Thursday 4 August 2016

திராவிடம் விதைத்த விதை





"நம் நாட்டுக்கு,சமுதாயத்துக்கு,இனத் திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல 

என்பதாலும் நமக்கு அது ஒரு பொதுக் குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு 

உணர்ச்சிச்சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர,கர்நாடக, கேரள 

நாட்டு மக்களல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள்.



பின்னவர்கள் என்ன எண்ணங்கொண்டு எதிர்த்தாலும் அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு 

இருந்ததால் அதை வலியுறுத்துவதில்  எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த 

பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவையில்லை என்றாலும்,-

திரா விடன்-என்ற சொல்லை விட்டுவிட்டுத்- தமிழன்-.என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் 

பிரிக்கலாமென்றா ல் அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து (நானும் 

தமிழன்தான்) என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.இந்த சங்கடத்திற்கு,தொல்லைக்கு 

என்ன செய்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்."


விடுதலை 11.10.1955
பெரியார் .




பாவம் பாரதி எனும் பிராமணன் அன்று உயிரோடு இல்லை.

உ.வே.சுவாமிநாத அய்யர் அன்று உயிரோடு இல்லை.

சுப்ரமணிய அய்யர் அன்று உயிரோடு இல்லை.

தமிழ் தமிழ் என்று தமிழுக்காக வாழ்ந்து , தமிழ்நாடு மட்டுமே வாழ்வென்று வாழ்ந்த யாரும் உயிரோடு இருந்த வரை திராவிட காட்சிகள் உருவாக வில்லை.

திராவிடர்களே தமிழர்கள் இல்லை எனும் பட்சத்தில் , பிராமணர்கள் தமிழரா இல்லையா என்ற ஆய்வு செய்து அதை வெளிப்படுத்தி இருக்கிறார் பெரியார்.

பிராமணர்கள் தன்னையும் தமிழன் என்று கூறி கொள்கிறார்கள் என்று கூறிய பெரியார் , திராவிட கட்சிகளின் தாய் கட்சியாகிய தென்னிந்தியா நல  கழகம் , தெலுங்கு பிராமணர்களுடைய கூட்டமைப்பு தான் என்பதை மறந்து போயிருப்பாரோ ?

அல்லது தெலுங்கு பிராமணர்கள் தான் தனி ஆட்சி அமைத்து விட்டார்களே ஆந்திராவில் , இனி தெலுங்கு மக்களே தமிழ்நாட்டையும் ஆள வேண்டும் என்று முடிவெடுத்து அதற்க்கு குறுக்கே இந்த தமிழ் பிராமணர்கள் வருவதை தடுக்க நினைத்தாரா ?

ராஜகோபாலாச்சாரிக்கும் , காமராஜருக்கும் தான் தெரியும் , அன்று இந்த திராவிடம் என்னவெல்லாம் சொல்லி தமிழத்தை ஆட்டுவிக்க நினைத்தது என்று !

ஆனால் காமராஜர் பதவி விலகாமல் இருந்திருக்கலாம் !

காமராஜர் , தன மந்திரி சபையில் எதிர்க்கட்சி காரர்களுக்கும் மந்திரி பதவி தராமல் இருந்திருக்கலாம் .

பக்தவச்சலம் , அண்ணாவோடு நெருங்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் எல்லாம் நடந்து விட்டது.

பிராமணனும் ஆண்டான் !

திராவிடமும் ஆண்டான்!

பலன் என்ன ?

எப்போதும் போல் தமிழ் மக்கள்

பிராமணர்கள் திராவிடர்களை குறை சொன்னாலும் ஏற்று கொண்டார்கள்.

திராவிடர்கள் பிராமணர்களை குறை சொன்னாலும் ஏற்று கொண்டார்கள்.

இறுதியில்

இவருவரும் மட்டுமே ஆளும் கட்சி , எதிர் கட்சி என்றாகி

சட்டசபையிலும்

நீங்கள் 100 க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை வைத்திருக்கிறீர்கள் என்று

ஸ்டாலின் கூறுகிறார்.

நீங்கள் 89 பொம்மைகளை வைத்திருக்கீர்கள் என்று அதிமுக அமைச்சர்

கூறுகிறார்.

இதிலே நாம் தமிழர் என்று கட்சி மக்களை குழப்பி கொண்டு , இருக்கிறது.

