பெண்ணியம் எனும் கருத்தியல் வற்றாத ஜீவ நதி போல் எல்லா
காலங்களிலும் பேசிய , பேசுகின்ற , பேச போகிற ஒரு கருத்தாக்கம் .
காலத்திற்கு காலம் , இது மாறுபடும்.
ஆனால்
எத்தனை காலம் ஆனாலும்
ஒரு மட்டும்
மாற்றுவதே இல்லை !
அதாங்க
இந்த சட்டங்களை இயன்றுவது மட்டும்
ஆண்கள்தான்!
ஒவ்வொரு விலங்கினமும் கூட தான் என்ன செய்கிறோம் , என்ன செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு எடுக்கிறது .
ஆனால் பெண்ணுக்கு மட்டும் அப்படி ஒன்று வழங்கப்படவே இல்லை .
ஒரு ஆண் ஒரு பெண்ணை என்னவாக பார்கிறானோ அதை பொறுத்து அவளுக்கான பெண்ணிய கருத்துக்கள் வரையப்பட்டது .
வேத காலங்களில் , பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி பிரச்சனை இல்லை .
ஆனால் விச்வாமித்ரரும் , வசிஷ்டரும் , பெண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்றும் , எப்படி வாழ்தல் அவளை பத்தினி என்று உலகம் போற்றும் எனவும் கதை எழுதி இருக்கிறார்கள் .
நல்ல தெங்கால் கதை , நளாயினி கதை என பல கதைகள் வட இந்தியாயாவில் எழுதப்பட்டன .
ஒரு படி மேலே போய் அகழிகை கல்லாய் போன கதையும் , பரசுராமரின் தாய் தன் கணவனை தவிர்த்து வேறு ஒரு ஆணை பார்த்தாள் என்ற ஒரே காரணத்திற்க்காக , பெற்ற மகனே அவளது தலையை வெட்டினான் என்பதும் , பெண் மீது திணிக்க பட்ட பய உணர்வுகள் .
இதுவும் பெண்ணுக்காக ஆண்கள் எழுதிய பெண்ணியம் .
ஆனால் , இக்காலம் முடிந்த பிறகு ,
இதே பெண்ணுக்கான கருத்தாக்கம் மாறுகிறது.
மகா பாரத கதையில் ,
கங்கை எனும் பெண் தன் 7 குழந்தைகளை ஆற்றில் விடுகிறாள் .
மீனவ பெண் மாத்ரி தன் கணவன் சாந்தனு வை மணம் புரிவதற்கு முன்பே , வேறு ஒரு முனிவர் மூலம் வியாசரை பெறுகிறாள் .
திருதுராஷ்டிரன் , மாற்றும் பாண்டுவின் தாய்மார்கள் இருவரும் , தன் கணவன் அல்லாத , கணவனின் அண்ணன் முறையில் உள்ள வியாசர் மூலம் குழந்தை பெறுகிறாள் .
பாண்டுவின் மனைவி குந்தி , திருமணத்திற்கு முன்பே , சூரியனோடு உறவாடி கர்ணனை பெறுகிறாள்.
பாண்டுவின் மனைவிகள் குந்தி மற்றும் மாதவி இருவரும் தன் கணவன் அல்லாத வேறு ஆண்கள் மூலம் குழந்தை பெறுகிறார்கள் . இது பாண்டுவுக்கு தெரிந்தே நடக்கிறது .
பாண்டுவின் 5 மகன்களையும் ஒரு பெண் மணக்கிறாள். அதனால் பாஞ்சாலி எனவும் பெயர் பெறுகிறாள் .
கம்சனின் தாய் , தன் கணவன் அல்லாத ஒரு ஆண் மூலம் கம்சனை பெறுகிறாள் .
தங்கள் கணவனாகிய நரகாசுரனை அழித்த , அவனது தகப்பன் முறையில் இருக்கும் கிருஷ்ணனையே 16000 பெண்களும் மணக்கிறார் . மாமனாரையே மருமகள் மணப்பது .
