அக்ரஹாரம் என்றால் எப்படி இருக்கும் ?
நம்முடைய திரைப்படங்கள் சில கருத்துக்களை மக்களிடம் தவறாக கூறி உள்ளது . அப்படியே கூறி கொண்டும் இருக்கிறது . அந்த கருத்தில் சிறிதும் மாறாமல் , அக்ரஹாரம் என்றால் அது பிராமணர் குடியிருப்பு என்று மக்கள் மனதில் பதிய வைக்க பட்டுள்ளது .
ஆனால் உண்மையில் அக்ரஹாரம் எனப்படுவது வடக்கு , தெற்காக வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்று அர்த்தம் .
அது மட்டும் அல்லாது இது பிராமணர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று
கூறுவதும் முற்றிலும் பொய் .
அக்ரஹாரங்கள் உள்ள மற்ற இடங்களை தொடர்பு படுத்தி பார்க்கும் போது தஞ்சையில் தான் அதிகம் .
தஞ்சாவுரை உருவாக்கிய மன்னன் தனஜெயன் எனும் முத்தரையன் என்று கூறுவதும் உண்டு . ஆனால் தனஜெயன் கூட , ஒழுங்கு முறை படுத்தினானே தவிர , இதற்க்கு முன்பு யார் இந்த ஊரை அறிவியல் பூர்வமாக உருவாக்கியது என்பது யாருக்கும் தெரியாது .
ஆம் வீடுகள் எல்லாம் வடக்கு , தெற்காகத்தான் இன்று வரை அமைக்க படுகிறது . காரணம் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி தான் நீரோட்டம் இயற்கையில் அமைந்துள்ளது . எந்த இடத்தில் நீர் தங்கினாலும் , அதை கிழக்கு நோக்கி வெட்டி விட்டாலே போதும் , நீர் விரைவில் வடிந்து விடும் . அதே நேரத்தில் , அங்ஙனம் செல்லும்நீரோட்டத்தை இடையில் வீடுகள் கட்டி யாரும் தடுக்காமல் இருப்பது இன்னும் சால சிறந்தது . அப்படி தான் தஞ்சையிலும் கிழக்கு பார்த்த வாசல் , மேற்கு பார்த்த வாசல் வீடுகள் கட்டுவது இல்லை . இன்றளவும் வடக்கு தெரு , தெற்கு தெரு என்று
மட்டு மே பெயர் இடுவது வழக்கில் உள்ளது.
இதை மலையாளத்தில் இன்றும் நீர் வழிய சாலை என்று தான் கூறுகிறார்கள் .
அக்ரஹார்ம் என்பதற்கு மலையாள பெயர் வழியசால ஆகும் .
இப்படி கட்டப்பட்ட வீடுகளுக்கு அக்ரஹாரம் என்று பெயர் சூட்டியது நாயக்கர்கள் தான் . இவர்களது ஆட்சியில் மேலும் மேலும் பற்பல அக்ரஹாரங்கல் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அவை பிராமனர்களுக்காகவே கட்டப்பட்டது . இவர்கள் காலத்திற்கு முன்பு கட்டப்பட்ட இடங்களுக்கும் அங்கு குடியிருந்த மக்களின் ஜாதி பெயரோடு சேர்த்து அக்ரஹாரம் என்று பெயர் சூட்டப்பட்டது .
தஞ்சையில் உள்ள ஒரு சில அக்ரஹாரங்கள் :
பள்ளி அக்ரஹாரம்
கணபதி அக்ரஹாரம்
கானூர் அக்ரஹாரம்
அய்யம்பேட்டை அக்ரஹாரம்
அண்ணல் அக்ரஹாரம்
இன்னும் பல
பள்ளி அக்ரஹாரம் .
இன்று வன்னியர்கள் என்று வழங்கப்படும் மக்கள் வாழ்ந்த இடம் . இவர்களின் பழைய பெயர் பள்ளி என்று கூறபடுகிறது .
மற்றொரு கருத்தும் உள்ளது வைஷ்ணவர்கள் அதிகம் வாழ்ந்த இடம் . பள்ளி கொண்ட பெருமாளை வணங்கிய மக்கள் அதிகம் இருந்த இடம் .
