Thursday, 9 February 2017

வாடிய குரூப் ( WADIA GROUP )

hms minden pictures க்கான பட முடிவு
                                                        HMS MINDEN கப்பல்


1735 ம் ஆண்டு டாக் யார்டு எனப்படும் கப்பல் கட்டும் தளத்தை ஆரம்பித்தது கிழக்கிந்திய கம்பெனி . 800 முதல் 1000 டன் எடைகளை சுமக்கும் திறன் வாய்ந்த கப்பல்கள் அங்கு தயாரிக்கப்பட்டன. அதன் கட்டுமான பணிகளுக்காக சூரத்தில் இருந்து பார்சி இனத்தை சேர்ந்த மர ஆசாரிகள் வரவழைக்கப்பட்டனர். அப்பணியின் தலைமை பொறுப்பை
லவ்ஜி நஸர்வான்ஜி வாடியா ( LOVJI NOSARWANJEE WADIA ) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது . அந்நிறுவனத்தின் கீழ் சில கப்பல்களை  உருவாக்கினார் வாடியா .


Wadia logo.PNG



இதன் அடிப்படையில் 1736 ம் ஆண்டுமுதல் வாடியா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாடியா 35 கப்பல்களை தனது மேற்பார்வையில் வைத்திருந்தார். அதில் 21 கப்பல்களை திறம்பட செய்து முடித்தார்.1750 ம் ஆண்டு வாடியாவும் அவரது சகோதரர் சோரபிஜி வாடியாவும் சேர்ந்து  உருவாக்கிய  பம்பாய் drydock ஆசியாவின் முதல் drydock ஆகும்  . 1774 ம் ஆண்டு அவர் மறைந்தார்.

அவரது மறைவிற்கு பின் அவரது மகன்கள் மனக்ஜி வாடிய மற்றும் போமஞ்சி வாடியா இருவரும் அந்த பொறுப்பை ஏற்றனர்.

ஜாம்செட்ஜி போமான்ஜி வாடியா தான் HMS MINDEN கப்பலை வடிவமைத்தார் .


1801 ம் ஆண்டு HMS MINDEN கப்பல் செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றது டாக் யார்டு நிறுவனம். அதன் அமைப்பை உருவாக்கி முழுமையாக மாற்றிய பெருமை வாடிய குடும்பத்தையே  சேரும். முழுவதுமாக மலபார் தேக்கில் கட்டப்பட்டது  தான் HMS MINDEN கப்பல் .


1811 பிரிட்டிஷ் கப்பல் படை உருவாக்கப்பட்டது, வாடியா குரூப்பின் துணையுடன் . இதன் பிறகு தான் 1814 ல் ஸ்டார் ஸ்பிங்க்லெட் பேனர் ( The Star-Spangled Banner ) எனப்படும் U .S ன் தேசிய கீதம் எழுதப்பட்டது .


இதுவரையில் 355 கப்பல்கள் வாடிய குடும்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது .




பம்பாய் டையின் கம்பெனி 1879 ல் நௌரோஸிஜி வாடியா என்பவரால்  உருவாக்கப்பட்டது.

காஸ் லைட் , தையல் இயந்திரம் மற்றும் ஸ்டீம் என்ஜின் உற்பத்தி பம்பாயில் அறிமுகம்   செய்தது வாடியா குடும்பம் .  இந்த பெருமைக்கு உரியவர் கர்செட்ஜீ வாடியா ஆவார்.


bombay realty க்கான பட முடிவு


பாம்பை ரியாலிட்டி ( ரியல் எஸ்டேட் )

பாம்பே ரியாலிட்டி எனும் நில மேலாண்மை நிறுவனத்தை நடத்துவதும் வாடியா குடும்பம் தான் . icc ( island city center ) என்ற பெயரில் பணக்கார மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன.



wadia bsn india ltd க்கான பட முடிவு







டைகர் பிஸ்கட் மற்றும் பிரிட்டானியா பிஸ்கட் இந்த நிறுவனத்தை சேர்ந்தது

.






கோ ஏர் எனப்படும் விமான சேவையும் செய்கிறது .




ஹைட்ரஜன் பேரொக்ஸிடே தயாரிப்பதும் இந்நிறுவனம் .


fashion magazine gladrags க்கான பட முடிவு


 பேஷன் magazine  க்ளாட்ராக்ஸ் எனும் பத்திரிகையும் நடத்துகிறது 





bbtc எனப்படும் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி நடத்துவதும் வாடியா குடும்பமே ! 1863 ல் பர்மா தேயிலைக்கு இருந்த மதிப்பின் காரணமாக வாலஸ் சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது வாடிய குடும்பத்திடம் உள்ளது .





DPI எனப்படும் டென்டல் products ஆப் இந்தியா என்ற நிறுவனத்தை , bbti நிறுவனத்தின் கீழ் நடத்துவதும் வாடியா குடும்பமே !


medical microtechnology ltd க்கான பட முடிவு





Medical Microtechnology Ltd என்ற பெயரில் மருத்துவ துறையின் அணைத்து பொருள்களும் உற்பத்தி செய்வது வாடிய குடும்பம் .

dina jinnah க்கான பட முடிவு
தீணாவும் ஜின்னாவும் !

 தற்போது வாடிய குரூப்பை நடத்துவது , நுஸ்லி வாடியா ஆவார்.

இவர் பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னா அவர்களுக்கும் பேரன் ஆவார்.

ஜின்னா விற்கு ஒரே ஒரு பெண் குழந்தை . அதுவும் இங்கிலாந்தில் பிறந்தது. அவர் பெயர் தினா . இவரது தாயார் ஒரு பார்சி பெண் .ரத்தன்பாய் பெட்டிட் .
இந்த தினா , வாடியா குடும்பத்தை சேர்ந்த நெவெள்ளி வாடியாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.



இந்த நெவெள்ளியே வாடியார்விக்கும் தினா ஜின்னாவிற்கும் பிறந்தவர்தான் நுஸ்லி வாடியா . இவர்கள் மும்பையில் வாழ்ந்தாலும் பிரிட்டிஷ் பாஸ்போர்டையே பயன்படுத்துகின்றனர்.

இவருக்கு துணையாக இவரது மகன்கள் நெஸ் வாடியாவும் ஜகாங்கீர் வாடியாவும் உள்ளனர்.


வணிக ரீதியாக மட்டும் அல்ல . பற்பல விஷயங்களில் சுவாரஸ்யங்கள் நிறைந்தது தான் வாடியா குடும்பம் .

-------------தொடர்வோம் .....

-----------------------------------------







வாடிய குடும்பம் என்று தான் இதை வழங்க முடியும். ஏனெனில் குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் ஆங்கிலேயர்களுக்கும் அதன் பிறகு சுதந்திர இந்தியாவின் வணிகத்திற்கும் முழுமையாக உழைத்துள்ளனர் . இதற்க்கு மற்றொரு காரணமும் உள்ளது . அர்தஷீர் கர்செட்ஜீ பற்றி படிக்கும் போதே நமக்கு புரியும்.


இவர் 1808 ம ஆண்டும் பிறந்தார் . இவரது தகப்பனார் கர்செட்ஜீ ரோஸ்டோம்ஜி வாடியா ஆவார்.


இவர்தான் முதன் முதலில் , மும்பையில் தையில் இயந்திரம், ஸ்டீம் என்ஜின் மற்றும் காஸ் லைட் ஆகியவற்றை அறிமுகம் செய்தவர்.

இவரது 14 ம் வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து கப்பல் கட்டும் துறையில் ஈடுபட்டார். அதன் விளைவு , பிரிட்டிஷாரிடம் இவருக்கு செல்வாக்கு அதிகரித்தது .


இந்த அர்தஷீர் இந்திய வணிக வரலாற்றின் முக்கிய புள்ளி ஆவார். பிரிட்டிஷாரிடம் இருந்த நல்லுறவு காரணமாக அடிக்கடி லண்டன் செல்ல நேரிட்டது. அதனால் இவர் லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி இட்டார். இவரை பல பிரிட்டிஷார் ஆதரித்தனர்.


ஒரு இந்தியர் என்ற முறையில் ,
முதன் முதலில் 1831 ல் இங்கிலாந்தின் பாராளுமன்றமான ராயல் சொசைட்டியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1837 ல் ராயல் asiatic சொசைட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதில் உள்ள உறுப்பினர்கள் ஆசியாவில் உள்ள அந்தந்த நாட்டு கலாசார , மொழி உரிமை மற்றும் கருத்துக்களை கூறலாம். இவர் இந்திய பிரதிநிதியாக 1837 ல் தேர்ந்தெடுக்க பட்டார்.

1841 ல் இங்கிலாந்து முழுவதும் சுற்றி வந்தார்.

1849 ல் அர்தஷீர் கர்செட்ஜீ (Ardaseer Cursetjee ) வாடிய இவர்தான் முதன்முதலில் அமெரிக்கா சென்றவர்.  

1855 ல் ஜஸ்டிஸ் ஆப் பீஸ் ( justice of peace ) சின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இங்கு அமைதிக்கான வழிகள் குறித்து பேசியுள்ளார்.

இவ்வாறு பல்வேறு தருணங்களில் முதல் இடத்தை பிடித்த அர்தஷீரின் வாரிசுகள்  , உறவு கலப்பு என்ற முறையில் முதலிடத்தை பிடித்தனர். இதனாலும் உறவு வழி கூற இயலாமல் வாடிய குடும்பம் என்று மொத்தமாக கூற வேண்டிய நிலை வந்தது .

இவருக்கு இந்தியாவில் திருமணம் நடந்தது . அந்த மனைவியின் பெயர் ஆவாபாய் .

இவர் இங்கிலாந்தில் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு பெண்ணுடன் வாழ்ந்தார். அவர் மெரினா பார்பர். இவருக்கு இரண்டு குழந்தைகள் .லௌஜீ அன்னி , மற்றும் குஸ்தாபி அர்த்தசீர் . இவர்கள் மும்பையில் பிறந்திருந்தாலும் இங்கிலாந்தில் வாழ்ந்தார்கள் .

ஆவா பாய் குழந்தைகளும் , மெரினா பார்பர் குழந்தைகளும் உறவாகவே இருந்தனர். அவர்களுக்குள் திருமணமும் செய்து கொண்டனர்.

ஆவாபாய் அர்தஷீர் இருவரின் பேரன் கர்செட்ஜீ  ரோஸ்டோம்ஜி வாடியா ,
இந்தியன் சிவில் சேவை தேர்வு எழுதுவதற்காக இங்கிலாந்து சென்றான். ஆனால் அங்கு , அவனுக்கு அம்மா  முறை கொண்ட மெரினா பார்பரின் மகள் லவ்ஜி அன்னியியை சந்தித்தான் . லவ்ஜி அன்னயே இவருக்கு அத்தை முறை . ஆனால் காதல் ஏற்பட்டது.

