Monday, 25 June 2018

பகுத்தறிவு விதைத்தது திராவிடம் அல்ல

நேற்று 25.6.2018

சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு விவாத நிகழ்ச்சி .
ஆளுநரை எதிர்த்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை என்று அறிவித்துள்ளார் ஆளுநர் .
இது சரியா என்பது குறித்து ஒரு விவாதம் .
அதில் சவுக்கு சங்கர் மற்றும் நாராயணன் பேசிய விவாதம் கண்டு ஆச்சர்ய பட்டு போனேன் .

சவுக்கு : ஆளுநரை எதிர்த்தால் தண்டனை என்பது மிரட்டல் . கருப்பு கொடி                        காட்டி எதிர்ப்பு தெரிவிப்பது நம் மரபு . அதை செய்ய கூட உரிமை                        இல்லையா ? ஒரு விஷயத்திற்கு நீங்களே பதில் சொல்லுங்க ,                                     நிர்மலா தேவி பேசிய உடன் , ஆளுநர் எதற்கு விசாரணை கமிஷன்                       வைக்க வேண்டும் . தப்பு பண்ணின ஆளே , அவருக்கே விசாரணை                     கமிஷன் வைப்பார்களா ? இந்த இடத்தில எதிர்த்தால் , சிறை                                      தண்டனையா ?

உடனே ,

நாராயணன் இடை மறித்து ,

எப்படி நீங்க ஆளு என்றெல்லாம் பேசலாம் . ஆளுநர் என்ற மரியாதை கூட இல்லையா ? முதலில் அந்த வார்த்தையை வாபஸ் வாங்குங்க !

சவுக்கு : முடியாது , நான் வாபஸ் வாங்க முடியாது . அவரே ஏன் விசாரணை                        கமிஷன் வைத்ததின் அர்த்தம் என்ன ?

நாராயணன் : இங்க பாருங்க . நிர்மலா தேவி குறிப்பிட்டது ஆளுநரை !                                              விசாரணை கமிஷன் வைத்தது , ஆளுநர் கிடையாதுங்க !                                          பல்கலை கழக துணை வேந்தர் . இரண்டையும் போட்டு                                             குழப்பாதீங்க !


இந்த பதில் வந்த உடன் தான் எனக்கு புரிந்தது ,
பகுத்தறிவு விதைத்தது திராவிடம் அல்ல . ஆரியம் என்பது !
இனிமே எந்த திராவிடம் அலட்டி கொள்ளாதீர்கள் . பகுத்தறிவு விதைத்தது நாங்கள் தான் என்று !
உங்களுக்கு அப்பா ஒருத்தர் இருக்கார் . ஆரியர் .
இரெண்டு பெரும் சேர்ந்து தமிழர்களை ஏமாற்றும் கலைக்கு பெயர் தான்
பகுத்தறிவு !

( ஆளுநர் மற்றும் பல்கலை கழக துணை வேந்தர் இரண்டுமே
பன்வாரி லால் புரோகித அவர்களே )




Wednesday, 6 June 2018

surname in tamil

surname enraal சார்ந்த நாமம் என்ற தமிழ் கலந்த சமஸ்க்ரித பெயர் தான் . யாரை சார்ந்து இருக்கிறோம் என்பதை தான் குறிப்பிட வேண்டும் . உலகின் எல்லா மூலையிலும் யாரை கேட்டாலும் , அவன் செய்கின்ற தொழிலை தான் சொல்லுவான் . ஆமா , நான் என தொழிலை மட்டுமே நம்பி வாழ்கிறேன் . நான் உழைத்து உண்பவன் என்பதே , அதன் மறுபொருள் . இதன் அடிப்படையில் , தமிழத்தின் எல்லா ஜாதிகளும் , தொழில் சார்ந்தே விதிக்க பட்டவை .

100 ஆண்டுகளுக்கு முன்பு , தமிழகத்தின் தொழில்கள் அழிக்கப்பட திட்டமிடப்பட்ட போது தான் , ஜாதிகள் வேண்டாம் என்று பரப்புரையும் செய்ய பட்டது . ஒரு தொழில் சார் விஷயத்தை , ஏற்ற தாழ்வுக்குள் கொண்டு சென்று ,
ஜாதி போடுவது மடமை என்ற எண்ணத்தை உருவாக்கி , அதன் மூலம் தன குலத்தொழிலை தானே மறைக்கும் அறிவு போதிக்கப்பட்டது .

அதை விட கொடுமை , surname என்ற இடத்தில , தகப்பனாரின் பெயரை மட்டும் போட்டு கொள்ள , நமக்கு பரிந்துரைக்க பட்டது தான் ! காலாகாலத்துக்கும் , எல்லோரும் அப்பாவை மட்டுமே சார்ந்து வாழ்கிறோம் என்றே பொருள் வருகிறது .
surname  எனும் தொழில் சார்ந்த ஜாதி பெயர் போடுவது தவறு இல்லை . 
அதில் ஏற்ற தாழ்வு பாராட்டி சண்டையிடுவது , உயிருக்கு ஊரு விளைவிப்பது என்பது மிக மிக  தவறு


Thursday, 31 May 2018

ராவணன் எனும் புரிதல்

முதலில் ராவணன் தமிழன் தானா என்று ஆய்வு செய்யாதீர்கள் ?

இராவணனை தமிழன் இல்லை என நிரூபிக்க முயற்சிக்காதீர்கள்.
ஏனெனில், தமிழன் இலங்கையின் பூர்வகுடி இல்லை என்றும், அந்த சிங்கள நாடென்றும், இலங்கை உரிமை கொண்டாடி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ராவணன் எனும் கதாபாத்திரம், மிக பெரிய ஆதரமாக இங்கு நிற்கிறது.
மேலும், 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் கதையில், 10000 ஆண்டுகளாக வாழும் தமிழனும் உண்டு என்பதில், என்ன மாற்று கருத்து இருக்க முடியும்?

தமிழக ஜாதிகளை தேடி பாருங்கள், இந்தியா முழுக்க உண்டு

கால ஓட்டம், கலப்பால், எல்லோரும் பிரிந்தனர்
நாம் சுருங்கி விட்டோம். தமிழக மண்ணில் மட்டும் கலப்பு நிகழவில்லை.
ஆரியகலப்பு நிகழவிடாமல், பலர் தடுத்து இருக்கிறார்கள்
மிக பழைமையான வரலாறுகள் இருக்கிறது.


----------------------------------------------

ராவணன் வடஇந்தியனா ?

இல்லை .
ராவணன் என்பது தமிழ் பெயரே
ரா வண்ணன் என்றால்
கருப்பு என்றே பொருள்.

ராம என்பதும் தமிழ் பெயரே
தமிழை பின் னிருந்து முன்னோக்கி எழுதுவது தான் வடமொழி வழக்கம்

ராம = மாற

மாறன் என்னும் தமிழ் பெயரை கொண்டு இரு வேறு தமிழ் கூட்டங்களுக்குள் சண்டை மூட்ட உருவாக்கப்பட்டன கதை

என்றுமே, தமிழ் இனத்திற்குள், சண்டை மூட்டும் வழக்கம் வந்தேறிகளுக்கு உண்டு.


