செஞ்சி கோட்டை என்று வழங்கப்படும் செங்கிரி மலை .
செஞ்சி கோட்டை காதலர்கள் செல்ல கூடாத இடமாம் .
ராஜா தேசிஙகின் நண்பன் முஹம்மத் கான் .
அவனும் , அவனது காதலி ஆயிசாவும் ஆசை ஆசையாய் காதலித்து , அது திருமணத்தில் முடிவதற்கு முன்னதாகவே இருவரும் ஆற்காடு நவாப்பால் கொலை செய்யப்பட்டு இறக்க நேரிட்டதால் ஆயிசா பேகம் சாபம் இட்டாளாம் . நான் வாழாத இடத்தில் , வேறு எவரும் வாழ கூடாது என்று !
எனவே காதலர்கள் யாரேனும் வந்து விட்டால் , அவர்கள் பிரிந்து போக கடவது என்றும் , இங்கிருந்து ஒரு பொருளும் பிறர் அனுபவிக்க கூடாது என்றும் கூறிவிட்டாளாம் .
உண்மையில் அந்த பெண் , எந்த சாபமும் கொடுக்க வில்லை . ஆனால்
இந்த வதந்தி தான் இன்னும் செஞ்சி கோட்டையை முழுமையாக வைத்திருக்க உதவி இருக்கிறது .
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்
தஞ்சை பெரிய கோவில் காதலர்கள் , அரசியல்வாதிகள் என்ற வேறுபாடெல்லாம் பார்க்காது . யாராக இருந்தாலும் , தண்டிக்கும் . அரசியல்வாதியாக இருந்தால் இறந்து போவர் .
காதலர்களாக இருந்தால் பிரிந்து விடுவர்.
ஒரு
சினிமா எடுத்தால் கூட , படம் தோல்வி அடையும் .
இது ஒரு எல்லையில்லாமல் போய் கொண்டிருக்கிறது தஞ்சை பெரியகோவில் சார்ந்த வதந்திகள் ! .
இன்று மூடநம்பிக்கையை முற்றிலும் வெறுக்கும் எல்லா திராவிட கட்சிகளும் கூட இந்த நம்பிக்கையை சுமந்து கொண்டுதான் இருக்கின்றன .
ஆனால் இந்த காதலர்கள் மட்டும் தற்காலத்தில் கொஞ்சம் அதிகமாக இக்கோவிலுக்குள் சுற்றி வருகிறார்கள் . இவர்கள் மூடநம்பிக்கையை உடைத்தெறிந்த பகுத்தறிவு வாதிகள் என்று எண்ணினால் நாம் முட்டாள் ஆகி விடுவோம் .
ரொம்ப தெளிவா சொல்றான் ,
எங்களுக்கு லவ் மட்டும்தான் பிடிச்சிருக்கு !.
கல்யாணம் வரைக்கும் இது போக கூடாது .
அதுக்காகத்தான் இந்த கோவிலையும் எங்களுக்கு பிடிச்சிருக்கு என்று !
ஆனா இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் , எந்த எதிர்ப்பும் இல்லாம சீக்கிரமா கல்யாணம் ஆகிடுதாம் !
நந்தி ஹில்ஸ்
கர்நாடக மாநிலத்தின் சிக்பெள்ளபூர் மாவட்டத்தில் உள்ளது . இது கடல் மட்டத்தில் இருந்து 4851 feet உயரத்தில் உள்ளது . இங்குள்ள இறைவனின் பெயர் போகன நந்தீஸ்வரர் , நந்தியின் பெயர் நெல்லிக்காய் பசவண் நந்தி .
இயற்கை எழில் கொஞ்சும் இடம் .
விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ளது .
ஆனால் இது ஒரு கெட்ட பெயரை சுமந்து கொண்டு இருக்கிறது . இங்கு காதலர்கள் மட்டுமல்ல , திருமணம் ஆனவர்கள் கூட இங்கு வந்தால் பிரிந்து விடுவார்களாம் . காரணம் கூறுகிறார்கள் இங்குள்ள மக்கள் .
திப்பு சுல்தான் அரண்மனை
திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் , அவரால் சிறை பிடிக்கப்பட்ட மன்னன் முதல் கடைசி வீரன் வரை , இங்கு கொண்டு வந்து தான் கொல்லபடுவார்களாம் . எவர் தவறிளைதாலும் அவரது தலை இங்கு தான்
வெட்ட படுமாம் . அதனால் எப்போதும் ரத்த வாடையுடன் தான் , இந்த இடம் இருந்ததாம் .
அதனால் அவர்களின் ஆவிகலெல்லாம் இங்கு அலைகிறது என்றும் , இங்கு காதலர்களோ , புதுமண தம்பதிகளோ வரகூடாது என்றும் , இங்குள்ள் மக்கள் கூறுகிறார்கள் . அப்படி வந்தால் அவர்கள் பிரிந்து விடுவார்களாம் .
உண்மையில் , இங்கு மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்றாலும் ,
இந்த மலை திப்பு சுல்தான் காலத்தில் , சிவ பக்தர்களால் மிகவும் விரும்பப்பட்ட மலை . அதை விரும்பாத சுல்தான் சார்பாளர்கள் இங்கு ஆவிகள் இருப்பதாக வதந்திகள் பரப்பி இருக்கிறார்கள் .
இந்த நந்தி மலை மிகவும் ரம்மியமான , அழகான மலை . சுற்றுலா செல்ல ஏற்ற இடமும் கூட !
No comments:
Post a Comment