Monday 17 August 2020

கல்வியை கொண்டு கேலி

 எங்கு நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் ஒரு கிராம புற இளைஞனுக்கு ஆயத எழுத்தும், உயிர் எழுத்தும் தெரிய வில்லை.
இதை பற்றி பல கருத்துக்களோடு சுற்றி வரும் காணொளி இது.

முதலில் இப்படி கேள்வி எழுப்பி, கிராம புற இளைஞர்களை, வெட்க பட செய்ததே முதல் தவறு எனது பார்வையில் !

மொழி அறிவு என்பது, யாரோ நம் முன்னோர்கள்,இன்று நாம் எழுதும் எழுத்தை எழுத, படிக்க தெரியாத நம் முன்னோர்கள் இந்த இயற்கையோடு பேசி, பழகி எங்கோ மலையில் கிறுக்கி, தலைமுறைகளுக்கு கடத்தி பிறகு தானே வரி வடிவம் பெற்றது.
உண்மையில்,
இந்த மொழி வடிவம் என்பதும், வரி வடிவம் என்பதும் நாம் அனுபவமிக்கவர்களிடம் இருந்து கற்றவை. கடனாக பெற்றவை.
அப்படி இருக்க, இயற்கையோடு வாழும் கிராம புற, மலைவாழ் மக்களை எல்லாம், படிக்க சொல்வதும், அதில் அவர்களுக்கு பயிற்சி இல்லை என்பதும் முட்டாள் தனம் ஆகும்.

இன்று மெத்த படித்த மேதாவிகளிடம் ஆங்கிலத்தில் உயிர் எழுத்து கூறு. மெய் எழுத்து கூறு, தமிழின் குற்றியலுகர, குற்றியலிகர ஒலிப்பு முறை போன்ற ஆங்கிலத்திலும் கூறு என்று கூறினால், எந்த அளவிற்கு தடுமாறுவார்களோ, அந்த நிலைதான்,
கிராமபுற மக்களுக்கும் !

வாழத்தான் பிறந்தோம் !
அதற்கு தேவை
உணவு, உடை, உறையுள்.
இவையெல்லாம் வணிகத்திற்கு கீழ் கொண்டு வந்து, அதற்கு ஏற்றார் போல நகர் புற வாழ்க்கை மாறியது என்றால், கிராமங்களும் மாற வேண்டும் என்பது,
நுனி மரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவது போன்றது !

எழுத்தறிவு என்பது பெற்றால் தான் வாழ்க்கை என்ற விளம்பரம் தரும் பள்ளிக்கூட சந்தைகளுக்கு, சராசரி மக்களும் விளம்பரம் செய்யாதீர்கள்.

நான் பார்த்து இருக்கிறேன்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், திருவண்ணாமலை மக்கள், பெங்களூரு வீதிகளில் விற்பனைக்கு வரும் போது, கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, என்று அழகாக பேசுவதை பார்த்து இருக்கிறேன். அவர்களுக்கு, இந்த மொழிகளில் எத்தனை எழுத்து உள்ளது என்பது கூட தெரியாது.

ஓசூர் சந்தைக்குள் தெலுங்கு மொழியில் மக்கள் பேரம் பேசுகிறார்கள்.

சேலத்தில் இருந்து ஒகனேகல் செல்லும் வழிகளில் மக்கள் கன்னடத்தில் சரளமாக பேசுகிறார்கள்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா பகுதிகளில் பணிகளில் உள்ளார்கள், அங்குள்ள மொழிகளை புரிந்து கொண்டு, பேசவும் செய்கிறார்கள்.
யாருக்கும் அந்தந்த மொழியில் எத்தனை எழுத்து உள்ளது என்பது கூட தெரியாது.

தேவைகளும், அவசியங்களுமே, ஒருவன் எதை கற்க வேண்டும், எதை தேட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.
எழுத்தறிவு ஓரே ஒரு புள்ளி அதிகம் பெற்று தரலாம். அவ்வளவு தான். ஆனால் அனுபவ கல்வியை ஒரு போதும் தராது.

கல்வியை கொண்டு, கேலி பேசுவதும், மாடு மேய்ப்பாய் என்பதும் கல்வி நிலையங்களுக்கான சந்தை மேம்பாடு கோட்பாடுகளாகும்.
Don't do marketing for private education or any language.
#stopmarketingforlanguage

எதிர்மறை விளம்பரங்கள்.- ஹிந்தி எதிர்ப்பும்,

 எதிர்மறை விளம்பரங்கள்.