பின்னர் 1877 ல் அர்தஷீர் கார்செட்ஜீ காலமானார்.

அதன் பிறகு  1880 ல் கார்செட்ஜீ ரோசடோம்ஜி வாடியாவும் அவனது அத்தையும்  திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் குழந்தைகள் இந்தியாவில் பிறந்தனர்.

அவர்கள் வம்சாவழியினரும் , இந்த உறவு கலப்பை தொடர நேரிட்டது.

அந்த வம்சம் தான் இன்று மும்பை பங்கு சந்தையை ஆட்டுவிக்கிறது .

இந்திய பொருளாதார ஏற்ற தாழ்வுகளுக்கு காரணம் கொடுக்கிறது.

தொடர்வோம் இக்குடும்ப சுவாரஸ்யங்களோடு !-------------


---------------------------------------------------




Friday, 3 February 2017

ஆமைகளும் தமிழர்களும் !

1. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே , விலங்குகள் மட்டும்  இல்லாமல் மனிதன் வாழ்ந்த தடையங்கள் தமிழகத்தில் உள்ளன.


2.திருவான்மியூர் என்ற பெயர் ஆமையூர் என்றே வழங்கப்பட்டு பின் பெசன்ட் நகராக மாறியுள்ளது. இங்கு இப்போதும் ஆமைகள் வந்து செல்கின்றன .


3. ஆமைகள் சென்ற வழியை பின்பற்றி , நீரோட்டத்தில் சென்று தமிழர்கள் உலகம் முழுவதும் நிறைந்து வாழ்ந்துள்ளார்கள் .


4. நீர், நிலம் , காற்று , வான் , மண் என்ற ஐந்தையும் ஒரு பொருளாகவும் , அண்டவெளியை மற்றொரு பொருளாகவும் பார்த்தான் தமிழன்.


5. ஐந்து திணைகள் இல்லை. நீர், மலை , காடு இவை மட்டுமே தமிழர்களின் பூர்வீகம். மனிதனால் உருவாக்கப்பட்டது மருதம் எனும் வயல் வெளி . இயற்கை உருவாக்கியது பாலை நிலம்.



6. தமிழர்கள் உலகம் முழுவதும் பரவியதால் , உலகம் முழுவதும் இப்போதும் 18720 தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் உள்ளன .


7. ஒரு தொழிலாளரால் ஒரு மொழியை வளர்க்க முடியாது. முதலாளியாக இருந்தால் தான் அவனுக்காக , அவனது தொழிலாளர்கள் அம்மொழியை கற்கமுடியும் .

8. ஆமைகள் கடலின் பாதுகாவலன். மீன்களை பாதுகாக்கும் . குப்பைகளை களைந்து கடலை தூய்மை செய்யும்.


9. ஆமைகள் ஒரு இடத்தை தேடி பிடித்து அங்கு முட்டை இட்டால் அந்த இடத்தில சுனாமி பாதிப்பு இருக்காது.


10.ஆ மைகளுக்கும் ஆலா பறவைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ..
கடலில் பயணிக்கும் ஆமைகளுக்கு இந்த பறவைகள் தான் உணவு தருகின்றன.


11. ஆமைகள் வந்து போகும் வரை , சுனாமி பாதிப்புகள் இருக்காது.


12. இந்த தமிழ் மண் எலெக்ட்ரோ magnattaal சூழ பட்டுள்ளது. இங்குள்ள விலங்குகள் முதல் அனைவரும் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள்.


13. பறவைகள் வானில் , ஆமைகள் கடலில், சுறாக்கள் கடலின் அடியில் ஒரே அமைப்பில் செல்லும் திறன் படைத்தவை .


14. இந்த உலகம் விலங்குகளுக்கானது .


15. ஆதி கால மனிதர்கள் விலங்குகளை மதித்தனர். இன்று வெறும் இறைச்சியாக மட்டுமே பார்க்கிறோம் .


விலங்குகள் காக்கப்படவேண்டியவை !




---------------- ஒரிசா பாலு

--------------------------------------------------------


உலகின் ஆச்சரியங்களில் ஒன்று ஆமைகள் !

நம் முன்னோருக்கும் முன்னோர் இந்த ஆமைகள் !

இந்த  பகவத் கீதையெல்லாம் எடுத்து பார்த்தல் , ஆமைகள் பற்றி என்ன கூறி இருக்கிறார்கள் தெரியுமா ? 

ஏன் ஆமைகள் சிலை எல்லா இடங்களிலும் இருக்கிறது என்று கேட்டாலும் ஒரு பதில் தருகிறான் ஆரியன்.  

அந்த பதில் இதோ :

ஆமைகள் எப்போதும் , அதன் உடலைசுருக்கி ஓடுகளுக்குள் வைத்து கொள்ளும். அது போல நாமும்  புலன்களை அடக்க வேண்டும். அதை நமக்கு நினைவூட்டவே கிருஷ்ணா பெருமான் பகத் கீதையில் ஆமையை பற்றி பேசுகிறார் . 

இது முற்றிலும் பொய்.!

ஒரிசா பாலு அவர்கள் , கடல்சார் ஆய்வாளர். 
அவரது பேச்சு தூண்டிய ஆவலால் , ஆமைகள் பற்றியம் , தமிழர்களின் வாழ்வியல் பற்றியும் தேடினேன். 

அவர்  கடலுக்குள் உள்ள விந்தைகள் பற்றி பெருமிதமாக பேசுவார். அதில் தமிழனின் பங்களிப்பு பற்றியும் , எல்லோரையும் தமிழன் என்ற உணர்விற்குள் கொண்டு வந்து விடுவார் . அத்தனை கருத்துக்கள் தமிழர்கள் குறித்து அவருக்கு தெரியும். அதன் அடிப்படையில் கோவில்களில் இதனை குறித்து என்ன கூறி இருக்கிறார்கள் என்று தேடியதை பதிவிட்டு இருக்கிறேன்.


நானும் சிறு வயது முதல் கேட்டு இருக்கிறேன்.

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று !

இதன் அறிவியல் என்ன என்று அறியாத , நமக்கு பாடம் சொல்லி தரும் இடத்தில இருந்த வேறு இன மக்கள் , பல்வேரு வகையான தவறான கருத்துக்களையும், கதைகளையும் கூறி நம் அறிவை மழுங்கடித்து விட்டனர்.

உண்மையில் , ஒருவர வீடு காட்டும் முன் முதலில் ஆமையைத்தான் உள்ளே விடுவார்களாம். கட்டிய பிறகு தான் மாடு . இன்று நாம் ஆமையை மறந்து விட்டோம்.

ஆமை நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர் .அறிவின் உச்சம். அது நீரோட்டம் நோக்கி மட்டுமே போகும். எதிர் திசையில் பயணிக்காது. அந்த வகையில் , ஒரு வீடு  கட்டுவதற்கு முன்னதாக ஆமையை விட்டால் அந்த பகுதியில் உள்ள நீரோட்ட பகுதியில் மட்டுமே பயணிக்கும். மக்கள் அந்த பகுதில் வீடு  வாசல் வைத்து கட்ட மாட்டார்கள். 

நீரோட்டத்தை தடுத்து வீடு காட்டினால் வெள்ளம் வரும் போது , வீட்டிற்குள் நுழையும். நம் வீடு அழிந்து விடும். 

இதனை தான் ஆமை புகுந்த வீடு விளங்காது என்று கூறி உள்ளார்கள் .

சென்னையின பெரு வெள்ளத்திற்கு இதுவே பிரதான காரணம். நம் அறிவை குழப்பம் அடைய செய்யும் சில வாஸ்து சாஸ்திரத்தை தவறாக படித்த வித்தகர்கள் , கிழக்கு மேற்காக வீடு கட்டு என்று பரப்புரை செய்து, உலகிற்கே அறிவியல் சொல்லி தந்த தமிழ் இனம் , அழிவில் அடிக்கடி சிக்கி கொள்கிறது .

மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி தான் நீர் பாயும். எனவே கிழக்கு மேற்காக வீடு கட்ட கூடாது. வடக்கு தெற்காகத்தான வீடு கட்ட வேண்டும்.

தஞ்சையின் எல்லா வீதிகளும் வடக்கு தெற்காக மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அங்கு வராத வெள்ளத்தையா சென்னை பார்த்து விட்டது? சென்னைக்கு வந்தது வெள்ளம் அல்ல. தேங்கிய நீர்.

சென்னையில் உள்ள வீடுகள் எல்லாம் , 

"ஆமை புகும் வீடுகள் தான் "

சரி ,

இதை தான் முன்னோர்கள் விளக்க வேண்டி எல்லா கோவில்களிலும் ஆமை சிலை வைத்து அதன் பின்னர் நந்தி சிலையை வைத்துள்ளார்கள். ஆனால் நாம் தமிழ்நாட்டில் இதை பார்க்க முடியாது. ஏனெனில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே எதோ காரணத்தால் , நம் முன்னோர்களே சில விஷயங்களை மறைத்து வைத்து விட்டனர்.

எல்லா கோவில்களிலும் நீங்கள் பார்க்கலாம், நந்திக்கு முன்பு ஒரு சிறு கல்  எந்த வித சிலையும் இன்றி இருக்கும். அது குறித்து யாரும் விளக்கம் தருவது இல்லை. அதையும் தாண்டி கேட்டால் , ஒரு சிறு நந்தி செய்து விட்டு தான் இந்த பெரிய நந்தி செய்வார்கள். அந்த சிறு நந்தி இருந்த இடம்தான் இது என்று கூறுவர் . அனால் அது உண்மை இல்லை. எனக்கு இது குறித்து தெரியாது என்று கூறுவதில் பிராமணர்களுக்கு எப்போதும் விருப்பம் இல்லை. எல்லாம் தெரியும் என்று காட்டி கொள்ளும் முயற்சியில் பல தவறான தகவல்களை கொடுத்துள்ளனர்.