இதில் தமிழர்களின் நிலை தான் மிக கொடுமையாக உள்ளது.

திராவிடம் விதைத்த விதை திராவிடம் அறுவடை செய்யுமா ?


செங்கமல நாச்சியம்மன் கோவில் - தஞ்சாவூர்





தஞ்சாவூர் சிறப்புகளில் ஒன்று இந்த செங்கமல நாச்சியம்மன் கோவில் .

இது ஒரு காவல் தெய்வம் என்று தான் கூற வேண்டும் . இது யாருக்கும்

குலதெய்வம் அல்ல .


இந்த கோவிலை சுற்றி வாழும் மக்கள் யாரும் , இந்த மண்ணின்

பூர்வீக மக்கள் அல்ல.

இங்கு கல்வெட்டுக்கள் இல்லை .

பெரிதாக யாரும் இதன் பூர்வீகத்தை எழுதியதும் இல்லை.

உண்மையில் மேற்காணும்  செங்கமல நாச்சியம்மன் கோவில் புதிதாய்

கட்டப்பட்ட கோவில் . இங்கு கல்வெட்டுகள் எப்படி இருக்கும்.?


இந்த கோவில் செங்கலாட்சி அம்மன் என்றே அழைக்கப்படுகிறது  .

இதோடு சேர்த்து சியாமளா தேவி அம்மன் கோவிலும் உண்டு

இவர்கள் இருவரும் அக்கா தங்கை என்றே கூறுவர் .

இந்த இருவரும் காது கேளாதவர்கள் , வாய் பேச முடியா இரட்டையர்கள் 

என்பதை கொண்டே பொன்னியின் செல்வன் கதையிலும் , மந்தாகினி 

என்பவரையும் அவரது சகோதரி கதாபாத்திரத்தையும் 

அமைத்திருப்பார் எழுத்தாளர் கல்கி .

அந்த கதையில் வர்ணிப்பது , மதுராந்தக சோழனை ஒரு ஊமை பெண் 

வளர்கிறாள் . அதே சமயம் ராஜா ராஜா சோழனையும் சிங்கள பெண் 

ஒருத்தி காப்பாற்றுகிறாள்.

இந்த இருவரும் அக்கா தங்கை . அவர்கள்தான் சிங்களாட்சி மற்றும் 

சாமளா தேவி என்று மறைமுகமாக தெரிவிக்கிறது அந்த கதை . 

வேறு சில கதைகளும் இதற்க்கு சொல்கிறார்கள் .

அக்கா தங்கை இருவரும் சிங்கள மன்னன் ஒருவரையே திருமணம்

செய்து கொண்டு வாழ்ந்து வரும் பொழுது  , சோழ மன்னனை காண

சென்ற அவர்களது கணவன் மீண்டு வரவில்லை . ஆகையால் இந்த இரு

பெண்களும் இங்கேயே சமாதி ஆகினர் . என்றும்

தன கணவனுடன் வந்த சிங்கள  பெண்கள் இருவரும் , இந்த மண்ணில் 

வாழ்வதே தங்களுக்கு விருப்பம் என்று கூறி மீண்டும் இந்த மண்ணை 

விட்டு வரமாட்டோம் என்று கூறியதாகவும் , அதன் நிமித்தம் அவர்கள் 

விரும்பிய படியே உரல் சத்தமும் , உலக்கை சத்தமும் கேட்காத இடத்தில் 

அவர்களது கணவனோடு அவர்கள் வாழ்ந்து அங்கேயே சமாதி 

அடைந்தனர் என்றும்  கதைகள் உண்டு .

இந்த கதைகள் எப்படி இருந்தாலும் ,

இந்த கோவில் 20 ஏக்கர் பரப்பளவுள்ள காட்டிற்குள் இருந்ததால் இது காட்டு கோவில் என்றே அழைக்கப்படுகிறது .

தற்போது உள்ள குந்தவை நாச்சியார் கல்லூரி  தான் அந்த இடம் . 1960 களில் இங்கு ஒரு கல்லூரி எழுப்ப வேண்டும் என்று அரசு முடிவு எடுத்ததன் விளைவாக இந்த சாமதி கோவில் ஒரு ஓரமாக ஒதுங்கிவிட்டது . அது வரையிலும் எடுத்து கட்டவேண்டிய அவசியம் இல்லாத சூழலில் , அதன் பின்னர் சிறுசிறு வேலைகள் பார்த்து அங்கு நிறைய வேல்கள் எல்லாம் நட்டு வைக்கப்பட்டுள்ளது  .

