தஞ்சாவூர் சிறப்புகளில் ஒன்று இந்த செங்கமல நாச்சியம்மன் கோவில் .
இது ஒரு காவல் தெய்வம் என்று தான் கூற வேண்டும் . இது யாருக்கும்
குலதெய்வம் அல்ல .
இந்த கோவிலை சுற்றி வாழும் மக்கள் யாரும் , இந்த மண்ணின்
பூர்வீக மக்கள் அல்ல.
இங்கு கல்வெட்டுக்கள் இல்லை .
பெரிதாக யாரும் இதன் பூர்வீகத்தை எழுதியதும் இல்லை.
உண்மையில் மேற்காணும் செங்கமல நாச்சியம்மன் கோவில் புதிதாய்
கட்டப்பட்ட கோவில் . இங்கு கல்வெட்டுகள் எப்படி இருக்கும்.?
இந்த கோவில் செங்கலாட்சி அம்மன் என்றே அழைக்கப்படுகிறது .
இதோடு சேர்த்து சியாமளா தேவி அம்மன் கோவிலும் உண்டு
இவர்கள் இருவரும் அக்கா தங்கை என்றே கூறுவர் .
இந்த இருவரும் காது கேளாதவர்கள் , வாய் பேச முடியா இரட்டையர்கள்
என்பதை கொண்டே பொன்னியின் செல்வன் கதையிலும் , மந்தாகினி
என்பவரையும் அவரது சகோதரி கதாபாத்திரத்தையும்
அமைத்திருப்பார் எழுத்தாளர் கல்கி .
அந்த கதையில் வர்ணிப்பது , மதுராந்தக சோழனை ஒரு ஊமை பெண்
வளர்கிறாள் . அதே சமயம் ராஜா ராஜா சோழனையும் சிங்கள பெண்
ஒருத்தி காப்பாற்றுகிறாள்.
இந்த இருவரும் அக்கா தங்கை . அவர்கள்தான் சிங்களாட்சி மற்றும்
சாமளா தேவி என்று மறைமுகமாக தெரிவிக்கிறது அந்த கதை .
வேறு சில கதைகளும் இதற்க்கு சொல்கிறார்கள் .
அக்கா தங்கை இருவரும் சிங்கள மன்னன் ஒருவரையே திருமணம்
செய்து கொண்டு வாழ்ந்து வரும் பொழுது , சோழ மன்னனை காண
சென்ற அவர்களது கணவன் மீண்டு வரவில்லை . ஆகையால் இந்த இரு
பெண்களும் இங்கேயே சமாதி ஆகினர் . என்றும்
தன கணவனுடன் வந்த சிங்கள பெண்கள் இருவரும் , இந்த மண்ணில்
வாழ்வதே தங்களுக்கு விருப்பம் என்று கூறி மீண்டும் இந்த மண்ணை
விட்டு வரமாட்டோம் என்று கூறியதாகவும் , அதன் நிமித்தம் அவர்கள்
விரும்பிய படியே உரல் சத்தமும் , உலக்கை சத்தமும் கேட்காத இடத்தில்
அவர்களது கணவனோடு அவர்கள் வாழ்ந்து அங்கேயே சமாதி
அடைந்தனர் என்றும் கதைகள் உண்டு .
இந்த கதைகள் எப்படி இருந்தாலும் ,
இந்த கோவில் 20 ஏக்கர் பரப்பளவுள்ள காட்டிற்குள் இருந்ததால் இது காட்டு கோவில் என்றே அழைக்கப்படுகிறது .
தற்போது உள்ள குந்தவை நாச்சியார் கல்லூரி தான் அந்த இடம் . 1960 களில் இங்கு ஒரு கல்லூரி எழுப்ப வேண்டும் என்று அரசு முடிவு எடுத்ததன் விளைவாக இந்த சாமதி கோவில் ஒரு ஓரமாக ஒதுங்கிவிட்டது . அது வரையிலும் எடுத்து கட்டவேண்டிய அவசியம் இல்லாத சூழலில் , அதன் பின்னர் சிறுசிறு வேலைகள் பார்த்து அங்கு நிறைய வேல்கள் எல்லாம் நட்டு வைக்கப்பட்டுள்ளது .
அந்த இடத்திலும் , கல்லூரி நிர்வாகம் புதிய கட்டிடம் எழுப்ப தீர்மானித்தால் , அதற்க்கு எதிராக வழக்கு தொடர்ந்து 2000 ம் வது ஆண்டு தீர்ப்பு கொடுத்தது தஞ்சை நீதி மன்றம். இப்போது இருக்கும் கோவில் இடத்தை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் , மேலும் விஸ்தரிக்கவோ , பெரிது படுத்தவோ கூடாது எனவும் ஆணை பிறப்பித்தது .
இந்த கோவில்தான் காட்டு கோவில் . இன்றும் இங்கு தான் இரவு பூஜைகள் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதம் 2 ம் செவ்வாய் கிழமை நடக்கிறது .
5 நாள் திருவிழாவாக இந்த கோவில் விழா கொண்டாடப்படுகிறது .
இந்த கோவிலில் வழிபாடு நடத்துபவர்கள் , இன்று வடக்கு பூக்கார தெரு மற்றும் தெற்கு பூக்கார தெரு என்று வழங்கப்படும் இடத்தில் வாழும் அம்பலக்கார்கள் .
இந்த பகுதி முன்பு அம்பலகார தெரு என்றே வழங்கப்பட்டது .
அந்த தெருவிலும் ஒரு கோவில் உள்ளது . அது தான் பிறந்த இடம் என்றும் , இந்த காட்டு கோவில் கணவனோடு வாழ வந்த இடம் என்றும் கூறுவர் .