நேர்மறை விளம்பரங்களை விட எதிர்மறை விளம்பரங்களை தான் மனம் அதிகம் நாடும்.

Adults only என்பது எதிர்மறை விளம்பரத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அந்த ஒற்றை வார்த்தை தான், பல பார்வையாளர்களையே உருவாக்குகிறது.

அப்படி தான்
ஹிந்தி எதிர்ப்பும்,
Neet தேர்வு எதிர்ப்பும் !

கடந்த ஆண்டு மட்டும் ஹிந்தியில் தனியாக தேர்வு எழுதிவர்களின் எண்ணிக்கை, பிற மாநிலங்களை விட அதிகம்.

Neet தேர்வு எதிர்ப்பு என்பதும் மறைமுகமாக நம் மருத்துவத்தை எதிர்த்து, ஐரோப்பிய மருத்துவத்தை வாழ வைக்கும் போராட்டம் தான். உண்மையிலேயே தமிழ் மொழிக்காக போராட வேண்டும் எனில், தமிழ் மருத்துவர்கள் வீதிகள் தோறும் வேண்டும் என்று தானே போராடி இருக்க வேண்டும்.

உண்மையிலேயே, வளர்ச்சி என்பது பயிற்சியில் உள்ளவரை தான் இருக்கும். இது தமிழுக்கும் பொருந்தும்.

கூரை வீடுகள் கலைந்த போதே, அது சார்ந்து வார்த்தைகளும் சேர்ந்தே அழிகின்றன.
மாட்டு வண்டிகளோடு மாடுகளும், குதிரை வண்டிகளோடு குதிரைகளும், கழுதைகளும் அழிந்து விட்டன.
வாகன உற்பத்தி, பயன் தர வேண்டிய யானைகளை எதிரிகளாக்கி விட்டன.

பல ஆட்சியாளர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த போதும் வளர்ந்த இம்மொழி,இப்போது தான் வளர்ச்சி நிலையில் இருந்து பின்னோக்கி செல்கிறது.
காரணம் பயன்பாடுகள் இல்லை.
ஒரு மொழி வளர,
அம்மொழியோடு தொடர்புடைய தொழில் வளர்ச்சி இருக்க வேண்டும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’DON'T BUY THIS JACKET’ எனச்சொல்லும் உரை
படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’மனோவசிய பயிற்சிக்கு இந்த மாதிரி புத்தகங்களை படிக்க வேண்டாம் Book is Dangerous’ எனச்சொல்லும் உரை

மொழி எழுத்துரு

 தொடர்ந்து சில வரலாற்று ஆய்வாளர்கள், வணிகர்களால் மட்டுமே தமிழ் வாழ்ந்தது என்றும், சில வரலாற்று ஆசிரியர்கள், வணிகர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள எழுத்தை எல்லாம் கொண்டு வந்து தான், இம்மொழி எழுத்துரு கொண்டு வளர்ச்சி பெற்றது என்றும் பதிவு செய்கிறார்கள்.


இது தொடர்பாக இரண்டு கேள்விகள் :

ஒன்று :
இம்மொழி எழுத்துரு வணிகத்தால், வணிகர்களுக்காக உருவானது எனில், அவ்வணிகர்களுக்கு கீழ் பணியாற்ற விரும்பும் மக்கள் கற்பதில் தவறு இல்லை. ஏன் எல்லோரும் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இம்மண்ணில் விதைக்கப்பட்டது?


இரண்டு :
ஒரு வணிகன், தன்னுடைய வணிகம் தொடர்பான கணக்குகளை பதிவு செய்ய எழுதுவான்.
இன்னொன்று, தான் பிற நாடுகளில் கண்டதை, கேட்டதை பதிவு செய்வான்.
ஆனால் இலக்கணம் எல்லாம் எழுதுவானா என்ன?

இரண்டில் எது சரி?


முதல் கேள்வி சரி எனில், இலக்கியம், இலக்கணம் என்று பெருமைகளில் இருந்து விலக கற்று கொடுங்கள்.