நரகாசுரனின் தாய் பூமாதேவி . தகப்பன் வேறு ஒருவர் . ஆனால் பூமா தேவியின் கணவன் கிருஷ்ணன் .
இதுவும் பெண்ணுக்காக ஆண்கள் எழுதிய பெண்ணிய கதைகள் .
வேத காலத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது
மஹாபாரத காலத்தில் ஒரு பெண் , பல ஆண்கள் அங்கீகரிக்க பட்டது .
இவை எல்லாம் ஆரிய பெண்களுக்காக , ஆரிய ஆண்கள் எழுதியது .
இவை 2000 ஆண்டுகளுக்கு முன்பு , பௌத்தம் மற்றும் சமணத்தோடு சேர்ந்து தமிழகத்திற்குள் நுழைந்தது .
பெண் சுதந்திரம் இருந்த தமிழ் மண்ணில் , பெண்ணியங்கள் சற்றே தலை தூக்க ஆரம்பித்தது .
இருந்த போதிலும் , ஒரு போதும் தமிழ் பெண்கள் தன் சுதந்திரத்தை இழந்ததில்லை .
பதினெண் கீழ் கணக்கிலும் , பதினெண் மேல்கணக்கிலும் பெண்கள் எழுதிய பாடல்கள் உள்ளன .
நாயன்மார்களாக , ஆழ்வார்களாக பாடம் படித்தும் , பாடல்கள் எழுதியும் தற்சார்பு இழக்காமல் வாழ்ந்து வந்தனர் .
பாண்டியர் வம்சத்தில் மங்கையர்கரசியாரும் ,பல்லவர் குலத்தில் குந்தவியாரும் ,சோழர் வம்சத்தில் குந்தவை அம்மையாரும் , சிறப்புடன் வாழ்ந்தது வரலாறுகள் கூறுகின்றன .
எந்த நாளும் , பெண்கள் இப்படி வாழ வேண்டும் கட்டுக்கதைகள் எதுவும் எழுதப்படவில்லை . அதற்கு அவசியமும் ஏற்படவில்லை .
15 ம் நூற்றாண்டு வரை இதே நிலை இருக்க ,
நாயக்க வம்சம்
மராட்டி வம்சம்
முகலாய வம்சம்
இஸ்லாமிய படையெடுப்பு
பிரெஞ்சு படைகள்
டச்சு படைகள்
ஆங்கில அதிகாரிகள்
இப்படி ஒரு சில , வஞ்சகர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற எண்ணி , பெண்கள் வீட்டிற்குள் முடக்க பட்டு ,
பின் பெண்ணிற்கான பெண்ணியம் தமிழகத்திலும் வந்து விட்டது .
புரியாத சில விஷயங்கள் இன்னும் நம்மோடு இருந்து கொண்டுதான் இருக்கின்றன .
இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல் .
நாம் அதை கடந்து கொண்டு தான் இருக்கிறோம் .
ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது 35 வைது வயதில் 5 வயது சிறுமியாகிய சாரதா வை திருமணம் புரிகிறார்.
அந்த பெண் இன்றும் சாரதா அம்மையார் என்று கொண்டாடப்படுகிறார்.
இதே போல் தான் பெரியார் என்று வழங்கப்படும் ராமசாமியும் செய்தார் .
ஆனால் இன்றும் தூற்றப்படுகிறார் .
இதே தவறை தான் கலைஞர் கருணாநிதியும் செய்தார். அவர் இன்றும் தேர்தலில் வெற்றி பெற்று கொண்டு தான் இருக்கிறார் . யாரும் அவரை வெறுக்க வில்லையே !
சுதந்திர போராட்ட காலத்தில்
சமுதாயத்திற்கு போதனைகள் செய்தார் அரவிந்தர்.
