Tuesday, 14 June 2016

உப்புள்ள காய்கறிகள்

நாம் மருந்து சாப்பிடும் பொழுது , தேன் கலந்து உண்ணலாம் .

சீனி , போன்ற இனிப்பு கலந்து உண்ண கூடாது என்று ஒரு வழக்கம் பின்பற்ற பட்டது.

ஆனால் இன்று நடைமுறையில் சிலர் குளிர் பானங்களுடன் , மருந்து பொருளை எடுத்து கொண்டு , மருந்து வேலை செய்ய வில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மருந்தே தவறுதான், அதிலும் குளிர்பானம் கலந்த மருந்து முற்றிலும் தவறு .

அனால் தேன் மட்டும் கலந்து உண்ணலாமா ? என்று கேட்டால் உண்ணலாம் .



ஏன்னெனில் , எந்த ஒரு மருந்தையும் , இனிப்பு கலந்து உண்ணக்கூடாது . தேன் இனிப்பு அல்ல. கசப்பு சுவை நிறைந்தது .

வெளியில் பார்க்கும் எல்லாம் உண்மை அல்ல என்பதற்கு இதுவே சாட்சி!

தேன் , நாவிற்கு இனிக்கும் , உள்ளே சென்றால் கசப்பு சுவையாக மாறி விடும் .

 நெல்லி காய் நாவிற்கு புளிக்கும் , உள்ளே துவர்க்கும் .

அதே போல் எல்லா காய்கறிகளும் தன்னகத்தே சில சுவைகளை கொண்டுள்ளது.


அவற்றில் சில உப்புசுவை கொண்டவை .

ஆதலால் தான் , சில சமயங்களில் சரியான அளவு உப்பிட்டு சமைத்த பொழுதும் , உப்பு கரிப்பது போல் உணர நேரிடுகிறது .

அவ்வாறு உப்பு சுவை உள்ள சில காய்கறிகள் கீழ்கான்பவை :







முள்ளங்கி

தனியா

பூசணிக்காய்

வாழை தண்டு

கீரை தண்டு

பீர்க்கங்காய்

சுரைக்காய்

முள்ளங்கி கீரை

தண்டு கீரை எனப்படும் முளை கீரை

முருங்கை கீரை

நெல்லிக்காய்

புடலங்காய்

பாகற்காய்

பரங்கி காய்

கோவை காய்

இன்னும் பல உள்ளூர் காய் கறிகள் ......

இவை எல்லாம் , தன்னுள்ளே சிறிது உப்பு சுவையை கொண்டுள்ளன்ன .

இது போன்ற கொடி காய்கறிகளை பயன்படுத்தும் பொது உப்பின் அளவை குறைத்து சமைக்க வேண்டும் .

அதே போல் இறைச்சி வகைகள் எதுவாக இருந்தாலும் , உப்பு அதில் ஏற்கனவே இருக்கும் என்பதை நினைவிற் கொள்க

முட்டையில் கூட உப்பிட்டு சமைக்க கூடாது .


நம் உடலிலும் போதுமான அளவு உப்பு உள்ளது என்பதை நினைவிற் கொண்டு  உப்பின் அளவை குறைத்தாலே , போதும் ரத்த அழுத்தம் ஏற்ற ,இறக்கத்திற்கு செல்லாது .


( கடல் உப்பை விட மலை உப்பையே அதிகமாக் பயன்படுத்தினோம் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் வெள்ளையர் ஆட்சிக்கு பிறகு , அவர்கள் நமக்கு காட்டிய வழி தான் கடல் உப்பு.  மலை உப்பில் தான் அதிகபடியான கனிம சத்துக்கள் உள்ளன. அதை அறிந்து கொண்ட பிரிட்டன் , நமக்கு கடல் உப்பை அறிமுகம் செய்தது . இன்று உலகிலேயே கடல் உப்பை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா  . ஹிமாலய உப்பு இந்தியாவை தவிர உலகம் முழுவதும் பயன்படுத்தபடுகிறது .)

1 comment:

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...