அந்த கோவிலும் 1960 வரையிலும் மிகவும் பழைய நிலையில் இருந்து அப்போது M .L .A வாக இருந்த திரு பரிசுத்த நாடார் அவர்களால் , மேற்கூரை அமைக்க பட்ட , தற்போது தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதா அவர்களின் உதவியோடு கோவிலாக கட்டப்பட்டு கொண்டு இருக்கிறது. துர்முகி ஆண்டு ஐப்பசி மாதம் 1 ம் தேதி அன்று
குபாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
மேலும் இந்த அம்பலகார்களின் குலதெய்வம் கருப்பு சாமியின் கோவில்தான் அந்த காடு . மிகப்பெரிய ஆலமரத்தின் கீழ் இருந்த கருப்ப சாமி கோவில்தான் , இன்றைய E .B இடம் . இப்போது இங்கு மாலை வேளைகளில் , வாகன ஓட்டும் பயிற்சிகளும் , கிரிக்கெட் விளையாட்டும் நடக்கிறது . ஆனால் இன்றும் ஆடி மாதம் 3 வது வெள்ளிக்கிழமை இங்கு பூஜை நடைபெறுகிறது.
இங்குள்ள கோவில்கள் , பெரிதாக வெளியில் தெரியாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
1. ஜாதி பிரச்னை
2. கல்வி அறிவில்லா மக்கள் ( தற்போது இந்த நிலை மாறி உள்ளது )
3. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள்
4. ஆங்கிலேயர்கள் காலத்தில் , உணவுக்கு வழி இன்றி , இந்த காட்டில் மறைந்து பலரும் , இவ்வழியாக செல்லும் வண்டிகளில் திருடும் வழக்கம் கொண்டிருந்தனர் என்றும் கூறுவர் .
5. இந்த கோவிலில் வழிபடும் மக்கள் , முற்காலத்தில் போர்வீர்களாக இருந்தவர்கள் .
( இவர்களை அடிப்படையாக கொண்டே பூக்கார தெருவிற்கு அருகில் இருப்பது லாயம் என்று பெயர் பெற்றது )
மன்னராட்சி முடிந்து , வெள்ளையர்கள் ஆள தொடங்கிய போது , அவர்கள் ஒடுக்க நினைத்த ஒரு இனம் போர்வீரர்கள் இனம் .
எங்கெல்லாம் , யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களை எல்லாம் குற்றவாளி ஆக்கினார்.
மேலும் மேலும் குற்றவாளி என்று பெயர் சூட்டப்பட்டு ஒரு கட்டத்தில் இந்த கோவில் , மற்றும் இதனை வழிபடும் மக்களும் ஒதுக்கப்பட்டனர் .
6. இங்கிருந்து மண்ணெடுத்து , புதிதாக ஒரு கோவில் கட்டப்பட்டது. அந்த கோவிலை மட்டும் தான் அனைத்து மக்களும் வழிபடுகின்றனர்.
(இந்த புதிய கோவிலுக்கு வண்டிக்கார தெரு கோவில் என்று பெயர். அங்கிருக்கும் மக்கள் தான் இதனை ஆரம்ப காலங்களில் சிரத்தையோடு விழா எடுத்து வழிபாடு நடத்தினர் .)
7. இங்கு சிலைகள் கிடையாது.
8. இது சமாதி கோவில்.
9.ஒரு காலத்தில் பாம்புகள் அதிகம் இருந்தது . இன்று இல்லை .
10. இரவு பூஜை பலராலும் பயமுறுத்தப்பட்டது .
11. இங்கு அர்ச்சகர்கள் கிடையாது.
12. கல்லூரி நிர்வாகம் , பெண்கள் கல்லூரி என்பதால் , கொஞ்சம் நெருக்கடி கொடுக்கிறது .
எது எப்படி இருந்தாலும் , ஒரு கோவிலோ , ஒரு தெய்வமோ அதனை வழிபடும் மக்களின் ஜாதி , பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை நிலை இவற்றை பொறுத்தே , பெருமைக்கு உட்படுகிறது. அதற்க்கு இந்த கோவிலும் விதி விலக்கு அல்ல.
( இப்போது இந்த கோவிலை அதிகம் வழிபடுவது, குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகளே என்பது குறிப்பிடத்தக்கது )
சிங்கள நாட்சி என்பவள் அக்கா .
இவள் சாந்த சொரூபிணி .
இவள்தான் மதுராந்தகனை வளர்ந்தவள் .
புது ஆற்று ஓரம் மிகப்பெரும் பூந்தோட்டம் அமைத்து அங்கு வாழ்ந்து வந்தாள் .
இவள் ஒரு மருத்துவச்சி.
இவள் தான் செங்கலாட்சி என்று அழைக்கப்பட்டு செங்கமல நாட்சி என்று பெயர்பெற்றாள் .
சிங்கள தேவி என்பவள் தங்கை .
மிகுந்த கோவக்காரி .
அனால் யாருக்கும் துன்பம் தராதவள்.
இவள் தான் அருள்மொழி தேவனை காப்பாற்றியவள் .
இவள் தான் சியாமளா தேவி என்று பெயர் பெற்றாள் .
புது ஆற்று கரையோர மக்கள் இன்றும் செங்கலாட்சி அம்மனை மட்டுமே பிரதானமாக கொண்டு வழிபடுகிறார்கள்.
அரண்மனை சுற்றி உள்ள இடங்களில் வாழும் மக்கள் சியாமளா தேவி அம்மனை மட்டுமே பிரதானமாக கொண்டு வழிபடுகிறார்கள்.
இவ்விரு இடங்களிலும் தனி தனியே இவர்களுக்கு கோவில்கள் இருப்பதை தஞ்சையில் காணலாம்.
No comments:
Post a Comment