Monday 30 December 2019

ஹீரோ திரைப்படத்தின் முக்கிய கருத்து.


கல்வி முறை மாறவேண்டும்.
கண்டுபிடுப்புகள் பெருக வேண்டும்.
இந்தியா விஞஞானிகளுக்கு வெளிநாட்டில் நல்ல மதிப்பு உண்டு. அல்லது
வெளிநாடுகள் விஞ்ஞானிகளை மதிக்கிறார்கள்.
இந்தியாவில் கண்டுபிடுப்புகள் அதிகம் ஆகும் போது
தோல்வியால் வரும் தற்கொலை எண்ணிக்கை குறையும் என்று கூறி படம் நிறைவு பெறுகிறது.

கல்விமுறை மாற வேண்டும் என்பதும்,
இந்தியாவில் ஒவ்வொரு கண்டுபிடிப்பாலனும், கல்வி தகுதி என்ற அடிப்படையிலும், மாறுபட்ட கேள்விகளாலும் patent rights வாங்க முடியாமல் திணறுகிறார்கள் என்பதும் உண்மை.

ஆனால் வெளிநாடுகள் விஞ்ஞானிகளை மதிக்கிறது. என்பதெல்லாம் tesla கதை அறிந்தவர்களுக்கு நன்கு புரியும்.

பிறகு கண்டுபிடுப்புகள் பெருகினால் தற்கொலை தடைபடும் என்பதெல்லாம்,
உசுப்பேத்தி விட்டு, அறிவு திருட்டிற்கு வழி போடுவதாகவே உள்ளது.
அங்கீகாரம் யில்லாத இடத்தில் கண்டுபிடிப்பு இருந்தால் என்ன, இல்லை என்றால் என்ன??

ஏற்கெனவே உப்பு தண்ணீர் bike, வெறும் தண்ணீரில் ஓடும் bike எல்லாம் நம்
மாணவார்கள் கண்டுபிடித்து
Rejected இடத்தில் தான் நிற்கிறார்கள்.

இதன் முடிவை பார்த்தால் assignment என்ற பெயரில் எதையாவது கண்டுபிடி என்று பள்ளிகளில் கூற
பெற்றோர்கள் ஏதேனும் கடையில் ஆர்டர் கொடுக்கணும் போலவே !







ஆளானப்பட்ட அறிவியல் விஞானிகளே அல்லோலகல்லோல படுறாங்களாம் .
இதுல நம்ம ஊரு சின்ன சின்ன பள்ளிக்கூடத்து பிள்ளைங்க எதையாவது கண்டுபித்தால் ஜெயிக்க விடுவார்களா ??




தமிழனின் வணிகம் .vs யூத வணிகம் .

தேவைகளை நிவர்த்தி செய்தது பண்டைய தமிழனின் வணிகம் .

தேவைகளை உருவாக்கி தன உற்பத்தியை விற்பனை செய்வது யூத வணிகம் .

------------------------------------

நம் வியாபாரிகளுக்கு

நாம் என்ன விற்கிறோம் ?

யாருக்காக விற்கிறோம் ?

இதில் எவ்வளவு லாபம் வரும் ?

யாருடைய தேவை இதில் நிறைவேறும் ?

உற்பத்தியாளர் பெற்ற லாபம் , விற்பனையாளர் அளவிற்கு இருக்கிறதா ?

எந்த பகுதியில் யாருக்கு என்ன பொருள்

தேவை படும் ?

என்று எதை பற்றியும் கவலை இல்லை . இதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையும் இல்லை .

அந்த தகவல்கள் தேவை என்ற புரிதல் கூட இல்லை .

அதீத லாபம் ,இது ஒன்றே குறிக்கோள் .

மற்றொன்று

தொழிலில் தோற்று விடுவோம் என்ற பயம் .

அடுத்த கட்டம் நோக்கி செல்ல இயலாமை .

வியாபாரம் செய்ய நுகர்வோரே முக்கியம் என்பதை மறந்து லாபம் முக்கியம் என்றெண்ணி தோற்று போகிறார்கள் .

----------------------------------

நான் இதை விற்கிறேன் , நீ இதை வாங்க வேண்டும் .

ஏனெனில் நாம் தமிழர்கள் என்ற கோட்பாடெல்லாம்

வியாபாரத்தில் செல்லாது .

தேவை என்னவோ அந்த பொருளை விற்பதே சிறப்பு .

இந்த இடத்தில தான் வியாபாரிகள் தோற்று போகிறார்கள் .

Online வணிகம் தேவைப்படுகிறது.

---------------------------------------

ஆனால் யூத வணிகர்கள் ,

நம்முடைய தேவைகளை உருவாக்குகிறார்கள் .

