Thursday 31 March 2016

பெண்ணை இழிவுபடுத்தும் வாஸ்து !







இந்த வாஸ்து முறைப்படி மதுவும் , மாதுவும் , மாமிசமும் ஒரே அடிப்படையில் வருகிறது.

இதுல முக்கியமான விஷயம் என்னவென்றால் இது மூன்றையும் யார் இலவசமாக கொடுத்தாலும் வாங்கி கொள்ள வேண்டுமாம் .

ஒரு பெண்ணை இதை காட்டிலும் இழிவு படுத்த முடியாது . அவள் என்ன மதுவை போல் , மாமிசத்தை போல் உயிர் அற்ற பொருளா ?

தோஷம் அற்றவள் என்று பெண்ணை உயர்த்துவது போல் , கூறி , இலவச பொருள் ஆக்கி இருக்கிறது வாஸ்து !

வாஸ்து படி
மது பழக்கம் வளரட்டும் .
இலவசமாய் கொடுத்தால் யாரவது வேண்டாம்னு சொல்லுவாங்களா ?

மாதுவும் இலவசமாய் எத்தனை கொடுத்தா லும் வாங்கி கொள்ளவேண்டும் . 
ஆனா யார் தருவா ? தந்தாலும் யார் எல்லா தொல்லையையும் தாங்குவது ?
ஒரு நாளைக்கு மட்டும் என்பது போன்ற கணக்கில் கூறுகிறார் போலும் !

வாஸ்து படி
மாமிசம் உண்பதும் வளரட்டும் . இந்த இடத்துல தான் அடிதடியே வளருது .



இது மூனும் தான் செல்வ வளத்தையே பெருக்குமாம் .

இப்புடியே போன எல்லா செல்வத்தையும் இழந்து , நடு ரோட்டுல நிக்க வேண்டியதுதான் !

ம்ம்ம்.... ஆக மொத்தம் வாஸ்து எல்லா கெட்ட பழக்கத்தையும் வளர்கிறது .
இதுல இது செல்வம் பேருக்கும் வாஸ்துவாம் !





மாலை நேர சிற்றுண்டி வகைகள்

டாக்டர் சிவராமன் அவர்கள் தனது ஆறாம் திணை புத்தகத்தில் மாலை நேர சிற்றுண்டி வகைகளை  வகைபடுத்தி இருக்கிறார் .

உடலுக்கு நல்ல ஆரோக்கியமான , சுவையான உணவுகளை அடுக்கி இருக்கிறார் !

பழ  அப்பம் , தேங்காய் பால் அப்பம் , இளநீர் அப்பம்


appam க்கான பட முடிவு
அரிசி பணியாரம்

சோள பணியாரம் :





செய்முறை : அரிசி பணியரத்தின் அதே செய்முறை . அரிசிக்கு பதில் சோளம் பயன்படுத்த வேண்டும் . மக்கா சோளம் அல்ல. இது காக்கா சோளம் . 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து 7 மணி நேரம் புளிக்க வைத்து காரம் கலந்து , ஊற்றி எடுத்தால் சோள பணியாரம் தயார் .





ராகி அடை




உக்களி
செய்முறை : பாசி பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து , கொஞ்சம் நீர் விட்டு அரைத்து , அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் , கொஞ்சம் உப்பு கலந்து இட்லி மாதிரி ஊற்றி எடுத்து , அதை நன்கு உடைத்து அதில் ஏலக்காய் , சர்க்கரை , மற்றும் முந்திரி கலந்தால் உக்களி தயார் .

பாசி பருப்பு அல்வா:



இது தாங்க அசோக அல்வா .



கும்மாயம்





 செய்முறை : 1  கப் பாசி பருப்பை நல்ல வறுத்து எடுத்து , அதில் கொஞ்சம் உளுந்து , கொஞ்சம் அரசி இதையும் வறுத்து எடுத்து நல்ல பொடியாக அரைத்து எடுத்து வைக்க வேண்டும் . பிறகு வெல்ல பாகு காய்ச்சி அதில் இந்த பொடியை கொட்டி , கிளறி எடுத்தால் கும்மாயம் தயார் .


சீடை




மோதகம்



கொழுக்கட்டை வகைகள் :

செய்முறை : பச்சரிசி மாவில் , கடலைபருப்பு கலந்த வெல்லம்  , ஏலக்காய் சேர்த்து செய்வது . வெவ்வேறு இலைகளில் வைத்து செய்யப்படும் போது , வெவ்வேறு நன்மைகள் நமக்கு உண்டு . குறிப்பாக பெண்களின் கருப்பை கோளாறுகள் அகலும் .கடலை பருப்புக்கு பதில் பேரிசை , எள் ,தேங்காய் ஆகியன சேர்த்து கொள்ளலாம் .


சாமை கொழுக்கட்டை : இதே முறையை சாமை அரிசி பயன்படுத்தினால் அது சாமை கொழுக்கட்டை .






பனை இலை கொழுக்கட்டை



வாழை இலை கொழுக்கட்டை



பூவரசு இல்லை கொழுக்கட்டை




நீர் கொழுக்கட்டை


செய்முறை : சிகப்பரிசி மாவில் கொழுக்கட்டை பிடித்து ( பூரணம் இல்லாமல் ) வேகவைத்தால் நீர் கொழுக்கட்டை .