அந்த இடத்திலும் , கல்லூரி நிர்வாகம் புதிய கட்டிடம் எழுப்ப தீர்மானித்தால் , அதற்க்கு எதிராக வழக்கு தொடர்ந்து 2000 ம் வது  ஆண்டு தீர்ப்பு கொடுத்தது தஞ்சை நீதி மன்றம். இப்போது இருக்கும் கோவில் இடத்தை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் , மேலும் விஸ்தரிக்கவோ , பெரிது படுத்தவோ கூடாது எனவும்  ஆணை பிறப்பித்தது .

இந்த கோவில்தான் காட்டு கோவில் . இன்றும் இங்கு தான் இரவு பூஜைகள் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதம் 2 ம் செவ்வாய் கிழமை நடக்கிறது .
5 நாள் திருவிழாவாக இந்த கோவில் விழா கொண்டாடப்படுகிறது .

இந்த கோவிலில் வழிபாடு நடத்துபவர்கள் , இன்று வடக்கு பூக்கார தெரு மற்றும் தெற்கு பூக்கார தெரு என்று வழங்கப்படும் இடத்தில் வாழும் அம்பலக்கார்கள் .
இந்த பகுதி முன்பு அம்பலகார தெரு என்றே வழங்கப்பட்டது .

அந்த தெருவிலும் ஒரு கோவில் உள்ளது . அது தான் பிறந்த இடம் என்றும் , இந்த காட்டு கோவில் கணவனோடு வாழ வந்த இடம் என்றும் கூறுவர் .
அந்த கோவிலும் 1960 வரையிலும் மிகவும் பழைய நிலையில் இருந்து அப்போது M .L .A வாக இருந்த திரு பரிசுத்த நாடார் அவர்களால் , மேற்கூரை அமைக்க பட்ட , தற்போது தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதா அவர்களின் உதவியோடு கோவிலாக கட்டப்பட்டு கொண்டு இருக்கிறது. துர்முகி  ஆண்டு ஐப்பசி மாதம் 1 ம் தேதி  அன்று
 குபாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

மேலும் இந்த அம்பலகார்களின் குலதெய்வம் கருப்பு சாமியின் கோவில்தான் அந்த காடு . மிகப்பெரிய ஆலமரத்தின் கீழ் இருந்த கருப்ப சாமி கோவில்தான் , இன்றைய E .B இடம் . இப்போது இங்கு மாலை வேளைகளில் , வாகன ஓட்டும்  பயிற்சிகளும் , கிரிக்கெட் விளையாட்டும் நடக்கிறது . ஆனால் இன்றும் ஆடி மாதம் 3 வது வெள்ளிக்கிழமை இங்கு பூஜை நடைபெறுகிறது.

இங்குள்ள கோவில்கள் , பெரிதாக வெளியில் தெரியாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
1. ஜாதி பிரச்னை
2. கல்வி அறிவில்லா மக்கள் ( தற்போது இந்த நிலை மாறி உள்ளது )
3. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள்
4. ஆங்கிலேயர்கள் காலத்தில் , உணவுக்கு வழி இன்றி , இந்த காட்டில் மறைந்து பலரும் , இவ்வழியாக செல்லும் வண்டிகளில் திருடும் வழக்கம் கொண்டிருந்தனர் என்றும் கூறுவர் .
5. இந்த கோவிலில் வழிபடும் மக்கள் , முற்காலத்தில் போர்வீர்களாக இருந்தவர்கள் .
( இவர்களை அடிப்படையாக கொண்டே பூக்கார தெருவிற்கு அருகில் இருப்பது லாயம் என்று பெயர் பெற்றது )
மன்னராட்சி முடிந்து , வெள்ளையர்கள் ஆள தொடங்கிய போது , அவர்கள் ஒடுக்க நினைத்த ஒரு இனம் போர்வீரர்கள் இனம் .
எங்கெல்லாம் , யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களை எல்லாம் குற்றவாளி ஆக்கினார்.
மேலும் மேலும் குற்றவாளி என்று பெயர் சூட்டப்பட்டு ஒரு கட்டத்தில் இந்த கோவில் , மற்றும் இதனை வழிபடும் மக்களும்  ஒதுக்கப்பட்டனர் .
6. இங்கிருந்து மண்ணெடுத்து , புதிதாக ஒரு கோவில் கட்டப்பட்டது. அந்த கோவிலை மட்டும் தான் அனைத்து மக்களும் வழிபடுகின்றனர்.
(இந்த புதிய கோவிலுக்கு வண்டிக்கார தெரு கோவில் என்று பெயர். அங்கிருக்கும் மக்கள் தான் இதனை ஆரம்ப காலங்களில்  சிரத்தையோடு விழா எடுத்து வழிபாடு நடத்தினர் .)
7. இங்கு சிலைகள் கிடையாது.
8. இது சமாதி கோவில்.
9.ஒரு காலத்தில் பாம்புகள் அதிகம் இருந்தது . இன்று இல்லை .
10. இரவு பூஜை பலராலும் பயமுறுத்தப்பட்டது .
11. இங்கு அர்ச்சகர்கள் கிடையாது.
12. கல்லூரி நிர்வாகம் , பெண்கள்  கல்லூரி என்பதால் , கொஞ்சம் நெருக்கடி கொடுக்கிறது .