இரண்டாவது கேள்வி சரி எனில், வரலாற்று ஆசிரியர்கள்,
வணிகத்தால் இம்மொழி எழுத்துரு வளர்ந்தது என்று பதிவு செய்வதை நிறுத்துங்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’உலகளாவிய வணிகத்தில் முன்னோடிகளாய் விளங்கிய பழந்தமிழ் வணிகர்கள்’ எனச்சொல்லும் உரை

வீரமா முனிவர்

 வீரமா முனிவர்

1710ல் தமிழகம் வந்து,
அடுத்த 30 ஆண்டுகள் இங்கு இருந்த ஓலை சுவடிகளையெல்லாம் திரட்டி,

போர்த்துகீசிய மக்கள் தமிழை புரிந்து கொள்ள, தமிழ் போர்த்துக்கீசிய அகராதி உருவாக்கி

பல மருத்துவ நூல்களையெல்லாம் எழுதி,
தமிழுக்கு சேவை செய்தாராம்.

ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம்.
இவர் ஐரோப்பியத்திற்கு தானே சேவை செய்து இருக்கிறார்.
தமிழில் உள்ளதை எல்லாம், அவர்கள் மொழியில் மாற்றி எழுதி கொள்ள வகை செய்வது எப்படி, தமிழுக்கான சேவை ஆகும்?

இவர் எல்லா ஓலைசுவடிகலையும் ஐரோப்பியம் அனுப்பிய பிறகு தான்,
1750ல்
தொழிற்புரட்சி உருவானாதாமே !

ஓலைச்சுவடிகள் திருடப்பட்டதா ?

ஓலைச்சுவடிகள் திருடப்பட்டதா ?

 


ஒலைச்சுவடியில் உள்ள மருத்துவத்தையோ, வானியலையோ, அறிவியலையோ பயன்படுத்துபவர்கள் முட்டாள்கள் என்று பதிவான பிறகு,

அதை யாருமே பயன்படுத்தாத போது,

ஏன், யாருக்காக ஓலைச்சுவடிகள் திரட்டப் பட வேண்டும்?

உண்மையில்

பாதுகாக்க வேண்டுமாயின்,

ஓலைச்சுவடிகள் வைத்து இருப்போருக்கு அதை படிக்க கற்று தருவது தானே நியாயம் ஆகும்.

முதியோர் கல்வி வைத்து பாடம் நடத்திய நாட்டிற்கு,

ஓலைச்சுவடி பாடம் நடத்துவது அத்தனை கஷ்டமா?


அப்படி செய்தால், அவரவரே படிக்க போகிறார்கள்.

சேவை செய்பவர்களும் தேவை இல்லையே !t

வரலாற்று ஆய்வாளர்களும், தமிழ் ஆய்வாளர்களும் !

 வரலாற்று ஆய்வாளர்களும், தமிழ் ஆய்வாளர்களும் !

கடந்த வாரம் ஒரு வரலாற்று ஆசிரியர் சோழ நாட்டின் வணிகம் குறித்து பேசினார்.
அப்போது, ராஜராஜ சோழன் காலத்தில் நாணயங்கள் செம்பில் செய்யப் பட்டு, அதன் மேல் வெள்ளி பூச்சு இட்டு, பிறகு தங்க பூச்சு பூசப்பட்டுள்ளது.
அந்த நாணயங்கள் இன்னும் மெருகு குறையாமல் உள்ளது. அதில் ஏதோ பச்சிலை தடவி அதை செய்து இருக்கிறார்கள் என்று கூறினார்.

அதே வாரத்தில் , சோழர் காலத்தில் சித்தர்கள் என்ற தலைப்பில் ஒரு தமிழ் ஆசிரியர் ஒருவர் பேசினார். அவரும், சோழர் காலத்தில் 18சித்தர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்கள் பிற்காலத்திய சித்தர்கள் என்று வழங்கப்பட்டார்கள். அவர்கள் ரசவாத எனும் ரசாயன முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கூறினார்.

ஆனால் ஏனோ, அந்த வரலாற்று பதிவும், இந்த தமிழ் பதிவும் இணைய மறுக்கிறது.

இடையில்
ஒரு கல்வெட்டு தேவை வரலாற்று ஆய்வாளர்களுக்கு !

ஆனால், தமிழ் ஆசிரியர்களுக்கோ, அறிவியல் ஆய்வாளர்களின் துணை தேவை.

செம்புபொன் னாக்குஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்புபொன் னான திருவம் பலமே

என்று திருமூலர் கூறி விட்டார்.
ஆனால் அதென்ன
ஸ்ரீயும், கிரியும், இது தமிழ் போல இல்லையே என்ற பகுத்தறிவு தான், நம் தமிழ் அறிவியல் பாழாய் போக மூல காரணம்.