ராவணன் வாழ்ந்த காலம் வேறு , ராம எனும் மாறர்கள்  வாழ்ந்த காலம் வேறு .
தொடர்பே கிடையாது .

------------------------------------------------------------------


ராவணன் என்பவன் வாழ்ந்தானா ?

வாழ்ந்தது மட்டும் உண்மை
இந்தியா முழுக்க வே, ராவணன் எனும் கருப்பு  வணங்கபட்ட நிலையில்,

இங்கு வந்து குடியேறிய மக்கள்
ராவணன் குறித்து, சிறு அறிவும் இல்லாமல், மக்களின் பேச்சு வழக்கை மட்டும் கொண்டு,
ஹோமரின் கதைகளை திணித்து எழுதபட்ட காவியமே ராமாயணம் .
இதனை அக்காலத்திலேயே எதிர்த்து, அதனை பரப்பியவர்களை தண்டித்தவர்கள் தான் இலங்கை மக்கள், இதன் அடிப்படையில்,
இலங்கையே பூர்வீகமாக இருக்க வேண்டும்.
அன்று தண்டித்ததை பலி வாங்க தான்,
இலங்கை சபிக்க பட்ட பூமி என்று வர்ணித்தான் ரஜினி.
பலி வாங்கப்பட்டது.


------------------------------------------------------------------

ராவணன் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருக்கிறதா ?


 இலங்கையில் உள்ள, ராவணமலையை, தான் ஆதாரம் காட்டுகிறார்கள்.
மேலும் 5000 ஆண்டுக்கு முந்தைய கதை
யாரும் பெரிதாக ஆய்வு செய்யவில்லையே.
ஆனால்,
சீனாவில் உள்ள மருத்துவ புத்தகமும், வட இந்திய ராவண கோயில்களும்
தான், ஆதாரம் தருகின்றன.



ராவண கோயில்கள் கூட இங்கு இல்லை,
இது இரு வேறு இன குழுக்கள்செய்த வேலை,
விழாக்கள், கோயில்கள் கட்டுவது நமக்கு வழக்கம் இல்லை
அதனால் தென்னிந்தியா, மற்றும் இலங்கையில்  இல்லை
ஆனால், சுங்க வம்ச காலத்திற்கு முந்தைய காலத்தில் மெளரியகுலம் , கிரேக்க தொடர்பு கொண்டதால் கோயில் கட்டும் வழமைக்கு வந்துள்ளது.
அதுதான் தொடர்கிறது .எல்லாம், 1800 ஆண்டுகள் கொண்ட வரலாறு தான்
, உண்மையில் ராவணன் காலம் வேறு,
இவர்கள் கூறும் கதையின் காலம் வேறு,
எந்த கருப்புக்கும் இன்று வரை நாம் கோயில் கட்டுவது இல்லை



ராவணன் என்பவன் ஒரு கருப்பு 

ராமாயணம் . சுங்க வம்ச பிராமணர்களால் எழுதப்பட்டது .
அவர்கள் யூத கலப்பு கொண்டவர்கள் .
அங்கு இருந்து ஆரம்பித்த  பிரச்னை இன்று வரை தொடர்கிறது .



Sunday, 27 May 2018

தமிழர் வணிகம் என்றால் என்ன ?

பலர் வணிகம் என்றதும் , கார்பொரேட் பொருள்களை வாங்கி விற்பது என்று எண்ணி கொள்கிறார்கள் .

உற்பத்தியை கையில் எடுக்க வேண்டும் .
அப்படியும் , உற்பத்தியை கையில் எடுத்த பலர் ,
முதலில் உள்ளூரில் விற்கவோ , உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றவோ தயார் இல்லை .

மாறாக ஏற்றுமதி செய்து , தான் மட்டும் முன்னேறி கொள்ளவே முயற்சிக்கிறார்கள் .
2017 ம் மட்டும் , திருப்பூர் பின்னல் ஆடை உற்பத்தி செய்தவர்கள் , ஏற்றுமதி செய்தது மட்டும் 12500 கோடி ரூபாய் . அதே ஆடைகள் , வெளி நாடு சென்று மீண்டும் , பிராண்டு பெயர் மாற்றி , நம்மிடமே விற்பனைக்கு வருகிறது . இந்த உற்பத்தியால் என்ன பயன் ? தஞ்சை மற்றும் திருச்சியில் இருந்து மலர்கள் எல்லாம் ஏற்றுமதி செய்யப்பட்டு , உள்ளூரில் கிலோ 500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் வரை விற்பனை ஆகிறது .

இயற்கை வழி உற்பத்தியும் சரி , தொழில் நுட்ப உற்பத்தியும் சரி , உள்ளூர் தேவைகளை நிறைவு செய்யாமலேயே , வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது . அங்கு இருந்து , மீண்டும் வணிகமாக மாறி நம் பணத்தை சுரண்டுகிறது .

தொடர்ந்து இதை செய்ய மட்டுமே , இந்திய அரசு ஊக்குவிக்கிறது . நாம் வாங்கும் பொருள்கள் , நேரடி உற்பத்தியாளரிடம் இல்லை . அதே சமயம் , உற்பத்தி செய்பவர்களும் விற்பனை செய்ய தயார் இல்லை . இதனை பயன்படுத்தி ஏற்றுமதி செய்யும் எல்லா பொருளுக்கும் 10 % மானியமாக அரசு வழங்குகிறது . மேலும் இந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் வரை , ஏற்றுமதி க்கு தேவையான , கட்டமைப்பு செய்ய மட்டும் அரசு ஒதுக்கியுள்ளது .

உற்பத்தியை விட முக்கியம் , அதை யாருக்கு செய்கிறோம் என்பதில் உள்ள புரிதல் !

தமிழர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் எனில் ,
தமிழர் உற்பத்தி பொருள்
தமிழருக்கே முதலில் என்றும் ,
எஞ்சியவையே ஏற்றுமதி ஆகும் என்றும்
நம்மால் கூற முடியுமேயானால்

அது தான்
தமிழர் உற்பத்தி வணிகம் !


Saturday, 26 May 2018

வளர்ச்சி தேவை இல்லை

தூத்துக்குடி ஸ்டெர்லிட் ஆலையை மூடி விட்டால் , காப்பருக்கு என்ன செய்வீர்களாம் ? உங்கள் வீட்டில் உள்ள அணைத்து மின்சாதன பொருள்களும் இதனை கொண்டுதான் இயங்குகிறது தெரியுமா ? காப்பர் உடம்புக்கு நல்லது என்று சொன்னால் ஏற்று கொள்கிறீர்கள் ! ஆனால் ஆலை மட்டும் வெண்டோமோ என்று
அறிவாளி தனமாக கேள்வி கேட்கப்பர்வர்களை காணும் போதும் ,

மீத்தேன் இல்லாமல் எப்படி , சமையல் செய்வீர்களாம் என்று கேள்வி கேட்பவர்களை காணும் போது ,

வளர்ச்சி இன்றி போனால் தமிழகம் அழிந்து விடும் என்று கூறும் போதும் ,

இத்தனை பெரிய முட்டாள்களோடு , இந்த தமிழகம் வாழ்கிறதே என்று அருவருப்பாக உள்ளது .

