Wednesday, 13 September 2017

அம்பேத்காரின் வரலாறு - முழுமையாக ! ( தமிழருக்கும் , அம்பேத்காருக்கும் உள்ள தொடர்பு ! )

அம்பேத்காரின் வரலாறு - வேறு வடிவத்தில் ! - I

இந்திய சுதந்திரத்திற்காக ஒரு நிமிடம் கூட செலவழிக்காமல் , அதன் நற்பெயரை மட்டும் சுமப்பது இருவர்

1. அம்பேத்கார்
2. பெரியார் .

இந்திய சுதந்திர தினம் அறிவிக்கும் வரையிலும் ,
வேண்டாம் இந்திய சுதந்திரம் வேண்டாம் என்று போராடியவர்
அம்பேத்கார் மட்டும்தான் !

1891 ம் ஆண்டு , ஏப்ரல் மாதம் 14 ம் நாள் மத்தியபிரதேசதில் உள்ள மாவ்
( mhow ) என்ற ஊரில் பிறந்தார் பீமாராவ் . இந்த ஊர் இன்று அம்பேத்கார் நகர் என்று வழங்கப்படுகிறது.

இவரது பெற்றோர் :அப்பா பெயர் : ராம்ஜி மாலோஜி சகபால்
அம்மா பெயர் : பீமா பாய் .

இவர் அவரது பெற்றோருக்கு 14 வது  குழந்தை .
1900 ல் தொடக்க கல்வி தொடங்கிய இவர் ,
1904 ல் குடும்பமே மும்பைக்கு மாறியதால் , கல்வியை அங்கு தொடர்ந்தார்.

தன்னுடைய 15 வது வயதில் 9 வயது ராமாபாயை மணந்தார்.
1913 ம் ஆண்டு அமெரிக்கா சென்றார் .
கல்வி நிமித்தம் அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் அம்பேத்கார்.
கொலம்பியா பல்கலை கழகத்தில் சேர்ந்து  பொருளாதாரம் , அரசியல் ,பிலாசபி எனும் தத்துவம் போன்ற மேற் கல்வியினை  பெற்றார்.

1921 ல் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.

இனி கல்வி முடிந்து இந்தியா திரும்பி ,

என்ன செய்தார் என்று பாப்போம்.

அதற்கு முன்பு ,

இன்று வரை ஒரு தாழ்த்தப்பட்ட சமுகம் கல்வி பெறுவது என்பது மிக மிக அரிது என்று கருதப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து , 70 ஆண்டுகளை கடந்து விட்டோம். ஆனால் கல்வி என்பது இன்றும் மிக சிரமமாகவே உள்ளது.

அதனால் தான் அனிதாவை இழந்தோம். இன்றும் பல அனிதாக்கள் படிப்பதே இல்லை. வடக்கு பகுதிகளிலோ அப்படி ஒரு எண்ணம் என்பதே இல்லை .

ஆனால் அம்பேத்கார் கல்வி பெற்றார். எப்படி ?
அதிலும் லண்டன் மற்றும் அமெரிக்காவில் கல்வி பெற்றார். எப்படி ?
அவருடைய தந்தை ராம்ஜி மனோஜி பிரிட்டிஷ் ராணுவ பள்ளியில் ஆசிரியர் .
அம்பேத்கார் காலத்திலேயே கல்வி அரிதென இருக்கும் போது அவருடைய தந்தை , ஆசிரியர் . அதுவும் ராணுவ பள்ளியில் ?

ஆச்சர்யமாக உள்ளது அல்லவா ?இரட்டை குவளை , பள்ளிக்குள் சேர்க்க கூடாத நிலை எல்லாம் இருந்தது அல்லவா ?

ஆனால் இவர் குடும்பம் மட்டும் கல்வியில் மேம்பட்டு , அதுவும் இந்தியா எனும் மிக பெரும் நாட்டிற்கு சட்டம் கொடுக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளது . எப்படி ?

பின்புலம் என்னவாக இருக்கும் ?

அது தான் ரோத்ஸசீல்டு எனும் அங்கீகாரம் !


----------------------------------------------





கொலம்பியா பல்கலைகழகம் :
-------------------------------------------------------

1913 ம் ஆண்டு ,அம்பேத்கார் அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார் . 1921 ல் பட்ட படிப்பை முடித்தார்.

ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் எப்படி இந்த அளவிற்கு கல்வி அறிவு பெற்றது. என்றால்  அது ரோத்ஸசீல்டு கொடுத்தது.

ரோத்ஸ் சைலடுக்கும் அம்பேத்காருக்கும் என்ன தொடர்பு?
அதற்க்கு முன்பு கொலம்பியா பல்கலைக்கழகதிற்கும் , ரோத் சைலடுக்கும் என்ன தொடர்பு என்று பாப்போம்.


கொலம்பியா பல்கலைக்கழகம் , சவன்னா நதிக்கரையில் உள்ள தெற்கு கரோலினா பகுதியில் உள்ளது.தெற்கு கரோலினாவின் தலைநகரம் தான் கொலம்பியா . அந்த பெயரில் தான் இந்த பல்கலை கழகம் இயங்கி வருகிறது.

இது 1754 ஆம் ஆண்டு பிரிட்டன் மன்னர் இரண்டாம் ஜார்ஜ் அவர்களால் கட்டப்பட்டது.அப்போது இதன் பெயர் கிங்ஸ் காலேஜ்.
அதன் பிறகு 1776 வரை மன்னரின் கைவசம் இருந்தது. அந்த காலகட்டத்தில் பிரிட்டன் பல போர்களில் ஈடுபட்டது. அமெரிக்கா புரட்சி  உட்பட ! இதற்காக பல செலவுகளை எதிர் கொண்டது . ( 1765 - 1783 )

 
                                         கிங்ஸ் காலேஜ் - கொலம்பியா யூனிவர்சிட்டி 1770

இந்த செலவுகளுக்கு பண உதவி செய்தது ரோத்ஸசீல்டு .
இப்போ கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டனின் அரசருக்கு சொந்தமானவை எல்லாம் ரோத்ஸ் சைல்ட் பெயருக்கு மாறியது. கிங்ஸ் காலேஜ் பெயர் மாற்றப்பட்டது. ரோத்ஸ் சைல்ட் தன்னை எப்போதும் நேரடியாக காட்டி கொள்ள விரும்பியது இல்லை. அதனால் அந்த கல்லூரிக்கு கொலம்பியா என்று பெயர் சூட்டினார். இன்றும் எங்கெல்லாம் கிங்ஸ் என்று தொடங்கும் பள்ளிகள் , கல்லூரிகள் உள்ளனவோ அவை ரோத்ஸ் சைல்ட் க்கு சொந்தம் . இங்கு இருப்பவர்கள் பினாமிகள். மன்னரிடம் இருந்து பறித்தால் , அந்த இடத்தின் தலைநகரின் பெயர் சூட்டுவான். சாமானியரிடம் இருந்து பறித்தால்  மன்னரின் பெயர் சூட்டுவான்.

இந்த கொலம்பியா கல்லூரியில் யாரும் அவ்வளவு சுலபமாக நுழைந்து விட முடியாது. அவனுக்கு மிக பிடித்தவர்கள், அடிமைகள் , மட்டுமே படிக்க முடியும்.இங்கு படித்த அத்தனை பெரும் , அவன் கட்டுப்பாட்டில் உள்ளவர்களே !

