Wednesday, 26 July 2017

காடு திருத்தி கழனி செய்தது போதும்

காடு திருத்தி கழனி பரப்பியது போதும்!
கழனி திறுத்தி காடு செய்வோம் வாரீர்!
இந்த மண்,
மனிதனுக்கானது இல்லை.
விலங்குகளுக்கும்,
பறவைகளுக்கும்
நீர்வாழ் உயிர்களுக்கும்
சொந்தமானது.
நாம் விவசாயம்
செய்வததற்காக அழித்தது
காட்டை மட்டுமல்ல |
அங்கு வாழ்ந்த
உயிர்களையும் தான் |
ஐம்பெரும் நிலப்பரப்பில் இயற்கையை நம் இஷ்டத்துக்கு மாற்றி வாழும் இடமாக மாற்றபட்டது மருத நிலம் மட்டும்தான்!
அதை மீண்டும் இயற்கையிடம் ஒப்படைக்க வேண்டும்
இது,
நம் கடமை
அல்லவா?

உலகம்   சந்தித்த புரட்சிகளில் இயற்கை வழியில் உருவான புரட்சி இதுதானாம். ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒரு சில பயிர்கள் வளர்த்தனவாம்.அப்படி வளர்ந்த பயிர்களும் கூட மரம் அளவிற்கு உயர்ந்து நின்றனவாம். எனவே அந்த காட்டை மருதம் என்று அழைத்தாராம்.


ஆனால் இன்று காட்டை அழித்து விவசாயம் செய்வது , நமக்கு விதைக்கப்பட்ட தவறான அறிவு .


அப்படி தானாக வளர்ந்த  பயிர் செடிகள் ஓட்ஸ் , சோளம், பார்லி . இவை தானாகவே இம்மண்ணில் விளைய கூடியவை. பிறகு வளர்ந்தவை நெல் , கோதுமை . இவற்றை விளைவிக்க அவசியம் இல்லை . இவை மருத காடுகள் . ஆள் உயர செடிகள் !- என்று கூறுகிறார்
 எழுத்தாளர் பா.பிரபாகரன்

மருத நில வளர்ச்சியை கையில் எடுத்து கொண்டு , நகரம் வளர ஆரம்பித்து , அதற்காக மலைகள் அழிக்க பட்டு , கடல் எல்லைகள் சுருக்கப்பட்டு , காடுகள் முற்றிலும் அழிக்க பட்டு ,இன்னும் எத்தனை எத்தனை தவறுகள் - அடிக்கி கொண்டே போகலாம் .

இந்த மருதநிலம் தான் அரசு , அரசாங்கம், அரசியல் , வணிகம், எல்லாவற்றையும் விதைத்தது .

அதன் விளைவு தான் , ஊழல், கொலை, குற்றம் , கொடுமை, வசதி, ஜாதி, என எல்லா தவறுகளையும் கூடவே விதைத்தது.

ஒவ்வொரு நிலத்திற்கும் இடையில் இருந்த மரங்களை கூட அழித்து விவசாயம் செய்வது கொடுமையிலும் கொடுமை!

வணிகம் செய்பவன் மட்டும்தான் பேராசை பிடித்தவனா ?
அரசியில் வாதி மட்டும்தான் இந்த மண்ணை கூறு போட்டு விற்கிறானா ?

விவசாயி செய்யவில்லை.
தனக்காக மட்டும் விதைதான்.சரி.
தன ஊருக்காக விதைதான் சரி.

அத்தோடு நில்லாமல் , இந்த மண் மீது விஷம் தெளித்தான் .
உரம் என்ற பெயரில் !

அங்கு வாழ்ந்த உயிர்களை அழித்தான்
பூச்சி கொல்லி மருந்து என்ற பெயரில் !

இந்த மண் தாங்குமா ?

போதும்!

நாம்

காடு திருத்தி கழனி செய்தது போதும்
கழனி மாற்றி காடு செய்க !

இதை தொடங்கி பார் ,
இந்த உலகம் , எப்படி துடிக்கும் என்று பார் !


Monday, 24 July 2017

உலக நாகரீகம் - முதல் இதிகாசம் First epic in this world in tamil

உலகின் பிரபலமான இதிகாசங்கள் எது என்றால் எல்லோரும் கூறி விடுவோம்.

அது
ராமாயணம்
மகாபாரதம்
இலியட்
ஒடிசி

அதிகப்படியாக இதை பற்றித்தான் நமக்கு தெரியும்.

சுமேரியதை பற்றி அறிவதற்கு முன்னால், இதை பற்றி மட்டும்தான் கல்வியும் , எழுத்தாளர்களும் போதித்தனர் .

19 ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் , எல்லாம் தலைகீழாக மாறியது . அதில் ஒன்று தான் இதிகாச வரலாறு .

உலகின் முதல் இதிகாசம்  பற்றி கூறுகிறது சுமேரிய வரலாறு !

கில்கமெஷ் மற்றும் என்கிடு என்ற நண்பர்களின் நெடுங்கதையே உலகின் முதல் இதிகாசம் ஆகும் .

சுமேரியர்கள் தான் உலகில் முதன் முதலில் எழுதும் வழக்கத்தை கொண்டு இருந்தனர். இது வரையில் மட்டும்', சுமேரியத்தில் 500000 ஓடுகள் கிடைத்துள்ளன. ஈரமான களிமண்ணில் எழுதி அதை நெருப்பில் சுட்டு பாதுகாத்துள்ளனர். இதோ 8000 ஆண்டுகளை கடந்த பிறகும் , அந்த ஓடுகள் உலகின் நாகரீக வளர்ச்சி என்ன என்பதை நமக்கு கூறுகின்றன.

மேலும் அங்குள்ள வீடுகள் , ஜிகுராத் என்று வழங்கப்படுகின்றன. சுமேரியத்தில் , மலைகள் இல்லை. பாறைகள் இல்லை . ஆனால் அங்குள்ள வீடுகள் மலை போன்று அமைக்கப்பட்டு அதன் மீது கட்டப்பட்டுள்ளது.

அத்தனை உயரத்தில்  கட்டப்பட வேண்டிய அவசியம் என்ன ?
எப்படி வீடுகள் கட்டி இருக்க முடியும் ? அதுவும் இத்தனை உறுதியுடன் என்று பல்வேறு கேள்விகளுக்கு பதிலும் அங்கேயே இருக்கிறது..

இயற்கையாகவே தற்போதைய ஈராக் பகுதி . ( முன்பு பாரசீகம் என்று அழைக்க பட்டுள்ளது. அதற்கு முன்பு இதன் பெயர் சுமேரியம் மற்றும் மெஸோபடோமியம் ஆகும்.) பெட்ரோலிய பொருள்களால் நிறைந்துள்ளது. இப்போது மண்ணிற்கும் துளையிட்டு எடுக்கிறார்கள் எனில் 8000 ஆண்டுகளுக்கு முன்னால் அதன் கச்சா எண்ணெய் தரையில் வழிந்தோடி இருக்க வேண்டும் . அந்த தாரை எடுத்து தான் செங்கற்களுக்கு இடையில் பூசி ஜிகுராத் கட்ட பட்டுள்ளது .



ஏன் உயரமான இடத்தில கட்டப்பட்டுள்ளது ?

ஏற்கெனவே , அங்கு இருந்த நிலம் , வீடுகள் வெள்ளம் வந்தோ அல்லது வேறு பிற காரணங்களாலோ அழிந்திருக்க வேண்டும். அல்லது விலங்குகள் தொல்லைகள் இருந்திருக்க வேண்டும் .

இந்த கதையில் , விலங்குகளை அசாத்தியமாக வேட்டையாடும் சக்தி பெற்று உள்ளார் கில்காமெஷ் . எனில் விலங்குகளை சமாளிக்கும்  பயிற்சி அங்கு கொடுக்க பட்டுள்ளது.

அப்படியாயின் , ஏற்கெனவே இருந்த இடம் வெள்ளத்தால் அழிந்து விட்டது போலும் , அதனால் தான் மலை போன்ற அமைப்பை உருவாக்கி அதில் வாழ்ந்திருக்கிறார்கள் .

எனில் ஏற்கெனவே அவர்கள் இருந்த இடம் எது ?



அது தான் யூப்ரடீஸ் , டைகிரிஸ் நதிகளுக்கு இடையில் உருவான முதல் இடம் .அந்த இடம் தான் ஊர் என்று வழங்கப்பட்டுள்ளது. இன்றும் நாம் எல்லா இடங்களுக்கும் ஊர் என்ற பெயரை சேர்த்தே வழங்கி வருகிறோம் .

ஏன் ஊர் உருவானது ?

நாடோடிகளாக அழைந்து  திரிந்த மனிதன் , தானியங்களை பயன்படுத்த ஆரம்பித்த பிறகு , அதன் சுவையின் நிமித்தம் அதை உற்பத்தி செய்ய வேண்டும்  என்று முடிவெடுத்தான் .

ஆனால் எப்படி செய்வது என்று தெரியவில்லை.

அந்நிலையில் , ஆண்கள் வேட்டைக்கு செல்லும் போது பெண்கள் , உணவு சேர்த்து வைக்கும் பழக்கம் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு சேகரித்த பெண்கள் , பெரிய வகை செடிகள் , மூலம் கிடைத்த விதைகளை தரையில் தூவி விட்டு இரண்டொரு நாள் கழித்து பார்த்த போது , அங்கு அதே செடி மீண்டும் முளைத்து இருந்திருக்கிறது .

இப்போது தான் உலகம் நகருதலை நிறுத்தி நாகரீக வாழ்க்கைக்குள் நுழைகிறது.

விவசாயம் செய்ய ஆரம்பித்தான் மனிதன் . இது கிட்டத்தட்ட 10000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வரலாறு .

ஆனால் இதை பலரும் விரும்ப வில்லை . சண்டைகள் , சச்சரவுகள் என எல்லாம் கடந்து விவசாய புரட்சி ஏற்பட்டது .

இது தான் உலகின் முதல் புரட்சி !



இங்கு தான் நகர நாகரீகம் ஆரம்பித்தது .
கூட்டமாக வாழ்ந்த மக்கள் குழு குழுவாக பிரிந்து , வேலை பார்க்க ஆரம்பித்தனர்.