20 ஆண்டுக்கு முன்பு வந்தது தான் இந்த ஆலைகள் , காஸ் , வளர்ச்சி எல்லாம் !

பல ஆயிரம் ஆண்டுகளாக ,
இதே மீத்தேன் , இதே தாமிரம் எல்லாம் பயன்படுத்திய இனம் இது !
அவை எல்லாம் இயற்கை வழி !

அதன் பயன் வணிகம் அல்ல ! எங்கோ உள்ள லண்டனில் , உள்ள பணக்காரன் வாழ அல்ல !
பின்விளைவு தராத அறிவியலை பயன்படுத்திய இனத்திற்கு ,
நோய்களோடு வரும் வளர்ச்சி தேவை இல்லை !



Thursday, 24 May 2018

தற்சார்பை நோக்கி நட !

தூத்துக்குடி மட்டும் அல்ல ,
தமிழகத்தையே காப்பாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்தால் ,
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் .

தமிழகத்தில் இருந்து , இனி வருமானம் வரக்கூடாது .
எனில்
வரி செலுத்துவதை நிறுத்த வேண்டும் .
வரி என்றவுடன் எல்லோரும் வருமான வரியை பற்றி மட்டுமே பேசுகிறோம் .
அது ஒரு பெரிய விஷயமே இல்லை .
ஏனெனில் , இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் வருமான வரி செலுத்துவோர் மொத்தம் 5 % கூட கிடையாது .
மறைமுகமாக , நாம் செலுத்தும் GST தான் முக்கிய வருவாய் !



பாக்கெட்டில் , பாட்டிலில் , டியூபுகளில் அடைக்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளையும் வாங்காதீர்கள் .
ஏனெனில் அந்த பொருள்களில் தான் வரி சேர்த்து வாங்கப்படுகிறது .
வரி விதித்து அரசுக்கு சேவை செய்வதாக கூறும் உணவகங்களில் உண்ணாதீர்கள் !
அவசர சிகிச்சை அல்லாத , வேறு எந்த ஒரு விஷயத்திற்கும் மருத்துவமனை தேடாதீர்கள் . ஒவ்வொரு மருந்து பொருளொடும் , நம் பணம் , முதலாளிகளின் திமிரை அதிகரிக்கிறது .
கட்டாயம் அல்லாத எந்த ஒரு காப்பீடும் போடாதீர்கள் !
கட்டாயம் அல்லாத சேமிப்பு என்ற பெயரில் , உங்கள் பணத்தை கொண்டு முதலாளிகளை வளர்க்காதீர்கள் !
அந்த வரி பணமும் , விற்பனை விலையும்தான்  திட்டமும் தீட்டப்
உதவுகிறது .

உள்ளூரில் உள்ள விற்பனையாளர்களை தேடுங்கள் !
உங்கள் அருகாமையில் மாடு வைத்து இருப்பவரிடம் பால் வாங்குங்கள் !
( பாக்கெட் பால் கூட வேண்டாம் )
உங்கள் வீட்டில் , காய்கறி , பழம் தரும் மரங்களை வளருங்கள் !

ஏனெனில் ,
நாளை நாமும் 144 க்கு கீழ் வரலாம் .
கற்பக விருட்சமும் ( பனை மரம் ), காம தேனுவும் ( எருமை மாடுகள் ) இருந்த , கொற்கை
தூத்துக்குடி யாக மாறி ,
இன்று 144 எதிர்கொண்டு நிற்கிறது .
நாளை நாமும் ,
ஏன் என்ற கேள்வி இல்லாமல் , சட்டத்திற்குள் அடைக்கப்படலாம் .அல்லது சூழ்நிலைகள் உருவாக்கப்படலாம் .

தற்சார்பு என்று பலபேர் கத்தியத்தின் அர்த்தம் ,
இன்று தூத்துக்குடியில் !
நாளை நம்ம ஊரிலும் !


Thursday, 26 April 2018

தமிழன்டா !

தமிழர்கள் , தமிழன்டா என்று காலரை தூக்கி விட்டு கொள்ள கூடிய இரு சம்பவங்கள் உள்ளன .

1 . நம்ம சுந்தர் பிச்சைக்கு கூகிள் நிறுவனம் தந்த பங்குகளை அவர் விற்று கொள்ள கூடிய காலம் வந்து விட்டது . இதன் மூலம் அவர் 2048 கோடிக்கு சொந்தக்காரர் ஆகிறார் .
தமிழ்நாட்டிற்க்கு ஒரு பிரயோசனமும் இல்லை .
இருந்தாலும் தமிழன்டா அப்படின்னு சொல்லிக்கலாம் .


2 . தற்போது இங்கிலாந்து வங்கியின் கவர்னராக இருக்கும் , கனடாவின் , மார்க் காரனே வின் பதவி காலம் 2019 ல் முடிவடைகிறது .
அந்த இடத்திற்கு , நம்ம RBI யின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இதுவும் தமிழ்நாட்டிற்கு பிரயோசனம் இல்லாத விஷயம் தான் .

இருந்தாலும் தமிழன்டா !






சராசரியாக ஒரு தமிழனால் , இதை எல்லாம் செய்ய முடியுமா ?
இங்கிலாந்து  வங்கிக்கு கவர்னர் என்ற பொறுப்பு என்பது வழங்கப்படுகிறது என்றால்
அவர்  ?


தமிழன்டா !

Wednesday, 25 April 2018

ஆண்ட பரம்பரையா ?

இன்று இந்தியாவை ஆள்வது யார் என்று கேட்டால் ,
பார்சி இனம்
ஜைனம் - சமணம் - பௌத்தம் - திராவிடம் - ஜொராஷ்ட்ரியம் .

கி.பி.  7 ம் நூற்றாண்டு தருணத்தில் , தமிழகத்தின் சமண முனிவர்கள் பலர் கொலை செய்ய பட்டனர் .
அதன் பலி வாங்கும் நடவடிக்கை தான் இப்போது தமிழகத்தில் நடப்பது !



சிரியாவிலும் , பலிவாங்கும் நடவடிக்கை தான் நடக்கிறது .

 காஞ்சிபுரம் தான் இலக்கு ! இதற்காக தான் , போதி தருமர் கதையை  ஏழாம் அறிவு கதை மூலம் நமக்கு நினைவூட்டினார்கள். இதில் பல்லவம்சம் இன்னும் உயிரோடு இருக்கிறதா என்றும் ஆய்வு செய்து இருக்கிறார்கள் .
ஏனெனில் , சமணத்தை விரட்ட முடிவெடுத்து அதில் வென்றவர்கள் , பல்லவர்கள் , அவர்களுக்கு துணை நினறது பாண்டியர்களும் , முத்தரையர்களும் !
இதில் பாண்டியர்கள் , முழுவதும் கிறிஸ்வமாக மாற்றப்பட்டு விட்டனர் . அவர்களின் நேரடி கடைசி வாரிசு ஒரு பெண் . அவர் ஒரு ஆங்கிலேயனை திருமணம் செய்து விட்டார் .
அவ்வாறு சமணர்களை விரட்ட , போர் புரிய பயன்பட்டது தான் புதுகோட்டை .
நாலடியார் என்ற நூல் குறித்து ஒரு கதை உண்டு !
அந்த கதையில் ,  நானூறு சமணர்கள் , நாலடியார் நூலை எழுதி , அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கும் பொழுது , இதை கேள்வி யுற்ற மன்னன் அவர்களை கொலை செய்ய உத்தரவிடுகிறான் . இந்த செய்தி அறிந்த , சமணர்கள் , இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடி விடுகிறார்கள் .
ஆனால் நாலடியார் நூலை மட்டும் விட்டு விட்டு செல்கிறார்கள் .

