கிருஷ்ணா தேவ ராயர்
அச்யுத தேவ ராயரும் , கிருஷ்ணா தேவ ராயரும் சகோதரர்கள் .
விஜயநகர அரசின் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர்கள் திம்மப்பா நாயக்கரும் அவரது சகோதர் நாகம்ம நாயக்கரும் .
கிருஷ்ணதேவ ராயரும் , அச்சுத தேவ ராயரும் துளுவ வம்சத்து மன்னர் துளுவ நரச நாயக்க ரின் மகன்கள் .
இவர்களின் தளபதி கள் இருவர் . ஒருவர் திம்மப்பா நாயக்கர் , மற்றொருவர் நாகம்ம நாயக்கர் .
இந்த திம்மப்பா நாயக்கரின் மகன் தான் செவப்ப நாயக்கர் .
இவர்தான் தஞ்சையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தவர் .
நாகம்ம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயகர்.
இவர் தான் மதுரையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தவர் .
அச்யுத தேவ ராயர் மற்றும் அவரது மனைவி திருமலம்பா
திம்மப்பா நாயக்கருக்கு 4 மகன்கள் . அவர்களில் இரண்டாவது மகன்தான் செவப்ப நாயக்கர் . இவர் அச்யுத நாயக்கரின் மனைவியாகிய திருமலம்பாவின் தங்கை மூர்திம்பவாய் திருமணம் செய்த கொள்கிறார் .
அப்போது தனக்கு சீதனமாக தஞ்சாவூரை தர வேண்டுமென அச்யுத நாயக்கரிடம் கேட்டு பெற்று கொண்டு , தஞ்சையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தார் .1509 முதல் 1530 வரை கிருஷ்ணா தேவ ராயர் ஆட்சியின் கீழ் மட்டமே தஞ்சை இருந்தது .
1530 ல் கிருஷ்ணதேவ ராயர் தனது சகோதரர் ஆட்சிக்கு வரட்டும் என்று கூறி விட்டு இறந்து விடுகிறார் .
தன்னுடைய சகளையாகிய அச்சுத தேவாரயருக்கு கப்பம் கட்ட மறுத்து தானே இனி தஞ்சையின் மன்னன் என கூறி தனக்கென தனி அரசை உருவாக்குகிறான் செவப்ப நாயக்கன் .
பிறகு 1532 முதல் 1580 வரை ஆட்சி செய்துள்ளார் செவப்ப நாயக்கர் .
அச்யுத தேவ ராயரின் நினைவாக தனது மகனுக்கு அச்யுத நாயக்கர் என்று பெயர் இட்டார்
நிறைய அக்ரஹரன்களை தஞ்சையில் எழுப்பி உள்ளார் .
நீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்து கொண்டார்.
திருமலா கோவிலுக்கும் , ஸ்ரீசைல கோவிலுக்கும் நிறைய நன்கொடைகள் அளித்துள்ளார் .
தஞ்சையில் இருந்து செய்யப்பட்ட வரிவசூலானது திருபதிக்கும் , ஸ்ரீசைலதிர்க்கும் , பிராமணர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது .
தஞ்சை பெரிய கோவில் சுற்று சுவர் பராமரிப்பு பணியை செய்துள்ளார் .
செவப்ப நாயக்கன் வாழும்போதே 1560 களில் இவரது மகன் அச்சுத நாயக்கனும் ஆட்சிக்கு வருகிறான். இருவரும் இணைந்து 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர் .
1614 வரை ஆட்சியில் இருந்த அச்சுத நாயக்கரும் கோவில் திருப்பணிகள் பல செய்துள்ளார் .
ஸ்ரீரங்கம் சுற்று சுவர்
இவர் காலத்திலேயே 1600 களில் இவரது மகன் ரகுநாத நாயக்கன் ஆட்சிக்கு வருகிறான் . தஞ்சாவூர் வரலாற்றிலேயே மிக முக்கிய ஆட்சியாக அமைந்தது ரகுநாத நாயக்கனின் ஆட்சிதான்.