வீடுகள் கட்ட ஒரு குழு
இசை மீட்கும் குழு
விவசாயம் செய்ய ஒரு குழு

என்று குழுக்கள் பிரிந்தன. ஆனால் அதே சமயம்

ஐஸ் ஏஜ் எனப்படும் , பனிக்காலம் முடிவடைந்துள்ளது . அந்த தருணத்தில் , விவசாய புரட்சியால் உருவான ஊர் அழிந்து போக ,

மீண்டும் உருவானது தான் ஊர்க் !

( ஊர் என்ற் பெயர் தமிழர்களிடமிருந்து  வந்தது என்பது தனி கதை .)

இந்த நாட்டின் மன்னன் தான் நம் கதாநாயகன் கில்காமெஷ் !




-------------- தொடரும்




Thursday, 29 June 2017

எடிசனா அல்லது நிகோலா டெஸ்லாவா ?



இவர் நிகோலா டெஸ்லா .

இவருக்கு இந்த உலகம் பல பெயர்கள் கொடுத்துள்ளது.
பைத்தியக்காரன்!
மனநலம் சரி இல்லாதவன் !
பிழைக்க தெரியாதவன்!
கேனையன் இன்னும் பல பெயர்கள் உண்டு இவருக்கு !

உண்மையில் யார் இவர் ?

இந்த அறிவியல் உலகம் என்று வணிகத்திற்கு அடிமையானதோ , அதில் மாட்டி சிக்கி சின்னாபின்ன மான ஒரு அறிவாளி !
அறிவியலின் மாமேதை!
20 ம் நூற்றாண்டுக்கு சொந்தக்காரர்!
மின்னியல் மற்றும் காந்தவியலின் உடைமையாளர்!
ரோபோக்களின் தகப்பன்!
ரிமோட்டை 1880 களிலேயே புழக்கத்தில் கொண்டு வந்த ஞானி !
ரேடியோவின் உரிமையாளர்!
எக்ஸ் ரே என்பதின் சொந்தக்காரர்!
மின்சாரத்தின் முழு உரிமையாளர்!
இன்னும் பல!

அப்படியா ?

இல்லை இல்லை , இருக்க முடியாது !
மின்சாரத்தை கண்டறிந்தவர் எடிசன் 
ரேடியோவை கண்டறிந்தவர் மார்க்கோனி 

நம் பள்ளி பாடங்கள் அப்படிதான் நமக்கு சொல்லி தருகின்றன!ஏன் நம்  புத்தகங்கள் இப்படி சொல்ல வேண்டும் .  காரணம் என்ன ?

சொன்னால் நம்பமாட்டோம் .ஆனால் உண்மை இது தான் ! டெஸ்ட்லே பெயர் வர வேண்டிய இடத்தில எல்லாம் வராமல் போக காரணம் 

இலுமினாட்டிகள் !


டெஸ்ட்லே ஆஸ்திரிய நாட்டின் 1856 ல் பிறந்தார். அது ஒரு செர்பிய குடும்பம். நல்ல அறிவு .ஞானம் இவரது தாயார் சிறு சிறு வீட்டு உபயோக பொருட்களை செய்வதை பார்த்து பழகிய டெஸ்லா . அறிவியலில் தன்னால் எல்லாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உடையவர். இவரது அறிவு பயன்பட வேண்டும் என்று விரும்பிய அவரது நண்பர் ஒருவர் உதவியுடன் , அமெரிக்காவில் உள்ள எடிசனின் ஆய்வகத்தில் உதவியாளராக பணியில் சேர்கிறார். இப்போது தான் எடிசனின் ஆய்வகம் பரபரப்பாகிறது .

இதற்கு இடையில் , எடிசன் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்வோம். எடிசன் சிறு வயதில் ஒன்றும் பணக்காரர் அல்ல. அவரது தகப்பனார் ஒரு தச்சர் . மற்றும் சில நாட்கள் களங்கரை விளக்க காவலாளி . ஆனால் எடிசனுக்கோ அறிவியல் ஆர்வம்  இருந்தது. ஆனால் அவரது காது கேளாத தன்மையினால் பள்ளிகள் அவரை புறக்கணித்து விட்டன. வீட்டிலேயே இருந்து , மைக்கேல் பாரடே வின் மின்சக்தி  பயிற்சி ஆய்வுகள் செய்தார். ரிச்சர்ட் பார்க்கர், மற்றும் தாமஸ் பைன் எழுதிய நியூட்டன் தியரி ஆகியவற்றை பயின்றார். ஓரளவிற்கு அறவியல் ஆய்வில் பெயர் வாங்க ஆரம்பித்தார். 

இது போதுமே இலுமினாட்டிகளுக்கு !

ஒருவர் கொஞ்சம் திறமையானவராக இருக்க வேண்டும்! 
பெற்றோர் இல்லாமல் இருக்க வேண்டும்.அல்லது பெற்றோர் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடி வந்தவராக இருக்க வேண்டும்.அல்லது பெற்றோர் மிகவும் ஏழ்மையாக இருக்க வேண்டும்!
சிறு உடல் குறைபாடு இருக்க வேண்டும் !
இதையும் தாண்டி இலுமினாட்டிகளின் கடவுளை அல்லது அந்த கடவுளின் வடிவங்களை வணங்க வேண்டும் !
கொஞ்சம் பொய், கொஞ்சம் சூது ,  இதெல்லாம் இருக்க வேண்டும் !

இவ்வளவுதாங்க இலுமினாட்டிகளின் குழுவில் சேர அடிப்படை தகுதிகள் ! 
அத்தனையும் எடிசனிடம் இருந்தன. ஆமா அவர் வணங்கியது ஜீயஸ் எனும் கடவுளை ! அது டைஸம் எனும் மதத்தை சேர்ந்தது . இந்த ஜீயஸ் வேறு யாரும் அல்ல . இலுமினேட்டி அடையாளத்தில் உள்ள கண்ணுக்கு சொந்தக்காரரான குரோசின் மறுஉருவம் !

இப்போ எடிசன் கிடுகிடு என வளர்ந்தார். ஆய்வுகளுக்கு தேவையான பணம் அதிகமாகவே கிடைத்தது . 1880 ல் அறிவியல் பத்திரிக்கை  ஒன்றை ஆரம்பித்தார் எடிசன்.அது அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா அரசின் அறிவியல் பத்திரிகையாக மாறியது. அந்த அளவிற்கு செல்வாக்கு பெருகியது எடிசனுக்கு!

இவர் 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்பு உரிமம் பெற்றுள்ளார். இதில் 90 % இவரது ஆய்வக ஊழியர்கள் கண்டறிந்தது என்று கூறப்படுகிறது.

எடிசனின் விளக்கத்தை இத்தோடு நிறுத்தி கொள்வோம்! 




இந்நிலையில் தான் 1884 ல் டெஸ்லா எடிசனின் ஆய்வகத்தில் பணிக்கு சேர்ந்தார். அப்போது முடிக்க முடியாத சில வேலைகளை டெஸ்லா செய்து காட்டுவதாக , எடிசனுக்கு டெஸ்லாவிற்கும் இடையே ஒரு சிறு சவால்.

எடிசன் கூறுகிறார் , இதை மட்டும் நீ முடித்து விட்டால் , உனக்கு 50000 டாலர் பரிசு தருகிறேன் என்று !

இதை நம்பி டெஸ்லாவும் செய்து விடுகிறார். அப்போது சிரித்து கொண்டே எடிசன் கூறுகிறார், உனக்கு அமெரிக்கா ஜோக்குகள் பற்றி தெரியாதா ?

நான் கூறியது எல்லாம் ஜோக் என்று கூறி விட்டார் எடிசன். கிட்டத்தட்ட மிகப்பெரிய ஏமாற்றம் டெஸ்ட்லேவிற்கு !

அங்கு இருந்து வெளியேறினார். காப்புரிமை வழங்கும் அதிகாரி உதவியுடன் இரு பெரும் பணக்காரர்களை சந்தித்தார். ( ராபர்ட் லேன் மற்றும் பெஞ்சமின் வேல் ) டெஸ்லா எலக்ட்ரிக் லைட் அண்ட்  உற்பத்தி நிறுவனம் உருவானது .
( Tesla Electrc Light & Manufacturing )
மிகுந்த சந்தோசத்துடன் மீண்டும் ஆய்வில் ஈடுபட்டார். இப்போது தான் எடிசன் இவர் உருவாக்கிய கோட்பாடுகளை கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை  உருவாக்கி அதற்க்கு காப்புரிமையும் பெற்றார். மீண்டும் இப்போது பிரச்சனை . அந்த இரு பணக்காரர்களுக்கும் இடையே சண்டை !நிதி உதவி தடைபட்டது. 

மீண்டும் எடிசனின் எதிரி நிறுவனமாகிய வெஸ்டிங் ஹவுஸ் எனும் நிறுவனத்தோடு இணைந்து ஆய்வு மேற்கொள்கிறார். இங்கு ஒப்பந்த அடிப்படையில் கையொப்பம் பெற்று கொண்ட அந்நிறுவனம் இவரது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்று கொள்ளை லாபம் ஈட்டியது.
இவருக்கு கிடைத்தது சொற்ப வருமானமே !
இங்கும் ஏமாந்து போனார். 

1894 எக்ஸ் ரே எடுத்து வெளியிடுகிறார் டெஸ்லா. அதோடு டெஸ்லா சுருள் உருவாக்குகிறார் .



1896 ம் ஆண்டு ஒரு தொழில் அதிபரை சந்திக்கிறார் டெஸ்லா . அவர் பெயர் ஆஸ்டின். இவர் யார் என்பது ஓரளவிற்கு இலுமினேட்டி பற்றி தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். இங்குதான் விவேகானந்தரையும் சந்திக்கிறார் டெஸ்லா . ( விவேகானதரும் ஒரு பிரேமசினரி )

அப்போது விவேகானந்தர் கூறுகிறார். அறிவியலை வேதங்கள் மூலமாக விளக்குகிறார். ஆனால் டெஸ்லாவிற்கோ நியூட்டன் கொள்கை மீது அபார நம்பிக்கை . எனர்ஜி சார்ந்த அவரது வேதத்தை ஏற்க முடியாது  என்று கூறுகிறார். 