இதோ தமிழ் நாடு தாண்டி , ஆமையும் , நந்தியும் உள்ள சிவாலயங்கள்



இது ஜெஜூரி கோவில் , பூனே, மஹாராஷ்டிரா மாநிலம்.இந்தியா


nandi statue with tortoise க்கான பட முடிவு

சோமநாத குடி , லட்சுமீஸ்வரர்.- கர்நாடகா .
சோமேஸ்வரர் குடி அல்லது சோமா லிங்கேஸ்வரர் குடி.



nandi statue with tortoise க்கான பட முடிவு
அகப்புரா  - அகப்பூர் கர்நாடகா


கேரளத்தில் எல்லா கோவில்களிலும் நாம் பார்க்க  முடியும் கோவில் கொடி கம்பம் முதல் விளக்கு கள் வரை எல்லாம் ஆமையின் மீது தான் அமைந்திருக்கும்.




செம்ம நாத  மகேஸ்வர கோவில் - கேரளம் .



காலபகவதி கோவில் - கொடுங்கோலுர்  - கேரளம்.





அது மட்டும் அல்லாமல் , நாம் கடல் கடந்து பயணித்தோம். அதற்க்கு அடிப்படையாக அமைந்தது மற்றும் வழிகாட்டியாக அமைந்தது இந்த ஆமைகள் தான். எங்கு சென்றாலும் , தனக்கு வழிகாட்டிய ஆமை சிலையை அங்கு அமைப்பதை வழக்கமாக கொண்ட தமிழர்கள், காரணம் கூறாமல் விட்டு விட்டார்கள் போலும்.

அதுதான் இன்று சீனாவில் ட்ராகனாக மாறி உள்ளது.







பார்பீடன் நகரம் . பீஜிங். சீனா .




சிங்கப்பூர் விலங்கியல் பூங்கா


nandi statue with tortoise க்கான பட முடிவு

நான்கு கைகளுடன் யமுனா தேவி நாகர்கள் அருகில் இருக்க ஆமையின் மீது பயணம் செய்கிறாள் .




ஜெர்மனி . பெர்லின் .டௌன்ஸ்கேப்



ஆமை வடிவ செயற்கை நீர்வீழ்ச்சி . ரோமாபுரி .



காளிபகவதி கோவில் - கொடுங்கல்லூர் - கேரளம்


இலக்கிய கோவில், வான் மிஐ - ஹனோய் - வியட்நாம்




பெலிஸி - சென்ட்ரல் அமெரிக்கா


இது அமை வடிவில் உள்ள மலை அல்லது ஆமைகள் வாழ்ந்த மலை-
தாய்லாந்து.

உலகம் முழுக்க ஆமைகள்  குறித்து எதுவும் சொல்லாமலேயே அதன் புகழ் பரப்பிய தமிழன்,

அதன் நுடபங்களை எல்லோரிடமும் மறைத்திருக்கிறான் எனில் ,  அமைகளுக்கு எதோ அழிவு நேர இருந்திருக்கிறது.  அவற்றை காப்பாற்ற அவன் எடுத்த முயற்சிகளை நாம் வீணாக்காமல் ,

நம் பெருமைகள் அறிந்து ஆமைகளை அழிவில் இருந்து காப்போமாக !

காளைகள் மட்டுமே நம் குலம் காத்தவை அல்ல.

ஆமைகளும்தான் !



4-2-2017 அன்று காலை 4 மணிக்கு சென்னை காமராஜர் துறைமுகத்தில் , இரண்டு கப்பல்கள் மோதி கொண்டன .

எந்த உயிர் சேதமும் இல்லை .என்று கூறுகிறார் காமராஜர் துறைமுக தலைவர்.

எனில் அங்கு செத்து கிடைக்கும் ஆமைகள் உயிர்கள் இல்லையா ?

கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி 2017 அன்று முதல் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தின் அடிப்படையில் , ஜல்லிக்கட்டு சட்டமாக்க பட்டது .

இதில் குடியரசு தலைவர் 27.1.2017 அன்று கையொப்பம் இட்டார் .

ஆனால் அதன் விளைவுகளை தமிழகம் மறுநாள் காலை எண்ணூர் துறைமுகத்தில் சந்தித்தது .

ஆம் ,


காளைகளை காப்பாற்றி விட்டு , ஆமைகளை இழந்து விட்டது தமிழகம்!


இடித்த கப்பல் பிரிட்டிஷ் ராணிக்கு சொந்தமானது. MT B .W .MAPLE . இதன் கொடி இங்கிலாந்து நாட்டு கொடி 
மற்றொரு கப்பலின்  பெயர் MT .dawn காஞ்சிபுரம் . இதன் கொடி இந்தியா கொடி .ஆனால் இது LPG கொள்கையின் கீழ் வேறொரு நாட்டுடன் பதிய பட்டுள்ளது 
நடந்தது விபத்து இல்லை . விபத்து நடந்ததாக ஈரானில் பதியப்படவில்லை என ஒரு தகவல் கூறுகிறது . எனில் என்ன நடந்தது காமராஜர் துறைமுகம் மட்டுமே அறியும் ! கப்பல்களுக்கு எந்த சேதமும் இல்லை . ஆனால் கழிவால் நிறைந்தது வங்காள விரிகுடா ! 







செத்து மிதந்தன ஆமைகள் !
காளைகள் பற்றி மட்டும்தான் காப்பாற்றினோம் 
ஆனால் ஆமைகளை இழந்து விட்டோம் !

இந்த இரண்டும் தமிழரின் இவ்விரு கண்கள் !
எவனுக்கோ தெரிகிறது !
எதற்கு பதில் எதை அழிக்க வேண்டும் என்று !

ஆனால் நமக்கு ? 


ஆமைகள் நம்மை பார்த்து கேட்ப்பது போல் உள்ளது !

தமிழா எனை காக்க மாட்டாயா ?




Thursday, 26 January 2017

அரிசியும் மருந்தும்

சில சமயங்களில் விஷம் மருந்தாகிறது
பல சமயங்ககளில் மருந்துதான் விஷமாகிறது.

இவை நமக்கு வேண்டாம்.
உணவையே மருந்தாக்குவோம் என்கிறது தமிழ் மரபு .

நாம் உண்ணும் அரிசியே எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.
ஆனால் நாம் உண்ண வேண்டிய அரிசி எதுவென இன்று நமக்கு தெரியாமல் போனதுதான் வருத்தம்.

இப்போது தெரிந்து கொள்வோம் .

இந்தியாவில் மட்டும் லக்ஷக்கணக்கான நெல் ரகங்கள் ஒரு காலத்தில் இருந்துள்ளன.

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் வேலையை அடி முதல் முடி வரை காட்டியதாலும் , சுதந்திரத்திற்கு பிறகு அவன் வேலையை தொடர்ச்சியாக நம்மால் தேர்தெடுக்கப்பட்ட இந்தியர்களே பசுமை புரட்சி என்ற பெயரில் செய்ததாலும் ஏறக்குறைய எல்லா நெல் ரகங்களையும் இழந்து விட்டோம் 

மீண்டும் திரு .நம்மாழ்வார் அவர்களின் முயற்சியாலும் திரு.ஜெயராமன் மற்றும் திருமதி .உஷா அவர்களாலும் கிட்டத்தட்ட 600 நெல் ரகங்கள் மீட்கப்பட்டுள்ளன .

அத்தைகைய நெல் ராகங்கள் அனைத்தும் மருந்தே.!

அவற்றில் ஒரு சில:rice pic க்கான பட முடிவு


மாப்பிளை சம்பா :
     உடலை பலபடுத்தும் மாமருந்து .
திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

கவுணி அரிசி :
     புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி .
இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .

சிவப்பு கவுணி அரிசி :
     புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி .
இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது .

குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .

சேலம் சன்னா :

     கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய அரிசி .
குழந்தை பேரு நன்முறையில் நடக்கும் .
களைப்பில்லாமல் வேலை செய்ய உதவும் .
இது நாய் கடி விஷத்தை முறிக்கும் .

பூங்காற் அரிசி :

     மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி .
தாய்பால் சுரக்கும் .

கட்ட சம்பா அரிசி :

    நோய் எதிர்ப்பு சக்தி தரும் .


சிங்கினி கார் அரிசி :
     எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி .
உடல் நலம் பெற உதவும் .

இலுப்பைபூ சம்பா அரிசி :

     சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து .
நரம்பு பிரச்சனையின் மருந்து .

காட்டுயானம் அரிசி :

     இந்த அரிசியில் காஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .

சூரகுருவை அரிசி :

     நோய் எதிர்ப்பு சக்தி தரும் .

பனங்காட்டு குடவாழை அரிசி :

     தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி .
அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் .

கருடன் சம்பா :

     நோய் எதிர்ப்பு சக்தி தரும்.
சாப்பாடு மற்றும் பலகார அரிசி .

கருங்குறுவை அரிசி :

இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம் 
    
 இது ஒரு மாமருந்து.
இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து .

குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து.

உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது .

இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு 'அன்ன காடி 'என்று பெயர் .இது காலராவிர்க்கான
மருந்து .

இது கிரியா ஊ க்கியாக உள்ளது .


கார் அரிசி :
 
     சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் களுக்கும் மருந்தாகும்.

தங்க சம்பா :

     இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.

தூயமல்லி அரிசி :

     மேல குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி . கட்ட சம்பா தவிர்த்து .
தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது .
மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி .
தெவிட்டாத , நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி .

இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது.

மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது .

பாரம்பரிய அரிசி உண்போம் . உடலை வளர்ப்போம் . உயிரை காப்போம் .

( தொகுப்பாளர் ரா. பொன்னம்பலம் அவர்களின் 'நெல் அதிகாரம் 'என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது )

மேற்காணும் அரிசி வகைகள் அனைத்தும் , எல்லா இயற்கை உணவு அங்காடிகளில் கிடைக்கிறது . விலை சற்று அதிகம் . மருத்துவரிடம் கொடுப்பதில் பாதியை விவசாயிக்கும் கொடுக்கலாமே !


Wednesday, 18 January 2017

பத்திரிகைகள் vs சமூக வலைத்தளங்கள் !

FOURTH எஸ்டேட் VS FIFTH எஸ்டேட்



கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் மட்டும் அல்ல , உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு வேண்டும் , என்றும் அதன் வழியாக காளை மாடுகளும் அதன் மூலம் அடுத்த தலைமுறையும் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு , போராடி கொண்டு இருக்கிறார்கள் .

இந்த தருணத்தில் இந்த  FOURTH எஸ்டேட் பற்றி தெரிந்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன்.

இந்தியாவை பொறுத்த வரை FOURTH எஸ்டேட் எனப்படுவது பீரொக்ரசி
 ( BEAUROCRACY ) அப்போ மீதி 3 எஸ்டேட் என்னனு கேட்காதீங்க ? அது இந்தியாவின் ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இப்படி மறைத்து வைக்க பட்ட விஷயங்களைத்தான் , சிலர் கையில் வைத்து கொண்டு இந்தியாவில் தவறான ராஜ்ஜியம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அதை விடுங்க ! நாம் இது குறித்து பின்பு பேசுவோம்!