பிரவுன் யூனிவர்சிட்டி
கொலம்பியா யூனிவர்சிட்டி
கார்னெல் யூனிவர்சிட்டி
டார்ட்மவுத் யூனிவர்சிட்டி
ஹார்வர்ட் யூனிவர்சிட்டி
யூனிவர்சிட்டி ஆப் பென்சில்வேனியா
ப்ரின்ஸ்ட்டன் யூனிவர்சிட்டி
ஏல்  யூனிவர்சிட்டி ( Yale  யூனிவர்சிட்டி )

இந்த 8 யூனிவெர்சிட்டியில் படித்தவர்கள் தான் நம்மை ஆளுகிறார்கள் .
நீதிபதிகளாக, மத்திய அரசு அமைச்சர்களாக, சட்டம் இயற்றும் , சட்டத்தை திருத்தும் அதிகாரிகளாக என்று எல்லா வடிவத்திலும் இந்த 8 யூனிவெர்சிட்டியும் நம்மை சுற்றி வரும்.



இது  பிரிட்டன் அரசருக்கு சொந்தமான கோண்ஸ்பார்க் மாளிகை . 1835 க்கு பிறகு மன்னரிடம் இருந்து ரோத்ஸ் சைல்ட் க்கு மாறியது.

இந்த இடத்தில இருந்து பிரிட்டனின் எல்லா உரிமைகளும் ரோத்ஸசீல்டு கைக்கு மாறுகிறது.

இந்த தருணத்தில் தான், இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்க்க பிராமண சமுதாயமும் , இஸ்லாமியமும் தயார் ஆகி கொண்டு இருந்தது .ஆனால் பிராமண சமுதாயம் , எதிரில் வரக்கூடாது என்று ஒதுக்கி இருந்த ஒரு சமுதாயம் தான் மல ஜாதி எனும் மஹர் ஜாதி !

எதிரிக்கு எதிரி நண்பன்.

1857  புரட்சியின் போது , போராடியவர்களை எதிர்க்க ரோத்ஸ் சைல்ட் க்கு ஒரு கூட்டம் தேவை பட்டது.
அந்த கூட்டம் தன சீக்கிய சமுதாயமும், மஹர் ஜாதி மக்களும்!

இந்த கூட்டத்தை எப்படி சேர்ப்பது ?அங்கு ரோத்ஸ் சைல்ட் க்கு உதவியது தான் மாலோஜி . அம்பேத்காரின் தாத்தா ! இவர் மஹர் ஜாதி மக்களின் தலைவர். பிற ஜாதி மக்களின் கொடுமையால் தன சமுதாயம் மீண்டு விடாதா என்று ஏங்கியவர்.

இந்த மாலோஜிக்கும் ரோத்ஸ் சைல்ட் க்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட்டது. 1857 போரில் மாலோஜியும் அவரது கூட்டத்தாரும் கலந்து கொண்டால் , முற்றிலும் அந்த சமுதாயத்தை வெளியில் கொன்டு வருவதாக வாக்களித்தார் ரோத்ஸ் சைல்ட்.

கிட்டத்தட்ட 160 ஆண்டுகள் ஆகி விட்டது .
சொன்ன வார்த்தையை காப்பற்றவே இல்லை ரோத்ஸ் சைல்ட் .
சொன்னதை செய்ததால்தான் சோனியா காந்திக்கு கோவில் வந்தது !
இல்லையின்னா காட்டுவாங்களா ?

மஹர் ஜாதிக்கும் , தமிழ்நாட்டின் பறையர் பள்ளர் ஜாதிக்கும் தொடர்பு என்ன ?
அம்பேதகர் எப்படி எல்லோருக்கும் தலைவர் ஆனார் ?


                                         சோனியா காந்தி அம்மா கோவில் - தெலுங்கானா

---------------------------------------------------------------------

அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு - 3

1835ல் அம்பேத்கரின் தாத்தா மாலேஜிக்கும் ரோத் சைல்டுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம். வாய் வழி ஒப்பந்தம்.
அதன் அடிப்படையில் 1857ல் மகர் ஜாதி மக்களை ரோத் சைல்ட் சார்பாக, போராட உதவினார் மாலோஜி. 1835ல் தான் மகால்லே இந்தியாவை வீழ்த்துவது எப்படி என்று யோசித்து, 1860க்கு பிறகு கல்வி திட்டத்தை மாற்றி எழுத ஆரம்பித்தான். அவன் கூறிய மற்றொரு வழிதான் ஜாதிய வேறுபாடுகள்.

பறையர் ஜாதி மஹா ஜாதியாக மாறிய கதை !
-------------------------------------------------------------------------------------------
இப்போது இந்த்யாவின் ஜாதிகளை பற்றி எழுத ரோத் சைல்டின் ஆள்கள் தயார் ஆகினர். 1855ல் எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய ஜாதிகளும் பாகுபாடுகளும் என்ற புத்தகத்தை எழுதினார். இது முறையாக 1909ல் பிரசுரமாகியது. இதற்கு முன்னாதவே தமிழகத்து பழமொழிகள் என்ற பெயரில் ஜாதிகளை கேலி செய்யும் வார்த்தைகளுடன், பிரான்சிஸ் புக்கனன் என்பவர் 1807 ல் ஒரு பயண கட்டுரை எழுதி இருந்தார். இதில் வன்னியர் மக்கள், நாடார், பறையர், பள்ளர், வெள்ளாளர், அம்பலகாரர் என்ற எந்த ஜாதியையும் விட்டு வைக்காமல் எழுதினார். இதனால் 1800களின் தொடக்கத்தில் தான் ஜாதிய வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்து இருந்தன. அப்போது தமிழர்கள் யாரும் ஆட்சியில் இல்லாததால், இந்த விஷ மரம் வளர்ந்து கொண்டு இருந்தது.
இந்நிலையில் 1855ல் எட்கர் தர்ஸ்டன் எழுதிய புத்தகம் 1901 ல் வெளிவந்தது. ஜாதிய தீ ஊரெங்கும் பரவியது. இந்த புத்தகத்தில் தான் பறையர், பள்ளர் எல்லோரும் தாழ்த்தப்பட்ட ஜாதிக் கு கீழ் கொண்டு வர படுகிறார்கள்.



இவ்வாறு 
பறையர் இனம் கீழ்ஜாதியாக மாற்றப்பட மிக பெரிய காரணம் ஒன்று இருந்தது. அதுதான் சித்த மருத்துவம்.
நாம் ஏற்கெனவே கூறினோம் அல்லவா,
கொலாம்பியா பல்கலைகழகம் ரோத் சைல்டுக்கு சொந்தம் என்று.,
சமகாலத்தில் உருவான 8 பல்கலைகழகத்திலும் மருந்து கண்டு பிடிக்கும் ஆய்வுகள் நடைபெற்று அவை இந்தியாவில் சந்தைபடுத்தபட்டு கொண்டு இருந்தன.1800 களில் சர்க்கரை வியாதி என்பதை போல் பல நோய்களுக்கும் மருந்து கொண்டு வந்து விட்டனர். வியாபாரம் செழிக்க தொடங்கியது.ஆனால் தென்னிந்தியாவில் இது நடக்கவில்லை. காரணம் சித்த மருத்துவம் மேலோங்கி இருந்தது.
இதனால் திட்டமிட்ட ரோத் சைல்டு மஹர் இன மக்கள் எப்படி நடத்தபடுகிறார்களோ, அப்படி சித்த மருத்துவர்களையும் கொண்டு வந்து விட்டால், அவர்களை தேடி மக்கள் செல்வது தடைபடும் என்று கருதினர். அதனால் அத் தொழிலில் ஈடுபட்ட அத்தனை ஜாதிகளும் தாழ்த்தபட்ட ஜாதியாக மறைமுகமாக அறிவிக்கப்பட்டு, அவற்றிற்கு சலுகைகள் உண்டு என்று கூறப்பட்டது. எப்போது ஒரு சலுகையை, ஒரு இலவசத்தை நாம் ஏற்று கொள்கிறோம், அப்போதே நாம் தாழ்ந்து போகிறோம் அல்லவா?
பறையர் எனும் இனம்
மஹர் எனும் ஜாதியாக மாற்றப்பட்டது.
ஜாதிய கொடுமைகள் தமிழ்நாட்டிலும் அரங்கேறின !

