Wednesday, 12 August 2020

உலக யானைகள் தினம்

 உலக யானைகள் தினம்


இந்தியாவில் மட்டும்
11, 89, 826
தோல் தொழிற்சாலைகள் உள்ளன.
==================

ஆகஸ்ட் 12, 2020
இன்று உலக யானைகள் தினம்.

ஒரு நாள் யானைகள் தினம் கொண்டாடியதும் யானைகள் மீது நமக்கு மரியாதை உள்ளது என்றோ, அவற்றை நாம் காக்க போகிறோம் என்றோ அர்த்தம் இல்லை.
அதனால் கடந்து போவோம் என்று நம் எண்ணங்கள் கூறலாம்.


ஆனால், கடப்பதற்கு முன்னால்,


கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டு தமிழ் மொழி உள்ளதாயின் தமிழோடு பல்லுயிர்களும் உள்ளன.
தமிழில்
போர், காதல், இறைவன் இவற்றை பற்றி சொல்லப்பட்ட செய்திகள் மிகக்குறைவு தான்.
ஏனெனில்,
தமிழ் முழுவதும், மரங்களும், பறவைகளும், விலங்குகளும், புல், பூச்சிகளும் தான் இருக்கினறன.

தொல்லியல் முழுக்க, விலங்குகள், இல்லாத பழங்காசுகளே இல்லை எனலாம் .
எல்லா தொல்லியல் தடயத்திலும் யானைகள் பற்றி தகவல்கள் அதிகம்.

யானை மீது இல்லாத,
ஒரு வரலாற்று தலைவனை அறிமுகம் செய்ய இயலாது.
ஆனால் யானைகள் இன்று தன் மரியாதையோடு தான் உள்ளனவா?

யானை படை என்ற ஒன்றை வைத்து இங்குள்ள மன்னர்கள், யானைகளை கொண்டு பயிற்சி கொடுத்து போர் செய்த போது கூட அழியாத யானை கூட்டங்கள் இன்று அழிந்து வருகின்றன.
அன்று அழியாத காடுகள் கூட இன்று தடயங்களாக கூட இல்லை.


ஏனெனில் நம் பொருளாதார முன்னேற்றம் என்பது,
தோல் துறையிலும், தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற பணப்பயிரிலும், மண்ணிற்கு எதிரான விவசாய முறைகளிலும் சிக்கி கொண்டுள்ளது.

என்று ஐரோப்பியதை கையில் கொண்டு, நம் பொருளாதார வளர்ச்சிக்கு அவன் காட்டும் வழிகளை பின்பற்ற ஆரம்பித்தோமோ, அன்றே
நம் பல்லுயிர் பேணும் எண்ணங்கள் காற்றோடு கலைந்து விட்டன.

எந்த உயிரின் தோல் என்றும் தேடாமல் நாம் பயன்படுத்தும் தோல் பொருள்களால்,
ஆடு, மாடு, முயல், முதலை, யானை, மான், பாம்பு, ஓணான், உடும்பு என்று எல்லா உயிர்களும் அழிந்து கொண்டு இருக்கின்றன. ஒரு செய்தியின் படி, இந்தியாவில் மட்டும்
11, 89, 820 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் உற்பத்தி மூலப்பொருள்களுக்கு எங்கே செல்வார்கள்? யார் தருவார்கள்?

உலகின் மிகச் பெரிய 10தோல் தொழில் சாலைகளை கணக்கில் எடுத்து கொண்டால், இந்தியாவின் bata நிறுவனமும் முதலிடம் பெறும்.
இதுவே இந்தியாவில்
தமிழ்நாட்டில் தான் அதிக தோல் உற்பத்தி நடக்கிறது என்று
Exportgenious.com கூறுகிறது.


இப்படியாக 2017ம் ஆண்டு அரசு தோல் தொழிலுக்கென்று சில விதிமுறைகளை விதித்துள்ளது. இதனால் மாடுகள் கொல்லபடுவது தடுக்க படலாம். ஏனையவைகள் நிலை?

உலக அளவில்,roje exotic என்ற அமெரிக்கா நிறுவனம் தான் யானை தோல் முதல் பாகம் பாகமாக விற்கிறது. ஆப்பிரிக்கா நாடான போஸ்ட்வானா, இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் யானைகளை சுட்டு கொல்ல ஏலம் நடத்தியது. அதில் 272யானைகள் கொல்ல படலாம் என்று ஏலம் முடிவாகி உள்ளது. அதற்கு ஒரு காரணமும் உள்ளதாம். யானைகள் 1, 30000ஆக பெருகி விட்டதால், யானை பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கையாம் இது.
நாளைக்கு மக்கள் தொகை பெருக்கமும் இதற்கு கீழ் வருமோ? என்னவோ?

நாம் பெரிதாக எதையும் தடுக்க இயலாது. ஆனால், தோல் பொருள்களை தவிர்க்க இயலும். வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் கார்பொரேட் பொருளாதார கொள்கைகளை பேசி, அது தேவையா இல்லையா என்று முடிவெடுக்கலாம்.
பணம் மட்டும் வாழக்கை அல்ல !
பல்லுயிர்கள் இருந்தால் தான் இந்த பூமியே சுழலும்.

இந்த மண்ணை காத்த, இந்த நீர் நிலைகளை உருவாக்கிய யானைகளையும், இதர உயிர்களையும் நேசிப்போம்.







#உலகயானைகள்தினம்

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...