முருகனும் வள்ளியும் -1
அழகான காட்டாறுகள் .
நீரை தடுத்து ஓசை எழுப்பும் பாறைகள் .
சலசலக்க வைக்கிறது .
அது ஓசை என்று கூறி விட்டால் நமக்கு இசையை ரசிக்கும் அருகதை இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தம் .
குரங்குகள் போடும் கும்மாள சத்தம் கொஞ்சம் நெஞ்சை சலசலக்க வைக்கிறது . அப்பப்பா எத்தனை சத்தம் .
மயில்களின் அகவல் சத்தம் கண்களை கொஞ்சம் அகல வைக்கிறது !
எங்கிருந்தோ வரும் பறவைகளின் ரீங்காரம்
மனதை கொஞ்சம் வருடி செல்கிறது .
அசைந்து அசைந்து உடலை தொட்டு செல்லும் காற்று
சில சமயம் தென்றலாய்
சில சமயம் வாடையாய் வந்து வாசனையும் தூவி செல்கிறது
இத்தனை மலர்களும் இத்தனை வாசனையா ?
என கேட்க கூடாது .
வாசமில்லாத மலர்களையும் , சுவை இல்லாத கனிகளையும் பார்க்க அது என்ன 21 ம் நூற்றாண்டா ?
அது முருகனும் வள்ளி அம்மையும் வாழ்ந்த காலம் !
அதி அற்புத காலம் .
அழகான காலம்
நாம் அப்போது பிறக்க வில்லையே என ஏங்க வைக்கும் காலம்
உண்மையின் உரை கல் வாழ்ந்த காலம்
உன்னதமான காலம்
முருகன்
நண்பனாய்
நாட்டின் முதல்வனாய்
நல்ல மகனாய்
வள்ளியின் கணவனாய்
எல்லோருக்கும் அழகனாய்
அறிவியலை மக்களுக்கு விளக்கும் விஞ்ஞானியாய்
வாழ்ந்த காலம் !
இன்றிலிருந்து சுமார் 8500 ஆண்டுகளுக்கு முன்பு ,
அன்பே உருவான கண்களாய்
அழகே உருவான அம்சமாய்
நீரில் கால் நனைத்து
விளையாடிய வண்ணம்
தனைமறந்து எதையோ மனதில் சுமந்த வண்ணம்
பாறையின் மீது அமர்ந்திருப்பது
வேறு யாரும் அல்ல
நம் வள்ளி அம்மை தான் !
வள்ளி , வள்ளி.... என அழைக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டவளாய்
வள்ளி , வள்ளி.... என அழைக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டவளாய்
எழுந்தாள் .
யாரது என கேட்கும் முன்னே அந்த ஓசை அருகில் கேட்டது .
வேறு யாரும் அல்ல
வள்ளியின் தந்தை கோடங்கிதான் !
என்னம்மா வள்ளி ? என்ன செய்து கொண்டிருக்கிறாய் இங்கு தனியாக ?
உன் தோழிகள் யாரும் உன் உடன் இல்லை !
வாருங்கள் அப்பா ! என அழைத்தாள் !
என்னம்மா ஏதேனும் பிரச்சனயா ? ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய் ?
எங்கே என் மருமகன் ?
ஆமாம் மருமகன் . உங்க மருமகன் தான் பிரச்சனையே என இழுத்தாள் !
ஏனம்மா என்னவாயிற்று என் மருமகனுக்கு !
பொழுது சாய்ந்தும் வீடு திரும்பவில்லை ! அது பிரச்சனை இல்லையா ?
இப்போது தானம்மா புரிகிறது .
என்ன புரிகிறது அப்பா !
உன்தாயிடம் உன்னை பார்த்து வரலாம் என கூறினேன் . வரவில்லை என கூறிவிட்டாள் .
ஏன் ? அம்மா வரமாட்டார்களாம் !
கேட்டேனே ? நீ எப்போதும் உன் கணவன் பற்றி மட்டுமே எண்ணி கொண்டு இருகிறாய் என்றும் , வீட்டிற்கு யார் வந்தாலும் கவனிக்க மாட்டாய் என்றும் கூறினாள் . நான் கூட நீ மாறி இருப்பாய் என நினைத்தேன் .