ஊர் ரெண்டு ரெண்டு பட்டது . வியாபாரி  கொண்டாடினான்!

அவன் உருவாக்கிய ஜாதிய வேறுபாடுகளை , தீவிரமாக பேச அவன் ஒருவரை தேர்ந்தெடுத்தான்.
அவர் தான் 
பெரியார் !



----------------------------------------------------


சைமன் கமிஷனும் - இந்தியா ரூபாயும் !




1921 ம் ஆண்டு அமெரிக்காவில் பட்டம் பெற்று நாடு திரும்பினார் அம்பேத்கார்.

அவர் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பரோடா மன்னரால் மாத சம்பளத்திற்கு கணக்கராக வேலைக்கு அமர்த்தப்பட்டார் . அவருடைய சம்பளம் 11.50 ஸ்டெர்லிங் பவுண்ட் . இதன் மதிப்பு 982 ரூபாய் . இன்று அல்ல 1924ல் .

அன்றைக்கு தங்கத்தின் விலையே ஒரு சவரன் 100 ரூபாய்க்கும் குறைவு .
மிக அதிகப்படியான சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த போதிலும் , அவரிடம் கணக்கு பெற பலர் தயங்கினர். மீண்டும் அவமானம் அடைந்த உணர்வோடு , அவ்வேலை யில் இருந்து நீங்கினார். மீண்டும் அவர் நாடியது ரூத்ஸ் சைல்டைதான் ! அப்போது தான் 1927 ல் சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது.

இதற்க்கு இடையில் , 1923 ம் ஆண்டு அம்பேத்கார் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வறிக்கை கொடுத்திருந்தார். அது என்னவெனில் , இந்தியா ரூபாயின் பிரச்சனைகளும் , தீர்வுகளும் என்ற தலைப்பில் அது இருந்தது .

இதனை அடிப்படையாக கொண்டு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு , பிரிட்டன் அரசு என்ற பெயரில் இருந்த ரூத்ஸ் சைல்ட் தீர்மானித்தார். அதன் பிறகு வங்கி அமைப்பது மற்றும் அதன் செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டது.

இவை எல்லாம் அம்பேத்காரின் ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது. அப்போது வெளிவந்த சைமன் கமிஷன் , ரூபாய் அறிக்கை பற்றியும், வங்கியின் அமைப்பு பற்றியும் , வருமான வரி விதிப்பு முறை பற்றியும் பேசியது.

இதனை இந்தியா முழுவதும் அனைவரும் எதிர்த்தனர். ஒரே ஒருவரை தவிர !
அது அம்பேத்கார் தான் . அவருக்கு சைமன் வாக்கு கொடுத்திருந்தார். இந்த சைமன் கமிஷன் எனும் சட்ட அறிக்கையில் , மஹா ஜாதி மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க படும் என்று கூறி இருந்தார் . அதனை அந்த சட்ட திருத்திலும் கொண்டு வந்தார் .

இதனால் மேலும் மக்கள் கோபம் கொண்டனர்.
1928 ல் போராட்டம் வலுவடைந்தது . லாலா லஜபதி ராய் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்டதற்கு இருந்த ஒரே சாட்சி பகத் சிங்க்.

பின்னர் பகத்சிங்கும் , போராட ஆரம்பித்தான், அதனால் தூக்கு மேடை ஏறினார்.

லாலா லஜபதி ராய் ஏன் கொல்லப்பட்டார்?
பகத்சிங் ஏன் போராடினார் ?
ஏன் தூக்கில் இடப்பட்டார் ?





----------------------------------------------------


Tuesday, 12 September 2017

நீ மலம் அள்ளும் சமுதாயம் அல்ல. மருத்துவன் .

12.7.2017

நீ மலம் அள்ளும் சமுதாயம் அல்ல. மருத்துவன் .

ஒடுக்கப்பட்ட சமுதாயம் என்று தன்னை எண்ணி கொள்ளும் நண்பர்களே, உங்களுக்கு சில கேள்விகள், உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள்:

1. வட இந்தியாவில் உள்ள ஒடுக்க பட்ட சமுதாயம், தமிழகத்து சமூகமும் ஒன்றா? அங்கு நடப்பது போல் தான், தமிழகத்திலும் நடந்ததா? நடக்கிறதா?

2. கோவில்களுக்குள் நாம் செல்ல விரும்பவில்லையா? அவர்கள் கோவிலுக்குள் விடவில்லையா?

3. தமிழ்நாடு வாழ் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு மருத்துவம் தெரியும் என்பதை அறிவீர்களா?

4. ஒடுக்கபட்ட சமுதாயம் என ஏன் மாற்றபட்டது, எப்போது இருந்து இந்த சூழ்ச்சி வலைக்குள் சிக்கி கொண்டோம் என்பதை அறிவீரா?

5. அறிந்து கொள்ளுங்கள், மருந்தும், மருத்துவமும் திருடபட்டது. அவை மேலோங்கி வாழ்வதற்காக
ஒடுக்கப்பட்டது.

சுய ஆய்வு செய்வோம்!
முன்னோர் வாழ்வியலை தேடுவோம்!
விடை காண்போம்



----------------------------------------------------------------------------

Tuesday, 22 August 2017

விநாயகர் சதுர்த்தியும் கொலு கட்டையும்!

 விநாயகர் சதுர்த்தியும் கொலு கட்டையும்!

விநாயகருக்கும் தமிழ்நாட்டுக்கும் கி.பி. 8ம் நூற்றாண்டிற்கு முன்பு எந்த சம்பந்தமும் இல்லை.

கி.பி.10 ம் நூற்றாண்டிற்கு பிறகு எழுதபட்ட எல்லா பாடல்களிலும் விநாயகர் அகவல் இருக்கும்.

விநாயகரை வணங்கிய பிறகு தான், வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆணை இட்டதும் பல்லவர்கள் தான்.
இவையெல்லாம் மத ரீதியாக நடந்த மாற்று வழி! இதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவை எல்லாம் விவாதங்களுக்கு உட்பட்டவை! அவை தேவையில்லை.

ஆனால்,

கொலுக்கட்டைக்கும் ,
தமிழ் மரபுக்கும் சம்பந்தம் உண்டு.
கொலு கட்டை எனப்படுவது ஒரு அற்புத மருந்து!
இது தமிழர்களின் பூர்வீக உணவு!



பச்சரிசி மாவில், கடலை பருப்பு, வெல்லம், தேங்காய், ஏலம் கலந்து
பூவரசு இலையில் வைத்து வேக வைத்து உண்ண வேண்டும்.
பூவரசு இலையில் உண்ணும் போது, கருப்பை கட்டிகள், மற்றும் குழந்தையின்மை பிரச்சினைகள் தீரும்.
மேலும், ஒவ்வொடு பருவநிலை மாறும் போதும் கொலு கட்டை செய்து சாப்பிட வேண்டும். அது புதிய சூழ்நிலைக்கு நம் உடலை தயார் செய்யும் |

மேலும், பனை இலையிலும்,
வாழை இலையிலும் செய்து உண்ணலாம்.
பிளாஸ்டிக் பேப்பரில் செய்ய கூடாது.

