிகிறார்.

அந்த பெண் இன்றும்  சாரதா  அம்மையார் என்று கொண்டாடப்படுகிறார்.

இதே போல் தான் பெரியார் என்று வழங்கப்படும் ராமசாமியும் செய்தார் .
ஆனால் இன்றும் தூற்றப்படுகிறார் .

இதே தவறை தான் கலைஞர் கருணாநிதியும் செய்தார். அவர் இன்றும் தேர்தலில் வெற்றி பெற்று கொண்டு தான் இருக்கிறார் . யாரும் அவரை வெறுக்க வில்லையே !

சுதந்திர போராட்ட காலத்தில்
சமுதாயத்திற்கு போதனைகள் செய்தார் அரவிந்தர்.
அவரை பற்றி கூட தெரியாத பலரும் , அன்னை அரவிந்தரை கொண்டாடுகிறார்கள் . இத்தனைக்கும் அரவிந்தர் தனது மடத்தில் அந்த ஜெர்மனியா பெண்ணிடம் தன் மரண தருவாயில் மட்டும் தான் பேசி உள்ளார்.

ராகவேந்தரை வணங்கும் இந்த உலகம் , அவர் பாதி வழியில் வாழ்க்கை எனும் பாதையில் விட்டு வந்தாரே , அவரது மனைவி அவரை பற்றி பேசுவதே இல்லை .



பெண் சுந்தந்திரம் பேசிய பாரதி தன் மனைவி பற்றி யோசிக்கவே இல்லையே !

உண்மையில்

வட இந்திய பெண் சாரதா  தேவி யை யும் , ஜெர்மானிய பெண் அன்னை அரவிந்தரையும் , வணங்கும் இந்த உலகிற்கு வணக்கத்திற்கு உரிய பாரதியின் மனைவி தெரியாமல் போனது வேதனை .





வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர் மனைவி

வ.உ.சிதம்பரம் பிள்ளை , தன் சொத்தை எல்லாம் விற்ற பிறகு , இந்த நல்லுலகம் அவரை தோற்கடித்தபின்னரும் அவருடன் தன செல்வ செழிப்பை இழந்து வாழ்ந்த அவரது மனைவி யார் கண்ணிற்கும் தெரியாமல் போவது இன்னும் வேதனை .

வேறு ஒரு பெண்ணுடன் போன கோவலனை மன்னன் தவறாக தண்டித்து விட்டான் என்றதும் , வேறு ஒரு பெண்ணுடன் போன் போது வராத கோவம் மன்னன் மீது வருகிறது கண்ணகிக்கு . இப்படித்தான் பெண்கள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசும் விரும்புவதால்தான் கண்ணகி மட்டும் நம் கண்களுக்கு தெரிகிறாள் .

எல்லாம் எழுதியது ஆண்கள் .

இதில் மறையாமல் மறைந்தது பெண்ணின் எண்ணங்கள் .

இப்போதும் அவளுக்கு என்ன வேண்டும் என்பது தெரியவில்லை .

ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை கான்னென்று கும்மியடி

என்று பாடியதும் பாரதி எனும் ஆண் தான் !

மீண்டும்

ஆணோடு போட்டி போட்டு படிக்கிறாள்
வேலைக்கு போகிறாள்
சிகரெட்டும் பிடிக்கிறாள்
மதுவும் அ ருந்துகிறாள்
திருமணத்திற்கு முன் உறவும் கொள்கிறாள்

ஆண் என்ன செய்கிறானோ

அதையே தானும் செய்கிறாள் !

இப்போதும் ஆணை துரத்தி கொண்டு ஓடுகிறாள்

அதை தவிர்த்து

தனக்கென தனி பயிற்சிகள் எதையும் அவள் தேடவில்லை !

அவள் மனம்
அவள் உடல்
அவள் அறிவு
அவள் வீரம்
அவள் பாதுகாப்பு
அவள் வாழ்க்கை

என்பது தனி உணர்வு

அதை ஒரு ஆணின் வழி தொடர வேண்டிய அவசியமில்லை !
தனக்கான பாதையை, தான் வடிக்கும் பெண் தான்

சாதனையாளர் ஆகிறாள் !
அவள் தான்
தனக்காகான
பெண்ணியத்தை
எழுதியவள் !




பெண்களே நீங்கள் எழுது ங்கள் !
உங்களுக்காக
பெண்ணியத்தை !
ஆணை துரத்தாதே !
அது ஆணின் வழி !
அது
பெண்ணிற்கு பாதுகாப்பு அல்ல !
அதே வழியில் பெண்ணும்
செல்ல வேண்டுமாயின்
ஆண் தான்
பெண்ணை
பாதுகாக்க வேண்டும் !
ஆனால் அது
இன்று
நடக்காது !
எனவே
உனக்காக நீ
எழுது உன் பாதையை !