ஸ்ரீ என்றால் ஆகாயம் (வானம் ), அதற்காகவென உப்பு உள்ளது.
சோழர்கள் இதை வானவன் என்று அழைத்து கொள்கிறார்கள். வானவன் மாதேவி என்ற பெயரில் ராஜராஜ சோழனின் மனைவி ஒருவரும் உள்ளார்.

கிரி என்றால் காற்று.
மலைப்பகுதியில் பதமான குளிர் உள்ள உப்பு.

இவவாறு பல மூலப்பொருள் களை கொண்டு,
ஒரு ரசாயன புரட்சியே செய்த சோழ மண்டலம் அது குறித்து பேசுவதே இல்லை.

ஆங்கிலத்தில் au, fe, cu, எல்லாம் பயன்படுத்துவது போல தமிழிலும் ரசாயணத்திற்கென்று தனி நடை உள்ளது.

தமிழும், வரலாறும் ஒன்றாகி, தமிழின் அறிவியலை வெளிக்கொணருமா?

Thursday 13 August 2020

LUX என்றால் luxury

LUX  என்றால் luxury


LUX என்பது குளியல் சோப் எனும் டாய்லட் சோப் .

L U X  சோப்பு லீவர் ப்ரோதேர்ஸ் என்பவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

இது இந்திய வரலாற்றின் முக்கிய கட்டம் .
வணிகம் , விளம்பரம் ஆகியவற்றிற்கும்  வரலாறுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு .


1888 ல் சன் லைட் சோப்பு என்று ஆரம்பிக்க பட்டு , lifebuoy ,விம் , pears , hudson போன்ற சோப் க்களையும் அறிமுகம் செய்தனர் லீவர் பிரோதெரஸ் .

பிறகு 1930 களில் dutch  நிறுவனமான மார்கரின் uni யுடன் இணைத்து unilever எனும் பிரிட்டிஷ் நிறுவனமாக மாறியது .






இந்நிறுவனத்தின் கீழ் எல்லா முக்கிய நடிகைகளும் , தங்கள் அழகிற்கு இது தான் காரணம் கூறி மக்கள் மனதில்  பதிய வைத்துள்ளனர் .

1918 ம் ஆண்டு டால்டா எனும் வனஸ்பதி தயாரிப்பில் இறங்கியது .
LBIL ( Lever Brothers India Ltd ) .பிறகு 1931 ல் வனஸ்பதி சந்தைப்படுத்தப்பட்டது .

அதன் பெயர் ஹிந்துஸ்தான் வனஸ்பதி .

1959 surf அறிமுகம் செய்தது

1969 களில் Rin சோப்பு அறிமுகம் செய்தது .

1975 ல் Fair & Lovely ஐ சந்தைப்படுத்தியது .

1985 ல் LIPTON tea ஐ அறிமுகம் செய்தது .

1991 ல் பற்கள் சார்ந்த நிறுவனங்களுடன் இணைவு செய்து

1992 ல் pepsodent அறிமுகம் செய்தது .

1993 ல் TATA OIL MILLS ஐ இணைத்து .

1994 ல் Brook Band ஐ இணைத்து Lipton brook band Ltd ஆக மாறியது .

1996 அமெரிக்க நிறுவனமான johnson & sons நிறுவனத்துடன் 50:50 என்ற
முறையில் இணைந்தது .

1998 கச்சாஎண்ணெய் தொழிலில் ஈடுபட தொடங்கியது.

ஒருபுறம் ஆயில் தொழில்  செய்து கொண்டே Kwality icecream யும் கையில் எடுத்தது ..

2000 வது ஆண்டு Fair & Lovely Fairness Cream கொடுக்க ஆரம்பித்தது .

மேலும்

Ponds Talcum Powder , Rexona , Godrej , Lakme sunlight Cream,Hamam , Vaseline ,Dove ,Axe Deodorant ,Clinic Plus  ஆகியனவும் கொடுத்தது .

2001 முதல் parax Agri Seeds LTd உடன் இணைந்து விதைகளை விற்க ஆரம்பித்தது .

2002 ல் அன்னபுர்ண உப்பை அறிமுகம் செய்தது .

இதே ஆண்டு sunsilk shampoo மற்றும் அதன் உற்பத்தி பொருட்களை தன நிறுவனத்துடன் இணைத்து கொண்டது .

மேலும் மத்யப்ரதேஷ அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு , விந்தய வல்லே , umbrella brand உணவு பொருட்களை அறிமுகம் செய்தது .