பூவரசு, பனை ,வாழை இவை இல்லாமல் செய்து உண்டாலும் அதனால் பலன் இல்லை.


இதனாலேயே திருமணத்தின் போது, ஆணுக்கும், பெண்ணுக்கும் விருந்து என்ற பெயரில் பூவரசு இலை
கொலு கட்டையும்,
கல்யாண முருங்கை இலை அடையும் செய்து தரும் வழக்கம் இருந்தது.

திருமண நாள் அன்றும், மணம் முடித்த உடன் மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து பூவரசை போத்து முறையில் நடும் வழக்கமும் இருந்தது.

பூவரசு மழையை பெருக்கும்!
மழலையையும் பெருக்கும்!

பிள்ளையாருக்கும், மோதகத்துக்கும் தான் தொடர்பு!அதுவும் இன்று மோமோவாகி மருந்து என்பதில் இருந்து விலகி விட்டது!

கொலு கட்டை அப்படி அல்ல!
இன்றும் இவ் வழக்கம் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷிய, பர்மா,
நாடுகளிலும், தமிழ்நாட்டிலும் மட்டுமே உள்ளது !

இந்த பத்திரிக்கை எழுத்தர் என்ற பெயரில் சில லூசுங்க, கொலு கட்டையை அண்டம், பிண்டம்ன்னு, கதை சொல்லி அது பிள்ளையாருக்கு பிடித்த உணவுன்னு வட இந்திய உணவு போல் திரிச்சி விடுங்க!

கொலு கட்டை
தமிழர்களுக்கு சொந்தம் |
பிள்ளையார்
வட இந்தியர்களுக்கு சொந்தம் |
சேர்த்து விட்ட பெருமை
பல்லவர்களுக்கு சொந்தம்!

இலைகளில் செய்து ,
கொலு கட்டை உண்போம்!
ஆரோக்ய வாழ்வு பெறுவோம்!




Monday, 21 August 2017

வரலாறுகள் கூறாதஔரங்கசீப்பின் கதை !



1637 ம் ஆண்டு ஔரங்கசீப் , டில்ராஸ் பானு பேகம் என்ற பெண்ணை மணக்கிறார் . அத்திருமணம் அவர் மனத்தால் ஒப்பிய திருமணம் அல்ல .


அவர் ஹிரா பாய் என்ற தக்காண  தேசத்து பெண்ணை விரும்புகிறார் .
அவள் ஒரு பாரசீக பெண்.
எப்போதும் ஔரங்கசீப், தக்காணத்தில் தான்  இருக்கிறார் .

அவளை ஆட சொல்லி ரசிக்கிறார் !
அவள் அழகில் மயங்கி , சிந்தனையற்று வாழ்கிறார் !

அவருக்கு அவள் மீது கொள்ளை ஆசை !
அவளோ அடிமை பெண் !

மும்தாஜும் பாரசீக பெண் தான் . ஷாஜஹான் திருமணம் செய்து கொண்டார்.அந்த நம்பிக்கை இவருக்கு !

ஆனால் ,

அப்போது தான், பிரஞ்சு வணிகம் வலுப்பெற ஆரம்பித்தது .
இங்குதான் பாரசீக மக்களின் பழைய வாழ்க்கை மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது . இப்போது முகலாய அரசை எதிர்க்கும் வலிமை பெற ஆரம்பித்தனர் ஜொராஷ்ட்ரிய மக்கள் !
மும்பை வளர ஆரம்பித்தது .

ஆனால் இதெல்லாம் அறியாமல் ஹீராபாயை ரசிப்பதிலேயே காலத்தை கடத்தி கொண்டு இருந்தார் ஔரங்கசீப் .
பாரசீகம் தன வேலையை காட்டியது .
திடீரென ,


நடனம் ஆடிகொண்டிருந்த ஹீரபாய்
அவன் கண் முன்னே சரிந்து இறந்து போகிறாள் !

என்ன நடந்தது !
புரியவில்லை !
தாளாத துக்கம் 
வெளிவர விரும்பவில்லை அவன் !
அவள் , அவன் முன்னே இனி ஆட மாட்டாள் 
அவனால் அவளை இனி ரசிக்க முடியாது 

அவன் பார்த்து பார்த்து ரசித்த
கண்கள்
இனி அவனோடு பேசாது !

அவள் பாடல் இனி ஒலிக்காது
இவனும் இனி மயக்கத்தில் இருக்க மாட்டன் .

அவனுக்கு கோபம்
இருதரப்பு குடும்பத்தின் பேரிலும் !
அப்போதுதான்
ஷாஜஹான் , தன மனைவிக்கு தாஜ்மஹால் எனும்
அற்புதத்தை எழுப்புகிறான்.

கோபம் கொண்ட ஔரங்கசீப்
டெல்லிக்கு விரைகிறான்
ஷாஜஹானை சிறை பிடிக்கிறான் !

மூத்த சகோதரர்களை அழிக்கிறான் !
நான் தான் மன்னன் என 
தானே அறிவித்து கொள்கிறான் !

சமாதனம் பேச வந்த 
குருனாக்கிடமும் 
கொடூரமாய் நடந்து கொள்கிறான் !

ராஜபுடின அரசுகளை எல்லாம் ஆட்டி படைக்கிறான்
ராஜபுதின அரசுகளின் கீழ் இருந்த இந்து மக்களுக்கு
வரி மேல் வரி விதித்து
கொடுமைகாரன் என்று பெயரும்  எடுக்கிறான் !
( அப்போது இந்துக்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் பாரசீக மக்கள் மட்டும் தான் ! . இது தனி கதை )

அவன் நெஞ்சில் ஈவு இல்லை
இரக்கமும் இல்லை
கோபத்திற்கு மட்டும்
அவனிடத்தில்
பஞ்சமில்லை !

பழிவாங்கும் உணர்விற்கு
ஒரு துளியும்
குறைவில்லை !


அவன் பானு பேகத்திற்கு பிறகு
யாரையும் மணக்க வில்லை !

அவன் முதுமை காலத்திலும்
அவன் நினைவுகளோடு வாழ்ந்தது
ஹீரா பாய் மட்டும்தான் !

அவன் செய்த எல்லா தவறுக்கும்
அடித்தளம் போட்டது
ஹீரா பாயின் மரணம் மட்டும் தான் !

அன்று அழிந்தது ராஜபுதின அரசுகள் மட்டுமல்ல !
முஹல் வம்சத்தின் அழிவும் தான் ஆரம்பமானது !


Sunday, 13 August 2017

உலக நாடுகளில் திருமண வயது




உலக நாடுகளில் திருமண வயது :
இங்கிலாந்தில் திருமண வயது -17
அமெரிக்காவில் திருமண வயது -16
சில குறிப்பிட்ட இடங்களில் ( அமெரிக்காவில்) அலபாமா மற்றும் உத்விதா ல்
பெண்ணுக்கு - 13 ஆணுக்கு - 14
ஆஸ்திரேலியாவில் வயது -17


பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும் திருமணத்திற்கு வயது 18 அல்ல.
குறைந்த வயதும்,
போதிய உடல் மாற்றமும் போதுமானது. இதுவும் சட்டம் தான் சொல்கிறது.

பெற்றோர் இல்லாத
பெற்றோர் சம்மதம் இல்லாத
திருமணத்திற்கு தான் வயது 18.

சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் கூறுகிறார்.
ஒரு பெண் பருவமடைத்து 6 மாதத்திற்கு பிறகு குழந்தையை சுமக்கலாம்.
இது ஆணிற்கும் பொருந்தும்.