Monday, 27 June 2016

பாலியல் வன்கொடுமை - தண்டனை

உலகின் முக்கிய 15 நாடுகளில் பாலியல் வன்கொடுமைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து பார்க்கலாம்.
1. சீனா
ஒரு கட்சி ஆட்சி முறையைக்கொண்ட சீனாவில், பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. மேலும் சில பாலியல் குற்றவாளிகளுக்கு பிறப்புறுப்பு சிதைக்கப்படும் தண்டனையும் வழங்கப்படுகிறதாம்.
2. ஈரான்
ஈரானில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது அடித்துக்கொல்லப்படுவார்கள். அதேநேரம் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் 100 கசையடி அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும்.
3. நெதர்லாந்து
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், பிரெஞ்ச் முத்தம் உள்பட எந்த வகையான பாலியல் குற்றங்களும், பலாத்காரமாகவே கருதப்படுகிறது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 4 வருடம் முதல் 15 வருடங்கள் வரை குற்றவாளிகளின் வயதை
பொருத்து தண்டனை வழங்கப்படுகிறது.
மற்ற நாடுகளில் பாலியல் தொழிலாளர்களை வன்கொடுமை செய்தால், பெரும்பாலான நாடுகள் அதை பெரிதாகஎடுத்துக்கொள்வதில்லை ஆனால், பாலியல் தொழிலாளிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கும் 4 வருடம் சிறைதண்டனை நெதர்லாந்தில் விதிக்கப்படுகிறது.
4. பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் பாலியல் வன்கொடுமை குற்றம் செய்பவர்களுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுவதுடன்,அவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாவார்கள். மேலும் வன்கொடுமையால் ஏற்பட்ட பாதிப்புகளை பொறுத்து 30 வருடங்கள் கூட தண்டனை கிடைக்கும்.
5.வட கொரியா
சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியாவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை வழங்கப்படுவதில்லை.
உடனடி தண்டனை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணால், பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய நபர் தலையில்
சுட்டுக்கொல்லப்படுகிறார்.
6. ரஷ்யா
பலாத்காரத்திற்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பொறுத்து, 3 வருடங்களுக்கு மேல் 30 வருடம் வரை சிறை தண்டனை பாலியல் குற்றவாளிகளுக்கு ரஷ்யாவில் வழங்கப்படுகிறது.
7.ஆப்கானிஸ்தான்
நான்கு நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்ணால், பலாத்கார குற்றவாளி தலையில் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
8.நார்வே
பலாத்காரத்திற்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பொறுத்து, 4 வருடம் முதல் 15 வருடம் வரை சிறை தண்டனை
பாலியல் குற்றவாளிகளுக்கு நார்வேயில் வழங்கப்படுகிறது.
9.அமெரிக்கா
அமெரிக்காவில் மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் என இரண்டு விதமான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. தேசிய சட்டப்படி என்றால், 30 வருடம் வரை பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. மாநில சட்டப்படி ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தவரை குற்றவாளிகளுக்கு தண்டனை மாறுடுகிறது.
10. இந்தியா
இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தொடர்ந்து தண்டனை கடுமையாகியுள்ளது. 14 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அரிதிலும் அரிதான பாலியல் குற்றவழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
11. சவுதி அரேபியா
சவுதி அரேபியால் பாலியல் குற்றவாளி என்று நிரூபணம் ஆனால் சில நாட்களிலேயே பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்படுவார்.
12. எகிப்து
பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி தூக்கிலப்படுவார்.
13. இஸ்ரேல்
பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு நான்கு வருடம் முதல் 16 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
14. துபாய்
துபாய் நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தினால், அவர்கள் 7 நாட்களில் தூக்கிலடப்பட்டு கொல்லப்படுவார்கள்.
15. கிரீஸ்
ஐரோப்பிய நாடான கிரீஸில், பாலியல் குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

நன்றி 
புதிய தலைமுறை 
பதிவு நாள் 27.6.2016

இறைவிகளுக்காக !

சமீபத்தில் வந்த ஒரு திரைப்படம் இறைவி !

இந்த திரைப்படத்தில் , எந்த ஆணும் , தன் மனைவியை அடிக்க வில்லை , துன்புறுத்த வில்லை . ஆனாலும் பெண் நிம்மதியாக இல்லை .

ஏன்னென்றால் , எந்த ஆணும் தன் சார்ந்த கருத்தை , தன் சுயத்தை ஒரு பெண்ணுக்காக விட்டு கொடுப்பதில்லை . தன் விருப்பத்தை விட்டு கொடுக்க தயார் இல்லை . இது கூட பெண்ணுக்கு இளைக்க படும் துன்பம்தான் .

அவ்வளவு தான் இறைவி திரைப்படம் .






உண்மை தான் !

திரை துறை யில் எந்த ஆணும் , தன் விருப்பத்தை விட்டு கொடுத்ததில்லை .
இந்த திரைப்படம் எடுத்த , தயாரித்த எல்லா இறைவன் களுக்கும் ஒரே ஒரு கேள்வி தான் .

இதற்கு முன்பும் பெண் சுதந்திரம் குறித்து பேசிய எல்லா திரைத்துறையினருக்கும் சேர்த்துதான்  இந்த கேள்வி !

நீங்கள் படம் எடுப்பது தமிழ் நாட்டு பெண்களுக்காக !
உங்கள் படங்களை பார்ப்பதும் தமிழர்கள்தான் !

உங்கள் திரைப்படங்களில் எல்லாம் எங்கே தமிழ் பெண்கள் ?

உங்கள் விருப்பத்தை எவர் நிறைவேற்றுவார் என்றும்  , உங்கள் விருப்பத்திற்கு யார் உடன்படுவார் என்றும்  அலைந்து திரிந்து , தமிழ்நாட்டின் எத்தனையோ இறைவிகளின் திறமைக்கு மதிப்பளிக்க முடியாமல் ,  உங்களோடு உறவாட தயாராகும் பிற மொழி பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாய்ப்பு ,

திறமையை நாமும் வெளிக்கொணருவோம் என என்றென்றும் கனவு காணும் தமிழ் இறைவிகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா ?

ஒரு பாடல் பாட கூடவா தமிழ் பெண் கிடைக்க வில்லை உங்களுக்கு ?

நீங்கள் தேர்ந்தெடுப்பது எல்லாம் , ஜாதி பார்த்து , மொழி பார்த்து , உங்களோடு வரக்கூடிய வசதி பார்த்து , இத்தனையும் நீவீரெல்லாம் பார்த்து தமிழ் பெண்களின் உள்ள கிடங்கை வெளி படுத்துகிறோம் என்று கூறுவதும் , அவர் தம் வாழ்வியல் பற்றி பேசுவதும் ,

வெட்கமாக இல்லை உங்களுக்கு !

திரை துறையில் எந்த பெண்ணும் விரும்பினால் தான் கெட்டு போவார்கள் , இல்லை என்றால் அப்படி ஒன்று நடப்பதில்லை என்று வாய் கூசாமல் கூறும் நீங்கள்  ,
நீங்கள் யாரும் சுத்தம் இல்லை என்று ஒப்பு கொள்கிறீர்களா ?

தமிழ்நாட்டின் எந்த பெண்ணும் திறமைசாலி அல்ல என்று கூறும்
 உங்களுக்கு
தமிழக பெண்கள் குறித்து கருத்து கூறவும் உரிமை இல்லை !


இதன் தொடர்ச்சியாக வந்த ஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தில் என்ன கூற வருகிறீர்கள் ?

தமிழ் பெண்களெல்லாம் , அதற்க்காக ஏங்குகிறார்கள் என்றா ?
இத்திரைப்படத்தில் ஒரு பெண் கூறுகிறாள்,

எனக்கு 26 வயது ஆகிறது . இதுவரையில் எந்த ஆணுடனும் நான் இருந்ததே இல்லை . இது தான் முதல் முறை .இதற்கு தான் திருமணம் என்ற பெயரில் இத்தனை அளப்பறையா ? என்று தன்னோடு படுக்கையில் இருக்கும் , திருமணம் செய்யாமல் உறவு கொண்ட ஒரு ஆணிடம் கூறுகிறாள் .