பால் கொழுக்கட்டை





செய்முறை : இட்லி அரிசி ஊறவைத்து அரைத்து நல்லெண்ணையில் வதக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் நீரில் வேகவைத்து , அப்படியே அதில் வெல்லம் , ஏலக்காய் , தேங்காய் பால் கலந்தால் , அப்படி ஒரு சுவையாக இருக்கும் .


இன்னும் பல வகைகளை , கூறுகிறார் டாக்டர் சிவராமன் அவர்கள் !
இவை எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் , கடலை மிட்டாய் , எள்ளுரண்டை இவற்றையாவது சாப்பிட பரிந்துரைக்கிறார் டாக்டர் சிவராமன் .
இவையெல்லாம் சிற்றுண்டிகள் அல்ல . உடலை வலுவாக்கும் பேரு பெற்ற உணவுகள் .

காதலர்கள் இந்த இடத்துக்கெல்லாம் வரகூடதாம் !


senji fort க்கான பட முடிவு

செஞ்சி கோட்டை என்று வழங்கப்படும் செங்கிரி மலை .


செஞ்சி கோட்டை காதலர்கள் செல்ல கூடாத இடமாம் .

ராஜா தேசிஙகின்  நண்பன் முஹம்மத் கான் .
அவனும் , அவனது  காதலி ஆயிசாவும்  ஆசை ஆசையாய் காதலித்து , அது திருமணத்தில் முடிவதற்கு முன்னதாகவே இருவரும் ஆற்காடு நவாப்பால் கொலை செய்யப்பட்டு இறக்க நேரிட்டதால் ஆயிசா பேகம்  சாபம் இட்டாளாம் . நான் வாழாத இடத்தில் , வேறு எவரும் வாழ கூடாது என்று !

எனவே காதலர்கள் யாரேனும் வந்து விட்டால் , அவர்கள் பிரிந்து போக கடவது என்றும் , இங்கிருந்து ஒரு பொருளும் பிறர் அனுபவிக்க கூடாது என்றும்  கூறிவிட்டாளாம் .

உண்மையில் அந்த பெண் , எந்த சாபமும் கொடுக்க வில்லை . ஆனால்
இந்த வதந்தி தான் இன்னும் செஞ்சி கோட்டையை முழுமையாக வைத்திருக்க உதவி இருக்கிறது .





தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்

தஞ்சை பெரிய கோவில் காதலர்கள் , அரசியல்வாதிகள் என்ற வேறுபாடெல்லாம் பார்க்காது . யாராக இருந்தாலும் , தண்டிக்கும் . அரசியல்வாதியாக இருந்தால் இறந்து போவர் .
காதலர்களாக இருந்தால் பிரிந்து விடுவர்.
ஒரு
சினிமா எடுத்தால் கூட , படம் தோல்வி அடையும் .

இது ஒரு எல்லையில்லாமல் போய் கொண்டிருக்கிறது தஞ்சை பெரியகோவில் சார்ந்த வதந்திகள் ! .
இன்று மூடநம்பிக்கையை முற்றிலும் வெறுக்கும் எல்லா  திராவிட கட்சிகளும் கூட இந்த நம்பிக்கையை சுமந்து கொண்டுதான் இருக்கின்றன .

ஆனால் இந்த காதலர்கள் மட்டும் தற்காலத்தில் கொஞ்சம் அதிகமாக இக்கோவிலுக்குள் சுற்றி வருகிறார்கள் . இவர்கள் மூடநம்பிக்கையை உடைத்தெறிந்த பகுத்தறிவு வாதிகள் என்று எண்ணினால் நாம் முட்டாள் ஆகி விடுவோம் .

ரொம்ப தெளிவா சொல்றான் ,
எங்களுக்கு லவ் மட்டும்தான் பிடிச்சிருக்கு !.
கல்யாணம் வரைக்கும் இது போக கூடாது .
அதுக்காகத்தான் இந்த கோவிலையும் எங்களுக்கு பிடிச்சிருக்கு என்று !
ஆனா இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் , எந்த எதிர்ப்பும் இல்லாம சீக்கிரமா கல்யாணம் ஆகிடுதாம் !



நந்தி ஹில்ஸ்

கர்நாடக மாநிலத்தின் சிக்பெள்ளபூர் மாவட்டத்தில் உள்ளது . இது கடல் மட்டத்தில் இருந்து 4851 feet உயரத்தில் உள்ளது . இங்குள்ள இறைவனின் பெயர்  போகன நந்தீஸ்வரர் ,  நந்தியின் பெயர் நெல்லிக்காய் பசவண் நந்தி .
இயற்கை எழில் கொஞ்சும் இடம் .
விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ளது .

ஆனால் இது ஒரு கெட்ட பெயரை சுமந்து கொண்டு இருக்கிறது . இங்கு காதலர்கள் மட்டுமல்ல , திருமணம் ஆனவர்கள் கூட இங்கு வந்தால் பிரிந்து விடுவார்களாம் . காரணம் கூறுகிறார்கள் இங்குள்ள மக்கள் .


