"நம் நாட்டுக்கு,சமுதாயத்துக்கு,இனத் திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல
என்பதாலும் நமக்கு அது ஒரு பொதுக் குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு
உணர்ச்சிச்சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர,கர்நாடக, கேரள
நாட்டு மக்களல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள்.
பின்னவர்கள் என்ன எண்ணங்கொண்டு எதிர்த்தாலும் அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு
இருந்ததால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த
பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவையில்லை என்றாலும்,-
திரா விடன்-என்ற சொல்லை விட்டுவிட்டுத்- தமிழன்-.என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப்
பிரிக்கலாமென்றா ல் அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து (நானும்
தமிழன்தான்) என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.இந்த சங்கடத்திற்கு,தொல்லைக்கு
என்ன செய்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்."
விடுதலை 11.10.1955
பெரியார் .
பாவம் பாரதி எனும் பிராமணன் அன்று உயிரோடு இல்லை.
உ.வே.சுவாமிநாத அய்யர் அன்று உயிரோடு இல்லை.
சுப்ரமணிய அய்யர் அன்று உயிரோடு இல்லை.
தமிழ் தமிழ் என்று தமிழுக்காக வாழ்ந்து , தமிழ்நாடு மட்டுமே வாழ்வென்று வாழ்ந்த யாரும் உயிரோடு இருந்த வரை திராவிட காட்சிகள் உருவாக வில்லை.
திராவிடர்களே தமிழர்கள் இல்லை எனும் பட்சத்தில் , பிராமணர்கள் தமிழரா இல்லையா என்ற ஆய்வு செய்து அதை வெளிப்படுத்தி இருக்கிறார் பெரியார்.
பிராமணர்கள் தன்னையும் தமிழன் என்று கூறி கொள்கிறார்கள் என்று கூறிய பெரியார் , திராவிட கட்சிகளின் தாய் கட்சியாகிய தென்னிந்தியா நல கழகம் , தெலுங்கு பிராமணர்களுடைய கூட்டமைப்பு தான் என்பதை மறந்து போயிருப்பாரோ ?
அல்லது தெலுங்கு பிராமணர்கள் தான் தனி ஆட்சி அமைத்து விட்டார்களே ஆந்திராவில் , இனி தெலுங்கு மக்களே தமிழ்நாட்டையும் ஆள வேண்டும் என்று முடிவெடுத்து அதற்க்கு குறுக்கே இந்த தமிழ் பிராமணர்கள் வருவதை தடுக்க நினைத்தாரா ?
ராஜகோபாலாச்சாரிக்கும் , காமராஜருக்கும் தான் தெரியும் , அன்று இந்த திராவிடம் என்னவெல்லாம் சொல்லி தமிழத்தை ஆட்டுவிக்க நினைத்தது என்று !
ஆனால் காமராஜர் பதவி விலகாமல் இருந்திருக்கலாம் !
காமராஜர் , தன மந்திரி சபையில் எதிர்க்கட்சி காரர்களுக்கும் மந்திரி பதவி தராமல் இருந்திருக்கலாம் .
பக்தவச்சலம் , அண்ணாவோடு நெருங்காமல் இருந்திருக்கலாம்.
ஆனால் எல்லாம் நடந்து விட்டது.
பிராமணனும் ஆண்டான் !
திராவிடமும் ஆண்டான்!
பலன் என்ன ?
எப்போதும் போல் தமிழ் மக்கள்
பிராமணர்கள் திராவிடர்களை குறை சொன்னாலும் ஏற்று கொண்டார்கள்.
திராவிடர்கள் பிராமணர்களை குறை சொன்னாலும் ஏற்று கொண்டார்கள்.
இறுதியில்
இவருவரும் மட்டுமே ஆளும் கட்சி , எதிர் கட்சி என்றாகி
சட்டசபையிலும்
நீங்கள் 100 க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை வைத்திருக்கிறீர்கள் என்று
ஸ்டாலின் கூறுகிறார்.
நீங்கள் 89 பொம்மைகளை வைத்திருக்கீர்கள் என்று அதிமுக அமைச்சர்
கூறுகிறார்.
இதிலே நாம் தமிழர் என்று கட்சி மக்களை குழப்பி கொண்டு , இருக்கிறது.
இதில் தமிழர்களின் நிலை தான் மிக கொடுமையாக உள்ளது.
திராவிடம் விதைத்த விதை திராவிடம் அறுவடை செய்யுமா ?
No comments:
Post a Comment