சமீபத்தில் வந்த ஒரு திரைப்படம் இறைவி !
இந்த திரைப்படத்தில் , எந்த ஆணும் , தன் மனைவியை அடிக்க வில்லை , துன்புறுத்த வில்லை . ஆனாலும் பெண் நிம்மதியாக இல்லை .
ஏன்னென்றால் , எந்த ஆணும் தன் சார்ந்த கருத்தை , தன் சுயத்தை ஒரு பெண்ணுக்காக விட்டு கொடுப்பதில்லை . தன் விருப்பத்தை விட்டு கொடுக்க தயார் இல்லை . இது கூட பெண்ணுக்கு இளைக்க படும் துன்பம்தான் .
அவ்வளவு தான் இறைவி திரைப்படம் .
உண்மை தான் !
திரை துறை யில் எந்த ஆணும் , தன் விருப்பத்தை விட்டு கொடுத்ததில்லை .
இந்த திரைப்படம் எடுத்த , தயாரித்த எல்லா இறைவன் களுக்கும் ஒரே ஒரு கேள்வி தான் .
இதற்கு முன்பும் பெண் சுதந்திரம் குறித்து பேசிய எல்லா திரைத்துறையினருக்கும் சேர்த்துதான் இந்த கேள்வி !
நீங்கள் படம் எடுப்பது தமிழ் நாட்டு பெண்களுக்காக !
உங்கள் படங்களை பார்ப்பதும் தமிழர்கள்தான் !
உங்கள் திரைப்படங்களில் எல்லாம் எங்கே தமிழ் பெண்கள் ?
உங்கள் விருப்பத்தை எவர் நிறைவேற்றுவார் என்றும் , உங்கள் விருப்பத்திற்கு யார் உடன்படுவார் என்றும் அலைந்து திரிந்து , தமிழ்நாட்டின் எத்தனையோ இறைவிகளின் திறமைக்கு மதிப்பளிக்க முடியாமல் , உங்களோடு உறவாட தயாராகும் பிற மொழி பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாய்ப்பு ,
திறமையை நாமும் வெளிக்கொணருவோம் என என்றென்றும் கனவு காணும் தமிழ் இறைவிகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா ?
ஒரு பாடல் பாட கூடவா தமிழ் பெண் கிடைக்க வில்லை உங்களுக்கு ?
நீங்கள் தேர்ந்தெடுப்பது எல்லாம் , ஜாதி பார்த்து , மொழி பார்த்து , உங்களோடு வரக்கூடிய வசதி பார்த்து , இத்தனையும் நீவீரெல்லாம் பார்த்து தமிழ் பெண்களின் உள்ள கிடங்கை வெளி படுத்துகிறோம் என்று கூறுவதும் , அவர் தம் வாழ்வியல் பற்றி பேசுவதும் ,
வெட்கமாக இல்லை உங்களுக்கு !
திரை துறையில் எந்த பெண்ணும் விரும்பினால் தான் கெட்டு போவார்கள் , இல்லை என்றால் அப்படி ஒன்று நடப்பதில்லை என்று வாய் கூசாமல் கூறும் நீங்கள் ,
நீங்கள் யாரும் சுத்தம் இல்லை என்று ஒப்பு கொள்கிறீர்களா ?
தமிழ்நாட்டின் எந்த பெண்ணும் திறமைசாலி அல்ல என்று கூறும்
உங்களுக்கு
தமிழக பெண்கள் குறித்து கருத்து கூறவும் உரிமை இல்லை !
இதன் தொடர்ச்சியாக வந்த ஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தில் என்ன கூற வருகிறீர்கள் ?
தமிழ் பெண்களெல்லாம் , அதற்க்காக ஏங்குகிறார்கள் என்றா ?
இத்திரைப்படத்தில் ஒரு பெண் கூறுகிறாள்,
எனக்கு 26 வயது ஆகிறது . இதுவரையில் எந்த ஆணுடனும் நான் இருந்ததே இல்லை . இது தான் முதல் முறை .இதற்கு தான் திருமணம் என்ற பெயரில் இத்தனை அளப்பறையா ? என்று தன்னோடு படுக்கையில் இருக்கும் , திருமணம் செய்யாமல் உறவு கொண்ட ஒரு ஆணிடம் கூறுகிறாள் .
இத்தனை இழிவாக திரைப்படம் எடுத்து , அந்த உணர்வுகளையும் பிற மொழி பெண்களை கொண்டே வெளிப்படுத்திய நீவீரெல்லாம் , பெண்ணியம் பேசாமல் இருப்பதே , நலம் !. அதுவே
இறைவிகளுக்கு நீங்கள் செய்யும் நன்றியாக இருக்கும் !
---------------------

No comments:
Post a Comment