பின்னாளில் இதை நிரூபித்த டெஸ்லா , அதை விவேகானந்தர் எப்படி கூறினாரோ அவர் கூறிய அதே கோட்பாட்டை , அதே சமஸ்க்ரிதத்தில் பதிவிடுகிறார். 

இதற்க்கு இடையில் , 1898 ல் ரேடியோ கதிர்களை கண்டறிந்தார். அதனை ராணுவத்தில் பயன்படுத்தலாம் என்று கோரிக்கை விடுத்தார் . அது ஆய்வுக்கு பிறகு, ஏற்கப்படும் என்று கூறப்பட்டது. பிறகு மார்கோனி அதை கண்டறிந்தார் என்று 1906 ல் வெளியிடப்பட்டது. அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் உறவினர் தான் மார்கோனி என்று கூறப்படுகிறது.




இப்போ 1901 ல் ஜே.பி.மோர்கன் , ரொக்பெல்லேர் , வார்பார்க் எனும் இலுமினேட்டி கூட்டத்தின் நிதி உதவியோடு ஆய்வு களை தொடர்கிறார். இவர் எடிசனைதான் எதிர்க்க நினைத்தார்.ஆனால் எடிசனின் கூட்டாளியோடு போய் கூட்டு சேர்கிறார்.

இவரது கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் பரிசோதனைக்கு எடிசனிடம்தான் செல்லும். எடிசன் எந்திரன் திரைப்படத்தில் வரும் professor பேசும் அதே வசனத்தை தான் கூறுவார்.இது மக்களுக்கு ஆபத்தானது. இதனால் எந்த பயனும் இல்லை என்று !

அதையும் தாண்டி காப்புரிமை குழுமத்தால் , அவரது கண்டுபிடிப்பை பயன்படுத்தி நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டது . அன்று முதல் அமெரிக்கா ஒளி வெள்ளத்தில் மிதந்து ,அறிவியலின் சொர்க்க பூமிபோல் ஆகியது. அதற்க்கு காரணமாக டெஸ்லாவை மறந்து விட்டது.

ஒரு வழியாக 300 பொருள்களுக்கு காப்புரிமை பெற்றார் .அதில் இருந்து நிதியும் பெற்றார்.

மோர்கன் நிதிஉதவியால் , டெஸ்லாஸ் வார்டய்ணகிலிஃப் பிளான்ட் உருவாக்கப்பட்டது .( Tesla 's  Wardencliff Plant )
இலவச மின்சாரம் தயாராகிவிட்டது. டெஸ்லா கூறுகிறார்.மின்சாரத்திற்க்காக நிலக்கரி தோண்டாதீர்கள் ! காஸ் எடுக்காதீர்கள் ! ஆயில் எதுவும் பயன்படுத்தாதீர்கள் ! நம்மை சுற்றிலும் எனர்ஜி பரவி கிடக்கிறது ! அதில் இருந்து அனைவரும் இலவசமாக மின்சாரம் பெற்று கொள்ளலாம் என்று !


தன சொந்த லாபத்திற்காக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று டைட்டானிக் கப்பலை மூழ்கடித்து , லாபம் தேடிய மோர்கன் ஒப்பு கொள்வானா ? நிதியை நிறுத்தினான்.

காப்புரிமை மூலம்  பெற்ற நிதி உதவியும் முதலாம் உலக போரை காரணம் காட்டி  நிறுத்த பட்டது. 

அவரது கண்டுபிடிப்பு அழிக்க பட்டது.




இதற்க்கு மேலும் டெஸ்லாவை விடுவது சரியில்லை என்று இலுமினேட்டி கூட்டம் முடிவு கட்டியது .

விளைவு மனநோயாளி என்று நிரூபிக்கப்பட்டார். இதில் ஒரு கதையும் உண்டு. சிறுவயதில் அவரது இளைய சகோதரர் அவர் கண் முன்னாள் இறந்தார் என்பதால் எப்போதுமே அவர் கொஞ்சம் மனநலம் சரி இல்லாமல் தான் இருந்தார் .இப்போது இன்னும் பெரிதாகி விட்டது என்று நிரூபிக்கப்பட்டது.

1943 ல் இந்த மாமேதை ,தனது அறையில் இறந்து கிடந்தார்.

இதில் முக்கிய விஷயம் என்னவெனில் 2 ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்கா நீதிமன்றம் ரேடியோவை கண்டறிந்தது டெஸ்லாத்தான் ,மார்கோனி அல்ல என்று தீர்ப்பளித்தது .

இந்த செய்தி என்று நம் நாட்டு புத்தகங்களில் இடம் பிடிக்குமோ ?


குறிப்பு :

(இந்த பதிவில் டெஸ்லாவின் அறிவியல் குறித்து போதிய குறிப்புகளை நான் கொடுக்க வில்லை. ஆனால் அவர் யாரால் ஏமாற்றப்பட்டார் என்பதை கூறுவதே இந்த பதிவின் நோக்கம். பலரும் டெஸ்லாவை ,ஏதோதோ பெயரில் அழைப்பதை நிறுத்தவேண்டும் என்பதே இதன் நோக்கம். குறிப்பாக எடிசனின் அபிமானிகள் )


இவரது கண்டுபிடிப்பு பயன்பாட்டில் இருந்திருந்தால் இன்று நம் நிலவளம் கொள்ளை போயிருக்காது . 

Monday, 5 June 2017

ஜாதியா ? பட்டமா ?


ஜாதியே தமிழ்நாட்டில் இல்லை.
ஜாதி என்பது தமிழனின் அடையாளம் அல்ல என்று ஒரு சாரார் கருத்து கூறுகிறார்கள் .

ஆனால்

ஜாதி தமிழனின் அடையாளம் . ஜாதிய வேறு பாடுகளோ , அடிதடியோ தமிழனின் அடையாளம் அல்ல .

பிரிட்டிஷார் தான் ஜாதி குறித்து வரைந்து வரைத்து புத்தகங்கள் வெளியிட்டது. ஏனெனில் அவர்களுக்கு புதிது . அதனால் இதெப்படி சாத்தியம் .அடித்து கொள்ளாமல் ஒரு கூட்டம் வாழுமா ? கூடாது என்று முடிவு எடுத்தனர். அதன் விளைவாக அவர்களே ,உயர்ந்த ஜாதி என்றும் தாழ்ந்த ஜாதி என்றும் பிரிவினையோடு புத்தகங்கள் எழுதினார். அதை நடைமுறை படுத்த இடஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்தனர். ஆங்கலேயர்களிடம் பேச வரும் போது , குறைந்த பட்சம் 2 தாழ்ந்த ஜாதியினர் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் . அன்று ஆரம்பித்தது இடஒதுக்கீடும் , ஜாதிய வேறுபாடும் ! நமக்கு உதவுவது போலவே சிண்டு முடித்து விடுவதில் வல்லவர்கள் ஆங்கிலேயர்கள் .

Castes and Tribes of Southern india - எழுதியவர் Edgar Thurston - ஆண்டு 1909

 நம் தமிழிலக்கியங்களில் தாழ்ந்த ஜாதி  என்றோ உயர்ந்த ஜாதி  என்றோ எங்கேனும் குறிப்பு இருக்கிறதா ?தேடுங்கள் !

ஆனால் ஜாதியின் பெயர்கள் உண்டு .

கணிகையர் என்பது ஜாதியின் பெயர். இது தான் கணிமேதாவியார் .
இந்த ஜாதியைத்தான் கணிகை பார்ப்பான் என்று இருந்தது. அதை தான் பிராமணர்கள் கற்று கொண்டு பார்ப்பனர் ஆனார்கள் .

வள்ளுவர் என்பது ஜாதியின் பெயர். இன்றும் அந்த ஜாதி மக்கள் வாழ்கிறார்கள் .

ஒவ்வை என்பதே ஜாதியாக இருக்க வாய்ப்புண்டு. அவர் ஒரு பெண் என்றும் , பிற்கால அவ்வையார் அந்த ஜாதியை சேர்ந்த ஆண் என்றும் கூறப்படுகிறது

பரதர் என்று மீனவர்களுக்கு பெயரும் உண்டு .

வலையர் என்ற பெயரும் உண்டு.

மருதம் மற்றும் நெய்தல் நிலம் சார்ந்த ஜாதிகள் அனைத்தும் ஒரே பெயர் பெயர் கொண்டவை .


ஆனால் பட்டப்பெயர்கள் மன்னர்களால் வழங்கப்பட்டவையே அன்றி , ஜாதி கிடையாது . அந்தந்த காலகட்டத்தில் யாரெல்லாம் மன்னருக்கு ஜால்ரா போட்டார்களா அவர்கள் பெற்றது தான் பட்ட பெயர் .

அதாவது

பிராமணர்களை நாம் பார்ப்பார் என்று ஜாதியின் பெயர் சொல்லி அழைக்கிறோம். ஆனால் அய்யர் என்பது அவர்களது பட்டப்பெயர்.

இதே போல் , செட்டியார் என்பதும் , முதலியார் என்பதும் , தேவர் என்பதும் , ஜாதி பெயர்கள் அல்ல . பட்ட பெயர்கள் ஆகும் .


எந்த ஜாதி பெயரை குறிப்பிட்டாலும் , அது சார்ந்த தொழில் நமக்கு விளங்கவில்லையாயின் அது பட்ட பெயர் ஆகும் .

வன்னியர் சமூகம் மட்டும் 500 வகையான பட்டப்பெயர்களை பெற்றுள்ளது .

செட்டியார் இன மக்களும், சேட்டு இன மக்களும் ஒன்று தான் என்ற ஐயப்பாடு கொண்டு , ஒரு சில ஆய்வுகளும் வந்துள்ளன.
இதுவும் பட்ட பெயர்தான்.

முதலியார் எனப்படும் பட்ட பெயர் , கிருஷ்ணா தேவராயர் காலத்தில் , மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் , நாயக்க மக்களுக்காக பணியாற்றிய வெள்ளாள ஜாதி மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்ட பெயர்.
இந்த காலத்திற்கு முன்பு முதலியார் எனும் பட்ட பெயர் தமிழ் மக்கள்
 மத்தியில் கிடையாது .