70 ஆண்டுகளுக்கு முன்பு தான் , சாமிநாத ஐயர் இவற்றை எல்லாம் தேடி தொகுத்தார் .
தமிழகத்தில் இன்று புழக்கத்தில் இருக்கும் எல்லா நூல்களும் , சமணம் சார்ந்தவை .
இந்த மதம் தான் திராவிடம் . இதன் தகப்பன் தான் , பார்சி இனம் . ஜொராஷ்ட்ரிய மதம் .
தாமரை மலர் மீது தீபம் .

இங்கு தான் ஆண்டபரம்பரை என்று அலட்டி கொள்ளும் பலர் தானும் சிக்கி கொண்டு , தமிழகத்தையும் காவு கொடுக்க காத்து கொண்டு இருக்கிறார்கக்ள் .

Thursday, 12 April 2018

தோனியின் சொத்து யார் தெரியுமா ?

தோணி தனக்கு சேர வேண்டிய 150 கோடியை தரவில்லை என்று , தான் விளம்பரதாராக 7 ஆண்டுகள் பணியாற்றிய உத்தரபிரதேச அம்ப்ராபாலி எனும் கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் .

ஐயா கிரிக்கெட் ரசிகர்களே ,
கொஞ்சம் யோசிங்க ! ஒன்று , இரண்டு அல்ல .150 கோடி . யாரிடம் இருந்து நிறுவனம் பெற்று தரும் . வாடிக்கையாரிடம் இருந்து பெற்று தரும் . அவ்வாறு தரும் போது , தன்னுடைய லாபத்தை ஒரு நிறுவனம் இழக்க விரும்பாது .
விளைவு , தரமற்ற கட்டிடம்  தான் மக்கள் கைக்கு போய் சேரும் .

எங்கு இருந்து இவருக்கு , 150 கோடிக்கு விலை பேச முடிகிறது ?
ரசிகர்கள் எனும் சொத்து !
ஒரு சினிமா நடிகர் , விளையாட்டு வீரர் நடிக்கும் ஒரு விளம்பரம் மூலம்  மக்களுக்கு வந்து சேரும் எந்த ஒரு பொருளும் தரமுடையாதாக இருக்காது .

இதற்க்கு காரணம் , இதன் குற்றவாளி
ரசிகன் எனும் நீங்கள் !






Saturday, 31 March 2018

கருப்பு கொடி கலாசாரம்

சுப்ரமணிய சாமி தெளிவாக தான் சொல்றார்.
நீ நிலத்திற்கு தண்ணீர் கேட்காதே !
அது தர மாட்டோம் .
நிலத்திற்கு தண்ணீர் வந்தால் , மீத்தேன் எடுக்க முடியாமல் போகும் .
அதனால் நிலத்தடி நீர் கிடையாது .

குடிக்க நீர் வேண்டும் என்றால் ,
தர முயரிசிக்கிறோம்.
அப்பவும் , நிலத்தடி நீரோ , காவிரி நீரோ தர மாட்டோம்.
கடல் நீரை , நன்னீராக்கி தருகிறோம் .

அதுவும் இஸ்ரேல் உதவியுடன் !

எத்தனை பெரிய திட்டத்தை , அழகாக கூறி விட்டார் .
அவங்க முடிவில் எவ்வளவு தெளிவாக இருக்காங்க !

நம்ம ஆளு கருப்பு கொடி வாசலில் கட்டி விட்டால் ,
காவேரி தண்ணீர் வந்து விடும் என்கிறான் .
மிஸ்ஸுடு கால் கொடுத்தால் ,
நதிகள் இணையும் என்பது போல் உள்ளது கருப்பு கொடி !





Friday, 30 March 2018

காவேரி நதி நீர் போராட்டம் - புதுமை புதுமை , அத்தனையும் புதுமை .

ஏப்ரல் மாதம் போராட்ட மாதம் என்று அறிவிப்போமாக !
அவ்வளவு போராட்டமும் வைட்டிங் லிஸ்ட் ல இருக்கு !
------------------------------------------

ஏப்ரல் 2 மருந்து கடைகள் மூடப்படும்.
ஏப்ரல் 3 உண்ணாவிரத போராட்டம் - அதிமுக
ஏப்ரல் 11 கடையடைப்பு போராட்டம் - பாமக
ஏப்ரல் 15 ல் கருப்பு கொடி கட்டும் போராட்டம் - திமுக
வருமான வரி அலுவலக முற்றுகை - மே 17 இயக்கம் .
வீட்டுக்கு வீடு கருப்பு கொடி கட்டும் போராட்டம் - பாமக
செல்போன் டவர் கைப்பற்றும் போராட்டம் - தவாக
அப்புறம் ரயில் மறியல் போராட்டம்
பஸ் மறியல் போராட்டம்
நிறையவே இருக்கு !
எல்லாமே நம்ம வயிற்றில் நாமே அடித்து கொள்ளும் போராட்டம் .
இதில் விவசாயிகள் செய்யும் போராட்டம் ரொம்ப புதுமையானது .
உலகமே அசந்து போகுது .
ஒப்பாரி போராட்டம்,
கருப்பு கொடி போராட்டம் ,
பாடை கட்டும் போராட்டம்,
கோலம் போடும் போராட்டம்,
அரை நிர்வாண போராட்டம்,
மண்டையோடு அணியும் போராட்டம்,
வேப்பிலை அணியும் போராட்டம்,
மொட்டை அடிக்கும் போராட்டம்,
உண்ணா விரத போராட்டம்,
மெழுவர்த்தி ஏற்றும் போராட்டம்
ஆற்றில் இறங்கும் போராட்டம்,
கடலில் இறங்கும் போராட்டம்,
முட்டிகாலில் நிற்கும் போராட்டம்
அதிகப்படியாக போனால் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் .
என்னய்யா உங்க போராட்டம்!
இந்த போராட்டங்கள் எல்லாம் பிரிட்டிஷாரை எதிர்த்தபோது கூட யாரும் இப்படி செய்ய வில்லை.
எந்த காலத்தில்,
தமிழினம் இப்படி போராடிய வரலாறு உள்ளது என்றே தெரிய வில்லை.
எவ்வோளவோ தொழில்நுடபத்திற்கு மாறி விட்டோம் .
ஆனால் போராடும் போது மட்டும் ,
யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நோகாமல் போராட ,
நம் பகுத்தறிவு நம்மை வழிநடத்துகிறது போலும் !
ஆங்கிலேயனை எதிர்க்க சொன்னால் ,
நம்ம ஊர் பனை மரங்களையும் , தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தி ,
நம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தவர்கள் தானே !
அப்படிதான் சொல்லி தருவார்கள் .
போராட்ட முறைகளை மாற்றுங்கள் !
இல்லையேல் ,
போராட்டங்களையெல்ல்லாம் புறக்கணிப்பு செய்யுங்கள் !
ஆக்கபூர்வ வழி தேடுங்கள் !
( நம்மை அழிக்க வழி சொல்லும் திராவிட
பகுத்தறிவை புறக்கணிப்பு செய்வோம் .)
HELP ஏலம் ஏப்ரல் 3 ல் முடிவடையும் .
பின்னால் ஒரு நாள் இதற்கும் போராடுவோம் .
அப்போதும் இந்த திராவிட போராட்டத்தை அரசியல் கொண்டு வரும் .
நினைவிற் கொள்க .
காலத்தில் கிடைக்காத நீதி அநீதிக்கு சமம் .
வரும் முன் போராடுவது , நம் மூலதனம் .
வழிகளை எல்லாம் அடைக்கிறது , பகுத்தறிவு மனம் !


