கள்ளு உடல்னலதிற்க்கு கோளாறு . பனை மரங்களை எல்லாம் அழித்து விட்டோம். ஆனால்
மது பான கடைகளை அழிக்கவில்லையே ? ஏன் ?
ஊரின் அழகே போய்விட்டது . எங்கு பார்த்தாலும் எச்சில் கரைகள். எல்லாம் இந்த வெற்றிலை போடுபவர்களால்தான். அவர்களை எல்லாம் திட்டி தீர்த்தோம். ஆனால்,
பான்பராக் போடுபவர்களை கேள்வியே கேட்பதிலையே ! அது ஏன்
குளங்களில் குளிப்பது சுகாதார சீர்கேடு. குளங்கள் என்பதே சுத்தம் இல்லாத இடம் என்றோம். நம் அழுக்கை கூட சுத்தபடுத்திய களிமண்ணை கேவல படுத்தினோம்.
ஆனால்
தீம் பார்க்குகளில் உடலுக்கு தீங்கு செய்யும் குளங்களில் குளிப்பதை ஆனந்தமாய் ஏற்கிறோம் . ஏன் ?
நம் உடலில் சூட்டினால் ஏற்படும் புண் மற்றும் கொப்புளங்களுக்கு குளிர்ந்த களிமண்ணையும் , செம்மண்ணையும் பதமாக போட்டு விட்ட நம் பாட்டியை திட்டிவிட்டு
அதே களிமண்ணையும் , செம்மண்ணையும் டப்பாகளில் அடைத்து காஸ்மெடிக் கடைகளில் விற்கும் போது வாங்குகிறோமே ! ஏன் ?
தாத்தாக்கள் சுருட்டு பிடிபதையே கேவலமாய் பார்த்துவிட்டு , சிகரெட்டை ஆறாம் விரல் என்கிறான் , ஊரெல்லாம் ஊதி தள்ளுகிறான் . கேள்வியே இல்லையே அது ஏன் ?
வயிற்று வலி என்று வரும் போதெல்லாம் நாட்டு வைத்தியர் நம் வயிற்றை தொட்டு பார்த்து வைத்தியம் செய்ததையே மறுத்த நாம் ,
ECG என்றும் ULTRASOUND டெஸ்ட் கள் என்றும் எடுக்கும் போது ஆடையை விலக்க சொன்னாலும் சரி , நீக்கவே சொன்னாலும் சரி செய்கிறோமே ! அது ஏன் ?
சாலை ஓரங்களில் மரங்களை நட்டார் அசோகர் என்று பாடம் நடத்தும் போதெல்லாம் இந்த வரலாறுகள் எதற்கு என்று கேள்வி கேட்ட நாம்
மரங்களை வெட்டும் போது கேள்வியே கேட்கவில்லையே ஏன் ?
மாட்டு சாணத்தில் வீடு மொழிகினால் சீ என்று ஒதுங்கி விட்டு
வீட்டிற்குள்ளேயே toilet வைத்து அதை பயன்படுத்தும் போதெல்லாம் நோய் கிருமிகள் நம்மை சூழ்ந்து கொண்டே இருக்கும் என்று எண்ணவில்லையே ! அது ஏன் ?
மண்பானை வாங்கும்போதும் ,
உள்ளூர் காய்கறிகள் வாங்கும்போதும்
கீரைகள் வாங்கும்போதும்
மரபொம்மைகள் வாங்கும்போதும்
பருத்தி ஆடைகள் வாங்கும் போதும் பேரம் பேசிய நாம்
நம் உடலுக்கு ஒவ்வாத பொருள்களை கூட fixedprice என்று கூறுகிறான் நாம் வாங்குகிறோமே ! அது ஏன் ?
நம் முதுகு தண்டுவடத்திற்கு இலவச மசாஜ் செய்த கயிற்று கட்டிலை விட்டுவிட்டு
ஸ்பிரிங் வைத்து நம் முதுகையே வீணடிக்கும் மெத்தை கட்டிலை பயன்படுத்துகிறோமே ! அது ஏன் ?
சோறு சற்று வேக வில்லை என்றாலும் அம்மாவையும் , மனைவியையும் திட்டி தீர்க்கின்ற நாம்
வேகவே வைக்காமல் உணவு பொருளை கொடுத்தாலும் அயல்நாட்டு உணவு உள்நாட்டிலேயே கிடைக்கிறது என்ற பெருமையுடன் உண்கிறோமே ! அது ஏன் ?