ஆனால் நமக்கு திருமண வயது உச்சவரம்ப சட்டம் கொடுத்த பிரிட்டிஷ் அரசு
வயதை கூட்டி 21 என்று கூறியது ஏன்?
அதுவரையில் அவனை கல்வி கூடங்களிலேயே முடக்கி,
பொருளாதார கோழையாக்கியது ஏன்?
அதையும் கடந்து 40 வயதில் தான் இன்று திருமணங்கள் நடக்கிறது. 2ம் தலைமுறை திருமணம் நடக்க வேண்டிய வயதில் முதல் தலைமுறையின் திருமணம் - ஏன்?
மக்கள் தொகை பெருக்கம் என்பது முற்றிலும் பொய் !
சிந்திப்பீர்.
சுய தொழில் புரியுங்கள்!
கல்வி என்ற பெயரில் விவசாய நிலங்களை இழந்து பொருளாதார கோழையாகி,
தலைமை தாங்க வேண்டிய வயதில்,
சமூக மரியாதை பெற வேண்டிய வயதில்
மாணவனாக இருக்காதீர்.
இது மிக பெரும் சதி திட்டம் |


ஒரு புள்ளியியல் கணக்கின்படி தமிழ்நாட்டில், கலப்பு இல்லாத, திராவிட ஆரியகலப்பு பெறாத தமிழர்களின் எண்ணிக்கை 10 லட்சம் முதல்-1 கோடி வரை மட்டுமே!



உணர்வாய் தமிழா!






Friday, 11 August 2017

தந்த்ரா வழியில் தாம்பத்யம்

வாழ்வியல், சமூகவியல் பிரச்சினையின் மூல காரணம் தெரியுமா?

தாம்பத்யம்.

திருமணம் ஆன ,திருமணத்திற்கு காத்திருக்கும் ஒவ்வொரு ஆணும், திருமணம்
என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இது பல்வேறு சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு தரும்.

திருமணம் என்பது ஆணின் கைகளில் பூட்டப்பட்டுள்ள விலங்கு!
பெண்ணின் கைகளில் அது கண்ணாடி குடுவை |

குடுவை உடைய கூடாது.
ஆனால் உடைகிறது.
மது கடைகள் நிறைகிறது.
சமூக அவலங்கள் நிகழ்கிறது.
சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகள் கண்டும், காணாமல் கடக்க படுகிறது.
பலர் வெளிநாடுகளில் வாழ்வதே, வாழ்க்கை என்று முடிந்து போகிறது.
கணவன், மனைவியின் பிரிவு வாழ்வில் ஒரு குழந்தை தன் தன்னம்பிக்கையை இழக்கிறது.
தேவையற்று தற்கொலை எனும் பெயரில்
மனித உயிர்சேதமடைகிறது.

தெரிந்து கொள்வோம்..
தாம்பத்யம் என்றால் என்ன?

_ .........................









திருமணம் ஆகி 10 வது மாதம் என் மனைவிக்கு வளைகாப்பு விழா நடத்தி ஊருக்கு அழைத்து செல்லபட்டார். குழந்தையும், எல்லையில்லா குதூகலமும் கலந்து வீட்டிற்குள் வரும் என்று காத்திருந்தேன். குழந்தை பிறந்தது.

மனைவி வரவில்லை. அதற்கு பதிலாக சட்டம் பல தாக்கீது களோடு உள்ளே வந்தது.

முன் வாயில் வழியாக சட்டம் நுழைந்த போதே பின் வாசல் வழியாக இல்லறமும், என் நம்பிக்கையும் ஓடி விட்டன.

3 ஆண்டுகள் வழக்குகளோடு போராடினேன். நான் ஒரு வன்முறையாளன், கொடூரன் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

உறவுகளும், பொது மனிதர்களும் பேசியாகி விட்டது. என்ன நிபந்தனை சொன்னாலும் ஏற்று கொள்கிறேன். என் மனைவியும், குழந்தையும் வேண்டும் என்றேன்.

என் மனைவியும் ஒரு நிபந்தனை கொடுத்தாள். சொத்தில் சரிபாதி பங்கு வேண்டும் என்று!

வாழ்க்கை இருண்டு போனது. சொத்தும் பறிபோனது. அதை விட கொடுமை, ஒரு தகப்பனாக என் குழந்தைக்கு நான் எதுவும் செய்ய உரிமையற்று போனேன்.

திருமணம் என்பது ஆணின் கைகளில் பூட்டப்பட்டுள்ள விலங்கு!
பெண்ணின் கைகளில் அது கண்ணாடி குடுவை |

உடைந்து விட்டது வாழ்க்கை!

மது அருந்த விருப்பம் இல்லை.
தவறான சேர்க்கை கொள்ளும் சூழலில் நான் வளரவில்லை!
இழந்த சமூக மரியாதையை பெற முடியவில்லை!
தற்கொலை செய்து கொள்ளும் தைரியமும் இல்லை!

முடிவு
சன்னியாசம் பெற்றேன.

வாழ்க்கையை கொண்டாடு என்று கூறியது ஒஷோவின் உலகம்!

என்ன கொண்டாடுவதற்கு பெயர் தான் சன்னியாசமா?

ஆச்சர்யங்களுடன், ஒரு புண்ணிய பூமிக்குள் அடியெடுத்து வைத்தேன். அங்கு தான் தெரிந்து கொண்டேன்.

என் மனைவி குற்றவாளி அல்ல.
ஒரு நோயாளி!
அவரை நோயாளியாக்கிய குற்றவாளி நான் தான்.


இப்படி மனைவியை நோயாளியாக மாற்றிய முதல் நபரும் நான் அல்ல.
முடிவான நபரும் நான் அல்ல.

எனில்.....

ஆண், பெண், திருமணம் என்றால் என்னவென்றே தெரியாமல், அந்த புது வெள்ளத்தில் எல்லோரும் குதித்து கொண்டு இருக்கிறோம்.

இப்படி தான் தன் சுயவிவர குறிப்போடு ஆரம்பிக்கிறார்

போதி பிரவேஷ் (தொடர்வோம்)



தந்த்ரா வழியில் தாம்பத்யம் 


-------------------------------------------------------------------------------------------------------------


தந்த்ரா வழியில் தாம்பத்யம் - நூல் குறிப்பு 

பாகம் - 2

பல ஆயிரம் ஆண்டுகளாக ஆண் , ஆதிக்கம் செலுத்தி கொண்டு இருக்கிறான்.
இதன் தொடக்கம் எங்கு இருந்து ஆரம்பிக்கிறது.

 விலங்குகளை போல் வாழ்ந்த மனிதன் , எவ்வாறு உருமாற்றம் பெற்றான் என்பதையும் குகை வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும் அழகாக விளக்குகிறார்.

அடிக்கடி விலங்குகளுக்கு உணவானது ஆண் அல்ல. பெண் தான். 
கும்பல் வாழ்க்கை என்ற கூட்ட வாழ்க்கை ஆரம்பித்த வரலாறை விளக்கும் ஆசிரியர்,
அங்கு பெண்ணின் நிலை என்ன என்பதையும்  விளக்குகிறார்.

பெண்ணுக்காக ஆண்கள் அடித்து கொண்டு பலர் மாண்டத்தையும் கூறும் பொழுது,

விலங்குகளுக்காக இறந்த ஆண்களை விட பெண்களுக்காக இறந்த ஆண்களே அதிகம் என்று கூறுகிறார்.

