வரலாற்று ஆய்வாளர்களும், தமிழ் ஆய்வாளர்களும் !
கடந்த வாரம் ஒரு வரலாற்று ஆசிரியர் சோழ நாட்டின் வணிகம் குறித்து பேசினார்.
அப்போது, ராஜராஜ சோழன் காலத்தில் நாணயங்கள் செம்பில் செய்யப் பட்டு, அதன் மேல் வெள்ளி பூச்சு இட்டு, பிறகு தங்க பூச்சு பூசப்பட்டுள்ளது.
அந்த நாணயங்கள் இன்னும் மெருகு குறையாமல் உள்ளது. அதில் ஏதோ பச்சிலை தடவி அதை செய்து இருக்கிறார்கள் என்று கூறினார்.
அதே வாரத்தில் , சோழர் காலத்தில் சித்தர்கள் என்ற தலைப்பில் ஒரு தமிழ் ஆசிரியர் ஒருவர் பேசினார். அவரும், சோழர் காலத்தில் 18சித்தர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்கள் பிற்காலத்திய சித்தர்கள் என்று வழங்கப்பட்டார்கள். அவர்கள் ரசவாத எனும் ரசாயன முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கூறினார்.
ஆனால் ஏனோ, அந்த வரலாற்று பதிவும், இந்த தமிழ் பதிவும் இணைய மறுக்கிறது.
இடையில்
ஒரு கல்வெட்டு தேவை வரலாற்று ஆய்வாளர்களுக்கு !
ஆனால், தமிழ் ஆசிரியர்களுக்கோ, அறிவியல் ஆய்வாளர்களின் துணை தேவை.
செம்புபொன் னாக்குஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்புபொன் னான திருவம் பலமே
என்று திருமூலர் கூறி விட்டார்.
ஆனால் அதென்ன
ஸ்ரீயும், கிரியும், இது தமிழ் போல இல்லையே என்ற பகுத்தறிவு தான், நம் தமிழ் அறிவியல் பாழாய் போக மூல காரணம்.
ஸ்ரீ என்றால் ஆகாயம் (வானம் ), அதற்காகவென உப்பு உள்ளது.
சோழர்கள் இதை வானவன் என்று அழைத்து கொள்கிறார்கள். வானவன் மாதேவி என்ற பெயரில் ராஜராஜ சோழனின் மனைவி ஒருவரும் உள்ளார்.
கிரி என்றால் காற்று.
மலைப்பகுதியில் பதமான குளிர் உள்ள உப்பு.
இவவாறு பல மூலப்பொருள் களை கொண்டு,
ஒரு ரசாயன புரட்சியே செய்த சோழ மண்டலம் அது குறித்து பேசுவதே இல்லை.
ஆங்கிலத்தில் au, fe, cu, எல்லாம் பயன்படுத்துவது போல தமிழிலும் ரசாயணத்திற்கென்று தனி நடை உள்ளது.
தமிழும், வரலாறும் ஒன்றாகி, தமிழின் அறிவியலை வெளிக்கொணருமா?
No comments:
Post a Comment