Monday, 27 June 2016

எல்லா வேலையும் நல்ல வேலையே !

500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ,  ஒரு திறமையான மன்னரின்  அரசவையில் , ஒருவர் தனக்கு வேலை வேண்டும் என்று கேட்டு வந்தார் .

சரி , உனக்கு என்ன வேலை வேண்டும் ?கேள் என்கிறார் மன்னர்.

அவர் சிறிதும் தாமதிக்காமல்

தங்கள் அரசவையில் அமைச்சராக வேண்டும் என்றார் .

அரசவை அதிர பலத்த சிரிப்பொலி எழுந்தது .

ஏன் ? அமைச்சர் பதவி தான் வேண்டுமா உங்களுக்கு ? என்ன தகுதி இருக்கிறது உமக்கு ? - மன்னர்

எனக்கு தெலுங்கு , கன்னடம் , சமஸ்க்ரிதம் , மற்றும் பாரசீகம் போன்ற மொழிகள் தெரியும் . ( அது பாரசீக மொழி , தற்போதுள்ள ஆந்திராவில் பரவிய காலம் . தற்போதுள்ள தெலுங்கில் , பாரசீகம் கலந்த காலம் என்றும் கூறலாம் . எனவே பாரசீகம் படிப்பது அப்போது சிறப்பு மொழி யாக கருதப்பட்டது .) மேலும் நிர்வாகவியலும் கற்றுள்ளேன் . என்றார் .

நீர் பாரசீகம் பயின்றுள்ளீரா ? மகிழ்ச்சி என்று மன்னர் கூறிய உடன் ,

மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் சற்றே கலக்கம் .

இதை கவனித்த மன்னர் ,

வேலை தேடி வந்தவரிடம் கூறினார் .

இப்போது அமைச்சர் வேலை எதுவும் இல்லை . என்றார் .

நிதானமாக நின்றார் வேலை தேடி வந்தவர்.

ஒன்று செய்யுங்கள் . இங்கு உள்ள கோழி பண்ணையில் ஒரு பணியிடம் உள்ளது . அங்கு வேலை பாருங்கள் என்று கூறினார் .

அரசவையில் மீண்டும் ஒரு சந்தோச காற்று வீசியது .

வேலை தேடி வந்தவர் எதுவும் கூறவில்லை . வேலையை ஏற்று கொண்டார் .

தினமும் கோழி பண்ணையில் வேலை பார்த்தார் .

45 நாட்கள் கழிந்தன . மன்னர் தணிக்கை செய்ய எண்ணி , பண்ணைக்கு வந்தார் . முதலில் கணக்கு வழக்கு பார்க்க எண்ணி , கணக்குகளை ஆய்வு செய்தார் . மிக மிக குறைந்த செலவு கணக்கு .

கோபம் உச்சிக்கு ஏற்றியது .

என்ன இது ?
தீவன கணக்கே இல்லை .
இந்த பண்ணையில் கோழிகள் இருக்கிறதா ? இல்லை
அனைத்தையும் கொன்று விட்டீரா ? என்றார் மன்னர் .

சிறிதும் முகம் சுளிக்காமல்
வாருங்கள் மன்னா , பண்ணையில் வந்து பாருங்கள் என்று கூறினார் .

பண்ணைக்குள் நுழைந்தால் , கோழிகளின் எண்ணிக்கை இரு மடங்காகி இருந்தது . ஒவ்வொரு கோழியும் , குண்டு குண்டாக இருந்தது .

மன்னருக்கு ஆச்சரியம் .

ம் ம் இது எப்படி சாத்தியம் . நீர் தீவனமே  வாங்க வில்லையே
என்று கேட்டார் ?

ஒன்றுமில்லை மன்னா  நம் அரண்மையில் , ஒரு நாளைக்கு மட்டும் 200 பேருக்கு சமையல் செய்கிறார்கள் . அந்த கழிவுகளை , இந்த கோழிகளுக்கு கொண்டு வந்து போட்டேன் . அவ்வளவு தான் என்றார் பணிவாக !

இனி மேல் நீ இங்கு வேலை செய்ய வேண்டாம். நம் நூலகத்திற்கு வந்து வேலை பாரும் என்று கூறினார் .


மறுநாள் முதல் நூலக அலுவலர் வேலை .

ஒரு 30 நாட்கள் கழித்து , மன்னர் அங்கு வந்தார் . இந்த முறை நூலகத்தை பார்வை இட்டுவிட்டு பிறகு கணக்குகளை பார்க்கிறேன் என்றார் .

உள்ளே நுழைந்தார் . அனைத்து ஏடுகளும் , பட்டு துணியால் மடிக்கப்பட்டு , நூலகமே ஜொலிப்பது போல் இருந்தது.

மீண்டும் கோபமாக திரும்பி பார்த்தார் .
என்ன இது கோழி பண்ணையில் செலவுகளை குறைதீர் . நூலகத்தில் செலவு கணக்கை ஏற்றி விட்டீரோ என்றார் .

இல்லை மன்னா , நம் அரண்மனையில் தினமும் 50 ஆடைகளாவது தைக்கிறார்கள் . அவை அனைத்தும் பட்டு துணிகளே !அவற்றில் துண்டு விழும் துணிகள் தான் இவை ! பட்டு துணியில் சுற்றி வைத்தால் , ஏடுகள் பூச்சிகள் அரிக்காமல் இருக்கும் என்பதால் இப்படி செய்தேன் என்றார் .

அதற்கு மேலும் பொறுமை காக்க மன்னருக்கு விருப்பம் இல்லை .

நாளை முதல் நீ என் அமைச்சரவையின் பிரதான அமைச்சன் என்கிறார்.

அந்த அமைச்சன் தான் முல்லா .

ஒருவன் என்ன தான் படித்திருந்தாலும் , பட்டம் பெற்றாலும் , தனக்கு கிடைக்கும் வேளையில் முழு மனதோடு ஈடுபடும் போது தான் , அவன் எண்ணிய இடத்தை அவனால் அடைய முடியும் !

தன் படிப்பிற்கும் , வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்ற போதிலும் , கிடைத்த வேளையில் முழு ஈடுபாட்டை காட்ட வேண்டும் . ஏனென்னில் படிப்பு என்பது , அறிவை வளர்க்க தான் . தொழில் செய்ய அல்ல .

எந்த வேலை கிடைத்தாலும் ,

பலன் எதிர்பாராமல் பணி செய்தால்
நீ எதிர்பார்த்த பலன்
உன்னை தேடி வரும் .

கடமையை செய் ! பலனை எதிர்பாராதே !
அதுவே உன்னை தேடி வரும் .

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...