அந்நிலை எப்படி  மாறியது , அதை எப்படி ஒரு தாய் வழி சமூகம் வழி நடத்தியது என்பதையும் கூறுகிறார்.
பிறகு ,
அரசன் என்ற பெயரில் , பாதுகாக்கும்  பொறுப்பில் இருக்கின்ற ஆண்கள் , பெண்ணுக்கு இல்வாழ்க்கை தொடர்பாக என்ன வெல்லாம் சட்டம் விதித்தார்கள் .என்று கூறி ,


ஒரு தார வாழ்க்கை பயணம் .பற்றி ஆரம்பிக்கிறார்.

இங்கு தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.


அதே சமயம் ஆண் ,பெண் சக்தி எப்படி இருக்கும் ,என்று கூறுகிறார்.

ஆண் என்பவன் சக்தி வாய்ந்தவன்.ஆனால் அவன் சக்தி அழிவு சக்தியாகவே இருக்கும் .அந்த சக்தியை ஆக்கும் சக்தியாக மாற்றும் வல்லமை படைத்தவள் பெண்.  

ஒரு பெண்ணால் மட்டுமே, தலைமுறைகள் கடந்தும் நிற்க கூடிய பண்பாற்றாலை ,
ஒரு குழந்தைக்கு உருவாக்க முடியும் .

என்று கூறும் பொழுது பெண்ணின் உயர்வையும் , அவளால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதையும் கூறி பெண்ணை உயர்வு படுத்து கிறார்.

எனில் பெண்ணை ஆண், எப்படி நடத்த வேண்டும் ?
ஒரு தேவதை போல் நடத்த வேண்டும்.
தேவதை என்றால் , ஆடை , அலங்காரங்களால் அல்ல.
அவளுக்கு என்ன வேண்டுமோ , அதை சரிவர செய்து அவளை தேவதை போல் நடத்த வேண்டும் .என்று கூறுகிறார்.

ஆனால் ,

நீண்ட காலமாக ,நாமும் ,

நம் சமுதாயம் பெண்ணின் சுதந்திரம் என்று என்னனென்ன வெல்லாமோ செய்து கொண்டு இருக்கிறோம் .
சினிமா கூறியதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம் .

கல்வி கொடுத்தால் பெண் சுதந்திரம் பெறுவார்கள் என்றனர்.
முடிந்தவரை எல்லா பெண்களும் கல்வி பெற்று விட்டனர்.
வேலைக்கு சென்றால் பெண் சுதந்திரம் என்றனர் 
செய்தோம் 
அழகு படுத்தி கொள்வது, 
அவள் பெயரில் சொத்து இருப்பது,
தனி குடித்தனம் செல்வது 
வெளிநாடுகளில் வாழ்வது, இன்னும் எவ்வளவோ சொல்லி விட்டார்கள் .

நாமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் இன்று வரை பெண் நிம்மதியாக தூங்காவதில்லை. 
அவளுக்கான சுதந்திரம் என்னவென்று ஆண்கள் எழுதிக்கொண்டே இருக்கிறோம்.

அவள் மட்டும் சொல்லவே இல்லை. 
தனக்கு என்ன தேவை என்று !
ஆண்களும் யோசிக்கவில்லை எது அவளது தேவை என்பதை !

அந்த குறைகளை முற்றிலும் நீக்கி இருக்கிறார் ஆசிரியர்.

மேலும் , எங்கு பார்த்தாலும் பெண்களை கேலி செய்யும் நகைசுவை.
பெண் ஆணை அடிமை படுத்துவது போலவும்,
ஆண்கள் அதை சிரித்து கொண்டே கடப்பது  போலவும் உள்ளது.

பல்வேறு இடங்களில் ஆண்கள் புலம்புகிறார்கள் . அப்படி புலம்புகின்ற ஆண்களின் புலம்பல்களை பட்டியல் இடுகிறார்.
அவற்றில் சில :

1. வீட்டிற்குள் நுழைந்தாலே சண்டையாகவே இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றுகிறது . ஆனால் என் மகனுக்காகத்தான் வாழ்கிறேன்.

2. லட்ச ரூபாய்க்குமேல் சம்பளம் . ஆனால் நிம்மதி இல்லை. ஒரே சண்டை. எவ்வளவு ஒதுங்கி சென்றாலும் வாய்க்குள்   விரலை விட்டு ,வார்த்தைகள் பிடுங்கி சண்டை போடுகிறாள்.

3. நான் ஒய்வு பெற்றவன் . நல்ல வருமானம் . ஆனால் , நானும்  என் மனைவியும் சண்டை போடுவதற்காக மட்டுமே பேசி கொள்கிறோம்.

4. ஒரு பெரிய பணக்கார கணவர் கூறுகிறார். செலவுக்கு பத்தாயிரம் கேட்டால் , இருபதாயிரம் கேட்டால், ஐம்பதாயிரம் தருகிறேன். ஆனால் நிம்மதி இல்லை.

இது போல பல பிரச்சனைகளை கூறும் ஆசிரியர் ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகிறார்.

குடும்ப பிரச்சனைகளுக்கு பொருளாதாரம் என்பது காரணமே அல்ல.
பெண்ணின் ஆசைகள் , தேவைகள் காரணம் அல்ல .
எங்கோ தவறு இருக்கிறது.

அந்த தவறை செய்பவன் , ஆண் .
பெண் அல்ல .
என்ன தவறு அது ?

அருமையாக விளக்குகிறார் 
              ஞானி போதி பிரவேஷ்  --- தொடர்வோம் 


-----------------------------------------------------

நம் சமுதாயம் பெண்ணின் சுதந்திரம் என்று என்னனென்ன வெல்லாமோ செய்து கொண்டு இருக்கிறோம் .
சினிமா கூறியதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம் .

கல்வி கொடுத்தால் பெண் சுதந்திரம் பெறுவார்கள் என்றனர்.
முடிந்தவரை எல்லா பெண்களும் கல்வி பெற்று விட்டனர்.
வேலைக்கு சென்றால் பெண் சுதந்திரம் என்றனர் 
செய்தோம் 
அழகு படுத்தி கொள்வது, 
அவள் பெயரில் சொத்து இருப்பது,
தனி குடித்தனம் செல்வது 
வெளிநாடுகளில் வாழ்வது, இன்னும் எவ்வளவோ சொல்லி விட்டார்கள் .

நாமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் இன்று வரை பெண் நிம்மதியாக தூங்குவதில்லை . 
ஏனெனில் இதுவெல்லாம் அவளது சுதந்திரம் இல்லை .
அவள் பொண்ணுக்கும் , பொருளுக்கும் ஆசை படவில்லை .

அவளுக்கான சுதந்திரம் என்னவென்று ஆண்கள் எழுதிக்கொண்டே இருக்கிறோம்.
அவளும் இதுநாள் வரை  சொல்லவே இல்லை. 
தனக்கு என்ன தேவை என்று !
ஆண்களும் யோசிக்கவில்லை 
எது அவளது தேவை என்பதை !

ஆண்கள் எல்லோரும் பெண்ணின் தேவைகளை அறிந்து கொண்டு திருமணம் செய்வது இந்த சமுதாய முன்னேற்றத்தின் அடித்தளம் ஆகும் 

தந்த்ரா வழியில் தாம்பத்தியம் 


தாம்பத்தியம் என்ற வார்த்தையை கேட்டாலோ , படித்தாலோ அசிங்கம் என்று நம் மனதில் விதைத்த இலுமினாட்டி திட்டத்தை முறியடித்து , 
வருங்காலத்தை வளமாக்க , திறம் மிக்க தமிழ் வாரிசுகளை இம்மண்ணில் விதைக்க 
ஆண் என்பதையும் பெண் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் .

