கிட்டத்தட்ட 40000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது மலேசியா.
மலேசியா வரலாறு , மற்றும் இந்தோனேசியா , சிங்கபோர வரலாறுகள் தெரியாமல் தமிழ் வரலாறு பேச முடியாது.
சிதறிய தமிழனத்தின் ஒரு பகுதி தான் இந்த தெற்காசிய நாடுகள்.
குமரி கண்டம் ,என்பதின் மிச்சம் இந்த நாடுகள் .
ஆனால் இது இஸ்லாமிய நாடு. எப்படி ? தமிழ் இனத்தோடு ஒப்பிட முடியம் ?
கடந்த 500 ஆண்டுகளாகத்தான் இந்நாடு இஸ்லாமிய மதத்தை தழுவ ஆரம்பித்தது .
பல்லவ கால வரலாறுகள் , மலேசியா வரலாற்றையும் சேர்த்து குறிப்பிடுகின்றன.
ஸ்வர்ண தீவு என்று வழங்கப்பட்ட மலேசியா தற்போது கோல்டன் பெனின்சுல என்று வழங்கபடுகிறது. அர்த்தம் ஒன்றுதான் . ஆங்கிலத்தில் கொஞ்சம் ஸ்டைலாக மாறி விட்டது.
2 மற்றும் 3 ம் நூற்றாண்டுகளில் லங்கா சுகா என்பவர் , கம்போடியாவுடன் சேர்த்து கதாவை ஆட்சி புரிந்துள்ளார். அந்த கால கட்டத்தில் 30 அரசுகள் மலேசியாவில் இருந்துள்ளன. அந்த மன்னர் ஆண்ட பகுதிகள் இப்போதும் , லங்காவி என்ற பெயரில் உள்ளன.
இது பௌத்தமும் , சமணமும் தலைதோங்கிய காலம் . தமிழ்நாடு, இலங்கை என்று எல்லா நாடுகளிலும் பௌத்தம் பரவியது.
மலேசியாவும் அதில் விதிவிலக்கு அல்ல .
அப்போது இருந்த முக்கிய மொழி சமஸ்கிருதம் . தமிழுடன் சமஸ்கிருதம் கலந்த ஒரு கலப்பினம் உருவாகிய காலம் அது .
அதன் பிறப்புகள் தான் கன்னடமும் , மலாய் மொழியும் !
மலாய் மொழி கன்னட மொழியின் சாயலை சுமந்து கொண்டு இருக்கிறது .
பேராக் மற்றும் பஹ்ருஸ் கங்கா நெகரா என்ற ராஜ்யத்தின் கீழ் ராஜா கன்ஜி சர்ஜுராவால் உருவாக்கப்பட்டது .
மலாக்கா , ஸ்ரீ விஜயம் என்ற நாட்டோடு இணைந்து இருந்தது .
இந்த மலாக்கா என்ற பெயர் எப்படி வந்தது என்பதை இங்குள்ளவர்கள் இப்போதும் கூறுகிறார்கள் . அமலாக்காயுர் என்ற வழங்கப்பட்டது தான் இந்த ஊர் . அமலாக்காய் என்றால் நெல்லிக்காய் என்று பொருள் . ஊர் முழுக்க நெல்லி மரங்கள் நிறைந்து இருந்ததால் , அமலாக்காயுர் என்று வழங்கப்பட்டு , பின்னர் இப்பெயர் மலாக்கா என்று மாற்றம் பெற்றதாகவும் கூறுகிறார்கள் .
ஆம்லா என்று நெல்லிக்காய்க்கு ஹிந்தியிலும் , ஆங்கிலத்திலும் பெயர் வழங்கப்படுவது இதனால்தான் !
சுமத்ரா தீவின் கிழக்கு பகுதியாகிய மலாக்கா , ஸ்ரீ விஜய அரசின் வணிக மையமாக விளங்கியது . கி.பி.7 ம் நூற்றாண்டிற்கும் 13 ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இப்பகுதி மிகுந்த செல்வாக்கோடு ,வணிக நிலையமாகவும் , பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் இடமாகவும் விளங்கி உள்ளது .
கி.பி.2 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் , மலேசியா மற்றும் தமிழகத்திற்கு இருந்த வணிக உறவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன .அதில் காழகம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது கடாரம் தான் என்று கூறுகிறது வரலாறு .
11 ம் நூற்றாண்டில் ராஜா ராஜா சோழன் I , மலேசியாவுடன் நட்புறவு கொண்டிருந்தார் .ஆனால் ஸ்ரீ விஜய மன்னருடன் ஏற்பட்ட மாணவருத்தத்தால் பின்னர் ராஜேந்திர சோழன் I , கடாரத்தை கைப்பற்றினார் . இதன் பின்னர் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆண்ட சோழர்கள் மலேசியா முழுமையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர் .
ஆனால் சோழர்கள் இங்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை . மொழியையும் பரப்பவில்லை .
பின்னர் 14 ம் நூற்றாண்டில் நிலை மாறியது .