இல்லை
நீ உன் அம்மா கூறியது போலத்தான் நடத்து கொள்கிறாய் !
இல்லை அப்பா . அப்படி ஒன்றும் வந்தவர்களை உபசரிக்க கூட தெரியாமல் என் தாய் என்னை வளர்க்க வில்லை . என் கணவனும் என்னை அப்படியெல்லாம் அனுமதிப்பதில்லை என கடிந்து கொண்டவளாய்
காட்டாற்று ஓரமாக இருந்த அழகான அந்த மனைக்குள் சென்று
உள்ளே வாருங்கள் அப்பா
என கூறி நாணல் பாய் விரித்து போட்டாள் !
தந்தையாரும் அமர்ந்த உடன்
வேகமாக உள்ளே சென்று நீரும் , கிழங்கும் கொணர்ந்தாள் .
உண்ணுங்கள் அப்பா என அன்புடன் பரிமாறினாள் .
எத்தனை பேர் அவளுக்கு பணிவிடை செய்ய காத்திருந்தாலும் ,
வீட்டிற்கு யார் வந்தாலும் தன கையால் பரிமாறுவதே வள்ளிக்கு மிக பிடிக்கும் .
வள்ளி , நீ இப்படி உபசரிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிரதம்மா !
எனக்கு மட்டுமல்ல , உன் வீட்டிற்கு யார் வந்தாலும் நீ இப்படிதான் உபசரிக்கிறாய் என பிறரும் கூறும் போது எனை விடவும் உன் அம்மா மிக்க மகிழ்ச்சி கொள்வாள் தெரியுமா ?
இது நம் பண்பாடுதானே அப்பா ? நான் மட்டுமல்ல நம் பெண்கள் எல்லோருமே செய்வதுதானே ! நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?
இருந்தாலும் நீ மருகனை மணப்பதற்கு முன்பு எப்படி இருந்தாய் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியுமே !
அப்போது கொஞ்சம் விளையாட்டு தனமாக இருந்தேன் . அதற்காக இப்போதும் அப்படி இருந்தால் என் கணவனுக்கு இழுக்கு என்பது எனக்கும் தெரியும் அப்பா!
அப்படியாயின் உன் கணவனின் பெருமைக்காகத்தான் உபசரிகிறாய் . அப்படியா வள்ளி ?
இல்லை அப்பா ! நான் அப்படி சொல்ல வில்லை. வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை உபசரிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை . இருந்தாலும் கணவன் வீட்டில் அதன் தன்மை சற்று அதிக மேற்பார்வைக்கு வருகிறது . அதைதான் அப்படி சொன்னேன் . என்றாள் .
என்னோவாம்மா , நீ வந்தவர்களை எப்படியெல்லாம் உபசரிக்கிறாய் என்பதை வைத்தே , நீ எப்படி கணவன் வீட்டில் வாழ்கிறாய் என்பதை நாங்களும் புரிந்து கொள்கிறோம் இல்லையா ?
என்னப்பா அப்படி சொல்லி விட்டீர்கள் ! இருந்தாலும்,இல்லாவிட்டாலும் வந்தவர்களை வரவேற்க வேண்டும் என்பது நமது பண்பாடு அல்லவா ? அதுவும் இல்லாமல் எனக்கு என்னப்பா இங்கு குறைச்சல் . நம் வீட்டை விட வசதியாகதானே வாழ்கிறேன் .
எனக்கு தெரியாதா என்ன ? இதோ ஒரு காதை தூரத்தில் உள்ளது நம் மனை . முருகன் உன்னை எப்படி வாழ வைக்கிறான் என்பதை பார்த்துகொண்டு
தானே இருக்கிறோம் . ஆனால் சில நாட்களாக ஏதோ கூட்டம் நடப்பதாக கேள்வியுற்றேன் . அதை தெரிந்து போகவே வந்தேனம்மா !