திப்பு சுல்தான் அரண்மனை

திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் , அவரால் சிறை பிடிக்கப்பட்ட மன்னன் முதல் கடைசி வீரன் வரை , இங்கு கொண்டு வந்து தான் கொல்லபடுவார்களாம் . எவர் தவறிளைதாலும் அவரது தலை இங்கு தான்
வெட்ட படுமாம் . அதனால் எப்போதும் ரத்த வாடையுடன் தான் , இந்த இடம் இருந்ததாம் .

அதனால் அவர்களின் ஆவிகலெல்லாம் இங்கு அலைகிறது என்றும் , இங்கு காதலர்களோ , புதுமண தம்பதிகளோ வரகூடாது என்றும் , இங்குள்ள் மக்கள் கூறுகிறார்கள் . அப்படி வந்தால் அவர்கள் பிரிந்து விடுவார்களாம் .


உண்மையில் , இங்கு மக்கள்  கொல்லப்பட்டது உண்மைதான் என்றாலும் ,
இந்த மலை திப்பு சுல்தான் காலத்தில் , சிவ பக்தர்களால் மிகவும் விரும்பப்பட்ட மலை . அதை விரும்பாத சுல்தான் சார்பாளர்கள் இங்கு ஆவிகள் இருப்பதாக வதந்திகள் பரப்பி இருக்கிறார்கள் .



இந்த நந்தி மலை மிகவும் ரம்மியமான , அழகான மலை . சுற்றுலா செல்ல ஏற்ற இடமும் கூட !

Wednesday 30 March 2016

தமிழ்நாடு தமிழனின் ஆட்சியின் கீழ் என்பது குற்றமா ?

2016 தேர்தலை எதிர்நோக்கும் இந்நேரத்தில் , ஒரு முக்கிய கருத்து மையபடுத்த படுகிறது .

அது தாங்க

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளணுமா ?

இந்த கேள்விக்கு ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் .

இந்த கேள்வி மிகவும் தவறானது . இன வெறியை தூண்ட கூடியது என்பது தொடங்கி , இதனால் வரும் பின்விளைவுகள் வரை பேசி , இறுதியில் பயமுறுத்தலோடு முடிகிறது . பால் தாகரே போல் ஆகபோகிறது என்று .

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பற்றி பல கருத்துகளும் , கேலி சித்திரங்களும் உண்டு . அது நமக்கு தேவை இல்லை . இது சீமானுக்காக எழுதபடுவதும் அல்ல . எல்லா கட்சிகளும் , மற்றோருகட்சியை எதோ ஒரு வகையில் கேலி செய்து கொண்டு தான் இருகின்றன .

அது இப்போது பிரச்னை அல்ல .

ஆனால் ஏன தமிழ்நாட்டில் ஒரு தமிழனின் ஆட்சி வர கூடாது . அதில் என்ன தவறு இருக்கிறது .

இது குறித்து எதிப்பு தெரிவிப்போர் , மற்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆரூடம் கூறுவோர் அனைவருமே தெலுங்கர்கள்  மற்றும் கன்னடர்கள் .

தமிழ் நாட்டில் நாங்கள் வந்து குடியேறி 500 ஆண்டுகள் ஆகிவிட்டது . என் மொழி தமிழால் தொலைந்து விட்டது . என் உறவுகள் , என் பூர்வீக விவரங்கள் அனைத்தும் , இந்த தமிழ்நாட்டால் இழந்து விட்டோம் . அப்படி எனில் எனக்கு இங்கு ஆட்சி புரிய எல்லா அதிகாரமும் உண்டு  . இதுதான் இவர்களின் வாதம் .

சரிதான் . 

ஏன் நீங்கள் உங்கள் மொழியை இழந்தீர்கள் . தமிழ் மீது கொண்ட காதலா ?
ஏன் உங்கள் உறவுகளை இழந்தீர்கள் . தமிழ்நாட்டில் வாழ்வது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்று அன்போடும் , ஆசையோடும் வந்ததாலா ?

நாயக்கர்கள் ஆட்சியில் மிகுந்த செல்வா செழிப்போடும் , மரியோதையோடும் நீங்கள் வாழ்வதற்காக , இங்கு வந்தீர்கள் .

அதே போல் தமிழர்களும் தான் பிற நாடுகளில் வாழ்கிறார்கள் என்று கூறாதீர்கள்

எந்த தமிழனும் ,
எந்த நாட்டிலும் ,
இது எங்கள் அரசனின் ஆட்சி ,
இதில் எங்களுக்கு மரியாதை உண்டு
என்று போகவில்லை .

ஆங்கிலேயன் அடிமையாக அழைத்து சென்றான் . பல உயிர்களை பலி கொடுத்து வாழ்ந்து வருகிறான் .

நீங்கள் தமிழ்நாட்டிற்குள் வந்த நோக்கத்தியும் , தமிழர்கள் இங்கிருந்து சென்று வேறு நாடுகளில் வாழ்கின்ற காரணத்தையும் ஒப்பிடாதீர்கள் .

