Tuesday, 21 June 2016

தந்தையர் தினம்




ஸ்பெயினில் , ஜோசப் என்ற பாதிரியார் பெயரில் வருடந்தோறும் மார்ச் 19 ல் கொண்டாட பட்டது பாதர்ஸ் டே .

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்  , ஜூன் மாதம் 3 வது ஞாயிறு கிழமை கொண்டாடப்பட்டது. இதை தான் இந்தியாவிலும் கொண்டாடுகிறோம்.

அன்னையர் தினத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது தந்தையர் தினம்.
ஆனால் அதிகம் யாரும் கொண்டாடவில்லை.இது 14 மற்றும் 15 நூற்றாண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தொடரவில்லை .

பின்னர் அன்னையர் தினம் அனைவராலும் , கொண்டாடப்பட்ட பிறகு தந்தையர் தினமும் கொண்டுவரப்பட்டது .இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் 1907 ல் டிசம்பர் மாதம் சுரங்க தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தினால் 361 ஆண்கள் இறந்து போயினர். இதில் 250 பேர் தந்தையர் .

எனவே அவர்களுக்கு நன்றி சொல்லும் வண்ணம் , 1908 ம் ஆண்டு ஜூலை மாதம் 8 ம் தேதி கொண்டாடப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் 3 வது ஞாயிறாக மாறியது .இது 2015 ம் ஆண்டிக்கு பிறகே பிரபல மாக்கப்பட்டது .

எனில் தந்தை ஆகாத ஆண்கள் , நிலை என்ன ?
அதையும் ஏன் விட வேண்டும் என நவம்பர் மாதம் 19 ம் தேதி உலக ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது .



இது எல்லாம் வெள்ளையர்களின் நிலை ?

இந்தியாவில் , தமிழ்நாட்டில் அன்னையர் தினம் ,தந்தையர் தினம் என தனி நாள் எடுத்து கொண்டாட வேண்டிய அவசியம் என்ன ?

நமது பூர்விகம் அனைத்தையும் இழந்து கொண்டு இருக்கிறோம் .

ஐரோப்பியனும் , அமெரிக்கணும் அறிவாளிகள் என்றும் , அவன் செய்கின்ற அனைத்தும் சரியானது தான் என்றும் நாம் எண்ண ஆரம்பித்து விட்டோம் .

ஆனால் ஒரு நாளும் தமிழன் கொண்டாடும் ஒரு விழாவை , இந்தியா கூட கொண்டாடுவதில்லை.

கொண்டாடாட்டம் என்ற ஒரே ஒரு காரணத்திற்க்காக , யார் எதை கொண்டாடினாலும் நாமும் கொண்டாடும் , நிலைக்கு வந்து விட்டோம்.

ஹோலி கொண்டாடுகிறோம்!
தசரா கொண்டாடுகிரோம் !
திருமண சடங்கு கூட மாற்றி கொண்டு இருக்கிறோம் !


ஒன்று சாப்பிட பழகி விட்டோம்.
மற்றொன்று , எதுவாக இருந்தாலும் பரவாயில்லை , நாம சந்தோசமா இருந்தா போதும் என்ற நிலைக்கு வந்து விட்டோம்.


தந்தைக்கு நன்றி கூறும் நாள் தானே ? இதிலே என்ன தவறு இருக்கிறது ?

தமிழனும் தான் விலங்குகளுக்கு நன்றி சொல்லும் வண்ணம் , பொங்கல் கொண்டாடுகிறான் .உலகில் உள்ள எந்த நாடாவது , ஏன் விலங்குகள் நல அமைப்பானது கொண்டாடுகிறாதா ?

நீருக்கு நன்றி சொல்லும் வண்ணம் , ஆடி பெருக்கு கொண்டாடுகிறோம் 
உலகம் கொண்டாடுகிறதா ?

சூரியனுக்கு நன்றி சொல்லும் வண்ணம் சூரிய பொங்கல் வைக்கிறோம் 
உலகம் ஏற்று கொண்டதா ?