அதன் மூலம் தன உற்பத்தியை சந்தை படுத்துகிறார்கள் .

அதனால் நம்முடைய தேவைகள் அவர்களால் நிவர்த்தி செய்யப்படுவது போல் தோன்றுகிறது .

நம் தேவை எது என்று தேடினால் ,அவை அனைத்தும் நம்மிடமே உள்ளன .

இன்று அனைவருக்கும் செல்போன் தேவை இல்லை .

ஆனால் paytm, google pay இவையெல்லாம் செல்போன் என்ற தேவையை உருவாக்குகின்றன .

தேவைகளை நிவர்த்தி செய்தது பண்டைய தமிழனின் வணிகம் .

தேவைகளை உருவாக்கி தன உற்பத்தியை விற்பனை செய்வது யூத வணிகம் .




இன்றைய தேதிக்கு முருங்கை காயின் விலை கிலோ ரூபாய் 460 விற்கிறது.
இது கடந்த 2 மாதங்களாக நடக்கிறது.
ஒரு முருங்கை காயின்
விலை 25 முதல் 35 ரூபாய்
விற்பனை ஆகிறது.
ஏனெனில் இது குளிர்காலம். அதனால் உற்பத்தி அதிகம் இல்லை.
எனவே எந்த செய்தி துறையும் இது குறித்து பேசவே இல்லை.
இதே நிலைதான் கோவைக்காய், மாங்காய், பரங்கி, பூசணி எல்லாவற்றிற்கும் !

இந்த நிலை வெங்காயத்திற்கும் பொருந்தும்.
ஆனால் இது மட்டும் பேசப்படுகிறது.

நாம் கூறலாம்,
முருங்கையின் தேவை அதிகம் இல்லை.
அல்லது முருங்கை பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் இருக்கிறது என்று !

ஆனால் வெங்காயம் தினமும் தேவை. அதனால் இறக்குமதி செய்யப்பட்டது என்று.

மற்றொரு காரணமும் உண்டு.
முருங்கை இந்தியாவில் மட்டும் தான் விளையும். இதை சில ஆப்பிரிக்கா நாடுகளில் குறைந்த அளவு விளைகிறது.
எனில் இதை எந்த நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்ய இயலாது.

அதே சமயம் எப்போதும் போல இந்தியாவில் இருந்து
அமெரிக்கா, லண்டன், குவைத், துபாய்
போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எனில் இறக்குமதி எனப்படுவது நம்முடைய பற்றாக்குறை மட்டுமல்ல.
வேறு ஒரு நாட்டின் அதீத விளைச்சலும் தான் !



சில ஆண்டுகளாக தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்ற கொள்கை எல்லோர் மனதிலும் பரவி இருக்க,
தன் மதம் எது என்ற தேடலின் முடிவு
ஆசிவகத்தில் முடிந்துள்ளது.

இன்று தேடிய நம் மக்கள்
ஏன்
பல நூறு ஆண்டுகளாக தேட வில்லை என்றால், அதன் வரலாறு ஒரு கசப்பு நிறைந்தது.
அது இப்போ வேண்டாம்.

ஆனால் இப்போ இந்த ஆசிவகம் யார் ஆய்வு செய்து சொல்றாங்க.
யார் இந்த நூல்,
வழிபாட்டு முறை சொல்றாங்க பாருங்க.

திராவிட முன்னேற்ற கழக சார்பில்
பேராசிரியர் நெடுஞ்செழியன் எழுத
ஸ்டாலின் அவர்கள் அதை
வெளியிட்டுள்ளார்.

இதற்கு பிறகு இது பாட புத்தகங்கள் வழியாக குழந்தைகளிடம் சேர்க்கப்பட்டு
அடுத்த தலைமுறைக்கு கடத்த படும்.

எப்படி உடை அணிய தமிழர்களுக்கு சொல்லி கொடுத்தார்களோ
அதேபோல்
தமிழா இது தான்
உன் மதம் என்றும் சொல்லி கொடுப்பார்கள்.

இது மதம் சார்ந்தது என்றால்
ஐயனார் வழிபாடு இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதை நமக்கே சொல்லி தர போகிறார்கள்.

இதற்கு பின்னாலும் வாழ்வியல் உள்ளது. முன்னேற்றம் உள்ளது.
ஆனால் யாருடைய முன்னேற்றம்??





விளம்பரங்கள் II


தற்சார்பும் நான்கு தூண்களும் :

மதம்
பணக்காரன்
சமூகம்
செய்தி தாள்கள்
இந்த நான்கு தூண்கள் தான் முதல் நிலை விளம்பரத்தார்கள்.

