எங்கு நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால் ஒரு கிராம புற இளைஞனுக்கு ஆயத எழுத்தும், உயிர் எழுத்தும் தெரிய வில்லை.
இதை பற்றி பல கருத்துக்களோடு சுற்றி வரும் காணொளி இது.
முதலில் இப்படி கேள்வி எழுப்பி, கிராம புற இளைஞர்களை, வெட்க பட செய்ததே முதல் தவறு எனது பார்வையில் !
மொழி அறிவு என்பது, யாரோ நம் முன்னோர்கள்,இன்று நாம் எழுதும் எழுத்தை எழுத, படிக்க தெரியாத நம் முன்னோர்கள் இந்த இயற்கையோடு பேசி, பழகி எங்கோ மலையில் கிறுக்கி, தலைமுறைகளுக்கு கடத்தி பிறகு தானே வரி வடிவம் பெற்றது.
உண்மையில்,
இந்த மொழி வடிவம் என்பதும், வரி வடிவம் என்பதும் நாம் அனுபவமிக்கவர்களிடம் இருந்து கற்றவை. கடனாக பெற்றவை.
அப்படி இருக்க, இயற்கையோடு வாழும் கிராம புற, மலைவாழ் மக்களை எல்லாம், படிக்க சொல்வதும், அதில் அவர்களுக்கு பயிற்சி இல்லை என்பதும் முட்டாள் தனம் ஆகும்.
இன்று மெத்த படித்த மேதாவிகளிடம் ஆங்கிலத்தில் உயிர் எழுத்து கூறு. மெய் எழுத்து கூறு, தமிழின் குற்றியலுகர, குற்றியலிகர ஒலிப்பு முறை போன்ற ஆங்கிலத்திலும் கூறு என்று கூறினால், எந்த அளவிற்கு தடுமாறுவார்களோ, அந்த நிலைதான்,
கிராமபுற மக்களுக்கும் !
வாழத்தான் பிறந்தோம் !
அதற்கு தேவை
உணவு, உடை, உறையுள்.
இவையெல்லாம் வணிகத்திற்கு கீழ் கொண்டு வந்து, அதற்கு ஏற்றார் போல நகர் புற வாழ்க்கை மாறியது என்றால், கிராமங்களும் மாற வேண்டும் என்பது,
நுனி மரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவது போன்றது !
எழுத்தறிவு என்பது பெற்றால் தான் வாழ்க்கை என்ற விளம்பரம் தரும் பள்ளிக்கூட சந்தைகளுக்கு, சராசரி மக்களும் விளம்பரம் செய்யாதீர்கள்.
நான் பார்த்து இருக்கிறேன்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், திருவண்ணாமலை மக்கள், பெங்களூரு வீதிகளில் விற்பனைக்கு வரும் போது, கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, என்று அழகாக பேசுவதை பார்த்து இருக்கிறேன். அவர்களுக்கு, இந்த மொழிகளில் எத்தனை எழுத்து உள்ளது என்பது கூட தெரியாது.
ஓசூர் சந்தைக்குள் தெலுங்கு மொழியில் மக்கள் பேரம் பேசுகிறார்கள்.
சேலத்தில் இருந்து ஒகனேகல் செல்லும் வழிகளில் மக்கள் கன்னடத்தில் சரளமாக பேசுகிறார்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா பகுதிகளில் பணிகளில் உள்ளார்கள், அங்குள்ள மொழிகளை புரிந்து கொண்டு, பேசவும் செய்கிறார்கள்.
யாருக்கும் அந்தந்த மொழியில் எத்தனை எழுத்து உள்ளது என்பது கூட தெரியாது.
தேவைகளும், அவசியங்களுமே, ஒருவன் எதை கற்க வேண்டும், எதை தேட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.
எழுத்தறிவு ஓரே ஒரு புள்ளி அதிகம் பெற்று தரலாம். அவ்வளவு தான். ஆனால் அனுபவ கல்வியை ஒரு போதும் தராது.
கல்வியை கொண்டு, கேலி பேசுவதும், மாடு மேய்ப்பாய் என்பதும் கல்வி நிலையங்களுக்கான சந்தை மேம்பாடு கோட்பாடுகளாகும்.
Don't do marketing for private education or any language.
#stopmarketingforlanguage
No comments:
Post a Comment