Friday, 17 June 2016

நாகர்கள் -2- குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில்


murugan க்கான பட முடிவு

நாகர்கள் எனும் இனம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட நிலையில் , அது எங்கோ , தன பெயரை மாற்றி கொண்டோ , தன அடையாளங்களை மறைமுகமாக காட்டி கொண்டோ , வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .

அதன் ஒரு அங்கம் தான்
குக்கி சுப்பிரமணியர் கோவில் .

இது தெற்கு கர்நாடகாவில் உள்ளது.


சுப்ரமணிய சுவாமி என்பதை தமிழ் இனம் முருகன் என்றே கூறும் .

இது தமிழ் நாடு வரை மட்டுமே !

தமிழ்நாட்டை கடந்து விட்டால் சுப்பிரமணி சுவாமி என்பது நாகம் .
நாகர்கள் இனம் தான் , வித்தியாசமான உடல் அமைப்பை கொண்டவர்கள் என்றும் , 6 தலை கொண்டவர்கள் , 12 கை கொண்டவர்கள் என்றெல்லாம்  வட இந்திய கதைகள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் தான் முருகனுக்கும் 6 தலை , 12 கையும் இருக்கு. ( ஏன் , விநாயகர், காளி இவங்களும் இந்த லிஸ்ட்லதான் வர்றாங்க ! இதுக்கு கீழ் ராவணனும் உண்டு . அவனுக்கும் வித்யாசமான கோவில்கள் மத்திய பிரதேசத்தில் உள்ளது. இன்றளவும் , சில நாட்களில் மட்டும் பூஜையும் நடைபெறுகிறது. )


kukke subramanya க்கான பட முடிவு

இது கொக்கி சுப்ரமணிய சுவாமி . 5 தலை நாகத்தின் கீழ் மயிலில் அமர்ந்திருப்பது  முருகன்தான் . ஆனால் இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன.
புதிய கோவிலில் தான் இந்த மயில் மீது முருகன் உள்ளார்.
பழைய கோவிலில் வெறும் நாகம் மட்டுமே உள்ளது.


இது அமைந்துள்ள இடம் , குமார பர்வதம் ( பர்வதம் என்றால் மலை ) ஆகும். இங்குள்ள ஆறு , குமாரதார ஆறு. மிக அழகான ஆறு. ஒரு நீரோடை போல் கோவில் வாசலில் ஓடுகிறது. பார்க்கவே ரம்யமாக இருக்கும். இவை எல்லாம் பழைய கோவிலில் தான் உள்ளது.

பல பேருக்கு பழைய கோவில் இருக்கும் இடமே தெரிவதும் இல்லை . அங்கு பலர் செல்வதும் இல்லை.உண்மையில் இந்த பழைய கோவில் தான் , சக்தி வாய்ந்தது. அந்த மலையின் காற்றும், ஆற்றின் நீரும் நோய் தீர்க்கும் என்று கூறுகிறார்கள் .

( குமரன் மலை என்பதும், குமார ஆறு என்பதும் தமிழ் மொழிக்கு சொந்தம் )

பல இடங்களில் சுப்ரமன்யக்க சுவாமி என்றால் , அங்கு நாகம் மட்டும்தான் இருக்கும்.

தமிழ்நாட்டில் , சனி ஈஸ்வர பகவானுக்கு தான் எள் விளக்கு போடுவோம். அவரை சாஸ்தா என்றும் அழைப்போம். ஆனால் , கேரளாவில் சாஸ்தவிர்க்குதான் எள் விளக்கு போடுகிறார்கள் . எனில் சாஸ்தா தான் சனி ஈஸ்வர பகவானா ? 

அப்படிதான் சுப்பிரமணிய சுவாமியும் நாகமாக காட்சி தருகிறார்.

தமிழ்நாட்டை கடந்து இந்திய முழுக்க சுற்றும் போது நாம் அதிகபடியான கோவில்களில்  கடவுளின் சிலைக்கு பின்பு நாகம் இருப்பதை பார்க்கலாம் . தமிழ்நாட்டில் மட்டும்தான் முருகன் 5 தலை நாகத்தில் இல்லை .


பெரும்பாலும் சிவனுக்கு சிலை வடிவங்கள் கொடுத்துள்ளனர். அதனால் நாகம் உள்ள கோவில்கள் மிக மிக பழமை வாய்ந்தவை என்பதை எளிதில் கண்டு கொள்ளலாம். இந்த சிலை வடிவுள்ள , உருவம் கொண்ட இறைவன் திபெத்திய பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர் என்றும், இவர் தான் ருத்ராட்சம் என்பதை பயன்படுத்தினார் என்றும் கதைகள் உண்டு. இவர் இங்கு வருவதற்கு முன்பே , இந்தியாவில் நாகர்கள் இருந்ததும், அவர்களுக்கு கோவில்கள் இருந்ததையும் , வட இந்திய கதைகளே கூறுகின்றன. 

இந்தியாவிற்குள் ஆரிய இனம் வருவதற்கு முன் இருந்த இனம் நாகர் இனம். இன்றைய தமிழ் இனத்தின் பழைய பெயராக கூட இருக்கலாம்.

ஏன் எனில் , தமிழ்நாட்டில் பல அரசியல் மாற்றங்களால் , கோவில்கள் மற்றும் அதன் பெயர்கள் , மாற்றம் பெற்று விட்டன .

ஆனால் பிற பகுதிகளில் , அவற்றை அப்படியே விட்டுள்ளனர். பல வற்றுக்கு விளக்கம் புரியாமல் தான்.

இந்த குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில் , கால சர்ப்ப தோசத்திற்க்கு நிவர்த்தி அளிக்கும் என்பதால் , நாக தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு உள்ள ஆற்றில் நீராடி , இங்கு பூஜை செய்கிறார்கள்.

உண்மையில் தோஷ நிவர்த்தி ஆலயங்கள் எழுப்புவது தமிழர்களின் வழக்கம்.  பழனி மலை போல் , மலைகளின் மீது மருந்து உள்ளது என்பதை கண்டு , அதை தெய்வ திருத்தலங்களாக மாற்றியது தமிழர்கள் .

அவ்வண்ணமே , இத்திரு கோவிலும் தமிழர்கள் வழி வந்தது.

நாக தோஷம் , மற்றும் சர்ப்ப தோஷம் என்பது மனசோர்வு மற்றும் உடல் சோர்வையே குறிக்கும். உடலில் நரம்பு கோளாறுகள் ஏற்படும்போது உடல் சோர்வும் , மன சோர்வும் ஏற்படும் .சில தோல் நோய்கள் ஏற்படும் .
அதை தீர்க்கும் , அருமருந்தை கொண்டதே , குமார பர்வதம் மற்றும் குமார தீர்த்தம் ஆகும்.

ஒரு முறை சென்று வாருங்கள் குக்கி சுப்பிரமணிய சுவாமி  கோவிலுக்கு !
பழைய கோவிலுக்கு செல்லுங்கள் !
உடல் சோர்வு தளர்த்தி உற்சாகமாக வாழுங்கள்!

மறைந்து கிடக்கும் தமிழனின் மருத்துவ அறிவை பெறுங்கள் !
மன நிறைவாய் வாழுங்கள் !


( சுப்ரமன்யக்க சுவாமி என்பது பின்னாளில் சுப்பிரமணி ஐயர் என்று மாற்ற பட்டுள்ளது . )

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...