இவர்கள் பங்கு தற்சார்பு பொருளாதாரத்தில் உள்ளதா?

நான்கு சக்கர வாகனங்கள் ஓடும் இடத்தில் இரண்டு சக்கர வாகனம் சற்று வேகம் குறைவாக தான் செல்லும்.

அப்படித்தான் தற்சார்பு ஓடி கொண்டு இருக்கிறது.
ஏனென்றால்,
இங்கு தற்சார்பு, இயற்கை விவசாயம், கட்டுமான மாற்றங்கள் கொண்டு வர போராடியது
சமூக ஆர்வலர்களும், சமூக வலைதளங்களும்தான்.

இந்த இரண்டு சக்கரமும் தொடர்ந்து சுழலும் வரை தற்சார்பு நடைபெறும்.
ஆனால்
இதுவும் நாளை நான்கு தூண்களுக்குள் சிக்கி கொள்ளலாம்.
( ஏற்கெனவே 50%அங்கு தான் இருக்கிறது. )

அப்படி சிக்கி கொண்டால், இதுவும் ஐரோப்பிய வணிகர்களாலே ஆளப்படும்.
அப்பவும் ஏற்றுமதி மட்டுமே ஊக்குவிக்கபடும்.




விளம்பரங்கள் ( முதல் நிலை ) - I



விளம்பரங்கள் இரண்டு வகைப்படும்.

முதல் நிலை
நமக்கே தெரியாமல் நம் தலைக்குள் ஏற்றுவது.
இது தான் அடிப்படை.

இரண்டாம் நிலை
நாம் அன்றாடம் பார்க்கும் பட, ஓவிய மற்றும் அசைவு தொழில் நுட்ப விளம்பரங்கள்
----------------------------------------
முதல் நிலை விளம்பரம் :

கீழே உள்ள படத்தில் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரம் உள்ளது.

இது தான் விளம்பரம்.

விளம்பரம் என்ற பெயரில் போட்டால் அது மக்களை சென்றடையாது. அதையே செய்தியாக போட்டால்
மிக எளிதில் சென்றடையும்.

செய்தித்துறைகள் இதை தான் செய்கின்றன.

பிரெஞ்சு புரட்சி ஏற்பட்ட காலந்தொட்டு
பத்திரிகைகளின் ஒரே வேலை ஒரு விஷயத்தை விளம்பர படுத்துவது தான்.

ஆனால் அதை படிக்க சொல்லவும் விளம்பரம் தேவை பட்டது.
அதை கல்வி நிலையங்கள் செய்தன.
தினந்தோறும் செய்தி தாள் படிக்க வேண்டும் என்று கூறின.

இதுவும் பள்ளிக்கூடம் போனால் தானே நடக்கும்.
எனில் பள்ளிக்கூடத்திற்கு விளம்பரம் தேவை பட்டது.
அதை இங்கு வாழ்ந்த மத குருமார்கள் செய்தனர்.
பள்ளிக்கூடம் சென்றால் தான் அறிவு வளரும் என்று !

எனில் மதகுருமார்கள் ஏன் செய்தனர்.
அவர்கள் ஏன் செய்ய வேண்டும்.
ஏனினில் விளம்பரம் தரும் பணக்காரன் இந்த சாமியாரின் பக்தர். இதில் எல்லா மத குமாருக்கும் பங்குண்டு.

இவைதான் நமக்கு முதல் நிலை விளம்பரம் தரும் நான்கு தூண்கள்.

மதம்
பணக்காரன்
சமூகம் எனப்படும் பள்ளிகள்,மருத்துவ மனைகள்
செய்தி தாள்கள்



இந்துக்களின் காலக்கணக்கு,
உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்..

கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்
கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்
கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்
கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்
கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு
கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!

குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!
இந்து என்று சொல்லுங்கள்..
தலை நிமிர்ந்து நில்லுங்கள்..
பதிவு செய்தவர்.... ராமன் ஐயங்கார் அவர்கள்!!



விஜய் சேதுபதியும் , விக்ரமராஜாவும் !



விஜய் சேதுபதி நடித்துள்ள விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்துகிறார் விக்கிரமராஜா .
என்ன விளம்பரம் அது ?

ஒரு ஆப்  , அது தான் மாண்டீ ஆப்

ஒரு போன் கால் செய்தால் , வீட்டிற்கு தேவையான எல்லா வகையான உணவு பொருளும் கிடைக்கும் .
ஏற்கெனவே பல்வேறு , ஆப் கள் உள்ளன.
டூர் டெலிவரி வந்து விட்ட நிலையில் , இதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் ?

