நவீன கால கல்வி கூடம் என்பது என்ன ?
இளம்பருவம் என்பது அழகானது .அறிவை கேள்விகளால் வளர்க்கும் இடம் . ஆழ பதியும் வகையில் கற்கும் காலம் அது .
இதில் நவீன கால கல்வி கூடம் என்பது,
ஐரோப்பியர்கள் மட்டுமே அறிவாளிகள் என்றும், அதை பின்பற்றியே அனைவரும் அறிவியல் பேசவேண்டும் என்றும் கற்பித்தபடுத்தும் இடம் தான் நவீன கால கல்வி கூடம் .
கல்வி என்பது என்ன?
நமக்கு என்ன வேண்டுமோ அதைப்பற்றியே பேசாமல் , வணிக நிறுவனங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கற்றுத் தருவது.
கல்லூரி என்பது என்ன?
பெற்றோரை பொறுத்த வரை , பெண்ணின் திருமண காலத்தை தள்ளி போடவும் , பெருமையையும் தரும் இடம் .
மாணவர்களை பொறுத்த வரை ,
எதிர்கால அச்சத்தை தள்ளி போட உதவும் இடம் . வாய்ப்புகள் கிடைத்து விடும் என்ற எண்ணத்தை உருவாக்கும் இடம்.
நிறுவனங்களை பொறுத்த வரை ,
சுயசார்பு அற்ற நிலையில் , நிறுவனத்தின் வேலைகளை முடிக்க ஆட்களை உருவாக்கும் இடம் .
No comments:
Post a Comment