பட்டப்பெயர்கள் என்பது காலத்திற்கு காலம் ,ஆளும் அரசனை பொறுத்து அவருக்கு வேண்டியவர்களை பொறுத்து , பல்வேறு நபர்கள் பெற்றுள்ளார்கள் . ஆனால் அது ஜாதி அல்ல .

உண்மையில் தமிழ்ச்சமூகத்தில் எந்த ஜாதி மக்களும் அடித்து கொள்ளவில்லை. இந்த பட்ட பெயர் வாங்கிய மக்கள்தான் , தன ஜாதி என்ன என்பதை மறந்து விட்டு , இல்லை தொலைத்து விட்டு , அந்த பட்டப்பெயர் சொல்லி அடுத்தவரை அடிப்பதும் , கொள்வதுமாக இருக்கிறார்கள்!

உண்மையில் தமிழ் சமூகம் அழிக்க வேண்டியது ஜாதியை அல்ல .

பட்ட பெயர்களை !

இங்கு ஜாதி எல்லாம் இழிவு படுத்த பட்டுவிட்டது. அதன் விளைவாக பல தொழில்கள் தமிழ்நாட்டில் இல்லை .

மீனவ சமூகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500 பிரிவினர் இருந்தாராம். இன்று இல்லை. அவர்களை இழிவு படுத்தி அவர்கள் மதம் மாறி , இனம் மாறி இன்று கப்பல் கட்டும் தொழில் என்பதை நாம் தொலைத்து விட்டோம். இவர்கள் இருந்ததால் தானே அன்று ராஜராஜ சோழன் கப்பல் படை வைத்திருந்தான் .
இன்று கப்பல் எந்த மரத்தில் செய்வது என்பது மீனவ நண்பர்களில் பலபேருக்கு தெரியாது.

பனைமரத்தின் கதை ஊர் அறிந்தது . இன்று பனைமரம் வளர்க்க வேண்டும் என்று கூறியவுடன் எதிர்ப்பது யார் தெரியுமா ? அந்த மக்கள் தான் ! மீண்டும் நம்மை தாழ்த்தி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள் . அதன் நுட்பங்கள் எல்லாம் கிட்டத்தட்ட அழிந்து விட்டது.

மருத்துவர் என்று ஒரு ஜாதி ,ஊரில் யாருக்கு என்ன நேர்ந்தாலும் , நாடி பிடிக்கும் முன் , முகம் பார்த்து கூறி விடுவான். இன்று அந்த ஜாதி இல்லை .

பள்ளர் சமூகம் இன்று தேவேந்திர குல வெள்ளாளராக மாறி விட்டது. விளைவு எந்த ஆற்றிலும் பராமரிப்பு இல்லை . குளங்கள் இல்லை . ஏரிகள் என்பது ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது.

கோனார் சமூகம் யாதவ சமூகம் ஆகி விட்டது. இன்று நாமெல்லாம் நாட்டு மாடு வேண்டும் என்று கூவி கொண்டு இருக்கிறோம். இதில் என்ன சிறப்பு என்றால் செஞ்சி மலையை ஆண்ட ஆனந்த கோனார் எனும் மன்னர் தன பெயரை ஆனந்த கோன் என்று அந்த காலத்திலேயே ஸ்டைலாக வைத்திருந்தாராம் .அந்த சமூகம் தன ஸ்டைலை தொலைத்து விட்டது.

கலைத்துறையில் கோலோச்சி இருந்த சமூகம் விஸ்வகர்மாகி விட்டது. என்ன பயன்? எங்கு பார்த்தாலும்  மலையாளி யும் , ராஜசதானியும் நகைக்கடை வைத்திருக்கிறான். அதில் இரும்பும் உண்டு. ஈயமும் உண்டு. வியந்து வியந்து நாம் பார்த்து , பூரித்து நிற்கும் கோவில் சிற்பங்களை செதுக்கிய சமூகத்தில் 10% பேர் கூட இன்று அந்த தொழிலில் இல்லை . கதவுகளில் கூட கலைநயம் காட்டிய ஆசாரிக்கு கதவு எந்த மரத்தில் செய்ய வேண்டும், சாளரம் எதில் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை .

பூசாரி என்று ஒரு சமூகம் இருந்தது . அவர்களுக்கு தெரியும் விபூதியின் பயன்கள் என்னென்ன என்று ! இன்று அந்த பெயரே இல்லை.

இன்று விவசாயம் ஏன் படுபாதாளத்தில் இருக்கிறது தெரியுமா ? உழுவதற்கும், அறுப்பதற்கும் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. அதற்கான செலவுகள் அதிகம். ஏன் என்றால் , அந்த வேலையை செய்து வந்த பறையர் இனம் தான் இன்று துபாய் வளமைக்கும், சிங்கப்பூரின் பெருமைக்கும் காரணம்!

இப்படி கூறி கொண்டே போகலாம் . நம் தொழில் வளமை அப்படி!
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் பொருளாதாரத்தை முதலில் அழிக்க வேண்டும் என்பது வெள்ளையர்களின் கோட்பாடு .

சிறப்பாக நடந்து விட்டது. ஜாதியில் ஏற்ற தாழ்வு கூறி , அதில் இருந்து வெளியேற , அந்த தொழிலையே விட்டு , அந்நிய நாட்டு பொருளுக்காக ஏங்கி நிற்கிறோம்!

இப்போ சொல்லுங்க ! ஜாதியை அழிக்க  வேண்டுமா ? பட்டத்தை அழிக்க  வேண்டுமா என்று !
---------------------------------   - - -







குறிப்பு :
------------


இனம் என்றால் என்ன?

குலம் என்றால் என்ன ?

குல தெய்வம் என்றால் என்ன ?

தமிழில் பேசும் அத்தனை பேருக்கும் ஜாதி உண்டா? பட்டம் உண்டா?

குடும்ப பெயர் தமிழருக்கு உண்டா ?

இவ்வளவு கேள்விக்கும் பதில் தெரிஞ்சிட்டா ,


ஜாதி பிரச்னை இருக்காது .



உதாரணமாக ,

பிராமணன் என்பது இன பெயர்

பார்பனன் என்பது அவனது ஜாதி பெயர்

ஐயர் என்பது பட்டபெயர்.

இதில் இனபெயரும் , பட்ட பெயரும் தமிழுக்கு சொந்தமில்லை.

பார்பான் என்பது பிராமணர்களுக்கு தமிழ் நாட்டில் கொடுக்கப்பட்ட தொழிலுக்காகன பெயர்.

பார்பான் என்றால் , கணிகை பார்பான்.
ஆருடம் பார்பான்.
நாள் குறித்தும் , நேரம் குறித்தும் கணிப்பவன் என்று பொருள்.

இந்த இனம் தமிழ்நாட்டை தொடுவதற்கு முன்பே இந்த தொழில் , தமிழ் மக்களால் செய்யப்பட்டது தான்.

இன்றும் வேறு பிற சமூத்தை சேர்ந்தவர்களும் இந்த பணியை செய்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது .


அதே போல் கோவில்களில் , அர்ச்சகர் பணிக்கும் இவர்கள் அமர்த்தப்பட்டனர் .

ஆசிரியர் பணிக்கும் அமர்த்தப்பட்டனர்.

சுருங்க சொன்னால் , அமர்ந்த பார்க்கும் வேலைகள் அனைத்தும்  இந்த இனத்திற்கு ஒதுக்கபட்டது.

காரணம் அக்காலத்தில் , ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்க கூடிய வேலை என்பது மக்களால் வெறுக்கப்பட்டது. அதனால் , அது போன்ற வேலைகள் இழிவான வேலைகள் என்று கருதி , வேற்று இனத்தவர்களுக்கு அவ்வேலைகள் வழங்கப்பட்டன.

இன்று நிலை தலை கீழாக மாறிய தால் எல்லோரும் அவ்வேலையை செய்ய , ஆசை கொண்டு , அல்லாடுகிறார்கள் .









பெண்ணுக்கு ஜாதி இல்லை !

சமீபமாக ஒரு சில பதிவுகள் படித்தேன் ! 
வேறு ஜாதி ஆண் வேண்டாம் என்று பெண்ணுக்கு அறிவுரை கூறும் பதிவு ஒன்று ! 
அந்த பதிவில் , பெண்ணே  பார் நம் ஜாதியில் உள்ள ஆண்கள் கேரளா பெண்களை திருமணம் செய்து கொண்டு எவ்வளவு சந்தோசமாக வைத்திருக்கிறார்கள் ! 
இப்படிப்பட்ட ஆண்களை விட்டுவிட்டு நீ வேறு ஜாதி ஆணை திருமணம் செய்து கொண்டால்  எப்படி நீ சந்தோசமாக இருக்க முடியும்  என்று அந்த பதிவு கூறுகிறது. 
மேலும் வேறு ஜாதி ஆணை திருமணம் செய்தால் அது நம் ஜாதிக்கு இழுக்கு என்பது போல் அந்த பதிவு முடிவுற்றது . 

இதில் வேடிக்கை என்னவென்றால் , அந்த பதிவிலேயே கூறி விட்டார்கள் , அவர்கள் ஜாதி ஆண்கள் கேரளா பெண்களை விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று ! பிறகு அறிவுரை மட்டும் ஒரு பெண்ணுக்கு கொடுக்க என்ன அருகதை இருக்கிறது ஒரு ஆணுக்கு ! ஜாதிய கோட்பாடுகள் எல்லாம் பெண்ணுக்குத்தான் இந்த சமுதாயம் கொடுத்திருக்கிறது . ஆணுக்கு அல்ல . அல்லவா ?

இது உண்மையா ?

இல்லை உண்மையில் ஜாதியை காக்க வேண்டுமாயின் ஆண் தான் ஜாதியை காக்க வேண்டும் . இது பெண்ணுக்கு இல்லை. 

பெண் ஜாதி இல்லாதவள்!
பெண் சாபம் இல்லாதவள் !
பெண் தோஷம் இல்லாதவள் !
எந்த ஒரு சம்ருதாயங்களும்  பெண்ணுக்கு பொருந்தாது !

