Tuesday 27 April 2021

மண்ணுக்கான கல்வி

 ஒரு நாட்டின் கல்வி என்பதே அந்த மண்ணுக்கான கல்வியாக இருக்க வேண்டும் . அப்போது தான் அங்கு வளர்ச்சி என்பது சாத்தியம் ! அதென்ன மண்ணுக்கான கல்வி ? 

கல்விக்கும் வளர்ச்சிக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்  என்றால் , 

நீண்ட , தொலைநோக்கு தொடர்பு உண்டு .

ஒரு கல்வி என்பது அங்கு ஓடும் ஆறுகள் , ஏரிகள் , குளங்கள் , மண் வளம் , வானியல் , மக்களுக்கான உணவு , அங்கு உள்ள காலநிலைக்கு ஏற்ற இருப்பிடம் , சூழல் சார்ந்த குறைபாடுகள் , அதை கண்டறியும் அறிவியல், அதற்கான மருத்துவம் என்று இருக்கும் போது தான் உற்பத்தி எனப்படுவது மக்களுக்கானதாக இருக்கும் .

அப்படி உள்நாட்டு மக்களுக்கு தேவையானதை மட்டும் உற்பத்தி செய்யும் போது தேவையற்ற ஏற்றுமதிக்காக மண்ணின் வளங்கள் முழுமையாக சுரண்டப்படாது . 

அது தற்சார்பியல் பொருளாதாரம் ஆகும் .  இந்த தற்சார்பியலில் வாழ்ந்த போது தான் டாலருக்கு இணையாக இந்திய மதிப்பும் இருந்தது ! 


புதிய கல்வி கொள்கை , பழைய கல்வி கொள்கை என்பதை விட அடிப்படை கல்வி கொள்கையே மாற வேண்டாமா ?


அதை விடுத்து,


நம் கல்வியானது மக்களின் வாழ்வியலுக்கான கல்வியாகவே இல்லை . இது பிறநாடுகள் சார்ந்த கல்வியாக உள்ளது . தொடர்பே இல்லாமல் தாமிரவருணியை பற்றியம், வைகையை பற்றியும் அறிந்து கொள்ளும் முன்னமே நைல் நதி பற்றியும் , அமேசான் பற்றியும் தெரிந்து கொள்வதால் யாருக்கு என்ன பயன் ?

இங்குள்ள காலநிலையை எந்த கருவியும் இன்றி கூறிய மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் .

கருவி வைத்து படித்து சொல்பவன் படித்தவன் என்பதே மாயை அல்லவா ?


உள்ளூரில்  உள்ள மரங்களை பற்றிய அறிவே வழங்கப்படாத போது , அது வெட்டப்படும் போது வேடிக்கை தானே பார்க்க தோன்றும் ! உள்ளூர் விலங்குகளை பற்றிய அறிவு என்பது என்ன ?

உடல்கூறா ? எல்லோரும் என்ன விலங்குகளுக்கு வைத்தியமா செய்ய போகிறார்கள் ! அதன் பயன்பாடுகள் என்ன ? அது இங்குள்ள மனிதர்களுக்கு இவ்வைகையில் எல்லாம் உதவியது என்பது தானே முக்கியம் !

செம்பருத்திக்கு என்று மருத்துவ குணம் உள்ளது . இன்றும் கேரள பகுதிகளில் சுற்றுச்சுவர் என்பதை வெறும் செம்பருத்தி செடிகளை வைத்தே அமைத்து இருக்கிறார்கள் ! ஏனெனில் அதில் இருந்து வரும் மணம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்கிறது .இந்த வாழ்வியல் அறிவு தானே முக்கியம் . அதன் ஆங்கில பெயர் மட்டும் தெரிந்து கொள்வதால் யாருக்கு என்ன பயன் ?


மாற்றம் கல்வியில் நிகழ்ந்தால் தான் மண்ணின் அறிவியல் !


வெறும் 35 மதிப்பெண்ணுக்காக தேர்வு எழுதுவதும் , ஒரு ஆண்டின் இலக்கு என்பது அந்த ஆண்டின் தேர்ச்சி தான் என்பதும் , அறிவு வளர்ச்சியா ? இதை  உருவாக்கத்தான் இவ்வளவு கல்வி கூடங்களா ?


2 comments:

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...