உங்கள் வாழ்க்கை பட்டு விரிப்பில் நிகழ்ந்தது .
தமிழர்கள் வாழ்க்கை முள் மீது நிகழ்ந்தது .

தமிழ்நாட்டில் உள்ள எந்த கோவிலிலாவது உங்கள் கை விரல்கள்கள் பதிந்துருக்குமா ? உங்கள் மீது சேறு விழுந்திருக்குமா ?
ஆனால் மலேசியாவிர்க்கும் , ஆஸ்திறேலியாவிர்க்கும் அழைத்து செல்ல பட்ட மக்கள் , பாலங்கள் கட்டுவதற்காக அழைத்து செல்ல பட்டனர். அதில் எத்தனையோ உயிர்கள் பறிபோய் இருக்கின்றன .

நீங்கள் தமிழ்நாட்டில் வந்து வாழ்வதற்கும் , தமிழர்கள் பிற நாடுகளில் வாழ்வதற்கும் ஆயிரம் வித்யாசம் உள்ளது .

பிறகு நாங்கள் எங்கள் மொழியை இழந்து விட்டோம் . என்பது . அப்பட்டமான பொய். 
ஒன்று நீங்கள் , உங்களை தமிழன் போலவே காட்டி கொள்ள முயற்சி எடுத்தீர்கள் .
இரண்டு , வீட்டிற்குள் இப்போதும் தெலுங்கு ஒலித்து கொண்டுதான் இருக்கிறது .
மூன்று  தமிழ் பெண்களை மணந்து கொண்டு தமிழனாய் வாழ்வது போல் நடித்து கொண்டு இருக்கிறீர்கள் .

ஒருநாளும் , உங்களில் ஒருவருக்கும் தமிழ் மீது அன்போ , அக்கறையோ இருந்ததே இல்லை .

அதெல்லாம் போகட்டும் ,

ஏன்

 தமிழர்களுக்கு ஆளும் திறன் இல்லை என்றும்
அப்படியே ஆண்டாலும் ஜாதியால் அடித்து கொள்வார்கள் என்றும்
மத பிரச்னை வரும் என்றும் அவதூறு பேசவும் ,
நாம் அனைவரும் இந்து என்றும் 
நாம் அனைவரும் இந்தியர்கள் என்றும்  ஒரு போர்வைக்குள் ஒழிந்து கொள்ளவும் முயற்சிக்கிறீர்கள் .

நீங்கள் எடுக்கும் இந்த முயற்சிதான் , ஏன் ஒரு தமிழன்  என் பூமியை ஆளக்கூடாது  கேள்வியையே கேட்க வைக்கிறது .

தமிழ்நாடு தமிழனின் ஆட்சியின் கீழ் என்பது குற்றமா ?
குற்றம் என்று நீங்கள் கூற கூற , இதன் வீரியம் அதிகரிக்கத்தான் செய்யும் .!

Tuesday 29 March 2016

உடுமலைப்பேட்டை சங்கர் - படிக்க போன , லவ் பன்னுவான ?

13-3-2016 அன்று உடுமலை பேட்டையில் நடந்த சங்கர் கொலை குறித்தும் , அவரது மனைவி கௌசல்யா குறித்தும் தொடர்ந்து இந்த மாதம் முழுக்க ஏகப்பட்ட கருத்துகள் .

சங்கரின் கொலை சரிதான் என்றும் ,
கௌசல்யா போன்ற எந்த பெண்ணும் செய்ய கூடாது என்றும்
அவன் பெற்றோர்கள் அனுபவிக்கட்டும் என்றும்
எங்க ஜாதி பெண்ணை இனி எவனும் லவ் பண்ணவே கூடாது , அதுக்கு இது ஒரு பாடம் என்றும் ,
படிக்க போன , லவ் பன்னுவான ? அந்த பாவத்தை தான் அவங்க அம்மா , அப்பா அனுபவிக்கட்டும் என்றும்
அந்த பெண்ணுக்கு வேலை கொடுக்க கூடாது என்றும் ஏகப்பட்ட கருத்து மழைகள் !

ஏன் சார் ?


படிக்க போனா லவ் பண்ண கூடாதா ? அப்புடி ஒன்னும் சட்டம் இல்லையே ? ஏன் நீங்க சொல்லற பாவ , புண்ணிய கணக்குல கூட இல்ல ! தமிழ் நாட்டின் எந்த ஒரு மரபும் சொல்லல ! சொல்லி இருந்தால் வள்ளுவர் காமத்து பால் எழுதி இருக்க மாட்டார் . அகநானூறும் , குறுந்தொகையும் இங்கு இருந்திருக்காது .

 ஒரு உயிர் போனதற்காக வருத்தப்பட்ட முகநூல் பதிவுகளை விட , ஒரு ஜாதிக்காக பேசிய பதிவுகள் அதிகமாக உள்ளன. இது தான் படிப்பறிவா ? இந்த அறிவ வைச்சிகிட்டா , எல்லோரும் நான் படிச்சிருக்கேன் , எனக்கு வேலை இல்லை , இவ வேலை கேகுரான்னு சொல்லி அலட்டிகிறீங்க !