இப்போ உலக அளவில் FOURTH எஸ்டேட் என்றால் அது பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் தாங்க !

இது எப்போது அறிவிக்கப்பட்டது என்று கேட்டால் நாம பிரெஞ்சு புரட்சி பற்றி பேச வேண்டும் .

பிரெஞ்சு புரட்சி நடைபெற்றது மே 5 1789 முதல் நவம்பர் 9 1799 வரை தாங்க !

அது என்ன பிரெஞ்சு புரட்சி என்றால் மக்களாட்சி கோரிக்கையின் அடிப்படை போர் இது. இதை நடத்தியவர்கள் jews இன மக்கள். அவர்கள்தான் இன்று அனைவரையும் ஆள துடித்து கொண்டு இருக்கிறார்கள் .





இதில் முதல் எஸ்டேட் என்று வழங்கப்பட்டது கில்லர்ஜி ( CLERGY) எனப்படும் மதகுருமார்கள் பேசும் சர்ச்சுகள் .போராட்டம் என்ற உணர்வை தூண்டிவிட்டது இந்த சர்ச்சுகள்தான் . ஆனால் நேரடியாக இல்லை. ஞாயிறு தோறும் சர்ச்சுக்கு வர வேண்டும் என்ற எழுதப்படாத கட்டளை , அன்றுதான் உருவாகியது . அங்கு பாதிரிமார்கள் அவர்களுக்கு கொன்செல்லிங்
( COUNSELING ) என்று சொல்லப்படும்  மூளை சலவை செய்வார்கள். இதை நன்மை என்றோ , தீமை என்றோ எடுத்து கொள்ளலாம். இந்த உலகை வெகு காலம் வரை ஆட்டி படைத்தது இந்த மதகுருமார்கள்  தான் .



2 வது  எஸ்டேட் என்றால் நொபிலிட்டி . ( NOBILITY )இதில் கூட்டம் போட்டு மக்களுக்கு அறிவுரை மற்றும் கட்டளைகள் பிறப்பித்தது பணக்கார வர்க்கம்.
பணக்கார வர்க்கம் தனக்கு தேவையான போது எப்படி எல்லாம் மக்களிடம் பேசும் என்பது நாம் சொல்ல தேவை இல்லை .

3 வது எஸ்டேட் காமன்மேன்(  COMMON MAN )எனப்படும் நம்மோடு கலந்து விட்ட மக்கள் கூறும் கருத்துக்கள் . இவைதான் மக்களை ஆட்டிப்படைத்தவை .பிரெஞ்சு புரட்சி வரை .

4 வது எஸ்டேட் எனப்படும் பத்திரிக்கைகள் , பிரெஞ்சு புரட்சியில் சாதனை புரிந்தன .

இந்த 4 ஆவது எஸ்டேட் தான் நேற்று வரை , நமக்கு தகவல்கள் கொடுத்தன.

மேற்காணும் நான்கு எஸ்டேட்டுகளும் நம் நாட்டின் சுதந்திர போராட்ட காலத்திலும் நல்லவையாகவும், கெட்டவையாகவும் செயல்பட்டன.

ஆனால் 


இன்று 5 வது எஸ்டேட் உருவாகிவிட்டது.

அது தான் சமூக வலைத்தளங்கள் .ப்லோகுகள் 






இதோ ஜல்லிக்கட்டு போராட்டம் !
உலகெங்கும் உள்ளவர்களை , தமிழ்நாட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

இந்த 5 வது எஸ்டேட்டை முறியடிக்க ,மற்ற 4 எஸ்டேட்டுகளும்
தனது எதிர் ப்பை தெரிவித்து வருகின்றன.

முக்கியமாக, சர்ச்சுகள் , காளை த்திருவிழா கிறிஸ்தவ மதத்திற்கு ஆபத்து என்று போராடுகிறது.

பணக்காரர்களோ தனது லாபம் பாதிக்க படும் என்று சட்டத்தை வளைத்து போராடுகிறார்கள்.

இதில் அரசியல் பேசுபவர்களும்,

இவர்களுக்காகவே வாழ்ந்த பத்திரிகைகளும் ,

சமூக வலைத்தளங்கள் மீது எங்கேனும் குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று போராடுவதும் , அதற்காக தவறான செய்திகளை தருவதும் என்று வழக்கமாக கொண்டுள்ளன.

இது வெல்லும் !

வென்றால் 

தொழிற்புரட்சி தோற்கும்  

புசுமை புரட்சி தோற்கும் 

அரசியல் தவறுகள் தோற்கும் 

தோற்கட்டும் இதுவரை ஆண்ட நான்கு எஸ்டேட்டுகளும் !

வெல்லட்டும் 5 ம எஸ்டேட் !

வெற்றுக்கான போராட்டம் அல்ல இது 

வெற்றிக்கான  போராட்டம் 

வாழ்க 5 ம் எஸ்டேட்! 

வளர்க தமிழும், தமிழனும் !


Tuesday, 17 January 2017

சினிமாவை விரட்டிய ஜல்லிக்கட்டு !

Peta வை எதிர்த்தும், ஜல்லிக்கட்டு நடத்த கோரியும் மதுரை அலங்காநல்லூரிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் நேற்று காலை ( 16 . 1.2017 ) முதல் நடைபெறுகிறது.

இது காளைகளுக்காக 
இளங்காளையர் நடத்தும் போராட்டம்!
சமூக வலைத்தளங்கள் 
சாதித்த போராட்டம்!
தமிழ்நாடு குறித்து 
அரசியல்வாதிகள் எல்லோர் மனதிலும் 
சலனத்தை ஏற்படுத்திய போராட்டம்!
இந்த சலனம் தான் சுப்ரமணிய சாமி போன்றோரை 
தமிழ் மக்கள் குறித்து 
கேவலமாக பேச தூண்டியது!
அந்த கேவலமானவர்கள் இப்போ நமக்கு 
வேண்டாம் !











இந்த போராட்டத்திற்காக ,
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பேரவையினர் 
அழைப்பு விடுத்து இருந்தனர். அதன் அடிப்படையில் 
தமிழ்நாடு முழுக்க இளைஞர்கள் குழுமி 
மிகுந்த அமைதியுடனும் 
நீருமின்றி , சோறுமின்றி 
வாடிவாசலில் கூடி 
போராடும் போது , இதை சிறு சலனமென நினைத்து 
காவல துறையை ஏவிவிட்டு 
வேடிக்கை பார்த்த தமிழக அரசு , மத்திய அரசு 
காவல்துறையும் கூட 
மக்களின் மனதில் இருந்து தூக்கியெறிய பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க !

நேற்று வரை ,
இது குறித்து பேசாத நடிகர் கூட்டம்,
அரசியல் கூட்டம் திடீரென ,
எதோ கோமாவில் இருந்து எழுந்ததுபோல் 
வாடிவாசல் நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது.

கருணாஸ்  என்றும் நடிகன் 
தற்போது, ஜெயலலிதாவால் சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்கப்பட்ட 
இந்த கருணாஸ் 
இரவு 11.50 மணிக்கு , 
கடுங்குளிரில் போராட்டத்தில் இருந்த மாணவர்ககளை 
சந்தித்து பேசுகிறார்.








பிறகு விடியற்காலை அங்கிருந்த மாணவர்கள் 
காவல்துறையால் கைது செய்யப்பட 
இத்தோடு இந்த போராட்டம் முடியப்போகிறது 
என்று எண்ணிய நடிக கூட்டம் , அரசியல் கூட்டம் 
அதிர்ந்து போக ,
கைது செய்தவர்களை ,விடுவிக்க கோரியும் 
பீட்டாவை தடை செய்ய கோரியும் 
மீண்டும் மாணவர்கள் 
தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் 
சென்னையின் மெரினாவிலும்
போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக 
சுடாலின் போராட்ட காலத்திற்கு வருகிறார்!
வாடிவாசலுக்கு 
இசை அமைப்பாளர் பிரகாஷ் குமார் 
வருகிறார்!
சரத்குமார் 
வருகிறார்!
சூர்யா ஆதரவு தருகிறார்!
ஆர்யா மன்னிப்பு கேட்கிறார்!
திரிஷா , நான் தவறாக எதுவும் பேசவே இல்லை என்று மழுப்புகிறார்!
சீமான் , அமீர், கவுதமன் 
இவர்களெல்லாம் ஏற்கெனவே களத்தில் இருந்த போதும் 
வாடிவாசலிலேயே தங்குகிறார்!

இன்னும் பலர் 
வாடிவாசல் நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறார்!

சொல்ல முடியாது!
ரஜினிகூட 
நாளை களத்தில் 
இருக்கலாம்!

சினிமா மோகத்தில் ,
மிதந்த அந்த பழைய தலைமுறை இல்லை இது!

அவர்கள்கூட ,
சினிமாக்காரன் ஒரு துரோகி என்று தெரியாமல்தான் 
ரசித்தான் !

இனி அதுவும் நடக்காது !
சினிமா உலகமே 
உன் நடிப்பை எல்லாம் 
திரையோடு நிறுத்தி விடு !
இல்லையேல் 
திரைக்கு பின்னால் கூட 
நீ நிற்க 
இடமில்லாமல் செய்வோம் !
இது ரஜினி பார்த்த கூட்டம் இல்லை!
எம்ஜிஆரை ரசித்த கூட்டம் இல்லை !
ஜெயலலிதாவை அரியணையில் 
அமரவைத்து கூட்டம் இல்லை!

தனித்தமிழ் கூட்டம்!
தன்மான கூட்டம்!
தன்னம்பிக்கை கூட்டம் !
தமிழையும் வாழவைத்து 
தமிழோடு சேர்ந்து 
தன தலைமுறையை 
வாழவைக்க போராடும் கூட்டம்!

காளைகளும் ,
எம் இனம்!
அதை வாழவைக்க போராடும் 
இந்த போராட்டத்தில் 
சினிமாவே 
மிதிபட்டு நசுங்கிவிடாதே !

சினிமாவே !
மறந்து விடு தமிழர்களை!
ஓடிவிடு 
தமிழகத்தை விட்டு  !



Monday, 16 January 2017

இந்தியாவின் பூர்வீக நடனங்கள்

wangala laho க்கான பட முடிவு


இந்த நடனம் வங்காள  லஹோ எனப்படும் மேகாலயா மக்களின் பூர்விக நடனம் .


tippani dance க்கான பட முடிவு

இது திப்பாணி நடனம் . குஜராத்தி மக்களின் பூர்விக நடனம் .