கிரீன் லபெல் டி deluxe Green Label ஆக மாறியது .

திடீரென

மக்கள் ஆயுர்வேத பொருகள் மேல் கவனம் செலுத்தியதால்
ஆயுர்வேதிக் அறிவியல் நிலையம் ஆரம்பித்து ayus ஆயுர்வேதிக் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது .




2004 ஆம் ஆண்டு Mr .Fruit என்ற பெயரில் மங்கோ ஜூஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று சந்தையில் கிடைக்கும் மங்கோ ஜூஸ் க்கும் சொந்தகாரர்கள் இந்த unilever நிறுவனத்தார்.

powerful surf excel , Vim power , surf பவுடர் என்று அதன் முந்தைய எல்லா பொருட்களிலும் அதிக சக்தி கொண்டது கூறி கூடுதல் ரசயனதுடன் அறிமுகம் செய்தது .

2005 ம் ஆண்டு ஐஸ் டீ , பாட்டில் களில் கிடைக்க ஆரம்பித்தது .

தொடர்ந்து , சோப்பு கள் , அழகு சாதனா பொருட்கள் , பற்பொடிகள் , ஆயில் , உணவு பொருட்கள், சிக்கன் பொருட்கள் , விதைகள் , juice பாட்டில்கள் , தண்ணீர் பாட்டில்கள் ,பெப்சி , ஆயுர்வேத பொருட்கள், உப்பு ,  ஆகிய அனைத்தும் இந்நிறுவனத்தால் மட்டுமே இந்தியாவிற்குள் கொண்டுவரப்படுகிறது  .

2015 ல் swachh Aadad , மற்றும் Swachch barath திட்டத்தை கொடுத்ததும் இந்நிறுவனமே !

இந்த டோயலேட் சோப்பு விளம்பரங்களில் , முதன் முறையாக நடித்த பெண் , வட இந்திய நடிகை லீலா சிட்னிஸ் .

இந்திய தலை எழுத்தை ஒவ்வொரு முறையும் மாற்றுவது 
வணிக நிறுவனங்கள் தான்

இந்திய மக்களின் வாழ்க்கை பாதைகளை மாற்றுவதும்

வணிக நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரங்கள் .

யுனிலீவர் நிறுவனத்தின் வளர்ச்சி என்பதும் , இந்திய பயன்பாடு , கலாசார வளர்ச்சி என்பதும் வேறுவேறு அல்ல.
ஒரு நிறுவன வளர்ச்சி என்பதும் ஒரே நாளில் நடந்து விடுவது அல்ல .
கலாசார மாற்றத்தை ஒரு நிறுவனமும் , அதன் வளர்ச்சிக்காக தரப்படும் விளம்பரங்களும் தீர்மானிக்கின்றன.

தமிழநாட்டின் கலாசார மற்றும் பொருளாதார முன்னேற்றங்களும் வேறு வேறாக பிரிந்து செல்லாது .எனவே தமிழ்நாட்டின் , தமிழர்களின் கலாசார , பொருளாதார முன்னேற்றத்தை ஒரு நல்ல தமிழர் நலன் நோக்கும் நிறுவனத்தால் மட்டுமே கொண்டுவர முடியும் .
அது தமிழர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் விரைவில் தமிழர் பொருளாதாரம் முன்னேற்றம் பெரும் என்பது உறுதி !


தரவுகள் : இணையம் 

உண்டியல் மற்றும் hundi

 உண்டியல் மற்றும் hundi 

------------==========--------------


உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று கூறுகிறது புறநானூறு. 

அது உணவளிப்பதை பற்றி கூறப்பட்ட பாடல். 


7ம் நூற்றாண்டு க்கு பிறகு உண்டி- hundi - உண்டியல் என்பதின் பொருள் உணவு என்பதில் இருந்து விலகி சேமிப்பு என்றாகிறது. 

அதுவும் பிற் காலத்தில் கடன் வழங்க தரப்படும் ரசீது என்றாகியது. 


Hundi என்பது கிட்ட தட்ட தற்போதைய cheque போன்றது. 


அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழக வணிக சமூகங்கள் சில, தங்கள் வணிகம் சார்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். அங்கு அவர்கள் சமூக பிரச்சனைகள் சார்ந்து பேசப்படும். அவ்வாறு அமைக்க பட்ட அமைப்பும் கோயில் என்ற பெயரையே பெற்றுள்ளது. 