இத்தனை இழிவாக திரைப்படம் எடுத்து , அந்த உணர்வுகளையும் பிற மொழி பெண்களை கொண்டே வெளிப்படுத்திய நீவீரெல்லாம் , பெண்ணியம் பேசாமல் இருப்பதே , நலம் !. அதுவே

இறைவிகளுக்கு நீங்கள் செய்யும் நன்றியாக இருக்கும் !


---------------------



எல்லா வேலையும் நல்ல வேலையே !

500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ,  ஒரு திறமையான மன்னரின்  அரசவையில் , ஒருவர் தனக்கு வேலை வேண்டும் என்று கேட்டு வந்தார் .

சரி , உனக்கு என்ன வேலை வேண்டும் ?கேள் என்கிறார் மன்னர்.

அவர் சிறிதும் தாமதிக்காமல்

தங்கள் அரசவையில் அமைச்சராக வேண்டும் என்றார் .

அரசவை அதிர பலத்த சிரிப்பொலி எழுந்தது .

ஏன் ? அமைச்சர் பதவி தான் வேண்டுமா உங்களுக்கு ? என்ன தகுதி இருக்கிறது உமக்கு ? - மன்னர்

எனக்கு தெலுங்கு , கன்னடம் , சமஸ்க்ரிதம் , மற்றும் பாரசீகம் போன்ற மொழிகள் தெரியும் . ( அது பாரசீக மொழி , தற்போதுள்ள ஆந்திராவில் பரவிய காலம் . தற்போதுள்ள தெலுங்கில் , பாரசீகம் கலந்த காலம் என்றும் கூறலாம் . எனவே பாரசீகம் படிப்பது அப்போது சிறப்பு மொழி யாக கருதப்பட்டது .) மேலும் நிர்வாகவியலும் கற்றுள்ளேன் . என்றார் .

நீர் பாரசீகம் பயின்றுள்ளீரா ? மகிழ்ச்சி என்று மன்னர் கூறிய உடன் ,

மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் சற்றே கலக்கம் .

இதை கவனித்த மன்னர் ,

வேலை தேடி வந்தவரிடம் கூறினார் .

இப்போது அமைச்சர் வேலை எதுவும் இல்லை . என்றார் .

நிதானமாக நின்றார் வேலை தேடி வந்தவர்.

ஒன்று செய்யுங்கள் . இங்கு உள்ள கோழி பண்ணையில் ஒரு பணியிடம் உள்ளது . அங்கு வேலை பாருங்கள் என்று கூறினார் .

அரசவையில் மீண்டும் ஒரு சந்தோச காற்று வீசியது .

வேலை தேடி வந்தவர் எதுவும் கூறவில்லை . வேலையை ஏற்று கொண்டார் .

தினமும் கோழி பண்ணையில் வேலை பார்த்தார் .

45 நாட்கள் கழிந்தன . மன்னர் தணிக்கை செய்ய எண்ணி , பண்ணைக்கு வந்தார் . முதலில் கணக்கு வழக்கு பார்க்க எண்ணி , கணக்குகளை ஆய்வு செய்தார் . மிக மிக குறைந்த செலவு கணக்கு .

கோபம் உச்சிக்கு ஏற்றியது .

என்ன இது ?
தீவன கணக்கே இல்லை .
இந்த பண்ணையில் கோழிகள் இருக்கிறதா ? இல்லை
அனைத்தையும் கொன்று விட்டீரா ? என்றார் மன்னர் .

சிறிதும் முகம் சுளிக்காமல்
வாருங்கள் மன்னா , பண்ணையில் வந்து பாருங்கள் என்று கூறினார் .

பண்ணைக்குள் நுழைந்தால் , கோழிகளின் எண்ணிக்கை இரு மடங்காகி இருந்தது . ஒவ்வொரு கோழியும் , குண்டு குண்டாக இருந்தது .

மன்னருக்கு ஆச்சரியம் .

ம் ம் இது எப்படி சாத்தியம் . நீர் தீவனமே  வாங்க வில்லையே
என்று கேட்டார் ?

ஒன்றுமில்லை மன்னா  நம் அரண்மையில் , ஒரு நாளைக்கு மட்டும் 200 பேருக்கு சமையல் செய்கிறார்கள் . அந்த கழிவுகளை , இந்த கோழிகளுக்கு கொண்டு வந்து போட்டேன் . அவ்வளவு தான் என்றார் பணிவாக !

இனி மேல் நீ இங்கு வேலை செய்ய வேண்டாம். நம் நூலகத்திற்கு வந்து வேலை பாரும் என்று கூறினார் .


மறுநாள் முதல் நூலக அலுவலர் வேலை .

ஒரு 30 நாட்கள் கழித்து , மன்னர் அங்கு வந்தார் . இந்த முறை நூலகத்தை பார்வை இட்டுவிட்டு பிறகு கணக்குகளை பார்க்கிறேன் என்றார் .

உள்ளே நுழைந்தார் . அனைத்து ஏடுகளும் , பட்டு துணியால் மடிக்கப்பட்டு , நூலகமே ஜொலிப்பது போல் இருந்தது.

மீண்டும் கோபமாக திரும்பி பார்த்தார் .
என்ன இது கோழி பண்ணையில் செலவுகளை குறைதீர் . நூலகத்தில் செலவு கணக்கை ஏற்றி விட்டீரோ என்றார் .

இல்லை மன்னா , நம் அரண்மனையில் தினமும் 50 ஆடைகளாவது தைக்கிறார்கள் . அவை அனைத்தும் பட்டு துணிகளே !அவற்றில் துண்டு விழும் துணிகள் தான் இவை ! பட்டு துணியில் சுற்றி வைத்தால் , ஏடுகள் பூச்சிகள் அரிக்காமல் இருக்கும் என்பதால் இப்படி செய்தேன் என்றார் .

அதற்கு மேலும் பொறுமை காக்க மன்னருக்கு விருப்பம் இல்லை .

நாளை முதல் நீ என் அமைச்சரவையின் பிரதான அமைச்சன் என்கிறார்.

அந்த அமைச்சன் தான் முல்லா .

ஒருவன் என்ன தான் படித்திருந்தாலும் , பட்டம் பெற்றாலும் , தனக்கு கிடைக்கும் வேளையில் முழு மனதோடு ஈடுபடும் போது தான் , அவன் எண்ணிய இடத்தை அவனால் அடைய முடியும் !