ஏனெனில் ,
அண்ணா எப்போவுமே ,
இது தமிழனின் அடையாளம் என்றே கூறுவார் .
நீ தமிழனா இருந்தால் இத ஷேர் பண்ணு என்று ஒரு வாசகத்தை , தமிழ்நாட்டில் பிறந்த தமிழர் அல்லாத ஒரு கூட்டம் அடிக்கடி பயன்படுத்தும் .
அதே தொழில் நுட்பம் தான் ,
விஜய் சேதுபதியும் செய்வார் .

மினிஸ்டர் வைட் வேஷ்டிகள் விளம்பரத்தில் நடித்த போது ஜல்லிக்கட்டு போராட்டத்தை சரியாக பயன்படுத்தினார் . தமிழனின் அடையாளம் என்றார். ஆம் வேஷ்டி தமிழனின் அடையாளம் தான் . ஆனால் மினிஸ்டர் வைட் கனடா நாட்டு நிறுவனம் .

அணில் சேமியா விளம்பரம். இது தமிழ்நாடு உற்பத்தி என்றாலும் , உண்மையில் இதன் அடையாளம் வடஇந்திய அணில் நிறுவனமோ என்ற ஐயமே உள்ளது .

இப்பவும் , மாண்டீ ஆப் அறிமுகம் செய்யும் போது ,
இது தமிழனின் அடையாளம் என்றே கூறுகிறார் .

கடைசி விவசாயி என்று பெயர் வைத்து திரைப்படத்தில் நடிப்பது . எதிர்மறையான எண்ணங்களை விதைப்பது . அதை தமிழனின் அடையாளம் என்று கூறுவது .
இது தான் விஜய் சேதுபதியின், அடையாளம் .

உண்மையிலேயே அவருக்கு தமிழரின் மீது மதிப்பு இருந்தால்
குறைந்த பட்சம் ,
கடைசி விவசாயி என்ற பெயரையாவது மாற்றட்டுமே !
மாற்றமாட்டார் ,
அதான் மாண்டீ வருகிறதே , இது ஒரு அமெரிக்கா , ஜப்பான் நிறுவனம் .
நமக்கான உணவு பொருள் அமெரிக்கா தர காத்திருக்கும் போது ,
இப்போது விவசாயம் செய்பவன் , விஜய் சேதுபதியை பொறுத்தவரை கடைசி விவசாயியாக இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார் போலும் !

பொருளாதார பயம்


இன்னும் எத்தனை காலத்துக்கு தாண்டா இந்த பயத்தை விதைப்பீங்க ??

எல்லாம் கிட்டத்தட்ட அழித்து விட்டோம் . இன்னும் ஆசை அடங்கவே இல்லையா ?

எறும்பை பாருங்கள் , அந்த தேனியை பாருங்கள்

சேமிப்பு முக்கியம் என்கிறீர்கள் .

இப்போ மக்கள் முன்னேறல.

ஆனால் வங்கி உரிமையாளர்கள் முன்னேறி விட்டான் .

பெண்களும் வேலைக்கு போனால் தான் நாளைக்கு சோறு கிடைக்கும் என்றெல்லாம் பயமுறுத்தி , இன்று சாலைகளில் ட்ராபிக்கும் , சேலைக்கடையும் , அழகுபடுத்தும் கடையும் , பெருகியது தான் மிச்சம் .

அதோட உணவு விற்கும் கடையும் பெருகியது.

அது இப்போ zomato , swiggy யில் போய் நிக்குது .

இப்போவும் விதைக்கப்படும் அதே பொருளாதார பயம் ??




Monday 23 December 2019

வணிகம் Part 1

வணிகம் என்பது என்ன?

பொருளை வாங்கி விற்பவன் வியாபாரி.
அது வணிகம் அல்ல.
வணிகமும் வியாபாரமும் ஒன்று என்று தவறான புரிதல் விதைக்க பட்டுள்ளது.

வணிகத்தின் ஒரு கடை நிலை பிரிவு தான் வியாபாரம். இன்றளவும் இதை கடை என்றே வழங்குகிறோம்.

இந்த வியாபாரத்தின் அண்ணன் தம்பிகள் தான்
போக்குவரத்து, வங்கிகள், காப்பீடு, நிதி நிறுவனங்கள், மற்றும் குடோன் என்று வழங்கப்படும் பண்டக சாலைகள்.

தமிழர்கள் வாணிகத்தில் சிறந்து விளங்கினார்.
வியாபாரத்தில் அல்ல.

வியாபாரத்தில் அன்றும், இன்றும் சிறந்து விளங்குவது ஐரோப்பியர்கள் மட்டுமே !