 உண்மையிலேயே இது ஜாதிய காப்பாத்ததான் நடந்ததுன்னா 8 மாதம் கழித்து நடக்காது . 8 நாட்களுக்குள் நடந்திருக்கும் .
இங்க யாரும் ஜாதி வெறி பிடித்து , தன மகளின் வாழ்வை தான் கெடுக்கும் கேட்ட எண்ணம் பிடித்தவர்கல் கிடையாது .

இந்த பிரச்சனைக்கு முன்பு 4 நாட்களுக்குள் விவாசாய போராட்டம் எழ வாய்ப்பு இருந்தது . எப்போதெல்லாம் விவசாயிகள் போராட முனைகிறார்களோ , அப்போதெல்லாம் நம் நாட்டில் ஜாதியின் பெயரால் , யாரோ ஒருவர் கொல்ல பவடுவதும் , ஜாதி பிரச்சனைகள் பெருகுவதும் நடைமுறை வழக்கமாகி விட்டது .

யோசிச்சு பாருங்க , 2013 , தருமபுரி திவ்ய காதல் திருமண பிரச்னை நடந்தது அப்போதும் விவசாயிகள் பிரச்னை நடந்தது ..
 ஜாதிகாகவெல்லாம் அடிச்சிகிற அளவுக்கு நாம் அவ்வளவு மோசமான ஆளுங்க இல்லை . கொஞ்சம் ஜாதிக்கு பின்னால் உள்ள பிரச்சனைய தேடுலாம் .


Sunday 27 March 2016

களபிறர்கள் யார் ?

வரலாறுகள் தேடி கொண்டே இருக்கின்ற களபிறர்கள் யார் ?

எப்படி ஒருவனை கண்டுபிடிக்க ஒரு அடையாளமும் இல்லாமல் போகும் .

அனால் ஆங்கிலேயர்களும் தேடினார்கள் !

இந்தியர்களும் தேடினார்கள் !

தமிழர்களும் தேடினார்கள் !

தேடி கொண்டே இருக்கிறார்கள் !

தேடுவார்கள் ! என்பதிலும் சிறிதும் ஐயம் இல்லை !

இது குறித்து எந்த ஆதாரமும் இல்லை !

ஒரு வேளை  நாலந்தா பல்கலை கழகம் இதற்க்கு பதில் கூறி இருக்கலாம் .

ஆனால் அது 5 ஆம் நூற்றாண்டில் அழிந்து போனது .


இருப்பினும் ,










களபிறர் என்பவர்கள் குறித்து ஏ .பி.வள்ளி நாயகம் கூறுகையில் களபிறர்கள் என்பவர்கள் பறையர்கள் என்றும் ,
இவர்கள் ஆட்சிகாலம் முடிந்த பிறகுதான் ,
பறையர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி போனார்கள் என்றும் கூறுகிறார்









ஆனால் தமிழக அரசு வழங்கும் பிற்படுத்தபட்டோர் ஆணையமானது , வேறு கருத்து கூறுகிறது .
அதாவது களபிறர்கள் என்பவர்கள் தான் இன்று கள்ளர்கள் என்று வளங்கபடுகிரார்கள் என்று கூறுகிறது . இதனை வேள்விக்குடி செப்பேட்டை அடிப்படையாக கொண்டு கூறுவதாகவும் அந்த ஆணையம் கூறுகிறது .


ஆனால் இதற்க்கு மாற்று கருத்துகளும் கூறுகிறார்கள் .
களபிறர்கள் மிகவும் கொடியவர்கள் 
திருடர்கள் 
பெண்களை கொடுமை படுத்தியவர்கள் 
இப்படி பட்ட காலத்தில் தமிழ் வளர்ச்சி அடையவில்லை .
எனவே இது இருண்ட காலம் ஆகும் . என்று கூறுபவர்களும் உண்டு .

ஆனால் ஒருவன் வாழ்ந்த ஆதாரம் இல்லையென்றால் , அவன் கொடுமை காரனாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறுவது எப்படி நியாயம் ஆகும் .

கி.பி.1835 ம் ஆண்டு மெக்காலே கல்வி திட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் , களபிறர்கள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கும் , அது குறித்து தகவல் தருபவருக்கும் பரிசு தருவதாக , ஆங்கில ஆரசு அறிவித்து இருந்ததாம் .

அனால் இன்று வரை கி.பி.3 ம் நூற்றாண்டு முதல் கி.பி.7 ம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் என்ன நடந்தது என்பது குறித்து யாருக்கும் பெரிதாக தகவல் கிடைக்கவில்லை .

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் .

அந்த காலகட்டதிற்கு உரிய ஆதாரங்கள் அழிக்க பட்டுள்ளன .

காரணம் அந்த காலகட்டத்தில் பிராமணர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் கொடுக்காத காலமாக அது இருந்திருக்க வேண்டும் என்றும் வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன .

இன்று நாம் படிக்கும் வரலாற்று புத்தகங்களின் அனேக பாடங்கள் , பிராமணர்களின் உதவியோடும் , நேரடியாகவே அவர்களால் எழுதப்பட்டதுள்ளது .