தன் படிப்பிற்கும் , வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்ற போதிலும் , கிடைத்த வேளையில் முழு ஈடுபாட்டை காட்ட வேண்டும் . ஏனென்னில் படிப்பு என்பது , அறிவை வளர்க்க தான் . தொழில் செய்ய அல்ல .

எந்த வேலை கிடைத்தாலும் ,

பலன் எதிர்பாராமல் பணி செய்தால்
நீ எதிர்பார்த்த பலன்
உன்னை தேடி வரும் .

கடமையை செய் ! பலனை எதிர்பாராதே !
அதுவே உன்னை தேடி வரும் .

Tuesday, 21 June 2016

சட்ட சபை இப்படி நடந்தா ? எப்புடி ?

தமிழக சட்ட பேரவை - ஜூன் 21 - 2016

மிக முக்கிய பிரச்சனையாக பேச பட்டவை ":


கச்ச தீவை , இலங்கை வசம் விட்டது யார் ?
தி.மு.கா தான் என்று முதல்வர் ஜெயலலிதா திட்ட வட்டமாக கூறுகிறார் .

உடனே தி.மு.க MLA ,
சரி அதை விடுங்க
உச்ச நீதி மன்றத்தில் , வழக்கு பதிவு செய்தது தி.மு.க தான் என்கிறார்.

இப்போதும், 
2008 ல் நான் தனிப்பட்ட முறையில் , 
ADMK சார்பில் வழக்கு தொடர்ந்தே ன் .
1974 மற்றும் 1976 ல் ஆட்சியில் இருந்த கருணாநிதி , கட்ச தீவை , இலங்கை அரசிடம் தாரை வார்த்தார்  .என்று முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார் .

மீண்டும்
சரி அதை விடுங்க !
பிரபாகரனை , தூக்கில் இட வேண்டும் என்று ஜெயலலிதா தான் கூறினார் என்று  மீண்டும் தி.மு.க MLA துரைமுருகன் கூறுகிறார் .


இப்போ ADMK MLA வெற்றி வேல் , பிராபகரன் கொல்லப்பட்ட போது யார் ஆட்சியில் இருந்தது ,தி.மு.க தானே ? என்று கேட்கிறார் .

உடனே இரு கட்சி MLA களும் வாதம் செய்து , ஒரு வழியாக சட்டசபையை முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.


கடந்த 16 ஜூன் 2016 அன்று தொடங்கிய சட்ட சபை கூட்ட தொடர் ,
17 ம் தேதி அன்று இறந்த MLA க்களுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்க பட்டுள்ளது .

18, 19 சனி ஞாயிறு விடுமுறை .

20, 21 இரண்டு நாட்களும் , கட்ச தீவு பிரச்சனை மற்றும் இலங்கை தமிழர் இதை பற்றியே பேசி பேசி இன்று(22 ஜூன் ) மூன்றாவது நாளாக தொடர்கிறது .

நாளையொடு 23.ஜூன் 2016 இந்த கூட்ட தொடர் முடிவடைகிறது .

எங்க யாருமே , அடுத்து வர இருக்கும் பிரச்சனைகள் பற்றி பேசவே இல்லை . இனிமே தான் பேசுவாங்கன்னு நினைக்கிறேன் !

1974 முதல் கிட்டத்தட்ட நம் தமிழக சட்ட சபை 40 ஆண்டுகளாக , கட்ச தீவு பிரச்சனை பற்றி பேசி கொண்டே இருக்கிறது. அதற்கு முடிவு யாராலும் சொல்ல முடியாது . இன்னும் 40 அல்ல 400 ஆண்டுகள் ஆனாலும் , இப்படியே பேசி கொண்டே நாள்கள் நகரும் என்பது போல் உள்ளது நிலவரம் .

முடிவுகள் எடுக்காமல் , பேசுவதையே பேசி , நாட்கள் ஓட்டுவது , ரொம்ப சுலபமான வேலையாக இருக்கிறது.

அடுத்த தேர்தலில் எப்படியும்
ஒரு சீட் யார்கிட்ட யாவது கேட்டு வாங்கிறணும் !

ஏன்னா,

 5 வருஷம் தான் வேலை.

அதுவும் கூட ஒன்னு சும்மா உக்காந்துருக்கணும் !
இல்லையின்னா ,

இந்த காவேரி பிரச்சனை இருக்கு
கட்ச தீவு பிரச்சனை இருக்கு
ஈழ தமிழர்கள் பிரச்சனை இருக்கு

இதுல எதையாவது ஒன்னை எடுத்து திரும்ப , திரும்ப பேசணும் .

அதுக்கு மாத சம்பளம் இருக்கு !
allowance இருக்கு
முக்கியமா
வாழ்நாள் முழுக்க
பென்சன் இருக்கு !

கரும்பு தின்ன கசக்குமா என்ன ?

நீங்களும் முயற்சி எடுங்க !

தந்தையர் தினம்




ஸ்பெயினில் , ஜோசப் என்ற பாதிரியார் பெயரில் வருடந்தோறும் மார்ச் 19 ல் கொண்டாட பட்டது பாதர்ஸ் டே .

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்  , ஜூன் மாதம் 3 வது ஞாயிறு கிழமை கொண்டாடப்பட்டது. இதை தான் இந்தியாவிலும் கொண்டாடுகிறோம்.

அன்னையர் தினத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது தந்தையர் தினம்.
ஆனால் அதிகம் யாரும் கொண்டாடவில்லை.இது 14 மற்றும் 15 நூற்றாண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தொடரவில்லை .

பின்னர் அன்னையர் தினம் அனைவராலும் , கொண்டாடப்பட்ட பிறகு தந்தையர் தினமும் கொண்டுவரப்பட்டது .இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் 1907 ல் டிசம்பர் மாதம் சுரங்க தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தினால் 361 ஆண்கள் இறந்து போயினர். இதில் 250 பேர் தந்தையர் .

எனவே அவர்களுக்கு நன்றி சொல்லும் வண்ணம் , 1908 ம் ஆண்டு ஜூலை மாதம் 8 ம் தேதி கொண்டாடப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் 3 வது ஞாயிறாக மாறியது .இது 2015 ம் ஆண்டிக்கு பிறகே பிரபல மாக்கப்பட்டது .

எனில் தந்தை ஆகாத ஆண்கள் , நிலை என்ன ?
அதையும் ஏன் விட வேண்டும் என நவம்பர் மாதம் 19 ம் தேதி உலக ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது .



இது எல்லாம் வெள்ளையர்களின் நிலை ?