மற்றொரு கருத்தும் உள்ளது . சமணர்கள் , தான் முதன்முதலில் கல்வி சாலைகளை பள்ளி கூடங்கள் என்று கூறியவர்கள் . ஆனால் இந்த பள்ளி கூடங்கள் மலைகளின் மீது மட்டுமே அவர்கள் நடத்துவது வழக்கம் என்பதால் தஞ்சையில் இருப்பது வன்னியர் குல அக்ரஹாரம் ஆகும் .
அதே போல பாபநாசம் தாலுக்கா பகுதியில் இருப்பது கணபதி அக்ரஹாரம் .
இங்கு பொற்கொல்லர்களும் , முத்தரைய இன மக்களும் அதிகம் என்பதால் பொதுவாக கணபதியின் கோவில் ஒன்று கட்டப்பட்டு , அந்த கணபதின் பெயராலேயே இது வழங்கப்படுகிறது .
கானூர் அக்ரஹாரம்
திருவாரூர் பகுதியில் உள்ளது கானூர் அக்ரகாரம் . இப்போது மக்கள் கானூர் என்று மட்டுமே அழைக்கின்றனர் . காரணம் இப்பகுதில் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து விட்டனர் .
இது முழுக்க முழுக்க விவசாயிகள் வாழ்கின்ற இடம் .
அய்யம்பேட்டை அக்ரஹாரம் :
இது தான் முழுவதுமாக பிராமணர்களும் , ஜோதிடம் பார்பவர்களும், சௌராஷ்டிர இன மக்களும் வாழ்ந்த இடம் . ஆனால் இப்போது இந்த பகுதியும் அய்யம்பேட்டை என்று மட்டுமே வழங்கபடுகிறது . இங்கு இஸ்லாமியர்கள் வருகை அதிகரித்ததாலும், பிராமணர்கள் நகரங்கள் நோக்கி குடி பெயர்ந்தாலும் , இப்போது இங்கு சௌராஷ்டிர மக்களும் , இஸ்லாமியர்களும் மட்டுமே வாழ்கின்றனர். அதனால் அக்ரஹாரம் என்ற பெயரையும் எடுத்து விட்டனர் .
இதே போன்று கும்பகோணம் தாலுக்காவில் அமைந்துள்ளது அண்ணல் அக்ரஹாரம் . இதுவும் பிராமணர்களுக்காக கட்டப்பட்டது .
அதிக அக்ரகாரங்கள் இருப்பது கர்நாடகாவில் தான்!. காவிரி தன வழி பிறழாமல் வர சோழர்களால் கட்டப்பட்டது.
இனியாவது வீடுகளை அக்ரகாரம் போல் கட்டி நீர் வழியை பெருக்கலாமே !
--------------------------------
கந்தர்வகோட்டை சிவன் கோவில்
கந்தர்வகோட்டை தஞ்சாவூருக்கும் , புதுக்கோட்டைக்கும் இடையில் இருக்கும் ஒரு அழகிய ஊர். இவ்வூரில் கோயில் கொண்டுள்ள ஈசன் ஆபத் சாக ஈஸ்வரர் . இந்த ஊரின் வடக்கு பகுதியில் செங்கிப்பட்டியும் தெற்கு பகுதியில் ஆதன கோட்டையும் உள்ளது .
இக்கோவில் தூண்களில் அழகிய சிற்பங்கள் செதுக்க பட்டுள்ளன . இக்கோவில் கட்டி 1000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று இங்குள்ள அர்ச்சகர் தகவல் தெரிவித்தார் .
தற்போது இங்குள்ள புதுக்கோட்டை சமஸ்தானங்கள் இதன் நிர்வாகத்தை கவனிப்பதாகவும் , ஒரு வேலை பூஜை மட்டுமே நடைபெறுவதாகவும் கூறுகிறார். ஆனால் பிரதோஷம் மற்றும் சிவ ராத்திரி பூஜைகள் சிறப்பாக நடத்தப்படுகிறது . பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினார்.
இந்த கோவிலின் முன்வாயில் தூணில் கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிப்பது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
ஈசனுக்கும் அம்மன் கோவிலுக்கும் இடையில் உள்ள தூணில் தலைவன் தலைவியின் ஈடுபாடுள்ள சிற்பங்கள் உள்ளது .