உள்நாட்டு இனிப்புகள் 2 அல்லது 3 நாட்கள் கழித்து விற்றாலும் , அதன் மீது ஒரு ஈ அமர்வதை பார்த்தாலும் , சிறு வியாபாரிகள் தொழிலையெல்லாம் கெடுத்து விட்ட நாம் ,
என்றைக்கு செய்தான் என்றே தெரியாமல் 6 மாத கால கெடுவுடன் வருகின்ற சாக்லேட் வாங்கி அந்நிய வாணிகத்தை வளர்க்கிறோமே !
அது ஏன் ?
நாவல் பழம் , இலந்தை பழம் , பாலா பழம், ஈச்சம் பழம் இவற்றை உண்ணுவதையே கேவலமாய் பேசிவிட்டு
மெழுகு தடவிய ஆப்பிள் களில் மருத்துவரையே விரட்டியது போல் பெருமை கொள்கிறோமே அது ஏன் ?
கம்மன்கூளும் கேழ்வரகு கூழும் நம் கண்களுக்கு இழிவாக தெரிய
விஷம் என்று தெரிந்தும் பெப்சியும் கோலாவும் குடிகிறோமே !
அது ஏன் ?
மாரியம்மன் கோவிலிலே கூழ் குடிப்பது கேவலம்
corporate கோவில்களில் உண்டக்கட்டி வாங்க வரிசை ! அது ஏன் ?
வாயில் வைத்தாலும் உடலுக்கு நல்லதையே செய்யும் உள்ளூர் மரபொம்மைகளை விடுத்து
அதனையும் ஆபத்து என்று வார்னிங் போட்டு வரும் சீனா பொம்மைகளை வாங்குகிறோமே ! அது ஏன் ?
நம்மை படிக்க வைத்த நம் பெற்றோரை இழிவு படுத்தும் விதமாய் ,
என் பிள்ளையாவது நல்ல பள்ளிகூடத்தில் படிக்க வேண்டும் என்று பல இலட்சங்களை செலவழிகிறோமே !அது ஏன் ?
நம் உடலுக்கு நன்மை செய்யும் செம்பு மற்றும் மட்பாண்டங்களை விடுத்து
கதிர் வீச்சை வெளியேற்றும் என்று தெரிந்தே microwave ஓவன் பயனின் காரணம் என்ன ?
பிச்சைகாரர்கள் கூட பழைய சாப்பாட்டை தவிர்க்கும் காலத்தில்
4 நாட்கள் 5 நாட்கள் உணவை கூட உண்கிறோமே அது ஏன் ?
refrigerator வந்தப்பிறகு உணவு விரயமே இல்லை என நம்புகிற நாம்
அதீத நுகர்வினால் , அதிக உற்பத்தி வேண்டி உரமிட்டு உரமிட்டு நம் மண்ணின் வளமெல்லாம் அழிகிறதே என்பதையே உணர மறுப்பது ஏன் ?
குடிசை வீட்டை கூட பிரமிட் போல கட்டிய நாம்
பிரமிடை பார்த்து வியந்து கொண்டே நம் வீட்டின் அமைப்பையெல்லாம் இழந்து விட்டோமே அது ஏன் ?
நமக்கெல்லாம் காரணம் தெரியும் . நாமெல்லாம் நல்லவர்கள். நாமெல்லாம் படித்து விட்டோம். அதனால்தான் நாகரீக போர்வைக்குள் ஒழிந்து நிற்கிறோம் .நமக்கு மேலும் கீழும் முன்னும் பின்னும் என்ன நடந்தாலும் நமக்கு தெரிய போவதில்லை .
நம் உணவு பற்றாக்குறையை போக்கவே வந்தது பண்ட மாற்றுமுறை.
பண்ட மாற்று குறைகளை போக்கவே வந்தது இந்த விலை தேவை அளிப்பு
பட்டியல் எல்லாம். இதுவரை நாம் வணிகத்தை ஆண்டு வந்தோம் .
ஆனால் இது என்ன LPG . ஒன்று பொதுமயமாக்கல் , தாராளமயமாக்கல் , என்ற அடிப்படையில் எல்லாம் எல்லாருக்கும் சொந்தம் என்;று சொல்லட்டும் . அது சரி. ஆனால் இடையில் ஒன்று உள்ளதே தனியார்மயமாக்கல். இது தாங்க புரியல.
நம் நாட்டின் பழைய பழமொழி ஒன்று உண்டு . என்ன தெரியுமா?
உங்களுது எங்களது மாதிரி
எங்களது எங்களது மாதிரின்னு
புரிஞ்சிகங்க ! இது தாங்க LPG
நம் கேள்விகள் அதனையும் globalaisationin கொடை .