இந்தியாவில் , தமிழ்நாட்டில் அன்னையர் தினம் ,தந்தையர் தினம் என தனி நாள் எடுத்து கொண்டாட வேண்டிய அவசியம் என்ன ?

நமது பூர்விகம் அனைத்தையும் இழந்து கொண்டு இருக்கிறோம் .

ஐரோப்பியனும் , அமெரிக்கணும் அறிவாளிகள் என்றும் , அவன் செய்கின்ற அனைத்தும் சரியானது தான் என்றும் நாம் எண்ண ஆரம்பித்து விட்டோம் .

ஆனால் ஒரு நாளும் தமிழன் கொண்டாடும் ஒரு விழாவை , இந்தியா கூட கொண்டாடுவதில்லை.

கொண்டாடாட்டம் என்ற ஒரே ஒரு காரணத்திற்க்காக , யார் எதை கொண்டாடினாலும் நாமும் கொண்டாடும் , நிலைக்கு வந்து விட்டோம்.

ஹோலி கொண்டாடுகிறோம்!
தசரா கொண்டாடுகிரோம் !
திருமண சடங்கு கூட மாற்றி கொண்டு இருக்கிறோம் !


ஒன்று சாப்பிட பழகி விட்டோம்.
மற்றொன்று , எதுவாக இருந்தாலும் பரவாயில்லை , நாம சந்தோசமா இருந்தா போதும் என்ற நிலைக்கு வந்து விட்டோம்.


தந்தைக்கு நன்றி கூறும் நாள் தானே ? இதிலே என்ன தவறு இருக்கிறது ?

தமிழனும் தான் விலங்குகளுக்கு நன்றி சொல்லும் வண்ணம் , பொங்கல் கொண்டாடுகிறான் .உலகில் உள்ள எந்த நாடாவது , ஏன் விலங்குகள் நல அமைப்பானது கொண்டாடுகிறாதா ?

நீருக்கு நன்றி சொல்லும் வண்ணம் , ஆடி பெருக்கு கொண்டாடுகிறோம் 
உலகம் கொண்டாடுகிறதா ?

சூரியனுக்கு நன்றி சொல்லும் வண்ணம் சூரிய பொங்கல் வைக்கிறோம் 
உலகம் ஏற்று கொண்டதா ?

நட்சத்திரங்களை கூட விடாமல் , கார்த்திகை விழா கொண்டாடுகிறோம் 
எவர் கொண்டாடுகிறார் ?

தமிழன் இயற்கையை மதிப்பவன் !
அவற்றை காக்க நினைப்பவன் !
அதன் வலிமைகளை உலகிற்கு உணர்த்த நினைப்பவன் !
அதனால் கொண்டாடுகிறான்.!

ஐரோப்பாவும், அமெரிக்காவும் அன்னையர் தினம் , தந்தையர் தினம்
ஏன் கொண்டாடுகிறது தெரியுமா ?

ஒரு தகப்பனுக்கு , சில மனைவிகள்
ஒரு தாய்க்கும் சில கணவன்கள்

சில குழந்தைகள் தந்தையிடம் மட்டும் வளர்கிறது தாயில்லாமல் !
சில குழந்தைகள் தாயிடம் மட்டும் வளர்கிறது தந்தையில்லாமல் !
( நம் ஊரில் தகப்பனோ , தாயோ இறந்தால் மட்டும் தான் இப்படி நடக்கும் )

அன்னையர் தினத்தன்று , தந்தையிடம் வளரும் குழந்தைகள், தாயை பார்த்து கொஞ்சி கொள்ளும்.

தந்தையர் தினத்தன்று , தாயிடம் வளரும் குழந்தைகள் தன் தந்தையை தேடி செல்லும்.

இப்படி குழந்தைகளை , காப்பாளர்கள் கூட வளர்க்கிறார்கள் . அந்த குழந்தைகளுக்கு குழந்தை என்று கூட பெயரில்லை . WARD என்று பெயர் .

இந்த நாகரீகத்தையா , தமிழ் ஏற்று கொண்டு அவன் அறிவாளி என்று ஆராதிக்கின்றது .

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 

இது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல .

அன்றாடம் அவர்களை தெய்வம் போல் நினைத்தால் அது தான் அன்னையர் தினம்..

மகன் தந்தை ஆற்றும் நன்றி இவன் தந்தை 
என்நோற்றான் கொள்எனும்  சொல் 
என்கிறார் வள்ளுவர் .

நீ என்றைக்கு , இவனை பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று பிறர் கூற வாழ்கிறாயோ அது தான் ,தந்தையர் தினம் .

என்று ஒவ்வொரு பெண்ணுக்கும் மதிப்பளிக்கிறோமோ , என்று ஒவ்வொரு பெண்ணும் தன் பெண்மையை புரிந்து நடந்து கொள்கிறாளோ அது தான் மகளிர் தினம் !

சும்மா வாயால வடை சுடுறது தமிழுக்கு ஆகாது !

இதெல்லாம் போகட்டும் என்றால் ,

அரசியல் வாதிகள் , தந்தையர் தினம் என்பதை புதிய வடிவில் கொண்டு செல்ல எண்ணுகிறார்கள் . யார் அதிக பிள்ளை பெருகிறாரோ அவர்தான் தந்தையர் தினத்திற்கு தகுதியான ஆள் என்று ? என்ன கொடுமை இது ?
அப்புடி பார்த்தாலும் கலைஞர் கருணாநிதியை விட அதிக பிள்ளை பெற்றவர் எல்லாம் நாட்டில் இருக்கிறார்கள் !



மறக்காதே தமிழா ?
நம்மை , நம் பண்பாட்டை வேறு வடிவில் மாற்ற இந்த உலகம் முயற்சித்து கொண்டு இருக்கிறது .

கொண்டாட்டங்களுக்கு மயங்காதே !
கொள்கைகளை விட்டு விலகாதே !
நம் 10000 ஆண்டு பழமையான பாரம்பரியத்தை 
முந்தாநாள் வந்தவனுக்காக மாற்றாதே !
நம் கண்ணை வைத்தே நம் கண்ணை குத்த நினைக்கும் 
வஞ்சகரின் வலையில் விழுந்து விடாதே !
பெண்ணியம் பேசுவதும் 
பேதமை கலைவதும் 
தமிழனுக்கு தெரியாதா ?
விழித்து கொள் !

Sunday, 19 June 2016

விஷால் கிருஷ்ணா ரெட்டி

தெலுங்கை தாய் மொழியாக கொண்டு ஆந்த்ராவில் பிறந்தவர்
 விஷால் கிருஷ்ணா ரெட்டி ,

மிகபெரும் பணக்காரர் G .K .ரெட்டியின்  ( தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ) இரண்டாவது மகன்.

