Monday, 1 August 2016

சரபம் எனும் பறவை



சரபம் என்பது ஒரு வித்தியாசமான பறவை. தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான  உதயண குமார காவியாத்திலும், அதே கதையை கொண்ட பெருங்கதை என்னும் நூலிலும் இந்த பறவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது .

உதயணன் என்பவனின் தாய் கரு உற்றிருக்கும் போது , அவளை தூக்கி கொண்டு சென்றது ஒரு பறவை . அது காட்டிற்குள் சென்று , அவளை கீழே கிடத்தி உண்ண எத்தனிக்கும் போது , அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை அறிந்து ,அவளை அப்படியே போட்டு விட்டு பறந்து விடுகிறது. அங்கு தான் உதயணன் பிறக்கிறான் .

ஒரு பெண்ணை அதுவும் கருவுற்ற பெண்ணை தூக்கும் அளவிற்கு வலிமை கொண்ட இந்த பறவை தான் சரபம் ஆகும் .


இதற்க்கு 2 முகங்கள் , 8 கால்கள், 32 கைகள் 
என்று குறிப்பிடப்படுகிறது . இதிலே 4 கால்கள் பறக்கும் . 4 கால்கள் நடக்கும் வகையில் இருப்பதாகவும் , ஒரு முகம் சிங்கத்தை போலவும் , மற்றொரு முகம் யானை  போலவும் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது . 

மற்றும் சில கதைகளில் யாழி போன்ற உருவம் எனவும், 8 கால்கள் கொண்ட மான் உருவம் எனவும் குறிப்பிடப்படுகிறது .

இது சிங்கத்தையும் , யானையையும் கூட கொல்லும் வலிமை உள்ளது . இதனை தமிழ் இலக்கியங்களில் சிம்புள் என குறிப்பிடுகிறார்கள் . அதாவது 8 கால் பறவை . இதை தமிழக, கர்நாடக  மற்றும் இலங்கை தமிழ் கோவில்களின் சிற்பங்களில் காணலாம் .

சரப புராணம் 

வட மொழி நூல்களில் இதே சரபம் சார்ந்த குறிப்புகளும் , அதற்கென புராணமும் உள்ளது .

அதாவது , இரணியனை கொல்வதற்காக அவதாரம் எடுத்தார் நரசிம்மர். அந்த அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய பிறகும் , பிரகலாதனாலும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் , நரசிம்மர் மேலும் மேலும் எல்லோரையும் கொன்று குவித்து கொண்டிருக்கையில் , அனைவரும் சிவபெருமானிடம் வேண்டி கொண்டதன் பேரில் , சிவன் சரபமாக மாறி , நரசிம்மரை கொல்கிறார் . அப்போது உருவானதுதான் இந்த சரபம் எனும்  பறவை என்று
வட மொழி கதைகள் கூறுகின்றன.


சரபேஸ்வர மூர்த்தி.jpg



சரபேஸ்வரர்


இதே சமயத்தில் , அப்போது உருவான சிவனது உருவமான சரபேஸ்வரரை எப்போது எண்ணி வழிபட்டாலும் , உடல் வியாதிகள் தீரும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது . குழந்தை பேறு பெறுவர் . திருமண தடைகள் அகலும். கடன் தொல்லைகள் முற்றிலும் தீரும் .

காஞ்சிபுரம் அருகில் உள்ள லிங்கபுரத்தில் சரபேஸ்வரர் லிங்க வடிவில் உள்ளார்.

தஞ்சை மாவட்டம் , திருபுவனத்தில் கம்பகேஸ்வரர் ஆலயத்தில் சரபேஸ்வரர் சன்னதியும் உள்ளது . இந்த கோவில் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது . கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளை தொட இருக்கிறது இக்கோவில்.


உத்தர காமிக ஆகமம் , இந்த சரபேஸ்வரரை ஆகாச பைரவர் என்று கூறுகிறது . மேலும் இதன் கால்களில் ஒன்று அனைத்திருப்பது  துர்க்கை அம்மனை என்றும் , இந்த வடிவத்தின் சக்தி தேவி அரிப்ரணாசினி என்றும் கூறுகிறது .

பிரத்யங்கரா தேவி எனும் தெய்வ வடிவினை கூட சரபேஸ்வரர் வடிவம் என்ற கூறுவோரும் உளர் .

கர்நாடக அரசு சின்னம் :




இது கர்நாடக அரசின் சின்னம்.  மஞ்சள் நிறதில் சிங்கத்தின் பிடரியை கொண்ட யானை யாக நிற்பது சரபா .



இதே சின்னத்தையே மைசூர் பல்கலைக்கழகமும் பெற்றுள்ளது .

ஆக 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சரபம் என்னும் பறவை பற்றியும் , சரபேஸ்வரர் பற்றியும் தமிழ் மக்கள்  அதிகம் தெரிந்து வைத்திருந்தனர் .

அதனாலேயே இன்றும் கர்நாடக அரசின் சின்னமாக சரபம் உள்ளது . 

உண்மையில் இப்படி ஒரு பறவை இருந்ததா இல்லையா என்பதை விட , 2000 ஆண்டுகளாக இப்படி ஒரு பறவை குறித்து நம்மிடம் விதைக்கப்பட்டிருக்கிறது என்பது வியப்புக்குரியது.

மேலும் 2 தலை 
8 கால்கள் 
32 கைகள் 
இறக்கைகள் 
என்று எண்ணிப்பார்க்கவே பிரமாண்டமாக உள்ளது . இது குறித்து தமிழனத்தின் அறிவும் , 
( ஆங்கில படங்களில் வரும் கற்பனைக்கும் விஞ்சியது )
பெருமைக்குரியதாகவே உள்ளது .


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...