----------------------------------------------------------------------------------------------------------


ஆண்களின் புலம்பல்கள் :


1. வீட்டிற்குள் நுழைந்தாலே சண்டையாகவே இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றுகிறது . ஆனால் என் மகனுக்காகத்தான் வாழ்கிறேன்.

2. லட்ச ரூபாய்க்குமேல் சம்பளம் . ஆனால் நிம்மதி இல்லை. ஒரே சண்டை. எவ்வளவு ஒதுங்கி சென்றாலும் வாய்க்குள்   விரலை விட்டு ,வார்த்தைகள் பிடுங்கி சண்டை போடுகிறாள்.

3. நான் ஒய்வு பெற்றவன் . நல்ல வருமானம் . ஆனால் , நானும்  என் மனைவியும் சண்டை போடுவதற்காக மட்டுமே பேசி கொள்கிறோம்.

4. ஒரு பெரிய பணக்கார கணவர் கூறுகிறார். செலவுக்கு பத்தாயிரம் கேட்டால் , இருபதாயிரம் கேட்டால், ஐம்பதாயிரம் தருகிறேன். ஆனால் நிம்மதி இல்லை.

எனில் ,

குடும்ப பிரச்சனைகளுக்கு பொருளாதாரம் என்பது காரணமே அல்ல.
பெண்ணின் ஆசைகள் , தேவைகள் காரணம் அல்ல .
தீர்வு தேடுங்கள்!
சமுதாய பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வையுங்கள்!

பல பேருக்கு நாட்டின் பிரச்சனைகளை போராட்டமாக கொண்டு செல்ல வேண்டும்.
அரசை எதிர்த்து நம் வருங்கால சந்ததிக்கு நீரையும் , காற்றையும் விட்டு செல்ல வேண்டும் என்று ஆசை. லட்சியம்.

ஆனால் காலை இடறி விடுகிறது இல்லறம்.
வீட்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யாமல் என்னால் எப்படி , பொது பிரச்சனையில் ஈடுபட முடியும்.

தாம்பத்தியம் என்ற வார்த்தையை கேட்டாலோ , படித்தாலோ அசிங்கம் என்று நம் மனதில் விதைத்த இலுமினாட்டி திட்டத்தை முறியடித்து , 
வருங்காலத்தை வளமாக்க , திறம் மிக்க தமிழ் வாரிசுகளை இம்மண்ணில் விதைக்க 
ஆண் என்பதையும் பெண் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் .

இது உடல் சார் பிரச்சனை அல்ல.
உணர்வு சார்ந்த , இனம் சார்ந்த , மொழி சார்ந்த பிரச்னை .

அடிப்படையை சரி செய்யாமல் ஆள இயலாது.

----------------------------------------------------------------



தந்த்ரா வழியில் தாம்பத்யம் - நூல்  குறிப்பு - இறுதி பாகம்

ஒரு வெளிநாடு வாழ் கணவர் மனைவி மற்றும் குழந்தைகளை காண ஊருக்கு வருகிறார். ஊருக்கு வந்த மறுநாள் அவருக்கு கடுமையான  வயிற்று வலி ஏற்பட மருத்துவமனை சென்று பார்த்த பொழுது அவருக்கு வயிற்றில் புண் ஏற்பட்டுள்ளது. காரணம் அவர் நீண்ட நாட்களாக கடை  உணவு உண்கிறார். ஒரு 7 நாட்கள் கழித்து உடல் ஓரளவிற்கு தேறி விட்டார். அவருடைய லீவ் நாட்களில் 10 நாட்கள் ஓடி விட்டது.

அவருடைய உறவுகள் எல்லாம் மீண்டும் ஊருக்கு போக வேண்டாம். மீண்டும் மீண்டும் வைத்தியம் செய்து கொண்டே இருப்பாயா என்று கேள்வி எழுப்ப , அவரும் அது குறித்து மனைவிடம் ஆலோசனை செய்கிறார். ஆனால் அவர் மனைவி ஒப்பு கொள்ளவில்லை.

"ஒன்னும் பண்ணாதுன்னு டாக்டரே சொல்லிட்டாரு , உங்க சொந்த காரவங்களுகெல்லாம் நாம வசதி ஆகுறோம்னு பொறாமை , அதான் தூண்டி விடுறாங்க ! "

என்று கூறியதும் ,
சரி தான் என்பது போல தலையாட்டி விட்டு வேண்டா வெறுப்பாக வும் , என் மனைவி என்னை வெறுக்கிறாளோ என்ற  அவ நம்பிக்கையும் அவருக்கும் தோன்ற , மீண்டும் வெளிநாட்டு வாழ்க்கை .

ஒரு வார காலத்திற்குள் அவரது மனைவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்த்த செய்தி அவருக்கு அலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. உடன் அவரால் வர இயலவில்லை. மருத்துவ மனை தலைமை மருத்துவரிடம் அலைபேசி வழியாக பேசினார். மருத்துவர் கூறிய பதில் அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

"அவங்களுக்கு ஒன்னும் இல்லீங்க! நீங்க தான் பக்கத்துல இருக்கணும் . இது தான் மருந்து "

என்றார் .
அவருக்கு குழப்பம் , என் மனைவி வெளி நாட்டு வாழ்க்கைக்குள் என்னை தள்ளி 11 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னுமும் வெளிநாட்டில் தான் வேலை பார்க்க என்னை தூண்டுகிறார். ஆனால் அவளுக்கு நான் தான் மருந்து.
அவருக்கு தொடர்கிறது இந்த குழப்பம்.

இது கதை அல்ல. உண்மை!

இன்னும் சில மனைவிகள் இருக்கிறார்கள் . அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற சிறு பட்டியல் :

1. ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விடுகிறார்கள்.

2. பிறகு பழனி மலை.

3.வேளாங்கண்ணிக்கு மாலை போடுவது.

4. மேல் மருவத்தூர் அம்மனுக்கு மாலை போடுவது.

5. திருப்பதிக்கு விரதம்.

6.செவ்வாய் , வெள்ளி, சதுர்த்தி, அமாவாசை,பௌர்ணமி விரதம்.

இன்னும் இந்த லிஸ்ட் நீண்டு செல்கிறது .

இதற்கெல்லாம் என்ன காரணம்?
மனைவி ,கணவனிடம் இருந்து விலகி நிற்க விரும்புவதே காரணம்.

சில பெண்கள் 1000 புடவைகள் வரை வாங்குகிறார்கள் !
சிலர் நகைகள் !
இதனாலும் லஞ்சம் , ஊழல் அதிகரிப்பு !

இதை தீர்க்க என்ன வழி ?

தந்த்ரா வழி தாம்பத்யம் வழி சொல்கிறது.

இதன் தீவிர தன்மையை விளக்கும் ஆசிரியர் , இந்த பிரச்சனையின் வீரியத்தை கீழ்கண்டவாறு கூறுகிறார் :


காலை யில் பள்ளிக்கு செல்லும் குழந்தையிடம் கோபத்தை காட்டுவது , அடிப்பது .
அவ்வாறு நடந்து கொள்ளும் போது குழந்தையின் மூளையில் ஒரு வேதி சுரப்பி சுரக்கிறது. அதனால் குழந்தை எதை படித்தாலும், அதை மூளையில் இருந்து அழித்து விடுகிறது அந்த சுரப்பி . குழந்தை கல்வியில் பின் தங்கி போகிறது.

மேலும்  மேலும் சண்டை , ஒரு கட்டத்தில் விடுதலை பத்திரம் பேச ஆரம்பிக்கிறது.