பிரமாணர்கள் மிகவும் செல்வ செழிப்புடன் வாழ்ந்த குப்தர்களின் காலம் பொற்காலம் என்று வரலாறு கூறுகிறது.
அதே போல் தமிழகத்திலும் சோழ பேரரசு , நாயக்க வம்ச வரலாறு , இவை எல்லாம் மிகவும் தெளிவாக விவரிக்க பட்டுள்ளது . காரணம் இக்காலங்களில் பிராமணர்கள் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தனர் .

ஆகவே பிரமாணர்கள் நன்கு வாழ்ந்த காலங்கள் பொற்காலம் என்று எழுதப்பட்ட வரலாறு ,
அவர்கள் மரியாதை இன்றி வாழ்ந்த காலம் இருண்ட காலம் என்றும் எழுதப்பட்டுள்ளது .

ஆக  களபிறர்கள் காலமானது உயர்ந்த ஜாதி , தாழ்ந்த ஜாதி என்ற வேறுபாடு இல்லாத காலமாக இருந்திருக்க வேண்டும் .

அது இருண்ட காலம் அல்ல . இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம் .


Friday 25 March 2016

மத பிரச்னை

மத பிரச்னை:
ஓயாமால் ஓலிக்கும் மதம் சார்ந்த கேள்விகள் :
கல் தோன்றி மண் தோன்ற காலத்து முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி !
எவன் எவனோ நம் மண்ணின் அறிவியலை திருட முயன்று , அதன் பின் விளைவுகளை அறிந்ததால் , தமிழ் அறிவியல் முடக்கப்பட்டது . அதனை பயன்படுத்தி கொண்ட பலரும் பல கதைகள் எழுதி உள்ளனர் .
இவைகளுக்குள் நாம் தொலைந்து போக வேண்டிய அவசியம் இல்லை . இது நம் தேடலும் இல்லை . இவற்றை எல்லாம் கடந்தது
நம் அறிவியல் .
நம் மருத்துவம் .
நம் வானியல் .
நம் கட்டிட கலை
நம் தொழில் நுட்பங்கள்
நம் பண்ணும் , பாட்டும் !
நாம் தேட வேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருக்க
எவனோ ஒருவன் தூண்டி விட்ட மத கருத்துகளுக்காக இதய துடிப்பை அதிகரிக்க செய்ய வேண்டிய அவசியம் இல்லை .
நம் வருங்கால சந்ததியருக்கு , நம்மால் தொலைந்து போன விஷயங்களை முழுமையாக கொடுக்க முடியா விட்டாலும் ,
காற்றையும் , நீரையுமாவது விட்டு செல்ல முயற்சிக்கலாமே !
மதம் குறித்து பேச வேண்டுமானால் , பேசி கொண்டி போகலாம் !
அது ஆயிரம் உண்மைகள் கொண்டது
ஆயிரம் கற்பனைகள்  கொண்டது .
கண்ணுக்கு முன் வைத்து பார்த்தால் நம் கண்கள் வலிக்கும் !
சற்று தூர நிறுத்தி பார்த்தால் அதன் வெவ்வேறு அடையாளங்கள் புலப்படும் !

Wednesday 23 March 2016

முருகனும் வள்ளியும்

முருகனும் வள்ளியும் -1





 அழகான காட்டாறுகள் .
 நீரை தடுத்து ஓசை எழுப்பும் பாறைகள் .
சலசலக்க வைக்கிறது . 
அது ஓசை என்று கூறி விட்டால் நமக்கு இசையை ரசிக்கும் அருகதை இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தம் .

குரங்குகள் போடும் கும்மாள  சத்தம் கொஞ்சம் நெஞ்சை சலசலக்க வைக்கிறது . அப்பப்பா எத்தனை சத்தம் .

மயில்களின் அகவல் சத்தம் கண்களை கொஞ்சம் அகல வைக்கிறது !

எங்கிருந்தோ வரும் பறவைகளின் ரீங்காரம் 
மனதை கொஞ்சம் வருடி செல்கிறது .

அசைந்து அசைந்து உடலை தொட்டு செல்லும் காற்று 
சில சமயம் தென்றலாய் 
சில சமயம் வாடையாய் வந்து வாசனையும் தூவி செல்கிறது 

இத்தனை மலர்களும் இத்தனை வாசனையா ?
என கேட்க கூடாது . 
வாசமில்லாத மலர்களையும் சுவை இல்லாத கனிகளையும் பார்க்க அது என்ன 21 ம்   நூற்றாண்டா ?

அது முருகனும் வள்ளி அம்மையும் வாழ்ந்த காலம் !
அதி அற்புத காலம் .
அழகான காலம் 
நாம் அப்போது பிறக்க வில்லையே என ஏங்க வைக்கும் காலம் 
உண்மையின்  உரை கல்  வாழ்ந்த காலம் 
உன்னதமான காலம் 
முருகன் 
நண்பனாய் 
நாட்டின் முதல்வனாய் 
நல்ல மகனாய் 
வள்ளியின் கணவனாய் 
எல்லோருக்கும் அழகனாய் 
அறிவியலை மக்களுக்கு விளக்கும் விஞ்ஞானியாய் 
வாழ்ந்த காலம் !