இவருடைய அண்ணன் விக்ரம் கிருஷ்ணா ரெட்டி , திமிரு படத்தில் விஷாலை துரத்தும் ஷ்ரிய ரெட்டியை திருமணம் செய்து கொண்டார் .

29.8.1977 ல் பிறந்த விஷால் கிருஷ்ணா ரெட்டிக்கு தமிழ்நாட்டில் ஜால்ராக்கள் அதிகம்.

அதன் விளைவு , ஆரம்ப காலங்களில் பிறர் தயாரிப்பில் நடித்த விஷால் கடந்த 10 படங்களாக தானே தயாரிக்கிறார்.

தானே விரும்பி தயாரிக்கிறார் என்றாலும், இவரை வைத்து யாரும் படம் எடுக்க தயார் இல்லை என்பதை மனதில் கொண்டு ,

தெலுங்கு வம்சாவழி ஜெயம் ரவி க்கு அவரது அண்ணனே இயக்கி தயாரிப்பது போல , விஷால் கிருஷ்ணா ரெட்டிக்கு , அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணா ரெட்டி தயாரிப்பாளராக இருக்கிறார்.



இதில் , இவரை தூக்கி பிடித்து அதனால் மூக்கு உடைப்பட்ட குடும்பம் தான் ராதிகா சரத்குமார் குடும்பம்.

சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் வரலக்ஷ்மிக்கும் , இவருக்கும் இருந்த நட்போ , காதலோ , எதோ ஒன்றை அடிப்படையாக கொண்டு , ராதிகாவை எதிர்க்க வேண்டி , நடிகர் சங்கத்தில் புரட்சி செய்து, பொம்மை தலைவர் நாசரை உட்கார வைத்து , தானே ஆட்சி புரிகிறார் விஷால் கிருஷ்ணா ரெட்டி .
இப்படி எல்லாம் இருந்தால் தான் , தெலுங்கு படத்தில் நாசருக்கும் , சூர்யாவிற்கும், கார்த்திக்கும்,கோவை சரலாவிர்க்கும் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த நாதாரிகள் தான் , தன்னுடைய தனிப்பட்ட சுய லாபத்திற்காக , இந்த விஷால் ரெட்டியை தூக்கி பிடித்து ,கொண்டிருக்கிறது .

இது போன்ற குழுமத்தை ஏற்கனவே ரஜினிகாந்த் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிட தக்கது. அதில் ஜனகராஜ் , சரத் பாபு, நிழல்கள் ரவி, V .K .ராமசாமி ,மனோபாலா, கராத்தே மணி, கலைபுலி தாணு,, ரமேஷ் கண்ணா , K .S .ரவிகுமார் இன்னும் பலர் இருந்தார்கள். இவர்களுக்கு ஒரே வேலைதான். எங்கு சென்றாலும் ரஜினியை பற்றி புகழ வேண்டும் .

அதன் விளைவு , ரஜினியை தமிழக முதல்வர் ஆக்க  வேண்டும் என்று ஒரு சில அறிவாளிகள் போராடுகிறார்கள் .

ஏற்கனவே M .G .ராமச்சந்திரன் இதனை செய்திருந்தார். அதனை ரஜினிகாந்த தொடர்ந்தார். அதனையே தற்போது விஷால் கிருஷ்ணா ரெட்டியும் செய்கிறார்.

ஒரு மலையாளிக்கும், கன்னட காரனுக்கும் கொடுத்த இடத்தை தமிழகம் ஒரு தெலுங்கருக்கு மட்டும் மறுக்குமா என்ன ?

அதை நிரூபிக்க பத்திரிகைகள் அரும் பாடு படுகின்றன . ஜல்லிக்கட்டு தடை என்று பேசுகிறார் . அப்போதுதான் காளைகள் காப்பாற்ற படுமாம்.
பாவம் இவர் பல விலங்குகளை காப்பாற்றி இருக்கிறார் போலும் கனவில் !
இவருக்கு PETA வில் இருந்து , விருதும் வழங்கப்பட்டது. PETA வின் நோக்கம் , விலங்குகளுக்கு நிம்மதியான சாவு தருவது. அதில் தன்னை இணைத்து கொண்டு , தமிழக காளைகளுக்கு நிம்மதியான சாவு தர முயர்ச்சிகிறார் போலும் !




பிறகு விவசாயிகளுக்காக ஓடி வருகிறார் விஷால் என்று அவருக்கு அடிகடி கொடி பிடிக்கிறது ஊடகங்கள். நடிக்க வந்தால் ,நடிக்கின்ற வேலையை மட்டும் பார்ப்பது என்பது தமிழகத்தில் நடக்கவே நடக்காதா?

அவர் நல்லது செய்யவில்லை என்றாலும் , கெட்டதே செய்தாலும் , அவர் முகம் மட்டும் மக்கள் மனதில் நின்றால் போதும். அந்த வேலையை தான் ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன .

தினமும் எதோ ஒரு தலைப்பில் விஷால் பற்றி செய்தி தர வேண்டும் என்றும் , அதன் வழியாக விஷால் முகத்தை மக்கள் மனதில் நிலை நிறுத்த வேண்டும் . தமிழகத்தின் வருங்காலம் அல்லவா ? லாரன்ஸ் மற்றும் விஷால் குறித்து அடிகடி செய்தி வெளியிட வேண்டும் . இது பத்திரிகையின் கடமை . இப்படி செய்து தான் தமிழ் நாட்டில் சினிமா ஆள வழி காட்டியது பத்திரிகைகள் .

மீண்டும் சினிமா வழியில் திராவிடம் தான் தமிழகத்தை ஆளுமா ?

சினிமா மட்டுமே ஆண்டால் , திராவிடம் மட்டுமே ஆண்டால் ,

தமிழக
விவசாயி  ஒரு போதும் விளங்க மாட்டான்  !
மீனவன் ஒரு போதும் மீள மாட்டான் !
ஆறுகள் தன்னிலைக்கு திரும்பாது !
தமிழகம் மறுவாழ்வு பெறாது !

Friday, 17 June 2016

நாகர்கள் -2- குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில்


murugan க்கான பட முடிவு

நாகர்கள் எனும் இனம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட நிலையில் , அது எங்கோ , தன பெயரை மாற்றி கொண்டோ , தன அடையாளங்களை மறைமுகமாக காட்டி கொண்டோ , வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .

