Thursday, 9 June 2016

ஹளபேடு

   

துவார சமுத்ரா என்பது ஒரு அழகிய எரி . இதன் அழகில் இளைப்பாற ஆசை கொண்ட ஹோய்சால மன்னர் விஷ்ணுவர்த்தன் , தன வம்சத்தை நிலை நிறுத்த உதவிய இறைவனுக்கு நன்றி சொல்லும் வண்ணம் ஒரு கோவில் எழுப்பினான் . அவ்வாறு எழுப்பட்ட கோவில்தான் ஹோயசாலேஸ்வரர் கோவில் .
இங்கிருக்கும் இறைவனுக்கு ஹோயசாலேஸ்வரர் என்று பெயரிட்டு , அந்த ஊரையே தனது தலைநகராக மாற்றினான். ஆனால் இந்த கோவிலில் மற்றொரு சிவ லிங்கமும் உண்டு . அதன் பெயர் சாந்தலேஸ்வரர் . யார் இவர் என்றால் மன்னனின் அன்பு மனைவி சாந்தலா தேவியின் பெயரால் உருவாக்கப்பட்ட இறைவன் அவர் .

இரண்டு இறைவனுக்கும் தனி தனியே அழகிய நந்தியும் உண்டு . கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலானது , இன்னும் கூட  இடங்களில் முடிக்கப்படாத நிலையில் உள்ளது .




இந்த கோவிலின் உள்புறத்தில் , மேல்மாடத்தில் ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன . அதே போல் தரையில் விளையாட்டுகள் அனைத்தும் செதுக்கப்பட்டுள்ளன .




இந்த கோவிலின் வெளி புறத்தில் 35000 அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முருகன் , இராவணன், அர்ஜுனன் , கிருஷ்ணன் , சிவபெருமானின் நடன சிற்பங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது .






இங்குள்ள் தூண்கள் , கணித வேலைபாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது. அந்த தூண்களின் அருகில் நாம் நின்றால் , நம் உருவம் தலை கீழாக தெரியும் .


டெல்லி சுல்தான்களாலும் , இஸ்லாமிய படையெடுப்பாலும் இந்த ஊர் சிதைக்கபட்டதால் , தலைநகரம் வேறு ஊருக்கு மாற்றப்பட்டதால் , இந்த ஊருக்கு ஹளபேடு என்று பெயர் சூட்டப்பட்டது .

ஹளபேடு என்றால் பழைய நகரம் என்று அர்த்தம் .

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...