எனில் வணிகம் என்பது என்ன?




வானியல் ஆய்வு செய்வது.
வானியல் அறிந்து, எந்த மண்ணில் தற்சமயம் என்ன நடக்கும் என்பதை அறிந்து, அம்மக்களுக்கு என்ன தேவை படும் என்று அறிந்து, அதை அந்த மண்ணிற்கு கொண்டு சேர்ப்பது தான்
வான் இகம். வாணிகம்.
செவ்வாய்யும், வெள்ளியும், நிற்கும் திசை கண்டு மழை சொல்லும் வல்லமை பெற்றவன்
வாணிகன்.
புதன், சனி, நிலை அறிந்து விளைச்சலும், வியாதியும் கண்டு
மருந்து கொடுத்தவன்
வாணிகன்.
( போதி தர்மர் இதை தான் செய்தார் )

தமிழ்நாட்டில் பொய்யான ஒரு சந்தையிடுதல் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்டது.
இவன் அறிவற்றவன்.
பிற இன மக்கள் மட்டுமே அறிவாளி.
அவர்களை பின்பற்றுங்கள் என்று !

ஆனால் இன்றும்
பிற நாடுகளில் வாழும் மக்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.
தமிழர்கள் என்றவுடன்
அவர்கள் வானியலும் மருத்துமும் அறிந்தவர்கள் என்பதை உணர்ந்தே வைத்து இருக்கிறார்கள்.

இந்த வாணிகம் யார் கையில் உள்ளதோ
அவர் தான் ஆள முடியும்.
வாணிகம் பயில்வோம்.

படத்தில்
Symbol இருப்பது எகிப்தியர்கள் செய்த வாணிகம்.
மீன் உள்ளது பாண்டியர்கள் செய்த வாணிகம்.

(சீனா வின் yinyaun சின்னம்
அங்கும் பாண்டியர்கள் இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது. )

( பாண்டியர் என்ற பெயரில் எகிப்து மன்னர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிட தக்கது. )

இப்போ வெங்காயம் எகிப்தில் இருந்து வந்த கதை??

சியாமளா பிரசன்னா
24. 12.2019





நுகர்வை அதிகரிப்பது - I

புள்ளிங்கோவும் ஹோண்டா டியோவும் :
-----------------------------------------------------




இந்தியா பணப்புழக்க பிரச்னை மற்றும் தேவை குறைவு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால் இந்திய வளர்ச்சி பாதிக்க படுகிறது.
இதனை தடுக்க வேண்டும் எனில்
அதற்கு சில வழிகள் உள்ளன என்று assocham எனும் இந்தியா வணிகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு கூறி உள்ளது.

Assocham கூறுகின்ற வழிகள் :
1. G. S. T. உயர்த்த பட வேண்டும்
2. வருமான வரி விகிதம் உயர வேண்டும்
3. கடன் ஓட்டம் அதிகரிக்க வேண்டும்

இதை எல்லாம் விட முக்கியமானது

நுகர்வை உயர்த்த வழி வகை செய்ய வேண்டும்.

மற்றதெல்லாம் கூட பரவா இல்லை.
நுகர்வை எப்படி உயர்த்துவது.
ஒரு குழந்தை இரண்டு இட்லி உண்ணும் இடத்தில் 4இட்லி உண்ண முடியுமா?

முடியாது தானே !!!
ஆனால் முடியும் என்று நிரூபித்தால் அவன் தான் சிறந்த வணிகன்.




57000 ரூபாய் மதிப்புள்ள
ஹோண்டா டியோ வாகனம்
2018 ல் விற்பனை 38484
2019 ல் விற்பனை 42481
கிட்ட தட்ட 10% அதிகரித்து உள்ளது.

காரணம் மூன்று தான்
புள்ளிங்கோ
புள்ளிங்கோ
புள்ளிங்கோ

புள்ளிங்கோ என்றாலே அங்கு ஹோண்டா டியோ கண்டிப்பாக இருக்கும்
என்ற ட்ரெண்டிங்.

அப்படிதான் 4 இட்லி சாப்பிடுற குழந்தை தான் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கிய பால் சாப்பிடும் குழந்தை தான் அறிவாளியாக இருக்கும்.

இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைக்கு தான் உடனே வேலை கிடைக்கும்..

கைராசி, முகராசி போல ஆயிரத்தெட்டு ட்ரெண்டிங் இருக்கும் போது
கிடு கிடுன்னு
இந்தியா பணமதிப்பு உயரும் பாருங்க !!!

சியாமளா பிரசன்னா
23.12.2019

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...