Wednesday 16 March 2016

காதல் எல்லாம் செய்யும் ! - love stories


காதல் வாழ்வில் எல்லாம் தரும் !
இன்பம்
துன்பம்
வீரம்
கோபம்
லட்சியம்
இலக்கு
இரக்கம்
என
காதல் விட்டு வைத்தது என
சொல்ல எந்த உணர்வும்
மீதம் இல்லை !

அலெக்ஷாண்டார் கிரகாம் பெல் :


அலெக்ஷாண்டர் க்ரஹாம் பெல் அவரது மனைவி மபெல் ஹப்பர்ட் , அவர்களது மகள்கள் எல்சியா மற்றும் மரியன்



பெல் தன்னிடம் படிக்கச் வந்த காது கேளாத மபேளை விரும்பி திருமணம் செய்து கொண்டவர்!
இப்படி சொல்லவதை விட மாபெல் எனும் பெண் தன்னைவிட 10 வயது மூத்தவரை விரும்பி
அவரையே மணந்தார் !

மாபெலின் காதல் பிரதிபலிப்புதான் 
காது கருவியும் 
தொலைபேசி கருவியும் !
பெல் 1922 ஆகஸ்ட் 2 ம் நாள் இறந்தார் !
மாபெல் 1923 ஜனவரி 3 ம் நாள் இறந்தார் !
இந்த இடைப்பட்ட 5 மாதங்கள் 
அவள் , அவளது கணவனை 
காண காத்திருந்த மாதங்கள் !
அவன் இல்லாமல் அவள் 
ரணப்பட்ட மாதங்கள் !

அவன் அவள் காது கேளாமை குறை தீர
வழி தேடினான் .
அவளோ அவன் வாழ்வோடு இணைவது
ஒன்றே
வாழ்வென மாறினாள் !

வாலெண்டினா தெரஸ்கோவா :

valentina tereshkova க்கான பட முடிவு

வாலண்டினா தெரஸ்கோவா

இவர் தான் விண்வெளிக்கு சென்ற முதல் பெண்.
1959 ல் சோவியத் ரஷ்யா வில் இருந்து விண்வெளியில் நடந்த முதல் ஆண் யூரிகாகரின் 
அதன் பிறகு பெண் யாரேனும் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்க பட்டது
500 விண்ணப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தகுதியானவர் தான்
வாலண்டினா தெரஸ்கோவா !

அப்போது அவர் ஒருவரை காதலித்து கொண்டிருந்தார் .
அவர் வேறு யாரும் இல்லை !
முதன் முதலாக விண்வெளியில் இருந்து தொலைக்காட்சி நிகழ்சிகளை 
ஒலிபரப்பியவர் அண்டெரியன் நிகோலயாவ் 
வோஸ்டாக் 3 மற்றும் சொயச 9 எனும் இரண்டு space flights ஐ உருவாக்கியவர் .
1962 ல் வெற்றிகரமாக இவரது லட்சியங்கள் நிறைவேறின .

உடனே தெரசகொவாவிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார் .
அவரோ உங்கள் பெயர் வரலாற்றில் இடம் பெற்றதுபோல் என் பெயரும் இடம்பெற்ற பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி விட்டு

அதற்காக இடையறாது உழைத்தார் . கடுமையான பயிற்சிக்கு பின்னரே விண்வெளி செல்லும் வாய்ப்பு 1963 ஜூன் 13 ல் அவருக்கு கிடைத்தது .

வெற்றிகரமாக 2 நாட்கள் 23 மணிநேரம் 12 நிமிடங்கள் விண்வெளியில் இருந்து விட்டு , தன லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் தான்
தன காதலனை கை பிடிக்கிறார் .
அதே ஆண்டு 1963 ல் நவம்பர் மாதம் தன காதலனை , மணந்து கொண்டார் வாலண்டினா தெரஸ்கோவா !


தன கணவருடன் வாலண்டினா

காதல் கண்டுபிடிப்பை கொடுக்கும் !
காதல் விண்வெளி ஆய்வை வளர்க்கும் !
உணர்ச்சி பிழம்பாய் மாற வைக்கும் !

