Thursday 12 March 2020

ஒரு கோடி பரிசு விழுமா ?

நீங்க gst கட்டி ஒரு பொருளை வாங்கி இருந்தால் அதற்கு ரசீது கேட்டு வாங்கி, அந்த ரசீதை gst app ல் உங்க பெயரோடு அனுப்பி வைத்தால், லாட்டரி மூலம் உங்க ரசீது தேர்ந்தெடுக்க பட்டால் உங்களுக்கு 10லட்சம் முதல் 1கோடி பரிசாம் !
இந்த சேட்டு காரங்க gst சரியா கட்ட மாட்டேங்குறாங்க போல,
அவனுங்கள கண்டுபிடிக்க நமக்கு பரிசாம் !
ஒரு வேளை அப்படி கண்டு பிடித்தால் கருப்பு பணம் ஒழியும்.
நாட்டின் பொருளாதாரம் உயரும் அப்படின்னு கூட நாம நினைக்கலாம்.
அதெல்லாம் எதுவும் நடக்காது. அவங்களுக்கு சேர பணம் போய் சேரும் அவ்வளவு தான் !
அப்போ நமக்கு என்ன லாபம்?
நாம சேட்டு காரங்கள காட்டி கொடுக்கலாம். ஆனால் விரட்டி விட முடியாது.
இதில் எந்த மாநிலத்தில் முதலில் பரிசு விழுதோ, அங்க தான் பிரச்சனை இருக்குனு அர்த்தம்.. அது சரியான பிறகு யாருக்கும் பரிசு விழாது. ஆனால் நாம் எப்போதும் போல bill அனுப்ப பழகிவிடுவோம்.
எப்போதும் வியாபாரி வியாபாரி தான் !
நாம அவன் சொல்லும் பாதையில் போகும்
வழி போக்கர்கள் தான் !


அரசியலா ? வணிகமா ?

நடப்பது திராவிடம் vs தமிழ் தேசியம் அல்ல.
பார்சி vs நாடார் வணிக சண்டை !
இதில் நாடார் எதிர்ப்பு வணிக மக்கள் பார்சியுடன் சேர்ந்து உள்ளனர்.
100வருட ஒற்றுமை 1995 உலக மயமாக்கல் ஒப்பந்தத்தால் கலைந்தது.
நேரடியாக முதலீட்டில் பார்சி மக்கள் இறங்கியதால் வந்த சண்டை !எப்போதுமே நாடார்களிடம் தான் ஒப்படைப்பார்கள். இப்போது அப்படி இல்லை.
பெரும்பாலும் பள்ளிகள், மருத்துவ மனைகள், தொழிசாலைகள், வணிக அமைப்புகள் எல்லாவற்றையும் நாடார் மக்களிடம் தான் ஒப்படைப்பார்கள். இப்போது நேரடியாக அவர்களே பள்ளிகளை, மருத்துவ மனைகளை தொடங்கி நடத்தி வருகிறார்கள் !
அதனால் திடீரென எதிர்ப்பு உருவானது !
இதிலும் எதிர்க்க வேண்டாம் என்று எண்ணுகின்ற நாடார் மக்கள், அந்த பார்சி மக்களுடன் இணைந்து பிஜேபி யிலும் உள்ளனர். அவர்கள் தான் புதிதாக ஹிந்து வணிகர் சங்கம் ஆரம்பித்து உள்ளனர்.
ஏனையோர் கூட முழுமையாக எதிர்க்க இயலாது. எனவே, இடஒதுக்கீடு, யார் எந்தெந்த இடத்தில் தொழில், வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்ட உடன்
கூட்டணி அமையும் !

ஆக மொத்தம் நடப்பது எல்லாம்
வணிகத்தை கை கொள்ளும் சண்டை தானே அல்லாது,
மக்களுக்கானது என்று எதுவும் இல்லை.
நாம் வணிகம் காட்டிய வழியில் பின்னால் செல்லும் வழி போக்கர்கள் தான் !


உலகில் மொத்த மக்கள் தொகை
கிட்ட தட்ட 750 கோடி
இதில்
எயிட்ஸ் நோயாளி மட்டும்
3கோடி பேரு
காசநோய் மக்கள் மட்டும்
1கோடியே 50 லட்சம் பேரு.
உடலில் குறைபாடு கொண்டு பிறப்பவர்கள் 6 கோடி மக்கள் !
ஆனால்
இம்புட்டு காண்டு சுரத்துக்கு இவனுங்க தர்ற விளம்பரம் இருக்கே !
5ரூபாய் எலுமிச்சை பழம் தான் ஓரே மருந்து, எல்லா வைரசுக்கும் !
நம்ம ஊரு மாரியம்மன் கோவில் சொல்லுது !
கோவிலுக்குள் எவனுமே வர கூடாது என்று கொரோன கூறுகிறதாம்.
திராவிடம் பிதற்றுகிறது.
இதை தமிழன் பகிர்ந்து கொண்டு இருக்கிறான். எனில் கோவில்கள் குறித்து நமக்கான புரிதல் திராவிடம் விதைத்ததாக மட்டுமே உள்ளது.
கோவில் என்றால் கட்டிட கலை பேசும் !
மன்னர்களின் வரலாறு பேசும் !
பிறகு
கோவில்கள் வங்கியாக இருந்தன.
பிறகு
தீண்டாமை பேசியது. இப்படி தான் கோவில் பற்றி கூற பட்டுள்ளது.
ஆனால்
மாரியம்மன் கோவிலுக்கு செல்லுங்கள் !
அங்கு அம்மை என்ற வைரஸ் நோயுள்ளோரை காணலாம்.
வெளி நாடுகள் அஞ்சி நடுங்கும் அம்மை தான் !
அசாதாரணமாக நம் மக்கள் கோவிலில் உருண்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு வேளை,
அங்கு சாமி கும்பிட வந்த மக்களுக்கெல்லம் பரவி விட்டதா??
இல்லை, இல்லவே இல்லை.
அம்மை சரியாகி தான் வீடு திரும்புகிறார்கள்.
கோவிலில் உப்பு கொட்டப்படும்.
கோவிலில் எலுமிச்சை மாலை அணிவிக்க படும்.
கோவிலில் அரிசி, நாட்டு சர்க்கரை, நெய் கலந்து விளக்கு ஏற்ற படும்.
மலர்கள் சுற்று சூழல் மாசை தடுக்கும்.
இவ்வளவு தாங்க
வைரஸ் க்கு மருந்து.
கோவில்கள் பற்றிய புரிதலை மாற்றி படியுங்கள் !
பிறகு புரியும் !
ஏன் பலரை உள்ளே விட வில்லை என்று !
ICU விற்குள் அனைவரும் நுழைய கூடாது.
செருப்பு போட்டு கொண்டு
மருத்துவ மனைக்குள் செல்ல கூடாது.
மருந்து பொருள்களை எல்லோரும் தொட கூடாது.


12.3.2020

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...