அப்போது பெண் விடுதலை பெறுவதாக உணர்கிறாள். ஆனால் அந்த குழந்தை கிட்டத்தட்ட அனாதை ஆகிறது . மறுத்திருமணம் என்பது இருவருக்குமே நரகம் தான். அதில் குழந்தை  முற்றிலும் அனாதை ஆகிறது .
இப்படி வளர கூடிய குழந்தைகள் தான் பிற்காலத்தில் பெரும் தவறுகளின் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. அங்கு தான் சமுதாய சீரழிவு ஆரம்பம் ஆகிறது .

அற்புதமாக விளக்குகிறார் ஆசிரியர் போதி பிரவேஷ் அவர்கள் !

தயவு செய்து எல்லோரும் தாம்பத்யம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் வீடு நலம் பெற,
நம் நாடு நலம் பெற,
நம் சமுதாய சிக்கல்களை தீர்க்க ,

சரியான முறையில் தீர்வு சொல்கிறது
தந்த்ரா வழியில் தாம்பத்யம்!

அனைவரும் படித்து , நல்வாழ்வு பெறுவோம்!
வாழ்க வளமுடன் !






------------------------- முற்றும் ----------------------------------------




Tuesday, 1 August 2017

Different education system in Tamil nadu, Alternative way of education system in tamil

மாற்று வழி கல்வி முறை என்பதை சிலர் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அது எதோ அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் , சட்ட பிரிவு எண் 14 கீழ் அவ்வாறு பிள்ளைகளை முறையாக படிக்க வைக்காதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்ற கருத்துக்கள் முழுமையாக தவறு.

ஒரு பெற்றோர் தன குழந்தையை வீட்டில் வைத்து பாடம் சொல்லி தரும் முறையாகிய ஹாம் ஸ்கூலின் எனப்படுவது சட்டப்படி இந்தியாவில் செல்லும்.

மேலும் மாற்று வழி கல்வி என்பது அரசுக்கோ , சட்டங்களுக்கோ எதிரானது அல்ல. இது 1950 களுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் .

தயவுசெய்து ஆசிரிய பணி செய்வோர், செய்தோர், செய்ய போவோர் எல்லோரும் மாற்று வழி கல்வி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் அடிமை தனத்தை குழந்தைகளின் மீது திணிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எந்த பெற்றோரையும் மிரட்டவும், குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கவும் உங்களுக்கு அதிகாரம் இல்லை .இதை கொஞ்சம் கோவமாக திட்ட முடியும். வேண்டாம் என்று இந்த இடத்தில விடுகிறேன்.


பானு வீட்டு கல்வி திட்டத்தில் , திரு . ஹீலர் பாஸ்கர் அவர்கள் , பரிந்துரை செய்த புவிதம் என்னும் மாற்று வழி கல்வி நிலைய விடீயோவைத்தான் இங்கு பகிர்ந்துள்ளேன். இது முற்றிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட CBSE கல்வி நிலையம் என்பது குறிப்பிட தக்கது . முழுமையாக பாருங்கள் .

இதோ அந்த URL .

ரஷியாவை சேர்ந்த ஒருவர் கூட இங்கு பாடம் நடத்துகிறார்.
கலை துறையும், விவசாயமும் நன்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
நல்ல ஆங்கில புலமை கொடுக்க படுகிறது.

மீனாட்சி என்ற அம்மையாரின் தலைமையில் , நன் முறையில் இந்த கல்வி முறை வளர்ந்து வருகிறது .

தொடர்பு கொள்ள வேண்டிய எண் :

96001 17712

https://www.youtube.com/watch?v=7-uo-noRVfU




Wednesday, 26 July 2017

காடு திருத்தி கழனி செய்தது போதும்

காடு திருத்தி கழனி பரப்பியது போதும்!
கழனி திறுத்தி காடு செய்வோம் வாரீர்!
இந்த மண்,
மனிதனுக்கானது இல்லை.
விலங்குகளுக்கும்,
பறவைகளுக்கும்
நீர்வாழ் உயிர்களுக்கும்
சொந்தமானது.
நாம் விவசாயம்
செய்வததற்காக அழித்தது
காட்டை மட்டுமல்ல |
அங்கு வாழ்ந்த
உயிர்களையும் தான் |
ஐம்பெரும் நிலப்பரப்பில் இயற்கையை நம் இஷ்டத்துக்கு மாற்றி வாழும் இடமாக மாற்றபட்டது மருத நிலம் மட்டும்தான்!
அதை மீண்டும் இயற்கையிடம் ஒப்படைக்க வேண்டும்
இது,
நம் கடமை
அல்லவா?

உலகம்   சந்தித்த புரட்சிகளில் இயற்கை வழியில் உருவான புரட்சி இதுதானாம். ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒரு சில பயிர்கள் வளர்த்தனவாம்.அப்படி வளர்ந்த பயிர்களும் கூட மரம் அளவிற்கு உயர்ந்து நின்றனவாம். எனவே அந்த காட்டை மருதம் என்று அழைத்தாராம்.


ஆனால் இன்று காட்டை அழித்து விவசாயம் செய்வது , நமக்கு விதைக்கப்பட்ட தவறான அறிவு .


அப்படி தானாக வளர்ந்த  பயிர் செடிகள் ஓட்ஸ் , சோளம், பார்லி . இவை தானாகவே இம்மண்ணில் விளைய கூடியவை. பிறகு வளர்ந்தவை நெல் , கோதுமை . இவற்றை விளைவிக்க அவசியம் இல்லை . இவை மருத காடுகள் . ஆள் உயர செடிகள் !- என்று கூறுகிறார்
 எழுத்தாளர் பா.பிரபாகரன்

மருத நில வளர்ச்சியை கையில் எடுத்து கொண்டு , நகரம் வளர ஆரம்பித்து , அதற்காக மலைகள் அழிக்க பட்டு , கடல் எல்லைகள் சுருக்கப்பட்டு , காடுகள் முற்றிலும் அழிக்க பட்டு ,இன்னும் எத்தனை எத்தனை தவறுகள் - அடிக்கி கொண்டே போகலாம் .

இந்த மருதநிலம் தான் அரசு , அரசாங்கம், அரசியல் , வணிகம், எல்லாவற்றையும் விதைத்தது .

அதன் விளைவு தான் , ஊழல், கொலை, குற்றம் , கொடுமை, வசதி, ஜாதி, என எல்லா தவறுகளையும் கூடவே விதைத்தது.

ஒவ்வொரு நிலத்திற்கும் இடையில் இருந்த மரங்களை கூட அழித்து விவசாயம் செய்வது கொடுமையிலும் கொடுமை!

வணிகம் செய்பவன் மட்டும்தான் பேராசை பிடித்தவனா ?
அரசியில் வாதி மட்டும்தான் இந்த மண்ணை கூறு போட்டு விற்கிறானா ?

விவசாயி செய்யவில்லை.
தனக்காக மட்டும் விதைதான்.சரி.
தன ஊருக்காக விதைதான் சரி.

அத்தோடு நில்லாமல் , இந்த மண் மீது விஷம் தெளித்தான் .
உரம் என்ற பெயரில் !

அங்கு வாழ்ந்த உயிர்களை அழித்தான்
பூச்சி கொல்லி மருந்து என்ற பெயரில் !

இந்த மண் தாங்குமா ?

போதும்!

நாம்

காடு திருத்தி கழனி செய்தது போதும்
கழனி மாற்றி காடு செய்க !

இதை தொடங்கி பார் ,
இந்த உலகம் , எப்படி துடிக்கும் என்று பார் !


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...