வென்ற காதல் கொடுத்தது !
தோற்ற காதல்
இல்லை இல்லை
தோற்கடிக்க பட்ட காதல்
கொஞ்சம்
பழிவாங்கியது !
அதுதான் ஔரங்கசீப் காதல் !


aurangzeb க்கான பட முடிவு

1637 ம் ஆண்டு ஔரங்கசீப் , டில்ராஸ் பானு பேகம் என்ற பெண்ணை மணக்கிறார் . அத்திருமணம் அவர் மனத்தால் ஒப்பிய திருமணம் அல்ல .



அவர் ஹிரா பாய் என்ற தக்கான தேசத்து பெண்ணை விரும்புகிறார் .
எப்போதும் ஔரங்கசீப், இங்குதான் இருக்கிறார் .

அவளை ஆட சொல்லி ரசிக்கிறார் !
அவள் அழகில் மயங்கி , சிந்தனையற்று வாழ்கிறார் !

அவருக்கு அவள் மீது கொள்ளை ஆசை !
அவளோ அடிமை பெண் !

எப்படி சமுதாயம் ஒப்பு கொள்ளும் !
இருப்பினும் அவன் இளவரசன் அல்லவா ?

எனவே ராஜபுடின அரசுகள் அவரை எதிர்த்து கேட்கவில்லை !
இருப்பினும் மேல் இடத்து உத்தரவு

நடனம் ஆடிகொண்டிருந்த ஹீரபாய்
அவன் கண் முன்னே சரிந்து இறந்து போகிறாள் !

தாளாத துக்கம் 
வெளிவர விரும்பவில்லை அவன் 
அவள் , அவன் முன்னே இனி ஆட மாட்டாள் 
அவனால் அவளை இனி ரசிக்க முடியாது 

அவன் பார்த்து பார்த்து ரசித்த
கண்கள்
இனி அவனோடு பேசாது !

அவள் பாடல் இனி ஒலிக்காது
இவனும் இனி மயக்கத்தில் இருக்க மாட்டன் .

அப்போதுதான்
ஷாஜஹான் , தன மனைவிக்கு தாஜ்மஹால் எனும்
அற்புதத்தை எழுப்புகிறான்.

கோபம் கொண்ட ஔரங்கசீப்
டெல்லிக்கு விரைகிறான்
ஷாஜஹானை சிறை பிடிக்கிறான் !

மூத்த சகோதரர்களை அழிக்கிறான் !
நான் தான் மன்னன் என 
தானே அறிவித்து கொள்கிறான் !

சமாதனம் பேச வந்த 
குருனாக்கிடமும் 
கொடூரமாய் நடந்து கொள்கிறான் !

ராஜபுடின அரசுகளை எல்லாம் ஆட்டி படைக்கிறான்
ராஜபுதின அரசுகளின் கீழ் இருந்த இந்து மக்களுக்கு
வரி மேல் வரி விதித்து
கொடுமைகாரன் என்று பெயரும்  எடுக்கிறான் !

அவன் நெஞ்சில் ஈவு இல்லை
இரக்கமும் இல்லை
கோபத்திற்கு மட்டும்
அவனிடத்தில்
பஞ்சமில்லை !

பழிவாங்கும் உணர்விற்கு
ஒரு துளியும்
குறைவில்லை !


அவன் பானு பேகத்திற்கு பிறகு
யாரையும் மணக்க வில்லை !

அவன் முதுமை காலத்திலும்
அவன் நினைவுகளோடு வாழ்ந்தது
ஹீரா பாய் மட்டும்தான் !

அவன் செய்த எல்லா தவறுக்கும்
அடித்தளம் போட்டது
ஹீரா பாயின் மரணம் மட்டும் தான் !

அன்று அழிந்தது ராஜபுதின அரசுகள் மட்டுமல்ல !
முஹல் வம்சத்தின் அழிவும் தான் ஆரம்பமானது !

காதல் எல்லாம் செய்யும் !

இந்த மனித சமுதாயத்தின் ஆரம்பம் முதல் 
எல்லா தொடக்கமும் , முடிவும் 
உருவானது 
காதாலால் மட்டுமே !

காதலை வாழவைத்தால்
 அது
ஆக்க வேலைகள் செய்யும் !

காதலை
அழிக்க நினைத்தால்
அழிவு வேலைகள் செய்யும் !

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...