இன்றிலிருந்து சுமார் 8500 ஆண்டுகளுக்கு முன்பு ,

அன்பே உருவான கண்களாய் 
அழகே உருவான அம்சமாய் 
நீரில் கால் நனைத்து 
விளையாடிய வண்ணம் 
தனைமறந்து எதையோ மனதில் சுமந்த வண்ணம் 
பாறையின் மீது அமர்ந்திருப்பது 
வேறு யாரும் அல்ல 
நம் வள்ளி அம்மை தான் !


வள்ளி வள்ளி.... என அழைக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டவளாய் 
எழுந்தாள் .

யாரது என கேட்கும் முன்னே அந்த ஓசை அருகில் கேட்டது .
வேறு யாரும் அல்ல 
வள்ளியின் தந்தை கோடங்கிதான் !

என்னம்மா வள்ளி என்ன செய்து கொண்டிருக்கிறாய் இங்கு தனியாக ?
உன் தோழிகள் யாரும் உன் உடன் இல்லை !

வாருங்கள் அப்பா ! என அழைத்தாள் !

என்னம்மா ஏதேனும் பிரச்சனயா ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய் ?
எங்கே என் மருமகன் ?

ஆமாம் மருமகன் . உங்க மருமகன் தான் பிரச்சனையே என இழுத்தாள் !

ஏனம்மா என்னவாயிற்று என் மருமகனுக்கு !

பொழுது சாய்ந்தும் வீடு திரும்பவில்லை ! அது பிரச்சனை இல்லையா ?

இப்போது தானம்மா புரிகிறது . 

என்ன புரிகிறது அப்பா !

உன்தாயிடம் உன்னை பார்த்து வரலாம் என கூறினேன் . வரவில்லை என கூறிவிட்டாள் .

ஏன் அம்மா வரமாட்டார்களாம் !

கேட்டேனே நீ எப்போதும் உன் கணவன் பற்றி மட்டுமே எண்ணி கொண்டு இருகிறாய் என்றும் , வீட்டிற்கு  யார் வந்தாலும் கவனிக்க மாட்டாய் என்றும் கூறினாள் .  நான் கூட நீ மாறி இருப்பாய் என நினைத்தேன் . 
இல்லை 
நீ உன் அம்மா கூறியது போலத்தான் நடத்து கொள்கிறாய் !

இல்லை அப்பா . அப்படி ஒன்றும் வந்தவர்களை உபசரிக்க கூட தெரியாமல் என் தாய் என்னை வளர்க்க வில்லை . என் கணவனும் என்னை அப்படியெல்லாம் அனுமதிப்பதில்லை என கடிந்து கொண்டவளாய் 

காட்டாற்று ஓரமாக இருந்த அழகான அந்த மனைக்குள் சென்று 
 உள்ளே வாருங்கள் அப்பா 
என கூறி நாணல் பாய் விரித்து போட்டாள் !

தந்தையாரும் அமர்ந்த உடன் 
வேகமாக உள்ளே சென்று நீரும் கிழங்கும் கொணர்ந்தாள் .

உண்ணுங்கள் அப்பா என அன்புடன் பரிமாறினாள் .

எத்தனை பேர் அவளுக்கு பணிவிடை செய்ய காத்திருந்தாலும் ,
வீட்டிற்கு  யார் வந்தாலும் தன கையால் பரிமாறுவதே வள்ளிக்கு  மிக பிடிக்கும் .

வள்ளி நீ இப்படி உபசரிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிரதம்மா !
எனக்கு மட்டுமல்ல உன் வீட்டிற்கு யார் வந்தாலும் நீ இப்படிதான் உபசரிக்கிறாய் என பிறரும் கூறும் போது எனை விடவும் உன் அம்மா மிக்க மகிழ்ச்சி கொள்வாள் தெரியுமா ?

இது நம் பண்பாடுதானே அப்பா நான் மட்டுமல்ல நம் பெண்கள் எல்லோருமே செய்வதுதானே ! நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?

இருந்தாலும் நீ மருகனை மணப்பதற்கு முன்பு எப்படி இருந்தாய் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியுமே !

அப்போது கொஞ்சம் விளையாட்டு தனமாக இருந்தேன் . அதற்காக இப்போதும் அப்படி இருந்தால் என் கணவனுக்கு இழுக்கு என்பது எனக்கும் தெரியும் அப்பா!

அப்படியாயின் உன் கணவனின் பெருமைக்காகத்தான் உபசரிகிறாய் . அப்படியா வள்ளி ?

இல்லை அப்பா ! நான் அப்படி சொல்ல வில்லை. வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை உபசரிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை . இருந்தாலும் கணவன் வீட்டில் அதன் தன்மை சற்று அதிக மேற்பார்வைக்கு வருகிறது . அதைதான் அப்படி சொன்னேன் . என்றாள் .

என்னோவாம்மா நீ வந்தவர்களை எப்படியெல்லாம் உபசரிக்கிறாய் என்பதை வைத்தே நீ எப்படி கணவன் வீட்டில் வாழ்கிறாய் என்பதை நாங்களும் புரிந்து கொள்கிறோம் இல்லையா ?