அதன் ஒரு அங்கம் தான்
குக்கி சுப்பிரமணியர் கோவில் .

இது தெற்கு கர்நாடகாவில் உள்ளது.


சுப்ரமணிய சுவாமி என்பதை தமிழ் இனம் முருகன் என்றே கூறும் .

இது தமிழ் நாடு வரை மட்டுமே !

தமிழ்நாட்டை கடந்து விட்டால் சுப்பிரமணி சுவாமி என்பது நாகம் .
நாகர்கள் இனம் தான் , வித்தியாசமான உடல் அமைப்பை கொண்டவர்கள் என்றும் , 6 தலை கொண்டவர்கள் , 12 கை கொண்டவர்கள் என்றெல்லாம்  வட இந்திய கதைகள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் தான் முருகனுக்கும் 6 தலை , 12 கையும் இருக்கு. ( ஏன் , விநாயகர், காளி இவங்களும் இந்த லிஸ்ட்லதான் வர்றாங்க ! இதுக்கு கீழ் ராவணனும் உண்டு . அவனுக்கும் வித்யாசமான கோவில்கள் மத்திய பிரதேசத்தில் உள்ளது. இன்றளவும் , சில நாட்களில் மட்டும் பூஜையும் நடைபெறுகிறது. )


kukke subramanya க்கான பட முடிவு

இது கொக்கி சுப்ரமணிய சுவாமி . 5 தலை நாகத்தின் கீழ் மயிலில் அமர்ந்திருப்பது  முருகன்தான் . ஆனால் இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன.
புதிய கோவிலில் தான் இந்த மயில் மீது முருகன் உள்ளார்.
பழைய கோவிலில் வெறும் நாகம் மட்டுமே உள்ளது.


இது அமைந்துள்ள இடம் , குமார பர்வதம் ( பர்வதம் என்றால் மலை ) ஆகும். இங்குள்ள ஆறு , குமாரதார ஆறு. மிக அழகான ஆறு. ஒரு நீரோடை போல் கோவில் வாசலில் ஓடுகிறது. பார்க்கவே ரம்யமாக இருக்கும். இவை எல்லாம் பழைய கோவிலில் தான் உள்ளது.

பல பேருக்கு பழைய கோவில் இருக்கும் இடமே தெரிவதும் இல்லை . அங்கு பலர் செல்வதும் இல்லை.உண்மையில் இந்த பழைய கோவில் தான் , சக்தி வாய்ந்தது. அந்த மலையின் காற்றும், ஆற்றின் நீரும் நோய் தீர்க்கும் என்று கூறுகிறார்கள் .

( குமரன் மலை என்பதும், குமார ஆறு என்பதும் தமிழ் மொழிக்கு சொந்தம் )

பல இடங்களில் சுப்ரமன்யக்க சுவாமி என்றால் , அங்கு நாகம் மட்டும்தான் இருக்கும்.

தமிழ்நாட்டில் , சனி ஈஸ்வர பகவானுக்கு தான் எள் விளக்கு போடுவோம். அவரை சாஸ்தா என்றும் அழைப்போம். ஆனால் , கேரளாவில் சாஸ்தவிர்க்குதான் எள் விளக்கு போடுகிறார்கள் . எனில் சாஸ்தா தான் சனி ஈஸ்வர பகவானா ? 

அப்படிதான் சுப்பிரமணிய சுவாமியும் நாகமாக காட்சி தருகிறார்.

தமிழ்நாட்டை கடந்து இந்திய முழுக்க சுற்றும் போது நாம் அதிகபடியான கோவில்களில்  கடவுளின் சிலைக்கு பின்பு நாகம் இருப்பதை பார்க்கலாம் . தமிழ்நாட்டில் மட்டும்தான் முருகன் 5 தலை நாகத்தில் இல்லை .


பெரும்பாலும் சிவனுக்கு சிலை வடிவங்கள் கொடுத்துள்ளனர். அதனால் நாகம் உள்ள கோவில்கள் மிக மிக பழமை வாய்ந்தவை என்பதை எளிதில் கண்டு கொள்ளலாம். இந்த சிலை வடிவுள்ள , உருவம் கொண்ட இறைவன் திபெத்திய பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர் என்றும், இவர் தான் ருத்ராட்சம் என்பதை பயன்படுத்தினார் என்றும் கதைகள் உண்டு. இவர் இங்கு வருவதற்கு முன்பே , இந்தியாவில் நாகர்கள் இருந்ததும், அவர்களுக்கு கோவில்கள் இருந்ததையும் , வட இந்திய கதைகளே கூறுகின்றன. 

இந்தியாவிற்குள் ஆரிய இனம் வருவதற்கு முன் இருந்த இனம் நாகர் இனம். இன்றைய தமிழ் இனத்தின் பழைய பெயராக கூட இருக்கலாம்.

ஏன் எனில் , தமிழ்நாட்டில் பல அரசியல் மாற்றங்களால் , கோவில்கள் மற்றும் அதன் பெயர்கள் , மாற்றம் பெற்று விட்டன .

ஆனால் பிற பகுதிகளில் , அவற்றை அப்படியே விட்டுள்ளனர். பல வற்றுக்கு விளக்கம் புரியாமல் தான்.

இந்த குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில் , கால சர்ப்ப தோசத்திற்க்கு நிவர்த்தி அளிக்கும் என்பதால் , நாக தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு உள்ள ஆற்றில் நீராடி , இங்கு பூஜை செய்கிறார்கள்.

உண்மையில் தோஷ நிவர்த்தி ஆலயங்கள் எழுப்புவது தமிழர்களின் வழக்கம்.  பழனி மலை போல் , மலைகளின் மீது மருந்து உள்ளது என்பதை கண்டு , அதை தெய்வ திருத்தலங்களாக மாற்றியது தமிழர்கள் .

அவ்வண்ணமே , இத்திரு கோவிலும் தமிழர்கள் வழி வந்தது.

நாக தோஷம் , மற்றும் சர்ப்ப தோஷம் என்பது மனசோர்வு மற்றும் உடல் சோர்வையே குறிக்கும். உடலில் நரம்பு கோளாறுகள் ஏற்படும்போது உடல் சோர்வும் , மன சோர்வும் ஏற்படும் .சில தோல் நோய்கள் ஏற்படும் .
அதை தீர்க்கும் , அருமருந்தை கொண்டதே , குமார பர்வதம் மற்றும் குமார தீர்த்தம் ஆகும்.