காரைக்குடியை சுற்றி 9கோயில்கள் உள்ளன என்று வரலாறு கூறுகிறது. 


இந்த கோயில்களில் ஒரு உண்டியல் வைக்கப் படும். இந்த உண்டியலில், அந்த கோயிலின் உறுப்பினர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் தங்களால் இயன்றதை பணமாக, தங்கமாக என்று போட்டு வருவார்கள். அந்த சமூகத்தில் யாருக்கேனும் வணிகம் தொடங்க நிதி தேவைப்பட்டால் அந்த உண்டியலில் இருந்து கடன் வழங்கப்படும். அதுவும் வட்டியுடன் !

அவ்வாறு வழங்கப்பட்ட பணத்தை கொண்டு, தங்கள் வியாபாரம் ஓரளவு வளர்ந்தவுடன், தான் பெற்ற கடனை வட்டியுடன் திருப்பி கொடுப்பார்கள். அந்த பணம் மீண்டும் அந்த சமூகம் மற்றும் கோயில் செலவுக்கு பயன்படும். 

இது தான் கோயில் உண்டியல்களில் நடந்த பொருளாதாரம் !


பிறகு கி. பி 1500களில் ஒரு hundi உருவாகி உள்ளது. அதாவது, ஒருவர் தனக்கு தெரிந்த ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை கடனாக தர சொல்லி எழுதி கொடுப்பது. 

இது promissory note என்று எழுதி வாங்கிக் கொண்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாதாரம் சார்ந்த இடங்களில் அங்குள்ள உறுப்பினரகள் தவிர வேறு பிறருக்கு அனுமதி தர வில்லை.


இது போன்று கோயில் உண்டியல் பணத்தை வட்டிக்கு கொடுக்கும் வழக்கத்தை மன்னர்களும் செய்து இருக்கிறார்கள். ஆனால் நோக்கம் சற்று வித்தியாசம் கொண்டது. 


பிற்காலத்தில், 

மன்னர்களை தோற்கடித்து, பொது கோயில்களை கைப்பற்றிய ஆங்கில அரசு, வணிகர்களை கைப்பற்ற இயலவில்லை. 

1806ம் ஆண்டு bank of culcutta உருவானது. 

1828ம் ஆண்டு bank of mumbai உருவானது. 

1843ம் ஆண்டு bank of madras உருவானது. 

பிறகு 

 1881 ல் hundi என்பதற்கு பிரிட்டிஷ் அரசு சட்டம் இயற்றியது. மூன்று வங்கியும் இணைந்தே imperial bank உருவானது. இது பின்னர் state  bank of india என்று மாறியது. 


1855ம் ஆண்டு நவம்பர் மாதம் கோயில் நுழைவு போராட்டம் முதன் முறையாக நடந்தது. என்பதும் குறிப்பிட தக்கது. 


"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் "






Raam currency - ராம் முத்ரா - ராம் ரூபாய்

 ஏன் நெதர்லாந்தில்

 Raam currency ? 

=================

ஒரு raam என்பது 10யூரோ விற்கு சமம் என்று கூறப்படும் இந்த பணம் நெதெர்லாந்திலும், அமெரிக்காவிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. 


யார் இதை உருவாக்கினார்கள்? 


ஆதிசங்கரர் உருவாக்கிய நான்கு மடங்களில் ஒன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர் மடம். 

இதில் 1941ம் ஆண்டு சங்கராச்சாரியராக இருந்தவர் 

பிரம்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகள். 

இவருக்கு நான்கு சீடர்கள். 

அவர்கள் 


1.சதானந்த ஸ்வாமிகள்  

2.ஸ்வாமி சொரூபனந்தா ஸ்வாமிகள் 

3. ஸ்வாமி கர்ப்பத்திரி 

4.சுவாமி மகேஷ் பிரசாத் வர்மா 


சதானந்த ஸ்வாமிகள்-


இவர் பிரம்மானந்த ஸ்வாமிகள் காலத்திற்கு பிறகு ஜோதிர் மடத்தின் அடுத்த சங்கராச்சாரியார் ஆகி விட்டார்.


சுவாமி சொரூபனந்த ஸ்வாமிகள் -

சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர். இவர் இப்போது துவாரகா பீடத்தின் மடாதிபதி ஆகி விட்டார். 


சுவாமி கர்ப்பாத்ரி -


இவர் கோவர்த்தன பீட மடாதிபதி ஆகி விட்டார். 