Koodiyattam


இது கூடிஆட்டம் அல்லது கூத்து ஆட்டம்.கேரளா மக்களின் பூர்வீக நடனம் .
அதாவது தமிழ் கலாசாரம் . கூத்து என்றால் நாடகம் என்று பொருள். ஆட்டம் என்றால் ஆடுதல் என்று பொருள் . இதன் கட்டமைப்புபிற்காலத்தில் மாற்றப்பட்டது.


sadir dasi attam க்கான பட முடிவு

இதோ  இது தான் சதிர் ஆட்டம். இது எந்த ஊர் நடனம்  தெரியுமா ? தமிழ்நாட்டின் பூர்வீக நடனம். அனால் இன்று இதன் பெயர் மாறி விட்டது . அதன் பெயர் பரதநாட்டியம். மாற்றியவர் ருக்மிணி தேவி  அருந்தலே . 1935ம் ஆண்டு வரை இதன் பெயர் சதிர் ஆட்டம் தான். அம்மையார் இதன் பெயரை பாரத நாட்டியம் பெயர் மாற்றி , இந்தியாவிற்கு சொந்தமாக்கினார் . அருந்தலே எனும் பிரிட்டிஷாரை மணந்தார். இவர் 1935ல் விலங்குகள் நல அமைப்பின் உறுப்பினர். ருக்மிணி தேவியும் விலங்குகள் மீது    அன்பு கொண்டவர். த்ரிஷா போல் !



 பாவ்ரி ஆட்டம் . மகாராஷ்டிரா மக்களின் நடனம். இவர்கள் பாம்பாட்டிகள் .


இது தெறடாளி நடனம். ராஜஸ்தானின் நடனம் .


Tuesday, 10 January 2017

ப்ளூ சிப் கம்பெனிகள்

 ப்ளூ சிப்  என்றால் , தரமானது . நீண்ட வாழ்வு கொண்டது என்று பொருள்.

அப்போ ப்ளூ சிப் நிறுவனங்கள் என்றால் , நமக்கு புரிந்திருக்கும்  நல்ல நிறுவனம். தரமானது என்று !

இதை பொருளாதார அடிப்படையில் இப்படி கூறுகிறார்கள் . ப்ளூ சிப் என்ற அடிப்படையில் ஒரு நிறுவனம் வருகிறது என்றால் அதன் லாபம் அதிகமாக உள்ளது . அந்நிறுவனத்தில்  நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் எந்தவித பொறுப்பும் ( கடனும் ) இல்லை என்று அர்த்தம்.

இந்த பொருளியல் கோட்பாடுகளின் அடிப்படையில் , ப்ளூ சிப் நிறுவனங்களில் தைரியமாக நாம் பங்குகளை ( shares )  வாங்கலாம் . அதன் டிவிடெண்ட் ( லாபம் ) குறையாது . மற்றும் பங்குகளின் விலையும் வீழ்ச்சி அடையாது .

இந்தியாவில் உள்ள தலை சிறந்த 10 ப்ளூ சிப்  நிறுவனங்களின் பெயர்கள் இதோ : ( இது 30.4.2015 அன்று இருந்த நிலவரப்படி )

1. T C S ( டாடா கன்சுலேட்டன்சி சர்விஸ் )

டாடா நிறுவனம் சுதந்திரம் போராட்டம் நடந்த காலத்திலும் , சுதந்திர இந்தியாவிலும் கோலோச்சி இருப்பது இந்நிறுவனம். இந்தியாயாவின் பல்வேறு மலை பிரதேசங்கள் இதற்க்கு சொந்தம் . எப்படி ? இயற்கை ஒரு தனிப்பட்ட நபருக்கு சொந்தமாகும் . அருவி எல்லாம் சொந்தமாகுமா என்ன ? கட்டிட மூலப்பொருள்கள் அனைத்தும் உற்பத்தி செய்கிறது .
தேயிலை உற்பத்தி பல மலைகளை சூழ்ந்து நிற்கிறது . நம்மாழ்வார் கூறுகிறார் , என்று தேயிலைக்காக மலைகளின் மீது இருந்த காடுகள் அழிக்கப்பட்டனவோ , அன்றுதான் நாடு மழை என்ற வளத்தை இழக்க ஆரம்பித்தது என்று . தங்க முதலீடும் மக்களை தவிப்பில் ஆழ்த்தி கொண்டு இருக்கிறது .

                லாபம்     3.1 டாலர் பில்லியன்


                முதல்      482, 571 .81 கோடி ரூபாய் .


2.  ரிலையன்ஸ் நிறுவனங்கள்

      இதன் முக்கிய தொழில்களில் ஒன்று ஹைட்ரோகார்பன் ஆய்வு , பெட்ரோகெமிக்கல்ஸ் . பெட்ரோலிய சுத்திகரிப்பு , தொலைத்தொடர்ப்பு   கப்பல் கட்டுதல் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைப்பது . ( இந்நிறுவனம் கடன் வாங்கி இருப்பதாக வங்கிகள் கூற , கொடுக்க வேண்டிய அளவிற்கு கடன் ஏதும் இல்லை என இந்நிறுவன பைனான்சியல் ஸ்டேட்மென்ட் கூறுகிறது )


லாபம்  : 28731 கோடி ரூபாய்

முதல்  : 279, 064 கோடி ரூபாய்


3.  O N G C  ( ஆயில் அண்ட் நச்சுரல் கேஸ் கார்பொரேஷன் )

உலகிலேயே நச்சுரல் எனர்ஜி யை வெளிக்கொணரும் 250  நிறுவனங்களில் இது 21 வது இடத்தை பெற்று உள்ளது. ( மண்ணில் உள்ள பொருள்கள் மக்கள் அனைவருக்கும் சொந்தம் . ஆனால் இதை அதிகம் சுரண்டியது யார் என்பதில் இந்நிறுவனத்திற்கு முன்னுரிமை . இருந்தும் இந்தியா ஆயிலை இறக்குமதி தான் செய்கிறது )

11.2.2014 அன்று மஹா ரத்னா , நவ ரத்னா என்ற விருதினை பெற்று உள்ளது .

அதென்ன ரத்னா விருது ?  ( 2010 முதல் அரசு அறிவித்தது )


தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் லாபம் ஈட்டும் நிறுவனத்திற்கு மினி ரத்னா I விருது வழங்கப்படும் . இந்த விருது பெற்றவர்கள் , அரசின் அனுமதி பெறாமலேயே 300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் 30  கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்திற்கு மினி ரத்னா II விருது வழங்கப்படும் . இவர்கள் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யலாம் .

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் 5000 கோடி ரூபாய் லாபம் ஈட்டினால் மஹா ரத்னம் விருது வழங்கப்படும் .

இவ்விருது பெற்றவர்கள் 1000 கோடி முதல் தனது மொத்த மூல தனத்தில் 15% வரை முதலீடு செய்யலாம் .

ரவரத்ன விருது என்பது இந்நிறுவனம் தனது  முதலில் 60% லாபமாக காட்டுகிறதோ ( வரிக்கு முன்பு ) அந்நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

இந்த வகையில் O N G C  நவரத்ன விருதை பெற்றுள்ளது .

முதல் : 2 60 086 கோடி ரூபாய் .






4. I T C ( இம்பீரியல் டொபாக்கோ கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் )

உணவு பொருள் உற்பத்தி மற்றும் இன்போர்மஷன் டெக்னாலஜி , அழகு சாதனா பொருள் உற்பத்தி இதன் பிரதான தொழில் ஆகும் .

( புகை பிடிப்பது கேடு தரும் என்று விளம்பரம் செய்யும் அரசு , இந்நிறுவனத்தை தடை செய்திருக்கலாமே )

முதல் : 258, 380 கோடி ரூபாய்

5. H D F C ( ஹௌசிங் டெவெலப்மென்ட் அண்ட் பைனான்ஸ் கார்பொரேஷன் )

இந்தியா முழுவதும் 3659 கிளை களையும் , 2287 ATM மையங்களையும் பெற்றுள்ளது . பைனான்ஸ் ஆசியா பூல் நடத்திய ஆய்வின் படி ( பெஸ்ட் மேனஜ்டு பப்ளிக் லிமிடெட் இன் இந்தியா ) என்ற விருதை பெற்றது .

ஹௌசிங் கடன் பெற்றால் வரி விலக்கு வழங்குகிறது இந்தியா . இந்நிறுவனம் வளர்ச்சி பெறுகிறது .

முதல் : 247, 842 கோடி ரூபாய் .






6. COAL INDIA 

உலகம் முழுவதும் பயன்படுத்தும் நிலக்கரியில் 81%  நிலக்கரி இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது . கல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய மாநில அரசு சார்ந்த  நிறுவனம் இது . பங்காளதேஷோடு , மேற்கு வங்கத்தை இப்போதும் இணைப்பது இந்நிறுவனம். ( இருந்தும் இந்தியா நிலக்கரி இறக்குமதி செய்கிறது )

இந்திரா காந்தி ராஜ் பாஷா விருதை பெற்றுள்ளது .

மொத்த தொழிலாளர்கள் : 337 900 பணியாளர்கள்

முதல் : 229, 126 கோடி ரூபாய்






7. SUN PHARMA 

150 சந்தைகளை உலகம் முழுவதும் பெற்றுள்ளது . 45 இடங்களில் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது . 30000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் .
3000 வகையான உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
( மருந்து வணிகம் நோயை பெருக்குகிறது )

இதன் நிறுவனர் திலிப் சங்கவி சிறந்த நிறுவனர் என்ற விருதை 2014 ம் ஆண்டு பெற்றார் .

முதல் : 225, 898 கோடி

8 . INFOSYS 

இது உலகம் முழுவதும் 50 நாடுகளில் இயங்கி வருகிறது .
இதன்  மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 176 000 துக்கும் மேல் !
லாபம் : 8.7.பில்லியன் டாலர்
முதல் : 223, 062 கோடி ரூபாய்

9. SBI ( ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா )

உலகின் 73 வது மிகப்பெரிய வங்கி இது .
முதல் : 204, 098 கோடி ரூபாய்

10.  ICICI  ( இண்டஸ்ட்ரியல் கிரிடிட் இன்வெஸ்ட்மென்ட் கார்பொரேஷன் ஆப் இந்தியா )  
தனியார் வங்கிகளில் மிகப்பெரிய வங்கி இது .
இதன் கிளைகள் :4050
ATM மையங்கள் : 12589

முதல் : 192,063 கோடி ரூபாய்


         இவை மட்டும் அல்ல , இன்னும் சில பல நிறுவனங்கள் ப்ளூ சிப் என்ற தர சான்றிதழோடு , இந்தியாவில் , இந்தியா என்ற பெயரையும் இணைத்து கொண்டு , இந்தியா வின் சொந்த நிறுவனம் என்று மக்கள் நம்பும் வண்ணம் , இந்தியாவில் இயங்கி வருகின்றன .