எது எப்படி இருந்தாலும் , ஒரு கோவிலோ , ஒரு தெய்வமோ அதனை வழிபடும் மக்களின் ஜாதி , பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை நிலை இவற்றை பொறுத்தே , பெருமைக்கு உட்படுகிறது. அதற்க்கு இந்த கோவிலும் விதி விலக்கு அல்ல.

( இப்போது இந்த கோவிலை அதிகம் வழிபடுவது, குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகளே என்பது குறிப்பிடத்தக்கது )

சிங்கள நாட்சி என்பவள் அக்கா .
இவள் சாந்த சொரூபிணி .
இவள்தான் மதுராந்தகனை வளர்ந்தவள் .
புது ஆற்று ஓரம் மிகப்பெரும் பூந்தோட்டம் அமைத்து அங்கு வாழ்ந்து வந்தாள் .
இவள் ஒரு மருத்துவச்சி.
இவள் தான் செங்கலாட்சி என்று அழைக்கப்பட்டு செங்கமல நாட்சி என்று பெயர்பெற்றாள் .

சிங்கள தேவி என்பவள் தங்கை .
மிகுந்த கோவக்காரி .
அனால் யாருக்கும் துன்பம் தராதவள்.
இவள் தான் அருள்மொழி தேவனை காப்பாற்றியவள் .
இவள் தான் சியாமளா தேவி என்று பெயர் பெற்றாள் .

புது ஆற்று கரையோர மக்கள் இன்றும் செங்கலாட்சி அம்மனை மட்டுமே பிரதானமாக கொண்டு வழிபடுகிறார்கள்.

அரண்மனை சுற்றி உள்ள இடங்களில் வாழும் மக்கள் சியாமளா தேவி அம்மனை மட்டுமே பிரதானமாக கொண்டு வழிபடுகிறார்கள்.

இவ்விரு இடங்களிலும் தனி தனியே இவர்களுக்கு கோவில்கள் இருப்பதை தஞ்சையில் காணலாம்.


Monday 1 August 2016

சரபம் எனும் பறவை



சரபம் என்பது ஒரு வித்தியாசமான பறவை. தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான  உதயண குமார காவியாத்திலும், அதே கதையை கொண்ட பெருங்கதை என்னும் நூலிலும் இந்த பறவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது .

உதயணன் என்பவனின் தாய் கரு உற்றிருக்கும் போது , அவளை தூக்கி கொண்டு சென்றது ஒரு பறவை . அது காட்டிற்குள் சென்று , அவளை கீழே கிடத்தி உண்ண எத்தனிக்கும் போது , அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை அறிந்து ,அவளை அப்படியே போட்டு விட்டு பறந்து விடுகிறது. அங்கு தான் உதயணன் பிறக்கிறான் .

ஒரு பெண்ணை அதுவும் கருவுற்ற பெண்ணை தூக்கும் அளவிற்கு வலிமை கொண்ட இந்த பறவை தான் சரபம் ஆகும் .


இதற்க்கு 2 முகங்கள் , 8 கால்கள், 32 கைகள் 
என்று குறிப்பிடப்படுகிறது . இதிலே 4 கால்கள் பறக்கும் . 4 கால்கள் நடக்கும் வகையில் இருப்பதாகவும் , ஒரு முகம் சிங்கத்தை போலவும் , மற்றொரு முகம் யானை  போலவும் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது . 

