இன்று நாம் பார்க்கும் திருவள்ளுவர் படம் யார் சாயல் என்று யாராவது சொல்ல முடியுமா ?
2000 ஆண்டுகளாக வள்ளுவர் எப்படி இருப்பார் யாருமே வரைய வில்லை. சிலை வடிக்க வில்லை.சிற்பங்களும் இல்லை.
ஏன் உ.வே.சாமிநாதையர்,சிதம்பரம் பிள்ளை ,இவர்களெல்லாம் உயிரோடு இருக்கும் வரை வராத வள்ளுவர் படம் ,
ஒரு நாள்
திடிரென இந்திய அரசால் அஞ்சல் தலையாக வெளிவந்தது .
இந்த படத்தை வரைந்தவர் யார் ?
கே.ஆர் .வேணுகோபால் ஷர்மா
,
இவர் அப்போதைய மாடேர்ன் திடேர்ஸ் உரிமையில் பங்குதாரராக இருந்தவர் .
1930 ம் ஆண்டு முதல் அவருக்கு இருந்த ஆசை வள்ளுவர் படத்தை வரைய வேண்டும் என்பது.
அதன் பிறகு காந்தி அடிகளின் படத்தை வரைந்து அதை அவரிடமே நேரில் கொடுத்தார். அதை காந்தி ஏலத்தில் விட்டு அதில் வந்த பணத்தை ஹரிஜன சேவைக்கு பயன்படுத்தினார்.
இவை எல்லாம் ராஜ கோபாலசாரியருக்கும் , காமராஜருக்கும் முன்னால் நடந்தவை .
அதன் பிறகு 1953 ம் ஆண்டு வள்ளுவர் படத்தை வரைந்தே தீருவேன் என்று தீர்மானமாக இருந்தார். அதன் விளைவு ,1959 ல் திரு .ப்க்தவசலம் அவர்களிடம் , அறிஞர் அண்ணா வின் ஒத்துழைப்பால் இப்படத்தை அறிமுகம் செய்தார் வேணுகோபால் ஷர்மா .
உடன் 1960 களில் இந்த படம் இந்திய அரசால் அஞ்சல் தலையாக வெளி வந்தது .
அப்போது இருந்த அரசு காங்கிரஸ் அரசு .
இதை பரிந்துரை செய்தவர்களோ திராவிட கட்சிகள் .
பிறகு எப்படி ? உடன் தீர்மானம் கொண்டு வரப்பட்டது . இத்தனைக்கும் , காமராஜர் அப்போது தமிழக முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிட தக்கது .
1963 ல் காமராஜர் பதவி விலகினார். அதனை பயன்படுத்தி கொண்ட , திராவிடர் கழகம் , காமராஜரை பற்றி அவதூறு பரப்பியது .
அதன் விளைவு 1967 ம் ஆண்டில் அண்ணா ஆட்சிக்கு வந்தார்.
அதன் பிறகு தான் தமிழக பாட புத்தகங்களில் வள்ளுவர் படம் வலம் வர ஆரம்பித்தது .
(அதே போல் திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் மணக்குடவர். ஏன் வ.உ.சிதம்பரம் பிள்ளை கூட உரை எழுதி இருக்கிறார்.
நாம் படிக்கின்ற உரைகள் இவை அல்ல. கலைஞர் எழுதிய உரைகள் .)
இதன் பிறகு தானே , வள்ளுவர் படத்தின் காப்புரிமை பெற்றவர் என்பதால் , அந்த படத்தை யார் வரைந்தாலும் , நாளேடுகளில் பதித்தாலும் ஷர்மாவிற்கு பணம் கொடுக்க பட்டது .
(இதனை அடிப்படியாக கொண்டு ஒரு வழக்கும் நடந்துள்ளது .)
Source : K.R. Venugopala Sarma vs Sangu Ganesan on 3 November, 1971
( இன்றளவும் சமண மதத்தவர்கள் வள்ளுவர் தங்கள் மதத்தை சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது .)
பிறகு 1973 ல் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976 ல் கட்டி முடிக்கப்பட்டது வள்ளுவர் கோட்டம்.
வள்ளுவர் கோட்டம் , திருவாரூர் தேரின் சாயலை ஒத்தது .128 அடி உயரம் கொண்டது வள்ளுவர் கோட்டம்.
மதங்களை வெறுக்கும் திராவிட கட்சிகள் , மதங்களை பற்றி எழுதாத வள்ளுவருக்கு திருவாரூர் தேர போல் , ஒரு கோட்டம் அமைக்க காரணம் என்ன என்று ஆயிரம் கேள்விகள் வந்த பொழுதும் , அதனை கட்டி முடிக்க ஆணை இட்டார் கருணாநிதி .
( இதனை கட்டியவர் , காரைக்குடியை சேர்ந்த கணபதி ஸ்தபதி .
இவர் தான் அண்ணா வளைவு மற்றும்
கன்னியாகுமரி வள்ளுவர் சிலையையும் வடிவமைத்தவர்.
மாமல்ல புறம் சிற்ப கல்லூரியில் பணியாற்றியவர். )
இது போல் வள்ளுவருக்கும் , திராவிட கட்சிகளுக்கும் தீராத இணைப்பு .
இது இன்னும் தொடரும் ..
குறிப்பு :
1973 ம் ஆண்டு பெரியார் இறந்தார்.
அதே போல் மற்றொரு கருத்தையும் , கருத்தில் கொள்க !
நீட்டலும் , மழித்தலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்று கூறுகிறார் வள்ளுவர். தாடி வைப்பதும் வேண்டா ! மீசை எடுப்பதும் வேண்டா ! என்று கூறுகிறார் வள்ளுவர். ஆனால் வள்ளுவருக்கு தாடியா ?
( வள்ளுவரின் படத்தில் பெரியாரின் சாயல் , உங்கள் கண்களுக்கு தெரிந்தால் அது எங்கள் பிழை அல்ல )

பாவம் வள்ளுவர்
ReplyDelete==========
அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பாவம் வள்ளுவர்கூட காலங்கள்தோறும் உருவக்கேலிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார். ஆடை நழுவும் போது ஓடிச்சென்று பிடித்து நிறுத்தும் கைபோல நண்பனுக்குத் துயரம் ஏற்பட்ட உடனே உதவுவதுதான் உன்னதமான நட்பு.. என்பதை
" உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்றவர் வள்ளுவர். ஆடை நழுவலைக்கூட பொறுக்கமாட்டாது அதையும் உவமையாக்கி குறள் வடித்த திருவள்ளுவரை எப்படி வேண்டுமானும் உருவப்படுத்திக் கொள்ளுங்கள்... அவரவர் சாதிக்காரராக... மாவட்டத்துக்காரராகச் சொந்தம் கொண்டாடிக் கொள்ளுங்கள். சைவராக்குங்கள்... வைணவராக்குங்கள்.. கிறித்தவராக்குங்கள்... சமணராக்குங்கள் ஆனால் தயவு செய்து அம்மணராக்காதீர்கள்.🙏🏼
(-கு.கா)
==============