ஆண் சமுதாயம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! எப்போதும் , எல்லா கோட்பாடுகளையும் பெண்ணுக்காக எழுத  கூடாது  ! அதை சொல்ல ஆண் ஒன்றும் ஆண்டவன் இல்லை ! 

ஆண்களுக்கு தான் இந்த சமுதாயம் ஜாதியை தன் பெயருக்கு பின்னால் போட்டு கொள்ள அனுமதி அளித்துள்ளது. எங்கேனும் , எந்த பெண்ணாகிலும் தன் பெயருக்கு பின்னால் ஜாதி போட்டு பார்த்து இருக்கிறோமா ?

இல்லை . ஒரு பெண் ஜாதியின் பெயரை தன் பெயருக்கு பின்னால் போடமாட்டாள் ! போடவேண்டிய அவசியமும் இல்லை . வடஇந்திய பெண்களை காட்டாதீர்கள் . அது ஜாதியின் பெயர் இல்லை குடும்ப பெயர். அது பெரிய வரலாறு கொண்டது. நம் சமூகத்தில் ஆண்கள்தான் ஜாதியை காக்க வேண்டும் . பெண் அல்ல. சரோஜினி நாயுடுவும் , முத்துலட்சுமி ரெட்டியும் தமிழ் சமூகம் இல்லை. வேலு நாச்சியார் இருந்தாரே ! என்றால் , அரசியை நாச்சியார் என்றும், மாதேவியார் என்றும்  அழைக்கும் வழக்கம் நம் தமிழ் சமூகத்தில் எப்போதும் உண்டு . குந்தவை நாச்சியார் ,இருந்துள்ளார். சிங்கள நாச்சியார் வாழ்ந்துள்ளார். இவைகள் ஜாதியின் பெயர்கள் அல்ல . இந்த அரசியார் கூட தன ஜாதி ஆணை 
மணக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது .

அதென்ன ஆணுக்கு மட்டும் ஜாதி உண்டா ? உண்டு . நாம்  என்ன தொழில் செய்கிறோமோ  , நம்  தலைமுறை என்ன தொழில் செய்து எந்த தொழிலை நமக்கும்  விட்டு சென்றதோ , எத்தைகைய மரபு சார் கல்வியை நமக்காக  விட்டு சென்றதோ அது தான் ஜாதி . இது நாம்  செய்யும் தொழில் . பெண்ணுக்கானது அல்ல . ஒரு வேலை நாமும் அந்த தொழிலில் இப்போது இல்லை . அது தொடர்பாக எந்த தகவலும் நமக்கு  தெரியாது என்று ஆண் நினைத்தால் ஆண்களுக்கும் ஜாதி பொருந்தாது .

தயவு செய்து பெண்ணை துரத்தாதீர்கள் ! ஆண் ஆதிக்கத்தை நிலை நாட்டை நம் வீட்டு பெண்ணையே பலி கொடுப்பது மிக அநியாயம் ! விட்டு விடுங்கள் ! எந்த ஜாதியில் திருமணம் செய்தாலும் , ஓரு பெண் பிறந்த வீட்டிற்கு சொந்தமில்லை . மறந்துவிடாதீர்கள் !



tamil ladies paintings க்கான பட முடிவு







Wednesday, 31 May 2017

2050 ல் இந்தியாவில் 50 மாநிலங்கள் ! தமிழகம் மூன்று !

https://kddfonline.com/2012/02/10/india-redrawn-time-to-have-50-states/







































2040 - 2050 களில் இந்திய 50 மாநிலங்களை கொண்ட நாடாக இருக்கும் என்று கூறபடுகிறது . இதற்கான வேலைகள் தான் எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது.

தமிழ் இனத்தை , இந்தியா தமிழன் , இலங்கை தமிழன், மலேசியா தமிழன், சிங்கப்பூர் தமிழன், கனடா தமிழன், மொரிசியஸ் தமிழன் இப்படி வகை வகையாக பிரித்தனர் .
ஏன் தஞ்சையில் , ONGC    ஆரம்பிக்கும் முன்பு தான் , தஞ்சை நாகை மாவட்டம், தஞ்சை மாவட்டம் , திருவாரூர் மாவட்டம் என்று மூன்றாக பிரிக்கப்பட்டது.

அதே கொள்கை தான் அடுத்த இலக்காக உள்ளது. அது தான் தமிழகத்தை மூன்றாக பிரிப்பது. தெற்கு தமிழகம், மேற்கு தமிழகம், வடதமிழகம் என்பது. அதன் பிறகு ஒரு போராட்டம் என்றால் கூட யாரும் ஒன்று சேர மாட்டார்கள் .

என்ன செய்யலாம் ?

ஒற்றுமையாய் இருக்க வேண்டியது நம் பொறுப்பு.

ஜாதி , மத சண்டைகளை தவிர்ப்போம்.
ஊடகங்கள் , பத்திரிகைகள் சொல்வதை காதில் வாங்காமல் தவிர்ப்போம்.

ஒற்றுமை ஒன்றே நம் இனத்தை காக்கும் !



வட தமிழ்நாடு ,

தென் தமிழ்நாடு

மேற்கு தமிழ்நாடு என 3 ஆக பிரியும்.

மைசூர்,

வட கர்நாடக ,

கராவளி

சீமந்தரம் ,

ஆந்திரம் ,

தெலுங்கான என பிரியும்.

ஒரிசா

கோசலம் என பிரியும்

மத்திய மகா ராஷ்டிரா ,

கொங்கன் ,

மகாராஷ்ரம் என பிரியும் .


குஜராத் ,

சௌராஷ்டிர , மற்றும் குஜராத் என 2 ஆக பிரியும் .

கிழக்கு மத்திய பிரதேசம் ,

விதர்பா ,

உஜ்ஜயினி ,

மத்திய பிரதேஷ் என பிரியும் .

ஜோத்பூர்,

உதய்பூர் ,

ஜெய்பூர் என பிரியும் .

பஞ்சாப்

ஜம்மு

காஷ்மீர்


எச்சரியாக இருக்கவேண்டியது தமிழன் மட்டும் அல்ல. ஒவ்வொரு இந்தியனும் தான் !


Tuesday, 30 May 2017

ஜல்லிக்கட்டு போராட்டமும், மாட்டு கறி போராட்டமும் !

மாடு மற்றும் மாட்டு கறி குறித்த அரசின் ஆணை !

1. நோயுற்ற மாட்டை இறைச்சிக்கு விற்க கூடாது.

2. கருவுற்ற மாட்டை இறைச்சிக்கு விற்க கூடாது .

3. 6 மாதம் கூட ஆகாத சிறு குழந்தை மாட்டை இறைச்சிக்கு விற்க கூடாது.

4. இடைத்தரகர்களிடம் மாட்டை இறைச்சிக்கு விற்க கூடாது.

5. இறைச்சிக்கு பெரும் தளம் பதிவு செய்ய பட்டிருக்க வேண்டும் .

இவ்வளவுதான் !

ஆனால் ,

பொய் செய்தி பரப்பி ,மக்களை மனம் மாற்றம் செய்து ,மான்சான்டோவிர்க்கும் ,மரபு மாற்று விதைக்கும் துணை நிற்க போராடுகிறது  ஊடகங்கள் .

சும்மாவே ,தமிழர்களுக்கும் ஆரிய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதால் , இதை பயன்படுத்தி மக்களை மாட்டு கறி தின்ன வைத்து , அதை வைத்து ஜல்லிக்கட்டை வாபஸ் பெற போராடுகிறது  peta அமைப்புகள் ! 

தமிழா ஜல்லிக்கட்டில் மாட்டுக்கு நாம் தோழன் என்று வாக்களித்தோம் . மறந்தாயா ?

நம்மாழ்வார் கூறுகிறார் , மாடு வயதாகி இறந்து விட்டால் உன் வீட்டு கொள்ளையில் புதைத்து அதில் ஒரு மாங்கன்றை நட்டு வை . உனக்கு அள்ளி கொடுக்கும் என்று கூறுகிறார்.

வயதான மாட்டை கேரளாவில் விற்று காசு பாப்போம் என்று எண்ணாதே!
என் வீட்டில் ஒருவன் என் வீட்டு மாடு என்று கூறி விட்டு , வயதானால் விற்போம் அல்லது வெட்டி உண்போம் என்று கூறுவதை உன் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கும் பொருந்தும் அல்லவா ?

உணவு முறையில் அரசு தலையிட கூடாது தான்! ஆனால் இதன் பின்புலம் அரசின் சூழ்ச்சியும் , பீட்டா வின் சூழ்ச்சியும் இருக்க , மாயையில் வீழ்ந்து விடாதே !

மாடுகள் நம் மண்ணின் தெய்வங்கள் தான் ! 

கோ எனும் மாடு இல்லாத ஊரில் குடி இருக்காதே என்று நம் முன்னோர் கூறி இருக்க , நாம் மாடு உண்டோம் , அல்லது உண்போம் என்பது முட்டாள் தனம் !

விபசாரம் குறித்து ஏதேனும் சட்டம் வந்தால் அதை எதிர்ப்போம் என்று முட்டாள்தனமாக எதையாவது நாம் செய்வோமா ? செய்ய மாட்டோம் இல்லையா ! அப்படிதான் இதுவும் !



-----------------------------------------------


ஜல்லிக்கட்டுக்கு என்றால்  போராடுவாங்கலாம் . அது காளைகள் பிரச்னையாம் .இவனோட வீர பிரச்சனையாம்  .

பசு மாட்டுக்கு என்றால்  போராடமாட்டானாம் . சரி ருசி .பசு கறி பிரியாணி , கன்னுகுட்டி பஜ்ஜி ,தின்னே அழிப்பானாம்.

ஏண்டா முட்டாள் , பசு மாட்டை எல்லாம் அழிச்சிட்டு காளை மாட்டை மட்டும் வைச்சி ம --- புடுங்க போற !

சுயநலம் பிடித்த தமிழா , உன் வீரம் காட்ட மட்டும் தான் மாட்டை பாதுகாக்கிறாயா ? மாடுகளின் மீது அன்பு கொண்டவனா நீ ?