Sunday, 18 March 2018

கேட்பாரற்று கிடைக்கும் தொகை

வங்கிகளில் சேமித்து விட்டு எடுக்காமல் , கேட்பாரற்று கிடைக்கும் தொகை மட்டும்
11302 கோடி என்று ரிசெர்வே வங்கி
--------------------------------------------------------------


வங்கி கணக்கு கட்டாயம் என்று கூறி , மக்களை வங்கி கணக்கு தொடங்க வைத்தது அரசு தான் !
அதில் குறைந்த வைப்பு தொகை இருக்க வேண்டிய கட்டாயத்தை விதித்தும் வங்கிதான்!
இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ,
தனியார் நிறுவனங்களில் , பி.எப் பணம் பிடிக்க படுகிறது .
ஆனால் , அந்த பணியாளர் வேலையில் இருந்து செல்லும் போது , அவருடைய பி.எப் பணத்தை எடுத்து தர , நிறுவன எழுத்தர்கள் முயற்சிப்பது இல்லை . அந்த பணம் அப்படியே வங்கிகளில் கிடக்கிறது .
தற்போது மத்திய அரசு பி.எப் பணத்தை எடுக்க வேண்டுமானால் , வேலையில் இருந்து நீங்கி 3 மாதங்கள் வரை வேறு வேலையில் இல்லை என்று சான்றிதழ் வழங்கினால் தான் தருவேன் என்று கூறுகிறது . அந்த 3 மாதங்களுக்குள் வேறு வேலை கிடைத்து விட்டால் , ஏற்கெனவே இருந்த கணக்கை புதிய நிறுவனத்தோடு இணைத்து தொடர வேண்டும் என்று கூறுகிறது . ஆனால் , பலரும் புதிய நிறுவனத்தில் பழைய கணக்கை தொடர்வது இல்லை .
தன மனைவிடம் கூறாமல் கூட , சேமிப்பது .
கணவனுக்கு தெரியாமல் சேமிப்பது .
சேமிக்கும் போது கூடவே , சேமிக்க தூண்டிய ஆள் , எடுக்க செல்லும் போது ஒத்துழைப்பு தராதது
சேமித்த பணத்தை எடுக்க தெரியாமல் அப்படியே விடுவது
வயது முதுமை காரணமாக ஏற்படக்கூடிய ஞாபக மறதியின் நிமித்தம் , சேமித்த முதிர்வு தேதி தெரியாமல் இருப்பது
வெறுமை , தனிமை ,
என்ற காரணங்களுக்கு இடையே ஏற்படும் விபத்துக்கள்
இப்படி யாக , வங்கிகளில் சேமித்து விட்டு எடுக்காமல் , கேட்பாரற்று கிடைக்கும் தொகை மட்டும்
11302 கோடி என்று ரிசெர்வே வங்கி கூறி உள்ளது .
அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.ஆயிரத்து 262 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.ஆயிரத்து, 250 கோடியும் அனாதையாக இருக்கின்றன. மற்ற வங்கிகளில் ரூ.7 ஆயிரத்து 40 கோடி கேட்பாரற்று இருக்கிறது.தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, ஆக்சிஸ், டிசிபி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, இன்டஸ்இன்ட், கோடக்மகிந்திரா, யெஸ் வங்கி ஆகியவற்றில் ரூ.824 கோடி டெபாசிட்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
மேலும் 12 தனியார் வங்கிகளில் மொத்த டெபாசிட் ரூ 592 கோடியும், ஒட்டுமொத்தமாக தனியார் வங்கிகளஇல் ரூ.ஆயிரத்து 416 கோடி பணம் கேட்பாரற்று கிடக்கிறது.
வங்கியில் சேமிப்பு கணக்கை திறப்பதோடு சரி , அதன் பிறகு வங்கி பக்கமே வராமல் , இருப்பதாலும் வங்கியில் பணம் கிடைக்கிறதாம் .
அந்த பணத்தை ,டீமேட் முறைக்கு மாற்றி கொள்ள அறிவுரை கூறுகிறது மத்திய வங்கி !
வங்கிகள் , அஞ்சலகங்கள் , காப்பீடு போன்ற இடங்களில்
சேமிப்பு பணம் இருந்தால் எடுக்க முயற்சி செய்யுங்கள் !
அல்லது
உங்கள் குடும்பத்தாருக்கு தெரிய படுத்துங்கள் !
சேமிப்பு என்பதே ஏமாற்று வேலை தான் !
அதிலும் தானாக சென்று ஏமாறுவேன் என்பது மிக பெரிய ஏமாளி தனம்.
இந்த சேமிப்பு எதற்க்காக ?


Monday, 12 March 2018

தஞ்சாவூரின் பெயர் காரணம்

தண் செய் என்றால் குளிர்விப்பது மட்டும் தான் . தானியம் செய் என்ற பெயர் தான் மருவி தஞ்சாவூர் ஆனது .

தஞ்சன் என்ற அரக்கன் வந்தான் . அவனை கொல்ல சொல்லி பெருமாளிடம்  , தஞ்சபுரீஸ்வரர் கூறினார்  அதன்படி , அரக்கன் கொல்லப்பட்டான் . அதனால் பெருமாளின் மனைவி , தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் வீற்று இருக்கிறார் என்ற கதையெல்லாம் சுத்த பொய் .

தனஜெயன் என்பவன் , தானிய உற்பத்தி செய்வது குறித்து , கற்று கொடுத்த விஞானி . தானிய பெயரிலேயே தானியம் செய்தவன் என்ற பெயர் மருவி தனஜெயன் என்று பிராமண சமூகத்தால் அழைக்கப்பட்டு , அவர்கள் விட்ட , அரக்க புராணமும் பரவியது .

பத்திரிகைகள் ஆண்டாண்டு காலமாக , பிராமண சமூகத்தின் கதைகளை மட்டுமே நமக்கு கூறி வருகின்றன .