ஆக இந்தியாவில் உள்ள ஆதி சங்கரர் மடங்களின் பீடாதிபதிகள்( சாரதா பீடம் தவிர்த்து ) அனைவரும் ஓரே இடத்தில் இருந்து வந்தவர்கள். 


இவர்களில் நான்காவது சீடர் தான் 


சுவாமி மகேஷ் பிரசாத் வர்மா. 

இவர் உலக அளவில் பேசப்படும் மடாதிபதி. 

இவர் மகரிஷி மகேஷ் யோகி என்றே வழங்கப்படுகிறார். 


இவர் 

அமெரிக்காவில் அயோவா என்ற இடத்தில் தனி நாடே அமைத்து விட்டார். 

Global country of world peace. 

வேதிக்  நகரம் என்ற நகரம் இவரால், 

2000வது ஆண்டு oct 17 ல் தான் இந்த வேதிக் நகரம் உருவாக்கப்பட்டது. 

உலகின் முதல் முறையாக தனியாக கட்டமைக்கப்பட்ட நகரம் இது. 


இந்த நகரம் வெளியிட்ட பணம் தான் 

Raam currency. 

இதில் 18மொழிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, ஹிந்தி, மராட்டி, பெங்காளி, சைன மொழி கூட இதில் இடம் பெற்றுள்ளது. 


2004ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை மங்காத்தான் பகுதியின் 

 American bank note company building ஐ தன் வசத்தில் வைத்து இருந்து பிறகு விற்று விட்டது. 


இந்த பணத்தை நெதர்லாந்து நாட்டின் 30கிராமங்களில் புழக்கத்தில் ஏற்று கொண்டு உள்ளதாகவும் தகவல். 


அதே போல தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில், வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளுக்கு இந்த பணத்தை தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளார்கள். Petro dollar போல !


இந்த பணம் வடக்கு போலந்து நாட்டில் haarleem என்ற ஊரில் isaak வம்சத்தவரால் உருவாக்கப் பட்ட அச்சு நிறுவனத்தில் உருவாக்கி உள்ளார்கள். 


2018ம் ஆண்டிலேயே, 

இந்த பணம், 

நெதர்லாந்தில் ஏன்? 

இந்தியாவில் அல்லவா இருக்க வேண்டும் என்று பலர்  கேள்வி எழுப்பியும் யாரும் பதில் தர வில்லை. 


ஒரு வேளை வருங்காலத்தில் வருமோ என்னவோ? 


இந்த உலக அமைதி நாட்டின் தலைவர் 

Tony Nader. 

இவர் பிறந்தது, படித்தது அனைத்தும் லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரம் தான். 

சமீபமாக துறைமுகத்தில் இருந்த அம்மோனியா நைரேட் வெடித்து சிதறிய தன் பொலிவிழந்த அதே பெயருட் நகரம் தான். 


மகரிஷி மகேஷ் யோகி அவர்கள், நெதர்லாந்தில், லும்பார்க் நகரில்  தன் கடைசி காலத்தை, 2008ல் முடித்து விட்டார். 


Maharishi international university என்ற பெயரில் இப்போதும்

 you tube சேனல் தங்களது மாணவர்கள் சாதனைகளை பதிவு செய்து வருகிறது. 


படங்கள் :

Meru என்று வழங்கப்படும் 

Maharishi European Research Univercity 

Raam currency 



Wednesday 12 August 2020

உலக யானைகள் தினம்

 உலக யானைகள் தினம்


இந்தியாவில் மட்டும்
11, 89, 826
தோல் தொழிற்சாலைகள் உள்ளன.
==================

ஆகஸ்ட் 12, 2020
இன்று உலக யானைகள் தினம்.

ஒரு நாள் யானைகள் தினம் கொண்டாடியதும் யானைகள் மீது நமக்கு மரியாதை உள்ளது என்றோ, அவற்றை நாம் காக்க போகிறோம் என்றோ அர்த்தம் இல்லை.
அதனால் கடந்து போவோம் என்று நம் எண்ணங்கள் கூறலாம்.


ஆனால், கடப்பதற்கு முன்னால்,


கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டு தமிழ் மொழி உள்ளதாயின் தமிழோடு பல்லுயிர்களும் உள்ளன.
தமிழில்
போர், காதல், இறைவன் இவற்றை பற்றி சொல்லப்பட்ட செய்திகள் மிகக்குறைவு தான்.
ஏனெனில்,
தமிழ் முழுவதும், மரங்களும், பறவைகளும், விலங்குகளும், புல், பூச்சிகளும் தான் இருக்கினறன.