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சில ஆண்டுகள் வரை கூட , அதை எதிர்த்து தன்னிச்சையாக ஜல்லிக்கட்டு நடத்தாமல் மெரினாவில் போராடி , சட்டம் கொண்டு வந்து ,அடிமாட்டுக்கு போன மாட்டையெல்லாம் பிடித்து விட்டோம் என்று சவுடால் விட்டு, கதை அளந்த நீ

பசுமாட்டு கறி என்றதும் , போராடாமல் சட்ட திருத்தம் எதுவும் வேண்டாமல் , உடனே மாட்டை நடு ரோட்டில் வெட்டி பஜ்ஜி போட்டு திங்குறியே ! வெட்கமாக இல்லை உனக்கு !

உண்மையிலேயே உனக்கு மாடுகள் மீது அக்கறை இருந்திருந்தாலோ , உணவு சார்ந்த எண்ணம் இருந்திருந்தாலோ ,
பசு வதை கூடங்களை எடுக்க சொல்லியும் ,
இறைச்சி ஏற்றுமதியை நிறுத்த கோரியும் நீ மீண்டும் மெரினாவில் கூடி இருப்பாய் !

ஆனால் நீ

மானம் கெட்டவன்!

கறி சோறு என்றால் , கறியாக கிடப்பது யார் என்று கூட யோசிக்க மாட்டாய் அல்லவா ?

ஒரிசா பாலு கூறுவார் , தமிழன் மட்டும் தான் இந்த உலகின் தலை சிறந்த அறிவாளி  . இந்த மண் அப்படி ஒரு சக்தி கொண்டது. புவி ஈர்ப்பை எதிர்க்கும் வல்லமை கொண்டது . அதனால் இங்கு பிறக்கும் நாய் கூட , உலகின் எந்த ஒரு நாயையும் விட அறிவாய் யோசிக்கும் என்று !

ஆனால் சுப்ரமணிய ஸ்வாமி கூறுவார், இவனுங்க பூரா முட்டாளுங்க என்று !

வர வர , தமிழனின் செயல் , சுப்ரமணிய ஸ்வாமியை நினைக்க வைக்கிறது !


நிறுத்து , மாட்டு கறி உண்பதை நிறுத்து !
மாட்டு கறி தடை சட்டத்தை  எதிர்ப்பதை நிறுத்து !

போராட முடிவு எடுத்தால்  ,
ஒட்டு மொத்த மாட்டுக்காகவும் போராடு !

மாட்டு கறி , சாப்பிட்டு கொண்டிருந்த பிராமண இனம் , தமிழனிடம் கற்று கொண்டது அதை உண்ண கூடாது என்று !

ஆனால் தமிழா , கேரளா விற்கு நீ தரும் ஆதரவு இருக்கிறதே  ! அது உடலை சிலிர்க்க செய்யும் செயல் !

இன்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் மலை அடிவார பகுதிகளில்  , ஒன்றுக்கு மேற்பட்ட  கணவர்களை மணக்கும் வழக்கம் உள்ளது. ஒரு நாள் , ஒரு பெண் ஒரு ஆணை தான் மணக்க வேண்டும் என்று பிஜேபி அரசு சட்டம் போடும்! நீ என்ன செய்வாய் ? நீ யார் அவன் கலாச்சாரத்தில் தலையிட என்று கூறி , அவனோடு சேர்ந்து போராட பார்ப்பாயா ? அல்லது , உன் வீட்டு பெண்ணுக்கெல்லாம் 5 புருஷன் தேடி தருவாயா ?


இன்னும் அகோரிகள் பிணம் உண்ணுகிறார்கள் . அதை தடுக்க சட்டம் வந்தால் என்ன செய்வாய் ?

வட இந்தியாவில் மலை சார் பகுதிகளில் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் உண்டதால்   போலீஸ் கைது செய்தது .அதை  தடுக்க சட்டம் வந்தால் என்ன செய்வாய் ?

குழந்தை கறி உண்ணும் கூட்டம் இந்த உலகில் உள்ளது . அதை தடுக்கும் சட்டம் வந்தால் என்ன செய்வாய் ?

தமிழா !

உன் உணவு கலாசாரம் அற்புதமானது !
அதை கண்ட நாய்களிடம் தொலைத்து விட்டு ,
கண்டதையும் உண்டு கொண்டு திரிகிறாய் !

ஆனால் ,

கேவலமாக உள்ளது உன் ஈன செயல் !

ஆணாதிக்கம் கொண்டவன் இந்த தமிழன் !

காளைக்கு ஒரு சட்டம் !
பசுவிற்கு ஒரு சட்டம் பேசுவான் !

இன மானம் அற்றவன் தமிழன்!
தன்மானம் அற்றவனும் தமிழன் !

சுய அறிவு அற்றவன் தமிழன்!

இவனுக்கு போய் இறைவன் எல்லா வளங்களையும் கொடுத்தானே !
பயன்படுத்த தெரியாதவன் தமிழன்!
பாதுகாக்க தெரியாதவன் தமிழன்  !

அப்படி பார்த்தால் ,

இலுமினாட்டிகள் இந்த மண்ணை சுரண்ட நினைப்பதில் கூட தவறு இல்லை !

நீ யோசிக்க மாட்டாய் என்றால் ,

மீண்டும் சொல்கிறேன் !

கறி சோறு என்றால் , கறியாக கிடப்பது யார் என்றும் யோசிக்க மாட்டான் !
அவன் தான் தமிழன் !




-----------------------------------------------------------------------


மாட்டு கறி க்காக எவனோ அடி வாங்குனான் ன்னு நாமெல்லாம் பொங்குறோமே ! ஜல்லிக்கட்டுக்காக எவனாவது பொங்கி இருப்பானா ?

இஸ்லாமிய சகோதர்கள் நம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நமக்கு உதவினார்கள் . உணவளித்தார்கள் . ஆனால் நன்றாக கவனியுங்கள் ! போராட்டத்திற்கு பிறகு ,ஜல்லிக்கட்டில் யாரும் பங்கு பெற வில்லை. அது அவர்கள் மத  சடங்கு இல்லை .
அவர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் !

அது ஏன் நம்மிடம் இல்லை. அவர்களும் போராடட்டும். நாமும் உதவுவோம். ஆனால் முதல் வரிசையில் கறி உண்ண அமர்வது நியாயமா ?

இஸ்லாமியர்களிடம் இருந்து கற்று கொள்ளுங்கள் ! உதவுவது என்பது வேறு! தன கோட்பாட்டுக்கு உட்படாத கருத்தை , உணவை , செயலை செய்வது வேறு!

எவரையேனும் மாட்டு கறி உண்டதற்காக  இந்துத்துவ அடித்தால் , அதை எதிர்க்கலாம். ஆனால் ஒரு மாட்டை அடித்து விருந்து வைக்காதீர்கள் ! அதற்க்கு பெயர் எதிர்ப்பு அல்ல !


-----------------------------------------------------------------------


சீதனத்திற்காக மாடுகள் வளர்த்தோம்.- சீதன தடை சட்டம் விதித்தார் - C.p.ராமசாமி ஐயர் - மலையாளி

Peta - நந்திதாகிருஷ்ணன் - மலையாளி! ராமசாமி ஐயரின் பேத்தி 

ஜெர்சி பசு - வெள்ளை புரட்சி - கையொப்பம் இட்டது -வர் கிசு குரியன் - மலையாளி!

மாட்டு கறி போராட்டம் - இதன் விதிமுறைகளை விதித்த பிரதமர் அலுவலக உறுப்பினர்களில் 80% - மலையாளி

IITயில் விருந்து கொடுத்தவன் - மலையாளி |

அடித்தவன் யார்? UP ஐ சேர்ந்த RSS

ஆனால் போராடுபவன் தமிழன் | வசமாய் வலையில் சிக்கினான்!

இந்தியாவிலேயே மோடி யை அதிகம் எதிர்ப்பவர்கள் இருவர் |

ஒருவர் மலையாளி பிரனாய் விஜயன், மற்றவர் மே.வங்கம் மம்தா |

இருவரும் பொதுவுடமை கட்சி!

இருவரையும் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை!- காரணம்,

1950ன் கண்கெடுப்பு படி யூதர்கள் வாழ்ந்த மாநிலம் கேரளமும், மே.வங்கமும். இன்று யாரும் இல்லை. அவர்கள் எங்கோ சென்று விட்டார்கள் என்று கூறுகிறது மத்திய அரசு |

அந்த இலுமினாட்டி கையாட்கள் எங்கே சென்றார்கள்! யோசித்து பார் தமிழா |

வலையில் சிக்காதே!






------------------------------------------------------------------------------------------------------

Friday, 7 April 2017

ரமணா படம் பாத்தீங்களா ?

ரமணா படம் பாத்தீங்களா ?


ரமணா திரைப்படம் 2002 ம் ஆண்டு AR .முருகதாஸ் இயக்கத்தில் , ஆஸ்க்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளி வந்த படம் .

முருகதாஸ் இதுவரையில் எடுத்துள்ள திரைப்படங்கள் , தீணா , ரமணா ,  7 ம் அறிவு , கஜினி , துப்பாக்கி அப்புறம் கத்தி இவ்வளவுதாங்க !

இதில் தீணா தவிர மற்ற படங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்ப எதுக்கு இந்த தகவல் ?

காரணம் இருக்கு!

ரமணா திரைப்படத்தில் , ஹீரோவின் பின்னால் பல பேர் வேலை பார்க்கிறார்கள் என்பதை கண்டறிந்த ஒரு போலீஸ் மட்டும், அவர்கள் யார் யார் என்று தேட ஆரம்பிக்கும். முதலில் அவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்று கண்டறிந்து , அவர்களுக்குள் என்ன ஒற்றுமை உள்ளது என்று தேடும் போது , ஒரு ஒற்றுமையும் இருக்காது.

மீண்டும் தேடுவார் அந்த போலீஸ் காரர். அப்போது இரண்டாம் நிலை தகவலில் ஒன்றை கண்டறிவார். அது என்னவெனில் , அவர்கள் அனைவரும் ஒரே கல்லூரியில் ஒரே பேராசிரியரிடம் பயின்றவர்கள் . இந்த தகவல் தான் அவர்கள் யார் யார் என்று  கண்டு பிடிக்க உதவும் .

