Tuesday, 27 April 2021

மண்ணுக்கான கல்வி

 ஒரு நாட்டின் கல்வி என்பதே அந்த மண்ணுக்கான கல்வியாக இருக்க வேண்டும் . அப்போது தான் அங்கு வளர்ச்சி என்பது சாத்தியம் ! அதென்ன மண்ணுக்கான கல்வி ? 

கல்விக்கும் வளர்ச்சிக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்  என்றால் , 

நீண்ட , தொலைநோக்கு தொடர்பு உண்டு .

ஒரு கல்வி என்பது அங்கு ஓடும் ஆறுகள் , ஏரிகள் , குளங்கள் , மண் வளம் , வானியல் , மக்களுக்கான உணவு , அங்கு உள்ள காலநிலைக்கு ஏற்ற இருப்பிடம் , சூழல் சார்ந்த குறைபாடுகள் , அதை கண்டறியும் அறிவியல், அதற்கான மருத்துவம் என்று இருக்கும் போது தான் உற்பத்தி எனப்படுவது மக்களுக்கானதாக இருக்கும் .

அப்படி உள்நாட்டு மக்களுக்கு தேவையானதை மட்டும் உற்பத்தி செய்யும் போது தேவையற்ற ஏற்றுமதிக்காக மண்ணின் வளங்கள் முழுமையாக சுரண்டப்படாது . 

அது தற்சார்பியல் பொருளாதாரம் ஆகும் .  இந்த தற்சார்பியலில் வாழ்ந்த போது தான் டாலருக்கு இணையாக இந்திய மதிப்பும் இருந்தது ! 


புதிய கல்வி கொள்கை , பழைய கல்வி கொள்கை என்பதை விட அடிப்படை கல்வி கொள்கையே மாற வேண்டாமா ?


அதை விடுத்து,


நம் கல்வியானது மக்களின் வாழ்வியலுக்கான கல்வியாகவே இல்லை . இது பிறநாடுகள் சார்ந்த கல்வியாக உள்ளது . தொடர்பே இல்லாமல் தாமிரவருணியை பற்றியம், வைகையை பற்றியும் அறிந்து கொள்ளும் முன்னமே நைல் நதி பற்றியும் , அமேசான் பற்றியும் தெரிந்து கொள்வதால் யாருக்கு என்ன பயன் ?

இங்குள்ள காலநிலையை எந்த கருவியும் இன்றி கூறிய மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் .

கருவி வைத்து படித்து சொல்பவன் படித்தவன் என்பதே மாயை அல்லவா ?


உள்ளூரில்  உள்ள மரங்களை பற்றிய அறிவே வழங்கப்படாத போது , அது வெட்டப்படும் போது வேடிக்கை தானே பார்க்க தோன்றும் ! உள்ளூர் விலங்குகளை பற்றிய அறிவு என்பது என்ன ?

உடல்கூறா ? எல்லோரும் என்ன விலங்குகளுக்கு வைத்தியமா செய்ய போகிறார்கள் ! அதன் பயன்பாடுகள் என்ன ? அது இங்குள்ள மனிதர்களுக்கு இவ்வைகையில் எல்லாம் உதவியது என்பது தானே முக்கியம் !

செம்பருத்திக்கு என்று மருத்துவ குணம் உள்ளது . இன்றும் கேரள பகுதிகளில் சுற்றுச்சுவர் என்பதை வெறும் செம்பருத்தி செடிகளை வைத்தே அமைத்து இருக்கிறார்கள் ! ஏனெனில் அதில் இருந்து வரும் மணம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்கிறது .இந்த வாழ்வியல் அறிவு தானே முக்கியம் . அதன் ஆங்கில பெயர் மட்டும் தெரிந்து கொள்வதால் யாருக்கு என்ன பயன் ?


மாற்றம் கல்வியில் நிகழ்ந்தால் தான் மண்ணின் அறிவியல் !


வெறும் 35 மதிப்பெண்ணுக்காக தேர்வு எழுதுவதும் , ஒரு ஆண்டின் இலக்கு என்பது அந்த ஆண்டின் தேர்ச்சி தான் என்பதும் , அறிவு வளர்ச்சியா ? இதை  உருவாக்கத்தான் இவ்வளவு கல்வி கூடங்களா ?


நடப்பு நிகழ்வுகள் 27.4.2021

 நடப்பு நிகழ்வுகள் 27.4.2021




 *                    இன்று  கடல் பாலூட்டிகள் மீட்பு நாள் 27.4.2021.





* இந்தியாவிற்கு கொரோன உதவியாக 135 கோடியை அளிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.



* கிராம மக்கள் வாங்கும் சொத்துக்களுக்கு மின்னணு முறையில் அட்டை வழங்கும் திட்டத்தை இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்தார் . E - Property Card .

SVAMITVA Scheme ( Survey of Villages Abadi and Mapping with Improvised Technology In Village Areas ) ஏப்ரல்  24 பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இந்த பதிவு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இந்திய அரசு .


* ஜெகஜீவன் ராம் அபினவ் கிசான் புரஸ்கார் விருதை தெலுங்கானாவை சேர்ந்த மவுரம் மல்லிகார்ஜுன ரெட்டி பெற்றுள்ளார் . தெலுங்கானாவில் இருந்து விருது பெறும் முதல் விவசாயி  இவர் .  மென்பொருள் துறையில் பணியாற்றி கொண்டிருந்த இவர் அதை விட்டுவிட்டு இயற்கை விவசாயம் செய்து இந்த விருதை வென்றுள்ளார் .


*தேசிய காலநிலை பாதிப்பு அறிக்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ஜார்கண்ட் .


* நாட்டின் 2 வது பெரிய கொரோன சிகிச்சை மையம் மத்தியபிரதேசத்தில்  இந்தூரில் அமைக்கப்படுகிறது . 6200 படுக்கை வசதிகளுடன் கட்டப்படுகிறது .45 ஏக்கர் பரப்பளவு .




* இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஸ்வாதி தியாகராஜன் துணை தயாரிப்பாளராக இருந்து தயாரிக்கப்பட்ட My octopus teacher என்ற ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.


* ஆஸ்கார் விருதுகளில்  70 பெண்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 17 பெண்கள் ஆஸ்கார் விருது பெற்றுள்ளது இதுவே முதன் முறை !


* கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக் நகரில் கஞ்சார்  எனப்படும் 8 வது இந்தோ கிர்கிஷ் சிறப்பு பயிற்சி இந்தியாவிற்கும் கிர்கிஸ்தான் இடையே நடக்கிறது .ஏப்ரல் 17 முதல் இரெண்டு வாரத்திற்கு நடக்கிறது .


* இந்தியாவின் , தமிழ்நாட்டை சேர்ந்த அர்ஜுன் கல்யாண் 68 வது கிராண்ட் மாஸ்டராக  தேர்வாகியுள்ளார் . செர்பியா வில் நடைபெற்ற “Rujna Zora-3 2021” tournament வெற்றியின் மூலம் தேர்வாகியுள்ளார் .



* சீனா தனது முதல் செவ்வாய் ரோவருக்கு ஜூராங் என்று பெயர் இட்டுள்ளது .இது நெருப்பு கடவுளின் பெயர் ஆகும் . தற்போது சீனா ஆய்வு Tianwen-1 உள்ளது . பெப்ருவரி 24 ல் செவ்வாயின் முதல் சுற்று பாதையில் நுழைந்துள்ளது . இது மே  மாதத்தில் செவ்வாயில் நுழையும் .




Monday, 26 April 2021

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 26 , 2021 - Current Affairs in Tamil

 நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 26 , 2021

சர்வதேச செர்நோபில் பேரிடர் நினைவு நாள் 





***ஏப்ரல் 26 , 1986 ம் ஆண்டு இன்றைய உக்ரைன் பகுதியில் உள்ள செர்நோபில் என்ற இடத்தில இருந்த அணுஉலை வெடித்தது . இன்று வரை அங்கு கதிர்வீச்சு உள்ளதாக கூறப்படுகிறது . அந்த நிகழ்வு மற்றும் அணுஉலை தொடர்பான விழிப்புணர்வு கொடுப்பதற்காக 2016 ம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது .


***சென்னை IIT  ஸ்டார்ட் அப் நிறுவனம் Guvi 10 லட்சம் பங்கேற்பாளர்களை கொண்ட மிகப் பெரிய ஆன்லைன் பயிற்சி கொடுத்து கின்னஸ் சாதனை செய்துள்ளது.


ஸ்டெர்லைட் ஆலையை , ஆக்சிஜென் உற்பத்திக்காக மட்டும் அடுத்த 4 மாதங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


***மே 1 முதல் , 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோன தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது . இதற்கு கோவின் மற்றும் ஆரோக்கிய சேது செயலியில் முன் பதிவு செய்வது அவசியம் .

***கடந்த புதன் அன்று ,( 21 - 4- 2021 ) இந்தோனேசியாவை சேர்ந்த கடற்படை நீர்மூழ்கி கப்பல் 53 பேருடன் பாலி கடலில்  பயிற்சியில் இருந்த போது தனது அதிகபட்ச எல்லையான 200 மீட்டரை தாண்டி சென்று மூழ்கி போனது . அது நேற்று 3 உடைந்த பாகங்களாக கிடைத்துள்ளதாக இந்தோனேஷியா அரசு தெரிவித்துள்ளது . அது 838 மீட்டர் ஆழத்திற்கு சென்றுள்ளதால் அதில் இருந்தவர்களும் உயிர் இழந்தனர் என்று அறிவித்துள்ளது .


***பத்திரிக்கை சுதந்திரம் பற்றி ஆய்வு பட்டியலை  Reporters Without Borders என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது . இதில் 180 நாடுகளின் பெயர் இடம் பெற்றுள்ளது . முதல் இடத்தில நோர்வே வந்துள்ளது . முதல் நான்கு இடங்களை ஸ்கேண்டிநேவியன் நாடுகள் எனப்படும் நார்வே, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் ஸ்கேண்டிநேவியன் பெனின்சுலா ஆகியன இடம் பெற்றுள்ளன . 

இதில் இந்தியா 142 வது இடம் பிடித்துள்ளது . கடைசி இடத்தை எரித்திரையா பிடித்துள்ளது.


***தன்னை வனங்களின் சகோதரன் என்று கூறி கொள்ளும் கோத்தகிரியை சேர்ந்த ராகுல் என்ற 13 வயது சிறுவன் , குழந்தை உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முதல் காணொளி கூட்டத்தில் பங்கெடுத்துள்ளான் . இந்தியாவில் இருந்து பேசிய ஒரே நபர் இந்த சிறுவன் மட்டுமே !




***மத்திய அரசின் , உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை பெயரில் சமூக வலைத்தளங்களில் பரவிய கொரோன தொடர்பான 100 தவறான  காணொளி , கட்டுரைகளை சுட்டுரை நிறுவனம் நீக்கியுள்ளது .மேலும் 500 கட்டுரைகளை நீக்கயுள்ளது .சுட்டுரை என்பது ட்விட்டர் .


***ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்து இல்லை . அதை பரிந்துரை செய்ய கூடாது என்று பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர். செல்வ விநாயகர் தெரிவித்துள்ளார் .

***ஈராக் தலைநகர் பாக்தாத்தில் - கொரோன மருத்துவமனையில் ஆக்சிஜென் சிலிண்டர் வெடித்து நேற்று இரவு 82 பேர் உயிர் இழந்துள்ளனர் .




***93 வது ஆஸ்கார் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்து வருகிறது . இதில் சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் இயக்கிய நோர்மண்டே திரைப்படம் 3 விருதுகளை பெற்றுள்ளது .

***இன்று : 26 . 4. 2021 

கணிதமேதை ராமானுஜர் இறந்த நாள் 

நில நடுக்க அளவுகோளான  ரிக்டர் அளவினை கண்டறிந்த சார்லஸ் ரிக்டர் பிறந்த நாள் . 


நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 24 - 2021

 நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 24 - 2021




அமைதிக்கான பன்முகத்தன்மை மற்றும் இராஜதந்திரத்தின் சர்வதேச நாள்

2018 ல் தொடங்கப்பட்டது . முதல் முறையாக ஏப்ரல் 24, 2019 ல் கொண்டாடப்பட்டது .



உலக கால்நடை மருத்துவர்கள் தினம் .

Theme : 

'The Veterinarian Response to the Covid-19 Crisis'.


மார்ச் மாதத்தில் பல்வேறு காரணங்களால் நாட்டின் நுகர்வோர் விலை குறியீட்டின் பணவீக்கம் தொடர் உயர்வில் 5.52 சதவீதத்தை அடைந்துள்ளது. இது ஜனவரி மாதம் 4.06 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.




தமிழக மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஆக்சிஜன் தேவைப்படுவோர் உடனடியாக 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.




அறநிலைய துறை ஆணையராக கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் திரு. ராஜாமணி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் .


நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 25 - 2021 For Govt exams

 நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 25 - 2021



IFFCO - THE INDIAN FARMERS FERTILISER COOPERATIVE LTD. நான்கு plant அமைத்து அக்சிஜேன் தயாரிக்க திட்டமிட்டு, அதன்படி, ஒடிசா விலும், குஜராத்திலும் தொடங்கிய பிறகு, தற்போது உத்தர பிரதேஷில் இரண்டு plant அமைத்து கொண்டு இருக்கிறது. May 30 முதல் அனைவருக்கும் இலவச அக்சிஜேன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


வரும் காலங்களில் பசுமை குடில் வாயுக்கள் வெளியேறுவதை 80 % குறைக்க போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது .



MANAS - Mental Health and Normalcy Augmentation System 

என்ற செயலியை அரசு சார்பாக அரசின் அறிவியல் துறை முதல்வர் திரு .கே.விஜய் ராகவன் வெளியிட்டுள்ளார் .





இன்று உலக மலேரியா தினம் . உலக சுகாதார அமைப்பு 2007 ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஏப்ரல் 25 ல் 

கடைபிடிக்கிறது .


இன்று உலக பென்குவின் தினம் .




இன்று உலக பிரதிநிதிகள் தினம். ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து இடங்களிலும் பிரதிநிதிகள் தான் கலந்து கொள்கிறார்கள் .


நாடு முழுவதும் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.


லிக்விட் எரிபொருளுக்கு பதிலாக, கேஸ் மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த சவூதி அரேபிய திட்டமிடுவதாக அந்த நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார்.


ஜெகன்னா வித்யா தீவென்ன திட்டம் என்ற திட்டத்தை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார் . இதன் படி , நிதி நெருக்கடி காரணமாக , கல்வி கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் .14 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள் .


உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் பனிப்பாறை வெடிப்பு நிகழ்ந்துள்ளது . இது நிதி பள்ளத்தாக்கில் நிகழ்ந்துள்ளது .



Wednesday, 7 April 2021

உலக நீர் தினம்

 உலக நீர் தினம் இன்று!

சந்தையில் 150 வகையான பிரபல நீர் பாட்டில்கள் கிடைகின்றன. இது அல்லாது ஒருங்கினைந்த நிறுவனம் என்ற வகையில் 3000 பாட்டில் நீர் நிறுவனங்களும், பதிவு செய்யப் படாமலேயே 12000 நிறுவனங்களும் இயங்கி வருகின்றன

_--------------------------------------


இன்றைய தேதிக்கு, நீரின்றி அமையாது இவ்வுலகு என்று கூறக் கூடாது.

பாட்டில் நீரின்றி அமையாது இவ்வுலகு என்று தான் கூற வேண்டும்.


சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலி நிறுவனம் bisleri யை, felice bisleri என்பவர் தொடங்கினார்.