நட்சத்திரங்களை கூட விடாமல் , கார்த்திகை விழா கொண்டாடுகிறோம் 
எவர் கொண்டாடுகிறார் ?

தமிழன் இயற்கையை மதிப்பவன் !
அவற்றை காக்க நினைப்பவன் !
அதன் வலிமைகளை உலகிற்கு உணர்த்த நினைப்பவன் !
அதனால் கொண்டாடுகிறான்.!

ஐரோப்பாவும், அமெரிக்காவும் அன்னையர் தினம் , தந்தையர் தினம்
ஏன் கொண்டாடுகிறது தெரியுமா ?

ஒரு தகப்பனுக்கு , சில மனைவிகள்
ஒரு தாய்க்கும் சில கணவன்கள்

சில குழந்தைகள் தந்தையிடம் மட்டும் வளர்கிறது தாயில்லாமல் !
சில குழந்தைகள் தாயிடம் மட்டும் வளர்கிறது தந்தையில்லாமல் !
( நம் ஊரில் தகப்பனோ , தாயோ இறந்தால் மட்டும் தான் இப்படி நடக்கும் )

அன்னையர் தினத்தன்று , தந்தையிடம் வளரும் குழந்தைகள், தாயை பார்த்து கொஞ்சி கொள்ளும்.

தந்தையர் தினத்தன்று , தாயிடம் வளரும் குழந்தைகள் தன் தந்தையை தேடி செல்லும்.

இப்படி குழந்தைகளை , காப்பாளர்கள் கூட வளர்க்கிறார்கள் . அந்த குழந்தைகளுக்கு குழந்தை என்று கூட பெயரில்லை . WARD என்று பெயர் .

இந்த நாகரீகத்தையா , தமிழ் ஏற்று கொண்டு அவன் அறிவாளி என்று ஆராதிக்கின்றது .

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 

இது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல .

அன்றாடம் அவர்களை தெய்வம் போல் நினைத்தால் அது தான் அன்னையர் தினம்..

மகன் தந்தை ஆற்றும் நன்றி இவன் தந்தை 
என்நோற்றான் கொள்எனும்  சொல் 
என்கிறார் வள்ளுவர் .

நீ என்றைக்கு , இவனை பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று பிறர் கூற வாழ்கிறாயோ அது தான் ,தந்தையர் தினம் .

என்று ஒவ்வொரு பெண்ணுக்கும் மதிப்பளிக்கிறோமோ , என்று ஒவ்வொரு பெண்ணும் தன் பெண்மையை புரிந்து நடந்து கொள்கிறாளோ அது தான் மகளிர் தினம் !

சும்மா வாயால வடை சுடுறது தமிழுக்கு ஆகாது !

இதெல்லாம் போகட்டும் என்றால் ,

அரசியல் வாதிகள் , தந்தையர் தினம் என்பதை புதிய வடிவில் கொண்டு செல்ல எண்ணுகிறார்கள் . யார் அதிக பிள்ளை பெருகிறாரோ அவர்தான் தந்தையர் தினத்திற்கு தகுதியான ஆள் என்று ? என்ன கொடுமை இது ?
அப்புடி பார்த்தாலும் கலைஞர் கருணாநிதியை விட அதிக பிள்ளை பெற்றவர் எல்லாம் நாட்டில் இருக்கிறார்கள் !



மறக்காதே தமிழா ?
நம்மை , நம் பண்பாட்டை வேறு வடிவில் மாற்ற இந்த உலகம் முயற்சித்து கொண்டு இருக்கிறது .

கொண்டாட்டங்களுக்கு மயங்காதே !
கொள்கைகளை விட்டு விலகாதே !
நம் 10000 ஆண்டு பழமையான பாரம்பரியத்தை 
முந்தாநாள் வந்தவனுக்காக மாற்றாதே !
நம் கண்ணை வைத்தே நம் கண்ணை குத்த நினைக்கும் 
வஞ்சகரின் வலையில் விழுந்து விடாதே !
பெண்ணியம் பேசுவதும் 
பேதமை கலைவதும் 
தமிழனுக்கு தெரியாதா ?
விழித்து கொள் !

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...