அதே கதை மீண்டும் துப்பாக்கி படத்தில் ஹீரோவின் துணை ஆள் என்பதில் இருந்து வில்லனின் ஆள்கள் என்று மாறி இருக்கும். இப்போது முருகதாஸ் அவர்களுக்கு பெயர் சூட்டுகிறார். அவர்கள் ஸ்லீப்பர் செல்கள் என்று கூறுவார். அதற்க்கு விளக்கமும் கொடுப்பர். தெரிந்தோ , தெரியாமலோ , நம்மை சுற்றி பலரும் அந்த வில்லன்களுக்காக வேலை பார்க்கிறார்கள் என்று கூறுவார்.

இந்த கதையை இப்படியே நினைவில் கொள்ளுங்கள்!

ஏனெனில் , இலுமினாட்டிகள் யார் யார் என்று எண்ணுகிறீர்களா , அல்லது சந்தேகம் கொள்கிறீர்களோ அவர்கள் யார் என்று கண்டறிவது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களது வெளிப்புற முகவரி வேறு வேறாக இருக்கும். ஆனால் , இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும் .

இப்படியாக 13 நிலையில் வெவ்வேறு தரப்பு மக்கள் இதில் உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் உள்ளவர்கள் ,வெவேறு ஊர்களில் வேவேறு மொழிகளில் பிறந்தவர்கள் . ஆனால் அங்கு ஒரு ஒற்றுமை இருக்கும்.


அப்படி ஒரு நிலைதான் உள்ளவர்கள்:


அம்பானி

அதானி

டாடா

பிர்லா

வல்லபாய் படேல்

P  .B .கோத்ரேஜ்

இவர்கள் எல்லோரும் , தொழில் துறை மற்றும் அரசியல் துறையில் இருப்பவர்கள். அனால் இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது.

அது தாங்க இவங்க எல்லோரும் பார்சி இனம்.

இதில் முக்கியமாக இருவரை  விட்டுவிட்டு தான் கூறுகிறேன்.

ஒருவர்  முகம்மது அலி ஜின்னா .
மற்றொரு குடும்பம் வாடிய குடும்பம்.

நீங்கள் ஜின்னா வை நினைத்தாலே கோபம் கொள்பவரா ? எனில் இன்று முதல் பிரித்தானியா தயாரிப்புகளை உண்ணாதீர்கள்.

ஏன் எனில் ஜின்னாவின் பேரன் தான் பிரித்தானிய நிறுவன முதலாளி . டைகர் பிஸ்கட் உட்பட!


ஜின்னா தனது ஒரு தலைமுறைக்கு முன்பு தான் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறியவர். முதல் தகவல் படி அவர் இஸ்லாமியர். இரண்டாம் தகவலின் படி அவர் பார்சி இனத்தவர்.

ஆனால் ஜின்னா , தன தலைமுறையில் தனக்கு திருமணம் ஆன பிறகு , ஒரு பார்சி பெண்ணை விரும்பி மணம் புரிந்து கொள்கிறார். காந்தி நல்லவரா , ஜின்னா நல்லவரா என்று யாரேனும் கேட்டால் , நான் ஜின்னாவை தான் குறிப்பிடுவேன் என்று கூறுகிறார் காந்தி மற்றும் ராஜாஜியின் பேரன்.
 ( காந்தியின் மகனும் , ராஜாஜியின் மகளும் காதல் திருமணம் செய்தவர்கள் . அந்த வகையில் இருவரும் சம்பந்தி )

அப்படி வாழ்ந்த ஜின்னாவிற்கு தெரியாமலேயே , அவரது மனைவி வழி உறவுகள் கொல்கத்தாவில் இந்து முஸ்லீம் பிரச்சனைக்கு வழிவகுத்தன. இதனை தொடர்ந்து பீகாரில் , முஸ்லீம்கள் கொல்லப்பட , அதை தொடர்ந்து மும்பையில் இந்துக்கள் கொல்லப்பட இவ்வாறு மாறி மாறி பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தது. இதன் விளைவு தான் பாகிஸ்தான் என்று வெளி தகவல் கூறுகிறது.

ஆனால் இந்த இடங்களில் ஜின்னா சரியான முறையில் பயன்படுத்தப்பட்டார். பிரிஷாரின் பிரித்தாளும் கொள்கை. இந்தியா வில் இருந்து , பஞ்சாப் , பலுசிஸ்தான், வங்கம் தனித்தனி நாடுகளாக மாறும் என்று வாக்கு கொடுத்தனர். இதை போன்றே , திராவிட நாடும் கிடைக்கும் என்று நம்பிய, அல்லது மக்களுக்கு நம்பிக்கை கொடுத்த திராவிடர்கள் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்தனர்.

இதே போன்றே இலங்கையில் , சிங்கள , தமிழ்நாடுகள் பிரியும் என்றும் ,

மலேசியாவில் மலாய் , தமிழ் , சீனா மக்களுக்கென நாடுகள் பிரித்து தரப்படும் என்று வாக்கு கொடுத்திருந்த ஆங்கிலேயர்கள் ,

ஜின்னாவை கொண்டு காய் நகர்த்தி , பாஞ்சாபையும் பலுசிஸ்தானையும் , பாகிஸ்தான் என்று பெயர் மாற்றினர் .

இலங்கை பிரியவில்லை. காரணம் , இந்து முஸ்லீம் போல் சிங்கள தமிழ் பிரச்னை இருக்காது என்று கூறினார்.

மலேசியாவிலும் வாக்கு பொய்யானது.

ப்போது தமிழர்கள் மற்றும் பஞ்சாப் இனம் பிரிக்க பட்டாகி விட்டது. இவர்கள் பிரிந்து தான் இருக்க வேண்டும் என  முடிவு செய்து தீர்மானம் நிறை வேற்றி இருந்தார்கள் போலும் !

பிறகு என்ன ? வேலை முடிந்து விட்டது .  ஜின்னா மகளின் பிறந்த தினத்திலேயே சுதந்திரம் வழங்கப்பட்டது .

ஆனால் ஜின்னாவும் நாட்டை ஆள வில்லை . அடுத்த 6 மாதங்களில் இறந்து போனார். அவருக்கு காசநோய் என்று கூறப்படுகிறது. உண்மையா என்பது அவருக்கு மட்டுமே தெரியும் !

இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கிய மௌண்ட்பேட்டன் பிரபுவின் , மகன்தான் பிலிப் . அவர் மனைவி தான் ,

இங்கிலாந்து ராணி  எலிசபெத் !

அடுத்தது ஜின்னா வின் மருமகன் அந்த வாடியாவை பற்றி பாப்போம் !
இவரும் ஒரு பார்சி தான்.


இந்தியாவை பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் மாபெரும் குடும்பம்.இந்திய மருத்துவம்,தொழில்நுட்ப்பம் எல்லாம் இவர்களின் கைகளில்தான் உள்ளது.

போக்குவரத்து துறையும் இவர்கள்தான், காப்பீடு துறையும் இவர்கள் தான் !


நம் வரலாறு புத்தகம் நம்மிடம் ஏன் இதையெல்லாம் சொல்வதில்லை ?






(சோராப்ஜி, மோடி, காமா, வாடியா, ஜீஜீப்ஹோய், ரெடிமனி, டாடிசெத், பெட்டிட், பட்டேல், மேத்தா, ஆல்ப்லெஸ், டாட்டா மற்றும் பலர் பார்சி இன பிரிவினர் )


-------------------------------

ரஜினி காந்த்  - இலுமினாட்டியா ?

சமீப காலமாக , ஹீலர் பாஸ்கர் , சீமான் இவர்கள் உரை, கார்த்திக் ஸ்ரீனிவாச போன்ற எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள்  மற்றும் you tube கூறும் சில கருத்துக்களின் அடிப்படையில் மக்களுக்கு ஓரளவுக்கு இலுமினாட்டிகள் யார் என்பதும், அவர்களின் நோக்கம் என்ன என்பதும் எல்லோருக்கும் தெரிகிறது.

இந்நிலையில் இந்தியாவில் யார் யார் இந்த குரூப்பில் இருக்கிறார்கள் என்றும் ஒரு சிலர் கருத்து கூறுகிறார்கள் .

அதே சமயம் , தமிழகத்தில் உள்ளவர்கள் யார் என்று கூறும்போதும் அதில் ரஜினி முதல் இடம் பெறுகிறார். ஒரு வேளை ரஜினி தான் தமிழகத்தில் இருந்த முதல் இலுமினாட்டியா என்றால் மிக மிக தவறு .அவருக்கு முன்பே 100 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இன்னும் சொல்ல போனால் மிக பெரிய  வரலாறே உள்ளது.

சரி , அதை பற்றி கொஞ்சம் கொஞ்சமா பார்க்கலாம்.

அதுக்கு முன்னாடி , ரஜினி பற்றி பேசுவோம்.

ரஜினி காந்த ஒரு இலுமினேட்டி என்று வடஇந்திய எழுத்தாளர் ஒருவர் 4 ஆண்டுகளாக எழுதி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டிலோ , தென் இந்தியா விலோ இலுமினேட்டி என்றாலே என்ன வென்று யாருக்கும் தெரியாது .

அந்நிலை இன்று இல்லை என்று நிச்சயமாக கூறலாம். முழு விவரம் தெரியாவிட்டாலும் ,ஓரளவிற்கு இலுமினேட்டி என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரிவது என்பது ஹீலர் பாஸ்கர் என்ற மாமனிதனால் தான் என்றால் அது மிகை ஆகாது .

முதலில் இலுமினாட்டிகளின் சின்னங்கள் என்னென்ன என்று பாப்போம். பிறகு நீங்களே புரிந்து கொள்வீர்கள் ரஜினி ஒரு இலுமினேட்டி என்று !

ஒற்றை கண்

பிரமிடு

ஐந்து முக நட்சத்திரம்

 ஆறு முக நட்சத்திரம்

காபாலா எனும் ரகசிய மதம்

பெண் கடவுளுக்கு தரும் நரபலி

சாத்தானின் கொம்பு

V எனும் வெற்றி குறியீடு

கருமை வெண்மை கொண்ட சதுரங்கம்

சிகப்பு நிற சூரியன்

இரட்டை தலை கழுகு

நாய்

666 என்ற எண்

இதை எல்லாம் கடந்த , சாத்தானின் மீது உள்ள நம்பிக்கை.பேய்களை நல்லவர்கள் என்று நம்புவது.