தஞ்சாவூரின் பெயர் காரணம்




Thursday, 8 March 2018

விவசாயிக்கும் விடிவு

தமிழகத்தில் ஒரு இளநீரின் விலை குறைந்தது 40 ரூபாய் முதல் 50 , 60 கூட விற்பனை ஆகிறது .தஞ்சாவூரில் கூறுகிறார்கள்  , இளநீரெல்லாம் கேராளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று ! தென்னை விவசாயத்திற்கா பஞ்சம் தஞ்சாவூரில் ! ஆனால் ஏற்றுமதி செய்யப்படுகிறது . அதே இளநீர் ,பாட்டில் மூலம் விற்பனைக்கு வருகிறது . இதன் விலை 6 பாட்டில் கொண்ட ஒரு பேக்கிங் விலை 250  ரூபாய் வரை !

ஐயா விவசாயிகளே ,
தண்ணீர் இல்லை என்று நிலத்தடி நீரை உறிஞ்சி , விவசாயம் செய்து கூட பொறுத்து கொள்கிறோம் . அந்த உற்பத்தியை கூடவா , இங்குள்ள மக்களுக்கு கொடுக்க கூடாது !





எல்லோருக்கும் பொதுவான நிலத்தடி நீரை ஒருவர் மட்டும் உரிந்து கொண்டு  , எல்லோருக்கும் பொதுவான மண்ணில் ஒருவர் மட்டும் உரம் என்ற பெயரில் விஷத்தை தெளித்து விட்டு , உற்பத்தியையும் ஏற்றுமதி செய்து தான் மட்டும் வசதியாக வாழ்ந்து விட முடியும் என்ற எண்ணம் விவசாயிகளிடம் உள்ள வரை

எந்த விவசாயிக்கும் விடிவு என்பதே இல்லை .

எப்போ பார்த்தாலும்

மத பிரச்சனை
ஜாதி பிரச்சனை

உண்மையிலேயே பிரச்னை எது என்று ஆய்வு செய்வதும் இல்லை .
அதற்க்கு தீர்வு தேடுவதும் இல்லை .


விவசாயிக்கே தெரியாமல் , விவசாயி பிரச்சனை என்று கூறி
பிற பிரச்சனைகள் மறைக்கப்பட்டு வருகிறது .

முன்பு விவசாயிகளுக்கு எதுவும் தெரியாது , அதனால் உரம் பயன்படுத்தப்பட்டது .
ஆனால் இன்று விவாசாயிகள் ஒவ்வொருவரும் பன்மடங்கு பேசுகிறார்கள் .ஆனாலும் உரம் தான் போடுவார்களாம் .
என்னய்யா நியாயம் ?

இதே சமயம் இயற்கை விவசாயம் என்று கூறி ,
சாதாரணமாக தக்காளி ஒரு கிலோ 10 ரூபாய் எனில் ,
ஆர்கானிக் தக்காளி 40 ரூபாய் விற்பனைக்கு வருகிறது .

இந்த மண்ணில் மாற்றம் என்பது சாத்தியம் எனில்
அது விவசாயிகள் கைகளில் மட்டுமே உள்ளது .


ஏற்றுமதி தேவையா ?

ஒரு ஊரில் விலை இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் ?

ஒன்று , தேவையை விட உற்பத்தி குறைவாக இருக்கிறது .
எனவே யார் அதிக விலை கொடுக்க தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு , வழங்கப்படும் என்று பொருள் !
உற்பத்தி பற்றாக்குறையினால் இறக்குமதி செய்யப்பட்டு , அதனால் ஏற்பட்ட செலவுகளுக்காக விலை ஏற்றப்பட்டது என்றும் பொருள் .
இதை சமாளிக்கலாம் , ஏனினில்  ஒரு பொருள் உற்பத்தி செய்ய எதுவாக நிலம் இல்லையென்றால்  , வேறு ஒரு பொருளை உற்பத்தி செய்து இருப்பார்கள் . அதை தேவை படும் இடங்களுக்கு ஏற்றுமதி செய்து சமாளிப்பார்கள் .

ஆனால் , உற்பத்தியும் அதிகம் செய்து , இறக்குமதியும் செய்யாமல் விலை ஏறுகிறது என்றால் என்ன பொருள் ?
அங்கு உற்பத்தியாகும் பொருள்கள் , வேறு யாரோ பயன்படுத்த வேண்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பொருள் !
இப்போது விலை ஏறும்போது தான் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் .
ஏனெனில் மக்களின் உற்பத்தி முழுவதும் ஏற்றுமதிக்கு செல்கிறது . ஏற்றுமதி போக மீதம் உள்ள பொருள்கள் மட்டுமே , விற்பனைக்கு என்றால் , அது மிக பெரிய விலை உயர்வையே கொடுக்கும்


இவ்வாறாக , இந்தியாவில் , விலை வாசி அதிகரித்து , அதன் மூலம் வாழ்வாதார செலவு அதிகரிக்கும் மாநிலங்கள் மஹாராஷ்டிரா , கர்நாடக , தமிழ்நாடு  , மற்றும் குஜராத் ஆகியன !

இந்த நான்கு மாநிலங்களின் ஏற்றுமதி தான் இந்தியாவின் அந்நிய செலாவணி யில் முதலிடம் வகிக்கிறது .

ஆனால் இந்த நான்கு மாநிலங்களிலும் விலை மிக அதிகம் .

நம் மாநிலத்திற்கு மிஞ்சியது தான் ஏற்றுமதி .
இங்கேயே பற்றாக்குறை நிகழும் போது  எதற்காக ஏற்றுமதி ?
வாழை இலை முதல் , தேங்காய் , இளநீர் வரை ஏற்றுமதி  செய்து விட்டு
வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர் உணவு
இளநீர் பணக்காரர்கள் மட்டுமே குடிக்கலாம்

இது என்ன நியாயம் ?

ஏற்றுமதி தேவையா ?



பெண் சுதந்திரம் யாரேனும் வாங்கி தந்தார்களா ?

கைம்பெண் கதையெல்லாம் சுத்த வேஸ்டு ! இந்த தமிழ் சமூகம் போல் அழகானது எங்குமே இருக்க முடியாது . நம் வாழ்வாதாரம் எனப்படும் தொழில்களோடு மிக தொடர்புடையவை விலங்குகளும் , பறவைகளும் மரங்களும்தான் ! ஆடு , மாடு , நாய் , கழுதை, குதிரை , ஏன் காட்டு விலங்குகளை கூட பயன்படுத்தி இருக்கிறார்கள் . இந்த விலங்கு மற்றும் பறவை இனங்களோடு இணக்கமாக இருந்த நிறம் வெள்ளை . அவைகளின் கண்களுக்கு , பழக்கம் . ஆகவே , ஆண்கள் , இந்த விலங்குகளோடு தான் பணியாற்ற வேண்டும். அதன் நிமித்தம் வெள்ளை நிற ஆடைகள் அணிந்தனர். இதர பிற கலை துறையினரே  அல்லது மருத்துவம் மற்றும் ஆசிரிய பணியில் இருந்தவர்கள் காவி அல்லது வேறு நிறங்களில் உடை அணிந்தார்கள் . அதனால்  , ஒரு ஆண் இறந்த பிறகு , அவனது இல்லாள் அவன் இடத்திற்கு வருகிறாள் . போர் களம் கூட வந்து இருக்கிறாள் . அதனால் அவளும் அதே வெள்ளை ஆடைக்கு மாறி விட்டாள். அவளும் , அவள் கணவனின் தொழிலை தொடர்ந்து செய்தாள்.