Monday, 2 January 2017

காந்திக்கு முன் இந்திய மஹாத்மா !

சுதந்திர இந்தியாயாவில் , மட்டும் அல்ல உலகம் முழுக்க மஹாத்மா என்றால் அது காந்தியடிகளையே கூறுவார்.

ஆனால் அவருக்கு முன்னாலேயே , இந்தியா ஒரு மஹாத்மா வை பெற்றிருந்தது .

அவர் தான் ஜோதி  பாய் பூலே  ஆவார் . ( 1827 - 1890 )


                          ஜோதி பாயும் அவரது மனைவி சாவித்திரி பாயும் .



1827 ஆம் ஆண்டு காணவாடி ( தற்போது மஹாராஷ்ட்ரா ) என்ற இடத்தில பிறந்த ஜோதி பாய் , தனது 12 வது வயதில் , 9  வயது பெண்ணாகிய சாவித்திரி பாயை மணந்து கொண்டார். 

ஆனால் அவர் தனது மனைவிக்கு , எழுத , படிக்க கற்று கொடுத்தார்.

அக்கால கட்டத்தில் , வயது வரும் முன்னே விதவை கோலம் என்பது சர்வ சாதாரணமாக இருந்தது மஹாராஸ்ராவில் .
ஜாதி கொடுமைகள் 

உயர் ஜாதி பெண் என்றாலும் , விதவை கோலம் , கொடூரத்தையே கொடுத்தது .

தனது 21 வது வயதில் , 1848 ம் ஆண்டு அவர் படித்த ஒரு புத்தகம் , மாபெரும் மாற்றத்திற்கு வழிவகுத்தது . அந்த புத்தகம் தாமஸ் எழுதிய " ரைட்ஸ் ஆப் மேன் "

அதே ஆண்டு இவரும் ,இவர் மனைவி  சாவித்திரி பாயும் சேர்ந்து , ஒரு பள்ளி ஆரம்பித்தனர் .அது பெண்களுக்கான பள்ளி . இது இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி .

அங்கு ஜாதி கொடுமைகளை எதிர்க்கவும் ,

விதவை மறுமணம் குறித்தும் போதிக்கப்பட்டது. 

அது தாழ்ந்த ஜாதி , உயர்ந்த ஜாதி வேறுபாடுகளை கலைந்தது .

சத்யசோதக் சமாஜ் மதம் 


மத மற்றும் ஜாதியின் அடிப்படியில் நடக்கும் , தீண்டாமை , விதவை கொடுமைகளை தீர்க்க , வேண்டி தானே ஒரு புதிய மதத்தையும் உருவாக்கினார். அந்த மதம் தான் சத்யசோதக் மதம் .

தலித் 


தலித் என்றால் மராத்தி மொழியில் உடைத்து விடு , நசுக்கி விடு என்று பொருள் . இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் ஜோதி பாய் தான் . தீண்டாமை என்னும் கொடுமை நிகழும் போதெல்லாம் அதை உடைத்து விடு என்று குரல் எழுப்பினார்.


பல்வேறு புத்தகங்களை படைத்த இவருக்கு மஹாத்மா என்ற பட்டத்தை
 1888 ம் ஆண்டு v .k .வந்தேங்கர் என்பவர் வழங்கினார்.

தன வாழ்நாளின் இறுதி வரை பெண்ணுக்கு மரியாதை கொடுத்து , பெண் கல்வி பேசி , விதவை திருமணங்கள் நிகழ்த்தி , ஜாதியில் இருந்து வெளியே வா என்று அழைத்த ஜோதி பாய் , அவரது எண்ணத்திற்கு ஏற்றார் போல் , தனது மனைவிக்கு முழு சுதந்திரம் கொடுத்து , அவரையும் தனது பயணத்தில் பங்கெடுக்க வைத்தார்.







இன்று மஹாராஷ்டிரா மாநிலம் , இவர்கள் இருவருக்கும் முழு மரியாதையும் செலுத்தி கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் பின்னாளில் நடைபெற்ற , அத்தனை புரட்சிக்கும் அடிப்படையாக வாழ்ந்தர்கள்தான் 

ஜோதி பாயும் , சாவித்திரி பாயும் !

3.1.2017 சாவித்திரி பாயின் பிறந்த நாள். 

நாமும் அந்த மகாத்மாக்களை வணங்க கடமைப்பட்டுள்ளோம்.!





 ! 

Monday, 28 November 2016

ரொக்கமில்லாத வர்த்தகம் சாத்தியமா ?

நேற்று 2016 நவம்பர் 27 அன்று ,இந்தியா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் ரொக்கமில்லாத வர்த்தகம் பற்றியும் , அதற்கான இளைஞர்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறினார் .
அதன் சுருக்கம் :

 அவர் கூறியிருப்பதாவது

 இந்த ஆண்டு , இந்தியா ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினேன் என்று கூறியுள்ளார் .
காஷ்மீர் பஞ்சாயத்து தலைவர்கள் பலர் ஒன்று கூடி ,அவரை சந்தித்து பெருமை படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
500 , 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நோட்டாக அறிவித்துள்ளதால் , 4 பெண்கள் ஒன்று கூடி 2000 ரூபாய்க்கு பொருள்களை வாங்கி கொண்டு , அதன் செலவுகளை வீட்டில் வந்து பங்கிட்டு கொண்டதாகவும் ,
பீகார் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு A T M இயந்திரம் வேண்டும் என்றதால் அதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் ,

இவ்வாறு மக்கள் கேட்பதால் , நாட்டில் உள்ள மக்கள் டிஜிட்டல் முறைக்கு மாற தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் upi ,e -purse , rupay பற்றியும் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு வேண்டும் என்றும் , அதற்காக ஒவ்வொரு இளைஞரும் , ஒரு நாளைக்கு 10 குடும்பகளுக்கு , ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பற்றி சொல்லி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் .

பிரதமரின் உரைக்குள் பல விஷயங்கள்  உள்ளன .:

( ஒரு சராசரி இந்தியனின் சிந்தனை இது )

1. ரொக்கமில்லாத வர்த்தகம் நடைபெற எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும். ( தற்போது இந்தியாவில் 22 கோடி மக்கள் மட்டுமே ஸ்மார்ட் போன் பயன்படுகின்றன. இது இந்திய மக்கள் தொகையில் 17% மட்டுமே ஆகும் .மீதம் உள்ள தேவைகளை நீக்க முதியவர்கள் , குழந்தைகள் இவர்கள் எண்ணிக்கை போக , குறைந்த பட்சமாக ஒரு போன் 5490 ரூபாய் என்று கொண்டாலும் 27450 கோடி ரூபாய் ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு லாபமாக போய் சேரும் . நம் மக்கள் அத்தனை செலவு செய்வார்களா ?)

2.  இந்த வர்த்தகம் குறித்து வணிகர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்க வேண்டும் . இது அரசின் கடமை.

3.  கையெழுத்து கூட போட தெரியாமல் , வணிகம் செய்பவர்கள் தான் , இந்தியாவில் அதிகம் . இவர்களுக்கு ஒரு வழி கூற வேண்டும்.

4.  ஸ்மார்ட் போன் கையில் இருப்பதை விட , ரொக்கமில்லா வணிகம் தொடர்பான ஆப் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும்.

5. குறிப்பாக எல்லா இடங்களிலும் வை பை வசதி இலவசமாக கிடைக்க வேண்டும் . ( குறைந்த பட்ச இணைய வசதி செய்வதாயினும் மொத்த செலவு 35000 கோடி ரூபாய் ஆகும் ) இதன் மூலம் சராசரி இந்தியனின் மாதாந்திர வருமானத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் அதிக செலவு ஆகும் .

6 .ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மாதந்தோறும் , வங்கிகள் பிடிக்கும் சேவை வரி கட்டணத்தை நிறுத்த வேண்டும்.( குறைந்த பட்சமாக 100 ரூபாய்க்கு 2 ரூபாய் வீதம் இந்தியாவின் மொத்த வர்த்தகத்துக்கும் அமெரிக்கா பெரும் லாபம் 1700 லட்சம் கோடி என்பதையும் அறிந்து கொள்வோம். இதன் மூலம் இந்தியாவின் அந்நிய செலாவணி குறைந்து பணமதிப்பும் குறையும் )

7. ஒருவர் பணத்தை , அவரது password பயன்படுத்தி , வேறு ஒருவர் எடுக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும். ( இது சார்ந்த வழக்குகள் பல நீதிமன்றம் வந்து செல்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. சராசரி இந்தியன் எப்படி அதை ஏற்பான் ? )

india pic with black money க்கான பட முடிவு


8. தனது வீட்டின் எதிர்புறத்தில் உள்ள பால் காரருக்கோ , கீரை விற்பவருக்கோ , பணம் கொடுக்க இடைத்தரகர் எனும் வங்கியை தேடுவது , எல்லோரையும் தனிமை படுத்தும் நடவடிக்கை போல் மாறும் .

9. அது மட்டும் அல்லாமல் , எவரும் இதை விரும்ப மாட்டார்கள்.

10. இதன் குழப்ப , முறைமைகளானது பண்டமாற்று முறைக்குத்தான் அழைத்து செல்லுமே ஒழிய , வங்கிகள் மூலம் நடைபெறுவது சற்று சாத்தியப்படாது.

11. என் வீடு , என் ஊர் , என் உறவுகள் , எனக்கு தெரிந்த மளிகை கடைக்காரர் , என் வீட்டோடு ரத்த பந்தம் இல்லாது , உறவு போல் நடந்து கொள்ளும் பால் காரர், என் வீட்டின் விழாக்களுக்கு சமைப்பவர், பாத்திரம் துல க்குபவர் என என் சார்ந்தவர்களோடு நான் செய்து கொள்ளும் ரொக்க பரிவர்த்தனைகளை , எங்கோ இருக்கும் யாரோ ஒருவர் பரிசோதிப்பதும், அவர் அதனை நிர்வகிக்க முற்படுவதும்  மனதளவில் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் வேறு ஒருவர் தலையிடுவது போலும்  உணர்வையே ஏற்படுத்துகிறது.