மாயா ஜாலங்கள் நிறைந்தது தான் இந்த இலுமினாட்டிகளின் வாழ்க்கை .


இப்போ ரஜினிக்கும் இதற்கும் என்ன தொடர்பு என பாப்போம்.

ரஜினி யின் முழு பெயர் சிவாஜி ராவ் காய்க்வாட் . இந்த காய்க்வாட் என்பது குடும்ப பெயர். இவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்திருந்தாலும் , குஜராத் தான் இவரது பூர்வீகம். ( மகாராஷ்டிரம் பிரிக்கப்படும் இருந்த ஒருங்கிணைக்க பட்ட மாநிலம் )இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் . குஜராத் மாநிலம்  , இந்தியா வரலாற்றில் முக்கிய இடம் .


ரஜினி , சிவாஜி ராவ் என்ற பெயரில் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றும் போது , குஜராத் மக்களின் ரகசிய குழு என்ற பெயரில் மும்பையில் ஒரு குழு இயங்கி வருவதை அறிந்து , நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது முதல் மாத சம்பளத்தில் 666 ரூபாய் செலுத்தி இலுமினேட்டி குழுவில் உறுப்பினர் ஆகி உள்ளார். அப்போது பெற்ற அந்த சான்றிதழ் ரஜினியின்  வீட்டில் இப்போதும் இருப்பதாக அந்த வடஇந்திய எழுத்தாளர் கூறுகிறார். மேலும் அங்கு தான் இவருக்கு ரஜினி காந்த என்று பெயர் மாற்றப்படுகிறது.

1975 ல் அபூர்வ ராகங்கள் என்ற கலாசார சீர்கேடு சார்ந்த தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆகிறார்.

பிறகு சில படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் , தானே திரைப்படங்களுக்கு பெயர் வைப்பேன் என்ற ஒப்பந்தத்தின் பெயரில் தான் திரைப்படங்களில் நடிக்கிறார்.

1978ம் ஆண்டு ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரை படத்தில் , ( இது ஒரு பேய் படம் ) இருந்து தன்னுடைய குழுமத்திற்கு விசுவாசியாக மாறுகிறார்.

ஆனால் மக்களிடம் எம்ஜிஆர் பெற்ற பேரை பெற வேண்டும் என்ற  எண்ணத்தில் ,

அதே ஆண்டு வெளியான பைரவி என்ற திரைப்படத்திற்கு , தாணுவை வைத்து தனக்கு தானே சூப்பர் ஸ்டார் என்று பெயர் சூட்டி கொள்கிறார். அதே படத்திற்கு அண்ணா சாலையில் 80 அடி உயர கட்டவுட் வைக்கிறார். இது தான் கட் அவுட் கலாச்சாரத்தின் சாதனைகள் வளர காரணமாக அமைந்தது.

இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும், இலுமினாட்டிகளின் சின்னமே.
பைரவி என்பது நாய் என்று பொருள் படும்.

மீண்டும் வெண்மையும் கருமையும் கொண்ட சதுரங்கம் கொண்ட போஸ்டரோடு வெளியாகிறது சதுரங்கம் திரைப்படம் .  இதுவும் 1978 ல் தான் வெளியாகிறது. ( இன்றும் விசுவநாதன் ஆனந்த பயன்படுத்தும் சதுரங்கமும் இது தான் என்பது வியப்பாய் உள்ளது . )

பிறகு அல்லாவுதீனும் அற்புத விளக்கும் என்ற திரைப்படத்தில் மாயாஜாலங்களோடு நடித்தார் .

காளி என்னும் திரைப்படம் , இலுமினாட்டிகளின் பெண் தெய்வத்தை குறிக்கவும், டைகர் திரைப்படம் மீண்டும் நாயை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.

1980 ல் இவர் நடித்த திரைப்படத்தின் பெயர் நட்சத்திரம். இதுவும் இலுமினேட்டி சின்னம்




நாம் நினைப்பது போல் முரட்டு காளை திரைப்படம் , ஜல்லிக்கட்டில் பெருமை பேசுவது அல்ல. 1980 ல் தான் இந்த திரைப்படம் வெளிவந்தது . அதில் ரஜினி இரண்டு கொம்புகளோடுதான் நிற்பார். இலுமினேட்டி களின் முக்கிய சின்னம் இது.

1981 ல் கழுகு என்ற திரைப்படம் வெளிவந்தது . கழுகும் இவர்களது சின்னம்தான். அதே சமயம் இந்த திரைப்படத்தில் முழுவதுமாக நரபலி கொடுப்பது குறித்தும், யார் யாரை நரபலி கொடுக்கிறார்கள் என்பது குறித்தும் கூறியுள்ளார்.

1981 சுதந்திர தினத்திற்கு வெளிவந்த திரைப்படம்தான் நெற்றிக்கண் . ஒற்றை கண் அல்லது நெற்றி கண் இதுவும் முக்கிய சின்னம் தான்.

1982 ல் கெட்டவர்களை எல்லாம் நல்லவனாக காட்ட வேண்டிய சூழ்நிலையில் , வடஇந்திய ரௌடிகள், துடி துடிக்க காவல்துறை அதிகாரியின் குழந்தைகளை நடு ரோட்டில் கொன்ற ரங்கா வின் பெயரை ஹீரோ என்ற அந்தஸ்திற்கு கொண்டு வந்தார்.

பின்னர் , தன்னை குறித்து மூன்று முகம் , நான் மகான் அல்ல , நான் சிவப்பு மனிதன் என்று பெயர் கொடுத்தார் ரஜினி.

சிவப்பு சூரியன் திரைப்படமும் , மாவீரன் திரைப்படமும் கூட இலுமினேட்டி சின்னங்கள். இந்த ஊர்காவலன்  என்றால் knight templers என்று பொருள்.

அதே போல் இவரது எல்லா படங்களிலும் சம்பந்தமே இல்லாமல் மாய ஜால காட்சிகள் சில இருக்கும். குருசிஷ்யன் படத்திற்கும் , அதன் இறுதி காட்சிக்கும் என்ன சம்பந்தம்?

அதிசய பிறவி , இறப்பிற்கு பின் என்ற நோக்கோடு எடுக்கப்பட்டது.

பாபா படம் சொல்லவே வேண்டாம்.

சந்திரமுகி படமும் பேய் கதைதான்.

இதில் கடைசியில் சேர்ந்தது தான் கபாலி . இதுவும் அவர்களது கடவுளின் பெயர் ஆகும்.

நீங்களே ஒப்பிட்டு பாருங்கள் , ரஜினி தன ரகசிய குழு சார்ந்த பெயர்களை மட்டுமே தனது திரைப்படத்திற்கு வைப்பார் .

அது மட்டும் இல்லாமல் சம்பந்தம் இல்லாத மாயாஜால காட்சிகளும், இரட்டை மனைவி ஆதரவும்  இவரது திரைப்படங்களில் காணலாம்.

கபாலி திரைப்படம் முடிந்ததும் , ரஜினியும் அவரது மகளும் அமெரிக்காவில் ஓய்வெடுக்க சென்றனர். யாரவது தனது மகளோடு ஒய்வு நாட்களை கழிப்பார்களா ? மனைவியுடன் அல்லவா செல்ல வேண்டும். அப்படி சென்றதால் தான் , இரண்டு மாதங்கள் கழித்து தமிழ்நாடு திரும்பும் போது ஐஸ்வர்யா ரஜினி ஐ .நா வில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு செயலர் ஆனார். 

இதற்க்கு முன்பு சென்ற பயணத்தில் தான் சௌந்தர்யா விலங்குகள் பாதுகாப்பு நல செயலர் ஆனார்.

ஆனால்  இன்றும் தமிழ்நாட்டில் சிலர் , ரஜினி ஒன்றுமே தெரியாத அப்பாவி என்பது போல் பேசி வருகின்றனர்.

அது தான் வேடிக்கையாக உள்ளது.

யோசித்து பாருங்கள் ஐ.நா வில் நுழைவது சுலபமா ?
ஒருவர் தனது பாஸ்போர்ட்டை மறந்து விட்டால் அந்த விமானம் காத்திருக்குமா ?

ரஜினி அந்த அளவிற்கு முக்கியமானவர் . இலுமினாட்டிகளின் கை எங்கேல்லாம் ஓங்கி உள்ளதோ அங்கெல்லாம் இவர் எதையும் பெறுவார். இதன் அடிப்படையில் தான், மலேசியா மன்னர் இவருக்கு விருந்து வைத்தார்.

ஒபாமா வும் கபாலி படம் பார்த்தார்.

ஜப்பானில் ரஜினி கொடிகட்டி பறக்கிறார்.

அமெரிக்காவில் இவரது திரைப்படம் வெளியாகிறது.

இதோடு இல்லாமல் இவர் , இவரது குழுவில் இல்லாதவர்களுக்காக பேசுவதும் கிடையாது .பார்ப்பதும் கிடையாது.

ஷாருக் கானும் சந்திக்கிறார். தோனியும் சந்திக்கிறார்.

இவர் எமன் படத்தையும் பாராட்டினார்.

மொட்டை சிவா கெட்ட சிவனையும் பாராட்டினார்.

குற்றம் 23 யம் பாராட்டினார்.

அது மட்டும் அல்ல , சமீபமாக , பல நடிகர்கள் ரஜினி நடித்த அதே பெயரில் நடிப்பதும், அவரது பாடல்களை ரீமிக்ஸ் செய்வதும் ஏன் தெரியுமா ?

இப்போது சேர்ந்திருக்கும் நடிகர்கள் எல்லாம் , டாப் மோசட் சீனியரின் படத்தை, பட பெயர்களை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று சட்டம் உள்ளது போலும்.

லாரன்ஸின் படங்கள் எல்லாம் பேய் படங்கள் என்பதையும் நினைவிற்கொள்க !

G.v பிரகாஷ் , சூர்யா , தமன்னா , பிரபு தேவா , விஜய் சேதுபதி , என்று பேய் படத்தில் நடிப்பவர்கள்  லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம் !


radhamania.blogspot.com/.../superstar-rajnikant-is-illuminati





வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...