இது புரியாத திராவிட கூட்டம் , வண்ண ஆடை உடுத்தி இருந்தவர்கள் உயர்சாதியினர் , வெள்ளை அணிந்தவர்கள் தாழ்ந்த சாதியினர் என்று வர்ணம் பூசி ,
காழ்ப்புணர்ச்சிக்கி ஆளாக்கி , அதற்க்கு தீர்வும் தருகிறேன் என்று ,
ஏதேதோ கதை விட்டார்கள் .

இங்கு பெண் அடிமை என்பது எல்லாம் துளியும் கிடையாது . அதை விடுதலை என்ற பெயரில் எவரிடமோ இருந்து வாங்கி தந்தேன் என்று கூறும் உரிமையும் எவருக்கும் கிடையாது .




Tuesday, 20 February 2018

அலையாத்தி காடுகள்

அலையாத்தி காடுகள் - சதுப்பு நில காடுகள் - சுந்தரவன காடுகள்
பொக்கிஷங்கள்


சதுப்பு நில காடுகள் என்று வழங்கப்படும் காடுகளுக்கு, புராண இதிகாச காலங்களில் வழங்கப்பட்ட  பெயர் சுந்தரவன  காடுகள் .

இன்றைய தலைமுறைக்கு புரிய வேண்டுமானால் இதன் பெயர் Mangrove  Forest .

இதில் என்ன சிறப்பு ?

நதிகளை இணைத்து விடலாம் , விவசாயம் செழிக்கும் என்போர் கண்டிப்பாக இந்த காடுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் .
நாம  ஏரிகளை , குளங்களை அழித்து , அதன் மீது வீடு கட்டி விட்டு , கடலுக்கு செல்ல வேண்டிய நீரை தடுப்போம் என்பது எத்தனை மடத்தனம் என்பதை விளக்கும் அழகிய காடுகள் தான்  இந்த சதுப்பு நில காடுகள் .

இந்த அலையாத்தி காடுகளை பற்றி முனைவர்.கு.இளங்கோவன் அவர்கள் கூறியதை உயிர் இதழ் பதிவிட்டு இருக்கிறது .
அதில் இருந்து சில வரிகள் :

நன்னீரும் , கடல் நீரும் சேரும் இடங்களில் , கடலின் அலைகளை தாங்கி கொண்டு , நல்ல திடமாக நிற்க கூடிய மரம் தான்  இந்த சுந்தர வனக்காடுகள் .

இந்த நன்னீரும் , கடல் நீரும் இணையும் இடத்தில உள்ள இந்த நீருக்கு உவர் நீர் என்று பெயர் . இந்த உவர் நீரில் 69 வகையான அலையாத்தி மரங்கள் வளர்கின்றன .

இதில் தமிழகத்தில் 17 வகையான மரங்கள் உள்ளன .

இதன் சிறப்பு என்னவென்றால் , உப்பு நீரை விடுத்து நல்ல நீரை மட்டும் உறிந்து  வாழக்கூடியது .

அதேபோல் கூவம் போன்ற இடங்களில் கூட கழிவு நீரை விடுத்து , நல்ல நீரை உறிந்து வளர கூடியது .

மேலும் இந்த மரங்கள் பற்றி பல அரிய தகவல்களை தருகிறது உயிர் இதழ் .

தமிழகத்தின் தற்போதைய மாசு பிரச்னை , மண் வள குறைபாடு மற்றும் காற்று , நீர் மாசுபாடு களை களைய  நல்ல திடமான காடுகளை உருவாக்க வேண்டும் .


அப்படி உருவாகும் பட்சத்தில் தான் தமிழக பிரச்சனைகள் தீரும் .
அப்படி எல்லா சூழ்நிலையும் வளரக்கூடிய காடுகள் இந்த அலையாத்திக்காடுகள் மட்டுமே !

தமிழக நீர் வளங்களை காக்க நதிகளை இணைத்தால் , அது இந்த சுந்தரவன காடுகளை அழித்து விடும் . அங்கு தான் முற்றிலும் பிரச்னை பெரிதாக ஆரம்பிக்கிறது .

எனவே நதிகளை இணைத்து கடலுக்கு நீர் செல்வதை தடுப்பது மிக தவறு !
அலையாத்திக்காடுகளை உருவாக்குவதே சிறந்த வழி !

இது தொடர்பாக மேலும் விவரம் அறிய உயிர் இதழ் படியுங்கள் !
அலையாத்தி காடுகள் ஆய்வாளர்களை தொடர்பு கொள்ளுங்கள் !

இந்த இதழ் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 72992 92364


20.2.2018



Monday, 19 February 2018

ஹிந்தி கற்று கொள்ளுங்கள்


தமிழ் நாட்டில் பெருகி வரும் வடஇந்தியர்கள் .

திருப்பூர் , கோயம்பத்தூர் , சேலம் , சென்னை , கன்னியாகுமாரி என்று பெருகி வரும் வடஇந்திய மக்கள் 
ஊரையே நாசம் செய்து வருகிறார்கள் .

பலரும் கேட்கிறார்கள் , தமிழர் மட்டும் பிறமாநிலங்களில் வேலை பார்க்கலாம் .
தமிழநாட்டில் மட்டும் வேலை பார்க்க கூடாதா என்று ?

வெளியில் போன தமிழன் , எங்கும் தன மொழியை பிறர் கற்று கொள்ள கட்டாயப்படுத்தவில்லை. எந்த ஊரையும் எச்சில் துப்பி அசிங்கம் செய்ய வில்லை. மாறாக , பல ஊர்கள் பசுமையாக , வளமாக, மாற மட்டும் தான் வேலை பார்க்கிறான். ஆனால் இங்கு வருபவர்கள் அப்படி செய்வதே இல்லை.

இந்த கோட்பாடுதான் கடந்த 40 , 50 ஆண்டுகளாக இங்கு நடக்கிறது.

அதே போல் , இது சாதாரண விஷயம் இல்லை . இந்த மண்ணை அழிக்க பல காலம் திட்டமிடப்பட்ட வழிகளில் இதுவும் ஒன்று. இந்த மண்ணை பற்றி தெரியாத ஒருவனால் , இந்த மண் அழிவதை தடுக்க முடியாது. 
அவனுக்கு தான் இந்த மண்ணை பற்றி எதுவுமே தெரியாதே ! 


எனில் நாம் மிகப்பெரிய சூழ்ச்சி வலையில் இருக்கிறோம் .


நம்மளும் ஹிந்தி படிப்போம். இது திருப்பூரின் நிலை அல்ல. 