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தொடங்கப்பட்ட தொழில்களில் மிக முக்கிய நிறுவனம் parle G எனும் நிறுவனம்.

இன்றும் உலகின் பிஸ்கட் விற்பனை யில் முதலிடம் பெற்றுள்ள நிறுவனம் parle G.


இன்னிறுவனம் 1965 ல் bisleri நிறுவனத்தை வாங்கியது.

1969முதல் இந்தியாவில் தனது bottle water விற்பனையை தொடங்கி சிறப்பாக செய்து வருகிறது Parle G நிறுவனம்.


இன்னிறுவனத்தை தொடர்ந்து coca cola வின் kinley water

Pepsico வின் Aquafina water

Himalayan water,

Kingfisher என்று பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பாட்டில் நீர் விற்பனையை இன்று வரை அமோகமாக செய்து வருகின்றன.


Parle G க்கு மட்டும் இந்தியா முழுவதும் 140 இடங்களில் water plants உள்ளது.

மொத்த மாக எல்லா நிறுவனங்களும் சேர்த்து இந்தியாவில் கிட்டத்தட்ட 1000 -திற்கும் மேற்பட்ட water plants அமைத்துள்ளன.


சந்தையில் 150 வகையான பிரபல நீர் பாட்டில்கள் கிடைகின்றன. இது அல்லாது ஒருங்கினைந்த நிறுவனம் என்ற வகையில் 3000 பாட்டில் நீர் நிறுவனங்களும், பதிவு செய்யப் படாமலேயே 12000 நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.


1990-91 ல் தான் முதல் முதலாக 20லிட்டர் தண்ணீர் can விற்பனைக்கு கொண்டு வந்தது bisleri நிறுவனம்.

இந்த 20 லிட்டர் can தான், தண்ணீர் can வரலாற்றை வேகமாக வளர்ச்சி பெற செய்தது.


அதே போல வட்டார மொழிகளில் விளம்பரம் என்ற யுக்தியை பயன்படுத்தி முதல் முதலாக 14 மொழிகளில் label ஒட்டியதும் bisleri நிறுவனம் தான்!


இப்போ குடிக்கிற தண்ணீர் முற்றிலும் விற்பனைக்கு வந்து விட்டது. அடுத்து விவசாயம், borewell கொண்டு வரப்பட்டது. பிறகு, பாசனம் என்பது சொட்டு நீர் என்ற வரையறையின் கீழ் வருகிறது.


மூன்றாவது, பயன்பாட்டு நீர்!

1954ல் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் தான் Degremont நிறுவனம்.

Paris நகரில் 1939 ஆம் ஆண்டு Suez' என்ற நீர் நிறுவனம் தொடங்கப்பட்டது.

சம காலத்தில் தமிழகத்திலும் வீட்டுக்கு வீடு குழாய் நீர் அமைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த Suez நிறுவனம் ஏற்கெனவே 2012 முதல் டெல்லி, பெங்களூரு போன்ற ஊர்களில் தன் பணியை தொடங்கி விட்டது.

இந்நிலையில் 2018 ல் கோவை நகரை நாங்கள் தான் காப்போம் என்று கூறி 26 ஆண்டு கால ஒப்பந்தம் ஒன்றை தமிழக அரசுடன் செய்துள்ளது. அதுவும் 400மில்லியன் டாலர் செலவில்!


பாக்டீரியா என்ற ஒருவன் தான்,

பாட்டில் நீர் என்ற ஒருவனை வாழ வைக்கிறது.


எனவே, இனி வருங்காலங்களில் 

Bottle நீரும், நிறுவனங்களும் இன்றி வாழாது இவ்வுலகு!


நன்றி.

 தகவல்கள் அனைத்தும், விக்கிபீடியா விற்கு சொந்தம்!


22.3.2021

வானிலை மாற்றம்

 வானிலை மாற்றம் :


மழைக்காடுகள் இல்லை யெனில்  8 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடும் கூட வளி மண்டலத்தில் நின்று வெப்பதை கொட்டி தீர்த்து விடும்.

=====================


ஒவ்வொரு ஆண்டும் 32பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறதாம்.


இதில் 15பில்லியன் டன்கள் வளி மண்டலத்தில் தங்கி விடுகிறது.

மீதி 17 பில்லியன் டன்களில் சரி  பாதியை கடல் சுமக்கிறது.

மீதம் 8 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு எங்கே செல்கிறது என்று ஆய்வு நடத்தப்பட்டதாம்.


அப்போது தான் தெரிந்தது,

மழைக்காடுகள் தான் இந்த வேலையை செய்கின்றன என்பது!


இந்த மழைக்காடுகள் இல்லியெனில் அந்த 8 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆசைடு கூட வளி மண்டலத்தில் நின்று வெப்பதை கொட்டி தீர்த்து விடும்.


பெட்ரோல் போன்ற சுரங்கங்கள்  வெளியிடும் வெப்பத்தில் ஐந்தில் ஒரு பங்கு காடுகள் சுமந்து கொள்கின்றன.


இந்தியாவிலேயே அதிக அளவில் பெட்ரோல் உற்பத்தி நடைபெறும் இடம் அசாம். ஆனால் அங்கு வறட்சி இல்லை. ஏனெனில் அங்கு மழைக்காடுகள் உள்ளன.


அதை விடவும் குறைந்த அளவில் பெட்ரோல் கிணறுகள் உள்ள ராஜஸ்தான் தண்ணீர் தேடி அலைகிறது.

தண்ணீர் தேட வேண்டும் என்ற ஓரே நோக்கத்திற்காக அங்கு பள்ளிக்கு படிக்க செல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு!


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், தமிழ்நாட்டில் வறட்சி என்பதை எதிர்நோக்கி எப்போதும் எச்சரிக்கை கொடுக்கும் அரசு தான் 341 ஹைட்ரோகார்பன் கிணறு வெட்டவும் அனுமதி கொடுத்துள்ளது.


எனில் அதில் இருந்து வெளியேற போகும் கார்பன் டை ஆக்சடை சுமக்க வனங்கள் பெருக வேண்டும்!


மரம் இல்லாமலே மழை வரும்!

அதுவும் தேவை இல்லை. அரசியல் மூலம் காவேரி வரும்!

என்று எண்ணி விட்டால் கர்நாடகா குளிராக இருக்கும். வறட்சி இன்றி இருக்கும்!

ஆனால் தமிழ்நாட்டில் வானிலை மிகவும் பாதிக்கப் படும்.


இதை ஏற்கெனவே நம்மாழ்வார் கூறியுள்ளார்.

மலை காடுகள் உள்ளவரை பருவ மழை வரும்.

அது போன பிறகு இங்கு புயல் மழை மட்டும் தான் வரும் என்று!


வானிலை மாற்றம் என்பது வனங்களால் மட்டுமே நிகழ்த்த இயலும்.


உலக வானிலை தினம்!


நன்றி

தகவல்கள், படங்கள் vikaspedia, விக்கிபீடியா, indian express இவற்றிற்கு சொந்தம்!


உலக வானிலை தினம் மார்ச் 22, 2021




தஞ்சாவூர் காடுகள்

 தமிழகத்தில் காடுகளின் அளவு மிக மிக அளவில் உள்ள மாவட்டம் தஞ்சாவூர்.

பரப்பளவில் 1% அளவிற்கு கூட காடுகள் இல்லை.

பிள்ளையார்பட்டி பகுதியில் உள்ள காடுகள் மட்டுமே உள்ளது.

இதற்கு சில காரணங்கள் உள்ளன.

1. மராத்திய ஆங்கிலேயர் ஆட்சியில் விதிக்கப்பட்ட வரியினை ஈடுசெய்ய விவசாய நிலங்களை பெருக்கி இருக்கிறார்கள்.

2. உற்பத்தி பெருக பெருக, பல பேருக்கு உணவளிக்கிறோம் என்ற எண்ணம், விவசாயத்தை பெருக்க வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கி உள்ளது.

