கேள்விகளும் பதில்களும்
தமிழ் மக்கள் :
பாவம் , நீண்ட காலமாக பெருமை போதைக்குள் மட்டுமே வாழ்ந்து , தன அறிவியல் பெட்டகத்தை தேட மறந்தவர்கள் .
தமிழ் நவீன அறிவியல் என்பது ,
சங்க காலத்தை தாண்டி , தமிழர்களை யோசிக்க விடாமல் பார்த்து கொள்ளும் காவல் ஆயுதம் .
தமிழாசிரியர்கள் :
தமிழ்நாட்டிற்கு வாழ வந்தவர்கள், பொக்கிஷம் என்பது தங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற பேராசையில் , புரியாத விளக்கங்களுக்கு , பதில் தெரியாமலேயே பல விளக்கங்கள் தருபவர்கள் .
உரையாசிரியர்கள் :
தமிழையே புரிந்து கொள்ள முயற்சிக்காமல் , தனக்கு தெரிந்ததை மட்டும் , உரை என்று எழுதுபவர்கள் .
கவிஞர்கள் :
தமிழில் ஐரோப்பிய கலாசாரத்தை கலக்க போராடி வரும் போராளிகள் !
தமிழ் போராளிகள் :
தமிழில் துணை மொழிகள் எதுவும் இருக்கிறதா என்று அரிசியில் உமியை பிரித்து கல்லை கலக்கும் கலப்பட வணிகனை போல ,
துணை மொழி வார்த்தைகளை மட்டும் பிரித்து விட்டு , ஐரோப்பிய மொழிகளை மொழி பெயர்ப்பு மூலம் தமிழோடு இணைப்பவர்கள் .
தமிழுக்கு சேவை :
தமிழுக்கு சேவை என்பது,
தமிழ்நாட்டின் ஓலைச்சுவடிகள் , பழைய குறிப்புகளை அயல்நாடுகளுக்கு கொண்டு செல்வது
தமிழ் என்பது ,
ஹாவ்ர்டு நாற்காலியோ , டொரோண்டோ நாற்காலியோ
அனைத்தையும் பார்த்து ,
என்ன நடந்தாலும் என் ரகசியம் அறிய எவராலும் இயலாது என்று சிரித்து கொண்டு இருப்பவள் .
No comments:
Post a Comment