ஆரம்ப காலங்களில் புராண , இதிகாச கதைகளை மையமாக கொண்டு மட்டும்தான் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன . ஆனால் 1960 களுக்கு பிறகு அது நோய்களை அறிமுகம் செய்யம் மையமாக மாறியது . ஒரு நோய் என்ன என்று தெரிந்தால் தான் , அதற்கான மருந்தையே மக்கள் தேடுவர் . நோய் இல்லை என்று எண்ணி விட்டால் , மருந்து எப்படி விற்பனை செய்வது ?
எனவே ஒவ்வொரு மருந்து அறிமுகம் செய்வதற்கு முன்பும் , மருத்துவர்களுக்கு அதிகம் சிரமம் கொடுக்காமல் , அவர்களுக்காக எடுக்கப்பட்ட விளம்பரங்கள் தான் சினிமா !
பாலும் பழமும் - 1961
இந்த படத்தின் மூலம் தான் tiubarclosis எனும் நோய் அறிமுகம் செய்யப்பட்டு , அதற்க்கு மருந்து வெளி நாட்டில் கண்டு பிடித்து விட்டார்கள் . விரைவில் இந்தியாவிற்கு வருகிறது என்பதும் தெரிவிக்க படுகிறது .
நானும் ஒரு பெண் = 1963= ஏவிஎம் productions
இந்த படம் வெளி வந்த பிறகு தான் லோரியால் பாரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது . இந்த படத்தின் மைய கருத்தே ஒரு பெண்ணின் முகம் கருப்பாக இருப்பதால் வரும் பிரச்சனைகள்தான் . அதற்க்கு கிடைத்த மருந்து தான் லோரியல் பாரிஸ்
அன்பே வா = 1966 = ஏவிஎம் productions
இந்த படம் மூலமாகத்தான் சர்க்கரை வியாதி , என்பது அறிமுகம் செய்யப்பட்டது . பிறகு தான் இதற்க்கான மருந்துகள் நமது சந்தைக்கே வந்தன .
வாழ்வே மாயம் = 1982 = சுரேஷ் ஆர்ட்ஸ்
இந்த படம் வந்த பொழுது தான் புற்று நோய் என்பது அறிமுகம் செய்யப்பட்டது அதே நேரத்தில் விவசாயச நிலங்களுக்கு உரம் போட பயிற்சியும் அதிகம் கொடுக்கப்பட்டது . அத்தருணத்தில் உரங்களால் புற்று நோய் பரவும் வாய்ப்பு இருப்பதாக பரவலாக கருத்து இருந்தது . இல்லை புற்று நோய் சிகரெட் பிடிப்பதால் மட்டுமே வருகிறது என்று மக்களை நம்ப வைப்பதற்காக எடுக்கப்பட்டது . உண்மையில் என்டோசல்பான் எனும் உரம் போடுவதால்தான் அதிகமாக் புற்று நோய் பரவுகிறது . இந்த நோயினால் அதிகம் பாதிக்க படுபவர்கள் விவசாயிகள்தான் .
இந்த படத்திற்கு பிறகுதான் இந்த நோய் வெளிப்படையாக அதிக மக்களுக்கு வந்துள்ளது .
பி றகு பல படங்கள் புற்றுநோய் விளம்பரத்தை சுமந்து கொண்டு வந்துள்ளன .
சின்ன தம்பி , பெரிய தம்பி :
இந்த படத்தில் தான் ஹார்ட் அட்டாக் அறிமுகம் செய்யப்பட்டது
அதே போல் எயிட்ஸ் நோய் குறித்து மிருகம் என்ற திரைப்படம் வெளிவந்தது . ஆனால் அது எயிட்ஸ் விழிப்புணர்வாக இருந்தது .
நெஞ்சிருக்கும் வரை - 2006
இந்த படத்தில் உயிரோடு இருக்கும் ஒருவரிடம் இருந்து இதயம் அறுவை சிகிச்சை செய்ய படுகிறது . இதுதான் மூளை சாவு என்று கூறி , இதய அறுவை சிகிச்சையாக நடைமுறையில் உள்ளது .
3
இந்த திரைப்படம் மூலம் மனநோய் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு தானே தற்கொலை செய்து கொள்வார்கள் என்று கூறபடுகிறது ஆனால் இந்த நோய் பற்றி இந்தியாவில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . இது அமெரிக்க மக்களுக்கான வியாதி . இரவை தொலைத்த மக்கள் , எப்போதும் அதேத வெளிச்சத்தோடு வாழ்வதால் வருவது . தற்போது இந்தியாவும் அந்நிலைக்கு வருவதால் , அந்த மருந்துகள் இந்தியாவில் சப்பலைக்கு வந்துவிட்டன . அதன் அறிமுக திரைப்படம் தான் 3 .
இந்த திரைப்படத்தை எல்லோரையும் பார்க்க வைக்க ஒரு நிறுவனம் எடுத்த அதேத முயற்சிதான் உலகமெங்கும் சென்று சேர்ந்த why this கோல வெறிடி பாடல் !
இன்னும் எத்தனையோ திரைப்படங்கள் , நோய்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றன . திரைப்பட இயக்குனரை கேட்டால் அவர் கூறுவார் இது ஒரு நோய் விழிப்புணர்வு திரைப்படம் என்று !
ஆனால் தயாரிப்பளுக்குதான் தெரியும் இதன் பின் உள்ள நோய் விற்பனையும் , அதற்கான மருந்து விற்பனையும் !
No comments:
Post a Comment