நாளைய ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலை. 
மாவட்ட ஆட்சியர்கள் பலர் தமிழர் இல்லை. 
காவல் துறை தலைமையில் 
தமிழர் இல்லை. 
நீதிமன்றத்தில் தமிழர் இல்லை. 
அரசு அலுவலர்கள்கள் பலர் தமிழர் இல்லை . 
போதாதா குறைக்கு , VAO தேர்வில் கூட பிற மாநிலத்தவர் தேர்வு எழுதுகிறான் என்றால் , அவன் கண்டிப்பாக வேலைக்கு வர போகிறான் என்றே அர்த்தம் . 
அப்போ கிராம புற மக்களும் ஹிந்தி அறிந்து கொள்ள வேண்டும் . அதற்க்கு தான் கிராம்தோறும் நவோதயா பள்ளிகள் வர இருக்கின்றன .
நம்மை சுற்றி பல விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன . சூழ்ச்சி வலைக்குள் நிற்கிறோம் . 
அதனால் ஹிந்தி மொழியை கற்று கொள்ளுங்கள் .
மொழியை கற்று கொள்வதில் தவறில்லை. ஆனால் அங்கு நம் மொழியை அடிமை ஆகிவிடக்கூடாது . 

அதே போன்றதொரு  சூழ்ச்சி  வலைக்கு தமிழகமும் தயாராக வேண்டும் . அது வரை புத்திசாலித்தனமாக வாழ முயற்சிக்க வேண்டும் . அதற்க்கு அவன் மொழி நமக்கு புரிய வேண்டும் .

ஹிந்தி கற்று கொள்ளுங்கள் !



ஹிந்தி மொழியை கற்று கொள்ளுங்கள் .
மொழியை கற்று கொள்வதில் தவறில்லை. ஆனால் அங்கு நம் மொழியை அடிமை ஆகிவிடக்கூடாது . 

வி.எச் .குரூப் - V.H.GROUP



வி.எச் .குரூப்

1971 ம் ஆண்டு , புனே யில் பி. வி. ராவ் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் வி.எச் .குரூப் .
வெங்கடேஸ்வரா குரூப் என்றும் venky குரூப் என்றும் வழங்கப்படுகிறது .
இவர் இந்தியாவின் , கோழி பண்ணைகளின் தந்தை என்று வழங்கப்படுகிறார்.
அந்த அளவிற்கு கோழிகள் சார்ந்த எல்லா பொருள்களும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது .



கோழிக்கு தேவையான உணவு பொருள்கள்
கோழி முட்டை பவுடர்
கோழி முட்டை , மஞ்சள் கரு பவுடர்
முட்டை வெள்ளை கரு பவுடர்,
கோழிகளுக்கான தடுப்பூசிகள்
கோழிகளுக்கு தேவையான மருந்துகள் ,



வீட்டுவிலங்குகளுக்கு தேவையான பொருள்கள்
மற்றும் தடுப்பூசிகள் , மருந்துகள்
நாய்களுக்கான உணவு முதல் எல்லாம்
தயாரிக்கப்படுகிறது.
கோழி , வான்கோழி , ஆடு , முயல் என எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசி இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது .
இவர்கள் தான் தடுப்பூசிக்கான அட்டவணையும் வழங்குகிறார்கள் .
குழந்தைகளுக்கு அல்ல. வீட்டு விலங்குகளுக்கு !

2010 ம் ஆண்டு லண்டன் Blackburn Rovers  என்ற கால்பந்து குழுவை வாங்கியது
மும்பை நடைபெறும் பாக்ஸிங் மற்றும் டென்னிஸ் போட்டிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்குகிறது .

தற்போது இதன் நிறுவனர் காலமாகிவிட்டதால் , அவர் வாரிசுகள் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் .


Thursday, 15 February 2018

நாம் மறந்து விட்ட மரங்கள்

நாம் மறந்து விட்ட மரங்கள்

உசில் , வேங்கை , மருதம் , தடசு, இலுப்பை , தோதகத்தி , வன்னி , குமில், கடுக்காய் , தாண்டி என்று ஆயிரக்கணக்கான மரங்கள் இந்த மண்ணுக்கு சொந்தம் .
தமிழர்களை இந்த மரங்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் எனபதை நம் ஊரின் பெயர்கள் சொல்லும் .
உசில் மரங்கள் இருந்தால் அந்த ஊர் பெயர் உசிலம் பட்டி
இலுப்பை மரங்கள் அதிகம் இருந்தால் அந்த ஊர் பெயர் இலுப்பையூர்
விளாமரங்கள் இருந்தால் அந்த ஊர் பெயர் விளாத்தி குளம்
வேப்ப மரங்கள் அதிகம் இருந்தால் அந்த ஊர் வேப்பங்குளம்
தாழைமரங்கள் இருந்தால் அது தாழையூத்து
வாகை மரங்கள் இருந்தால் அது வாகை குளம்
ஆலமரங்கள் இருந்தால் அது ஆலங்குளம்
அத்திமரங்கள் இருந்தால் அது அத்தியூர்
அரசமரங்கள் இருந்தால் அது அரசம்பட்டி
தாண்டி மரங்கள் இருந்த ஊர் பெயர் தாண்டி குடி

இன்னும் எல்லா ஊருக்கு பின்னும் ஒரு மரம் இருக்கும் . அதே போல்
குறுஞ்செடிகள் மட்டும் 4000 த்துக்கும் மேற்பட்டவை தமிழகத்தில் இருந்துள்ளன . இருக்கின்றன .
மக்களுக்குத்தான் அடையாளம் காண தெரியவில்லை .

ஒவ்வொரு மரத்திற்கும் தனி பண்பு உண்டு .
வறட்சியில் கூட வளரும் , உசிலமரம் . ஆனால் பரந்து விரிந்து நிழல் தரும் .
வேங்கை மரத்தில் குவளை போல் செய்து அதில் நீர் நிரப்பினால் சில நேரம் கழித்து செந்நிறமாகும் . அதை குடித்தால் , சர்க்கரை நோய் தீரும், .
மருத மரத்தின் பட்டை புற்றுநோய்க்கு  சிறந்த மருந்து .
இலுப்பை மரத்தின் இருந்து எண்ணெய் எடுத்து தான் முன்பு விளக்கேற்ற பயன்படுத்துவாங்க .
அதில் கண் எரிச்சல் ஏற்படாது .
தோதகத்தி மரத்தில் எது செய்தாலும் , அது காலத்திற்கும் அழியாது .
துவாரகாவில் கண்டெக்கப்பட்ட பொருள்களில் ஒன்று , தோதகத்தி மரத்தில் செய்தது . 4000 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இருக்கிறது .
அது போல் துத்தி செடி போட்டால் , பார்த்தீனியம் வளராது .

உசில் மரத்தின் இலையை பொடி செய்து தலைக்கு தேய்த்தால் அதுதான் ஷாம்பு
வழுக்கை மரம் என்று வழங்கப்படும் தடசு மரம் பட்டை சுடுநீரில் போட்டால் ஷாம்பூ ரெடி .
மருத மரத்தின் பட்டையை காய வைத்து , கஷாயம் பண்ணி குடித்தால் கொழுப்பு குறையும் .
தாண்டி மரத்தின் தாண்டி பழம் மூல நோய்க்கு சிறந்த மருந்து .மேலும் , சளி , வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் .


பேராசிரியர் . கண்ணன்
பழனி மலை பாதுகாப்பு குழு
தமிழக மரங்களை காக்கும் தன்னார்வ அமைப்பு .


படத்தில் இருப்பது மருத மரம் .



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...