மற்றும் சில கதைகளில் யாழி போன்ற உருவம் எனவும், 8 கால்கள் கொண்ட மான் உருவம் எனவும் குறிப்பிடப்படுகிறது .

இது சிங்கத்தையும் , யானையையும் கூட கொல்லும் வலிமை உள்ளது . இதனை தமிழ் இலக்கியங்களில் சிம்புள் என குறிப்பிடுகிறார்கள் . அதாவது 8 கால் பறவை . இதை தமிழக, கர்நாடக  மற்றும் இலங்கை தமிழ் கோவில்களின் சிற்பங்களில் காணலாம் .

சரப புராணம் 

வட மொழி நூல்களில் இதே சரபம் சார்ந்த குறிப்புகளும் , அதற்கென புராணமும் உள்ளது .

அதாவது , இரணியனை கொல்வதற்காக அவதாரம் எடுத்தார் நரசிம்மர். அந்த அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய பிறகும் , பிரகலாதனாலும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் , நரசிம்மர் மேலும் மேலும் எல்லோரையும் கொன்று குவித்து கொண்டிருக்கையில் , அனைவரும் சிவபெருமானிடம் வேண்டி கொண்டதன் பேரில் , சிவன் சரபமாக மாறி , நரசிம்மரை கொல்கிறார் . அப்போது உருவானதுதான் இந்த சரபம் எனும்  பறவை என்று
வட மொழி கதைகள் கூறுகின்றன.


சரபேஸ்வர மூர்த்தி.jpg



சரபேஸ்வரர்


இதே சமயத்தில் , அப்போது உருவான சிவனது உருவமான சரபேஸ்வரரை எப்போது எண்ணி வழிபட்டாலும் , உடல் வியாதிகள் தீரும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது . குழந்தை பேறு பெறுவர் . திருமண தடைகள் அகலும். கடன் தொல்லைகள் முற்றிலும் தீரும் .

காஞ்சிபுரம் அருகில் உள்ள லிங்கபுரத்தில் சரபேஸ்வரர் லிங்க வடிவில் உள்ளார்.

தஞ்சை மாவட்டம் , திருபுவனத்தில் கம்பகேஸ்வரர் ஆலயத்தில் சரபேஸ்வரர் சன்னதியும் உள்ளது . இந்த கோவில் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது . கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளை தொட இருக்கிறது இக்கோவில்.


உத்தர காமிக ஆகமம் , இந்த சரபேஸ்வரரை ஆகாச பைரவர் என்று கூறுகிறது . மேலும் இதன் கால்களில் ஒன்று அனைத்திருப்பது  துர்க்கை அம்மனை என்றும் , இந்த வடிவத்தின் சக்தி தேவி அரிப்ரணாசினி என்றும் கூறுகிறது .

பிரத்யங்கரா தேவி எனும் தெய்வ வடிவினை கூட சரபேஸ்வரர் வடிவம் என்ற கூறுவோரும் உளர் .

கர்நாடக அரசு சின்னம் :




இது கர்நாடக அரசின் சின்னம்.  மஞ்சள் நிறதில் சிங்கத்தின் பிடரியை கொண்ட யானை யாக நிற்பது சரபா .



இதே சின்னத்தையே மைசூர் பல்கலைக்கழகமும் பெற்றுள்ளது .

ஆக 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சரபம் என்னும் பறவை பற்றியும் , சரபேஸ்வரர் பற்றியும் தமிழ் மக்கள்  அதிகம் தெரிந்து வைத்திருந்தனர் .

அதனாலேயே இன்றும் கர்நாடக அரசின் சின்னமாக சரபம் உள்ளது . 

உண்மையில் இப்படி ஒரு பறவை இருந்ததா இல்லையா என்பதை விட , 2000 ஆண்டுகளாக இப்படி ஒரு பறவை குறித்து நம்மிடம் விதைக்கப்பட்டிருக்கிறது என்பது வியப்புக்குரியது.

மேலும் 2 தலை 
8 கால்கள் 
32 கைகள் 
இறக்கைகள் 
என்று எண்ணிப்பார்க்கவே பிரமாண்டமாக உள்ளது . இது குறித்து தமிழனத்தின் அறிவும் , 
( ஆங்கில படங்களில் வரும் கற்பனைக்கும் விஞ்சியது )
பெருமைக்குரியதாகவே உள்ளது .


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...