12. என்னிடம் உள்ள எல்லா பரிவர்தனைகளையும் , வங்கிகள் மூலம் காட்டுவது குடும்ப உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

13. மனைவிக்கு தெரியாமல் , தன உறவுகளுக்கும், தனது நண்பர்களுக்கும் உதவி செய்யும் கணவர்களுக்கும் , கணவருக்கு தெரியாமல் தன தாய் தகப்பனுக்கு பண உதவி செய்யும் மனைவிமார்களும் என எல்லோரும் கோர்ட் வாசலிலே நிற்க வேண்டும் .

14. நம் நாட்டின் பிரச்னை,  எல்லா மக்களும் , வங்கிகளை பயன்படுத்தே தீர வேண்டும் என்பது அல்ல . நாட்டின் கருப்பு பணம் இல்லாமல் இருப்பதே !

15. இதன் அடிப்படை தவறு செய்தவர்கள் மக்கள் அல்ல. கஸ்டம்ஸ் துறை அதிகாரிகள் . வருமான வரி அதிகாரிகள் . லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் . நன்கொடை என்ற பெயரில் மக்களை கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்களும் , அரசியல் வாதிகளும்.

16. என் நாட்டில் எல்லோருக்கும் இலவச கல்வி என்று கிடைக்கிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

17. என் நாட்டில் எல்லோருக்கு இலவச மருத்துவம் என்று கிடைக்கிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

18 . என் நாட்டின் விவசாயிகள் , என்றைக்கு சலுகை பொருள் எல்லாம் எனக்கு வேண்டாம் , எனது உற்பத்தி பொருளுக்கு நான் விலை வைக்க எனக்கு உரிமை வேண்டும் என போராட்டம் நடத்தி வெற்றி பெருகிறானோ , அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

19. கலாசார சீர்கேட்டால் , அநாதை பிள்ளைகளும் , ஊனமுற்ற பிள்ளைகளும் , வயது  முதிர்ந்த மக்களும் பெருகி விட்ட நாட்டில் , அவர்களுக்கான வாழ்க்கையை அரசு மட்டுமே கொடுக்கும் , தனியார் தேவை இல்லை என்று , என்றைக்கு சட்டம் வருகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

20 . சினிமா நடிகர்களும், விளம்பரத்துறையினரும் , வணிக பெரு மக்களும், மத உணர்வாளர்களும்  நடத்தும் டிரஸ்ட் எனப்படும் அறக்கட்டளைகள் என்று இந்தியாவில் இருந்து ஒழிகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

21. என்று இந்திய கனிம வளங்கள் ஏற்றுமதி நிறுத்த படுகிறதோ , அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

22. பிற  நாடுகளில் உள்ளது போல் 5 ஆண்டுகள் , 10 ஆண்டுகள் என வருமான வரியை முறையாய் செலுத்தியவர் ஓர் ஆண்டு வேலை இன்றி இருந்தால் அவருக்கு அரசு ஊதியம் தரும் என்று சட்டம் வருகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

23 . 5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்பர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் இந்தியாவில் , அவர்கள் கணக்குகள் வங்கிகள் மூலம் நடைபெற்றாலே போதும் கருப்பு பணம் ஒழிந்து விடும் .

24. எங்கும் , எவருக்கும் ரசிகர் மன்றங்கள் நடத்துவது கூடாது , அதற்கென வசூல் செய்வதோ , அதற்க்கு செலவு கணக்கு காட்டவோ கூடாது என்று கூறினாலே போதும் , கருப்பு பணம் ஒழிந்து விடும் .

25. வகுப்பில் , படிக்கும் மாணவர்களில் யாரெல்லாம் சரியாக படிக்க மாட்டார்கள் என்பது ஒரு ஆசிரியருக்கு தெரியாமல் இருக்காது. தெரிந்தும் எல்லா மாணவர்களுக்கும் தண்டனை கொடுப்பது சரியான ஆசிரியருக்கு அழகல்ல ! மன்னவனுக்கும் , மந்திரிக்கும் கூட இது பொருந்தும் !

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்ப செயல் .

-                                                    திருவள்ளுவர் 


Sunday, 20 November 2016

உலக ஆண்கள் தினம்






உலக ஆண்கள் தினம் நவம்பர் 19 ம் தேதி கொண்டாடப்படுகிறது .

ஏன் என்று தெரியுமா ?


1907 ல் டிசம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த மேற்கு வெர்ஜினியாவில் உள்ள மோனங்கைத்  இருந்த சுரங்க தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தினால் 361 ஆண்கள் இறந்து போயினர். இதில் 250 பேர் தந்தையர் .

எனவே அவர்களுக்கு நன்றி சொல்லும் வண்ணம் , 1908 ம் ஆண்டு ஜூலை மாதம் 8 ம் தேதி கொண்டாடப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் 3 வது ஞாயிறாக மாறியது .இது 2015 ம் ஆண்டிக்கு பிறகே பிரபல மாக்கப்பட்டது .

எனில் தந்தை ஆகாத ஆண்கள் , நிலை என்ன ?

திருமணம் ஆகாத ஆண்கள் என்று கூற கூடாது . தந்தை என்ற நிலையை அடையாத ஆண்களும் அதில் இறந்து போயினர் அல்லவா ? அவர்களுக்கும் நன்றி சொல்லும் வண்ணம் கொண்டாடப்படுவதே ஆண்கள் தினம் .

ஆனால் இதை கொண்டாடித்தான் ஆண்களை பெருமை படுத்த வேண்டும் என்ற அவசியம் தமிழர்களுக்கு இல்லை .

இங்கு ஆணிடம் பெண் நடந்து கொள்ள வேண்டிய முறைகளும் ,
பெண்ணிடம் ஆண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளும்,

இருவரும் ஒருவருக்கொருவர் நன்றி கூறுவது எப்படி என்பதும் மரபாய் , மரபணுவோடு வளர்ந்து வருவது .

பெண்கள் தினம் , ஆண்கள் தினம் , அன்னையர் தினம், தந்தையர் தினம் இதெல்லாம் தமிழனுக்கு தேவை இல்லை .

வாழ்க தமிழ் இனம் !

Monday, 14 November 2016

சுண்டை வற்றல் குழம்பு - வயிற்று பூச்சியின் மருந்து





sundaivatral க்கான பட முடிவு



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றில் உள்ள பூச்சி .

இது குழந்தைகளுக்கு மட்டும்தான் வரும் என்று கூறுவது மிகத்தவறு .

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட எல்லோர் வீடுகளிலும் வாரத்திற்கு ஒரு முறை வயிற்று பூச்சிக்கு மருந்து சாப்பிட்டு வந்தனர் . இப்போது தான் நாகரிக மயக்கத்தில் அதை விட்டு விட்டோம்.

இது குறித்து கூறும்போது  இவ்வாறு கூறுவார்கள்.


தினமும் ஒரு முறை
வாரத்திற்கு ஒரு முறை
மாதத்திற்கு இரு முறை
ஆண்டுக்கு ஒரு முறை       என்று!


தினமும் ஒரு முறையாவது பற்களை சுத்தம் செய்

வாரம் ஒரு முறையாவது வயிற்றை சுத்தம் செய்

மாதம் இரு முறையாவது உடல் உறவு கொண்டு உடற்கழிவை சுத்தம் செய்

ஆண்டுக்கு ஒரு முறையாவது வீடுமுழுவதையும் சுத்தம் செய் !



இது சுத்தம் குறித்து வழக்கத்தில் இருக்கும் பேச்சு!


இதன் அடிப்படையில் , வாரத்திற்கு ஒரு முறை யாவது வயிற்றில் உள்ள பூச்சிகளை களைய வேண்டிய அவசியம் எல்லோருக்கும் உள்ளது.

ஆனால் அதை மருந்து வழிதான் செய்ய வேண்டும் என்ற அவசிய இல்லை .

சாப்பாடு மூலமாகவும்  வயிற்றில் உள்ள பூச்சிகளை விரட்டலாம் ..


அது தாங்க சுண்டை வற்றல் குழம்பு .

சுண்டைக்காயை இரண்டாக வெட்டாமல் , கொஞ்சமாக பிளந்து அதனை சாம்பாரில் போட்டு சமைத்து சாப்பிட பூச்சிகள் அழியும்.



ஆனால் எல்லா இடங்களிலும் சுண்டைக்காய் கிடைப்பதில்லை . ஆனால் சுண்டைவற்றல் கிடைக்கும்.

கொஞ்சம் சுண்டை வற்றல் எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள் .
கொஞ்சம் புளி கரைத்து வடிகட்டி , அதில் தக்காளி கரைத்து , அதனுடன் 2: 1 என்ற விகிதத்தில் மல்லி தூளும் ,மிளகாய் தூளும்  சேர்த்து சரியான அளவு உப்புடன் கலந்து ஒரு 5 நிமிடங்கள் ஊற விடுங்கள் .

அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு , கொஞ்சம் வெந்தயம் , கொஞ்சம் உரித்த பூண்டு , வெங்காயம் இட்டு வதக்கி அதில் ஏற்கெனவே கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி கொதிக்க விடுங்கள்.


வேறொரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சுண்டைக்காய்
வற்றலை மிதமான தீயில் வதக்கி , அதை கொதிக்கும் குழம்பில் விடுங்கள்.

கொஞ்சம் தேங்காயிம் , கொஞ்சம் சோம்பு ( பெருஞ்சீரகம் ) சேர்த்து அரைத்து இறக்கும் நேரத்தில் ஊற்றி ஒரு கொதி மட்டும் விட்டு இறக்கி விட வேண்டும்.

சுண்டை வற்றல் குழம்பு தயார்.

இதற்கு சுட்ட அப்பளம் , சரியாக இருக்கும்.


இது ஒரு சிறந்த மருந்து வயிற்று பூச்சிக்கு !

மற்றொரு மருந்து உண்டு .

தினமும் அல்லது வாரம் இரு முறையாவது பப்பாளி பழம் 
உண்ணுங்கள் .

அது வயிற்றில் புழு பூச்சி தங்க விடாது .


Friday, 11 November 2016

இந்தியா ரூபாயின் வரலாறு ( சுருக்கமாக )- பல்வேறு நாடுகளின் பண மதிப்பு !

பணம் என்ற வார்த்தை , எல்லோருக்கும் வாழ்க்கையின் ஒரு அங்கம்.

அனால் இந்த பணம் சார்ந்த சில வித்யாசமான கருத்துக்கள் அறிவோமா ?

@   சந்திர குப்த மௌரியர் காலத்து நாணயங்களின் பெயர் பனாஸ் .

இந்த வார்த்தையில் இருந்து வந்தது தான் பணம் எனும் வார்த்தை.


