Thursday, 10 March 2016

தமிழக அரசியல் குடும்பங்கள்



மன்னராட்சி முடிந்து மக்கள் ஆட்சியில் இருக்கிறோம் என்று வைத்து கொண்டாலும் வாரிசு அரசியல் என்பதும், ஜாதி அரசியல் என்பதும் தவிர்க்க முடியாமல் நம்மோடு ஒட்டி கொண்டே இருக்கிறது . 

தமிழ் நாடும் விதிவிலக்கு அல்ல . 

சுதந்திர போராட்ட காலத்தில் , போராட்ட தலைவர்களாக இருந்தவர்களில் பலரும் பெரும் பணக்காரர்கள். அவர்களே , பின்னாளில் தேர்தலிலும் நின்று வெற்றி பெற்றனர் . ஏனெனில் மக்களாட்சியின் தத்துவம் அவர்களுக்கு மட்டுமே புரிந்தது போலும் !

அதனை தொடர்ந்து அவர்களது வாரிசுகளும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்  

காமராஜர் போன்ற விதிவிலக்கும் உண்டு . அவரின் பாரம்பரியம் , சராசரி மனிதனோடு ஒத்து போனதால் தான் அவர் ஆட்சி தமிழ்நாட்டின் மிக சிறந்த ஆட்சியாக இன்றும் உள்ளது .

அதன் பின்னர் எத்தனை ஆட்சிதனை தமிழகம் கடந்த போதிலும் , அவரோடு ஒப்புமை கொள்ள இன்னும் எந்த அரசியல்வாதியும்  வரவில்லை 

ஒருவேளை தற்காலத்தில் இருக்கும் பல அரசியல் வாதிகள் தன்னிச்சையாக நின்று நற்பெயர் வாங்காது , தாத்தா பெயரை , தகப்பன் பெயரை பயன்படுத்துவதலோ என்னவோ ?

அப்படி வாழ்ந்து வரும் அரசியல் வாரிசு கள் யார்யார் என தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது .

அரசியல் வாரிசுகள் 

பி .சுப்பராயன் குடும்பம் 




பி.சுப்பராயன்  -  மெட்ராஸ் ப்ரெசிடன்யின் முன்னாள்                                                                             முதல்வர் - நீதி கட்சி 

       மோகன் குமாரமங்கலம் - சுப்பராயன் அவர்களின் மகன் .
                                                              இவரது வாரிசுகள் :

                                                                 காளியண்ணன் 

                                                                  ரங்கராஜன் குமாரமங்கலம் 

                                                                  லலிதா குமாரமங்கலம் 

பார்வதி கிருஷ்ணன்  - சுப்பராயன் அவர்களின் மகள் 

P .T. ராஜன் குடும்பம் :


      
Ptrajan.jpg

திரு . பொன்னம்பல தியாகராஜன் 

          

P .T. ராஜன் - 1892 முதல் 1974 வரை - மெட்ராஸ் ப்ரெசிடன்யின் முன்னாள்                                  முதல்வர் - நீதி கட்சி 


                           பழனிவேல் ராஜன்  1932 முதல் 2006 வரை 


பக்தவச்சலம் குடும்பம் 



 பக்தவச்சலம்  - முன்னாள் முதல்வர் 

ஜெயந்தி நடராஜன் - பக்தவச்சலம் அவர்களின் மகள் வழி பேத்தி 


ஈ .வீ .கே . சம்பத் குடும்பம் 



ஈரோடு வெங்கட நாயக்கர் சம்பத் 
கன்னடம் பேசும் தெலுங்கர் 

ஈ.வீ.கே . சம்பத் 

                         ஈ.வீ.கே.எஸ். இளங்கோவன் 

                         ஈ.வீ.கே.எஸ். இனியன் 

ஈ.வீ.கே.எஸ்.ஈ. திருமகன் - ஈ.வீ.கே.எஸ். இளங்கோவன் மகன் 




குமரி அனந்தன் குடும்பம் 




குமரி மாவட்டத்தை சேர்ந்த அனந்த கிருஷ்ணன் - நாடார் சமூகம் 

குமரி அனந்தன் -  காங்கிரஸ் 

                            தமிழிசை சௌந்தரராஜன் - குமரி ஆனந்தனின் மகள் - பா.ஜ.க 

வசந்த் குமார் - குமரி ஆனந்தனின் சகோதரர் 

ராமாசாமி படையாச்சி குடும்பம் 

ராமசாமி படையாச்சி  - வன்னியர் சங்கத்தை அடிப்படையாக கொண்ட தமிழக                                               உழைப்பாளர் கட்சி 

                எஸ்.எஸ்.ஆர் .ராமதாஸ் - ராமசாமி படையாட்சியின் மகன் - பாட்டாளி                                                                       மக்கள் கட்சி 

                                     அன்புமணி ராமதாஸ் - டாக்டர் ராமதாசின் மகன் 


ஜி .கே. மூப்பனார் குடும்பம் 



கோவிந்த சாமி கருப்பையா மூப்பனார் 


ஜி.கே.மூப்பனார் - தமிழ் மாநில காங்கிரஸ் 

                  ஜி.கே.வாசன் 


கருணாநிதி குடும்பம் 

கருணாநிதி - திராவிட முன்னேற்ற கழகம் 
                      வாரிசுகள் 
                      ஸ்டாலின் 
                      அழகிரி 
                      கனிமொழி 

முரசொலி மாறன் - கருணாநிதியின் அத்தை மகன் 
                     தயா நிதி மாறன் - முரசொலி மாறனின் மகன் 


இதில் நன்முறையில் ஆட்சி செய்த காமராஜர் திருமணமே செய்து கொள்ளவில்லை 

அவருக்கு பின் நன்முறையில் ஆட்சி செய்த 
திரு. அண்ணாதுரை அவர்களுக்கும் , திரு .எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கும் வாரிசு இல்லை .

வாரிசுகளும் தகப்பனை போலவே ஆட்சி செய்வர் என்று எதிர்பார்க்க கூடிய யாருக்கும் வாரிசு இல்லை . மீதம் சொல்ல முடிய வில்லை !

( ஆட்சி என்று குறிப்பிடபடுவது முதல்வர் பதவி மட்டும் அல்ல. ஒவ்வொரு சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் தான் )

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...