Tuesday 23 December 2014

இதய தானம்

இறந்த குழந்தையின் இதயத்தை தானம் தந்த பெங்களூர் பெற்றோர்: தானம் பெற்ற சென்னை பெற்றோர். டிசம்பர் 19. 
(மாலை மலர் செய்தி ) 


எத்தனை பெரிய சாதனை!.  வர வர நம் சென்னை மருத்துவமனைகளில் இறந்த குழந்தையின் இதய துடிப்பை, மற்றொரு குழந்தைக்கு மாற்றும் போது துடிக்க வைக்கும் அளவுக்கு வல்லுனர்கள் பெருகி விட்டார்கள்.

     ஞானிகளும், யோகிகளும் பெருகி விட்டார்கள்.

இறந்தவர்களின் இதயத்தைஎல்லாம் துடிக்க வைக்க முடியும் எனில் , இறப்பு எனப்படுவதே எவருக்கும் இருக்காதே!

     காரணம் கூறி விட்டர்கள் இது மூளை சாவென்று.!
மருத்துவ உலகமே 

      நீங்களெல்லாம் சாதனை படைக்க தாங்கள் கண்டுபிடித்த புதிய சாதனமா  இந்த மூளை சாவு !

     நீங்கள் கண் தானம் என்றீர்கள்!

ஒப்பு கொண்டோம்.  இது இறந்த பின் நம் கண்கள் யாருக்கோ பயன்படும் என்றீர்கள் ! ஒப்பு கொண்டோம்.  ஆனால் அனைத்து மருத்துவர்களும் தத்தமது குடும்பத்துடன் கண் தானம் எழுதி கொடுத்தீர்கள் என்ற செய்தி வரவே இல்லையே? ஏன் உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையா?

     நீங்கள் உடல் தானம் என்றீர்கள்!

உடல் ஆய்வு செய்ய முன்வாருங்கள் என்று பார்க்கும் இடமெல்லாம் விளம்பர பலகைகளில் கூறுகிறீர்கள் . உங்களில் எத்தனை பேர் உடல் தானம் செய்தீர்கள் . உங்கள் உடல் மட்டும் பொன்னால் இளைக்க பட்டதா ?

     நீங்கள் கல்லீரல்  தானம் என்றீர்கள்!

இதை தானம் செய்தால் மீண்டும் மீண்டும் வளரும் என்றீர்கள் !

நீங்கள் தானம் செய்து உங்களால் எத்தனை உயிர் வாழ்ந்து இருக்கிறது.


     நீங்கள் சிறுநீரக  தானம் என்றீர்கள்!

இரண்டு சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்யலாம் என்றீர்கள்! உ ங்களில் யாரும் செய்யவில்லை .  உங்கள் தயவால் திருடர்களில் சிறப்பு பிரிவாக சிறுநீரக திருடர்கள் உருவானது தான் மிச்சம் .


எல்லாம் நடக்க ஒரு பிஞ்சு குழந்தையின் இதயத்தை எப்படி ஐயா  எடுத்தீர்கள்? அக்குழந்தை பேசாமல் அசையாமல் இருந்தாலும் அதன் வுடலிலே வுயிர் இருந்ததே! அந்த இதயத்தை எடுக்க உங்கள் இதயமெல்லாம் நடுங்க வில்லையா ?

வசூல் ராஜா எம்.பி .பி.எஸ். திரைபடத்தில் இது ஒரு கேஸ் என்று மருத்துவர் ஒருவரை காட்டுவார். ஆனால் அவருடன் அன்றாடம் பேசி பேசி இறுதி 
காட்சியில் அவர் கதாநாயகனுக்காக கண்களில் கண்ணீர் விடுவார் . இது கதை அல்ல. உண்மை. இதற்க்கு உங்களால் வேறு காரணம் காட்ட முடியம் . அதுவும் எங்களுக்கு தெரியும்.

நீங்களாக ஒருவருக்கு மயக்க ஊசி போட்டு கொண்டே இருந்தால் அவர் தொடர்ச்சியாக அசையாது இருக்க வாய்பிருக்கிறது அல்லவா ?

எனில் அடுத்த சிறப்பு பிரிவு திருட்டு இதய திருட்டு அல்லவா ?

உங்களின் பெயரும் புகழும்  பெருக வேண்டுஎன்றாவது ம் என்பதற்காக உங்கள் மருத்துவ மனை நற்பெயர் வுயரவேண்டும் என்பதற்காக மக்களையெல்லாம் சோதிக்கிறீர்களே ?  இது சரியா ? உங்களை கடவுளுக்கு சமமாக மதிக்கும் மக்களல்லவா நாங்கள் ?

எவனோ ஒருவன் கண்டறிந்த மருந்தை நீங்கள் சோதனை கூட செய்து பார்க்காமல் எங்களுக்கு எழுதி கொடுக்குறீர்கள் !  ஒப்பு கொண்டோமே!

     நாட்டு வைத்தியன் இதையும் இதையும் சாப்பிட்டால் இந்த வியாதி குணமாகும் என்று கூறுகிறான் . இதனை நிரூபிக்க முடியுமா கேள்வி கேட்கும் 
போதெல்லாம் நாமும் இதுவரை எந்த மருந்தையும் சோதனை செய்ததே இல்லையே என்று உங்களுக்கு தோன்றவில்லையா ?

உங்களுக்கு மருத்துவம் செய்யவே உரிமை வழங்கப்பட்டது. ஆனால் நீங்கள் 
மருத்துவ மனைக்குள்ளே மருந்து கடையும் வைத்தீர்கள் . நாங்கள் கேள்வியே கேட்க வில்லையே !

50 பைசாவுக்கு வாங்கும் ஊசியை ரூ.5 க்கும் 70 பைசாவுக்கு வாங்கும் ஊசியை 
ரூ.20 க்கும் விற்கும் போது நாம்தான் இவ்வளவு கட்டணம் வாங்குகிறோமே இந்த ஊசிக்கு பணம் வாங்காமல் இருக்கலாமே என்று உங்களுக்கு தோன்றியதே இல்லையா?

ஒவ்வொரு மருந்திலும் அடக்க விலையை போல் 10 மடங்கு 20 மடங்கு விலை வைத்து விற்கும்போதேல்லாம் கேள்வி கேட்காமல் கொடுத்து 
உங்களயெல்லாம் கோடீஸ்வரர் ஆக்கிய சமுதாயம் இது !


இந்த சமுதாயத்திற்காக ஒன்றே ஒன்று செய்யுங்கள் !

தலை மாற்று அறுவை சிகிச்சை செய்து சிவபெருமான் ஆகலாம் என்று எவரேனும் கனவு கண்டிருந்தால் விட்டு விடுங்கள் ! சிவபெருமான் கூட யானையின் தலையை தான் மாற்றினார்.  நீங்களெல்லாம் சிவபெருமானை விட வல்லவர்கள்.  இப்போது மூளை சாவு போல் , வேறு ஏதேனும் காரணம் கூறி பெற்றோர்கள் கண்ணெதிரிலேயே வுயிர் வாங்குவீர்கள் ! 

விட்டு விடுங்கள் இந்த அப்பாவி மக்களை ! பிழைத்து போகட்டும் !






1 comment:

  1. intha news padichutu romba tension aaiteenga poola

    ReplyDelete

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...