@ உலகம் பணம் என்ற கருத்தாக்கத்தை இந்தியாவில் இருந்தே பெற்றது .

@ உலகில் முதன்முதலில் கி.மு. 3 ம் நூற்றாண்டிலேயே பணத்தையும் , நாணயங்களையும் பயன்படுத்தியது இந்தியா தான்.

@ அதற்க்கு ரூபாயி என்றும் ரூபாய் என்றும் பெயரிட்டது இந்தியாதான்.
ரூபா என்றால் அழகான உருவம் என்றும் , வடிவமைக்கப்பட்டது என்றும் அர்த்தம் .

@ தங்க நாணயங்கள் ஸ்வர்ண ரூபா என்றும் தாமிர நாணயங்கள் தாமிர  ரூபா இரும்பு நாணயங்கள்  சிச ரூபா என்றும்  வழங்கப்பட்டுள்ளன .

@ 1540 - 1545 வரை ஆட்சி செய்த சூரி வம்சத்தை சேர்ந்த ஷெர்ஷா சூரி என்ற மன்னரே இந்தியாவில் நாணய பயன்பாட்டை கொண்டு வந்தார் . இவர் தான் அஞ்சலகம் என்பதை ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Silver coins with raised writing


@ அதனை தொடர்ந்து மொகலாய மன்னர் அக்பர் அதனை பின்பற்றினார். 

@ ஆரியர் வருகைக்கு முன்னமே , இந்தியாவில் நாணய பயன்பாடு இருந்துள்ளது என்று கூறுகிறார் ராகுல் சாங்கிருத்தியாயன் .

@ கி.பி. 990 களில் தான் முதன்முதலில் , ராஜ ராஜன் சோழன் ஆட்சியின் போது நாணயங்கள் தயாரிக்கப்பட்டன என்று  பொன்னியின் செல்வன் வழியாக கூறுகிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி .
how foreign currencies are having indian language க்கான பட முடிவு



@  1934 களில் இந்திய ரிசெர்வே வங்கி தொடங்கப்படும் வரையிலும் கூட அந்தந்த மாகாணங்கள் தனியாக ரூபாய்கள் அச்சிட்டுள்ளன.


how foreign currencies are having indian language க்கான பட முடிவு



@ போர்த்துகீசியர்கள் தனியாகவும் , ஆங்கிலேயர்கள் தனியாகவும் , சீனா வங்கி கூட இந்தியாவில் செயல்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.





@ அந்த ரூபாய் தாள்களில் கூட ஹிந்தி மொழி இடம் பெற வில்லை.

@  பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் , இந்தியா ரூபாய் , பிரிட்டிஷார் எங்கெல்லாம் ஆட்சி செய்தனரோ அங்கெல்லாம் மதிப்புடையதாக இருந்துள்ளது .

@ இந்தியா சுதந்திரத்தின் போது அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய மதிப்பை 4 ரூபாய் என்று மாற்றியுள்ளார் அப்போதைய பிரதமர் நேரு .

@ 1967 ம் ஆண்டில் இந்திரா காந்தி 7 ரூபாய் 50 காசுக்கு மாற்றி யுள்ளார் . 

@ இவ்வாறு இந்தியா தன பண மதிப்பை குறைக்க முக்கிய காரணமாக கூறப்படுவது இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் இந்தியா சீனா போர் .

@ இப்போர்களை எதிர்கொள்ள ஆயுதங்கள் பெற வேண்டி இந்தியா தனது பண மதிப்பை குறைத்து , அக்காலகட்டத்தில் இருந்த அனா க்கள் ,, முறை மாற்றப்பட்டு முழுமையாக 100 பைசா 1 ரூபாய் என்று மாற்றப்பட்டது .
இதற்க்கு முன்பு 64 பைசா ஒரு ரூபாயாக இருந்தது . 

@ பின்னர் ஆண்டு தோறும் 1 ரூபாய் வீதம் குறைந்த இந்திய ரூபாயானது 1990 முதல் 1995 ம் ஆண்டுக்குள் 35  ரூபாயாக மாறியது . திரு . நரசிம்ம ராவ் ஆட்சியில் பண மதிப்பு மேலும் மேலும் குறைந்தது .

@ 1991 ல் நிதி அமைச்சராக இருந்த மன் மோகன் சிங் , பொருளாதார தாராள மயமாக்கல் , என்பதில் கையொப்பம் இட்டதன் விளைவு , படிப்படியாக பண புழக்கம் அதிகரித்தது. பண மதிப்பு குறைந்தது .

@ அதன் படி இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாயாக  சரிந்து உள்ளது .

@ நவம்பர் 8 , 2016 முதல்  பழைய 500 ரூபாய் , 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்றும் அதற்க்கு பதிலாக புதிய 1000 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது இந்தியா ரூபாயின் பண மதிப்பை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது 

------------------------------------------

மௌரீசியஸ் பணம் :


இதன் சிறப்பு என்னவெனில் , இந்த ரூபாய் நோட்டுகளில் ஹிந்தியிலும் , தமிழிலும் ரூபாயின் மதிப்பு எழுதப்பட்டிருக்கிறது .


how foreign currencies are having indian language க்கான பட முடிவு



2016 நவம்பர் 8 ன் தேதி முதல் புதிய 1000, மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன . கீழே காணப்படுவது 1970 களில் வெளியிடப்பட்ட புதிய 1000 ரூபாய் . அதுவும் , தற்போது வெளியிடப்பட்டது போலவே , ராஜா ராஜ சோழன் சதய திருவிழா அன்று வெளியிடப்பட்டது.

how foreign currencies are having indian language க்கான பட முடிவு


கீழே காணப்படுவது சிங்கப்பூர் டாலர். எப்போதும் போல் தமிழர்களுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் , அந்த டாலரில் தமிழிலும் சிங்கப்பூர் என்று அச்சிடப்பட்டிருக்கும் .



singapore dollar language க்கான பட முடிவு

இந்தியாவில் சில கருத்துக்கள் பேசவே தயங்கும் போது செக் குடியரசு வெளியிட்டுள்ள பணம் வித்தியாசமானது . செக்கஸ்லோவோக்கியாவின் இந்த பணத்தின் பெயர் செக் கொரோனா .




கீழ் காண்பவை இலங்கை ரூபாய் நோட்டு. இதில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காட்டிலும் , தமிழரின் கலைகளுக்கு இந்த ரூபாய்கள் சாட்சியம் கூறுகின்றன .


sri lankan currency notes க்கான பட முடிவு


கீழே காண்பவை குக் தீவின் ரூபாய் நோட்டு. இது நியூசிலாந்தை சேர்ந்தது.தென் பசிபிக் கடலில் உள்ள இந்த தீவானது , கடல் வாழ் உயிரினங்களின் மீது ஒரு பெண் பயணிப்பது  போலும் சித்தரிக்கப்பட்ட படத்துடன் தனது பணத்தை வெளியிட்டுள்ளது.

currency notes of different countries க்கான பட முடிவு



கீழே உள்ள தினார் எனும் பணமானது செர்பியாவின் பணமாகும் . இதன் பெயர் க்ராஜின தினார். யுகோஸ்லாவ் தினார் பணத்தை ஒத்த வடிவமைப்பு கொண்ட இந்த தினார் 1992 ல் 1 மில்லியன் வரை வெளியிடப்பட்டுள்ளது. 1994 முதல் பில்லியன் கணக்கில் வெளியிட்டுள்ளது இந்த அரசு .

currency notes of different countries க்கான பட முடிவு

செர்பிய  அரசை போன்றே துருக்கி அரசும் மில்லியன் கணக்கில் பணத்தை வெளியிட்டுள்ளது.


currency notes of different countries க்கான பட முடிவு




கீழே உள்ளது யுகோஸ்லாவியாவின் யம் எனும் பணம் . உலகத்திலேயே பண வீக்கம் என்பதை அதிக  அளவில் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்று. இது போஸ்னியா , ஹெரஸிகோவினா ,கிரொட்டியா , மாசிடோனிய , ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பண மதிப்பிற்கு மாற்றாக கருதப்படுகிறது. இந்த நாட்டின் 1 கோடி பணம் கொடுத்தால் இந்தியாவில் அது 2 லட்சத்து 50 ஆயிரமாக மட்டுமே மாறும் .


currency notes of different countries க்கான பட முடிவு

இந்த யம் நோட்டின் பணத்தை முடிந்தால் எண்ணி கொள்ளுங்கள் .



நாம் ஒரு கண்டைனர் பணம் என்பதை ஒரே ஒரு நோட்டாக சுமக்கிறது
யுகோஸ்லோவியா .

செர்பியா , துருக்கி போன்ற நாடுகளின் பணம் அதிக அளவிலான எண்ணிக்கைகளை சுமக்கிறது.

இதன் அர்த்தம் என்னவெனில் அங்கெல்லாம் பணத்திற்கு மதிப்பே இல்லை .
பண வீக்கம் அதிகமாய் உள்ளது.
பண வீக்கம்  என்றால் , அரசு வெளியிட்ட பணத்தை விட அதிக பணம் மக்களிடம் புழக்கத்தில் உள்ளது என்று அர்த்தம்.
உள்நாட்டு போர், பிற நாட்டுடன் போர்  மற்றும் அரசுடன் மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்ற மறைமுக பொருளும் உள்ளது.


இதே நிலையில் தான் இந்தியாவும் 1967 களில் இந்தியா சீன போர் காலத்தில் , தன பணமதிப்பை குறைத்தது. அப்போது போடப்பட்ட மிசா சட்டம் , அதனை தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு சட்டங்கள் மக்களுக்கு வெறுப்பை கொடுக்க , அந்த சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட பிறகும் கூட , இந்திய பண மதிப்பு     உயரவில்லை.

இன்று கருப்பு பண ஒழிப்பு என்ற கருத்து முன்னெடுக்கப்பட காரணமாக இருந்த அந்த கால கட்டம் தான் , இந்தியா வரலாற்றின் திருப்பு முனை காலம் ஆகும்.

இன்றைய நிலையில் இந்தியா பண வீக்கமானது 10% விட அதிகமாக உள்ளது. அதனால் தான் இந்தியா பண மதிப்பு குறைகிறது. இதன் அர்த்தம் அரசு 100 ரூபாய் வெளி இட்டால் 112 ரூபாய் புழக்கத்தில் இருக்கிறது என்பதாகும்.

இந்த பணவீக்கமானது இந்தியாவில் குறையவும், பண மதிப்பு அதிகரிக்கவும் ஒவ்வொரு இந்தியனும் துணை நிற்போமாக !


-------------------------


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...