3.பிற மாவட்டங்களில் இருந்து வந்து குடியேறிய மக்களுக்காக உருவான ரியல் எஸ்டேட்.

தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில்  வளர்ச்சியும் காடுகளின் அளவை குறைக்க முக்கிய காரணங்களில் ஒன்றாகும் :

1959 ஆம் முதல் முறையாக அருளானந்த நகர் உருவான போது அதன் விலை ஒரு சதுர அடி 1.50அனாவாம்.

இன்று ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெருகி விட்டதால்,

பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதால்,விலை 350முதல் 2500வரை வளர்ச்சி அடைந்துள்ளது.





Thursday, 25 February 2021

கேள்விகளும் பதில்களும் - தமிழ்

 கேள்விகளும்  பதில்களும் 


தமிழ் மக்கள் :


பாவம் , நீண்ட காலமாக பெருமை போதைக்குள் மட்டுமே வாழ்ந்து , தன அறிவியல் பெட்டகத்தை தேட மறந்தவர்கள் .


தமிழ் நவீன அறிவியல்  என்பது ,

சங்க காலத்தை தாண்டி , தமிழர்களை யோசிக்க விடாமல் பார்த்து கொள்ளும் காவல் ஆயுதம் .




தமிழாசிரியர்கள் :


தமிழ்நாட்டிற்கு வாழ வந்தவர்கள்,  பொக்கிஷம் என்பது தங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற பேராசையில் , புரியாத விளக்கங்களுக்கு , பதில் தெரியாமலேயே பல விளக்கங்கள் தருபவர்கள் .


உரையாசிரியர்கள் :


தமிழையே புரிந்து கொள்ள முயற்சிக்காமல் , தனக்கு தெரிந்ததை மட்டும் , உரை என்று எழுதுபவர்கள் .


கவிஞர்கள் :

தமிழில் ஐரோப்பிய கலாசாரத்தை கலக்க போராடி வரும் போராளிகள் !


தமிழ் போராளிகள் :


தமிழில்  துணை மொழிகள் எதுவும் இருக்கிறதா என்று  அரிசியில் உமியை பிரித்து கல்லை கலக்கும் கலப்பட வணிகனை போல ,

துணை மொழி வார்த்தைகளை மட்டும் பிரித்து விட்டு , ஐரோப்பிய மொழிகளை மொழி பெயர்ப்பு மூலம் தமிழோடு இணைப்பவர்கள்  .


தமிழுக்கு சேவை :


தமிழுக்கு சேவை என்பது,

தமிழ்நாட்டின் ஓலைச்சுவடிகள் , பழைய  குறிப்புகளை அயல்நாடுகளுக்கு கொண்டு செல்வது 



தமிழ் என்பது ,

ஹாவ்ர்டு நாற்காலியோ , டொரோண்டோ நாற்காலியோ 

அனைத்தையும் பார்த்து , 

என்ன நடந்தாலும் என் ரகசியம் அறிய எவராலும் இயலாது என்று சிரித்து கொண்டு இருப்பவள் .


கேள்விகளும் பதில்களும் - கல்வி




நவீன கால கல்வி கூடம் என்பது என்ன ?

இளம்பருவம் என்பது அழகானது .அறிவை கேள்விகளால் வளர்க்கும் இடம் . ஆழ பதியும் வகையில் கற்கும் காலம் அது .

 இதில் நவீன கால கல்வி கூடம் என்பது,
ஐரோப்பியர்கள் மட்டுமே அறிவாளிகள் என்றும், அதை பின்பற்றியே அனைவரும் அறிவியல் பேசவேண்டும் என்றும் கற்பித்தபடுத்தும் இடம் தான் நவீன கால கல்வி கூடம் .



கல்வி என்பது  என்ன?

நமக்கு என்ன வேண்டுமோ அதைப்பற்றியே பேசாமல் , வணிக நிறுவனங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கற்றுத் தருவது.


கல்லூரி என்பது என்ன?

பெற்றோரை பொறுத்த வரை , பெண்ணின் திருமண காலத்தை தள்ளி  போடவும் , பெருமையையும் தரும் இடம் .


மாணவர்களை பொறுத்த வரை ,
எதிர்கால அச்சத்தை  தள்ளி போட உதவும் இடம் . வாய்ப்புகள் கிடைத்து விடும் என்ற எண்ணத்தை உருவாக்கும் இடம்.

நிறுவனங்களை பொறுத்த வரை ,

சுயசார்பு அற்ற நிலையில் , நிறுவனத்தின்  வேலைகளை முடிக்க ஆட்களை உருவாக்கும் இடம் .









Monday, 17 August 2020

கல்வியை கொண்டு கேலி

 எங்கு நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் ஒரு கிராம புற இளைஞனுக்கு ஆயத எழுத்தும், உயிர் எழுத்தும் தெரிய வில்லை.
இதை பற்றி பல கருத்துக்களோடு சுற்றி வரும் காணொளி இது.

முதலில் இப்படி கேள்வி எழுப்பி, கிராம புற இளைஞர்களை, வெட்க பட செய்ததே முதல் தவறு எனது பார்வையில் !

மொழி அறிவு என்பது, யாரோ நம் முன்னோர்கள்,இன்று நாம் எழுதும் எழுத்தை எழுத, படிக்க தெரியாத நம் முன்னோர்கள் இந்த இயற்கையோடு பேசி, பழகி எங்கோ மலையில் கிறுக்கி, தலைமுறைகளுக்கு கடத்தி பிறகு தானே வரி வடிவம் பெற்றது.
உண்மையில்,
இந்த மொழி வடிவம் என்பதும், வரி வடிவம் என்பதும் நாம் அனுபவமிக்கவர்களிடம் இருந்து கற்றவை. கடனாக பெற்றவை.
அப்படி இருக்க, இயற்கையோடு வாழும் கிராம புற, மலைவாழ் மக்களை எல்லாம், படிக்க சொல்வதும், அதில் அவர்களுக்கு பயிற்சி இல்லை என்பதும் முட்டாள் தனம் ஆகும்.

இன்று மெத்த படித்த மேதாவிகளிடம் ஆங்கிலத்தில் உயிர் எழுத்து கூறு. மெய் எழுத்து கூறு, தமிழின் குற்றியலுகர, குற்றியலிகர ஒலிப்பு முறை போன்ற ஆங்கிலத்திலும் கூறு என்று கூறினால், எந்த அளவிற்கு தடுமாறுவார்களோ, அந்த நிலைதான்,
கிராமபுற மக்களுக்கும் !

வாழத்தான் பிறந்தோம் !
அதற்கு தேவை
உணவு, உடை, உறையுள்.
இவையெல்லாம் வணிகத்திற்கு கீழ் கொண்டு வந்து, அதற்கு ஏற்றார் போல நகர் புற வாழ்க்கை மாறியது என்றால், கிராமங்களும் மாற வேண்டும் என்பது,
நுனி மரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவது போன்றது !

எழுத்தறிவு என்பது பெற்றால் தான் வாழ்க்கை என்ற விளம்பரம் தரும் பள்ளிக்கூட சந்தைகளுக்கு, சராசரி மக்களும் விளம்பரம் செய்யாதீர்கள்.

நான் பார்த்து இருக்கிறேன்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், திருவண்ணாமலை மக்கள், பெங்களூரு வீதிகளில் விற்பனைக்கு வரும் போது, கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, என்று அழகாக பேசுவதை பார்த்து இருக்கிறேன். அவர்களுக்கு, இந்த மொழிகளில் எத்தனை எழுத்து உள்ளது என்பது கூட தெரியாது.

ஓசூர் சந்தைக்குள் தெலுங்கு மொழியில் மக்கள் பேரம் பேசுகிறார்கள்.