தொல்லியல் முழுக்க, விலங்குகள், இல்லாத பழங்காசுகளே இல்லை எனலாம் .
எல்லா தொல்லியல் தடயத்திலும் யானைகள் பற்றி தகவல்கள் அதிகம்.

யானை மீது இல்லாத,
ஒரு வரலாற்று தலைவனை அறிமுகம் செய்ய இயலாது.
ஆனால் யானைகள் இன்று தன் மரியாதையோடு தான் உள்ளனவா?

யானை படை என்ற ஒன்றை வைத்து இங்குள்ள மன்னர்கள், யானைகளை கொண்டு பயிற்சி கொடுத்து போர் செய்த போது கூட அழியாத யானை கூட்டங்கள் இன்று அழிந்து வருகின்றன.
அன்று அழியாத காடுகள் கூட இன்று தடயங்களாக கூட இல்லை.


ஏனெனில் நம் பொருளாதார முன்னேற்றம் என்பது,
தோல் துறையிலும், தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற பணப்பயிரிலும், மண்ணிற்கு எதிரான விவசாய முறைகளிலும் சிக்கி கொண்டுள்ளது.

என்று ஐரோப்பியதை கையில் கொண்டு, நம் பொருளாதார வளர்ச்சிக்கு அவன் காட்டும் வழிகளை பின்பற்ற ஆரம்பித்தோமோ, அன்றே
நம் பல்லுயிர் பேணும் எண்ணங்கள் காற்றோடு கலைந்து விட்டன.

எந்த உயிரின் தோல் என்றும் தேடாமல் நாம் பயன்படுத்தும் தோல் பொருள்களால்,
ஆடு, மாடு, முயல், முதலை, யானை, மான், பாம்பு, ஓணான், உடும்பு என்று எல்லா உயிர்களும் அழிந்து கொண்டு இருக்கின்றன. ஒரு செய்தியின் படி, இந்தியாவில் மட்டும்
11, 89, 820 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் உற்பத்தி மூலப்பொருள்களுக்கு எங்கே செல்வார்கள்? யார் தருவார்கள்?

உலகின் மிகச் பெரிய 10தோல் தொழில் சாலைகளை கணக்கில் எடுத்து கொண்டால், இந்தியாவின் bata நிறுவனமும் முதலிடம் பெறும்.
இதுவே இந்தியாவில்
தமிழ்நாட்டில் தான் அதிக தோல் உற்பத்தி நடக்கிறது என்று
Exportgenious.com கூறுகிறது.


இப்படியாக 2017ம் ஆண்டு அரசு தோல் தொழிலுக்கென்று சில விதிமுறைகளை விதித்துள்ளது. இதனால் மாடுகள் கொல்லபடுவது தடுக்க படலாம். ஏனையவைகள் நிலை?

உலக அளவில்,roje exotic என்ற அமெரிக்கா நிறுவனம் தான் யானை தோல் முதல் பாகம் பாகமாக விற்கிறது. ஆப்பிரிக்கா நாடான போஸ்ட்வானா, இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் யானைகளை சுட்டு கொல்ல ஏலம் நடத்தியது. அதில் 272யானைகள் கொல்ல படலாம் என்று ஏலம் முடிவாகி உள்ளது. அதற்கு ஒரு காரணமும் உள்ளதாம். யானைகள் 1, 30000ஆக பெருகி விட்டதால், யானை பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கையாம் இது.
நாளைக்கு மக்கள் தொகை பெருக்கமும் இதற்கு கீழ் வருமோ? என்னவோ?

நாம் பெரிதாக எதையும் தடுக்க இயலாது. ஆனால், தோல் பொருள்களை தவிர்க்க இயலும். வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் கார்பொரேட் பொருளாதார கொள்கைகளை பேசி, அது தேவையா இல்லையா என்று முடிவெடுக்கலாம்.
பணம் மட்டும் வாழக்கை அல்ல !
பல்லுயிர்கள் இருந்தால் தான் இந்த பூமியே சுழலும்.

இந்த மண்ணை காத்த, இந்த நீர் நிலைகளை உருவாக்கிய யானைகளையும், இதர உயிர்களையும் நேசிப்போம்.







#உலகயானைகள்தினம்

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...