இவர் சின்னப்பா என்பவர் . பறையர் இனத்தை சேர்ந்தவர் .1827 ல் வாழ்ந்தவர் . நாரயனனுக்காகவே வாழ்ந்தவர் . ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இல்லாத இன வெறி தற்போதுதான் நடக்கிறது . ஏன் தெரியுமா ? தொழில் நுட்ப வளர்ச்சி !
இதை வளர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வான் தொழில் முனைவோனும் , அதற்க்கு உதவும் அரசியல் வாதியும் .
தன ஜாதியை தானே இழிவென்றும் , உயர்வென்றும் எண்ணுவதும் ,
அதற்காக மாற்று சிந்தனைகளை கையில் எடுப்பதும் , குல தொழிலை சுத்தமாக வெறுப்பதும் இன்று வழக்கமாகி விட்டது .
அடுத்த ஜாதி காரனுக்கு மரியாதை கிடைகிறது என்றால் , அவன் செய்யும் தொழிலை தானும் செய்வது , அவன் படிக்கும் படிப்பை தானும் படிப்பது என்று யாரோ ஒருவரை துரத்தி கொண்டே இருக்கிறோம் .
நம் மீது நமக்கு பல நேரங்களில் நம்பிக்கை இல்லை
நாம் செய்யும் தொழில் மீதும் மரியாதை இல்லை
உன்னால் மரியாதை கொடுக்க படாத எந்த ஒரு தொழிலும் உன்னை உயர்த்தாது .
எந்த தொழிலும் !
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் !
தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் !
இன்று அனேக வேலை வாய்ப்பு இல்லாத நிலை உருவாக காரணமே இது தான் !
பால் கறப்பதும் ,
வேளாண் செய்வதும்
செருப்பு செய்வதும்
மரம் இளைப்பதும்
கட்டிடங்கள் கட்டுவதும்
குப்பை அள்ளுவதும்
பறை அடிப்பதும்
முடி திருத்துவதும்
படகு செய்வதும்
பாதுகாப்பு பணியில் இருப்பதும்
வாய்கால் வெட்டுவதும்
கிணறு வெட்டுவதும்
இசை கருவிகள் வாசிப்பதும்
நகை செய்வதும்
பானை செய்வதும்
கூரை வேய்தலும்
கூடை முடைவதும்
இழிவென்று என்று முதல் நினைக்க ஆரம்பித்தோமோ , அன்று முதல் ஆரம்பித்தது நம்மை ஆட்டுவிக்கும் உயர்ஜாதி வழக்கம் .
ஒருவன் உன் தொழிலை இழிவாக பேசினால் ,
நீ நிருபித்து காட்டு இதுதான் உன்னை விட சிறந்த தொழில் என்று !
அதை விடுத்து அவனது ஜாதிக்கு மாறி விடலாம் என்று நினைப்பது
உன் மேல் உனக்கே மரியாதை இல்லை என்பதையே காட்டும் .
நன்றாக யோசித்து பார்த்தால் நாம் எந்த தொழிலை எல்லாம் அசிங்கம் , கேவலம் என்று ஒதுக்கி வைத்தோமோ அவற்றின் காலி இடங்களைத்தான் தொழில் நுட்பம் எனும் பேய் நிரப்பி கொண்டு இருக்கிறது .
உண்மையில் எந்த தொழிலும் கேவலம் இல்லை . ஒருவன் ஒரு புதிய தொழில் நிட்பத்தை கண்டறிந்து விட்டால் . ஏற்கனவே அதை சிறப்பாக செய்பவனை பார்த்து , உன்னுடைய தொழில் கேவலமானது என சிலருக்கு சம்பளம் கொடுத்து பேச சொல்லி , அதந்த தொழிலுக்கான இடத்தை காலியாக்கி அதை நிரம்ப்புவதே மார்க்கெட்டிங் செய்யும் வேலை
உன்னிடம் எப்படி உன் தொழில் கேவலம் என்று கூறப்பட்டதோ , அப்படிதான் இதை பயன்படுத்துவோர் எல்லாம் ஏழைகள் என்றும் , பொருளாதரத்தில் பின் தங்கியவர்கள் என்றும் ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது .
இந்த வேலையை சரியாக செய்து பலரையும் பயன்படுத்த விடாமல் தடுத்ததும் , வேலை வாய்ப்பின்மையை உருவாக்கியதும் அரசியலும் , அதை விட முக்கிய பங்கு கொண்ட சினிமா எனும் அரக்கன் .
இதை எல்லாம் யோசிக்காமல் ,
ஜாதி மாறி விட்டால் வாழ்வாதாரம் உயர்ந்து விடும் என்று
நினைப்பது ம் , பூணூல் போட்டு கொண்டால் என்னையும் எல்லோரும் மதிப்பார்கள் என்று நினைப்பதும்,
கோனார் எனும் பெயரை யாதவர்கள் என்று மாற்றுவதும்
பொற்கொல்லர் எனும் பெயரை விஸ்வகர்மா என்று மாற்றுவதும்
பள்ளர் என்பதை தேவேந்திர குல வெள்ளாளர் என்று கூறுவதும்
தன ஜாதி பெயரில் தேவர் எனும் பட்டதை இணைப்பதும்
இவ்வாறு சம்ஸ்கிருத பெயராக தன ஜாதி பெயரை மாற்றி விட்டால் நம்மை எல்லோரும் மதிப்பார் கல் என்று நினைப்பதும்
நம்மை நாமே இழிவு படுத்துவதற்கு சமம் .
என் தாயும் , தகப்பனும் ,
என் பாட்டனும் , பூட்டனும்
என்ன ஜாதியால் இழிவுபடுத்தபட்டார்களோ
அதே பெயரால் ,
எவன் எம்மை வீழ்த்தி னானோ
அவனை வீழ்த்தி காட்டுவேன் என்று கூறினால்
அது தான் வெற்றியின் முதல் அடி !
சூரியனை நிலவென்று பெயர் மாற்ற வேண்டாம் !
சுட்டெரிக்கும் சூரியனாய்
தன்னை தான் உணர வேண்டும் !
நினைவிற் கொள்க !
போற்றுவார் போற்றலும் ,
தூற்றுவார் தோற்றாலும்
இந்த உலகின் இயற்கை !
Very informative, thanks for posting such informative content. Expecting more from you.
ReplyDeleteTamil Matrimonial Services