சேலத்தில் இருந்து ஒகனேகல் செல்லும் வழிகளில் மக்கள் கன்னடத்தில் சரளமாக பேசுகிறார்கள்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா பகுதிகளில் பணிகளில் உள்ளார்கள், அங்குள்ள மொழிகளை புரிந்து கொண்டு, பேசவும் செய்கிறார்கள்.
யாருக்கும் அந்தந்த மொழியில் எத்தனை எழுத்து உள்ளது என்பது கூட தெரியாது.

தேவைகளும், அவசியங்களுமே, ஒருவன் எதை கற்க வேண்டும், எதை தேட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.
எழுத்தறிவு ஓரே ஒரு புள்ளி அதிகம் பெற்று தரலாம். அவ்வளவு தான். ஆனால் அனுபவ கல்வியை ஒரு போதும் தராது.

கல்வியை கொண்டு, கேலி பேசுவதும், மாடு மேய்ப்பாய் என்பதும் கல்வி நிலையங்களுக்கான சந்தை மேம்பாடு கோட்பாடுகளாகும்.
Don't do marketing for private education or any language.
#stopmarketingforlanguage

எதிர்மறை விளம்பரங்கள்.- ஹிந்தி எதிர்ப்பும்,

 எதிர்மறை விளம்பரங்கள்.

நேர்மறை விளம்பரங்களை விட எதிர்மறை விளம்பரங்களை தான் மனம் அதிகம் நாடும்.

Adults only என்பது எதிர்மறை விளம்பரத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அந்த ஒற்றை வார்த்தை தான், பல பார்வையாளர்களையே உருவாக்குகிறது.

அப்படி தான்
ஹிந்தி எதிர்ப்பும்,
Neet தேர்வு எதிர்ப்பும் !

கடந்த ஆண்டு மட்டும் ஹிந்தியில் தனியாக தேர்வு எழுதிவர்களின் எண்ணிக்கை, பிற மாநிலங்களை விட அதிகம்.

Neet தேர்வு எதிர்ப்பு என்பதும் மறைமுகமாக நம் மருத்துவத்தை எதிர்த்து, ஐரோப்பிய மருத்துவத்தை வாழ வைக்கும் போராட்டம் தான். உண்மையிலேயே தமிழ் மொழிக்காக போராட வேண்டும் எனில், தமிழ் மருத்துவர்கள் வீதிகள் தோறும் வேண்டும் என்று தானே போராடி இருக்க வேண்டும்.

உண்மையிலேயே, வளர்ச்சி என்பது பயிற்சியில் உள்ளவரை தான் இருக்கும். இது தமிழுக்கும் பொருந்தும்.

கூரை வீடுகள் கலைந்த போதே, அது சார்ந்து வார்த்தைகளும் சேர்ந்தே அழிகின்றன.
மாட்டு வண்டிகளோடு மாடுகளும், குதிரை வண்டிகளோடு குதிரைகளும், கழுதைகளும் அழிந்து விட்டன.
வாகன உற்பத்தி, பயன் தர வேண்டிய யானைகளை எதிரிகளாக்கி விட்டன.

பல ஆட்சியாளர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த போதும் வளர்ந்த இம்மொழி,இப்போது தான் வளர்ச்சி நிலையில் இருந்து பின்னோக்கி செல்கிறது.
காரணம் பயன்பாடுகள் இல்லை.
ஒரு மொழி வளர,
அம்மொழியோடு தொடர்புடைய தொழில் வளர்ச்சி இருக்க வேண்டும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’DON'T BUY THIS JACKET’ எனச்சொல்லும் உரை
படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’மனோவசிய பயிற்சிக்கு இந்த மாதிரி புத்தகங்களை படிக்க வேண்டாம் Book is Dangerous’ எனச்சொல்லும் உரை

மொழி எழுத்துரு

 தொடர்ந்து சில வரலாற்று ஆய்வாளர்கள், வணிகர்களால் மட்டுமே தமிழ் வாழ்ந்தது என்றும், சில வரலாற்று ஆசிரியர்கள், வணிகர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள எழுத்தை எல்லாம் கொண்டு வந்து தான், இம்மொழி எழுத்துரு கொண்டு வளர்ச்சி பெற்றது என்றும் பதிவு செய்கிறார்கள்.


இது தொடர்பாக இரண்டு கேள்விகள் :

ஒன்று :
இம்மொழி எழுத்துரு வணிகத்தால், வணிகர்களுக்காக உருவானது எனில், அவ்வணிகர்களுக்கு கீழ் பணியாற்ற விரும்பும் மக்கள் கற்பதில் தவறு இல்லை. ஏன் எல்லோரும் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இம்மண்ணில் விதைக்கப்பட்டது?


இரண்டு :
ஒரு வணிகன், தன்னுடைய வணிகம் தொடர்பான கணக்குகளை பதிவு செய்ய எழுதுவான்.
இன்னொன்று, தான் பிற நாடுகளில் கண்டதை, கேட்டதை பதிவு செய்வான்.
ஆனால் இலக்கணம் எல்லாம் எழுதுவானா என்ன?

இரண்டில் எது சரி?


முதல் கேள்வி சரி எனில், இலக்கியம், இலக்கணம் என்று பெருமைகளில் இருந்து விலக கற்று கொடுங்கள்.


இரண்டாவது கேள்வி சரி எனில், வரலாற்று ஆசிரியர்கள்,
வணிகத்தால் இம்மொழி எழுத்துரு வளர்ந்தது என்று பதிவு செய்வதை நிறுத்துங்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’உலகளாவிய வணிகத்தில் முன்னோடிகளாய் விளங்கிய பழந்தமிழ் வணிகர்கள்’ எனச்சொல்லும் உரை

வீரமா முனிவர்

 வீரமா முனிவர்

1710ல் தமிழகம் வந்து,
அடுத்த 30 ஆண்டுகள் இங்கு இருந்த ஓலை சுவடிகளையெல்லாம் திரட்டி,

போர்த்துகீசிய மக்கள் தமிழை புரிந்து கொள்ள, தமிழ் போர்த்துக்கீசிய அகராதி உருவாக்கி

பல மருத்துவ நூல்களையெல்லாம் எழுதி,
தமிழுக்கு சேவை செய்தாராம்.

ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம்.
இவர் ஐரோப்பியத்திற்கு தானே சேவை செய்து இருக்கிறார்.
தமிழில் உள்ளதை எல்லாம், அவர்கள் மொழியில் மாற்றி எழுதி கொள்ள வகை செய்வது எப்படி, தமிழுக்கான சேவை ஆகும்?

இவர் எல்லா ஓலைசுவடிகலையும் ஐரோப்பியம் அனுப்பிய பிறகு தான்,
1750ல்
தொழிற்புரட்சி உருவானாதாமே !

ஓலைச்சுவடிகள் திருடப்பட்டதா ?

ஓலைச்சுவடிகள் திருடப்பட்டதா ?

 


ஒலைச்சுவடியில் உள்ள மருத்துவத்தையோ, வானியலையோ, அறிவியலையோ பயன்படுத்துபவர்கள் முட்டாள்கள் என்று பதிவான பிறகு,

அதை யாருமே பயன்படுத்தாத போது,

ஏன், யாருக்காக ஓலைச்சுவடிகள் திரட்டப் பட வேண்டும்?

உண்மையில்

பாதுகாக்க வேண்டுமாயின்,

ஓலைச்சுவடிகள் வைத்து இருப்போருக்கு அதை படிக்க கற்று தருவது தானே நியாயம் ஆகும்.

முதியோர் கல்வி வைத்து பாடம் நடத்திய நாட்டிற்கு,

ஓலைச்சுவடி பாடம் நடத்துவது அத்தனை கஷ்டமா?


அப்படி செய்தால், அவரவரே படிக்க போகிறார்கள்.

சேவை செய்பவர்களும் தேவை இல்லையே !t

வரலாற்று ஆய்வாளர்களும், தமிழ் ஆய்வாளர்களும் !

 வரலாற்று ஆய்வாளர்களும், தமிழ் ஆய்வாளர்களும் !