எனக்கும் அது குறித்து ஏதும் தெரியவில்லை அப்பா ! நேரம் வரும் பொது கூறுகிறேன் என்று கூறி விட்டார் . இதோ காளைகள் வரும் சத்தம் கேட்கிறது அவர் வந்துவிட்டார் என்று நினைக்கிறன் . இருங்கள் வாசல் வரை சென்று வருகிறேன் என்று கூறி விட்டு வேகமாக ஓடினாள் .
வள்ளி க்குதான் முருகன் மீது எத்தனை அன்பு . அவள் தந்தைக்கும் இனம்புரியாத மகிழ்ச்சி நெஞ்சில் ஊடுருவியது .
ஏனெனில் முருகன் வள்ளியின் தந்தைக்கு மருமகன் மட்டுமல்ல ,ஆண் வாரிசு இல்லாத அவருக்கு மகன் போல இருப்பவன் . அதனால் முருகனை காணும் போதெல்லாம் இனம்புரியாத சந்தோசம் கொள்வது வழக்கம் .
காலில் இருந்த மெட்டியின் ஓசை மெல்ல எழும்ப , கம்பிரமாக நடந்து வந்தான் முருகன்.
ஓடி வந்த வள்ளி வாருங்கள் என்று அழைத்தாள் !
வள்ளியின் தந்தையும் உடன் வந்தார்.
அவரை கண்டதும் வாருங்கள் மாமா ! முன்பே வந்து விட்டீர்களா ? என்று கேட்டு கொண்டே ,
ஏன் வள்ளி மாமா வந்திருப்பதை யார் மூலமாவது கூறி இருந்தால் முன்னமே வந்திருப்பனே , என்று வள்ளியையும் கேட்டான்.
வள்ளியை கோவித்து கொள்ளதே முருகா ! நான்தான் என் மகளிடம் சற்று பேசி கொண்டு இருந்தேன் !
இருவருமே அமர்ந்து பேசுங்கள் . இதோ தேன் எடுத்து வருகிறேன் என்று கூறியவள் பாயை விரித்து விட்டு உள்ளே சென்றாள்
.
நீங்கள் அமருங்கள் மாமா , என்று கூறிய முருகன் அவர் அமர்ந்தவுடன் தாணும் அமர்ந்தான் .
ஏன் மாமா அத்தை வரவில்லையா ?
இல்லை முருகா ! இதோ நாளை காலையில் குளக்கரையில் பார்த்து கொள்வார்கள் . நாம் தான் பார்த்துகொள்ள வே முடிவதில்லை . அதற்காகத்தான் உன்னை பார்த்து செல்லலாம் என்று வந்தேன் .
கூறுங்கள் மாமா ! ஏதோ சொல்ல வருகிறீர்கள் ! நான் ஏதேனும் தவறிழைத்து விட்டேனா? உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது .என்னை கோவித்து கொள்ள கூட !
இடைமறித்து , இல்லை இல்லை முருக , அப்படி எல்லாம் எதுவும் இல்லை . நீ என் மருமகன் மட்டும் அல்ல .இந்த கூட்டத்தின் தலைவன் . உன்னை குறை சொல்ல இங்கு எதுவும் இல்லை .
பிறகு என்ன மாமா ?
ஒரு சில நாட்களாக எதோ கூட்டம் நடப்பதாக கேள்வி பட்டேன் .
அது தான் என்ன கூட்டம் என்று தெரிந்து போகலாம் என்று வந்தேன் .
அதெல்லாம் ஏதும் இல்லை மாமா !
இல்லை முருகா ! ஏதோ இருக்கிறது . யாரேனும் எதிரிகள் வர இருக்கிறார்களா என்ன ?
இல்லையே மாமா ! என் அப்படி கேட்கிறீர்கள் ?
பிற்கு எதற்கு வேலாயுதம் செய்ய சொல்லி கொல்லர்களுக்கு உத்தரவு கொடுத்துள்ளாய் ! நான் தெரிந்து கொள்ள கூடாதா முருகா ?
ஒரு நொடி அதிர்ந்து போனான் முருகன் !
------------------------------------------------------------------------------------------------- தொடரும்
ஒரு நொடி அதிர்ந்து போனான் முருகன் !
------------------------------------------------------------------------------------------------- தொடரும்
No comments:
Post a Comment