தமிழகத்தில் சோழர்களின் ஆட்சி மாறி , நாயக்க ஆட்சி வளர ஆரம்பித்தது .
அதன் தொடர்ச்சியாக ,( இன்றைய சிங்கப்பூர் ) தெமாசிக் யில் ஆட்சியில் இருந்த பரமேஸ்வரன் , மலாக்கா மற்றும் அதன் கீழ் இருந்த எல்லா பகுதிகளையும் தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தான் .
இவர் தான் விரும்பிய பெண்ணை மணக்க வேண்டி இஸ்லாமிய மதத்திற்கு மாறியதால் , இங்குள்ள மக்களும் பிற்காலத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் .
15 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் , மீண்டும் தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் இருந்த செட்டியார் சமூக மக்கள் , மலேசியா சென்று வணிகம் செய்ய ஆரம்பித்தனர் . அதன் விளைவாக அங்குள்ள பெண்களை மணந்து கொண்டு மலேசிய செட்டி என்று ஒரு இனம் உருவாக வழிவகுத்தனர்.
இன்றும் ஒரு சில இடங்களில் விநாயகரின் பெயர் செட்டி பிள்ளையார் என்ற பெயரில் மலேசியாவில் உள்ளது .
15 ம் நூற்றாண்டில் ஜோஹோர் உருவானது . போர்த்துகீசிய மக்களும் வணிகம் கருதி மலேசியா வில் நுழைய ஆரம்பித்தனர் .
மிக விரைவில் 16 ம் நூற்றாண்டின் மத்தியில் , ஜோஹோர் , மலாக்கா , மற்றும் புருனே ஆகியவை போர்த்துகீசியர்கள் ஆளுகைக்குள் வந்தது .
மலாக்கா கடற்கரை கோட்டைகள் இதனை பறைசாற்றுகின்றன .
இந்த காலகட்டத்தில் ஜோஹோர் மிகுந்த செல்வாக்கோடு , சக்தி வாய்ந்த இடமாக இருந்தது .
அப்போது அங்கிருந்த சுல்தான் மஹுட் கொல்லப்பட்டார் .
இதன் விளைவாக ( தற்போதைய இந்தோனேசியா ) சுலவாசி மக்கள் புர்கிஸ் கிளர்த்தெழுந்தனர் . இதன் விளைவாக , போர்த்துகீசிய மக்களிடமிருந்து மீண்ட ஜோஹோர் வார்சுஉரிமை போருக்குள் சிக்கி கொண்டது .
சுல்த்தான் மஹுட் மகன்கள் அப்துல் கேஸில் மற்றும் அப்துல் ஜலீல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால்
அப்துல் ஜலீல் கொலை செய்யப்பட்டார் .
மீண்டும் மக்கள் போராட ஆரம்பித்து அப்துல் ஜாலிலின் மகன் அப்துல் சுலைமான் ஆட்சிக்கு வந்தார் . இவரது ஆட்சி வரலாறுகளில் மிகவும் குறிப்பிட தக்க தாக உள்ளது .
17ம் நூற்றாண்டு தொடக்கத்தில் கால் பதித்த பிரிட்டிஷ் , 1786 ல் பினாங்கு பகுதியை கைப்பற்றியது .
1819 ல் சிங்கப்பூரை கைப்பற்றினர் .
1840 , 1841 ல் புருனே , சரவாக் ஆகின பிரிட்டிஷ் ஆளுகைக்குள் வந்தது .
1860 களில் மீண்டும் தமிழர்களை , தோட்ட வேலை பார்க்கும் பொருட்டும் , வணிகம் செய்யவும் , அரசு வேலை பார்க்கவும் , செங்கல் சூளைகளில் வேலை செய்யவும் , செம்பனை மரங்கள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் , காப்பி தோட்டங்கள் வளர்க்கவும் , பாலங்கள் கட்டவும் என பல்வேறு காரணங்களுக்காக பிரிட்டிஷ் அரசு மலேசிவிற்கு அழைத்து சென்றது .
1941 ல் ஜப்பான் மலேசியா மற்றும் சிங்கப்பூரை கைப்பற்றியது .
அதன் விளைவாக ஜப்பான் ஆட்சி வந்தது . சுதந்திர போராட்டம் வலுக்க ஆரம்பித்தது .
1957 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் நாள் மலேசிய சுதந்திரம் பெற்றது .
இதற்கு இடையில் சீனர்களின் வசம் சில ஆண்டுகள் மலேசியா இருந்தது .
அதனால்தான் மலேசியா மலாய் மக்கள் தவிர்த்து , சீனர்கள் , ஜப்பானியர்கள் மற்றும் இந்தியர்கள் என்று வழங்கப்படும் தமிழர்களோடு வாழ்கிறது .
அது மட்டுமல்ல உணவு கல்யாணம் காது குத்துதல் வரை தமிழர் பண்பாட்டையே பின் பற்றி வருகின்றனர்
ReplyDelete