கடந்த வாரம் ஒரு வரலாற்று ஆசிரியர் சோழ நாட்டின் வணிகம் குறித்து பேசினார்.
அப்போது, ராஜராஜ சோழன் காலத்தில் நாணயங்கள் செம்பில் செய்யப் பட்டு, அதன் மேல் வெள்ளி பூச்சு இட்டு, பிறகு தங்க பூச்சு பூசப்பட்டுள்ளது.
அந்த நாணயங்கள் இன்னும் மெருகு குறையாமல் உள்ளது. அதில் ஏதோ பச்சிலை தடவி அதை செய்து இருக்கிறார்கள் என்று கூறினார்.

அதே வாரத்தில் , சோழர் காலத்தில் சித்தர்கள் என்ற தலைப்பில் ஒரு தமிழ் ஆசிரியர் ஒருவர் பேசினார். அவரும், சோழர் காலத்தில் 18சித்தர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்கள் பிற்காலத்திய சித்தர்கள் என்று வழங்கப்பட்டார்கள். அவர்கள் ரசவாத எனும் ரசாயன முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கூறினார்.

ஆனால் ஏனோ, அந்த வரலாற்று பதிவும், இந்த தமிழ் பதிவும் இணைய மறுக்கிறது.

இடையில்
ஒரு கல்வெட்டு தேவை வரலாற்று ஆய்வாளர்களுக்கு !

ஆனால், தமிழ் ஆசிரியர்களுக்கோ, அறிவியல் ஆய்வாளர்களின் துணை தேவை.

செம்புபொன் னாக்குஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்புபொன் னான திருவம் பலமே

என்று திருமூலர் கூறி விட்டார்.
ஆனால் அதென்ன
ஸ்ரீயும், கிரியும், இது தமிழ் போல இல்லையே என்ற பகுத்தறிவு தான், நம் தமிழ் அறிவியல் பாழாய் போக மூல காரணம்.

ஸ்ரீ என்றால் ஆகாயம் (வானம் ), அதற்காகவென உப்பு உள்ளது.
சோழர்கள் இதை வானவன் என்று அழைத்து கொள்கிறார்கள். வானவன் மாதேவி என்ற பெயரில் ராஜராஜ சோழனின் மனைவி ஒருவரும் உள்ளார்.

கிரி என்றால் காற்று.
மலைப்பகுதியில் பதமான குளிர் உள்ள உப்பு.

இவவாறு பல மூலப்பொருள் களை கொண்டு,
ஒரு ரசாயன புரட்சியே செய்த சோழ மண்டலம் அது குறித்து பேசுவதே இல்லை.

ஆங்கிலத்தில் au, fe, cu, எல்லாம் பயன்படுத்துவது போல தமிழிலும் ரசாயணத்திற்கென்று தனி நடை உள்ளது.

தமிழும், வரலாறும் ஒன்றாகி, தமிழின் அறிவியலை வெளிக்கொணருமா?

Thursday, 13 August 2020

LUX என்றால் luxury

LUX  என்றால் luxury


LUX என்பது குளியல் சோப் எனும் டாய்லட் சோப் .

L U X  சோப்பு லீவர் ப்ரோதேர்ஸ் என்பவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

இது இந்திய வரலாற்றின் முக்கிய கட்டம் .
வணிகம் , விளம்பரம் ஆகியவற்றிற்கும்  வரலாறுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு .


1888 ல் சன் லைட் சோப்பு என்று ஆரம்பிக்க பட்டு , lifebuoy ,விம் , pears , hudson போன்ற சோப் க்களையும் அறிமுகம் செய்தனர் லீவர் பிரோதெரஸ் .

பிறகு 1930 களில் dutch  நிறுவனமான மார்கரின் uni யுடன் இணைத்து unilever எனும் பிரிட்டிஷ் நிறுவனமாக மாறியது .






இந்நிறுவனத்தின் கீழ் எல்லா முக்கிய நடிகைகளும் , தங்கள் அழகிற்கு இது தான் காரணம் கூறி மக்கள் மனதில்  பதிய வைத்துள்ளனர் .

1918 ம் ஆண்டு டால்டா எனும் வனஸ்பதி தயாரிப்பில் இறங்கியது .
LBIL ( Lever Brothers India Ltd ) .பிறகு 1931 ல் வனஸ்பதி சந்தைப்படுத்தப்பட்டது .

அதன் பெயர் ஹிந்துஸ்தான் வனஸ்பதி .

1959 surf அறிமுகம் செய்தது

1969 களில் Rin சோப்பு அறிமுகம் செய்தது .

1975 ல் Fair & Lovely ஐ சந்தைப்படுத்தியது .

1985 ல் LIPTON tea ஐ அறிமுகம் செய்தது .

1991 ல் பற்கள் சார்ந்த நிறுவனங்களுடன் இணைவு செய்து

1992 ல் pepsodent அறிமுகம் செய்தது .

1993 ல் TATA OIL MILLS ஐ இணைத்து .

1994 ல் Brook Band ஐ இணைத்து Lipton brook band Ltd ஆக மாறியது .

1996 அமெரிக்க நிறுவனமான johnson & sons நிறுவனத்துடன் 50:50 என்ற
முறையில் இணைந்தது .

1998 கச்சாஎண்ணெய் தொழிலில் ஈடுபட தொடங்கியது.

ஒருபுறம் ஆயில் தொழில்  செய்து கொண்டே Kwality icecream யும் கையில் எடுத்தது ..

2000 வது ஆண்டு Fair & Lovely Fairness Cream கொடுக்க ஆரம்பித்தது .

மேலும்

Ponds Talcum Powder , Rexona , Godrej , Lakme sunlight Cream,Hamam , Vaseline ,Dove ,Axe Deodorant ,Clinic Plus  ஆகியனவும் கொடுத்தது .

2001 முதல் parax Agri Seeds LTd உடன் இணைந்து விதைகளை விற்க ஆரம்பித்தது .

2002 ல் அன்னபுர்ண உப்பை அறிமுகம் செய்தது .

இதே ஆண்டு sunsilk shampoo மற்றும் அதன் உற்பத்தி பொருட்களை தன நிறுவனத்துடன் இணைத்து கொண்டது .

மேலும் மத்யப்ரதேஷ அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு , விந்தய வல்லே , umbrella brand உணவு பொருட்களை அறிமுகம் செய்தது .

கிரீன் லபெல் டி deluxe Green Label ஆக மாறியது .

திடீரென

மக்கள் ஆயுர்வேத பொருகள் மேல் கவனம் செலுத்தியதால்
ஆயுர்வேதிக் அறிவியல் நிலையம் ஆரம்பித்து ayus ஆயுர்வேதிக் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது .




2004 ஆம் ஆண்டு Mr .Fruit என்ற பெயரில் மங்கோ ஜூஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று சந்தையில் கிடைக்கும் மங்கோ ஜூஸ் க்கும் சொந்தகாரர்கள் இந்த unilever நிறுவனத்தார்.

powerful surf excel , Vim power , surf பவுடர் என்று அதன் முந்தைய எல்லா பொருட்களிலும் அதிக சக்தி கொண்டது கூறி கூடுதல் ரசயனதுடன் அறிமுகம் செய்தது .

2005 ம் ஆண்டு ஐஸ் டீ , பாட்டில் களில் கிடைக்க ஆரம்பித்தது .

தொடர்ந்து , சோப்பு கள் , அழகு சாதனா பொருட்கள் , பற்பொடிகள் , ஆயில் , உணவு பொருட்கள், சிக்கன் பொருட்கள் , விதைகள் , juice பாட்டில்கள் , தண்ணீர் பாட்டில்கள் ,பெப்சி , ஆயுர்வேத பொருட்கள், உப்பு ,  ஆகிய அனைத்தும் இந்நிறுவனத்தால் மட்டுமே இந்தியாவிற்குள் கொண்டுவரப்படுகிறது  .