தஞ்சையின் வரலாற்றில் , மாற்றங்களை கொண்டு வந்தவர் ரகுநாத நாயக்கர் .நாயக்க வம்ச முடிவிற்கும் , ஐரோப்பிய வணிகர்களின் வருகைக்கும் அஸ்திவாரம் போட்டவரம் ரகுநாத நாயக்கர்தான் .
--------------------------------
தஞ்சாவூர் - ரகுநாத நாயக்கர்
ரகுநாத நாயக்கர் , அச்சுத நாயக்கரின் வாரிசு ஆவார் .
இவர் திருவாரூர் கோவிந்தா தீட்சிதரின் சீடர் . இவர் காலத்தில் சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக நூல்களும் , பாடல்களும் எழுதப்பட்டன. எனவே இவரது ஆட்சியானது அப்போது தஞ்சையில் வாழ்ந்த பிராமண , தெலுங்கு , கன்னட மக்களுக்கு பொற்காலம் ஆகும் .
தஞ்சை அக்ரஹார வீதிகள் .
தஞ்சை வாழ் பிராமணர்களுக்கு புத்தி அக்ரஹாரங்களை கட்டினார் . தஞ்சையின் வடிவமைப்பை மாற்றினார் .
இவர் இசை க்கும் கலைக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுக்க காரணமாய் இருந்தவர் அவரது மனைவியருள் ஒருவராகிய ராமபத்ரம்பா ஆவார் . இவர் தெலுங்கு மொழிகளில் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார் .
இந்த ரகுநாத நாயக்கர் காலத்தில் தான் மும்மூர்த்திகள் என்று வழங்கப்படும் சியமா சாஸ்திரி,தியாகராயர் , கோவிந்தா தீட்சிதர் ஆகியோர் தெலுங்கு மொழியை தஞ்சையில் வளர்த்து நீர் விட்டு மரம் ஆக்கினார்கள் .
இவரது காலத்தில் தான் தஞ்சையின் இசை , கர்நாடக சங்கீதம் ஆனது . நாயக்க வம்சமானது கர்நாடக மாநிலம் ஹம்பி யில் இருந்து ஆரம்பித்தாலும் , புரந்தர தாசருக்கு மரியாதை செய்யும் வகையிலும் , தஞ்சை இசை கர்நாடக சங்கீதம் என்று பெயர் மாற்றப்பட்டது .
ஏழிசை என்று வழங்கப்பட்ட இசை கருவியானது நாதஸ்வரமாகி போனது .
சதிர் ஆட்டம்
இவரை தொடர்ந்து வந்தவர்களும் அவர்கள் பங்கிற்காக தஞ்சையின் போர் முறைகளை கற்று தர உதவும் சதுர் என்ற நடனத்தை பாரத நாட்டியம் என்று பெயர் மாற்றினர் . ஆனாலும் இதே உத்திகளோடு விளையாடப்பட்ட , சதுரங்கம் இன்றும் அதே பெயரில் உள்ளது .
தஞ்சையை ஆண்ட நாயக்கர்களிலேயே மிகவும் நல்லவர் இந்த ரகுநாத நாயக்கர்தான் .
அவருக்கு எதெல்லாம் பெருமைக்கு உரிய விஷயமாக இருந்ததோ அதயெல்லாம் தெலுங்கிற்கு ம் , கன்னடத்திற்கும் மாற்றி தன மொழி பற்றை நிரூபித்தவர் .
அதோடு தெலுங்கு புத்தகங்களை பாதுகாக்க கருதி இன்று தஞ்சையில் இருக்கும் சரஸ்வதி மகாலை உருவாக்கியவர் .
அப்போது அவர் இட்ட பெயர் சரஸ்வதி பண்டு .
இதையே பிற்காலத்தில் சரபோஜி I I சரஸ்வதி மகாலாக மாற்றினார் .
இவர் தான் முதன் முதலில் டச்சுகாரர்களோடு ஒப்பந்தம் போட்டவர்.