கோவிலின் மேற்புறம் முழுவதும் வித்யாசமான மீன் உருவங்கள் செதுக்க பட்டுள்ளன . இது எதோ ஒரு கடல் கடந்த போரில் வெற்றி பெற்ற நினைவாக எழுப்பி இருக்கலாம் என்று ஒரு கருத்தும் இங்கு உள்ளது .
இது முழுவதுமாக பாறைகளால் செதுக்கப்பட்ட கோவில் . இப்பாறைகள் பராமரிப்பு இன்றி சரிபாதி சிற்பங்கள் மற்றும் எழுத்துக்கள் அழிந்து வருவதாக தெரிகிறது.
இந்த பகுதி முத்தரையர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த படியால் இக்கோவில் முத்தரையர்களால் கட்டப்பட்டதாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது .
ஆனால எந்த கல்வெட்டு குறிப்புகளும் இல்லை .
கோவிலை சுற்றிலும் கணபதி கோவில் மற்றும் முருகன் கோவில் அம்மன் கோவில் மற்றும் நவகிரகங்கள் அமைந்துள்ளன. ஆனால் காலத்தால் அவைகள் பின்தங்கியவை .
தஞ்சை பெரியகோவிலை சுற்றி எப்படி கணபதி மற்றும் முருகன் கோவில்கள் உள்ளனவோ அதே போலவே இங்கும் உள்ளது.
மிகவும் அமைதியாக உள்ள கோவில்.
கோவில் அர்ச்சகர் வீடு , கோவிலுக்கு எதிரில் இருப்பதால் , கோவிலுக்கு செல்லும் போது அவரை அழைத்து கொள்ள இங்கு வாய்ப்புள்ளது .
----------------------------------------------------
தஞ்சாவூர் மருத நிலம் ஆகும் . எனவே வேளாண் செய்த நேரம் போக மீதி நேரங்களில் பாடும் , பண்ணும் மிகவும் சிறப்பாக வளர்க்கப்பட்டுள்ளது .
ஜாதி இதற்க்கு இல்லை .
மதம் என்பதே தேவை இல்லை .
நாடு என்ற பேதம் பார்ப்பதும் இல்லை .
யார் இங்கு வந்து இசை கற்கவோ , நடனம் பயிலவோ , இசை கருவிகள் செய்யவோ கற்று கொள்ள விரும்பினாலும் , அதற்க்கு தடை என்று எதுவும் இல்லை .
தஞ்சையின் பூர்வீக இசை கருவிகள் :
நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை நாதஸ்வரம் என்பன ஆகும் .
இந்த நாதஸ்வர இசையில் சிறந்த இசை கலைஞ்கர்கள் இங்கிருந்து தான் உருவாகிறார்கள் .
இவர் E .M .சுப்பிரமணியம் . இவர் திருவாரூரை சேர்ந்த இஞ்சிகுடியில் பிறந்தவர் . இதே துறையில் சிறந்து விளங்கும் 20 வது தலை முறை இவர் . இவரது இசை A .R . ரஹ்மான் இசையில் அடிக்கடி ஒலித்து கொண்டு இருக்கிறது . மேலும் நாதஸ்வர பள்ளி ஒன்றை நடத்துகிறார்
மாஸ்ட்ரோ ஷேய்க் சின்ன மௌலான
நாதஸ்வர இசையில் தன குடும்பம் மொத்தத்தையும் இணைத்தவர்
ஷேய்க் சின்ன மௌலான ஆவார் . இவர் U .N .O வில் நாதஸ்வரம் வாசித்த பெருமைக்கு உரியவர். குண்டூரை சேர்ந்த இவர் இசை மீது கொண்ட பிரியத்தால் தஞ்சையிலேயே தங்கி விட்டார் .
காசிம் பாபு பிரதர்ஸ்
ஷேய்க் சின்ன மௌலானாவின் பேரன்கள் காசிம் பிரதர்ஸ் , இசை சேவையை தொடர்கின்றனர்
இவர்கள் இருவரும் திருச்சிராப்பள்ளி செயின்ட்.ஜோசப் கல்லூரில் இயற்பியலில் பட்டம் பெற்றவர்கள் . இருப்பினும் நாதஸ்வரத்தின் மேல் கொண்ட ஈடுபாட்டால் இந்த சேவையை தொடர்கின்றனர் .
தஞ்சை வாழ் இசை கலைஞ்கர்களின் இசை சேவை தொடரட்டும் !
------------------------------------------------------------------------
No comments:
Post a Comment