2015 ல் swachh Aadad , மற்றும் Swachch barath திட்டத்தை கொடுத்ததும் இந்நிறுவனமே !

இந்த டோயலேட் சோப்பு விளம்பரங்களில் , முதன் முறையாக நடித்த பெண் , வட இந்திய நடிகை லீலா சிட்னிஸ் .

இந்திய தலை எழுத்தை ஒவ்வொரு முறையும் மாற்றுவது 
வணிக நிறுவனங்கள் தான்

இந்திய மக்களின் வாழ்க்கை பாதைகளை மாற்றுவதும்

வணிக நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரங்கள் .

யுனிலீவர் நிறுவனத்தின் வளர்ச்சி என்பதும் , இந்திய பயன்பாடு , கலாசார வளர்ச்சி என்பதும் வேறுவேறு அல்ல.
ஒரு நிறுவன வளர்ச்சி என்பதும் ஒரே நாளில் நடந்து விடுவது அல்ல .
கலாசார மாற்றத்தை ஒரு நிறுவனமும் , அதன் வளர்ச்சிக்காக தரப்படும் விளம்பரங்களும் தீர்மானிக்கின்றன.

தமிழநாட்டின் கலாசார மற்றும் பொருளாதார முன்னேற்றங்களும் வேறு வேறாக பிரிந்து செல்லாது .எனவே தமிழ்நாட்டின் , தமிழர்களின் கலாசார , பொருளாதார முன்னேற்றத்தை ஒரு நல்ல தமிழர் நலன் நோக்கும் நிறுவனத்தால் மட்டுமே கொண்டுவர முடியும் .
அது தமிழர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் விரைவில் தமிழர் பொருளாதாரம் முன்னேற்றம் பெரும் என்பது உறுதி !


தரவுகள் : இணையம் 

உண்டியல் மற்றும் hundi

 உண்டியல் மற்றும் hundi 

------------==========--------------


உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று கூறுகிறது புறநானூறு. 

அது உணவளிப்பதை பற்றி கூறப்பட்ட பாடல். 


7ம் நூற்றாண்டு க்கு பிறகு உண்டி- hundi - உண்டியல் என்பதின் பொருள் உணவு என்பதில் இருந்து விலகி சேமிப்பு என்றாகிறது. 

அதுவும் பிற் காலத்தில் கடன் வழங்க தரப்படும் ரசீது என்றாகியது. 


Hundi என்பது கிட்ட தட்ட தற்போதைய cheque போன்றது. 


அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழக வணிக சமூகங்கள் சில, தங்கள் வணிகம் சார்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். அங்கு அவர்கள் சமூக பிரச்சனைகள் சார்ந்து பேசப்படும். அவ்வாறு அமைக்க பட்ட அமைப்பும் கோயில் என்ற பெயரையே பெற்றுள்ளது. 

காரைக்குடியை சுற்றி 9கோயில்கள் உள்ளன என்று வரலாறு கூறுகிறது. 


இந்த கோயில்களில் ஒரு உண்டியல் வைக்கப் படும். இந்த உண்டியலில், அந்த கோயிலின் உறுப்பினர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் தங்களால் இயன்றதை பணமாக, தங்கமாக என்று போட்டு வருவார்கள். அந்த சமூகத்தில் யாருக்கேனும் வணிகம் தொடங்க நிதி தேவைப்பட்டால் அந்த உண்டியலில் இருந்து கடன் வழங்கப்படும். அதுவும் வட்டியுடன் !

அவ்வாறு வழங்கப்பட்ட பணத்தை கொண்டு, தங்கள் வியாபாரம் ஓரளவு வளர்ந்தவுடன், தான் பெற்ற கடனை வட்டியுடன் திருப்பி கொடுப்பார்கள். அந்த பணம் மீண்டும் அந்த சமூகம் மற்றும் கோயில் செலவுக்கு பயன்படும். 

இது தான் கோயில் உண்டியல்களில் நடந்த பொருளாதாரம் !


பிறகு கி. பி 1500களில் ஒரு hundi உருவாகி உள்ளது. அதாவது, ஒருவர் தனக்கு தெரிந்த ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை கடனாக தர சொல்லி எழுதி கொடுப்பது. 

இது promissory note என்று எழுதி வாங்கிக் கொண்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாதாரம் சார்ந்த இடங்களில் அங்குள்ள உறுப்பினரகள் தவிர வேறு பிறருக்கு அனுமதி தர வில்லை.


இது போன்று கோயில் உண்டியல் பணத்தை வட்டிக்கு கொடுக்கும் வழக்கத்தை மன்னர்களும் செய்து இருக்கிறார்கள். ஆனால் நோக்கம் சற்று வித்தியாசம் கொண்டது. 


பிற்காலத்தில், 

மன்னர்களை தோற்கடித்து, பொது கோயில்களை கைப்பற்றிய ஆங்கில அரசு, வணிகர்களை கைப்பற்ற இயலவில்லை. 

1806ம் ஆண்டு bank of culcutta உருவானது. 

1828ம் ஆண்டு bank of mumbai உருவானது. 

1843ம் ஆண்டு bank of madras உருவானது. 

பிறகு 

 1881 ல் hundi என்பதற்கு பிரிட்டிஷ் அரசு சட்டம் இயற்றியது. மூன்று வங்கியும் இணைந்தே imperial bank உருவானது. இது பின்னர் state  bank of india என்று மாறியது. 


1855ம் ஆண்டு நவம்பர் மாதம் கோயில் நுழைவு போராட்டம் முதன் முறையாக நடந்தது. என்பதும் குறிப்பிட தக்கது. 


"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் "






Raam currency - ராம் முத்ரா - ராம் ரூபாய்

 ஏன் நெதர்லாந்தில்

 Raam currency ? 

=================

ஒரு raam என்பது 10யூரோ விற்கு சமம் என்று கூறப்படும் இந்த பணம் நெதெர்லாந்திலும், அமெரிக்காவிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. 


யார் இதை உருவாக்கினார்கள்? 


ஆதிசங்கரர் உருவாக்கிய நான்கு மடங்களில் ஒன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர் மடம். 

இதில் 1941ம் ஆண்டு சங்கராச்சாரியராக இருந்தவர் 

பிரம்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகள். 

இவருக்கு நான்கு சீடர்கள். 

அவர்கள் 


1.சதானந்த ஸ்வாமிகள்  

2.ஸ்வாமி சொரூபனந்தா ஸ்வாமிகள் 

3. ஸ்வாமி கர்ப்பத்திரி 

4.சுவாமி மகேஷ் பிரசாத் வர்மா 


சதானந்த ஸ்வாமிகள்-


இவர் பிரம்மானந்த ஸ்வாமிகள் காலத்திற்கு பிறகு ஜோதிர் மடத்தின் அடுத்த சங்கராச்சாரியார் ஆகி விட்டார்.


சுவாமி சொரூபனந்த ஸ்வாமிகள் -

சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர். இவர் இப்போது துவாரகா பீடத்தின் மடாதிபதி ஆகி விட்டார். 


சுவாமி கர்ப்பாத்ரி -


இவர் கோவர்த்தன பீட மடாதிபதி ஆகி விட்டார். 


ஆக இந்தியாவில் உள்ள ஆதி சங்கரர் மடங்களின் பீடாதிபதிகள்( சாரதா பீடம் தவிர்த்து ) அனைவரும் ஓரே இடத்தில் இருந்து வந்தவர்கள். 


இவர்களில் நான்காவது சீடர் தான் 


சுவாமி மகேஷ் பிரசாத் வர்மா. 

இவர் உலக அளவில் பேசப்படும் மடாதிபதி. 

இவர் மகரிஷி மகேஷ் யோகி என்றே வழங்கப்படுகிறார். 


இவர் 

அமெரிக்காவில் அயோவா என்ற இடத்தில் தனி நாடே அமைத்து விட்டார். 

Global country of world peace. 