என்னப்பா அப்படி சொல்லி விட்டீர்கள் ! இருந்தாலும்,இல்லாவிட்டாலும் வந்தவர்களை வரவேற்க வேண்டும் என்பது நமது பண்பாடு அல்லவா அதுவும் இல்லாமல் எனக்கு என்னப்பா இங்கு குறைச்சல் . நம் வீட்டை விட வசதியாகதானே வாழ்கிறேன் .

எனக்கு தெரியாதா என்ன இதோ ஒரு காதை தூரத்தில் உள்ளது நம் மனை . முருகன் உன்னை எப்படி வாழ வைக்கிறான் என்பதை பார்த்துகொண்டு
தானே இருக்கிறோம் . ஆனால் சில நாட்களாக ஏதோ  கூட்டம் நடப்பதாக கேள்வியுற்றேன் . அதை தெரிந்து போகவே வந்தேனம்மா !

எனக்கும் அது குறித்து ஏதும் தெரியவில்லை அப்பா ! நேரம் வரும் பொது கூறுகிறேன் என்று கூறி விட்டார் . இதோ காளைகள் வரும் சத்தம் கேட்கிறது அவர் வந்துவிட்டார் என்று நினைக்கிறன் . இருங்கள் வாசல் வரை சென்று வருகிறேன் என்று கூறி விட்டு வேகமாக ஓடினாள் .


வள்ளி க்குதான் முருகன் மீது எத்தனை அன்பு . அவள் தந்தைக்கும் இனம்புரியாத மகிழ்ச்சி நெஞ்சில் ஊடுருவியது .

 ஏனெனில் முருகன் வள்ளியின் தந்தைக்கு மருமகன் மட்டுமல்ல ,ஆண் வாரிசு இல்லாத அவருக்கு மகன் போல இருப்பவன் . அதனால் முருகனை காணும் போதெல்லாம் இனம்புரியாத சந்தோசம் கொள்வது வழக்கம் .

காலில் இருந்த மெட்டியின் ஓசை மெல்ல எழும்ப கம்பிரமாக நடந்து வந்தான் முருகன்.

ஓடி வந்த வள்ளி வாருங்கள் என்று அழைத்தாள் !

வள்ளியின் தந்தையும் உடன் வந்தார்.

அவரை கண்டதும் வாருங்கள் மாமா ! முன்பே வந்து விட்டீர்களா என்று கேட்டு கொண்டே , 

ஏன் வள்ளி மாமா வந்திருப்பதை யார் மூலமாவது கூறி இருந்தால் முன்னமே வந்திருப்பனே என்று வள்ளியையும் கேட்டான்.

வள்ளியை கோவித்து கொள்ளதே முருகா ! நான்தான் என் மகளிடம் சற்று பேசி கொண்டு இருந்தேன் !

இருவருமே அமர்ந்து பேசுங்கள் . இதோ தேன் எடுத்து வருகிறேன் என்று கூறியவள் பாயை விரித்து விட்டு உள்ளே சென்றாள் 
.
நீங்கள் அமருங்கள் மாமா என்று கூறிய முருகன் அவர் அமர்ந்தவுடன் தாணும் அமர்ந்தான் .

ஏன் மாமா அத்தை வரவில்லையா ?

இல்லை முருகா ! இதோ நாளை காலையில் குளக்கரையில் பார்த்து கொள்வார்கள் . நாம் தான் பார்த்துகொள்ள வே முடிவதில்லை . அதற்காகத்தான் உன்னை பார்த்து செல்லலாம் என்று வந்தேன் .

கூறுங்கள் மாமா ! ஏதோ சொல்ல வருகிறீர்கள் ! நான் ஏதேனும் தவறிழைத்து விட்டேனாஉங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது .என்னை கோவித்து கொள்ள கூட !

இடைமறித்து இல்லை இல்லை முருக அப்படி எல்லாம் எதுவும் இல்லை . நீ என் மருமகன் மட்டும் அல்ல .இந்த கூட்டத்தின் தலைவன் . உன்னை குறை சொல்ல இங்கு எதுவும் இல்லை .

பிறகு என்ன மாமா ?

ஒரு சில நாட்களாக எதோ கூட்டம் நடப்பதாக கேள்வி பட்டேன் .
அது தான் என்ன கூட்டம் என்று தெரிந்து போகலாம் என்று வந்தேன் . 

அதெல்லாம் ஏதும் இல்லை மாமா !

இல்லை முருகா ! ஏதோ இருக்கிறது . யாரேனும் எதிரிகள் வர இருக்கிறார்களா என்ன ?

இல்லையே மாமா ! என் அப்படி கேட்கிறீர்கள் ?

பிற்கு எதற்கு வேலாயுதம் செய்ய சொல்லி கொல்லர்களுக்கு  உத்தரவு கொடுத்துள்ளாய் ! நான் தெரிந்து கொள்ள கூடாதா முருகா ? 


ஒரு நொடி  அதிர்ந்து போனான் முருகன் !


-------------------------------------------------------------------------------------------------    தொடரும் 

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...