அவரை பற்றி கூட தெரியாத பலரும் , அன்னை அரவிந்தரை கொண்டாடுகிறார்கள் . இத்தனைக்கும் அரவிந்தர் தனது மடத்தில் அந்த ஜெர்மனியா பெண்ணிடம் தன் மரண தருவாயில் மட்டும் தான் பேசி உள்ளார்.
ராகவேந்தரை வணங்கும் இந்த உலகம் , அவர் பாதி வழியில் வாழ்க்கை எனும் பாதையில் விட்டு வந்தாரே , அவரது மனைவி அவரை பற்றி பேசுவதே இல்லை .
பெண் சுந்தந்திரம் பேசிய பாரதி தன் மனைவி பற்றி யோசிக்கவே இல்லையே !
உண்மையில்
வட இந்திய பெண் சாரதா தேவி யை யும் , ஜெர்மானிய பெண் அன்னை அரவிந்தரையும் , வணங்கும் இந்த உலகிற்கு வணக்கத்திற்கு உரிய பாரதியின் மனைவி தெரியாமல் போனது வேதனை .
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர் மனைவி
வ.உ.சிதம்பரம் பிள்ளை , தன் சொத்தை எல்லாம் விற்ற பிறகு , இந்த நல்லுலகம் அவரை தோற்கடித்தபின்னரும் அவருடன் தன செல்வ செழிப்பை இழந்து வாழ்ந்த அவரது மனைவி யார் கண்ணிற்கும் தெரியாமல் போவது இன்னும் வேதனை .
வேறு ஒரு பெண்ணுடன் போன கோவலனை மன்னன் தவறாக தண்டித்து விட்டான் என்றதும் , வேறு ஒரு பெண்ணுடன் போன் போது வராத கோவம் மன்னன் மீது வருகிறது கண்ணகிக்கு . இப்படித்தான் பெண்கள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசும் விரும்புவதால்தான் கண்ணகி மட்டும் நம் கண்களுக்கு தெரிகிறாள் .
எல்லாம் எழுதியது ஆண்கள் .
இதில் மறையாமல் மறைந்தது பெண்ணின் எண்ணங்கள் .
இப்போதும் அவளுக்கு என்ன வேண்டும் என்பது தெரியவில்லை .
ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை கான்னென்று கும்மியடி
என்று பாடியதும் பாரதி எனும் ஆண் தான் !
மீண்டும்
ஆணோடு போட்டி போட்டு படிக்கிறாள்
வேலைக்கு போகிறாள்
சிகரெட்டும் பிடிக்கிறாள்
மதுவும் அ ருந்துகிறாள்
திருமணத்திற்கு முன் உறவும் கொள்கிறாள்
ஆண் என்ன செய்கிறானோ
அதையே தானும் செய்கிறாள் !
இப்போதும் ஆணை துரத்தி கொண்டு ஓடுகிறாள்
அதை தவிர்த்து
தனக்கென தனி பயிற்சிகள் எதையும் அவள் தேடவில்லை !
அவள் மனம்
அவள் உடல்
அவள் அறிவு
அவள் வீரம்
அவள் பாதுகாப்பு
அவள் வாழ்க்கை
என்பது தனி உணர்வு
அதை ஒரு ஆணின் வழி தொடர வேண்டிய அவசியமில்லை !
தனக்கான பாதையை, தான் வடிக்கும் பெண் தான்
சாதனையாளர் ஆகிறாள் !
அவள் தான்
தனக்காகான
பெண்ணியத்தை
எழுதியவள் !
பெண்களே நீங்கள் எழுது ங்கள் !
உங்களுக்காக
பெண்ணியத்தை !
ஆணை துரத்தாதே !
அது ஆணின் வழி !
அது
பெண்ணிற்கு பாதுகாப்பு அல்ல !
அதே வழியில் பெண்ணும்
செல்ல வேண்டுமாயின்
ஆண் தான்
பெண்ணை
பாதுகாக்க வேண்டும் !
ஆனால் அது
இன்று
நடக்காது !
எனவே
உனக்காக நீ
எழுது உன் பாதையை !

No comments:
Post a Comment