வேதிக்  நகரம் என்ற நகரம் இவரால், 

2000வது ஆண்டு oct 17 ல் தான் இந்த வேதிக் நகரம் உருவாக்கப்பட்டது. 

உலகின் முதல் முறையாக தனியாக கட்டமைக்கப்பட்ட நகரம் இது. 


இந்த நகரம் வெளியிட்ட பணம் தான் 

Raam currency. 

இதில் 18மொழிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, ஹிந்தி, மராட்டி, பெங்காளி, சைன மொழி கூட இதில் இடம் பெற்றுள்ளது. 


2004ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை மங்காத்தான் பகுதியின் 

 American bank note company building ஐ தன் வசத்தில் வைத்து இருந்து பிறகு விற்று விட்டது. 


இந்த பணத்தை நெதர்லாந்து நாட்டின் 30கிராமங்களில் புழக்கத்தில் ஏற்று கொண்டு உள்ளதாகவும் தகவல். 


அதே போல தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில், வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளுக்கு இந்த பணத்தை தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளார்கள். Petro dollar போல !


இந்த பணம் வடக்கு போலந்து நாட்டில் haarleem என்ற ஊரில் isaak வம்சத்தவரால் உருவாக்கப் பட்ட அச்சு நிறுவனத்தில் உருவாக்கி உள்ளார்கள். 


2018ம் ஆண்டிலேயே, 

இந்த பணம், 

நெதர்லாந்தில் ஏன்? 

இந்தியாவில் அல்லவா இருக்க வேண்டும் என்று பலர்  கேள்வி எழுப்பியும் யாரும் பதில் தர வில்லை. 


ஒரு வேளை வருங்காலத்தில் வருமோ என்னவோ? 


இந்த உலக அமைதி நாட்டின் தலைவர் 

Tony Nader. 

இவர் பிறந்தது, படித்தது அனைத்தும் லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரம் தான். 

சமீபமாக துறைமுகத்தில் இருந்த அம்மோனியா நைரேட் வெடித்து சிதறிய தன் பொலிவிழந்த அதே பெயருட் நகரம் தான். 


மகரிஷி மகேஷ் யோகி அவர்கள், நெதர்லாந்தில், லும்பார்க் நகரில்  தன் கடைசி காலத்தை, 2008ல் முடித்து விட்டார். 


Maharishi international university என்ற பெயரில் இப்போதும்

 you tube சேனல் தங்களது மாணவர்கள் சாதனைகளை பதிவு செய்து வருகிறது. 


படங்கள் :

Meru என்று வழங்கப்படும் 

Maharishi European Research Univercity 

Raam currency 



Wednesday, 12 August 2020

உலக யானைகள் தினம்

 உலக யானைகள் தினம்


இந்தியாவில் மட்டும்
11, 89, 826
தோல் தொழிற்சாலைகள் உள்ளன.
==================

ஆகஸ்ட் 12, 2020
இன்று உலக யானைகள் தினம்.

ஒரு நாள் யானைகள் தினம் கொண்டாடியதும் யானைகள் மீது நமக்கு மரியாதை உள்ளது என்றோ, அவற்றை நாம் காக்க போகிறோம் என்றோ அர்த்தம் இல்லை.
அதனால் கடந்து போவோம் என்று நம் எண்ணங்கள் கூறலாம்.


ஆனால், கடப்பதற்கு முன்னால்,


கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டு தமிழ் மொழி உள்ளதாயின் தமிழோடு பல்லுயிர்களும் உள்ளன.
தமிழில்
போர், காதல், இறைவன் இவற்றை பற்றி சொல்லப்பட்ட செய்திகள் மிகக்குறைவு தான்.
ஏனெனில்,
தமிழ் முழுவதும், மரங்களும், பறவைகளும், விலங்குகளும், புல், பூச்சிகளும் தான் இருக்கினறன.

தொல்லியல் முழுக்க, விலங்குகள், இல்லாத பழங்காசுகளே இல்லை எனலாம் .
எல்லா தொல்லியல் தடயத்திலும் யானைகள் பற்றி தகவல்கள் அதிகம்.

யானை மீது இல்லாத,
ஒரு வரலாற்று தலைவனை அறிமுகம் செய்ய இயலாது.
ஆனால் யானைகள் இன்று தன் மரியாதையோடு தான் உள்ளனவா?

யானை படை என்ற ஒன்றை வைத்து இங்குள்ள மன்னர்கள், யானைகளை கொண்டு பயிற்சி கொடுத்து போர் செய்த போது கூட அழியாத யானை கூட்டங்கள் இன்று அழிந்து வருகின்றன.
அன்று அழியாத காடுகள் கூட இன்று தடயங்களாக கூட இல்லை.


ஏனெனில் நம் பொருளாதார முன்னேற்றம் என்பது,
தோல் துறையிலும், தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற பணப்பயிரிலும், மண்ணிற்கு எதிரான விவசாய முறைகளிலும் சிக்கி கொண்டுள்ளது.

என்று ஐரோப்பியதை கையில் கொண்டு, நம் பொருளாதார வளர்ச்சிக்கு அவன் காட்டும் வழிகளை பின்பற்ற ஆரம்பித்தோமோ, அன்றே
நம் பல்லுயிர் பேணும் எண்ணங்கள் காற்றோடு கலைந்து விட்டன.

எந்த உயிரின் தோல் என்றும் தேடாமல் நாம் பயன்படுத்தும் தோல் பொருள்களால்,
ஆடு, மாடு, முயல், முதலை, யானை, மான், பாம்பு, ஓணான், உடும்பு என்று எல்லா உயிர்களும் அழிந்து கொண்டு இருக்கின்றன. ஒரு செய்தியின் படி, இந்தியாவில் மட்டும்
11, 89, 820 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் உற்பத்தி மூலப்பொருள்களுக்கு எங்கே செல்வார்கள்? யார் தருவார்கள்?

உலகின் மிகச் பெரிய 10தோல் தொழில் சாலைகளை கணக்கில் எடுத்து கொண்டால், இந்தியாவின் bata நிறுவனமும் முதலிடம் பெறும்.
இதுவே இந்தியாவில்
தமிழ்நாட்டில் தான் அதிக தோல் உற்பத்தி நடக்கிறது என்று
Exportgenious.com கூறுகிறது.


இப்படியாக 2017ம் ஆண்டு அரசு தோல் தொழிலுக்கென்று சில விதிமுறைகளை விதித்துள்ளது. இதனால் மாடுகள் கொல்லபடுவது தடுக்க படலாம். ஏனையவைகள் நிலை?

உலக அளவில்,roje exotic என்ற அமெரிக்கா நிறுவனம் தான் யானை தோல் முதல் பாகம் பாகமாக விற்கிறது. ஆப்பிரிக்கா நாடான போஸ்ட்வானா, இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் யானைகளை சுட்டு கொல்ல ஏலம் நடத்தியது. அதில் 272யானைகள் கொல்ல படலாம் என்று ஏலம் முடிவாகி உள்ளது. அதற்கு ஒரு காரணமும் உள்ளதாம். யானைகள் 1, 30000ஆக பெருகி விட்டதால், யானை பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கையாம் இது.
நாளைக்கு மக்கள் தொகை பெருக்கமும் இதற்கு கீழ் வருமோ? என்னவோ?

நாம் பெரிதாக எதையும் தடுக்க இயலாது. ஆனால், தோல் பொருள்களை தவிர்க்க இயலும். வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் கார்பொரேட் பொருளாதார கொள்கைகளை பேசி, அது தேவையா இல்லையா என்று முடிவெடுக்கலாம்.
பணம் மட்டும் வாழக்கை அல்ல !
பல்லுயிர்கள் இருந்தால் தான் இந்த பூமியே சுழலும்.

இந்த மண்ணை காத்த, இந்த நீர் நிலைகளை உருவாக்கிய யானைகளையும், இதர உயிர்களையும் நேசிப்போம்.







#உலகயானைகள்தினம்

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...