இதனை அடிப்படையாக கொண்டுதான் பிற்காலத்தில் போர்துகீசியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்.கும் தஞ்சையை வணிக மையமாக மாற்றலாம் என்ற யோசனைக்கு வழிகாட்டியாக அமைந்தது .
இந்த ரகுநாத நாயக்கரும் கோவில் திருப்பணிகள் பல செய்துள்ளார் .
இதற்கிடையில் விஜயநகர பேரரசில் மிக பெரிய சிக்கல் உருவாகியது .
அது என்னவெனில் அப்போது ஆட்சியில் இருந்த இரண்டாம் வெங்கட ராயருக்கும் அவரது அன்பு மனைவி ஒபயம்மாவிர்க்கும் திருமணத்திற்கு முன்பு பிறந்தவர் ஆட்சிக்கு வரவேண்டுமா ? திருமணத்திற்கு பின்பு பிறந்தவர் ஆட்சிக்கு வர வேண்டுமா ? என்பதே அந்த பிரச்னை .
திருமணத்திற்கு முன்பு பிறந்து ஆட்சிக்கு வந்த ஜக்கு ராயரை , மதுரை நாயக்கனும் , செஞ்சி நாயக்கனும் ஆதரவு அளிக்க
திருமணத்திற்கு பின்பு பிறந்த ராம ராயரை , நம் ரகுநாதர் ஆதரவு கொடுத்து
அதனால் ஏற்பட்ட போரில் வெற்றியும் பெற்று ராம ராயரை ஆட்சியில் அமர வைக்கிறார் .
இது தான் இவரது ஆட்சியில் நடைபெற்ற மிகபெரிய போர் .
மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில்
1634 லில் விஜய ராகவ நாயக் ஆட்சிக்கு வருகிறார் . இவர்தான் தஞ்சை நாயக்க வம்சத்தின் கடைசி மன்னர் . இவர் 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார் . இவருக்கு மன்னாரு தாசு என்ற பெயரும் உண்டு . கரரணம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் சுற்று சுவர், கோபுரம் என பல திருப்பணிகள் செய்துள்ளார் .
விஜய நகர பேரரசின் வாரிசு உரிமை போரில் ரகுநாதன் , ராம ராயருக்கு ஆதரவு கொடுத்து வெற்றியும் பெற்றான் அல்லவா ! அப்போது தோற்று போனது ஜக்கு ராயர் மட்டுமல்ல மதுரை நாயக்கனும்தான் .
இதனால் ஏற்பட்ட கோவத்தை தணிக்க மதுரை சொக்க நாயக்கன் , விஜய
ராகவ நாயக்கனின் மகளை மனம் முடித்து தர சொல்கிறார் . ஆனால் தஞ்சை நாயக்கனோ மறுக்கிறான் . இதனால் தஞ்சை அரண்மனையை பலபடுத்தி அங்கு தன குடும்பத்தை பாதுகாக்க முற்படுகிறார் .
ஆனால் மதுரை சொக்க நாயக்கனோ பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி கோட்டை சுவரை உடைத்து விஜய ராகவ நாயக்கனின் மகளை மணக்கிறான் .
மதுரை சொக்க நாயக்கன் தனது தம்பி அழகிரியை தஞ்சைக்கு மன்னனக்கினான்.
விஜய ராகவ நாயக்கனின் மகன் தனது அரசை மீண்டும் மீட்டு தர உதவி கேட்டு பீஜப்பூர் சுல்தான்களிடம் போக , அவர்கள் மராட்டியர்களை கைகாட்ட ,
வெங்கோஜி தஞ்சைக்கு வருகிறான் .
அன்று முதல் நாயக்க அரசு முடிந்து மராட்டி அரசு தஞ்சையில் உதயமாகிறது .
-----------------------------------------
Best Nayakkar Matrimony in tamilnadu visit: Nayakkar matrimony
ReplyDeleteBest Nayakkar Matrimony in tamilnadu visit: நாயக்கர் தி௫மண தகவல் மையம்