ஒரு முறை சென்று வாருங்கள் குக்கி சுப்பிரமணிய சுவாமி  கோவிலுக்கு !
பழைய கோவிலுக்கு செல்லுங்கள் !
உடல் சோர்வு தளர்த்தி உற்சாகமாக வாழுங்கள்!

மறைந்து கிடக்கும் தமிழனின் மருத்துவ அறிவை பெறுங்கள் !
மன நிறைவாய் வாழுங்கள் !


( சுப்ரமன்யக்க சுவாமி என்பது பின்னாளில் சுப்பிரமணி ஐயர் என்று மாற்ற பட்டுள்ளது . )

Wednesday, 15 June 2016

வள்ளுவர் யார் ?

இன்று நாம் பார்க்கும் திருவள்ளுவர் படம் யார் சாயல் என்று யாராவது சொல்ல முடியுமா ?





2000 ஆண்டுகளாக வள்ளுவர் எப்படி இருப்பார் யாருமே வரைய வில்லை. சிலை  வடிக்க வில்லை.சிற்பங்களும் இல்லை.

ஏன் உ.வே.சாமிநாதையர்,சிதம்பரம் பிள்ளை ,இவர்களெல்லாம் உயிரோடு இருக்கும் வரை வராத வள்ளுவர் படம் ,

ஒரு நாள்

திடிரென இந்திய அரசால் அஞ்சல் தலையாக வெளிவந்தது .

இந்த படத்தை வரைந்தவர் யார் ?


கே.ஆர் .வேணுகோபால் ஷர்மா
,
இவர் அப்போதைய மாடேர்ன் திடேர்ஸ் உரிமையில் பங்குதாரராக இருந்தவர் .

1930 ம் ஆண்டு முதல் அவருக்கு இருந்த ஆசை வள்ளுவர் படத்தை வரைய வேண்டும் என்பது.

அதன் பிறகு காந்தி அடிகளின் படத்தை வரைந்து அதை அவரிடமே நேரில் கொடுத்தார். அதை காந்தி ஏலத்தில் விட்டு அதில் வந்த பணத்தை ஹரிஜன சேவைக்கு பயன்படுத்தினார்.

இவை எல்லாம் ராஜ கோபாலசாரியருக்கும் , காமராஜருக்கும் முன்னால் நடந்தவை .

அதன் பிறகு 1953 ம் ஆண்டு வள்ளுவர் படத்தை வரைந்தே தீருவேன் என்று தீர்மானமாக இருந்தார். அதன் விளைவு ,1959 ல் திரு .ப்க்தவசலம் அவர்களிடம் , அறிஞர் அண்ணா வின் ஒத்துழைப்பால் இப்படத்தை அறிமுகம் செய்தார் வேணுகோபால் ஷர்மா .

உடன் 1960 களில் இந்த படம் இந்திய அரசால் அஞ்சல் தலையாக வெளி வந்தது .

அப்போது இருந்த அரசு காங்கிரஸ் அரசு .
இதை பரிந்துரை செய்தவர்களோ திராவிட கட்சிகள் .

பிறகு எப்படி ? உடன் தீர்மானம் கொண்டு வரப்பட்டது . இத்தனைக்கும் , காமராஜர் அப்போது தமிழக முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிட தக்கது .

1963 ல் காமராஜர் பதவி விலகினார். அதனை பயன்படுத்தி கொண்ட , திராவிடர் கழகம் , காமராஜரை பற்றி அவதூறு பரப்பியது .

அதன் விளைவு 1967 ம் ஆண்டில் அண்ணா ஆட்சிக்கு வந்தார்.
அதன் பிறகு தான் தமிழக பாட புத்தகங்களில் வள்ளுவர் படம் வலம் வர ஆரம்பித்தது .

(அதே போல் திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் மணக்குடவர். ஏன் வ.உ.சிதம்பரம் பிள்ளை கூட உரை எழுதி இருக்கிறார்.
நாம் படிக்கின்ற உரைகள் இவை அல்ல. கலைஞர் எழுதிய உரைகள் .)


இதன் பிறகு தானே , வள்ளுவர் படத்தின் காப்புரிமை பெற்றவர் என்பதால் , அந்த படத்தை யார் வரைந்தாலும் , நாளேடுகளில் பதித்தாலும் ஷர்மாவிற்கு பணம் கொடுக்க பட்டது .

(இதனை அடிப்படியாக கொண்டு ஒரு வழக்கும் நடந்துள்ளது .)
Source : K.R. Venugopala Sarma vs Sangu Ganesan on 3 November, 1971


( இன்றளவும் சமண மதத்தவர்கள் வள்ளுவர் தங்கள் மதத்தை சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது .)





பிறகு 1973 ல் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976 ல் கட்டி முடிக்கப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

வள்ளுவர் கோட்டம் , திருவாரூர் தேரின் சாயலை ஒத்தது .128 அடி உயரம் கொண்டது வள்ளுவர் கோட்டம்.

மதங்களை வெறுக்கும் திராவிட கட்சிகள் , மதங்களை பற்றி எழுதாத வள்ளுவருக்கு திருவாரூர் தேர போல் , ஒரு கோட்டம் அமைக்க காரணம் என்ன என்று ஆயிரம் கேள்விகள் வந்த பொழுதும் , அதனை கட்டி முடிக்க ஆணை இட்டார் கருணாநிதி .


( இதனை கட்டியவர் , காரைக்குடியை சேர்ந்த கணபதி ஸ்தபதி .
இவர் தான் அண்ணா வளைவு மற்றும்
கன்னியாகுமரி வள்ளுவர் சிலையையும் வடிவமைத்தவர்.
மாமல்ல புறம் சிற்ப கல்லூரியில் பணியாற்றியவர். )


இது போல் வள்ளுவருக்கும் , திராவிட கட்சிகளுக்கும் தீராத இணைப்பு .
இது இன்னும் தொடரும் ..

குறிப்பு :


1973 ம் ஆண்டு பெரியார் இறந்தார்.

அதே போல் மற்றொரு கருத்தையும் , கருத்தில் கொள்க !

நீட்டலும் , மழித்தலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

என்று கூறுகிறார் வள்ளுவர். தாடி வைப்பதும் வேண்டா ! மீசை எடுப்பதும் வேண்டா ! என்று கூறுகிறார் வள்ளுவர். ஆனால் வள்ளுவருக்கு தாடியா ?

( வள்ளுவரின் படத்தில் பெரியாரின் சாயல் , உங்கள் கண்களுக்கு தெரிந்தால் அது எங்கள்  பிழை அல்ல )




வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...